நாகப்பட்டிணம் - கயிலாசநாதர் திருக்கோயில் தல வரலாறு
Sthala puranam of Sri Kailasanathar Temple of Nagappattinam


இறைவர் திருப்பெயர்	: கயிலாசநாதர்.

தல வரலாறு

  • ஸ்தல யாத்திரையாக நாகைக்கு வந்த பராசர முனிவர்க்கு பதினாறாயிரம் சிகரங்கள் கொண்ட கயிலையங்கிரியைத் தரிசிக்கும் ஆவல் வந்தது. அதிலும், அம்மலையை நாகையிலே தரிசிக்கவேண்டும் என்ற பேராவல் ஏற்பட்டது. ஒரு பட்டை ஆயிரம் சிகரங்களுக்கு சமம் என்ற நோக்கில் பதினாறு பட்டைகளை உடைய பாணத்தோடு கூடிய சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார். அப்பெருமானை ஒரு உயர்ந்த கட்டுமலையில் வைத்து வழிபாட்டு வந்தார். அதன் பயனாக நீண்ட ஆயுள் பெற்றுப் பின்னர் கைலைநாதனின் கழலடி அடைந்தார்.

சிறப்புகள்

  • இக்கோயிலில் இராஜ கோபுரம் இல்லை; சுதை வடிவங்களாக ரிஷப வாகனத்தில் சுவாமியும் அம்பாளும் காட்சி அளிக்கிறார்கள்; இருபுறமும் கணபதியும் கந்தனும் காட்சி தருகிறார்கள்.

  • மாடக்கோயிலின் கீழே நந்தியும் பலிபீடமும் அமைந்துள்ளன. மேலே பதினெட்டுப் படிகள் ஏறிச் சென்றால் சுவாமி சன்னதியை அடையலாம்.

  • பதினாறு பட்டை லிங்கமாக கைலாசநாதப் பெருமான் தரிசனம் தருகிறார்.

அமைவிடம்

	அ/மி. கயிலாசநாதர் திருக்கோயில், 
	நாகப்பட்டினம் - 611 001.

தமிழ்நாடு, நாகப்பட்டினம் மாவட்டம்
நாகப்பட்டிணம் இரயில் நிலையதிலிருந்து எளிதாகச் செல்லலாம். சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை முதலிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது.

< PREV <
அமிர்தகடேஸ்வரம்
Table of Contents > NEXT >
காசிவிஸ்வநாதம்