|
Home > Temples of India > kAnychipuram thalangkaL
அங்கீரசம் (சப்த ஸ்தானத் தலம்-1)
இறைவர் திருப்பெயர் : அங்கீராரீசர்
இறைவியார் திருப்பெயர் :
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் : அங்கிரா, அத்திரி, காசிபர், குச்சர், கௌதமர்,
வசிட்டர், பிருகு முதலானோர்.
தல வரலாறு
- இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
- இது சப்தஸ்தானத் தலங்களுள் முதலாவது தலமாகும்.
-
மேற்சொன்ன சப்த (ஏழு) ரிஷிகளும், காஞ்சியில் செய்யும் வழிபாடுகள், தருமங்கள் அனைத்தும் ஒன்றுக்கு பலமடங்காகப் பலன்தர வல்லவை என்பதை பிரமனின் அறிவுரைப்படி அறிந்து, காஞ்சி - திருவேகம்ப சிவகங்கையில் நீராடி, வியாச சாந்தாலீஸ்வரர் கோயிலருகில் தனித்தனியே தத்தம் திருப்பெயர்களில் சிவலிங்கம் ஸ்தாபித்து - தொழுது பேறுபெற்றுள்ளனர்.
- இவர்களுள் அங்கிராமுனிவர் ஸ்தாபித்து வழிபட்டது அங்கீரசம் ஆகும்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரத்தில் - சின்னகாஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரி சாலையில் சென்றால் சாந்தாலீஸ்வரர் கோயிலை அடையலாம்.
அக்கோயிலின் பக்கத்தில் இச்சிவலிங்க (அங்கீரசம்) மூர்த்தம் உள்ளது.
|