|
Home > Temples of India > kAnychipuram thalangkaL
ஆதீபிதேசம்
இறைவர் திருப்பெயர் : ஆதீபிதேசர்.
இறைவியார் திருப்பெயர் :
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் : திருமால்.
தல வரலாறு
- இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
- மூலவர் - பெரிய ஆவுடையாரில் பெரிய சிவலிங்க மூர்த்தியாக கம்பீரமாக காட்சித் தருகிறார்.
-
சரஸ்வதி நதிவடிவு கொண்டு, காஞ்சியில் பிரமன் செய்யும் வேள்வியை அழிப்பதற்காக வந்போது, சிவபெருமானின் ஆணைப்படி திருமால் சென்று அதனைத் தடுக்க முற்பட்டார்; அந்நதியானது நள்ளிரவில் காஞ்சி நகரை அணுக, திருமால் அவ்விருளில் நதியின் வருகையைக் காண்பதற்காக ஒளியாய் நின்று, "ஆதீபிதேசம்" என்ற நாமத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வரம்பெற்று, சரஸ்வதியாகிய அந்நதியைத் தடுத்து நிறுத்தி பிரமனின் வேள்வியைக் காத்தருளினார்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - ஆலடி பிள்ளையார் கோயில் தெருவில் கீரை மண்டபத்திற்கு அருகில் உள்ளது.
|