அந்தகேசம்
(மணிகண்டீஸ்வரர் கோயில்)

இறைவர் திருப்பெயர்		: மணிகண்டீஸ்வரர். 
இறைவியார் திருப்பெயர்		: திரிபுரசுந்தரி.
தல மரம்			: 
தீர்த்தம்				: 
வழிபட்டோர்			: அந்தகாசுரன்.
andhakEsam temple

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • திருப்புட்குழி என்பது கிராமத்தில் பெயர் இஃது மாறி, தற்போது மணிகண்டீஸ்வரர் கோயில் என்று வழங்குகிறது.
  • அந்தகாசுரனை வென்று அவனை தன் சூலாயுதத்தில் கோர்த்துக் கொண்டு வயிரவர் நடனமாடிக் கொண்டிருந்தார். தன் பிழையுணர்ந்து தௌ¤வுபெற்ற அந்தகாசுரன் வயிரவரை வேண்டித் துதிக்க, மகிழ்ந்த வயிரவர், அவ்வசுரனை சூலத்தினின்றும் விடுவித்து சிவகங்கையில் மூழ்குவித்தார். இதனால் பாசம் நீங்கப்பெற்று பேறு பெற்றான் என்பது வரலாறாகும்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - இக்கோயில் காஞ்சியை அடுத்துள்ள திருப்புக்குழி என்னும் கிராமத்தில் உள்ளது. பாலுசெட்டிசத்திரம் பேருந்து நிறுத்தத்திலிருந்தும் செல்லலாம்.

< PREV <
நரசிங்கேசம்
Table of Contents > NEXT >
வாணேசம்