நாகப்பட்டிணம் - அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் தல வரலாறு
Sthala puranam of Sri Amirthagateswarar Temple of Nagappattinam


இறைவர் திருப்பெயர்	: அமிர்தகடேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்	: பிரம்மானந்த சுந்தர்.
தீர்த்தம்			: வேத தீர்த்தம்.

தல வரலாறு

  • தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்தபோது அமிர்த கலசம் வெளிப்பட்டது; அதனை அசுரர்கள் கைப்பற்றாத வண்ணம் எடுத்துக்கொண்டு, நாகையை அடைந்த தேவர்கள், அதனை வேத தீர்த்தத்தின் தென்கரையில் வைத்துவிட்டு, நீராடச் சென்றார்கள். திரும்பிவந்து பார்க்கையில், அக்குடம், சிவலிங்கமாக மாறியது கண்டு வியந்தனர். அவர்களுக்குக் காட்சி கொடுத்த இறைவனும், அவர்கள் விரும்பியவண்ணம் ஒரு அமிர்த கலசத்தை வரவழைத்துக் கொடுத்தார். தேவர்கள் மிகவும் மகிழ்ந்து, பெருமானைப் போற்றினர்.

சிறப்புகள்

  • இக்கோயிலின் ராஜகோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டது. தேவாசுரர்கள் பாற்கடலைக் கடையும் காட்சி சுதை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

அமைவிடம்

	அ/மி. அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், 
	நாகப்பட்டினம் - 611 001.

தமிழ்நாடு, நாகப்பட்டினம் மாவட்டம்
நாகப்பட்டிணம் இரயில் நிலையதிலிருந்து எளிதாகச் செல்லலாம். சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை முதலிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது.

< PREV <
விஸ்வநாதம்
Table of Contents > NEXT >
கயிலாசம்