அமரேஸ்வரம்
(அமரேஸ்வரர் திருக்கோயில்)

இறைவர் திருப்பெயர்		: அமரேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்		: 
தல மரம்			: 
தீர்த்தம்				: 
வழிபட்டோர்			: தேவர்கள்.

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • அசுரர்களை வென்ற தேவர்கள் - தன்னால்தான் அசுரர்களை வெல்லமுடிந்தது என்றெண்ணி ஒவ்வொருவரும் செருக்குற்று இருந்தனர். அச்செருக்கினை ஒடுக்க எண்ணிய இறைவனார், யட்சனாக வந்து தேவசபையில் துரும்பு ஒன்றை நட்டு "இதை வெட்டுபவனே அசுரர்களை வென்ற வீரனாவான்" என்றார். இந்திரன், திருமால், பிரமன் உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் முயன்றும் முடியாது சோர்வுற்று ஓய்ந்தனர். அப்போது அவர்கள் முன் உமாதேவியார் தோன்றி, இங்கு வந்து இத்துரும்பினை நட்டவர் இறைவரே என்றுணர்த்தி, செருக்கு நீங்கிச் சிவபெருமானை வழிபடுமாறு கூறிமறைந்தார். அவ்வாறே தேவர்கள் அனைவரும் காஞ்சி வந்து சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்றனர். அவ்வாறு தேவர்கள் வழிபட்ட தலமே அமரேஸ்வரம் ஆகும்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - மேற்கு ராஜவீதியில் - கொல்லாசத்திரம் தெருவிற்கு எதிர்புறத்தில் உள்ளது.

< PREV <
தான்தோன்றீசம்
Table of Contents > NEXT >
கச்சிஅனேகதங்காவதம்