|
Home > Shaiva Siddhanta > Philosophic Texts
Saiva Siddhantha Sastras - shivanyAna siddhiyAr of aruNandhi shivam (para paksham, supaksham)
சைவ சித்தாந்த நூல்கள் -
சிவஞான சித்தியார் (பரபக்கம், சுபக்கம்)
(ஆசிரியர் : அருணந்தி சிவாச்சாரியார்)
உ
திருச்சிற்றம்பலம்
திருத்துறையூர் - அருணந்தி சிவாசாரியார்
அருளிச் செய்த
சிவஞானசித்தியார் பரபக்கம்
காப்பு
ஒருகோட்டன் இருசெவியன் மும்மதத்தன் நால்வாய் ஐங் கரத்தன் ஆறு
தருகோட்டம் பிறையிதழித் தாழ்சடையான் தரும்ஒரு வாரணத்தின் தாள்கள்,
உருகோட்டன் பொடும் வணங்கி ஒவாதே இரவுபகல் உணர்வோர் சிந்தைத்,
திருகோட்டும் அயன்திருமால் செல்வமும்ஒன் றோஎன்னைச் செய்யும் தேவே.
1
மங்கல வாழ்த்து
சிவபெருமான்
ஆதிநடு அந்தமிலா அளவில் சோதி அருள்ஞான மூர்த்தியாய் அகிலம் ஈன்ற,
மாதினையும் ஒருபாகத் தடக்கி வானோர் மகுடசூ ளாமணியாய் வையம் போற்றப்,
பாதிமதி யணிபவளச் சடைகள் தாழப் படரொளிஅம் பலத்தாடும் பரனார் பாதத்,
தாதுமலி தாமரைகள் சிரத்தே வைத்துத் தளராத பேரன்பு வளரா நிற்பாம்.
2
சத்தி
ஈசனருள் இச்சைஅறி வியற்றல் இன்பம். இலயமொடு போகமதி கார மாகித்,
தேசருவம் அருவுருவம் உருவ மாகித் தேவியுமாய்த் தேசமொடு செல்வ மாகிப்,
பேசரிய உயிரையெலாம் பெற்று நோக்கிப் பெரும்போகம் அவைய ளித்துப் பிறப்பினையும் ஒழித்திட்(டு),
ஆசகலும் அடிய ருளத் தப்பனுட னிருக்கும் அன்னையருட் பாதமலர் சென்னி வைப்பாம்.
3
விநாயகக் கடவுள்
இயம்புநூல் இருந்தமிழின் செய்யு ளாற்றல் இடையூறு தீர்ந்தினிது முடிய வேண்டித்,
தயங்குபேர் ஔ¤யாகி எங்கு நின்ற தலைவனார் மலைமாது தன்னோ டாடிப்,
பயந்த ஐங் கரநாற்றோள் முக்கண்இரு பாதப் பரியதொரு நீள் கோட்டுப் பெரிய பண்டிக்,
கயந்தன்அடிக் கமலங்கள் நயந்து போற்றிக் கருத்திலுற விருத்திமிகக் காதல் செய்வாம்.
4
சுப்பிரமணியக் கடவுள்
அருமறைஆ கமம்அங்கம் அருங்கலைநூல் தெரிந்த அகத்தியனுக் கோத்துரைக்கும் அருட்குருவாங் குருளை,
திருமறைமா முனிவர்முனி தேவர்கள்தந் தேவன் சிவனருள் சேர் திருமதலை தவநிலையோர் தெய்வம்,
பொரும்அறையார் கழல்வீரர் வீரன் கையில் பூநீர்கொண் டோவாது போற்றும் அடி யார்கள்,
கருமறையா வகையருளிக் கதிவழங்குங் கந் தன் கழலிணைக ளெஞ்சிரத்திற் கருத்தில் வைப்பாம்.
5
மெய்கண்டதேவ நாயனார்
பண்டைமறை வண்டாற்றப் பசுந்தேன் ஞானம் பரிந் தொழுகச் சிவகந்தம் பரந்து நாறக்,
கண்டஇரு தயகமல முகைக ளௌ¢ளலாங் கண்திறப்பக் காசினிமேல் வந்தஅருட் கதிரோன்,
விண்டமலர்ப் பொழில்புடைசூழ் வெண்ணெய் மேவு மெய்கண்ட தேவன்மிகு சைவ நாதன்,
புண்டரிக மலர் தாழச் சிரத்தே வாழும் பொற்பாதம் எப்போதும் போற்றல் செய்வாம். 6
அவையடக்கம்
மாலயன்மா மறைஅறியா ஆதி மார்க்கம் வையகத்தா கமம்வேத மற்று முள்ள,
நூலையெலாம் உணர்ந்திறைவன் கழலே நோக்கு நோன்மைஅருந் தவர்முன்யான் நுவலு மாறு,
வேலையுலா வுந்திரைகள் வீசி யேறி வேறேழு மொன் றாகி நின்ற போது,
சாலவுமான் குளப்பிடியிற் றங்கி நின்ற சலமதுதா னேரென்னுற் தன்மைத் தாலோ.
7
நீடுபுகழ் உலகுதனில் மைந்தர் மாதர் நேயமொடு தாம் பயந்த புதல்வர் வாயில்,
கூடுமொழி மழலையொடு குழறி ஒன்றும் குறிப்பரிதா யிடினுமிகக் குலவிப் போற்றி,
மாடு நமக் கிதுவென்று கொண்டு வாழ்வர் அதுபோல மன்னு தமிழ்ப் புலமை யோரென்,
பாடுகவிக் குற்றங்கள் பாரார் இந்நூல் பாராட்டா நிற்பர் அருட் பரிசி னாலே.
8
நூற்சிறப்பு
சுத்தவடி வியல்பாக வுடைய சோதி சொல்லியஆ கமங் களெலாஞ் சூழப் போயும்,
ஒத்துமுடி யுங்கூட ஓரி டத்தே ஒருபதிக்குப் பலநெறிக ளுளவா னாற்அ£ற்,
பித்தர்குண மதுபோல ஒருகா லுண்டாய்ப் பின்னொருகால் அறிவின்றிப் பேதை யோராய்க்,
கத்திடுமான் மாக்களுரைக் கட்டிற் பட்டோர் கனகவரை குறித்துப்போய்க் கடற்கே வீழ்வார்.
9
நூற்கதிகாரியும் நூல்வழியும் நூற்பெயரும்
போதமிகுத் தோர்தொகுத்த பேதை மைக்கே பொருந்தினோ ரிவர்க்கன்றிக் கதிப்பாற் செல்ல,
ஏதுநெறி யெனுமவர்கட் கறிய முன்னா ளிறைவனரு ணந்திதனக் கியம்ப நந்தி,
கோதிலருட் சனற்குமா ரற்குக் கூறக் குவல யத்தின் அவ்வழியெங் குருநாதன் கொண்டு,
தீதகல எமக் களித்த ஞான நூலைத் தேர்ந்துரைப்பன் சிவஞான சித்தி யென்றே.
10
நூற்கருத்து
இறைவனையும் இறைவனால் இயம்பு நூலும் ஈண்டளவும் பொருளியல்பும் வேண்டுஞ் செய்தி,
முறைமைகளும் பெத்தமொடு முத்தி யெல்லா மூதுலகில் எமக்கியன்ற முயற்சி யாலே,
சிறையுலவும் புனல்நிலவித் தோன்றும் பேய்த்தேர்ச் செய்கைபோ லுண்டாய பொய்கொள் மார்க்கத்
துறைபலவுங் கடாவிடையாற் சொல்லிப் போக்கித் துகள்தீர இந்நூலிற் சொல்ல கிற்பாம். 11
1. உலகாயுதன் மதம்
இந்திர புரோகிதன் இயம்பும்ஒரு நூலின்
தந்திர மெனாதறிவி னோட்ருளி லாமல்
சந்தணை புயத்துமண மாலைகள் தயங்க
உந்தியுல கத்திலுல காயத னுரைப்பான். 12
ஈண்டளவை காட்சிமன மாதிஇரு மூன்றாய்
வேண்டும்அனு மானமுத லானபல வேண்டா
பூண்டபொருள் பூதமவை புகழ்கடின சீதந்
தீண்டரிய வெம்மைசல னத்தினொடு சேர்வே. 13
சாற்றுபெய ரானவை தலம்புனல் கனற்பின்
காற்றுமென லாம்இவை கலந்தகுண மோதின்
நாற்றம்இர தம்உருவம் நற்பரிச மாகும்
போற்றுமிவை நித்தஇயல் பாமிவை புணர்ப்பே. 14
ஒத்துறு புணர்ச்சியின் உருக்கள்பல வாகும்
வைத்துறு கடாதிபல மண்ணின்வரு மாபோற்
புத்திகுண நற்பொறி புலன்களிவை யெல்லாம்
இத்தில்வரும் நீரினில் எழுங்குமிழி ஒத்தே. 15
பூதமதின் ஒன்றுபிரி யப்புலன் இறக்கும்
நீதியினின் நிற்பன நடப்பனவும் முற்போல்
ஓதும்வகை யாகிஉறு காரியம் உலந்தால்
ஆதியவை யாம்இதனை யறிவதறி வாமே. 16
இப்படி யன்றிக் கன்மம் உயிர்இறை வேறுண் டென்று
செப்பிடும் அவர்க்கு மண்ணோர் செய்திடுங் குற்ற மென்னோ
ஒப்பிலா மலடி பெற்ற மகனொரு முயற்கொம் பேறித்
தப்பில்ஆ காயப் பூவைப் பறித்தமை சாற்றி னாரே. 17
சேய்திடும் கன்ம மெல்லாம் செய்தவர் தம்மைப் பற்றி
எய்திடு மென்னில் இங்கே மாய்ந்திடும் ஏய்வ தெங்ஙன்
மெய்தரு தூலங் கெட்டுச் சூக்கமாய் மேவு மென்னில்
ஐயனே தீபம் போனால் அதனொளி யாவ துண்டோ. 18
மாய்ந்துபின் வயலி லிட்ட வைதழை பலிக்கு மாபோல்
ஏய்ந்திடும் கன்ம மென்னில் இட்டிடத் திசையும் மேனி
ஓய்ந்துவந் தவரை உண்ணப் பண்ணுஞ்சோ£ றுதரத் தற்றால்
வாய்ந்திடும் மலம் வயிற்றிற் கொண்டிடும் வழக்கு வைத்தாய். 19
உருவமும் உணர்வும் செய்தி ஒத்திரா கன்மம் என்னின்
மருவுகை விரல்கள் தம்மின் வளர்வுடன் குறைவுண் டாகி
வருவதிங் கென்ன கன்மம் செய்துமுன் மதியி லாதாய்
பெருகுபூ தங்கள் தம்மின் மிகுகுறைப் பெற்றி யாமே. 20
இன்பொடு துன்ப மெல்லாம் எய்துவ கன்ம மென்னில்
நன்புனல் சந்த னாதி நணுகவும் அணுக வொண்ணா
மின்பொலி அழலி னோடு மேவுவ நன்மை தீமை
என்செய்த தியம்பி டாய்நீ இவையெலாம் இயல்ப தாமே. 21
காயத்தின் குணம தன்றிக் கண்டதான் மாவுண் டாயின்
மாயத்திற் சொல்லி டாதே மனமுதல் ஆறி னுக்கும்
நேயத்த தாக வேண்டும் அன்றியே நிகழ்த்து முண்மை
தேயத்தின் முயற்கொம் பெல்லை செப்பு வோர்செய் தியாமே. 22
அருவமே இறைவ னாகில் அறிவின்றா காய மாகும்
உருவமே யென்னிற் பூதக் கூட்டத்தில் ஒருவ னாகும்
மருவிய இரண்டுங் கூடி நிற்பவன் என்னின் மண்மேல்
இருவிசும் பொருகல் லேந்தி நிற்குமோ இயம்பி டாயே. 23
பூதத்தே அன்ன மாகி அன்னத்தால் உடம்பு புத்தி
பேதித்தே மனமு மாகிப் பிரிந்தமை திருந்த இன்று
வேதத்தே யுரைக்க என்னோ மேதினி யோர்க ளெல்லாம்
கேதத்தே வீழ்ந்து வேறு நெறியல் கேட்கு மாறே. 24
போகத்தை மண்ணிற்கண்டு விட்டுப்போய் விண்ணிற்கொள்ள
மோகத்த ராகி அல்லல் முயன்றுழல் மூட ரெல்லாம்
தாகத்தில் தண்ணீ கண்டு விட்டுப்போய்த் தண்ணீர் கேட்டுச்
சோகித்தே உண்ண வெண்ணித் துயருறு வார்க ளந்தோ. 25
வாழவே வல்லை வாமி வலக்கைதா வென்னு யிர்க்குத்
தோழனீ யுன்னை யொப்பார் சொல்லிடி னில்லை கண்டாய்
கோழைமா னுடர்தீ தென்னுங் கொலைகள வாதி கொண்டே
சூழும்வார் குழலார் மொய்ப்பச் சுடரெனத் தோன்றி னாயே. 26
ஈசனார் அயனார் மாலோ டிந்திரன் தெரிவை மார்பாற்
பேசொணா வகைக ளெல்லாஞ் செய்தன்றோ பெரியயோரானா£
ஆசையால் அவர்போல் நாமும் ஆகவே வேண்டு மாயின்
வாசமார் குழலா ரோடும் வல்லவா கூடி வாழ்மின். 27
தையலார் ஊட லாடத் தாமவ ரோடுங் கூடிச்
செய்யதா மரையை வென்ற சீறடி செம்பஞ் சூட்டி
மெய்யெலாம் பாதஞ் சூடும் வேடத்தார் மெய்யிற் கூடா
மையல்மா னுடர்பொய் மார்க்க வேடத்தே மாய்கின் றாரே. 28
வாசமார் குழலி னார்கள் மணிஅல்குல் தடத்தே மூழ்கி
நேசமார் குமுதச் செவ்வாய் அமுதினை நிறைய உண்டு
தேசுலா மணிமென் தோள்மேற் சேர்ந்துவீற் றிருந்திடாதே
மாசுலா மனத்தோரெல்லாம் மறுமைகொண் டழிவர் மன்னோ. 29
மதிநிலா நுதலா ரோடு மணிநிலா முன்றி லேறி
முதிர்நிலா வெறிப்பச் செவ்வாய் இளநிலா முகிழ்ப்ப மொய்த்த
கதிர்நிலா வடங்கொள் கொங்கைக் கண்கள்மார் பகலமூழ்கும்
புதுநிலா வியநன் போகம் விடுவர்புன் சமயத் தோரே. 30
ஊடுவ துணாவ துற்ற கலவிமங் கையரை யுள்கி
வாடுவ தடியில் வீழ்ந்து வருந்துவ தருந்த வம்பின்
கூடுவ துணர்வு கெட்டுக் குணமெலாம் வேட்கை பேயாய்
நீடுவ தின் முத்தி யித்தில்நின் றார்கள் முத்தர். 31
வீட்டினை உளதென் றோடி மெலிவதிங் கென்னை வீடு
காட்டினோர் கண்டோர் கேட்டோர் கரியவை உண்டேல் காட்டீர்
நாட்டினில் அரச னாணைக் கிசையவே நடந்து நாளும்
ஈட்டிய பொருள்கொண் டிங்கே இன்பத்துள் இசைந்தி டீரே. 32
உலகாயதன்மத மறுதலை
உள்ள தாவது கண்ட தென்றுரை கொண்ட தென்னுல கத்துநீ, பிள்ளை யாய்வளர் கின்ற நாளுனைப் பெற்ற தாயொடு தந்தையைக்,
கள்ள மேபுரி கால னாருயி ருண்ண வின்றொரு காளையாய், மௌ¢ள வேயுள ரென்று கொண்டு விரும்பு மாறு விளம்பிடே.
33
இடித்து மின்னி இருண்டு மேக மெழுந்த போதிது பெய்யுமென், றடுத்த தும்அகில் சந்த முந்தி அலைத்து வார்வுனல் ஆறுகொண்,
டெடுத்து வந்திட, மால்வ ரைக்க ணிருந்து கொண்டல் சொரிந்த தென்று, முடித்த தும்இவை காட்சி யன்றனு மான மென்று
மொழிந்திடே. 34
காண்ட லோஅநு மான மாவதும் காட்சி மன்னதும் காட்சியேல், பூண்ட பூத உடம்பி னுள்எழு போத மென்கொடு கண்டனை, மாண்ட
வாயின் மனங்கொள் ஞான முணர்ந்த தும்அநு மானமென், றீண்டு பூத மியைந்த திவ்வுடன் என்ப தென்பிர மாணமே.
35
பழுதி லாமறை கண்ட நூல்பழு தின்றி யுண்டது பாரின்மேன், மொழிவர் சோதிட முன்னி யின்னது முடியு மென்பது முன்னமே, அழிவி
லாதது கண்ட னம்அவை யன்றி யுஞ்சில ஆகமங்களின், எழுதி யோர்படி என்று கொண்டிரு நிதியெ டுப்பதும் எண்ணிடே.
36
பூத மானவை நித்த மென்று புகன்ற தென்னை உருக் களாய், ஆத லோடழி வாகு மாதலி னாக்கு வோரவர் வேண்டிடும், காத லோடு
கடாதி மண்கொ டியற்று வோருளர் கண் டனம், சீத நீரி லெழுந்த கொப்புள் நிகழ்ந்த மாருதச் செய்கையே.
37
நீரின் வந்தெழு கொப்புள் நீரது வாயெ ழும்நிகழ் பூதமும்
ஓரின் வேறுணர் வாயெ ழாஅவை பூத மாகி உதித்திடும்
தேரின் நூறடை காய்செ றிந்தவை சேர வேறு சிவப்பெழும்
பாரி னிற்பிரி யாது புந்தி பழிப்பு டம்பு கிடக்கவே. 38
கூறு சேர்வையின் வந்த போது சிவப்பெனும் குணம் ஒன்றுமே, வேறு வேறு புலன்கு ணங்கள் உடற்கண் வந்து விளைந்ததென், நூறு
காயடை கூடும் வேறொரு வன்ந னாலென நோக்கிநீ, தேறு பூத செயற்கும் வேண்டும் ஒருத்த னென்று தௌ¤ந்திடே.
39
ஆன ஐம்பொறி உண்டி நித்திரை அச்சம் மைதுனம் ஆதியாய், ஊனில் வந்திடு முன்பி லாதவை யென்று ரைக்கின் உலூதைபோல்,
வானின் வந்திடும் மாதர் ஆண்அலி யாகி மானுடர் ஆதியாய், யோனி பன்மையும் இன்று பூதம் உறும்பு ணர்ச்சியொர் தன்மையே.
40
ஐந்து நான்கொரு மூன்றி ரண்டுடன் ஒன்ற தாய்உட லங்களின், வந்தி டாவுணர் விந்தி யங்களும் வன்ன பன்மையும் இன்மையாம், புந்தி
யோடிய வன்ன போக குணங்கள் பூத புணர்ச்சிதான், தந்தி டாதிவை பேத மாயிட வந்த வாவினை தந்தவா.
41
அறிவு பூதம தென்னில் வேறு புறத்த தறிந்தமை கண்டடிலம்
செறிவு தான்உ டலத்தெ னில்சவ மான போதுடல் பேதருமோ
குறிகொ ளாதுடல் வாயுவானது கூடி டாமையின் என்னின்நீ
பிறித ராதுயிர் நிற்க ஞானம் உறக்க மென்பிற வாததே. 42
அறிவு டற்குண மென்னில் ஆனைய தததி அந்தம் எறும்பதா
உறுமு டற்பெரி தான வற்றில் உதித்தி டும்பெரி தாகவே
சிறுவு டற்செறி ஞான மும்சிறி தாயி டும்பரி ணாமமும்
பெறுமு டற்சிறி தாவ தென்பெரி தாவதென்சில பேசிடே. 43
போத மம்மெலி வவகி யும்மலி பூத மானவை கூடலிற்
பேத மோடு பெருத்து டற்கள்சிறுத்த பெற்றிமை என்றிடின்
ஓது டற்பெரி தான வுஞ்சிறி தாயி டாசிறி தானவும்
நீதி யிற்பெரி தாயி டாமுனம் உள்ள தன்மையின் நீடுமே. 44
இயல்பு காண்இவை யென்னில் வேறிசை பெண்ணோ டாணிரு தன்மையாஞ், செயல்கொ ளாஇவர் செய்தி காரண மாக வந்து
செனிப்பதென், இயல்ல தாமுடல் பூத காரிய மாவ தும்மில்ஆஆ யாகுமால், மயல தாம்பிஆஆ யாலொ ருத்தன் வகுத்த தன்மையின்
வந்ததே. 45
கார ணம்அவை யென்ற தென்னை கடாதி போல்நிகழ் காரியம், நேர ணைந்து சமைந்து நின்றிடும் என்ப தும்அது நேர்கிலோம், போர
ணைந்திடு மொன்றொ டொன்று பொருந்து மாகில் வருந்தியும், நீர ணைந்தொரு தீயி னின்றது கண்ட தாயின் நிகழ்த்திடே.
46
பூத மேவு புணர்ச்சி யேபுரி காய காரண மாகுமேல்
காதல் ஆணொடு பெண்ணும் மேவு புணர்ச்சி ககரண மாவதெ
ஆதி யேஉல கத்தில் ஆணொடு பெண்ணு மாயணை காரியம்(ன்)
நாதன் நாயகி யோடு கூடி நயந்த காரணம் என்பரே. 47
கந்தம் வெம்மை கலந்தி டும்புனல் கன்மம் என்செய்த தென்றனை
சந்த னந்தழல் சார நீரிரு தன்மை யுற்றிடு மாறதோர்
தந்த கன்மம் இரண்ட ணைந்து தருஞ்சு கத்தொடு துக்கமும்
சிந்தி யாஎழு சீவ னுற்றிடும் அஅறு டற்கிலை தேறிடே. 48
இன்பம் எய்தி இருந்து நீவினை இல்லை இங்கியல் பென் றிடில்,
துன்பம் எய்திடு வானென் மற்றிது சொல்லி டாய் சொல வல்லையேல்,
முன்பு செய்திடு கன்ம மென்றறி கன்ம மும்முதல் வன்னறிந்,
தன்பி னாலுறு விக்கு மப்பயன் ஆங்க மைப்பொ டநாதியே.
49
அநாதி யேலமை வின்றெ னின்மல மாஆஆ கன்மம் அணுச்சிவன்
அநாதி கன்மம் அணுக்கள் செய்ய அறிந்து கன்மம் உடற்செயா
அநாதி காரிய மாமு டற்கள் அசேத னம்மணை யாவறிந்(து)
அநாதி யாதி அமைக்க வேண்டும் அமைப்பி னோடும் அநாதியே. 50
காணொ ணாகர ணங்க ளுக்குயிர் கண்டி டாமையின் இன்றெனில்
காணு மோகடங் கண்ட கண்ணினைக் கண்டு நிற்பதுங் கண்ணதே
காணொ ணாதுயிர் தானு மிப்படி கண்டி டுங்கர ணங்களைக்
காணொ ணாகர ணங்க ளுக்குயி ருண்மை யாவதுங் கண்டிடே. 51
அங்கி யானது தானு மொன்றை அணைந்து நின்று நிகழ்ந்திடும்
பங்கி யாதுயிர் தானு மிப்படி பற்றி யல்லது நின்றிடா(து)
எங்கு மார்தயி லத்தை யுண்டெழு தீப மான தெரிந்திடும்
அங்க தாம்உடல் நின்று கன்மம் அருந்தி யாருயி ராவதே. 52
அறிவு தானுட லத்தின் வேறது வாயி றந்து பிறந்திடின்
அறிவு முன்புள திங்கு வந்தும் அறிந்தி டாமைய தின்றெனின்
அறிவை யோகன வத்து நீநன வத்தை அன்று தரத்திருந்
தறியு மவ்வறி வோம யட்ககறி வாத லாலறி யாதுகாண். 53
இறந்தி டும்அறி வேபி றந்திடு மென்ப திங்கிசை யாதெனின்,
உறங்கி டும்பொழு தின்றி நின்றுணர் விங்கு தித்திடு மாறதோர்,
பிறந்த இவ்வுடல் போக வேறுடல் பின்பு வந்தமை பேசிடின்,
மறந்தி டுங்கன வத்தின் வேறு டல் வந்த வாறு மதித்திடே.
54
கரணம் வாயு விடத்த டங்க அடங்கி வந்தெழு காரியம்
மரண மான விடத்து மற்றிவை மாய்ந்து பின்பு வருஞ்செயல்
கிரண மார்கலை கெட்டு திப்ப இறப்பி னோடு பிறப்பையும்
தரணி யோர்கள் மதிக்கு ரைப்ப ருயிர்க்கு மிப்படி சாற்றிடே. 55
பூத மானவை காரி யங்கள் பொலிந்து மன்னி அழிந்திடும்
ஆத லால்ஒரு நாதன் இங்குளன் என்ற றிந்துகொள் ஐயனே
பேத மான கடாதி மண்ணினில் வந்த வாறு பிடித்திடில்
போதி லாத குலால னால்வரு செய்கை யென்று குறிப்பரே. 56
வேதன் நாரணன் ஆர ணம்மறி யாவி ழுப்பொருள் பேதைபால்,
தூத னாயிரு கால்ந டந்திடு தோழன் வன்னம செய் தொண்டனுக்(கு),
ஆத லாலடி யார்க ளுக்கௌ¤ யான டிக்கம லங்கள்நீ,
காத லாலணை ஈண்டன் வேண்டின இம்மை யேதருங் கண்டிடே.
57
பொன்கு லாவு மணிக்க லன்கள் மலம்பு கில்கை பொருந்திடா,
மின்கு லாம்இடை யார்கள் தாமுல கத்தின் வேட்கை விடும்பொருள்,
புன்பு லால்மல மூத்தி ராதி பொசிந்து நாறு புலைக்கலம்,
என்கொ லாமிவர் மேல்வி ழுந்த திவற்றின் என்பெற எண்ணியே.
58
தோலி ரத்தம் இறைச்சி மேதை யெலும்பு மச்சை சுவேதநீ
ராலெ டுத்த முடைக்கு ரம்பை அழுத்தி னோடு புழுக்குழாம்
நூலொ ழுக்கிடு கோழை ஈரல் நுரைக்கு மூத்திர பாத்திரம்
சேல டர்த்தகண் ணார்க ளென்பது தேர்ம லத்திரள் திண்ணமே. 59
ஆசை யுற்றுழல் சூக ரங்கள் அசுத்த மேவி அளைந்துதின்
றேசு கித்தன வாயி டுஞ்சுகம் ஏழை யோடுறும் இன்பம் நீ
மாச தற்றொளிர் நித்த சுத்த வளந்த ருஞ்சுக வாரிகாண்
ஈச னுக்கடி மைத்தி றத்தின் இசைந்து நாம்பெறும் இன்பமே. 60
குரோத மேகுண மாயி ருந்தவர் சாந்தி நன்மை குறிக்கொளார்
அராக மேயணை வார்க ளாசை அறுத்த இன்பம் அறிந்திடார்
பராவு தேவர் பராவு தூய பராப ரன்அடி பற்றிநீ
விராவு மெய்யில் விடாத இன்பம் விளைந்திடும் இதுமெய்ம்மையே. 61
காம மாதி குணங்க ளைச்சுக மென்று கொண்டனை காதலால்
தூம மாரழல் அங்கி சீத மலிந்த போது சுகந்தரும்
நாம மார்தரு சீதம் வெம்மை நலிந்த பேபது தருஞ்சுகம்
சேச மாகிய இன்ப மாமிகு தெய்வ நன்னெறி சேரவே. 62
படிக்கு நூல்கள் சிவாக மம்பசு பாசமொடு பதித்திறம்,
எடுத்தி யம்புவ தீசன் வார்கழ லேத்தி டுந்தொழி லென்றுமே,
விடுத்தி டும்பொருள் காம மாதிகள் வேண்டி டும் பொரு ளீண்டருள்,
முடித்து மும்மலம் விட்டு நின்மல னோடு நின்றிடன் முத்தியே.
63
2. சௌத்திராந்திகன் மதம்
நீதியார் வேத நூலின் நெறியலா அறங்கள் நாளும்
ஓதியோர் ஐந்து சீலம் உடையராய் உடல மூடிப்
போதிநீள் மரத்தின் மேவும் புத்தர்நால் வரினும் வைத்துச்
சாதிதான் இலாத கொள்கைச் சௌத்திராந் திகன்முன் சாற்றும். 64
முழுதுணர்ந் துலகிற் கோறல் முதற்செயல் முணிந்து மற்றும்
பழுதிலா அருளி னாலே பரதுக்க துக்க னாதித்
தொழுதுவா னவரும் போற்றத் தொல்பிட கங்க ளான
வழுவிலா கமங்கள் சொன்ன மாதவன் நநத னாவான். 65
மருவிய அளவை காட்சி மானமென் றிரண்டி வற்றறல்
கருதிய பொருள்கள் ஞான ஞேயமாய்க் கணத்திற் பங்கம்
வருமுரு அருவம் வீடு வழக்கென நான்க தாதித்
தருமவை ஒறி ரண்டாய்த் தான்விரிந் தெட்டி னாமே. 66
உருஇயல் பூத மோடங் குபாதாய ரூப மாகும்
அருஇயல் சித்தம் கன்மம் என்றிரண் டாகும் வீட்டின்
மருவியல் குற்றம் கந்த மெனவழங் கிடும்வ ழக்கின்
இருஇயல் உள்ள தோடங் கில்லதாம் இயம்புங் காலே. 67
மண்புனல் அனல்கால் பூதம் வலிகந்தம் இரதம் வன்னம்
எண்டரும் உபாதா யம்தா னிவைஇரு நான்குங் கூடி
உண்டொரு பொருளு ரூபம் உறுபுலன் உபாங்க மோடக்
கண்டது சித்தம் கன்மம் நன்றுதீ தென்றட காணே. 68
குற்றவீ டராக மாதி குணங்களைக் குறைதத லாகும்
மற்றவீ டுருவ மாதி ஐந்தையு மாய்த் லாகும்
சொற்றருந் தொகைதொ டர்ச்சி மிகுத்துரை யென்று மூன்றாய்
உற்றிடும் வழக்கி ரண்டும் ஒன்றுமூன் றாகி ஆறாம். 69
ஒருவனென் றோதப் பட்டான் உருவாதி ஐந்தும் கூடி
வருபவ னென்று ரைத்தல் தொகையுண்மை வழக்க தாகும்
உருவமங் காதி யாய ஐந்தையும் ஒருவன் இன்று
தருவது தொகையினின்மை வழக்க தாஞ்சாற் றுங்காலே. 70
காரண காரி யத்தின் தொடர்ச்சியாய்க் கால மூன்றின்
சோர்வறத் தோன்றும் கெட்டு வழியென்கை தொடர்ச்சி யுண்மை
ஓர்தரின் ஒருவ னேஎக் காலத்தம் உள்ளா னென்று
தேர்வது தொடர்ச்சியின்மை வழக்கதாம் செப்புங்காலே. 71
தோன்றிய பொருள்க ளெல்லாம் நாசமாம் என்று சொல்லும்
மாற்றமுன் னுரைத்தல் மற்றை மிகுத்துரை வழக்கி னுண்மை
போற்றிய பொருள்கண் கட்குப் போனது அஅ£ல்மு திர்ந்து
வேற்றுமைப் பட்ட தென்கை மிகுத்துரை இல்வழக்கே. 72
உள்வழக் கில்வ ழக்குள் ளதுசார்ந்த உள்வ ழக்கோ(டு)
உள்ளது சார்ந்த இன்மை வழக்குடன் இன்மை சார்ந்த
உள்வாக் கின்மை சார்ந்த இல்வழக் கென்றோ ராறாம்
உள்வழக்குள துண்டென்கை முயற்கோடின் றில்வழக்கே. 73
உணர்வுசார்ந் துணர்வு திக்கை யுள்ளது சார்ந்த வுண்மை
உணர்வுபி னின்றா மென்கை யுள்ளது சார்ந்த இன்மை
உணர்வுமுன் பின்றித் தோன்றல் இல்லது சார்ந்த வுண்மை
உணரினில் லதுசா ரின்மை உள்ளங்கை உரோம நாணே. 74
சொன்னநால் வகையு மின்றிச் சொல்லிடும் பொருள்க ளெல்லாம்
என்னையோ அறிகி லோம்பித் தேறியோ வானம் ஆன்மா
மன்னுகா லங்கடிக்கு மனமுடன் வாக்கி றந்திட்(டு)
உன்னுமோர் இறையும் உண்டென் றுரைப்பது நித்த மன்றே. 75
ஈங்குவவன் செயற்கு வாரா இயம்பிய பொருள்க ளெல்லாம்
தாங்குவான் உளதே யென்னில் தரித்திடா தருவ மாதல்
ஓங்குவான் ஓசைக் ககதி யெனிலதங் குருவின் கூட்டம்
நீங்குவா னின்றி எங்கும் நின்றதேல் எங்கு மின்றே. 76
போதமுண் டுயிர்கட் கென்னில் வாயிலைம் புலனும் நூலும்
ஆய்தலின் றொட்டுத் தீட்டுக் கலப்பினில் அறியு மென்னில்
ஏதமுண் டிரவிற் பச்சை சிவப்புடன் ஏய்ந்த போது
கேதநின் றென்னோ என்னும் ஐயமுன் கிடத்த லாலே. 77
அறிந்திடா வாயி லின்றேல் அறிவின்றாம் ஐந்தும் பற்றி
அறிந்திடும் அறிவுண் டென்னில் ஐந்தினும் அறிவொன் றாக
அறிந்திட வேண்டும் சார்பின் அறிந்திடு மென்னில் உன்னை
அறிந்திலோம் புத்த னென்றிங் கழகிது சொன்ன வாறே. 78
ஞானஞே யங்க ளன்றி ஞாதிரு என்று சொல்ல
ஆனதிங் கறிவேவ அன்றோ அன்றெனில் அவனி போலும்
தாதிங் கறிவே என்னில் சமைந்திடு நன்ப ருப்புப்
போனக மதற்குத் தானே கறியெனப் புகன்ற தாமே. 79
உயிரினை அருவ தென்னில் உருவுடன் உற்று நில்லா(து)
உயிரினை உருவ தென்னில் உடலினில் உடல டங்கா(து)
உயிரினை அணுவ தென்னில் உடல்பல துவார மோடும்
உயிரினை நித்த மென்னில் உணர்வுத யாந்த மின்றே. 80
எங்குமாய் நின்ற தான்மா என்றிடின் எங்கும் இன்றாம்
தங்கிடு நிறைவு தத்தம் சரீரங்கள் தோறு மென்னின்
மங்கிடும் உடலத் தோடே வடிவினில் ஓரிடத்தே
அங்கது நின்ற தென்னில் அடிமுடி அறிவின் றாமே. 81
சாற்றிய காலம் இங்குத் தங்கிய வாறி தென்னை(னில்)
தோற்றுவித் தளித்துப் போக்கும் தொழிலவை கால மென்
போற்றிய பொருளில் புக்குப் பிணங்கிடும் பொருட்பின் இன்றாம்
தேற்றிய இல்வ ழக்குத் திரவியத் தியல்பி னாமே. 82
எனக்குநீ கிழக்கி ருந்தா யாகின்மேற் கென்றா யென்பால்
எனக்குமேற் கிருந்தான் என்பாற் கிழக்கென இயம்புந் திக்குத்
தனக்குநாம் கொள்வ தெப்பால் சாற்றிடாய் இல்ல ழக்குத்
தனக்குள தாகும் உண்மை தானில தாகு மன்றே. 83
உலகினைப் படைத்தான் என்றாய் ஒருவனிங் குள்ள தாயின்
உலகினைப் படைக்க வேண்டா இல்லையேல் படைக்க வொண்ணா(து)
உலகினுக் குபாதா நந்தான் உள்ளதாய்க் காரி யத்தாம்
உலகினைப் படைக்கில் அங்கும் உளதில தாவ துண்டே. 84
உள்ளது கடாதி போல உதிப்பித்தான் என்று ரைக்கின்
மௌ¢ளவே யெங்கு நின்று விதித்தனன் உலகின் மீது
வள்ளல் தான்நின்றா னென்னில் வந்ததாம் உலக முன்னே
தள்ளிடா தெங்கு நிற்கின் எங்குமுன் தந்த தாமே. 85
இல்லது கருணை யாலே இயற்றினன் இறைவன் என்னில்
கொல்லரி உழுவை நாகங் கூற்றமுங் கொண்டு தோற்ற
வல்லவன் கருணை யென்னோ வலியினால் வேண்டிற் றெல்லாம்
பல்கவே படைத்தா னாயிற் பித்தரைப் பணிந்தி டாயே. 86
பெறுவதிங் கென்பபடத்துப் பெற்றது விளையாட் டென்னில்
சிறுமழ விறைய தாகும் செய்திடும் கன்மத் தென்னின்
உறுபெருங் கன்மஞ் செய்வோர் முன்புள ராவ ருண்மை
அறிவுறின் ஞால மெல்லாம் அநாதியென் றறிந்தி டாயே. 87
உருவொடு நின்றா னென்னின் உருவமுன் படைத்தார் வேண்டும்
உருவவன் இச்சை யென்னில் உலகெலாம் இச்சை யாகும்
உருவுல கத்து ளோர்கட் குறுவது கன்மா லென்னின்
உருவுடை யோர்கட் கெல்லாம் உற்றது கன்மத் தாமே. 88
அருவெனில் பவத்தி னின்றும் எடுத்திடான் ஆகா சம்போல்
மருவினன் நிழல்போ லென்னின் மருவினோர்க் காகும்மாட்சி
பெருகிய அறிவுண் டென்று பேசிடின் நேசத் தோடும்
கருதிட உருவம் வேண்டும் இல்லையேற் கருத லின்றே. 89
எங்கள்நூல் அநாதி யயக இறைவனுண் டென்னு மென்னின்
உங்கள்நூல் உரைப்பா ரின்றி ஓதுவ தழகி தாகும்
அங்கவன் தன்ஆஆ நூல்கொண் டறிந்தனம் அவனைக் கொண்டே
இங்குநூல் அறிந்தோ மென்னில் ஈதோராச் சரிய மாமே. 90
உற்றெழு மரங்க ளாதி உயிரின்றிப் பூத ரூபம்
பற்றியிப் பாரின் மீது பாங்கினாற் பலவு மாகிப்
புற்றொடு மயிர்கொம் பாதி போலவே தோன்றி மாயும்
மற்றுள யோனி கட்குப் பயனென வழங்கு மன்றே. 91
கொண்றிட லாகா தென்றும் கொன்றவை கொண்டு நாளும்
தின்றிட லாகு மண்ணோ டொத்திடும் செத்த வெல்லாம
ஒன்றிய வாச மூட்டி உண்ணுநீர் வைத்த வர்க்கோ
சென்றுநின் றுண்ட வர்க்கோ புண்ணியம் செப்பி டாயே. 92
ஓங்கிய உருவ மோடும் வேதனை குறிப்பி னோடும்
தாங்குபா வனைவிஞ் ஞானம் தாமிவை ஐந்துங் கூடிப்
பாங்கினாற் சந்தா னத்திற் கெடுவது பந்த துக்கம்
அங்கவை பொன்றக் கேடாய் அழிவது முத்தி யின்பம். 93
அழித்திடும் அராக மாதி அகற்றிநல் லறங்கள் பூரித்(து)
இழித்திடும் புலன்கள் போக்கி இன்பொடு துன்பம் வாட்டிப்
பழித்திடாப் பழுதில் வாழ்க்கை எட்டையும் பாரித் தெல்லாம்
ஒழித்திடு ஞான சீலம் சமாதியின் உறுதி யாமே. 94
சௌத்திராந்திகன் மத மறுதலை
அனைத்தினையும் உணர்ந்தானெம் இறைவ னென்றிங் கறியாது புத்தநீ அறைந்தா யென்றும்,
அனைத்தினையும் அறிந்திடான் அளவி லாமை ஒன்றொன்றா அனைத்தினையும் அறிந்தா னென்னின்,
அனைத்தினையும் அளவிறந்த தென்ன வேண்டா அளவிலா ஞானத்தால் அறியின் ஞானம்,
அனைத்தினையும் அறியாது கணத்தில் தோன்றி அழிதலால் அறிந்த மையின் றாகு மன்றே. 95
சிலபொருளை அறிந்தவற்றின் திறத்தே யொட்டிச் சிந்திப்பன் எப்பொருளும் என்னிற் சென்று,
பலபொருளாய் ஒன்றுபல பேத மாகிப் பயின்றுவரு மாதலாற் பார்க்கு மாறென்,
உலகுதனில் ஒருபொருளங் குணரும் போதின் உற்றுணர்தல் ஆராய்தல் தௌ¤த லுண்டாய்,
நிலவுமத னால் உணர்வு பன்மை முன்பின் நின்றிடா நின்பையெல்லாம் நினைப்ப தெங்கே.
96
முத்திநிலம் கண்டறங்கள் மொழிந்தா னாயின் முதல் முழுதும் பொன்றிப்பின் மொழிந்த வண்ணம்,
ஒத்திடுந்தேன் நெய்கூட்டி உண்டிறந்தோன் ஒருவன் உலகினில்வந் திதுதீதென் றுரைத்தால் ஒக்கும்,
செத்ததுபின் னென் றுரைக்கில் கதியில் செல்லாத் தேரனுரை நீர்பெருகிச் சென்றா றாகும்,
அத்தினள வறியாதிக் கரையோர் தம்மை யக்கரைக்கே செல்லவிடும் ஆசை யாமே. 97
நீர்போல நின்றுயிர்கட் களித்தி டாதே நெருப்பாய துயர்ப்பிறப்பின் நிகழ்ந்து நின்று,
பாரோருக் களித்தபடி வலையிற் பட்ட பலகலைமான் கண்டொருநீள் கலைபாய்ந் தோடி
நேரேசென் றவ்வலைக்கே நேர்ந்தா லொக்கும் நீள்பாவக் குழியில்விழு நீர்மை யாகும்,
ஆரோவிங் கவனொப்பார் அறத்தை யாக்கப் பிறந்தறமாக் கினனென்னில் அடங்க வாமே.
98
அலகிறந்த யோனிகளில் புகுந்த தெல்லாம் அறத்தை அளித் திடவென்னில் அவற்றி னெல்லாம்,
நிலவுவது கன்மத்தா லாகு மன்றி நினைந்ததோர் இச்சையினால் நிகழ்ந்தா னாகில்,
உலகுதனி லுள்ளோர்க்கும் அதுவே யாகும் ஒருத்தி வயிற் றினிலிருந்தங் குதரந் தள்ளித்,
தலமதில்வந் தானென்னில் தாயைக் கொன்றான் தருமத்தை யின்றெனக்குச் சாற்றி டேலே. 99
அரியினொடு நரிஉழுவை ஆதி யாக ஆனபோ தறந் திரிந்து கோற லாதி,
பரிவினொடும் செய்தனனாம் இல்லை யாகிற் பசிதனக்குத் தின்பதவன் பழுதை யோதான்,
கருதிலவன் பரதுக்க துக்க னாகிற் கணவனிழந் தோர்கட்குங் கண்ணி குத்தித்,
திரியுமவர் துயரினுக்கும் இரங்கு வோன்றன் செயலறத்துக் கழகியதாஞ் செப்புங் காலே.
100
ஒருபொருளைத் தேடிஅதற் குரையுந் தேடி உரைப்பதன்முன் உணர்விறக்கும் உனக்கு நூலென்,
மருவிவருஞ் சந்தான வழியில் என்னில் வாயுரைத்த தேயுரைத்து வழங்குமாகும்,
பெருகுவது கெட்டென்னில் அதுபோ லாம்பின் பித்துரைத்த தறியாது பேதை சொல்லும்,
தருவது நூல் எப்பரிசு முதல்நடுவோ டிறுதி தான் விருத்த மின்றியது சாற்றி டாயே. 101
முன்னாகப் பலஅறங்கள் பூரித்தெம் இறைவன் முழு துணர்ந்திங் கருளினால் உயிர்கள் முத்தி அடையப்,
பின்னாகப் பிடகநூல் உரைத்தா னென்று பேசினாய் இவன்முன்பு பேரறங்கள் புரிநூல்,
சொன்னரார் இவனைப்போன் முன்னொருவன் என்னில் அவனுக்குச் சொன்னாரார் எனத்தொடர்ச்சியாகி,
அன்னாய்பின் அனவத்தைப் படுமொருவன் இன்றாம் ஆரோஉன் பாழியிருப் பார்இதனை அறையே.
102
இந்நூலைச் சொன்னவன்தான் இங்கிருந்தா னென்னில் இவனிருத்தி யேத்துமவன் எங்கிருந்தா னெவனோ,
அந்நூலோ குருவந்த அடைவுமுனக் கில்லை அடைவுதரின் முடிவின்கண் அநாதி போதன்,
சொன்னானாம் அவையேதா கமங்க ளாகுஞ் சுருக்கியூன் தவம்புரியச் சொல்லுவ தெல்லோரும்,
உன்நூல்கண் கழுவாதே உதிப்ப தன்முன் புலாலோ டுண்பானோர் ஊன்பிரிய னுரைத்ததொரு நூலோ.
103
முன்நூலும் வழிநூலும் சார்பு நூலும் மூன்றாகும். உலகத்து மொழிந்த நூல்கள்,
இந்நூலில் உன்நூலிங் கெந்நூ லென்னில் இந்நூல்கா ணென்நூலென் றியம்ப மாட்டாய்,
உன்நூலும் ஒருநூலாய் உரைப்ப தென்னே உலட்டுநூல் பருத்திநூல் சிலம்பி நூல்கள்,
அந்நூலு மல்லாதே பொய்ந் நூல் கொண்டிங் கறநோற்றுத் திரிந்தவா றழகி தாமே.
104
புத்தனவன் பொன்றக்கெட் டுப்போனா னென்று போற்றுவதிங் காரைநீ பொய்த்தவஞ்செய் புத்தா,
செத்த வர்க்குச் சிலகிரியை செய்ய இங்குச் செய்தவர்க்கும் புண்ணியமா மென்று செப்பின்,
நித்தமுயி ராதலாற் பலிக்குஞ் செய்தி நினைந்துதரு வானுமுளன் உனக்கிவ்வா றில்லை,
வைத்தசுடர்த் தீபமற மாய்ந்தக்கா லதற்கு மருவுதிரி நெய் கூட்டு மதிகேடுன் வழக்கே. 105
நூலுரைத்தான் ஒருவனுளன் என்றநுமா னத்தால் நூல்கொண்டிங் கறிந்தாற்போல் நூலா நூலின்,
பாலுரைத்த பொருள்களெல்லாம் அநுமான மென்னிற் பரலோக பாதாள லோகங்க ளொருசொல்,
லாலுரைத்த நூலின்றி அறையா யின்றேல் அவையறிந்த படியெனுன தநுமான மன்றே,
மேலுரைக்கும் பிரமாண முனக்கில்லை காட்சி யநுமானம் விட்டபொருள் விளக்குவதா கமமே.
106
எப்பொருளும் அநித்தமென இயம்பிடுவை அநித்தம் இல்லதற்கோ உள்ளதற்கோ உளதிலதா னதற்கோ,
செப்பி டின்இல் லதற்கில்ல தென்று மில்லை சென்றடைவ துள்ளதற்கேல் உள்ளதென்று முண்டாம்,
அப்படிதான் உளதிலதாம் அப்பொருளுக் கென்னில் உளதிலதா காதிலதும் உள்ள தாகா,
திப்பொருளுக் கநித்தமிலை என்றொன்றைக் காட்டாய் எனில்தோன்றும் பொருள்நின்றிங் கிறுதி யாமே.
107
அங்குரம்வித் தின்கேட்டில் தோன்றுமது போல அனைத்துருவுங் கெட்டுவழி யாகு மென்னின்,
அங்கவற்றுக் காக்கக்கே டறைந்தா யெல்லாம். அநித்தமெனும் உரைமறந்தாய் அருகனுமா னாய்நீ,
இங்குமுளை யிலைமரமாய் எழுந்தீண்டிச் செல்லா திறந்ததே எழுந்தபடி நில்லா தென்னின்,
மங்கியிடா தேபால தருணவிருத் தையாய் வரும்வடிவு திரிந்து நின்று மாயுங் காணே. 108
உடல்பூத மெனில்ஒன்றுக் கொன்றுபகை ஒன்றா வுதிரசுக் கிலமென்னின் மரத்தினுளுக் கல்லி,
னிடமாகத் தவளையுரு வந்தவா றியம்பாய் இருவினைகா ணெனின்வினைக ளிரண் டுருவாய் நிற்கும்,
திடமாக வன்னமுரு வெனின்உண்ண வுண்ணச் சென்றுவள ருங்காயந் தேயமுணர் வென்னின்,
மடவோனே அருவுணர்விங் கசேதனமாய் உருவாய் வளராது வருமில்லா தெனின்மலர்வான் வருமே.
109
என்றுமிலா தொன்றின்றாய் வருமுருவம் வித்தின் எழுரம்போ லெனின்வித்தி னுண்டாய்நின் றெழுங்காண்,
நின்றதேல் வித்தின்மரங் கண்டதில்லை யென்னின் நெற்கமுகாய் நீளாது நெல்லாயே நீளும்,
ஒன்றிலொன்றங் கிலாமையினா லுதியாகா ரணம்பெற் றுதிப்பதுகா ரியமதுவ முன்னதாகும்,
மன்றமதிக் கலைபோலக் கந்த மைந்து மருவியுள தெனும்உரையும் மறந்தனையோ இன்றே. 110
உருவமெலாம் பூதவுபா தாய சுத்தாட் டகவுருவ மென்னின் நீ உலவத்துக்கு,
மருவும்அன லோடுநீர் மண்கந்த மிரதம் வன்னம்இலை வன்னிக்கு வளிநீர்மண் வாசந்,
தருமிரத மிலைநீர்க்குத் தழல்கால்மண் கந்தந் தானில்லைத் தலத்தினுக்குச் சலமனல்கால் கூடி,
வருவதிலை இந்திரிய விடயமான மாபூதங் களுமறியாய் மதிகெட்டாயே.
111
மருத்தெண்ணெய் தனின்மருந்து நின்றாற் போல மறைந்தெட்டும் சூக்குமமாய் மருவு மென்னில்,
திருத்துமவன் மருந்தெண்ணெய் சேர்த்தாற் போலச் சேர்ப்ப வன்வே றுண்டெல்லா வுருவும் எட்டும்,
பொருத்தியதே லொருதன்மை யாம்பொருள்க ளொன்றின் குணமொன்றிற் புகாதறைகை பொருளறியாய் பூத,
உருப்பொருள்வே றுபாதாயப் பொருள்வேறு காட்டா யுபாதாயம் பூதகுணங் குண குணியா முலகே.
112
அழிந்துணர்வை உணர்வுதரு மெனின்அழிந்த தக்கா தாமுணர்விற் பொருள்வினைகள் அணையா வாகும்,
அழிந்திடுவ தாக்கியெனின் முன்னொருகா லத்தே அறிவிரண்டு நில்லாதங் கறக்கே டின்றி,
அழிந்துணர்வை உணர்வுதரு மெனின்நித்தா நித்தம் அடையும்உணர் வுக்கநித்த மாயே செல்லா,
தழிந்தெருவை ஆக்குவது போலாக்கு மென்னின் ஆம்பொருள்வே றழிந்துசத்தி கிடந்தாக்கும் அவையே.
113
கேடிலாச் சந்தானத் தேபலிக்கு மென்று கிளக்கும்நீ சந்தானம் நித்த மாகும்,
ஓடுநீர் போழிந்தா முணர்வொழுக்கை மென்னின் ஒழுகுநீ ரிட்டதெல்லா முடன்கழிதல் போலத்
தேடுபொருள சீலம்பா வனைகுறிவிஞ் ஞானஞ் சென்றவுணர் வோடேகு நின்றுணர்வின் ஏயா,
நீடுநீர் முன்னொழுகிக் கெடாதுநிறைந் தோடு நிகழுணர்வுங் கேடின்றி நிறைந்து செலுங் காணே. 114
சந்தானங் காரணமோ காரியமோ இரண்டின் தன்மை யதோ காரணமுங் காரியமும் நித்தம்,
வந்தாருஞ் சந்தானத் தொடர்ச்சியெனின் அதற்கும் வருநித்தந் தோற்றக்கே டடை தலின்மற் றொன்றேல்,
ஐந்தான கந்தங்க ளன்றாய் நித்தம் அடைபொருளாம் அறிவும்அறி வடைவு மின்றிச்,
சிந்தா முன் பின்னாகிப் பின்முன் னாகித் திரிந்துவருந் திரிவறிந்து தேரா தேரே. 115
ஒருகாலத் துணர்வுகெட்டா மெனின்உதிப்பீ றொன்றாம் ஒருபொருளின் திரிவுனக்குக் கால மானால்,
வருகால நிகழ் காலங் கழிகால மென்று வழங்குவதென் பொருள்வரவு நிலைகழிவால் இன்றேல்,
திரிகாலம் செப்பிடாய் பொருட் செயலு மொன்றாம் செயல்மூன்றும் ஒரகணத்தே சேரு மென்னில்,
தருகால மூன்றாகும் தாமரைநூ றிதழில் தள்ளூசி யுங்கால மூன்றினையந் தருமே. 116
உணர்வுகா ரணமுணர்வுக் கென்னின் நித்தம் உணர்வுக்குண் டாகிநின் றுணர்வையுதிப் பியாதிங்,
குணர்வுசந் தான விடத் தொழிந்தாற் பின்னை யுண்டாகா துடலுணர்வுக் குபாதாக மென்னின்,
உணர்வுடலின் இடையறா துதிக்க வேண்டும் உடலுணர்வின் வினையினால் உணர்வுதிக்கு மென்னில்,
உணர்வுவினை யுளதொடுங்கா துணர்வுதருஞ் செய்தி உணர்வைவினை தரினொருவன் செயல்வினையின் றாமே.
117
வினையுணர்வு தரும்வினையை உணர்வுதரு மென்றும் விளம்பின்நீ உணர்வுபோல் வினையி னுக்கு,
நினைவுவரும் ஒன் றையொன்று நிகழ்த்தி டாபின் நிலையின்மை யானிகழ்த்திக் கெடுதல் செய்யா,
கனல்விறகில் பிறந்ததனைப் பொடிசெய் தாற்போல் கருத்துவினை யிற்றோன்றிக் கழிக்கும்வினை யென்னின்,
முனமுணர்வு பிறந்தளவே வினைகெடுக்கும் முன்பின் உதியாது முகிழ்நெருப்பின் விறகுதியா வாறே.
118
பேயுநர கரும்சரரும் பிரமருமாய் உலகிற் பிதாமாதா ஆதார மொன்று மின்றிக்,
காயமொடு தாம்வருவர் என்றுரைப்பை காயங் காரியமாய் வருதலினால் காரணமுண் டாகும்,
ஆயுமுணர் வோசுத்த அட்டகமோ கன்மம் வடித் ததோ வடிவுசெய்து வைத்தாரும் உண்டோ,
ஆயுமுணர் வுண்டாகில் அறைந்திடாய் உலகுக் காதிதுணை நிமித்தகா ரணமறிவ தறிவே. 119
உருவாகி கந்தங்கள் ஐந்துங் கூடி ஒருவன்வே றொருவனிலை யென்றுரைக்கும் புத்தா,
உருவாதி ஐந்தினையும் உணர்பவன்வே றென்ன உணரும்விஞ் ஞானமென்றாய் அஞ்ஞானம் உணர்ந்தவரார்,
உருவாதி பொருள்காட்டித் தனைக் காட்டும் சுடர்போல் உணர்வுபிறி தினையுணர்த்தித் தனை யுணர்த்து மென்னின்,
உருவாதி பொருளினையும் சுடரினையும் காணும் உலோசனம்போல் உணர்வுபொருள் உணர்வதுவே றுண்டே.
120
காயமுடன் இந்தியம் மனம்நான் என்று கதறுவாய் காயம்உறக் கத்தறியா வாகும்,
வாயில்களும் அப்படியி லொன்றையொன்றங் கறியா மனங்கணத்திற் கெடுங்கால மூன்றின்வர வறியா(து),
ஆயுமறி வாகியுடல் பொறிமனமூன் றறிந்தாங் கவைநானல் லேனென்றும் அறிந்துமனத் தாலே,
ஏயுமொரு பொருள்கருதி இந்திரியப் பாலே இசைவித்துக் காயத்தால் இயற்றுவதான் மாவே. 121
கழிந்தஉணர் வேபின்னும் யானறிந்தே னென்று கருதலினவ் வுணர்வறிந்த தென்னின் முன்னே,
மொழிந்த மொழி நான்மொழிந்தே னென்றால் வாய்தான் மொழிந்ததோ மொழிந்தவன்வே றானாற் போல,
எழுந்தவுணர் வெல்லாங்கொண் டியானறிந்தே னென்ற தெதுஅதுகாண் உயிருணர்வால் வாக்கால் மற்றை,
ஒழிந்தகா யந்தன்னால் உணர்ந்துரைத்துச் செய்தங் குணர்வினுக்கும் ஆதார மாய் நிற்கும் உயிரே.
122
இந்திரிய வீதிஎழுஞ் சித்தம் நெஞ்சத் தெழுஞ்சித்த மென்றிரண்டு மொன்றுகெட்டே யொன்று,
வந்தெழுவ தெனில்கனவில் கண்டபடி நனவின் வாய்திறவார் நனவு கண்ட படிகனவிற் காணார்,
அந்தனுரு வன்னங்க ளறிந்திடா னின்றேல் அறிகனவும் இறந்துணர்வும் அழிந்துறக்கம் அடைந்தால்,
உந்துவதோர் சந்தான மில்லையுணர் வுதிப்ப உயிர்கனவு நனவினையும் உணருங் காணே.123
ஒருகாலத் தோரிடத்தில் ஒருணர்வேல் செவிதான் ஒன்றுணரா திருசெவியும் உணரும் ஓசை,
ஒருகாலத் திரு கண்ணும் இருசெவியும் மனமும் ஒருவனைக்கண் டவனுரை கேட் டுணர்ந்திடுமைம் பொறியும்,
ஒருகாலும் உணராவுள் உணர்வின்றிப் பொறிகள் ஒன்றொன்றா வுணர்வதுள் ளுணர் வைந்தும் உணரா,
ஒருகாலும் பொறிவிகற்பித் துணராவுள் ளுணர்வுக் குள்ளதுகாண் விகற்பமிரண் டும்முணர்வ துயிரே.
124
அருஉணர்வு மாய்ஆறும் மாறி மாறி அங்கங்கே தோன்றியிடின் அகத்துநிலை யின்றி,
உருவினொடு பாலதரு ணவ்ருத்தா வத்தை உண்டாகா துறக்கத்தின் உடல் தட்ட அழைப்ப,
வருவதுணர் வெங்கிருந்து நெஞ்சிலிருந் தென்னில் வாயில்வினை யறிந்தெழுப்ப ஆயுஅறி யாதாம்,
திரியொழிய இடிஞ்சில்தொடத் தீபமெழா அடக்கஞ் சென்ற பொழு தாலுணர்வு நின்றநிலை செப்பே.
125
இச்சைவெறுப் பியற்றலின்பத் துன்பம் ஞானம் இவை யணவின் குறியாகும் இவற்றில் இச்சை,
நச்சிநுகர்ந் தொரு பழத்தின் இனங்கண்டு முன்பு நான்நுகர்ந்த கனியினின மென்று நச்சல் பின்பு,
மெச்சவெறுப் பாதிகளும் இப்படியே யாகும் இவைமுன்பும் பின்புமுணர்ந் திடுத லாலே,
நிச்சய கர்த் தாஒருவ னுளனென்று நல்லோர் நிறுத்திடுவர் வெறுத்திடுவர் நின்னுடைய பொருளே. 126
எப்பொருட்டும் இரந்தரமாய் இடங்கொடுத்து நீங்கா திருளொளிதா னன்றிஇரண் டினுக்குமிட வகையாய்,
ஒப் பில்குணஞ் சத்தமதாய் வாயுவாதி உதித்தொடுங்க நிற்கும்வா னுயிர்முன்னே கொன்னோம்,
செப்பிடுங்கா லம்பொழுது நாளாதி யாகித் திரிவிதமாய்த் தீமைநன்மை செய்யுந் திக்குத்,
தப்பில்குணக் குக்குடக்குத் தெற்குவடக் காதி தானாகித் திரியாதே நின்றுபலந் தருமே. 127
காரியமாய் உலகெலாம் இருத்த லாலே கடாதிகள்போல் காரியகர்த் தாவொருவன் வேண்டும்,
ஆரியமாய் அறம் பொருளோ டின்பவீ டெல்லாம் அறைந்துயிர்கட் கறிவுசெயல் அளிப்பதுநூல் அந்நூல்,
கூரியராய் உள்ளவர்கள் ஓதஓதிக் கொண்டுவர லான்முன்னே குற்ற மின்றிச்,
சீரியபே ரறிவுடையோன் செப்ப வேண்டும் செயலினுக்குங் கரிவேண்டுஞ் சிவனுளனென் றறியே. 128
மரங்களுயி ரல்லவென்று மறுத்துச் சொன்னாய் வாடுதல்பூ ரித்தலால் மரங்களுயி ராகும்,
திரங்குநீர் பெறாதொ ழியிற் பெறிற்சிரத்தை சேரும் சீவனல எனினுலகில் சீவ னெல்லாம்,
உரங்கொள்வ தூண்பெறிற் சோரும் ஊன்பெரு றாவேல் உலர்ந்தமர நீர்பெற்றா லுய்யாதுள் ளுயிர்கள்,
கரத்சினை முட்டைகட்கு வாயிலின்று வாயில் கண்டிலதேற் பூத்துக்காய்த் தெழல்மரங்கள் உயிரே. 129
ஒருமரத்தின் உயிரொன்றேல் கொம்பொசித்து நட்டால் உய்யுமுயிர் முன்றுபல வாமோ வென்னில்,
கருமரத்தின் வித்துவேர் கொம்புகொடி கிழங்கு கண்கலந்து கொள்ளு முயிர் அண்டம் வேர்ப்புத்,
தருபிறப்புச் சராயுசங்கள் சநந மும்பெற் றாற்போல் தானடையும் உற்பிச்சம் தலநடவா வென்னில்,
பெருநிலத்தில் காலிலார் நடப்பரோ பேதாய் பிறப்பின்விதம் அநேகங்காண் பேசுங் காலே. 130
தின்னுமது குற்றமிலை செத்ததெனும் புத்தா தின்பை யெனக் கொன்றுனக்குத் தீற்றினர்க்குப் பாவம்,
மன்னுவதுன் காரணத்தால் தின்னா தார்க்கு வதைத்தொன்றை இடாமையினால் வதைத்தவர்க்கே பாவம்,
என்னிலுனை யூட்டினர்க்குப் பாவஞ் சேர என்னதவம் புரிகின்றாய் புலால்கடவுட் கிடாயோ,
உன்னுடலம் அசுசியென நாணி வேறோர் உடலுண்ணில் அசுசியென உணர்ந்திலைகாண் நீயே.
131
குடைநிழலும் கண்ணாடிச் சாயையும்போல் பிறப்புக் கொள்ளும்உணர் வென்னல்கா ரணமழிய அழியும்,
அடை நிழல்போல் கந்தமைந்தும் அழியுமுனக் கிங்கே அவையழிந்தால் அருங்கதியின் அணையுமுணர் வின்றாம்,
இடைகனவில் எழுமுணர்வு நனவுணர்வா னாற்போல் எழுமுணர்வு கன்மத்தால் நினைந்துகதி யென்னில்,
மிடைசினையும் அந்தனுமுட் டையுமுயிர்விட் டக்கான் மேவுவதென் பிறப்பினுடல் விடாது கன்ம வுணர்வே.
132
ஐந்துகந்தம் சந்தானத் தழிதல்பந்த துக்கம் அறக் கெடுகை முத்தியின்பம் என்றறைந்தாய் கந்தம்,
ஐந்துமழிந்தால்முத்தி அணைபவர்யா ரென்ன அணைபவர்வே றில்லை யென்றாய் ஆர்க்குமுத்தி யின்பம்,
ஐந்திலுணர் வினுக்கென்னில் அழியாத உணர்வுண் டாகவே அவ்விடத்தும் உருவாதி கந்தம்,
ஐந்துமுள வாமதுவும் பந்த மாகி அரந்தை தரும் முத்தியின்பம் அறிந்திலைகாண் நீயே.
133
அநாதிமுத்த னாய்ப்பரனாய் அசலனா யெல்லா அறிவு தொழில் அநுக்கிரக முடையஅரன் கன்மம்,
நுனாதிகமற் றொத்தவிடத் தேசத்தி நிபாத நுழைவித்து மலங்களெல்லாம் நுங்க நோக்கி,
மனாதிகர ணங்களெல்லாம் அடக்கித் தன்னை வழிபடுநல் லறிவருளி மாக்கருணைக் கையால்,
இனாத பிறப் பினில்நின்று மெடுத்து மாறா இன்ப முத்திக் கேவைப்பன் எங்கள்முத்தி யிதுவே. 134
3. யோகாசாரன் மதம்
போதமே பொருளாய்த் தோன்றும் பொருளதாய் எழலாற் போதம்
வாதனை அதனாற்கூடி வருதலால் வடிவிலாமை
ஆதலாற் கனவே போலும் சகமுள தறிவே யாமென்(று)
ஓதினான் ஓதா னாய உணர்வினால் யோகா சாரன். 135
யோகாசாரன் மத மறுதலை
போதமுந் தவிர வேறோர் வாதனை புகன்றாய் போதம்
வாதனை இரண்டுண் டென்னாய் போதவா தனையும் என்னிற்
காதலாற் பொருளி னோடு கலந்தபின் எழுங்க ருத்தாம்
வாதனை கனவு கண்ட பொருளின்மேல் வருங்க கருத்தே. 136
அறிவதே பொருள தாயின் அகம்சடம் என்ன வேண்டும்
பிறிபொரு ளாகும் பேதித் திதம்பிர பஞ்ச மென்னில்
உறுபொருள் உருவந் தோய்ந்தால் உணர்வு மவ்வுருவாய் நிற்கும். 137
4. மாத்தியமிகன் மதம்
அவயவம் பொருளாய்த் தோன்றும் அவயவம் ஒழிந்தாற் பின்னை,
இவைபொரு ளென்ன வேறொன் றிலாமையாற் பொருள்கள் இன்றாம்,
அவைபொருள் இலாமை யாலே அறிவுமின் றாகு மென்று,
நவைதரு மொழியி னாலே நவிலுமாத் தியமி கன்றான். 138
மாத்தியமிகன் மத மறுதலை
கடத்தினில் அவயவங்கள் படத்தினில் புகாமற் காத்தும்,
படத்தினில் அவயவங்கள் கடத்தினிற் புகாமற் கொண்டும்,
இத்தினில் நிற்கும் ஆகும் அவயவி இரண்டுங் கூடி,
உடைத்தொரு பொருளுண் டாகப் பொருளுமுண் டுணர்வும் உண்டே.
139
கருவியும் ஔ¤யும் வேறு கருதிடுங் கருத்தும் நிற்கப்
பொருள்புண ராமை யாலே போதம்வந் தெழுவ தின்றாம்
மருவிடம் பொருளுண் டாக வந்தெழும் புந்தி யானால்
பொருளுள தாகு மாகப் போதமும் உள்ள தாமே. 140
5. வைபாடிகன் மதம்
அரிசனம் நூறு கூட வருணம்வந் தெழுந்தாற் போல
விரிசகம் பொருள்கள் ஞானம் விரவிட மேவித் தோன்றும்
தெரிசன மிதுவே யென்று தௌ¤ந்திடும் தேரர் வீடு
பரிவொடும் அடைவீ ரென்று பகரும்வை பாடி கன்றான். 141
வைபாடிகன் மத மறுதலை
பொருளது புறம்ப தாகும் போதம்அந் தரம தாகும்
தெருளிடின் இரண்டுஞ் சென்று சேர்ந்திடு மாற தின்றாம்
அருவுணர் உருவ ஞேய மாதலி னாலுங் கூடா
உருவரு வுடைய வைபா டிகற்கினி மாற்றம் இன்றே. 142
6. நிகண்டவாதி மதம்
வாச மாமலர் அசோகு பேணிமறை நீதி யோடுமலை யுந்தவத்(து),
ஆசை யாலுடை அகன்று மாசினை அடைந்தில் வாழ்தரும் அறத்தினில்,
பாச மானது தவிர்ந்து பண்டிபட வுண்டு பாயினொடு பீலிமேல்,
நேச மாயவை தரித்துளோர் களின் நிகண்ட வாதியை நிகழ்த்துவாம். 143
ஈறி லாதன அநந்த ஞானமுதல் எண்கு ணங்களெனும் ஒண்குணம்,
மாறி லாதமதி மேவு சீதமென மன்னி வானவர் வணங்கவே,
வேறு லாவுகுண ஞான ஆவரணி யாதி எட்டினையும் விட்டசீர்,
ஏறு பான்மையுடை நீடு வாழ்அருகன் எங்க ளுக்கிறைவன் என்றனன்.
144
கருவி கண்படு தொடக்கொ ழிந்துவரு கால மூன்றின் நிகழ் காரியம்,
பெருக நின்றொரு கணத்தி லேஉணர் பெருந்த வக்கடவுள் பீடினால்,
மருவி நின்றுவழி பட்ட வர்க்கும்மலை வுற்ற வர்க்கும்மனம் ஒத்திடும்,
குரிசி லெங்களிறை யென்று பின்னும்நிகழ் குற்ற மின்மையது கூறுவான். 145
பசித்தல் தாகபய செற்ற மோடுவகை மோக சிந்தனை பழித்தனோய்,
நசித்தல் வேர்வினொடு கேத மோடுமதம் வேண்ட லீண்டதி சயித்தலும்,
புசிப்பு வந்திடு பிறப்பு றக்க மிவை விட்டொ ரண்ணகுண பூதனாய்,
வசித்த வன்னுலகின் மேலி ருந்தொருசொல் இகல னுக்கருளும் என்றனன். 146
அந்த வாய்மொழியி னால்அவன்சரண மாதி யோகமுதலானநூல்,
இந்த மாநிலம் மயங்கி டாதவகை இங்கி யம்பினன் இதப்பொருள்,
வந்த காலமுயிர் தம் தன்மிஅறம் மற்றும் விண்மருவு புற்கலம்,
பந்தம் வீட்டினொ டநாதியா யிவை படைப்ப தின்றியுள பத்துமே.
147
நிற்ற லோடுதலை போதல் அன்மையை நிகழ்த்து நீடுவேதி ரேகமும்,
உற்ற தாம்இவை கணத்தி லேமருவி உள்ள வாபுரியு மாறுதான்,
கற்ற காலமள வெய்தி வாழுமுயிர் காய மேவிநிறை வானதே,
பெற்று வேறுவரு தன்மை நேரறிவு பெற்ற தாகியுள பேசிலே.
148
பரந்து மீதுதரு மாத்தி காயம்அழி வித்(து) அநித்தமது பண்ணிடும்,
நிரந்து கீழதரு மாத்தி காயமது நித்த மாய்மிக நிறுத்திடும்,
புரந்த புண்ணிய மிதற்கு நன்மைபுகல் பாவ மானவது தீமையே,
தரும்பொ ருட்கிடம தாகும் வானமிகு புற்க லன்களவை சாற்றுவாம்.
149
ஏணும் ஒன்றுடைய வாகி எங்கும்அணு வாய்இரும்புகல் மரங்களும்,
பூணும் அங்குருவெ லாமு மாகுமிவை புற்க லப்பொருள்கள் என்னலாம்,
காணும் அங்கறு வகைத்தொ ழில்களவை கட்டு விட்டநெறி கன்மமேல்,
மாண நின்றுவரு மாறி மாறிமுன் வகைந்த துண்டுவிட மாட்சியே. 150
நிகண்டவாதி மத மறுதலை
அருகனுக் கனந்த ஞான மாதி ஆதி யாகவே
பெருக நிற்றல் சீதம்மா மதிக்க டைந்த பெற்றியேல்
ஒருவும் இட்ட ஒப்பவன் னுயிர்த்தி றத்தி னுள்ளபின்
மருவு மிக்க குற்றம்மேல் அறத்தின் மன்னி னானெனில். 151
அறத்தின் மன்னு வித்தவன் ஒருத்த னாய்அவன் அறத்
திறத்தி னிற்றல் மற்றொருத்த னால்வி ளைந்த செய்தியாம்
மறத்தின் அற்ற வர்க்கெலாம் வணக்கம் உன்இறைக்குமேற்
பிறக்குமிங் கவத்தை கொண்ட தாரை யின்று பேசிடே. 152
கருவிதன் தொடக்கொ ழிந்து கண்டு வாழு மென்றியேல்
உருவு கொண்டு நின்ற தென்னில் உண்டுதான் மநாதிகள்
ஒருவி நின்ற தென்னில் அத்த மொன்றையும் உணர்ந்திடான்
பொருள்தெ ரிந்து போகை கால மொன்றிலே புணர்ந்திடான். 153
ஆர்வ கோப மானவை அடைந்தொ றுப்ப வர்க்கெலாம்
சேர்வ தின்மை செப்பில்இன்று சீவன் மேவு காயமால்
ஒரு மன்னர் போலவே உயிர்க்க ளித்த லென்றியேல்
ஏர்கொள் பொன்எ யிலிடத் திருத்தல் பெற்ற தென்கொலோ. 154
சொல்ல தொன்று கொண்டிகலின் ஆத்தன் நாடவேசொலின்
இல்லை யாம் மநாதிதான் இயம்பு மாற தெங்ஙனே
நல்ல வாம் மநாதிதான் அவர்க்கு நாட வேயிலை
ஒல்லை ஊமர் ஊமருக் குரைத்த வாற தொக்குமே. 155
இன்ப பூமி சேரிகலில் நாதன் இவ்வி ருநிலத்
துன்பம்அங் குணர்ந்தி டாமை இங்கு வந்த சொல்லிடான்
இன்ப பூமி யில்இருந் திருந்தி யாவும் எய்திடில்
துன்ப பூமி யாமுணர்ந்து சொல்ல வல்ல தில்லையே. 156
நிறைந்து காய மோடு சீவன் நின்ற தாகில் இவ்வுடல்
குறைந்த போது தானும் இத்தொ டொக்கவே குறைந்திடும்
இறந்து போகும் இக்கடம் இறந்த போது நீர்குடத்(து)
உறைந்து டைந்தி டக்குடம் உலர்ந்த வாற தொக்குமே. 157
கண்டநூல் தருந்தன் மாத்தி காய மோட தன்மமும்
உண்டு மீது கீழ்உலாவி உற்று நின்றி டப்பொருள்
கொண்ட தென்னில் அத்தமிவ் விரண்டு தன்மை கூடிடா
வண்டு புட்கள் போலெனின் வழங்கி டாக ணத்திலே. 158
நீடு பாவ புண்ணி யங்க ளால்நிரய வானகம்
கூடு வேர்கள் இன்று நின்று கூட்டு வோர்கள் இன்மையின்
ஓடு மாக ணைத்தி றத்தின் உற்றவா றுரைத்தியேல்
வீடு மாக ணைக்கு நாடும் வில்லி போல வேண்டுமே. 159
ஏண தொன்று புற்கலத்தின் எய்து மென்னின் நாசமே
காண லாகும் அக்கடம் கழிந்த தன்மை இல்லவை
பூண வேண்டும் மேலுறும் பொருத்த மின்மை யொன்றினின்
மாணவே அணுப்பொருள் நிகண்ட வாதி வைத்ததே. 160
ஆறு காரி யங்கள்மாற வேத வங்க ளாமெனின்
மாறி வாணி கஞ்செயா திருக்க வந்தி டாதனம்
ஈறி லாத வூழதென்னின் எங்கு முள்ள தூழதே
பேறு காரி யம்விடப் பிறப்ப தில்லை பேசிலே. 161
உடல்வ ருந்தல் மாதவஙகள் உறுதி யென்று ரைத்திடில்
படவ ருந்து நோயினோர்கள் படர்வர் பொன்னெ யில்எனாய்
திடவே ருந்த இன்பம்இச்சை செய்தல் செய்தியேல்
கெடஅரிந்தி டாய்உன் நாசி கேடில் இன்பம் உன்னியே. 162
பூர்வ கன்மம் அற்றிடப் புசித்த பின்பு பொன்னெயில்
நேர்வ தென்னின் அக்கன் மத்து நிச்சய மிலாமையில்
தீர்வ தின்மை தீரியின்வாயில் சேர்வ தின்மை தெண்கடல்
நீர்வ றந்த பின்புபூஞை மீன ருந்த நின்றதே. 163
கூறு கூவல் மன்னும்அக் குடம் குறித்து நீள்கரை
ஏற லுற்ற தன்மை நீ ஒருத்த ரின்றி ஏறுதல்
வேறொ ருத்தன் அக்குடத்தை மீது நின்றெ டுக்கவே
ஏற லுற்ற தன்மையில் சிவன்தி றத்து நின்றிடே. 164
7. ஆசீவகன் மதம்
என்உயி ரதற்குப் போல எவர்க்கும்ஒத் திருப்பன் என்று
தன்னுயிர் வருந்தத் தானும் தலையினைப் பறித்துப் பார்மேல்
மன்உயிர் எவற்றி னுக்கும் வருந்தவே அறங்கள் சொல்லும்
அன்னதோர் வாய்மை ஆசீ வகன்அம ணர்களிற் கூறும். 165
வரம்பிலா அறிவன் ஆதி வைத்தநூற் பொருள்கள் தாமும்
நிரம்பவே அணுக்கள் ஐந்து நிலம்புனல் தீகால் சீவன்
பரந்திவை நின்ற பான்மை பாரது கடினம் சீதம்
தரும்புனல் சுடும்தீ வாயுச் சலித்திடும் உயிர்போதத் தாம். 166
பார்புனல் பரக்கும் கீழ்மேல் படர்ந்திடும் தேயு வாயுச்
சேர்வது விலங்கின் உள்ளம் அவற்றொடும் சேரும் வேறு
சார்வது பெற்ற போது சார்ந்தஅப் பொருளின் தன்மை
நேர்வது மாகி நிற்கும் இதுபொருள் நிகழ்த்து மாறே. 167
உணர்தரா அணுக்கள் நான்கும் ஒன்றுகெட் டொன்ற தாகர
புணர்தரா ஒன்றில் புக்கொன் றாயினும் பொருந்தி வாழும்
அணைதரா புதிய வந்திங் கழிதரா பழைய வான
இணைதரா ஒன்றொன் றாகி மாறுதல் ஒன்றும் இன்றே. 168
கொண்டுமுன் விரித்தல் நீட்டல் குறுக்குதல் குவித்தல் ஊன்றல்,
உண்டுதின் றுலர்த்தல் மீட்டல் உடைத்திடல் ஒன்றும் ஒண்ணா,
விண்டுபின் புறம்பும் போகும் வேறுநின் றுள்ளு மேவும்,
பண்டுமின் றென்றும் எங்கும் பரந்தொரு தன்மைப் பாலே.
169
கண்ணினில் காண வொண்ணா சனித்தந்தக் கன்மத் தாலே
நண்ணிடும் உருக்க ளாகி நின்றபின் நரரோ காண்பார்
விண்ணினில் தேவர் காண்பர் ஓரணு மிக்க நான்காய்
எண்ணிய பொருள்க ளெல்லாம் இசைவதென் றியம்புமின்னே. 170
ஒன்றினை ஒருவி மூன்றங் குற்றிடா திரண்டு விட்டு
நின்றிடா திரண்டு கூடும் நெறிநிலம் நான்கு நீர்மூன்(று)
இன்றிரண் டழல்கா லொன்றாய் இசைந்திடும் பூமி யிவ்வா
றென்றுநீர் தீகா லாகி ஈண்டுவ தென்றி யம்பும். 171
வெண்மைநன் பொன்மை செம்மை நீல்கழி வெண்மை பச்சை
உண்மையிவ் வாறின் உள்ளும் கழிவெண்மை ஓங்கு வீட்டின்
வண்மைய தாகச் சேரும் மற்றவை உருவம் பற்றி
உண்மையவ் வொட்டுத்தீட்டுக் கலப்பினில் உணரும் என்றான். 172
பேறிழ விடையூ றின்பம் பிரிவிலா திருக்கை மற்றும்
வேறொரு நாட்டிற் சேறல் விளைந்திடு மூப்புச் சாதல்
கூறிய எட்டும் முன்னே கருவினுட் கொண்ட தாகும்
தேறி ஊழிற் பட்டுச் செல்வதிவ் வுலகம் என்றான். 173
புண்ணிய பாவம் என்னும் இரண்டணுப் பொருந்த வைத்தே
எண்ணிய இவற்றி னோடும் ஏழென எங்க ளோடு
நண்ணிய ஒருவன் கூறும் ஞானமிவ் வாற தென்று
கண்ணிய கருத்தி னோர்கள் கதியினைக் காண்பர் என்றான். 174
ஆசீவகன் மத மறுதலை
வாராநெறி வீடானயின் மண்மேல் அவன் வந்து
தாராமையின் நூலானது தானோஉள தின்றாம்
சேராமையில் அணுவானவை ஐந்தும்ஒரு தேயத்(து)
ஓரானொரு காலத்தினில் ஒன்றாமுணர் வின்றாம். 175
இருபான்மையர் இவர்மண்டலர் செம்போதகர் என்றே
வருபான்மையர் இவர்மண்டலர் மண்மேல்வரு நூலும்
தருபான்மையர் எனின்நீதல மதில்வாழ்பவர் தம்போல்
ஒருபான்மையின் உளராகுவர் உணராதுரை செய்தாய். 176
உயிரானவை உடல்தீண்டிடல் ஒட்டுக்கலப் பெய்தும்
பயில்வால்உணர் வெய்தும்மெனும் மொழியானவை பழுதாம்
துயிலார்தரு மவர்பாலகர் தொடரார்அறி வினைநீ
செயிரார்தரும் உரையேதரும் அதுவோஉன செயலே. 177
அணுவானவை கீழ்மேல்உள வானால்அவ யவமும்
நணுகாவென லாமேவரின் நாசம்அவை யெய்தும்
அணுகாவெனின் இறைதொள்ளைகொள் ஆகம்முள வாகும்
துணிவாலிவை கலவாபல தொகையாம்வகை இலவாம். 178
மிகையாம்அணு உளவாகையின் அவையாம்மிக வென்னில்
தொகைநாலிடை அறலால்அவை தொகுமாறில வாகும்
பகையாகையின் மிசைதாழ்மையின் நிலையாவகை பண்ணும்
நகையாம்உரை கழியாயிரம் அவைதூணென நண்ணா. 179
கூடாஅணு அறியாமையின் வளிகூட்டுதல் கூறின்
நாடாவளி அணுவானவை நணுகச்செயும் அவரை
நீடாவினை தன்னாலெனின் நினைவின்றது இன்றாம்
தேடாயொரு வனைநீஇவை செய்வானுள னென்றே. 180
8. பட்டாசாரியன் மதம்
வேதமே யோதி நாதன் இலையென்று விண்ணில் ஏறச்
சேதமாங் கன்மஞ் செய்யச் சைமினி செப்பும் நூலின்
நீதியே கொண்டு பட்டா சாரியன் நிகழ்த்தும் நீர்மை
ஓதநீர் ஞாலத் துள்ளே உள்ளவா றுரைக்க லுற்றாம். 181
உற்றிடுங் காம மாதி குணங்கள்தாம் உயிர்கட் குண்டாம்
மற்றிவை தருமே யாகின் மறைமொழி வாய்மை யின்றாம்
கற்றநூல் அளவாற் போதம் கலப்பது கல்வி யின்றேல்
பெற்றிடும் மழவு மூங்கை என்னவே பேச லாமே. 182
உண்டொரு கடவுள் வேதம் உரைத்திட உயிரின் தன்மை
கொண்டவன் அல்லன் என்றுங் கூறிடின் உருவங் கூடில்
பண்டைய உயிரே யாகும படித்தநூ லளவு ஞானம்
கண்டிடும் உருவ மின்றேல் கருதுவ தில்லை என்றான். 183
தேவரும் முனிவர் தாமும் சித்தரும் நரரும் மற்றும்
யாவரும் உரைப்பர் வேதம் இயம்பினர் இன்ன ரென்னப்
போவதன் றென்று நாளும் பரம்பரை புகல்வ தாகும்
கூவல்நி ரென்னில் கொள்ளேம் மறுமையைக் குறித்த லாலே. 184
உன்னிய அங்க மாறும் மூன்றுப வேதந் தானும்
தன்னுளே அடக்கி வேறு தங்கிடா வகையைச் சார்ந்து
முன்னமோர் தோற்ற மின்றி முடிவின்றி நித்த மாகி
மன்னியோர் இயல்பே யாகி வழங்கிடும் மறைய தென்றான். 185
செய்தியும் நெறியும் மேவுந் தேவரும் பொருளும் எல்லாம்
எய்திய பன்மை யாலே ஓரியல் பியம்பா தாகும்
ஐயமில் காலம் மூன்றும் அறிந்தபின் நெஞ்ச கத்தாய்
மெய்யதாய் வந்து தோன்றி விளங்கிடும் வேத நூலே. 186
தப்பிலா வாகுந் தாது பிரத்தியந் தன்னி னோடே
ஒப்பிலா தாம்பி ராதி பதிகமாம் உறுப்புங் கொண்டு
செம்பபுமாம் வேதம் சொன்ன விதிப்படி செய்யச் சேம
வைப்பதாம் வீடு பாசம் மருவலாம் ஒருவ லாமே. 187
போக்கொடு வரவு காலம் ஒன்றினில் புணர்வ தின்றி
ஆக்கவே றொரவ ரின்றி அநாதியாய் அணுக்க ளாகி
நீக்கிடா வினையிற் கூடி நிலமுத லாக நீடி
ஊக்கமா ருலகம் என்றும் உள்ளதென் றுரைக்க லாமே. 188
நித்தமாய் எங்கு முண்டாய் நீடுயிர் அறிவு தானாய்ப்
புத்திதான் ஆதி யாய கருவியின் புறத்த தாகிச்
சுத்தமாய் அருவ மாகித் தொல்லைவல் வினையின் தன்மைக்(கு)
ஒத்ததோர் உருவம் பற்றிப் புலன்வழி உணர்ந்து நிற்கும். 189
செயல்தரு வினைகள் மாய்ந்து சிந்தையிற் சேர்ந்து நின்று
பயனொடு பலியா நிற்கும் பலாலமும் தழையு மெல்லாம்
வயல்தனின் மருவி நாசம் வந்தபின் பலத்தை வந்திங்(கு)
இயல்பொருந் தந்தாற் போல என்றும்பின் இயம்பு கின்றான். 190
நீதியா நித்த கன்மம் நிகழ்த்திடச் சுபத்தை நீங்கார்
தீதிலா இச்சா கன்மஞ் செந்தழல் ஓம்பிச் செய்ய
ஏதுதான் வேண்டிற் றெல்லாம் எய்தலாஞ் சோம யாகம்
ஆதிதான் ஆசை வீசி அமைத்திட வீட தாமே. 191
கருதிய கன்மம் ஞானம் இரண்டுங்கா லாகக் கொண்டு
மருவிட லாகும் வீடு மதிதனை மதித்துச் செய்தி
ஒருவிடில் பதித னாகும் பதிதனைக் கதியின் உய்க்கத்
தருவதோர் நெறிதான் இல்லை என்னவுஞ் சாற்றி னானே. 192
பசுப்படுத்(து) யாகம் பண்ணப் புண்ணியம் ஆவ தென்று
வசிப்பினான் மறைகள் சொன்ன வழக்கினால் வாய்மை யாக
நசிப்பிலா மந்தி ரங்கள் நவிற்றலின் இன்ப மாகும்
பசிப்புளான் ஒருவன் உண்ணப் பசியது தீர்ந்த பண்பே. 193
பட்டாசாரியன் மத மறுதலை
வேதஞ் சுயம்புவென வேதந்த வாய்மொழியில் வேறும் பிரமாண முளதேல்,
நீதந்து காணிங்கு மாதுங்க பாரதமும் நேர்கண்ட தாகும் அதுபோல்,
ஓதுஞ் சொலாய்வருத லானுங்க டாதிபட மோவந்தி டாஒருவரா,
லேதந்த தாமறைக ளாய்வந்த வாய்மொழியும் வேறிந்து சேக ரனதே. 194
உரைதந்தி டானஒருவன் எனிலிந்த வானினிடை ஒலி கொண்டு மேவி உளதாம்,
புரைதந்த வாம்மறைகள் அபிவெஞ்ச மாயொளிர்கை பொருள்தந்த தீப மதுவேல்,
வரை தந்த தாலில்வுரை கபிலன்சொ லாகுமது மறைகின்ற வாறும் வரவும்,
விரைவின்சொ லாயிதனை யெதுகொண்டு மேவுவது விடைகொண்ட தாலுன் உரையே.
195
உருவின்க ணேமருவி வரில்இன்று தேரைஉரை உளதுங்கள் நூலின் மறையும்,
தருகின்ற நாதரவர் இவரென்று நாமமது தரவந்தி டாமை யதனால்,
வருமென்று நேடியெனில் வளர்கின்ற தீவதனில் வருகிந்ற வாடை பலவால்,
ஒருதந்து வாயனவன் இவனென்ற போதிலிவை உளதென்று நீடிய வையே. 196
மறைநின்று நாலுதிசை யவர்ஒன்ற தாகவரும் உரை தந்த வாய்மை அதனால்,
நிறைவென்று நீடுமெனில் வனையுங்க டாதிபல சொலவொன்றி நீடி யுளதாம்,
குறைவின்றி நாடும் மொழி அவைசென்று கூடுவதொர் குணமுண்ட தாகு மலர்தான்,
உறைகின்ற மாலைதனில் உளதென்ற தாகுமெனின் உணர்வின்ற தாழி ஒலியே.
197
உடல்நின்று நாமுணரு மதுகண்ட வாறொருவன் உலகங்க ளேஉ ருவமாய்,
இடைநின்று மாமறைக ளவைஅன்று வாய்மொழிய இவைகொண்டு லோக நெறியின்,
கடனின்று வாழுமது கருதும்பின் ஆணைவழி கருமஞ்செய் காசினி யுளோர்,
திடமென்று சீர்அரச னுரைதங்கும் ஓலைதிரு முகமென்று சூடு செயலே.
198
முடிவின்றி வேதியர்கள் முதல்வந்த மூவர்களும் மொழி யும்சொல் ஆரிய மெனில்,
கடிவின்றி யேகணித ரவர்கண்ட வாறதுவென் வடகண்ட சாதி கடியா(து),
ஒடிவின்றி ஓதுவதென் உரைதங்கு வேதமொழி உளதென்று கூறு மவர்தாம்,
அடியின்று தானெனும தறிவின்றி ஈனுமவர் இலையென்ற ஆத ரவதே. 199
அறிகின்ற பான்மைஅவ யவநின்ற தாகில்அணு அழியுங்க டாதி யெனவே,
செறிகின்ற வாறதிலை யெனின்வந்து சேருமது திடமன்றுகூட வொருவன்,
குறிகொண்டு காரின் முளை வருகின்ற பீசமவை குலையொன்றி வேனி லழியும்,
உறுகின்ற காலமவை உடனின்று போயழியும் உலகென்று நீடி யிலதே. 200
நிறைவெங்கு மாகில்உயிர் நெறிநின்று போய்வருதல் அணைவின்ற தாம் உடலிலே,
குறைவின்றெ லாமும்உள குடகந்த மாகில் அவை விடநின்ற வாறு குறியா,
உறைகின்ற மாதவர்கள் உடனின்று போய்வறிதொர் உடல்கொண்டு மீள்வ துணராய்,
மறைதந்த வாய்மைதனில் நிறைவின்றி யேயுலகின் மலைகின்ற தாலுன் உரையே.
201
அழிகின்ற தால்வினைகள் ஆகின்ற வாறெனெர வது மங்கி யான பரிசேல்,
ஒழிவின்றி ஓதநமும் அறவுண்ண நாம் வினைகள் உறுகின்ற வாறதெனலாம்,
கழிகின்ற தாலறிவு வினைதந்தி டாவினைஞர் கருமங்கள் நாடி யுறுவோர்,
பழுதின்றி யேஉதவும் அதுபண்ப தாகஅருள் பரமன்க ணாகும் வினையே. 202
கருமங்கள் ஞானமது வுடன்நின்ற லல்மருவு கதிதங்க லாகு மெனின்நீ,
தரும் அங்க ராகமுதல் அவைதங்க மேலறிவ தவிரும்பின் வீடும் அணையா,
பொருள் நின்று தேடிவரு பயன் உண்டு போவினை புரிகின்ற வாற தெனவே,
திருநின்ற போகம் வளர் அவிசென்று மேவியது செலவுண்டு சூழவ செயலே. 203
9. பிரபாகரன் மதம்
அருந்தவனாம் சைமினிபண் டாரணநூல் ஆய்ந்தானாய்த்
யூ¤ருந்தும்உல கிரிற்கொண்டு செப்பியநூல் திறமதனைப்
பரிந்துபிர பாகரன்பட் டாசானில் வேறாகிப்
புரிந்துரைசெய் நெறியதனைப் புவனிமிசைப் புகன்றிடுவாம். 204
அருஞ்செயலின் அபாவத்தே அபூர்வமெனும் அது தோன்றித்,
தருஞ்செயல்நின் றழியில்பின் பலிப்பிப்ப தாகுமது,
வருஞ்செயல்ஒன் றின்றியே மண்சிலைபோ லாமுத்தித்,
தருஞசெயலீ தெனவுணர்ந்து தாரணிமேல் அவன் சாற்றும்.
205
பிரபாகரன் மத மறுதலை
வேறுபலந் தருவதுதான் வினையென்று வேதங்கள்
கூற |