அனந்த பத்மநாபேசம்

 
இறைவர் திருப்பெயர்		: அனந்த பத்மநாபேசர். 
இறைவியார் திருப்பெயர்		:  
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			: திருமால். 
ananda padmanAbEsam

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • கயிலாயத்தில் இறைவனும் இறைவியும் ஏதேனும் ஓர் விளையாட்டை விளையாடலாம் என்றெண்ணி ஓர் விளையாட்டை விளையாடினர். அப்போது அங்கிருந்த திருமாலை அவ்விளையாட்டிற்குரிய நடுவராக நியமித்துவிட்டு விளையாட்டைத் தொடர்ந்தனர். விளையாட்டின் இறுதியில் அம்பிகையே வெற்றி பெற்றாள். ஆனால் தான் தான் வெற்றி பெற்றதாக இறைவன் கூறினார். நடுவராக இருந்த திருமாலோ இருவருடைய மாறுபாடான நிலைமையைக் கண்டு, தன் நடுநிலைமை மாறி இறைவனே வெற்றி பெற்றதாக கூறினார். அம்பிகை சினங்கொண்டு திருமாலை "பாம்பாகப் போவக்கடவாய்" என்று சபித்தார். நடுக்கமுற்று பிழையுணர்ந்து திருமால் வேண்ட, மனம் இரங்கிய அம்பிகை காஞ்சியில் சென்று சிவலிங்கம் ஸ்தாபனம் செய்து வழிபாடாற்றுமாறு பணித்தாள். திருமாலும் அவ்வாறே இத்தலத்திற்கு வந்து 'அனந்த பத்மநாபன்' என்னும் திருநாமத்தில் பெருமானை பிரதிஷ்டை செய்து வழிபட்டுச் சாப விமோசனம் பெற்றார்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - பெரிய காஞ்சிபுரம் லிங்கப்பையர் தெருவில் உள்ளது.

< PREV <
மாசாத்தன்தளி
Table of Contents > NEXT >
கச்சிமயானம்