(Copyright Courtasy: Socio Religious Guild, Thirunelveli)
பகுதி 2 (Part 2) பகுதி 3 (Part 3) பகுதி 4 (Part 4)
திருச்சிற்றம்பலம்
1. திருப்பிரமபுரம்
திருத்தல வரலாறு:
இத்திருப்பிரமபுரத் திருத்தலமானதுசோழவள நாட்டில் காவிரி வடகரையில் அமைந்துள்ள 14ஆவதுதலமாகும். நாகை மாவட்டத்தில் சீகாழி கோட்டத்தின் தலைநகர். மயிலாடுதுறை சிதம்பரம் இருப்புப்பாதையில் இரயில் நிலையம், பேருந்து வசதிகள் உள்ள பெரிய ஊர். பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை, சீகாழி, கொச்சைவயம், கழுமலம் என்ற பன்னிரண்டு திருநாமங்களை உடையது. இவற்றின் பெயர்க்காரணங்களைப் பதிகம் அறுபத்துமூன்றில் திருஞானசம்பந்தர் சுவாமிகளே எடுத்து விளக்கி உள்ளார்கள். அது “பல்பெயர்ப்பத்து' என அமைக்கப் பெற்றுள்ளது. திருக்கழுமலமும்மணிக்கோவையுள் :வசையில் காட்சி” என்னும் செய்யுளில் இப்பன்னிரண்டுபெயர்களும் பன்னிருயுகத்தில் வழங்கினவாகப் பட்டினத்தடிகளால் உணர்த்தப் பெறுகின்றது. இவையன்றி, சங்கநிதிபுரம் முதலாகப் பதினான்குபெயர்களும் உள்ளனவாகத் தலபுராணம் சொல்லும்.
விசேடங்கள்:
புறவாழிக் கடல் பொங்கி எழுந்த பேரூழிக்காலத்தில் இறைவன் அறுபத்துநான்குகலைகளையும் ஆடையாகஉடுத்திப் பிரணவத்தைதோணியாகக் கொண்டு அம்மையப்பனாகஎழுந்தருளி வரும்போது ஊழியிலும் அழியாத இத்தலத்தில் தங்கினார். இங்கே ஒரு மலை உண்டு, இது இறைவன் ரோமசமுனிவருக்காகத் திருக்கயிலைச் சிகரமொன்றை இந்த இடத்தில் தோற்றுவித்து, தானும் அம்மையுமாக இருந்து காட்சி வழங்கும் இடம். இதனை “இருபது பறவைகள் ஏந்திக் கொண்டிருக்கின்றன”. இங்கே குரு, இலிங்க, சங்கமமாகிய மூன்று
திருமேனியையும் வழிபடலாம். குருமூர்த்தம் தோணியப்பா; இலிங்க மூர்த்தம் பிரமபுரீசர்; சங்கம மூர்த்தம் சட்டைநாதர். இதுவே திருஞானசம்பந்தப் பெருமானின் அவதாரஸ்தலமாகும்.
சுவாமிகளின் பெயர்கள்:
சுவாமி பிரமபுரீசர், அம்மை திருநிலைநாயகி. சுவாமி-அம்மன் கோயில்களுக்கு இடையில் திருஞானசம்பந்தர் ஆலயம் இருப்பது சோமாஸ்கந்தர் நிலையை நினைவூட்டுகிறது. திருத்தோணிச் சிகரத்துள்ளஇறைவர் பெரியநாயகர், தோணியப்பர் எனவும் வழங்கப் பெறுவர். இறைவி பெரியநாயகி; திருஞானசம்பந்தப் பெருமானுக்குச் சிவஞானப்பால் அளித்தவர்
இவரே.
தீர்த்தங்கள்: பிரமதீர்த்தம், காளிதீர்த்தம், கழுமலநதி, விநாயகநதி, புறவநதி முதலிய இருபத்திரண்டுதீர்த்தங்கள் உள்ளன.
வழிபட்டோர்: முருகன், காளி, பிரமன், இந்திரன் முதலியோர். திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், பட்டினத்து அடிகள், நம்பியாண்டார் நம்பிகள், சேக்கிழார், அருணகிரிநாதர் முதலியோர் போற்றியுள்ளனர். கணநாத நாயனார் அவதரித்த தலம். திருக்கயிலாயபரம்பரையில் வந்தருளியதிருநமச்சிவாயர், காழிக்கங்கைமெய்கண்டார், சிற்றம்பலநாடிகள் முதலியோர் வாழ்ந்த தலம்.
விழாக்கள்:
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அர்த்தயாமத்தில் ஸ்ரீசட்டைநாதருக்கு விசேஷ வழிபாடு நடைபெறும். சித்திரை மாதம் இறைவன் இறைவியர்க்குப் பெருவிழா நடைபெறும். அதில் இரண்டாம் திருநாள் திருஞானசம்பந்தருக்குஉமையம்மைஅளித்தருளியதிருமுலைப்பால் திருவிழா. இவ்விழாக்களில் பெரும்பகுதிதிருஞானசம்பந்தாஐதீகத்தைஒட்டியனவேயாம்.
கல்வெட்டு:
இத்தலத்துக்குநாற்பத்தேழுகல்வெட்டுக்கள் உள்ளன. இரண்டாம் குலோத்துங்கன் கல்வெட்டு முதல் வேங்கடதேவராயர் கல்வெட்டு வரையில் பதின்மூன்றுக்கு மேற்பட்ட அரசர் பெருமக்களுடையனவாகக் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுக்களால், இத்தலம் இராஜராஜவளநாட்டுத் திருக்கழுமலநாட்டுப் பிரமதேயம் திருக்கழுமலம் என்று பிரிவும் பெயரும் குறிக்கப் பெறுகின்றது. பிரமபுரீசுவராதிருக்கழுமலமுடையார், திருக்கழுமலமுடைய நாயனார் என்றும், தோணியப்பரும் அம்மையும் திருத்தோணிபுரமுடையார், பெரிய நாச்சியார் என்றும், சம்பந்தப்பெருமான் ஆளுடைய பிள்ளையார் என்றும் குறிக்கப்பெறுகின்றார்கள்.
ஆளுடைய பிள்ளையார் கோயிலில் ஆளுடைய பிள்ளையார் வடிவத்தைஎழுந்தருளச் செய்தவள் மூன்றாம் குலோத்துங்கனுடையஅடுக்களைப் பெண்டுகளிலே மூத்தவள் இராஜவிச்சாதரி என்பாள் என்பது குறிக்கப் பெற்றுள்ளது. இரண்டாம் இராஜராஜனது கல்வெட்டு, கங்கைகொண்டசோழபுரத்தானொருவன் ஆளுடைய பிள்ளையார் திருக்கோயில் முதற் பிராகாரம் திருமதில் எடுக்கப் பொன் கொடுத்தான் என்கின்றது. கல்வெட்டு ஒன்றில் திருநட்டப்பெருமான் ஆளுடைய பிள்ளையார் என வருவது சுட்டுவிரல் நீட்டிக் கூத்தாடுகின்றகுழந்தையாகியஞானசம்பந்தரைக் குறிப்பதாகலாம். பொத்தப்பிச் சோழன் என்பவன் வீரபாண்டியனை வென்று வெற்றிப் பரிசாக பாண்டி நாட்டிலிருந்து நடராஜப் பெருமானைக் கொண்டுவந்து சீகாழியில் கொடுத்தான் எனத் தெரிகிறது. இங்கு, பொன் கொடுத்தும், நிலம் விட்டும் போற்றியஅரசர்கள் வீரராஜேந்திரன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராஜராஜன், இரண்டாம் இராஜாதிராஜன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் இராஜராஜன், மூன்றாம் கோப்பெருஞ்சிங்கன், வீரவிருப்பணமுடையான், வேங்கடதேவராயர், இராமப்ப நாயக்கன், ஆறனூர் இணைச்சியப்பஅகரவல்லவன், விட்டலதேவன் முதலியோர் ஆவர். இத்தலத்திலுள்ளதிருக்கோயில் தருமைஆதீனத்தின் அருளாட்சியில் உள்ள திருக்கோயில்களில் ஒன்றாகும்.
பதிக வரலாறு:
சோழநாட்டிலே, சீகாழியிலே, தவம்பெருக்கும் கவுணியகுலத்தில், சிவதீட்சை பெற்ற வேதியர் குலதிலகராகியசிவபாதஇருதயருக்கும், பகவதியம்மையாருக்கும் வேதநெறி தழைத்தோங்க, மிகுசைவத்துறை விளங்க, சித்திரை மாதத்துத் திருவாதிரைத் திருநாளிலேதிருமகனார் ஒருவர் தோன்றினார். அக்குழந்தைக்குமூன்றாமாண்டுநடக்கும்பொழுது ஒரு நாள் சிவபாதஇருதயர் சீகாழிக் கோயிலுள் இருக்கும் பிரமதீர்த்தத்தில் நீராடச் சென்றார். குழந்தையும் அழுது கொண்டே உடன் சென்றது. சிவபாதஇருதயர் உடன் வந்த சிறுவனைக் குளக்கரையில் உட்கார வைத்து விட்டு, நீருள் மூழ்கி அகமர்ஷணம் என்னும் திருமந்திரத்தைச் செபித்துக் கொண்டிருந்தார். அங்ஙனம் அவர் மூழ்கிய உடன் தந்தையைக் காணாது, முழுமுதல் தந்தையாகியசிவபெருமானதுதிருவடிகளைமுறைப்படிவழிபட்ட பண்டை உணர்வு மூண்டெழ, பிள்ளையார் திருத்தோணிச் சிகரம் பார்த்து, “அம்மே! அப்பா!” என அழுதார். இவ்வொலிதிருத்தோணிபுரத்தில் வீற்றிருக்கும் அம்மையப்பர் திருச்செவியில் சென்று சேர்ந்தது. அப்பெருமான் பொருவிடைமேல் அம்மையுடன் எழுந்தருளிக் குழந்தை ஞானசம்பந்தன் முன் தோன்றினர். இறைவன் உமையம்மையைப் பார்த்து, “உன் திருமுலைப் பாலைப் பொற்கிண்ணத்தில் கறந்துஊட்டுக என ஆணை தந்தார். அப்படியே அம்மையாரும் கறந்தருளி, எண்ணரியசிவஞானத்துஇன்னமுதத்தையும் குழைத்துப், பாலை ஊட்டினார். கண்ணீரைத் துடைத்தார்; அழுகையை அகற்றினார். உடனே அம்மையும் அப்பனும் மறைந்தனர். உயிர்த் தந்தையும் தாயுமாகியஇவர்களே திருமேனி தாங்கி வெளிப்பட்டு வந்து இங்ஙனம் அருளப் பெற்றமையால் இவர் ஆளுடைய பிள்ளையார் எனவும் தேவர் முதலானோர்க்கும் அறிய முடியாத சிவஞானம் சம்பந்திக்கப் பெற்றமையால் சிவஞானசம்பந்தர் எனவும் அழைக்கப் பெறுவாராயினார். அகமர்ஷணாம் என்ற மந்திரத்தை. ஒதி முடித்து நீராடிக் கரையேறியசிவபாதஇருதயர் தன் குழந்தை ஞானசம்பந்தன் கடைவாயில் வழிந்து கிடக்கின்றபாலைக் கண்டு, 'நீ யார் தந்த பாலை உண்டாய் ? எச்சில் மயங்கிட உனக்கு இது இட்டாரைக் காட்டு” என்று சிறுகோல் கொண்டு ஓச்சிஉரப்பினார். குழந்தையாகிய பிள்ளையார் கண்களில் ஆனந்தக் கண்ணீர் துளிக்கவலக்கையைச் சிரத்தின் மேலுயர்த்தி, வானிடமெல்லாம் பரவி நிற்கும் ஒளியோடுவிடையின்மீதுபண்ணிறைந்தஅருமறைகள் பணிந்தேத்தப், பரம கருணையின் வடிவாகியபராசக்தியோடு காட்சி அருளியஅருள்வண்ணப் பெருமானைச் சுட்டிக் காட்டிக் கொண்டே உளம் நிறைந்து வழிந்த உயர் ஞானத் திருமொழியால் இத்திருப்பதிகத்தைப் பாடி அருளினார். உமை அம்மையார் கொடுத்த சிவஞானம் குழைத்தபாலைக் குடித்த அந்த விநாடியிலேயேஞானசம்பந்தன் என்ற மூன்று வயதுக் குழந்தை சகல ஞானங்களும் கைவரப் பெற்றுத் திருஞானசம்பந்தர் ஆயினார். இதனைச் சேக்கிழார் கூறுகிறார்.
“சிவனடியேசிந்திக்கும் திருப்பெருகுசிவஞானம் _-
பவமதனைஅறபாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்
உவமையிலாக் கலைஞானம் உணாவரியமெய்ஞ்ஞானம்
தவமுதல்வாசம்பந்தர்தாம் உணாந்தார் அந்நிலையில்”
திருஞானசம்பந்தருடைய பெரும்பாலான பதிகங்களில் ஒன்று முதல் ஏழு பாட்டுக்கள் வரை இறைவனின் அருட்செயல்கள், பெருமைகள் முதலியன கூறப்படுகின்றன. எட்டாவது பாட்டில் இராவணன் செயல் பற்றிக் கூறப்படுகின்றது. 9-ஆவது பாட்டில் திருமால், பிரம்மா - இவர்கள் அடி முடி தேடிய வரலாறு பற்றிக் கூறப்படுகின்றது. 10-ஆவது பாட்டில் சமணர்கள், பெளத்தர்கள் ஆகியவர்களது தவறான கொள்கைகள் பற்றிக் கூறப்படுகின்றது. 11-ஆவது பாட்டில் (திருக்கடைக்காப்பு) பதிகம் படிப்பவர்கள் பெறும் பலன் பற்றிக் கூறப்படுகின்றது.
திருச்சிற்றம்பலம்
1.திருப்பிரமபுரம்(சீகாழி)
பண் : நட்டபாடை
ராகம் : கம்பீரநாட்டை
தோடுடையசெவியன்விடையேறியோர்தூவெண்மதிசூடிக்
காடுடையசுடலைப்பொடிபூசியென்னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமலரான்முனைநாட்பணிந்தேத்தவருள்செய்த
பீடுடையபிரமாபுரமேவியபெம்மானிவனன்றே.1
தோடு உடைய செவியன்,விடை ஏறி,ஓர் தூவெண்மதி சூடி,
காடு உடைய சுடலைப் பொடி பூசி,என் உள்ளம் கவர் கள்வன்
ஏடு உடைய மலரான்முனைநாள் பணிந்து ஏத்த,அருள்செய்த,
பீடு உடைய பிரமாபுரம்மேவிய,பெம்மான் இவன் அன்றே.
பொருள்: அப்பா,எனக்குப் பால் கொடுத்தவள் யார் தெரியுமா?அகிலாண்டகோடிஆன்மாக்களைஈன்றும்பின்னையும் கன்னி என மறைகள்பேசுகின்றஉமையம்மை. அவளைத் தன் உடம்பில் இடப்பாகத்தில்வைத்திருக்கிறான் சிவபெருமான். ஆதலால் அவனுடைய இடது திருச்செவியில் தோடு அணிந்திருந்தான். அவன் இடபத்தின்(காளையின்) மீது ஏறி வந்தான். அவன் திருமுடியில் தூய்மையான வெண்ணிற களங்கமில்லாத ஒரு கலைச்சந்திரனைச் சூடி இருந்தான். அவன் உடம்பு முழுவதும்திருவெண்ணீற்றைப் பூசி இருந்தான். நான் தனிமையில் இருந்ததினால் அவன் என் உள்ளத்தில் புகுந்து என்னைக் கொள்ளை கொண்டுள்ளகள்வனாகி விட்டான்.
பல இதழ்களைக் கொண்ட தாமரை மலரில்வீற்றிருக்கின்ற நான்முகன் என்று சொல்லப்படும் பிரமதேவன் முன்னொரு காலத்தில் தன் படைப்புத் தொழிலை இழந்து விட்டான். அதனை மீண்டும் பெறுவதற்குஇந்தப் பெருமை வாய்ந்த நம் ஊராகியபிரமபுரத்திற்கு வந்தான். வந்து அவன் இதோ விண்ணில் காட்சி கொடுக்கின்றானேஇவனைக்காதலாகிக் கசிந்து,கண்ணீர் மல்கி,வணங்கித்,தனது படைப்புத் தொழிலை மீண்டும் தந்தருள வேண்டுமென்று இரங்கினான். அவனுக்கு அருள்புரிந்தவன்தான் இதோ தெரிகின்றானேஇந்தப்பெம்மான். அவன் நமது பிரமபுரத்தைத் தனது ஊராகக் கொண்டு அருளாட்சி செய்து வருகிறான். அவன்தான் அப்பா எனக்குப்பாலைக் கொடுக்கச் சொல்ல அம்மை பாலைக்கறந்து,அதில் எண்ணரியசிவஞானத்துஇன்னமுதத்தையும்குழைத்து அந்தப் பாலைக் கொடுத்தாள். பால் மிகவும் ருசியாக இருந்தது. வேகமாகக் குடித்தேன். அதனால் கடைவாயில்சிறிது பால் சிந்திவிட்டது. அதோ விண்ணிலே காட்சி அளிக்கின்ற வேத நாயகனானஅம்மையப்பரைஉமக்குத் தெரியவில்லையா அப்பா?எனக்கு மிக நன்றாகக் காட்சி அருளுகின்றானே! (சிவபாதஇருதயர் கண்களுக்கு இறைவன் புலப்படவில்லை).
குறிப்புரை: :தோடுடையசெவியன் என்பது முதலாகஉள்ளங்கவர்ந்தகள்வனுடையசிறப்பியல்புகள்தெரிவிக்கப் பெற்றுள்ளன. பிள்ளையாருடையஅழுகைக் குரல் சென்று பரந்து திருமுலைப்பால்அருளச் செய்தது திருச்செவியாதலின் அதனை முதற்கண் தெரிவிக்கிறார். உலகுயிர்கள் துன்பம் நீங்கி இன்பம் அடைதலே பொருளாக,பாடல் பரமனார்திருச்செவியில் சென்று சேர,திருச்செவியை முதற்கண் சிறப்பித்தார் என்பது, 'பல்லுயிரும்களிகூரத் தம் பாடல் பரமர் பால் செல்லுமுறைபெறுவதற்குத்திருச்செவியைச் சிறப்பித்து'என்ற சேக்கிழார் வாக்கால்'தெரியலாகும். திருஞானசம்பந்தக் குழந்தை கண்ணாரக் கண்டு சுட்டிக் காட்டிய அம்மையப்பரின் காட்சி சிவபாதஇருதயரின்புறக்கண்களுக்குப்புலப்பட்டதாகத் தெரியவில்லை. இறைவன் திருமுடியில்சூடிய சந்திரன் நாம் காணும் சந்திரன் போன்றுபிராகிருத சந்திரன் அல்ல என்பது அறிக.
இத்திருப்பாடலுக்கு உரை எழுதிய கயப்பாக்கம் திரு சதாசிவச்செட்டியார் அவர்கள்'விடையேறி'என்பது நித்யத்தன்மையை வேண்டிய அறக்கடவுளைவெள்விடையாகப் படைத்து ஊர்தியாகக்கொண்டதால்'சிருஷ்டியும் - அதாவது படைத்தல்'தொழிலைக்குறிக்கும்;மதிசூடி என்பது சந்திரனுக்கு அபயம் தந்து திருமுடியில்ஏற்றிக்காத்ததால்'திதியும் - அதாவது காத்தல்'தொழிலைக்குறிக்கும். “பொடி பூசி'என்பது சர்வ சங்காரகாலத்து நிகழ்ச்சியை அறிவித்தலால்'சங்காரமும் - அதாவது அழித்தல்'தொழிலைக்குறிக்கும். 'கள்வன்'என்பது இறைவன் எல்லா உயிர்களிடத்தும் நீக்கமற நிறைந்திருந்தும்அவைகள்வினைப்-போகங்களைநுகருங்காலை ஒளித்து நிற்பதால்'திரோபவமும் - அதாவது மறைத்தல்'தொழிலைக்குறிக்கும். “அருள் செய்த'என்பது அனைவருக்கும் அருள் செய்யும்'அனுக்கிரகமும் - அதாவது'அருளல்' செயலையும்குறிக்கும். இது இவ்வாறு இறைவனதுஐந்தொழிலையும்விளக்கும் குறிப்பு என்பார்கள்.
தேவாரத்திற்கும்வேதத்திற்கும் உள்ள ஒற்றுமையை உணர்த்த,வேதம் பயின்ற மரபில் வந்து தமிழ் வேதம் தந்த திருஞானசம்பந்தர்,
'தத்ஸவிதுர்வரேண்யம்
பர்கோதேவஸ்யதீமஹி
தியோயோநப்பிரசோதயாத்'
என்ற காயத்ரிமந்திரத்தின் முதல் எழுத்தாகிய'த'கரத்தின்மீதுபிரணவத்தின் முதல் எழுத்தாகிய'ஓ’ காரத்தைச்சேர்த்துத்'தோ'டுடையசெவியன் என்று தொடங்கி இருப்பதை அறிந்து இன்புறுக.
Oh! Father! See yonder in the sky (the child points his index finger towards the sky). Behold, it is He, the Supreme Lord of all the Universe. He is wearing a coiled palm leaf as ear ring in his left ear. He is riding on a bull with His Consort. He gave protection in His matted hair, to the pure and white crescent moon. He smears the holy ashes all over His body. It is He who draws my heart over to Him on the sly.
In the days of yore, Brahman who is normally seated in the petalled Lotus flower came to Pira-maa-puram, and offered obeisance to Lord Civan. He pleaded for condonation of his initial misgivings about Him and begged for pardon. Lord Civan of Piramaa-puram blessed him and restored his activity of creation.
Indeed He is verily the most exalted godhead who is enshrined in the illustrious and majestic temple of Pirmaa-puram. (It is He who commanded His Consort Umaa to give me the Divine milk. She mixed in the milk Civa-Gnaanam (Supreme Divine Knowledge) and gave it to me to drink. I drank it).
Note (1)
Inherent in this opening verse, is a rather oblique indication suggestive of the fivefold acts of Lord Civa (namely creation, protection, involution or destruction, obfuscation and benediction).
1. Creation - Riding on the bull. The god of virtue prayed for eternity and so was taken as His Ride. Thus the bull continues to live for ever and is identified with the cycle of creation - படைத்தல்.
2. Protection - A place of safety for the moon on His matted hair. He gave protection to the moon on his own head. This is an identification for Protection - காத்தல்.
3. Involution or Dissolving or Destruction - symbolised by smearing His body with holy ashes. After the universal deluge the entire universe is absorbed in the great infinite . This is Dissolution.
4. Obfuscation Invisibleness, making the soul forget its past karma. Though He is omnipresent in all beings at all times, He hides Himself when the mind and body are undergoing the effects of karma. This is to identify obfuscation - மறைத்தல்.
5. Benediction - Grant of benign grace. He is ever waiting to grace those This is liberated souls that come near to Him and are fit to get His grace. 6. (This allegorical interpretation was given by the learned scholar, Kaya-p-paakkam Sadaa-siva-ch-chettiar. Benediction
Note (2)
The saint points to the Lord who appeared before him and identifies Him as the one at whose command the heavenly milk was given to him by His consort Umaa Devi. The use of the term 'Ivan' or in this verse, suggests the proximity from which the Saint saw the Lord who appeared before him. 'Avan' - One who is (at a distance)far away. 'Ivan' இவன் - One near by.
தோடு - Ear-ring, ornament of women. A scroll of palm leaf inserted into the ear- lobe. The Lord wearing ear-ring on the left connotes the Male Female Combination of Lord Civa's manifestation (c.f.) திருவாசகம் (Verse 18திருக்கோத்தும்பி) depicting the dual form. "தோலும், துகிலும், குழையும், சுருள்தோடும்" The primordial apparel of Lord Civa . (தொன்மைக் கோலம்).
Note (3)
Some commentators are of the view that in this verse Saint ThirugnanaSambandar refers to his own floral offerings to Lord Civa in his previous birth. முனைநாள் (நான்) பணிந்தேத்த அருள் செய்த - நான் முன்னரே பணிந்தேத்தினேனாகஅப்பொழுதே எனக்கு அருள் செய்தான் என்றவாறு. மலரால்முனைநாள்in combination becomes மலரான்முனைநாள்Vide Rule 137 of இலக்கண விளக்கம் by வைத்தியநாததேசிகர். (பிரமன்) ஏடுடையமலரான்முனைநாளில்பணிந்தேத்தினன்எனலும் கூடும். Brahma offered worship here, aeons ago. " " is suggestive of the petalled lotus which is the seat of Brahma. This latter interpretation seems to be the more plausible. One, seated on this lotus is Brahma. Pirama-puram is the shrine consecrated to Lord Civa by rur (Brahma). So are many other shrines on this earth consecrated to Lord Civa by Brahma, in past ages.
முற்றலாமையிளநாகமோடேனமுளைக்கொம்பவைபூண்டு
வற்றலோடுகலனாப்பலிதேர்ந்தெனதுள்ளங்கவர்கள்வன்
கற்றல்கேட்டலுடையார்பெரியார்கழல்கையாற்றொழுதேத்தப்
பெற்றமூரந்தபிரமாபுரமேவியபெம்மானிவனன்றே.2
முற்றல்ஆமைஇளநாகமோடுஏனமுளைக்கொம்பு அவை பூண்டு
வற்றல்ஓடுகலனாப்பலிதேர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன்
கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் - தொழுது ஏத்தப்
பெற்றம்ஊர்ந்தபிரமாபுரம்மேவியபெம்மான் இவன் அன்றே.
பொருள்: அப்பா,நான் காண்பிக்கும்அம்மையப்பரை உம் கண்கள் காணவில்லை போலும். இன்னும் ஒருசில அடையாளங்கள் சொல்லுகிறேன். வயது முதிர்ந்த ஆமையினதுஓட்டினையும்,பன்றியினது கூர்மையான கொம்பினையும் கோர்த்து மாலையாகஅணிந்திருக்கிறான். அது மாத்திரமன்று. என்றும் இளமையாக இருக்கின்ற நாகப்பாம்பைத் தன் கழுத்தில் சுற்றி மாலைபோல்அணிந்துள்ளான். தசை நீங்கப் பெற்ற,காய்ந்து போன பிரமனதுகபாலத்தில் (மண்டை ஓட்டில்) பிச்சை கேட்டுத்திரிகின்றான். அவன்தான்என்முன் தோன்றி எனது உள்ளத்தைக்கவர்ந்து கொண்ட கள்வன் ஆயினான். அவன் எனக்கு அருள்புரிந்தது போல,இறைவன் புகழையேகற்றும்,கேட்டும்,தெளிந்தசிந்தைஉடையராகியபெரியார்கள் அவன் திருவடிகளைத் தங்கள் கையால் தொழுது வணங்கும் பொழுது அவர்களுக்கும்இடபத்தின்மீதுஅம்மையோடு ஊர்ந்து வந்து அருள்புரிகின்றான். அவன் பிரமபுரமாகியநமது ஊரைஇருப்பிடமாகக் கொண்டு அருள் ஆட்சி செய்து வருகின்றான். இவனுடன் வந்த உமையம்மைதான்எனக்குப் பால் ஊட்டினாள்.
குறிப்புரை: இதனால் இறைவன் அணிந்தஅணிகளைக் கொண்டு அடையாளங்கள் அறிவிக்கப்பெறுகின்றன. முற்றல் ஆமை - ஆதி கமடமாதலின் வயது முதிர்ந்த ஆமை. ஆமை என்றது ஈண்டு அதன் ஓட்டினை,இளநாகம் என்றது இறைவன் திருமேனியைஇடமாகக் கொண்ட பாம்பிற்கு நரை திரை இல்லையாதலின் என்றும் இளமையழியாத நாகம் என்பதைக் குறிப்பித்தது. கமடம் - ஆமை.
Wearing as ornament, the shell of a 'long lived' tortoise, a young serpent and the horn of a wild boar, soliciting alms (from the public) with a dried up skull as collecting bowl, He (Lord Civan) draws my heart over to Him on the Sly! He, of bejewelled Feet was adored and worshipped with folded hands, by all noble folks steeped in learning and discourse! Verily is this He, the Lord that riding a Bull, abides in Piramapuram! It is He who commanded His Consort to give me milk.
Note: Civan - His begging-bowl: - Nila Lokita Rudra, an aspect of Civan, clipped one of the five heads of Brahma when he grew exceedingly haughty. His head (skull) eventually became Civan's begging bowl. Lord Civan is a mendicant. Is the all possessing Civa a beggar? Definitely No. He needs nothing. Yet He goes begging, why? Sri Parameswara Dikshitar of Chidambaram gives the correct answer. "The one thing that Civa 'knows not' and 'has not' is Ignorance, from which all souls suffer. Civa begs and bids us to put our ignorance into His begging bowl to get rid of our ignorance and to realise Him. We are so attached to our ignorance that we refuse to part with our ignorance. The Great Giver begs and we beggars refuse to give.
நீர்பரந்தநிமிர்புன்சடைமேலோர்நிலாவெண்மதிசூடி
ஏர்பரந்தவினவெள்வளைசோரவென்னுள்ளங்கவர்கள்வன்
ஊர்பரந்தவுலகின்முதலாகியவோரூரிதுவென்னப்
பேர்பரந்தபிரமாபுரமேவியபெம்மானிவனன்றே. 3
நீர் பரந்த நிமிர்புன்சடைமேல் ஓர் நிலாவெண்மதி சூடி
ஏர் பரந்த இனவெள்வளைசோர,என் உள்ளம் கவர் கள்வன்
ஊர்பரந்தஉலகின் முதல் ஆகிய ஓர் ஊர் இது” என்னப்
பேர் பரந்த பிரமாபுரம்மேவியபெம்மான் இவன் அன்றே.
பொருள்: அந்த சிவபிரானைப் பற்றி இன்னும் சொல்லுகிறேன்;கேள். அவனுடைய சிவந்த திருச்சடைமுடி மேல் கங்கை நீர் நிரம்பி நிமிர்ந்து உள்ளது. அதே திருச்சடைமுடியில் ஒரே ஒரு கலையை மட்டும் உடைய வெண்மையானபிறைச்சந்திரனையும் சூடி உள்ளான். அழகு மிகுந்த,கூட்டமான;வெண்மையான சங்கு வளையல்கள் என் முன்கையிலிருந்து நழுவி விடும்படியாய் என்னை மெலிவித்தான். அவன் என் முன் தோன்றி என் உள்ளத்தைக்கொள்ளை கொண்டு விட்டகள்வனாகிவிட்டான்.
மகா சங்கார காலத்தில் (ஊழிக்காலத்தில் - மகாப்பிரளய காலத்தில்) உலகம் அனைத்திலும் உள்ள எல்லா ஊர்களும் அழிந்து போக பிரமபுரம் மட்டும் அழியாதுஉலகிற்கே ஒரு வித்தாகபுகழோடு இருந்து வருகிறது. ஆதலால் இந்த ஊரை தனது ஊராகக் கொண்டு சிவபெருமான் அருள்புரிந்து வருகிறார். அவனோடு வந்த அம்மை தான் எனக்குப் பால் அடிசில் கொடுத்தாள்.
குறிப்புரை: நீர் - கங்கை,நிமிர்புன்சடை - நிறைந்த புல்லியசடை,ஓர் நிலா வெண்மதி,ஒரு கலைப்பிறை,ஏர் - அழகு,வெள்வளை - சங்குவளை,சோர - நழுவ,அவன் மதியைச்சூடியிருத்தலின்விரகமிக்குஉடலிளைத்துவளைசோர்ந்ததுஎன்பதாம். ஊர் பரந்த உலகு - ஊர்கள் மிகுந்த உலகு, மகாப்பிரளயகாலத்து உலகமே அழிக்கப்பெற்றபோது,இத்தலம் மட்டும் அழியாதுஇருத்தலின்உலகிற்கேஒரு வித்தாக இருக்கின்றது சீகாழி என்பது. பேர் - புகழ்.
சித்தாந்தசைவத்தில்நாயக நாயகி பாவம் இல்லை. ஆன்மாவுக்குச்சிவத்திடத்தில் உள்ள பக்தியைஎடுத்துக் கூறும்போது உலகியலில் உள்ள அகத்துறையில் வைத்துக் கூறுதல் ஓர் உத்தி (உத்தியாவதுசொல்லுகின்ற முறை).
He that wears a white crescent moon on His watery matted hair! He that draws my heart over to Him on the sly, causing my fair white bangles to come loose (indicating my pining for Him resulting in shrinkage of my physical frame)! Verily is this He, the Lord abiding in the famed city of Pirama-puram, the city spoken of as unique, the first among all cities in this world!
Note: Inherent in this verse the devotee pines for the Lord and in the process gets weak and emaciated, resulting in the bangles coming loose from his hands. It is bridal mysticism with which this verse is pervaded.
விண்மகிழ்ந்தமதிலெய்ததுமன்றிவிளங்குதலையோட்டில்
உண்மகிழ்ந்துபலிதேரியவந்தெனதுள்ளங்கவர்கள்வன்
மண்மகிழ்ந்தவரவம்மலர்க்கொன்றைமலிந்தவரைமார்பிற்
பெண்மகிழ்ந்தபிரமாபுரமேவியபெம்மானிவனன்றே.4
விண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி விளங்கு தலைஓட்டில்
உள் மகிழ்ந்து,பலி தேரிய வந்து எனது உள்ளம் கவர் கள்வன்
மண் மகிழ்ந்த அரவம் மலர்க்கொன்றை,மலிந்த வரை மார்பில்
பெண் மகிழ்ந்த பிரமாபுரம்மேவியபெம்மான் இவன் அன்றே.
பொருள்: அப்பா,எனக்குப்பாலைக் கொடுக்கச் சொன்ன சிவபெருமானுடையபெருமையை இன்னும் சொல்லுகிறேன்,கேட்பீராக. வித்யுன்மாலி,தாருகாட்சன்,கமலாட்சன் என்று மூன்று அசுரர்கள் இருந்தார்கள். அவர்கள் தங்கம்,வெள்ளி,இரும்பு இவைகளால் ஆன உலோகக்கோட்டைகளைக்கட்டிக்கொண்டு ஆகாயத்தில் மகிழ்ச்சியாகப் பறந்து கொண்டு தேவர்களுக்குத்'துன்பம் செய்து வந்தார்கள். தேவர்கள் தங்கள் துன்பத்தை நீக்கக்கோரிச்சிவபெருமானிடம்முறையிட்டார்கள். அவன் மேருமலையைவில்லாக்கி வாசுகி என்ற பாம்பைநாணாகக்கொண்டு எய்து இம்மூன்றுகோட்டைகளையும் அழித்தான். இன்னும் ஒரு செய்தி சொல்லுகிறேன் கேள். பிரம்மாவுக்குஆதியில் ஐந்து தலைகள் இருந்தன. அவன் தனக்கும்ஐந்து தலைகள்;சிவனுக்கும் ஐந்து தலைகள். அதனால்,சிவனும்தானும் ஒரே சம அந்தஸ்து உடையவர்கள்என்றுதருக்கொடுதிரிந்து வந்தான். அதனை அறிந்த சிவபெருமான் தனது நகத்தால் ஒரு தலையைக்கிள்ளி எடுத்து விட்டார். அதன் பிறகு அவன் நான்கு தலைகளைஉடைய நான்முகன் என்று விளங்கினான். கிள்ளிஎறிந்த அவன் தலை ஓட்டினைப்பிச்சாபாத்திரமாகக் கொண்டு சிவன் பிச்சை எடுப்பவன் போல பாவனை செய்து கொண்டு வந்துஎனது உள்ளத்தைக் கொள்ளை கொண்ட கள்வனாகி விட்டான்.
நாகப்பாம்பு மண் தரையில் பொந்து அடித்து மண்ணுக்குள் விருப்பமாக உறையும். அந்தப் பாம்பையும்,காற்றிலே அசைந்தாடி மணம் வீசுகின்ற நல்ல அழகான கொன்றை மலர் மாலையையும்,தனது மலை போன்ற மார்பில் அணிந்துள்ளான். வேண்டுதல் -வேண்டாமை இல்லாதவன் ஆனபடியால் மாறுபட்ட இந்த இரு பொருள்களை மாலைகளாகஅணிந்துள்ளான். அத்தோடு நில்லாமல்உமாதேவியையும் தன் உடம்பின்இடப்பாகத்தில் வைத்துக்கொண்டு இருவரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். இப்பேர்ப்பட்டவன் நமது பிரமபுரத்தைத் தனது ஊராகக் கொண்டு'அருள்புரிந்துவருகின்றான். இவன் ஆணையிடஉமையம்மைஎனக்குப் பால் கொடுத்தாள்.
குறிப்புரை: விண் மகிழ்ந்த மதில் - ஆகாயத்தில் பறத்தலை விரும்பிய மதில். இவை திரிபுராரிகளின்பொன்,வெள்ளி,இரும்பாலான கோட்டை. எய்தது - மேருவைவில்லாக்கி,வாசுகியைநாணாக்கித்துளைத்தது. உள்மகிழ்ந்து - மன மகிழ்ந்து,தேரிய - ஆராய,செய்யிய என்னும் வாய்ப்பாட்டுவினையெச்சம். மண் மகிழ்ந்த அரவம் - புற்றினைவிரும்பும் பாம்பு இறைவன் அணிந்த பாம்பு புற்றில்வாழாததாயினும் சாதி பற்றிக்கூறப்பட்டது. அரவம் கொன்றை மலிந்த மார்பு - அச்சுறுத்தும் விஷம் பொருந்திய பாம்பையும்,மணமும் மென்மையும் உடைய கொன்றையையும்அணிந்த மார்பு,என்றது வேண்டுதல் வேண்டாமையைக் காட்டும் குறிப்பாகும். பெண் - உமாதேவியார். பலிதேர வந்தார் எனதுள்ளம்கவர்ந்தார் என்றது என்னுடைய பரிபாகம்இருந்தபடியை அறிந்து ஒன்று செய்வார் போல வந்து உள்ளமாகிய ஆன்மாவை மலமகற்றித்தமதாக்கினார் என்பதை விளக்கியவாறு.
He that destroyed the three-walled citadels that winged joyously in the sky (of the recalcitrant Asuras of Tripura)! He that, moving about for alms, with the skull of Brahma as collecting bowl, draws my heart unto Him on the sly! He that delights in the garland of abundant Cassia fistula flowers as also the serpent which lives in the mud holes. He that holds His consort in His mountain like chest! Verily it is He, the Lord that abides in Pirama-puram.
Note: The three walled cities are symbolic of the three malas, namely Aanavam, Karma and Maaya. The serpent that adorns is symbolic of 'kundaliny' sakthi.
ஒருமைபெண்மையுடையன்சடையன்விடையூரும்மிவனென்ன
அருமையாகவுரைசெய்யவமர்ந்தெனதுள்ளங்கவர்கள்வன்
கருமைபெற்றகடல்கொள்ளமிதந்தோர்காலம்மிதுவென்னப்
பெருமைபெற்றபிரமாபுரமேவியபெம்மானிவனன்றே.5
ஒருமை பெண்மை உடையன்! சடையன்! விடை ஊரும் இவன்! என்ன
அருமை ஆக உரைசெய்ய அமர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன்
கருமை பெற்ற கடல் கொள்ள,மிதந்தது ஓர் காலம் இது என்னப்
பெருமை பெற்ற பிரமாபுரம்மேவியபெம்மான் இவன் அன்றே.
பொருள்: அப்பா,அவன் பெருமையை இன்னும் சொல்லுகிறேன். அவனுடைய அழகிய திருமேனியிலேஉமையம்மைக்குஇடப்பாகத்தைஅளித்தவன். இடப்பக்கத்தில் பெண் உருவின்திருமுடியில்பின்னியசடையையும்,வலப்பக்கத்தில் ஆண் உருவின்திருமுடியில்அவிழ்ந்தசடையையும் கொண்டவன். அவன் எப்போது எங்கு சென்றாலும் விடை (காளை)யின் மீது ஊர்ந்து வருபவன். இவ்வாறு எல்லாம் அவனது திருமேனி அழகை,தோழியர் எடுத்துக்கூற,அந்த அழகே உருக்கொண்டு என் முன்னே வந்து தோன்றி எனது உள்ளத்தைக் கொள்ளை கொண்ட கள்வன்தான் சிவபெருமான். சர்வ சங்கார காலத்தில்,மேகத்தின் கருமை நிறத்தைப் பெற்ற கடல்,பொங்கி வந்து உலகம் அனைத்தையும்அழித்தபோது நமது ஊராகியபிரமபுரம் மட்டும் தோணிபுரமாய்அழியாமல்மிதந்தது. இப்படிப்பட்ட பெருமையை உடைய பிரமபுரத்தில்வீற்றிருந்துஅருளாட்சி செய்து வருகின்றான் நம் சிவபெருமான்.
குறிப்புரை: ஒருமை - ஒரு திருமேனியிலேயே,பெண்மை உடையன் - பெண் உருவத்தைஉடையன்; என்றதால் பெண்ணுருவும்ஆணுருவுமாகியஇருமையும்உடையன் என்பது குறித்தவாறு. பெண்மை - பெண்ணுரு,உடையன்என்றதில் உள்ள விகுதியால்ஆணுருவாயினும் பெண்மை உடைமையும்,சிவம் உடையானும் ஆம் என்றவாறு. சடையன் - பெண்மையுருவில்பின்னியசடையும்ஆணுருவில்அவிழ்ந்தசடையுமாய்இருத்தலின்இரண்டிற்கும்ஏற்பச் சடையன் என்றார். உரைசெய்ய - தோழியர் தலைவனின்இயல்பைச் சொல்ல,உரையின் வாயிலாக. ஓர் காலம் - சர்வ சங்கார காலம். தோழியர் அன்றி,இறைவனே தன்னைப் பற்றித்திருஞானசம்பந்தருக்கு அவரது உள்ளத்தில்உணர்த்தினான் என்றும் கொள்வர்.
He is concorporate with His consort i.e., the Lord that combines in His body both male and female forms. His hair is matted and He rides a Bull! Even as I chant sweetly thus, comes He unto me, and stays with me, drawing my heart over to Him on the sly! Verily is this He, He that abides in Pirama-puram which became famous as a Township that once floated in the churning dark waters of the advancing seas during the great deluge of the past.
Note: The great deluge: The Maha Samhaaram - final absorption.
மறைகலந்தவொலிபாடலோடாடலராகிமழுவேந்தி
இறைகலந்தவினவெள்வளைசோரவென்உள்ளங்கவர்கள்வன்
கறைகலந்தகடியார்பொழினீடுயர்சோலைகதிர்சிந்தப்
பிறைகலந்தபிரமாபுரமேவியபெம்மானிவனன்றே.6
மறை கலந்த ஒலிபாடலோடுஆடலர் ஆகி மழு ஏந்தி
இறை கலந்த இனவெள்வளைசோர என் உள்ளம் கவர் கள்வன்
கறை கலந்த கடி ஆர்பொழில்,நீடுஉயர்சோலை,கதிர் சிந்தப்
பிறை கலந்த பிரமாபுரம்மேவியபெம்மான் இவன் அன்றே.
பொருள்: அப்பா,அவன் எப்படிப்பட்ட கள்வன் தெரியுமா?அவன் தன் கையில் மழுஆயுதத்தைப்பிடித்துக்கொண்டும் ஒலி வடிவில் உள்ள வேதத்தைப்பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் என் முன்னே வந்து தோன்றி என்னைப்பரவசப்படுத்தினான். எனது உள்ளம் புகுந்து என்னைக் கொள்ளை கொண்டு விட்ட கள்வன் ஆகிவிட்டான். என் முன் கையில் (மணிக்கட்டில்) உள்ள ஓரின வெண்மை நிறமுடைய சங்கு வளையல்கள் சோர்ந்துநழுவி விழும் நிலையை அடைந்தன. நம்முடைய ஊராகியபிரமபுரத்துநந்தவனத்தில் மணம் நிறைந்த பூக்களைக்கொண்ட செடிகொடிகள் அடர்ந்து ஓரேஇருளாக இருக்கிறது. சோலைகளில் நீண்டு உயர்ந்த மரங்கள் வளர்ந்துள்ளன. இந்த இரு இடங்களிலும் சந்திரனதுநிலவொளிஅங்குமிங்குமாக சிதறிக்கிடக்கின்றது. இத்துணை சிறப்பு உள்ள நமது பிரமபுரத்தில்இருந்து அருளாட்சிசெய்கின்ற இறைவன்தான் எனக்குப் பால் கொடுக்க,இறைவியிடம்கூறினான்.
குறிப்புரை: பாடுவது வேதம்,செய்வது கள்ளம் என்ற நிலையில் பெருமான் இருக்கின்றார் என்பதைக் காட்டுவன முன் இரண்டு அடி. ஒலி கலந்த மறை பாடலோடுஎனக் கூட்டி ஒலிவடிவாயவேதத்தைப்பாடுதலை உடையவர் எனப் பொருள் காண்க. மழு - தவறிழைத்தாரைத்தண்டித்ததற்காகஏந்தியசங்காரகாரணமாகியதீப்பிழம்பு,ஆயுதமுமாம். இறை - மணிக்கட்டு. வெள்வளை - சங்கு வளையல்கள். முன்கையில்செறிந்துகலந்திருந்த சங்கு வளையல்கள்சோர்ந்தன என்பதால்,உடம்பு நனி சுருங்கல்' என்னும் மெய்ப்பாடு உணர்த்தியவாறு. கறை - இருள்,கடி - மணம்,பொழில் - நந்தவனத்தும்,சோலை -தானே வளர்ந்த சோலைகளிடத்தும்,கதிர் சிந்த என்றதால்,நிலவொளிஅங்குமிங்குமாகச்சிதறியிருந்தமைஅறியப்படும். கதிர் சிந்து அப்பிறைஎனப்பிரிக்க. பாடுவது வேதம்;செய்வது கள்ளத்தனம் என்று பாடுவதைநிந்தாஸ்துதி என்று கூறுவர்.
He chants aloud the Vedic Mantras and dances around holding aloft the weapon called "Mazhu"! This is He, the Lord who draws my heart over to Him on the sly, causing my choice white bangles to slide down from my wrist (from my hands that shrink due to the pangs of separation). Verily is this He, the Lord abiding in Piramapuram of fragrant tall groves whereon the crescent moon sheds its cool rays.
Note: The Sanmargham concept of the soul becoming the consort of the Lord is reflected here. Mazhu means (1) a battle axe and (2) a burning rod.
சடைமுயங்குபுனலன்னனலன்னெரிவீசிச்சதிர்வெய்த
உடைமுயங்குமரவோடுழிதந்தெனதுள்ளங்கவர்கள்வன்
கடன்முயங்குகழிசூழ்குளிர்கானலம்பொன்னஞ்சிறகன்னம்
பெடைமுயங்குபிரமாபுரமேவியபெம்மானிவனன்றே.7
சடை முயங்கு புனலன்(ன்),அனலன் எரி வீசிச்சதிர்வுஎய்த
உடை முயங்கும்அரவோடுஉழி தந்து எனது உள்ளம் கவர் கள்வன் -
கடல் முயங்கு கழி சூழ் குளிர் கானல் அம் பொன் அம் சிறகு அன்னம்
பெடை முயங்கு பிரமாபுரம்மேவியபெம்மான் இவன் அன்றே.
பொருள்: அப்பாசிவனைப்பற்றி இன்னும் சொல்லுகிறேன். சிவனதுதிருச்சடையில்கங்காதேவி வீற்றிருக்கின்றாள். அவனுடைய நான்கு திருக்கரங்களில் இடது திருக்கரம்ஒன்றில் அனலை (நெருப்பை) வைத்துக் கொண்டுள்ளான். அவன் இடுப்பில் உடுத்தியுள்ளஆடையைச்சுற்றிப்,பாம்பைக் கொண்டு இறுகக் கட்டி உள்ளான். ஊடத்தக்க ஒரு பெண்ணையும்,அஞ்சத்தக்கநெருப்பையும்,பாம்பையும் உடம்பிலே கொண்டு எரிவீசிநடனமாடித்திரிபவனாயிருக்கின்றான். இவ்வாறு விநோதமான காட்டு உடையவனாய்இருந்தும்,அவனுடைய பேரழகும்,கருணையும்,எல்லா உயிர்களையும் பகை நீக்கி ஆளும் வன்மையும் என் உள்ளத்தைக்கவர்ந்தது. அவ்வாறு கவர்ந்தகன்வன்போகியாய் இருந்து எல்லா உயிர்களுக்கும்போகத்தைப் புரிய வைத்தான்.
அவன் நமது ஊராகியபிரமபுரத்தை ஏன் விரும்பித் தங்கி அருள் ஆட்சி செய்து வருகிறான் தெரியுமா?நம் ஊரைச்சுற்றிஉப்பங்கழிகள்கடலைத்தழுவுவது போல் அருமையாக காட்சி தருகின்றன. அதை அடுத்து குளிர்ந்த வானளாவிய மரங்களை உடைய சோலைகள். அந்தச்சோலையில் அன்னப் பறவைகள் தங்கள் அழகிய சிறகுகளை விரித்து ஆடிக்கொண்டு தம்முடைய பெடைகளேோடுமுயங்கித்திரிகின்றன. இப்படிப்பட்ட அழகிய நம் ஊரை அவன் விரும்பி இருப்பது வியப்பல்லவே!
குறிப்புரை: சடைமுயங்குபுனலன்- சடையில்கலந்திருக்கின்றகங்கையை உடையவன். அனலன் - திருக்கரத்தில்அனலை உடையவன். உடை முயங்கும்அரவு - ஆடையின் மேல் இறுகக்கட்டியகச்சையாகிய பாம்பு. சதிர்வு - பெருமை. உழிதந்து - திரிந்து,ஊடத்தக்க -ஓர் பெண்ணையும், அஞ்சத்தக்க எரி அரவுமுதலியவற்றையும் அணிந்து திரிபவராயிருந்தும் எனது உள்ளத்தைக்கவர்ந்தார்என்றது,அவர்க்குள்ளபேரழகின்திறத்தையும்,கருணையையும்,எல்லாவுயிரையும் பகை நீக்கியாளும்வன்மையையும்வியந்தவாறு. கழி - உப்பங்கழி,கானல் - கடற்கரைச் சோலை. பிரமபுரத்தில் சடை முயங்கு புனலனாய் உள்ளம் கவர்கின்றதன்மையால்போகியாயிருந்துஉயிர்க்குப்போகத்தைப் புரிய, சிறகன்னங்களும் தத்தம் பெடைகளைமுயங்குகின்றன எனல், 'அவனன்றி ஓர் அணுவும் அசையாது”என்பதை அறிவித்தவாறு.
His matted hair conceals the river (Ganges). He holds the fire in one Hand. With this He moves about magnificently! He wears a serpent that spits fire around His Effulgent Frame! Wandering in this form, He comes over to me and draws my heart unto Him! He the Lord abiding in Pirama-puram where fair and gold winged swans rejoice with their pens in the backwaters of the cool seas!
வியரிலங்குவரையுந்தியதோள்களைவீரம்விளைவித்த
உயரிலங்கையரையன்வலிசெற்றெனதுள்ளங்கவர்கள்வன்
துயரிலங்கும்முல'கிற்பலவூழிகடோன்றும்பொழுதெல்லாம்
பெயரிலங்குபிரமாபுரமேவியபெம்மானிவனன்றே.8
வியர் இலங்கு வரை உந்தியதோள்களை வீரம் விளைவித்த
உயர் இலங்கை அரையன் வலி செற்று,எனது உள்ளம் கவர் கள்வன்-
துயர் இலங்கும்(ம்) உலகில் பலஊழிகள் தோன்றும் பொழுது எல்லாம்
பெயர் இலங்கு பிரமாபுரம்மேவியபெம்மான் இவன் அன்றே.
பொருள்: அப்பா இன்னும் சொல்லுகிறேன்;கேள். இலங்கை மன்னனாகியதசக்கரீவன் ஒரு நாள் விண் வழியாகத் தனது புஷ்பவிமானத்தில் சென்று கொண்டிருந்தான். அவனுடைய நேர்பாதையில்திருக்கயிலாய மலைஅமைந்திருந்தது. அந்த மலையைவிடுத்துவேறுபாதையில் அவன் சென்றிருக்கலாம். அவனது தோள் வலிமையாலும்,அவன் சிவனிடமிருந்து பெற்ற பல வரங்களின்மகிமையாலும்,அவனுக்கு ஆணவம் மேலோங்கி நின்றது. தன் தோள் வலியால் சிவபெருமான் வீற்றிருக்கும்திருக்கயிலைமலையைநகர்த்திவைக்கமுற்பட்டான். சிவபெருமான் இதனை உணர்ந்து தனது கால் கட்டை விரலால் கயிலை மலையைஇலேசாகஅழுத்தினார். தசக்கிரீவன் நசுங்கித் திணறி விட்டான். தன் தவறை உணர்ந்தான். சிவனிடம்மன்றாடி மன்னிப்புக் கேட்டு,இனி தவறு செய்யமாட்டேன் என்று உறுதி அளித்து சாமகானம்பாடிச்சிவபெருமானைமகிழ்வித்தான். பரம கருணாமூர்த்தியாகியசிவபெருமான் அவனை மன்னித்து அவனுக்கு இராவணன் என்ற பெயரையும்,நாளும், வாளும் (நீண்ட ஆயுளையும்,ஓர் உடைவாளினையும்) கொடுத்து அருள்புரிந்தார். அப்பேர்ப்பட்ட கருணா மூர்த்தி என் உள்ளத்தைக்கவர்ந்தகள்வனாகச்செயல்பட்டான். சிவன் நம்முடைய பிரமபுரத்தில் தங்கி அருளாட்சி செய்து வருவதற்கு மற்றொரு காரணம் சொல்லுகிறேன்கேள்.ஒவ்வொருஊழிக்காலத்தின் முடிவில் (மகாசங்காரகாலத்தில்) உலகிலுள்ள எல்லா ஊர்களும் அழிந்து போக நம்முடைய பிரமபுரம் ஊர் மாத்திரம் அழிந்து போகாது. தன் பெயர் ஊழி ஊழி தோறும் விளங்கும்படியாக நிலையாக உள்ளது. இதனால் தான் சிவன் இங்கு வீற்றிருந்துஅருளாட்சி செய்து வருகிறான்.
குறிப்புரை: இராவணன் - அழுதவன்;வியர் இலங்கு தோள் - வியர்வை விளங்குகின்ற தோள்,வியர் அகலம் எனவும் பொருள் கொள்ளலாம். இலங்கை அரையன் - இராவணன். அரையன்தோள்களைவலிசெற்று என மாறிக்கூட்டுக. துயர் இலங்கும் உலகு - துன்பம் விளங்குகின்றகன்மபூமி. இதனைத்துன்ப உலகு என்றது வினைவயத்தான்மாறித்துய்க்கப்படும் இன்ப துன்பங்களுள்இன்பக்களிப்பைக்காட்டிலும் துன்பக் கலக்கம் மிகுந்து தோன்றலின்,பல ஊழி - பிரம ஊழி முதலிய பல ஊழிகள். இறைவன் பல ஊழிகளைவிளைவிப்பதுஆன்மாக்களின் மலம் பரிபாகமாதற் பொருட்டு,பெயர் - புகழ்.
He that crushed the 'mountain like' shoulders of Dasak-kreevan, the valiant King of Sri Lanka! Verily is this He, the Lord who draws my heart over to Him! He, that abides in the famed Township of Pirama-puram, which shines forth ever in glory even during the many spells of catastrophic deluge, in this strife ridden world.
Synopsis
Dasa Muhan (Raavanan) was the valiant king of Sri Lanka. He had ten heads. Naturally his shoulders looked like a mountain. Since he was an ardent devotee of Lord Civan, he got several boons from Him. He was once travelling in the sky in his own aircraft and came across Mount Kailas which is Lord Civan's abode. Due to his arrogance, he became haughty and thought of removing aside the Kailas mount which was in his straight pathway. He got down and tried to lift the mountain with his shoulders. Lord Civan knowing this, slightly pressed the mountain with His toe. Raavanan got crushed and could not come out of the mountain. He realised his folly, prayed to Lord Civa, regretted and begged for pardon. Lord Civan excused him and him long life and a sword for defence. In addition He also gave him the name gave Raavanan. This incident is mentioned in the verse as well as in almost all the 8th verse of each hymn.
What one learns from this verse is that if any one who does an evil act, realises his folly and expresses regrets to the Supreme and begs for pardon confirming that he will never repeat any such folly in his life-time, then he will be forgiven by the Lord. Note: Raavanan = one who wept for his folly.
தாணுதல்செய்திறைகாணியமாலொடுதண்டாமரையானும்
நீணுதல்செய்தொழியந்நிமிர்ந்தானெனதுள்ளங்கவர்கள்வன்
வாணுதல்செய்மகளீர்முதலாகியவையத்தவரேத்தப்
பேணுதல்செய்பிரமாபுரமேவியபெம்மானிவனன்றே.9
தாள் நுதல் செய்து இறை காணிய,மாலொடுதண்தாமரையானும்
நீள் நுதல் செய்து ஒழிய(ந்) நிமிர்ந்தான்,எனது உள்ளம் கவர் கள்வன்
வாள் நுதல் செய் மகளீர் முதல் ஆகிய வையத்தவர்ஏத்தப்
பேணுதல் செய் பிரமாபுரம்மேவியபெம்மான் இவன் அன்றே.
பொருள்: சிவனைப்பற்றி இன்னும் சொல்லுகிறேன். முன்னொரு காலத்தில் திருமாலும், தாமரை மலரில்எழுந்தருளியிருக்கும்நான்முகனும் (பிரம்மாவும்) நானே முதற்பொருள், நானே முதற்பொருள் என்று தம்முள் வாதம் செய்து கொண்டும் போர் செய்து கொண்டும்இருந்தனர். அப்பொழுது அவர்களிடையே சிவபெருமான் ஒரு சோதிமலையாய் நின்றான். நின்ற பொழுது வானில் ஓர் அசரீரி வாக்குத் தோன்றியது. அது “நீங்கள் இதன் அடியையும்முடியையும் காண முயலுங்கள். உங்களில் யார் உயர்ந்தவன் - யார் முதற்பொருள் என்பதனை பரமன் உங்களுக்கு உணர்த்துவான்” என்று கூறியது. திருமால் பன்றி உருவம் தாங்கி பூமியைத்தோண்டித்திருவடியைத்தேடும்முயற்சியில்இறங்கிப்பலகாலம்கழித்தும் அவனால் திருவடியைக் காண முடியாது திரும்பிவிட்டான். நான்முகன் அன்னப் பறவை உருவம் தாங்க,விண்ணிலேபலகாலம் பறந்து சென்றும் இறைவன் திருமுடியைக்காண முடியவில்லை. அதுசமயம்வானில் ஒரு தாழம்பூ இறங்கிக்கொண்டிருந்தது. நான்முகன் அந்தத் தாழம்பூவைப் பார்த்து “நீ எங்கிருந்து வருகிறாய்?”என்று கேட்க, தாழம்பூ “நான் சிவன் திருமுடியில் இருந்து வருகின்றேன்” என்று பதில் கூறியது. “எவ்வளவு நாட்களாக நீ இறங்கி வந்து கொண்டிருக்கிறாய்” என்று நான்முகன் மீண்டும் கேட்டான். அதற்குத் தாழம்பூ “நான் சிவன் திருமுடியைவிட்டு நீங்கிப் பல ஊழிக்காலம் சென்று விட்டது” என்று பதில்கூறியது. அதைக் கேட்ட நான்முகன் பதறிப்போய் இன்னும் பலகாலம் நம்மால் பறந்து செல்ல முடியாது .என்பதை உணர்ந்து தாழம்பூவைத் தனக்காக ஒரு பொய் சொல்ல வேண்டினான். நீ சிவபெருமான் திருமுடியில் இருக்கும் பொழுது நானும் அங்கு வந்து தரிசனம் செய்தேன் என்று திருமால் முன்பு கூறவேண்டும் என்று கேட்டுச் சம்மதம் பெற்றுக் கொண்டான். திருமாலும்,நான்முகனும் இளைத்து இறைவன் முன் நின்றனர். தாழம்பூவும் நின்றது. அது சமயம்,தாழம்பூ “நான் சிவனதுதிருமுடியில்இருந்த சமயம் நான்முகன் அங்கு வந்து சேர்ந்தான். அப்பொழுது நான் அவனைக்கண்டேன்” என்று கூறிற்று. அதனைக் கேட்ட சிவபெருமான் மிகவும் சினந்து, “ஏன் இந்த பொய் சொல்லுகிறாய்?நான்முகனே நீ இவ்வாறு தாழம்பூவைப் பொய் சொல்லத்தூண்டியதற்காக உனக்கு இந்தப்பூவுலகில் ஒரு கோயிலும் இல்லாது போகும்;தாழம்பூவே! நீ பொய் சாட்சி சொன்னதற்காகஎந்தவொருசிவபூசைக்கும் நீ உதவாதுபோவாயாக” என்று சாபமிட்டார். பின்னர்,திருமால்,நான்முகன் இவர்கள் இருவருடையஆணவத்தை அகற்றி அவர்கள் இருவரும் தன் ஆணைக்குஉட்பட்டவர்கள் என்பதை உணரச் செய்து மறைந்துஅருளினார். அத்தகையமுழுமுதல்பொருளாகிய சிவபெருமான் எனது உள்ளத்தைக்கவர்ந்தகன்வனாகி விட்டான். வாள் போன்ற நெற்றியை உடைய மகளிர் முதலாக உலகத்தில் உள்ள அனைவரும் ஏத்திப்போற்றுதலினாலேஅவர்களைக்காப்பாற்றுகின்றபிரமபுரத்தில் சிவன் வீற்றிருந்துஅருளாட்சி செய்து வருவதின்சிறப்பை நீ அறிந்து கொள்வாயாக.
குறிப்புரை: மாலொடுதண்தாமரையானும் தாள் நுதல் செய்து இறைகாணியநீணுதல் செய்து நிமிர்ந்தான் எனக்கூட்டுக. மால் தாள்காணிய நிமிர்ந்தான் எனவும்,தாமரையான்நுதல்காணியநிமிர்ந்தான் எனவும் தனித்தனிக் கூட்டிப் பொருள் காண்க. தாள் நுதல் செய்து - தாளையும்நுதலையும்தமது குறிக்கோளாகக் கருதி,இறை காணிய - தம்முள் யார் இறை என்பதைக் காணும் பொருட்டு; இறைவனைக் காணும் பொருட்டு என்பாரும்உளர். நீணுதல் - மால்பெரியபன்றியாய்நீளுதலும்,பிரமன் அன்னமாய் வானத்தில் நீளுதலுமாகியஇரண்டின்செயல்கள். ஒழிய - செயலற்றுப் போக. நிமிர்ந்தான் - அண்ணாமலையாய் உயர்ந்தவன். சென்று பற்றுவேன் என்று செருக்கியதேவர்க்குஅப்பாற்பட்டவன். செயலழிந்திருந்ததலைவியின்சிந்தையை வலிய வந்து கவர்கின்றான் என்பது இறைவனது எளிமை தோன்ற நின்றது. ஏனைய மகளிர்க்குஇல்லாததாகிய,இறைவனேவலியவந்துஉள்ளங்கவரும் பேறு தனக்குக்கிட்டியமையைத்தெரிவிக்கலாயிற்று.
Tirumaal and Brahma (seated on a Cool Lotus), tried hard to view the Holy Feet and the Head of Lord Civa who then rose as an infinite pillar of flame. They failed in their efforts. This is verily He, the Lord who draws my heart over to Him. The Lord abiding in the Township of Pirama-puram which is adored in veneration by all folks - the bright foreheaded lasses and all others in this world.
Note: The Episode involving Brahma and Tirumaal who laboured in vain in search of the Holy Head and Feet of Lord Civan, is widely chronicled in all Saivite Literature (ex.) Sivananda Lahari, Verse 99
“இதம் தேயுக்தம்வா --- ஹரி பிரமாணௌதௌதிவிபுவிசரந்தௌச்ரமயுதௌ --- கதம்சம்போஸ்வாமின்கதயமமவேத்யோஸிபுரதஹ"
புத்தரோடுபொறியில்சமணும்புறங்கூறநெறிநில்லா
ஒத்தசொல்லவுலகம்பலிதேர்ந்தெனதுள்ளங்கவர்கள்வன்
மத்தயானைமறுகவ்வுரிபோர்த்ததோர்மாயம்மிதுவென்னப்
பித்தர்போலும்பிரமாபுரமேவியபெம்மானிவனன்றே.10
புத்தரோடு பொறி இல்சமணும் புறம் கூற,நெறி நில்லா
ஒத்த சொல்ல,உலகம் பலி தேர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன்
மத்த யானை மறுக(வ்),உரி போர்த்தது ஓர் மாயம் இது! என்ன,
பித்தர் போலும் பிரமாபுரம்மேவியபெம்மான் இவன் அன்றே.
பொருள்: அறிவு விளங்கப் பெறாத புத்தர்களும்,புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழும் சமணர்களும்,சான்றோர்கள்வகுத்தநன்னெறியில்அமையாது,தமக்கு ஏற்புடையனவாகத்தோன்றியகருத்துக்களைப்பொதுமக்கள்மீது எல்லா வகையானும்தணித்துக் கொண்டு வருவதைவழக்கமாகக் கொண்டு வாழ்ந்து வந்தனர். ஆனால் அச்சமயத் தலைவர்கள் எனது உள்ளத்தைக்கவர்ந்தார்கள் இல்லை.
திருக்கண்டியூர்,திருக்கோவிலூர்,திருவதிகை,திருப்பறியலூர்,திருவிற்குடி, திருவழுவூர் (வைப்புத்தலம்),திருக்குறுக்கை,திருக்கடவூர் முதலிய எட்டு ஊர்களில் (அட்டவீரட்டத்தலங்கள்) சிவபெருமான் தனது மறக்கருணையால்ஆன்மாக்களைஉய்விக்கும்நோக்கத்தில் வீரச்செயல்கள்பலபுரிந்துஅருள்செய்தார். அதில் திருவழுவூரில் மதம் பிடித்த ஓர் யானையைத் தன் வசப்படுத்த,அதன் தோலைஉரித்து,தன் உடம்பில் போர்த்திக் கொண்டு,ஒரு பித்தனைப் போல மாயச்செயல்கள்பலவும் செய்து கொண்டு வந்தவன் என் உள்ளத்தைக்கவர்ந்தகள்வனாகி விட்டான்.அவன்தான்பிரமபுரத்தில்வீற்றிருந்துஅருளாட்சி செய்து வருகின்றான்.
சிறுவிளக்கம்:
திருஞானசம்பந்தப் பெருமான்,தான் பாடியபதிகங்களில் பெரும்பாலான-வற்றின்பத்தாவது பாட்டில் சமணமதத்தினரும்,புத்தமதத்தினரும்,சான்றோர்கள்வகுத்தநன்னெறியில்நில்லாமல் தவறான வாழ்க்கை முறையைக் கையாண்டு வந்ததைக்கண்டித்துப்பாடுவாராயினார். அதன் விபரம் வருமாறு.கி. பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் ஏழாம் நூற்றாண்டு வரை இந்திய நாட்டின் வட பகுதியில் சமணமும்,பெளத்தமும் ஓங்கி இருந்து வந்தன. தமிழ் நாட்டிலும் அதன் தாக்கம் ஏற்பட்டு,தமிழ்நாட்டு மன்னர்களில்சிலரும் அதைப்பின்பற்றிச்சமண மதம் தழுவி வரலாயினர். அந்தக் காலத்தில் சைவம் மிகவும் தளர்ச்சியுற்று இருந்தது. அந்தக் காலத்தைக்களப்பிரர் காலம் என்றும்,இருண்ட காலம் என்றும் நூலாசிரியர்கள்கூறுவர். ஆனாலும் இந்தக் காலத்திலும் பொது மக்களில் பெரும்பாலோர்சமணத்தையும்,பெளத்தமதத்தையும் ஆதரித்தார்கள் என்று சொல்வதற்கு இல்லை. இந்தத்தளர்ச்சியை நீக்கி, சைவத்தை மீண்டும் அதன் உன்னத நிலையை அடையச் செய்ய வேண்டுமென்று சிவபெருமான் திருவுள்ளம் கொண்டார் போலும். தனக்கு அணுக்கத்தொண்டர்களாயிருந்த மாணிக்கவாசகர்,திருநாவுக்கரசர்,திருஞானசம்பந்தர்,சுந்தரமூர்த்திசுவாமிகள் இவர்களை நிலவுலகில் வெவ்வேறு கால கட்டத்தில் தோன்றச் செய்து சைவத்தைமிக ஓங்கிய நிலையில் வளர்ந்து விளங்கும்படி அருள் செய்தார். அந்தக் காலமாகிய7 முதல் 13ஆம் நூற்றாண்டு முடிய சைவத்தின் பொற்காலம் என்று சொல்லலாம். அந்தக் காலங்களில் சமணத்துறவிகளும்,புத்தத்துறவிகளும்சொல்லொன்று செயல் வேறு என்ற முறையில் நடந்து வந்தார்கள். கொல்லாமையைச்சிறப்பாகக் கொண்டு, வீதியில் நடக்கும் பொழுது எறும்புகள்நசுங்கிவிடக் கூடாது என்று மயில் பீலியினால்அச்சிற்றுயிர்களைவிலக்கிச்செல்வார்கள். ஆனால் திருஞானசம்பந்தரும்,அவரது அடியார்களும் தங்கிய மடத்தில் தீ வைத்து அவர்கள் அனைவரையும்கொல்லுவதற்குவிரும்பினார்கள். பொது மக்களைமதமாற்றம் செய்வான் வேண்டித் தங்களுடைய கருத்துக்களைமக்களிடம்திணிக்கப்பலவாறானமறச்செயல்களைச் செய்து வந்தனர்.இதனையெல்லாம்பொறுக்காததிருஞானசம்பந்தப் பெருமான்,தான் பாடியருளியபதிகங்கள்பெரும்பாலானவற்றின்பத்தாவதுபாடலில்புத்தமதத்தினரும்,சமணமதத்தினரும் செய்து வந்த இழிதொழில்களைக்கண்டித்துப்பாடுவாராயினார்.
குறிப்புரை: பொறி இல்சமண் - அறிவற்றசமணர்கள். புறங்கூற - நேர்நின்று சொல்ல மாட்டாமையாலேமறைவான இடத்தில் எளிமையாய்ச் சொல்ல. நெறி நில்லா - வரம்பில்நில்லாதனவாக,ஒத்த சொல்ல - ஒரே கருத்தை உரைக்க,புறச்சமயத்தார்ஒருமித்துப்புறங்கூறவும்பிச்சையேற்றுஉள்ளங்கவர்கின்றகள்வனாதலின்யானைத்தோலைப் போர்த்து மாயம் செய்தார் என்று இயைபில்லாத பொருள் தோன்ற வைத்தார்.
The Jains and the Buddhists, both lacking in wisdom, go about spreading canards and indulging in cavil and stay away from righteousness. The Lord soliciting alms from the public, draws my heart over to Him. He, that in the days of yore, skinned a wild elephant and wore its hide on Himself, much to the astonishment of worldly folks who wondered what wayward mystic is He! This is He, the Lord that abides in Pirama-puram and graces those who adore Him in all sincerity and dedication.
Note: In this verse and in every tenth verse of each hymn, our saint decries the faiths and principles of Jainism and Buddhism.
அருநெறியமறைவல்லமுனியகன்பொய்கையலர்மேய
பெருநெறியபிரமாபுரமேவியபெம்மானிவன்றன்னை
ஒருநெறியமனம்வைத்துணா்ஞானசம்பந்தன்னுரைசெய்த
திருநெறியதமிழ்வல்லவர்தொல்வினைதீர்தலெளிதாமே.11
அருநெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர்மேய,
பெருநெறிய,பிரமாபுரம்மேவியபெம்மான் இவன் தன்னை,
ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன்(ன்) உரை செய்த
திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே.
பொருள்: நல்ல அருமையான சிறந்த நெறிகளை நான்கு வேதங்களும் உணர்த்துகின்றன. இந்த வேதங்களில் தலையாய வல்லமை வாய்ந்தவன் நான்முகன் என்று கூறப்படும், படைப்புத்தொழிலைச் செய்யும் பிரமதேவன் ஆவான். அவன் பிரமபுரத்தைப் அடைந்து இங்குள்ள முதல்வனைப்போற்றிப்பூசித்துப் பேறு பெற்றான். பிரமபுரத்தைச் சுற்றிலும் அகன்ற பெரிய குளங்களில் தாமரை மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. இந்த அழகிய பிரமபுரத்தில் மேவி இருந்து அருள் வழங்கி,முத்தியைக்கொடுக்கும் முதல்வனாகியசிவபெருமானை,திருஞானசம்பந்தர் தனது மெய்,வாய்,கண்; மூக்கு,செவி என்கின்றஐம்புலன்களையும் அடக்கி மனதை ஒருமைப்படுத்தி,அதனை அவன் திருவடியிலேபதித்து,அவனுடைய பெருமைகளை நன்கு உணர்ந்து அவனைப்போற்றி,திருநெறியாகவும்நன்னெறியாகவும் விளங்கும் இத்தமிழ்ப்பதிகத்தைப் பாடி அருளினார்கள். உள்ளத்தைச் சிதற விடாமல் இத்திருப்பதிகத்தைஒன்றிய மனத்தோடு, பாட்டின் பொருளை நன்றாக உணர்ந்து பிரமபுரத்துஇறைவனை நோக்கி ஓதவல்லவர்களுடைய பழைய வினைகள் தீர்தல் எளிதாக அமையும்.
குறிப்புரை: ஊழ்வினை தீர்வதற்குரியவழிகள் பல இருப்பினும்,இத்திருப்பதிகத்தை நாள்தோறும் ஒதிவருவது,பழைய வினைகளைநீக்குவதற்கு ஒரு எளிமை வாய்ந்த வழியாகும். திருக்கடைக்காப்பு என்று சொல்லப்படும்,இப்பதினொன்றாம் பாட்டில்,இப்பதிகத்தைப் பாடி அருளியவர் இவர் என்றும்,பதிகத்தைஓதி வருவதால்ஓதுபவர்களுக்கு ஏற்படும் நற்பயன் இது என்றும் கூறப்பட்டிருப்பதை உணர்ந்து கொள்க. திருஞானசம்பந்தப் பெருமான் பாடி அருளிய அனேகமாக எல்லாப்பதிகங்களிலும் இவ்வாறு திருக்கடைக்காப்புப்பாடியுள்ளார்என்பதையும் தெரிந்து கொள்க. அருநெறியமறைவல்லமுனி - அருமையான நெறிகளைவகுக்கும்மறைகளில் வல்ல முனியாகிய பிரமன். அலர்மேய அகன்ற பொய்கை பிரமாபுரம்மேவியபெருநெறியபெம்மான்இவன்றன்னை - தாமரைகள் பொருந்திய அகன்ற பொய்கையைஉடைய பிரமாபுரத்தில்விரும்பியிருந்தமுத்திநெறி சேர்க்கும் முதல்வனை. ஒரு நெறியமனம் - ஒன்றுபட்ட மனம். மனம் ஐம்பொறி வழியாகவும்,அறிந்தவற்றைவழியடைத்தகாலத்தும் சென்று பற்றித்தன்மயமாயிருப்பதொன்றாகலின் அங்ஙனம் செல்லாதுஒருங்கிய மனத்தை ஈண்டுவிதந்தார்கள். வைத்து -பிரியாதேபதித்து. திருநெறிய தமிழ் - சிவநெறியாகியஅருநெறியை உடைய தமிழ். தொல்வினை - பழமையாகிய வினை. இவ்வாறு முதல் மூன்று திருமுறைகளிலும்இறுதிப்பாடலாகியதிருக்கடைக்காப்பில்திருஞானசம்பந்தப் பெருமான் பல பாடல்களால்சஞ்சித,ஆகாமிய,பிராரத்தவினைகள்நீங்கும்எனக் குறிப்பிட்டு உள்ளார்கள். சஞ்சிதம்நீங்கும். ஆகாமியம்ஏறாது. பிராரத்தம்மெலிதாகத் தாக்கி முழுமையாக அனுபவித்தப்பின்னரேகழியும் என்பது கருத்து.
Saint Thiru-gnana-Sambandar chanted with single minded devotion and deep seated feelings, the Holy Tamil Hymns on Lord Civa abiding in the exalted 'Piramapuram'. Piramapuram, the famed township having large tanks full of lotus flowers. Brahma who is normally seated in Lotus flower is well versed in scriptures. He came to Piramapuram to pay obeisance to our Lord. Those who chant these Holy Tamil Hymns with dedication, will easily be freed from the impact of their karma called Sanchitham accumulated in their previous births.
Note: In stanzas (1) to (10) of this Hymn, the Saint points to the Lord in His physical appearance before him. This was in response to the query of his father (Siva PadhaHrudayar), as to who it was that fed him milk, when he was away bathing in the holy waters of the temple tank. The eleventh stanza speaks about the grace that will be bestowed upon all those who chant these verses of St. Thiru-gnana-Sambandar with dedication. The Saint proclaims that it will be easy for such people to get rid of all their Karma accumulated in all their previous births, known as Sanchitham (A). Our Saint mentions it as 'Thol Vinai'.
This format of the last 11th verse finds a place in almost all the hymns of our Saint in all the three Thirumurais (1st, 2nd and 3rd). It is called as Thiru-k-kadai-k- kaappu (திருக்கடைக்காப்பு).
The most beneficial point here is, the reader comes to know for certain, the author of this hymn is St. Thiru-gnana-Sambandar.
Our young Saint proclaims in most of the eleventh verses in these 1st, 2nd and 3rd Thirumurais that the effect of the two karmaas (Sanchitham and Aahaamiyam) will be fully wiped out from those who chant those hymns with devotion. However, the effect of piraaratha karma will have to be endured in that birth itself.
Such souls will be relieved from the cycle of birth and death. Then the soul enjoys the Supreme Bliss in the pervasion of Lord Civan and has an ineffable union with Him. This is the ultimate goal of life as per Saiva Philosophy.
2. திருப்புகலூர்
திருத்தலவரலாறு:
திருப்புகலூர் என்ற திருத்தலமானதுசோழவள நாட்டில் காவிரித்தென்கரையில்அமைந்துள்ள75ஆவதுதலமாகும். நாகை மாவட்டத்தில் நன்னிலம் கோட்டத்தைச்சேர்ந்தது. நன்னிலம்,சன்னாநல்லூர்,நாகையிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. மயிலாடுதுறை - திருவாரூர் புகைவண்டி இருப்புப் பாதையில் நன்னிலம் இரயில் நிலையத்திற்குக்கிழக்கே5கி.மீதூரத்தில் உள்ளது. புன்னாகவனம்,சரண்யபுரம்,ரத்தனாரண்யம்என்பனபுராணங்களில் வழங்கும் மறுபெயர்கள். இத்தலத்தின்திருக்கோயில்நாற்புறமும்அகழிசூழ நடுவில் இருக்கிறது. அக்னி பகவான் பூசித்துப்பேறுபெற்ற தலம். திருநாவுக்கரசர் முத்தி பெற்ற தலம். முருகநாயனாருடையஅவதார ஸ்தலம். சுந்தரமூர்த்திநாயனாருக்குச்செங்கல்லைப்பொன்னாக்கியதிருத்தலம். மேகங்கள் பூசித்த தலம்.
பெயர்கள்:
இறைவன் பெயர் அக்னிபுரீஸ்வரர். இறைவி கருந்தாள்குழலியம்மை, “கோணப்பிரானைக்குறுகக்குறுகாகொடுவினையே” *கருந்தாள்குழலியும்தாழும் கலந்து” என்பன அப்பர் திருவாக்கால் தெரியவரும் அகச்சான்றுகள் ஆகும்.
தீர்த்தம்:
அக்னிதீர்த்தம். இதற்குப்பாணதீர்த்தம் என்றும் ஒரு பெயர் உண்டு. முடிகொண்டான்ஆறு,கோயிலுக்குத்தென்பக்கத்தில் ஓடுகிறது.
தல விருட்சம்:
புன்னை; “புன்னைப்பொழிற்புகலூர்', “புன்நாகம்மணங்கமழும்பூம்புகலூர்” என்று திருமுறைகளில் வரும் சொற்கள் இதற்கு மேற்கொள் ஆகும்.
விழா:
சித்திரைச்சதயத்தைப்பத்தாம்நாளாகக் கொண்டு விழா நடைபெறுகிறது. பத்து நாளிலும்அப்பர் சுவாமிகள்வரலாற்றை ஒட்டிய ஐதீகமேநினைவூட்டப்பெறுகின்றது. வைகாசி மாதம் பருவ இறுதியாகப்பிரமோற்சவம்நடைபெறுகிறது. சந்திரசேகரர்விசேஷமான மூர்த்தி. வேளாக்குறிச்சிஆதீனத்தின் பராமரிப்பில் உள்ளது. திருப்புகலூர்ஆலயத்திற்குள்வடபுறம்வர்த்தமானீச்சரம்என்கின்ற ஒரு தனிச் சன்னதி ஒன்று உள்ளது. முருக நாயனார் திருவுருவமும் அங்கு அமைக்கப்பபட்டுள்ளது.
கல்வெட்டு:
அரசாங்கத்தினர் படி எடுத்த கல்வெட்டுக்கள்67.அவை முதலாம் இராஜராஜன் (கி.பி. 9985-1014)காலத்திலிருந்துகாணப்படுகின்றன. இரண்டாம் பிராகாரம் முதலாம் இராஜராஜன், முதலாம் இராஜஇராஜேந்திரன் ஆகிய இவர்கள் காலத்திற்குப்பிந்தியதாகும். இக்கோயில்அர்த்தமண்டபத்தைக்கட்டியவன்இறையூர் உடையான் அரையன் கங்கை கொண்டானானசோழவிச்சாதரப்பல்லவரையன். முதல் பிராகாரத்துத்தென்னந்திருவாயிலுக்குராஜராஜன் திருவாசல் என்று பெயர்.
கர்ப்பக் கிருகத்தைச்சுற்றியுள்ளநீராழிப்பத்திமண்டபத்தைத் திருப்பணி செய்தவன் ஆர்க்காடுகிழான்சேதுராயன் என்பவன். இத்தலத்து “நரலோக வீரன் திருமண்டபம்” என்ற ஒன்று இருந்ததாக ஒரு கல்வெட்டுக்கூறுகின்றது. சிதம்பரம் கோயில் கல்வெட்டில்நரலோகன் என்று கூறப்பட்டவன்கோப்பெருஞ்சிங்கன். அக்காலத்துநூற்றுக்கால் மண்டபம் அவனால்கட்டப்பெற்றது. அதுபோல இத்தலத்தும்நூற்றுக்கால் மண்டபத்தை அவன் கட்டியிருக்கக் கூடும். திருமதில்வேளாக்குறிச்சிமகாதேவபண்டாரத்தின்சீடரானஅருணாசலத்தம்பிரானால் செய்யப் பெற்றது. மூன்றாம் குலோத்துங்கன் காலத்திலும் இக்கோயில்அகழால்சூழப்பட்டிருந்தமைஅறியலாம். இவ்வூர்,முதல் இராஜராஜன்காலத்தில்க்ஷத்திரியசிகாமணி வளநாடு என்றும், மும்முடிச்சோழ வளநாடு என்றும் முதல் குலோத்துங்கன் காலத்திலும் அதற்குப்பின்பும், குலோத்துங்கசோழவள நாட்டைச் சார்ந்தது எனவும் கூறப்பெறுகின்றது. இது பனையூர்நாட்டுப்பிரமதேயமானதிருப்புகலூர் என வழங்கப்பெறுகின்றது. இறைவன் கோணப்பெருமான் என்று குறிப்பிடப்பெறுகிறார். இங்குள்ள அம்பிகை நம்பிராட்டியார் என வழங்கப்பெறுகிறார்.இராஜராஜன் காலத்தில் அம்மைக்குநிவந்தங்கள்அளிக்கப்பெற்றன. திருநாவுக்கரசு நாயனார் குளிச்செழுந்த நாயனார் எனக்குறிக்கப்பெறுகிறார். இவருக்கு இராஜராஜன் காலத்தில் நித்திய பூசைக்கு ஏற்பாடு செய்யப்பெற்றிருக்கிறது. முருக நாயனார் திருமடம்,நம்பி நாயனார் திருமடம் என்றும்,திருநீலகண்டயாழ்ப்பாணரைத்தருமபுரத்து நாயனார்,யாழ்மூரி நாயனார் என்றும்,திருநீலநக்கநாயனாரைநக்கநாயனார் என்றும் கல்வெட்டுக்கள்காட்டுகின்றன.
பதிக வரலாறு:
திருஞானசம்பந்தப் பெருமான் திருப்புகலூருக்குஎழுந்தருளும்போது,இதற்கு முன்னரே அங்கு எழுந்தருளியிருந்த திருநாவுக்கரசு சுவாமிகள்அவ்வூர்அடியாரோடும்,பெருமகனாராகியமுருகநாயனாரோடும்,பிற அடியார்களோடும், -பிள்ளையாரை எதிர்கொண்டு அழைத்தனர். சம்பந்தப் பெருமான் அவர்கள் வேண்டுகோட்கு இணங்கி,முருக நாயனார் திருமடத்தில்எழுந்தருளினார்கள். அங்கே சிறுத்தொண்டர்,திருநீலநக்கர் முதலிய அடியார்களும் வந்து தரிசித்து,அளவளாவி இருந்தனர். சுவாமிகள் அவர்கள் அனைவரோடும்திருக்கோயிலுக்குச்சென்று வழிபடும்போதுபுகலூர்ப் பெருமையை உணர்த்தும்முகத்தான்இப்பதிகத்தைஅருளிச்செய்தார்கள்.
THE HISTORY OF THE PLACE
2. THIRU-P-PUKALOOR
The sacred city of Thiru-p-pukaloor is the 75th sacred site on the south bank of river Cauvery in the Chola country. It is in the Nannilam taluk of Naagappattinam district and is connected by buses to Nannilam, Sannaanallur and Naagappattinam. The Nannilam railway station, in the MayilaaduthuraiThiruvaaroor route, is at a distance of 5 km from here. This sacred place is also known by the names of Punnaagavanam, Saranyapuram and Raththnaaranyam in the Puraanams. The temple here is surrounded by a moat on all four sides. Lord Agni worshipped and obtained gifts here. Here is where Thiru-naavuk-karasar attained salvation. MurukaNaayanaar was born here. It is here that bricks became gold for the sake of Sundara-moorthyNaayanaar. The clouds offered worship here.
Names of Deities
The Lord's name is Agnipureesar, that of the Goddess, Karunthaal kuzhaliammai. The expressions in the Thevaaram, "evil will not befall those who approach Konappiraan", "Karunthaal kuzhali and Himself together" are the internal evidences for the holy names of the God and Goddess.
Sacred Fords
Agnitheertam. It is also known as Baanatheerththam. The Mudikondaan river runs near the temple to the south.
Tree of the Sacred Place
Punnai. Such phrases in the Thirumurais as "Pugaloor of Punnai Garden", "Poompugaloor which is redolent of Punnaagam" can be cited for this.
Temple Festivals
A festival with the tenth day falling on the asterism of Sadhayam in the month of Chiththirai is celebrated. The festival events of all ten days evoke traditions associated with Appar's life story. The Brahmotsavam takes place in the month of Vaikaasi. The This temple is under the religious special icon is that of Chandrasekharar. administration of the VelaakurichchiAadheenam. In the northern portion of this temple a separate sacred area called Vardhamaaneech-charam has been provided for the deity Vardhamaaneeswarar. The statue of one MurukaNaayanaar is also installed in this area.
Stone Inscriptions
Government epigraphists have copied 67 inscriptions. The inscriptions begin from the time of Raajaraajan I (985-1014 CE). The second praakaara was built after the times of Raajaraajan I and Raajaraajendiran I. The person who built the ardhamandapam of this temple is named IraiyoorVudaiyaanAraiyanGangaikondaanaana Chola VichchaadarapPallavaraiyan. The south entrance of the first praakaara is known as RaajaraajanThiruvaasal.
The mandapa surrounding the sanctum sanctorum was renovated by the AarkkaaduKizhaanSethuraayan. According to an inscription, there was in this temple a "Naraloka Veeran Thirumandapam". In an inscription in Chidambaram temple, the person named Naralokan was Kopperunjsingan. The hundred pillar mandapam of that temple was built by him. Simiarly, he might have built a hundred pillar mandapam in this temple too. The renovation of the outer compound wall was performed by one ArunaachalaThambiraan, a disciple of VelaakkurichchiMahaadevaPandaaram. It is known that during the reign of Kuloththungan III, this temple was surrounded by a moat.
This place was known as KshaththiriyaSikhaamaniValanaadu during the reign of Raajaraajan I and as Mummudich Chola Valanaadu during and after that of KuloththunganI, and is said to belong to Kuloththunga Chola Valanaadu. It is denoted as PanaiyoorNaattupPiramadeyamaanaThiruppugaloor. The God is referred to as Konapperumaan and Ambikai is known as Nampiraattiyaar. During the reign of Raajaraajan, endowments were made to the Mother. Thiru-naavuk-karasuNaayanaar is referred to as KulichchezhundhaNaayanaar. Arrangement had been made during the reign of Raajaraajan to offer daily worship to this saint. MurukaNaayanaarThirumadam is denoted as Nambi NaayanaarThirumadam, ThiruneelakantaYazhppaanar as DharumapuraththuNaayanaar and YaazhmooriNaayanaar and ThiruneelakandaNaayanaar as Nakka Naayanaar in the inscriptions.
INTRODUCTION TO THE HYMN
This hymn on this holy place of Thiru-p-Pukaloor was sung by our saintly child Thiru-Gnaana-Sambandar during his second visit to this sacred town. Apprised of his coming, MurukaNaayanaar, a native of Pukaloor, Saint Thiru-Naavu-k-karasar who was sojourning there, and other devotees proceeded to the outskirts of the town to receive him. Saint Siru-th-thondar came to this town to pay obeisance to our saintly child.
திருச்சிற்றம்பலம்
2.திருப்புகலூர்
பண் : நட்டபாடை
ராகம் : கம்பீரநாட்டை
குறிகலந்தவிசைபாடலினானசையாலிவ்வுலகெல்லாம்
நெறிகலந்ததொருநீர்மையனாயெருதேறிப்பலிபேணி
முறிகலந்ததொருதோலரைமேலுடையானிடமொய்ம்மலரின்
பொறிகலந்தபொழில்சூழ்ந்தயலேபுயலாரும்புகலூரே.1
குறி கலந்த இசை பாடலினான்,நசையால்இவ் உலகு எல்லாம்
நெறி கலந்தது ஒரு நீர்மையனாய்,எருது ஏறி,பலி பேணி,
முறி கலந்தது ஒரு தோல் அரைமேல் உடையான் இடம் - மொய்ம்மலரின்
பொறி கலந்த பொழில் சூழ்ந்து,அயலே புயல் ஆரும்புகலூரே.
பொருள்: சிவபெருமான் சுரத்தானங்களைக்குறிக்கும்இசையமைதியோடு கூடிய பாடல்களைப் பாடுபவன். அவன் உயிர்கள்மீது கொண்ட பெருவிருப்பால்இவ்வுலகம்முழுவதும் வாழும் அவ்வுயிர்கள்,தம்மை உணரும்நெறிகளை வகுத்து,அவற்றுள் கலந்து நிற்பவன். எருதின்மிசைஏறிவந்து மக்கள் இடும் பிச்சையை விரும்பி ஏற்பவன். இடையில் மான் தோலாடையைஉடுத்துபவன். அவன் விரும்பி உறையும் இடம்,செறிந்த மலர்கள்மீதுபுள்ளிகளை உடைய வண்டுகள் மொய்த்துத்தேனுண்ணும்வானளாவியபொழில்சூழ்ந்ததிருப்புகலூர் ஆகும்.
குறிப்புரை: குறி கலந்த இசை - குறித்த சுரத்தானங்களோடுஒன்றிய இசை,பாடலினான் - இறைவன், மனக்குறிப்போடுஒன்றிய இசை அமைந்த பாடலினான்என்பாரும்உளர். நசை - விருப்பம். நெறி - முறை. அஃதாவது,அந்தந்த ஆன்மாக்களின்பக்குவ நிலைக்கு ஏற்ப விறகில்தீயாகவும் பாலில் நெய்யாகவும்,மணியுட்சோதியாகவும் கலந்து நிற்கும் முறை. பலி - பிச்சை,முறி கலந்தது ஒரு தோல் - கொன்றபுலியின்தோலை. பொறி - வண்டு. உடையான் இடம் புகலூர் என இயைக்க. இது பின்வரும் பாடற்கும்இயையும்.
Lord Civan is the singer of songs compact of musical notations. By reason of His loving compassion for humanity, He formulated precepts which pervade everywhere and He enables them to follow the Divine Consciousness and thus gain deliverance. He rides the Bull and seeks alms; His waist is clad in a tiger skin; He is entempled in Pukaloor. The city is surrounded by rich gardens. Clouds graze these gardens. The speckled bees swarm about the densely luxuriant flowers.
Note: Civa is the Patron of Dance and Music. He is Nataraajar as well as the SaptaSwaramaya Murti. Civa is the Way and the Goal.
காதிலங்குகுழையன்னிழைசேர்திருமார்பன்னொருபாகம்
மாதிலங்குதிருமேனியினான்கருமானின்னுரியாடை
மீதிலங்கவணிந்தானிமையோர்தொழமேவும்மிடஞ்சோலைப்
போதிலங்குநசையால்வரிவண்டிசைபாடும்புகலூரே.
காது இலங்கு குழையன்(ன்),இழை சேர் திருமார்பன்(ன்) ஒருபாகம்
மாது இலங்கு திருமேனியினான்,கருமானின்(ன்) உரி ஆடை
மீது இலங்க அணிந்தான்,இமையோர் தொழ,மேவும்(ம்) இடம் - சோலைப்
போதில் அங்கு நசையால்வரிவண்டு இசை பாடும் புகலூரே.
பொருள்: சிவபெருமான் தன் காதில் விளங்கும் குழையைஅணிந்தவன். பூணூல் அணிந்தஅழகிய மார்பினன். இடப்பாகமாகஉமையம்மைவிளங்கும்திருமேனியன். கருமானின்தோலை மேல் ஆடையாகஅணிந்தவன். அத்தகையோன்,இமையவர்தொழுவதற்குவசதியாகத் தான் தங்கி அருள்புரியும் இடம்,சோலைகளில்தேனுண்ணும்விருப்பினால் வரி வண்டுகள் இசைபாடும்புகலூராகும்.
குறிப்புரை: ஒரு பாகம் மாது இலங்கும்திருமேனியன் என்பதால்,காதிலங்குகுழையன்என்பதற்குப்பெண் பாதியில் காதில் விளங்கும் குழையை உடையவன் என்றும்,ஆண் பாதியில்தளிரை உடையவன் என்றும் பொருள் கொள்க. குழை - பனை மரத்துஓலையால் செய்யப்படும் மகளிர் காதணி. ஆடவர்காதில் செருகிக் கொள்ளுவது மணத்தழை. இதனை வடநூலார்'கர்ணாவதம்சம்'என்பர். இழைசேர்திருமார்பன் - பூணூல் சேர்ந்த,இழைத்த தங்க அணிகள்சேர்ந்தமார்பினை உடையவன். கருமான் - கிருஷ்ண மிருகம் என்னும் மான்,உரி - தோல். இமையோர் - தேவர்கள். சோலைப்போதில் அங்கு நசையால்வரிவண்டு பாடும் எனப் பிரித்துப் பொருள் கொள்க. அங்கு - அசை;போது இலங்கு எனப்பிரித்துக்கோடலும் ஒன்று.
Lord Civan wears a special ear ring in his left ear called "Kuzhai" made of palmyrah leaf. He wears the sacred thread on His holy chest. His Divine Frame is beautified by His Consort who occupied the left side of His body. He is clad in the flayed skin of a darksome deer (Deer skin on the ). Hailed by the Devas, he abides in Pukaloor. This town is surrounded by fertile groves. In these groves striped bees desiring to consume more and more of honey go on humming round and round the garden. This music resounds in Pukaloor.
Note: Civa is Ammai-Appar, the Deity who is Father as well as Mother.
பண்ணிலாவும்மறைபாடலினானிறைசேரும்வளையங்கைப்
பெண்ணிலாவவுடையான்பெரியார்கழலென்றுந்தொழுதேத்த
உண்ணிலாவியவர்சிந்தையுணீங்காவொருவன்னிடமென்பர்
மண்ணிலாவும்மடியார்குடிமைத்தொழின்மல்கும்புகலூரே.
பண் நிலாவும் மறை பாடலினான்,இறை சேரும் வளை அம்கைப்
பெண் நிலாவ உடையான்,பெரியார் கழல் என்றும் தொழுது ஏத்த
உள் நிலாவி அவர் சிந்தையுள்நீங்கா ஒருவன் (ன்),இடம் என்பர் -
மண் நிலாவும்(ம்) அடியார் குடிமைத்தொழில்மல்கும்புகலூரே.
பொருள்: சிவபெருமான் இசையமைதி விளங்கும் வேதங்களைப் பாடுபவன் - முன் கைகளில் வளையல்கள் விளங்கும் அழகிய கைகளை உடைய உமையம்மையைத் தனது தேவியாக உடையவன். தன்திருவடிகளை என்றும் தொழுது ஏத்தும் பெரியவர்களாகியஅடியார்களின்உள்ளத்தேவிளங்குவதோடு அவர்களின் அடிமனத்தில் என்றும் நீங்காதுஇருப்பவன். அத்தகையோன் விரும்பி உறையுமிடம்நிலவுலகில் வாழும் அடியவர்கள்அடிமைத்தொழிலில் மனம் நிறைந்திருக்கும்புகலூராகும்.
குறிப்புரை: பண் நிலாவும் மறை - இசை தாமே விளங்கும் வேதம். இறை - முன்கை. பெண் - உமாதேவி. பெரியார் - சிவஞானத்தில் பெரியவர்கள். உள்நிலாவி அவர் சிந்தை நீங்கா ஒருவன் எனப்பிரிக்க. பாடலினான்,உடையான்,ஒருவன் இடம் புகலூரேஎன்பர்,எனக்கூட்டுக.
Lord Civan is a singer of melodious Vedic hymns. His Consort Uma Devi's lovely fore-arms are bedecked with bangles. He, the Peerless One is ever hailed and adored by the great. He inseparably indwells in their mind (A). Pukaloor is His universally celebrated shrine. It is in this Pukaloor our Lord stays and bestows His grace on His servitors.
நீரின்மல்குசடையன்விடையன்னடையார்தம்மரண்மூன்றுஞ்
சீரின்மல்குமலையேசிலையாகமுனிந்தானுலகுய்யக்
காரின்மல்குகடனஞ்சமதுண்டகடவுள்ளிடமென்பார்
ஊரின்மல்கிவளா்செம்மையினாலுயர்வெய்தும்புகலூரே.
நீரின் மல்கு சடையன்,விடையன்(ன்),அடையார்தம்அரண்மூன்றும்
சீரின் மல்கு மலையேசிலைஆகமுனிந்தான் உலகு உய்யக்
காரின் மல்கு கடல் நஞ்சு அமுது உண்ட கடவுள்(ள்) இடம் என்பர் -
ஊரின் மல்கி வளர் செம்மையினால் உயர்வு எய்தும் புகலூரே.
பொருள்: சிவபெருமான்,கங்கை நீரால்நனையப்பெற்று நிறைவாக உள்ள சடைமுடியைஉடையவன். காளையைத் தனக்கு வாகனமாகக் கொண்டவன். முப்புரங்களையும்சிறப்புமிக்க மேருமலையைவில்லாகக் கொண்டு அழித்தவன். தேவர்களும்அசுரர்களும்திருப்பாற்கடலைக் கடைந்து,இறப்பைஒழிக்கும்தன்மையை உடைய அமிர்தம் பெற, முற்பட்டார்கள். அதுசமயம்,கருநிறம் உடைய நஞ்சு கடலினின்றும் வெளிப்பட்டது. அது ஆலகாலவிஷமாக உலகில் உள்ள எல்லா உயிர்களையும் அழித்துவிடும் நிலையில் விளங்கியது. அதுசமயம் சிவபெருமான் சுந்தரரை ஏவி,அந்த நஞ்சைஎடுத்துவரச் சொல்லிஅதனை அமிர்தமாகக் கருதி விழுங்கி உலகில் உள்ள எல்லா உயிர்களும்மாண்டு போகாமல் காப்பாற்றி அருளினார். அத்தகையோன் விரும்பி உறையுமிடம்ஒழுக்கத்தால் உயர்ந்த மக்கள் வாழ்ந்து சிறப்பெய்தும்புகலூராகும்.
குறிப்புரை: அடையார் -'தேவர்க்குப்பகைவராகியஅசுரர்கள். மலையைச்சிலையாகமுனிந்தான்என்றது அவன் முனிவொன்றுமே பகை தணித்து ஆட்கொண்டது. வில்லான மலை அன்று என்பதாம். காரின் மல்கும் - கருமை நிறத்தில் மிகுந்த,ஊரின் மல்கி வளர் செம்மையினால்உயர்வெய்தும்புகலூர் - ..ஊர்களில் ஒரு காலைக்கு ஒருகால் நிறைந்து வளரும் ஒழுக்கத்தால் உயர்ந்த புகலூர்.
The river (Ganga) courses through Lord Civan's matted hair crest. He is mounted on the Bull. Once, indignant Civan destroyed the three fortresses of Asuraas using Mount Mehru as a bow. In order to save all the beings of the Cosmos, He once drank the black oceanic poison as though it were ambrosia. This great God abides in Pukaloor grown great, thanks to its dwellers who are poised in lofty righteousness.
செய்யமேனிவெளியபொடிப்பூசுவர்சேரும்மடியார்மேல்
பையநின்றவினைபாற்றுவர்போற்றிசைத்தென்றும்பணிவாரை
மெய்யநின்றபெருமானுறையும்மிடமென்பரருள்பேணிப்
பொய்யிலாதமனத்தார்பிரியாதுபொருந்தும்புகலூரே.5
செய்யமேனிவெளிய பொடிப் பூசுவர் சேரும்(ம்) அடியார்மேல்
பைய நின்ற வினை பாற்றுவர் போற்று இசைத்து என்றும் பணிவாரை
மெய்ய நின்ற பெருமான் உறையும் இடம் என்பர் - அருள் பேணி,
பொய் இலாதமனத்தார்பிரியாது பொருந்தும் புகலூரே.
பொருள்: சிவபெருமான் தன் சிவந்ததிருமேனியில்வெண்ணிறமானதிருநீற்றைப்பூசுபவர். தம்மை வந்தடையும்அடியவர்களைத் தாக்க வரும் வினைகளைநீக்குபவர். என்றும் தம்மைப்பாடிப்பணிவார்க்கு உண்மையானவர். அவர் விரும்பி உறையும் இடம், அருளையேவிரும்பிப்பொய்யில்லாதமனத்தவர்நீங்காது வாழும் புகலூர்என்பர்.
குறிப்புரை: அடியார்மேல் நின்ற வினையை மெதுவாக நீக்குவார். பைய - மெதுவாக. நோயை விரைந்து நீக்கினால் அதனால் விளையும் தீமை பெரியதாய்,நோயின்பெருமையும்,மருத்துவன் உழைப்பும் அறியப்படாதவாறுபோல,வினைகளை விரைந்து நீக்கின் விளையும் கேடு,பலவாமாகலின்பையப்பாற்றுவார் என்றார். பாற்றுதல் - சிதறிப்போகச் செய்தல். பணிவாரை - அடியார்கள் இடத்தில் வேற்றுமை மயக்கம். மெய்ய - உண்மையாக,பொய் - அஞ்ஞானம்.
Lord Civan smears His radiant frame with white ashes. He makes the accumulated karma of His devotees dissipate and disappear. It disappears only gradually; if it disappears all of a sudden the effect will be severe. He is ever true to His devotees who adore and hail Him. God of this nature abides in Pukaloor. This Pukaloor consists of people who nurture God's grace and whose minds are free from falsity and spiritual ignorance. They live in close harmony with the place, never willing to part at all.
Note: Pukaloor is indeed "the upright heart and pure".
கழலினோசைசிலம்பின்னொலியோசைகலிக்கப்பயில்கானில்,
குழலினோசைகுறட்பாரிடம்போற்றக்குனித்தாரிடமென்பர்
விழவினோசையடியார்மிடைவுற்றுவிரும்பிப்பொலிந்தெங்கும்
முழவினோசைமுந்நீரயர்வெய்தமுழங்கும்புகலூரே.
கழலின் ஓசை,சிலம்பின்(ன்) ஒலி,ஒசை கலிக்க,பயில் கானில்,
குழலின் ஓசை குறள்பாரிடம்போற்றக்,குனித்தார் இடம் என்பர் -
விழவின் ஓசை,அடியார் மிடைவுஉற்றுவிரும்பிப்பொலிந்து எங்கும்
முழவின் ஓசை,முந்நீர் அயர்வு எய்தமுழங்கும்புகலூரே.
பொருள்: சிவபெருமானுடைய இரண்டு திருவடிகளில்இடக்காலில் விளங்கும் சிலம்பு, வலக்காலில் விளங்கும் வீரக்கழல் ஆகியன ஒலிக்கவும்,குழல் முதலிய இசைக்கருவிகள்முழங்கவும்,குள்ளமான பூதகணங்கள்போற்றவும்,பலகாலும் பழகிய இடமாக இடுகாட்டில்முற்றழிப்பு நடனம் புரியும் இடமாக விளங்குவதுபுகலூர் ஆகும். அங்குத்திருவிழாக்களின்ஓசையும்,அடியவர் மனமகிழ்வோடு எங்கும் முழக்கும்முழவோசையும்கடலோசையைத்தளரச் செய்யும் பேரொலியாகஅமைகின்றன.
குறிப்புரை: கழலின் ஓசை - ஆண் பகுதியாகியவலத்தாளில்அணிந்தவீரக்கழலின் ஓசை. சிலம்பின்ஓசை - பெண் பகுதியாகியஇடத்தாளில்அணிந்தசிலம்பின் ஓசை,அன்றிச்சிவபெருமானதுகழலின்ஓசையும் மாறாடியமாகாளியின்சிலம்பின் ஓசையும் என்பாரும்உளர். குனித்தார் - ஆடியவர், குறள்பாரிடம் - குள்ளமான பூதங்கள்,மிடைவுற்று - நெருங்கி,முந்நீர் - கடல்.
In the cremation ground He dances and His hero anklet (on the right leg) and His Cilambu (on the left leg) resound in resonance, and His pygmy Bhuta-Hosts, adoring Him play the flutes and other instruments. It is affirmed Pukaloor is His beloved shrine where the roar of the sea is overwhelmed by the festive din and the sound of Muzhavam played by the happy devotees who willingly throng everywhere in their strength.
Note: The pygmy Bhuta Hosts: Verse 16 of the PeriyaPuraanam speaks eloquently of the invincible puissance of these Bhutas (An army of attendants serving Lord Civan). Hero anklet: It is a string of bells (tintinnabulum) attached to a cord and fastened below the right knee. Only an acknowledged hero is entitled to wear it. Cilampus: Anklets.
வெள்ளமார்ந்துமிளிர்செஞ்சடைதன்மேல்விளங்கும்மதிசூடி
உள்ளமார்ந்தவடியார்தொழுதேத்தவுகக்கும்மருடந்தெம்
கள்ளமார்ந்துகழியப்பழிதீரீத்தகடவுள்ளிடமென்பார்
புள்ளையார்ந்தவயலின்விளைவால்வளமல்கும்புகலூரே._- 7
வெள்ளம் ஆர்ந்து மிளிர் செஞ்சடை தன்மேல் விளங்கும் மதிசூடி,
உள்ளம் ஆர்ந்த அடியார் தொழுது ஏத்தஉகக்கும்(ம்) அருள் தந்து,எம்
கள்ளம் ஆர்ந்துகழியப் பழி தீர்த்த கடவுள்(ள்) இடம் என்பர் -
புள்ளை ஆர்ந்த வயலின் விளைவால் வளம் மல்கும்புகலூரே.
பொருள்: சிவபெருமானதுதிருமுடியாகியசெஞ்சடைமேல்கங்கைநீர் அடங்கி விளங்குகின்றது. அதில் விளக்கமானபிறைமதியைச் சூடி உள்ளார். தம்மிடம் மனம் ஒன்றி அடியவர் தொழுது ஏத்த அவர்கள் மனம் மகிழும் வண்ணம் அருளைப் புரிந்து வருகிறார். என்னைப் பற்றிய வினையையும்பழியையும் தீர்த்து அருளினார். இவர் உறையும் இடம், மீன் கொத்தி முதலிய பறவை இனங்கள் மீன்களைக் கவர வந்து தங்கும் வயல்களின்விளைவால் வளம் மல்கியபுகலூராகும்.
குறிப்புரை: வெள்ளம் - கங்கை. வெள்ளம் ஆர்ந்து மிளிர் செஞ்சடை என்றது செருக்கால் மிக்க கங்கையைஅடக்கியதுஎன்றவாறு. “- விளங்கும் மதிசூடி என்பது இளைத்தமதியை விளங்க வைத்தது. இதனால் தருக்கினாரைஒடுக்குதலும்தாழ்ந்தாரைஉயர்த்துதலும் இறைவன் கருணை என்பது தெரிவிக்கப்படுகின்றன. எம் கள்ளம் ஆர்ந்துபழிதீர்த்த கடவுள் - அநாதியேபற்றி நிற்கும் எமதுஆணவமலமாகிய வஞ்சனை நீங்கப்பெத்தான்மாக்கள் என்னும் பழியைத் தீர்த்த கடவுள். புள் - நாரை முதலியன.
The radiant matted hair of Lord Civan holds the river Ganges. Also the splendid crescent moon glows in another portion of His matted hair. Unto the devotees who adore and hail Him with fullness of heart, He grants His sweet grace. It is thus, the Lord-God annuls our insidious afflictions and the consequent blame that has got stuck in us. It is affirmed that the Lord-God's shrine is at Pukaloor which is rich with the yield of fields - the habitat of water - fowls.
தென்னிலங்கையரையன்வரைபற்றியெடுத்தான்முடிதிண்டோள்
தன்னிலங்குவிரலானெரிவித்திசைகேட்டன்றருள்செய்த
மின்னிலங்குசடையான்மடமாதொடுமேவும்மிடமென்பா்
பொன்னிலங்குமணிமாளிகைமேன்மதிதோயும்புகலூரே.8
தென்இலங்கைஅரையன்,வரை பற்றி எடுத்தான்,முடி திண் தோள்,
தன் இலங்கு விரலால் நெரிவித்து,இசை கேட்டு,அன்று,அருள்செய்த
மின்இலங்குசடையான்மடமாதொடுமேவும்(ம்) இடம் என்பர் -
பொன் இலங்கு மணி மாளிகைமேல் மதி தோயும்புகலூரே.
பொருள்: சிவபெருமான் தாழ்ந்த சடைமுடியை உடையவன். புகலூரில் உள்ள மாளிகைகளில்பொன்னும்மணியும்திகழ்கின்றன. மாளிகைகளின்உச்சியில் சந்திரன் தவழ்ந்து செல்லுகின்றான். இந்த அழகான புகலூரில் சிவபெருமான் தன் தேவியுடன்வீற்றிருந்துஅருளாட்சி செய்து வருகின்றான்.
அழகிய இலங்காபுரியின் மன்னன் ஒரு சமயம் வான வீதியில் தனது புஷ்பவிமானத்தில் சென்று கொண்டிருந்தான். அவனது வானவழியில்திருக்கயிலாய மலை தோன்றிற்று. அம்மலையில் சிவபெருமான் வீற்றிருப்பார் என்று அவனுக்குத் தெரியும். அவ்வாறு தெரியுமாதலால் அவன் அம்மலையைச் சுற்றி வேறு பாதையில் சென்றிருக்கலாம். அதை விடுத்துஅம்மலையைத் தள்ளி வைத்துவிட்டு நேர் பாதையில் போக விருப்பம் கொண்டான். அந்த விருப்பம் காரணமாகத் தன் விமானத்தைத் தரையில் இறக்கி,தானும்இறங்கித் தன் தோள் வலிமையாலும்,கைகளின்பலத்தாலும் கயிலை மலையைநகர்த்திவைக்க முயற்சி செய்தான். அதை அறிந்த சிவபெருமான் தன் கால் கட்டை விரலால் மலையைச் சிறிது அழுத்தினான். இலங்கை அரசனதுதோள்கள்நெரிந்து மலையின் கீழ்நசுக்கப்பட்டு,எழுந்திருக்க முடியாமல் துன்புற்றான். தன் செயலுக்கு வருந்தி,இறைவனிடம்மன்னிப்புக் கோரி,சாம கானம் பாடி இறைவனைமகிழ்வித்தான். சிவபெருமான் மனமிரங்கி இலங்கை மன்னனுக்கு “இராவணன்” என்ற பெயரையும்,நீண்ட ஆயுளையும்,சந்திரகாசம்என்ற தெய்வீக வாளும் கொடுத்து அருள் செய்தான்.
குறிப்புரை: தென் - அழகு. திசை குறித்ததன்று. வரை - கயிலை;நெரித்து எனாதுநெரிவித்து என்றது விரலின் செயல் என்பதைத் தெரிவிக்க. இவரேநினைத்துச்செய்யின்நேரும் தீமை பெரிதாயிருக்கும்என்பது. இசை - சாம கானம். பொன்னிலங்கும் மணி மாளிகையின் மேல் மதிதோயும் என்பது,புகலூரும்மதிசூடிஇறைவனைப் போல் சாரூபம் பெற்றது என்பது அறிவித்தவாறு. இராவணன் - அழுதவன்.
In the days of Yore, the King of beautiful Sri Lanka gripping Mount Kailas on which Lord Civan was seated, attempted to lift it aside. The Lord pressing the mount with his toe crushed the heads and mighty shoulders of the arrogant King. Realizing his mistake, the king sang hymn on Him. Lord Civan was pleased and graced him. This Lord wearing the shining crescent moon on His effulgent and matted hair is entempled with his bashful Consort in Pukaloor. The moon glides over the gem- studded mansions of Pukaloor. Pukaloor is such a divine place, which is beautified by the moon doubly.
நாகம்வைத்தமுடியானடிகைதொழுதேத்தும்மடியார்கள்
ஆகம்வைத்தபெருமான்பிரமன்னொடுமாலுந்தொழுதேத்த
ஏகம்வைத்தவெரியாய்மிகவோங்கியவெம்மானிடம்போலும்
போகம்வைத்தபொழிலின்னிழலான்மதுவாரும்புகலூரே.9
நாகம் வைத்த முடியான்,அடி கைதொழுது ஏத்தும் அடியார்கள்
ஆகம் வைத்த பெருமான்,பிரமன்(ன்) னொடுமாலும் தொழுது ஏத்த
ஏகம் வைத்த எரிஆய் மிக ஓங்கிய எம்மான்,இடம் போலும் -
போகம் வைத்த பொழிலின்(ன்) நிழலால் மது வாரும்புகலூரே.
பொருள்: பாம்பைமுடிமிசைவைத்துள்ளவன் சிவபெருமான். அவன் தன் திருவடிகளைப்போற்றும்அடியார்கள் தம் மனத்தின்கண்வைத்துப்போற்றும் தலைவன் ஆவான்.பிரமனும்,திருமாலும்தொழுதேத்தஏகனாய் எரி வடிவில் மிக ஓங்கியவன். எம்மானுமாகியஅவனுக்கு மிக உகந்த இடம்,பல்வகைப்பயன்களையும்தருவதோடு,நிழலாற்சிறந்ததாய், தேன் நிறைந்து விளங்கும் பொழில்சூழ்ந்தபுகலூராகும்.
குறிப்புரை: அடியார்கள்ஆகம் வைத்த பெருமான் - அடியார்களைத் தமது திருவுள்ளத்து இடம்பெற வைத்த பெருமான். அடியார்கள் தமது நெஞ்சத்தில் வைத்த பெருமான் என்றுமாம். ஏகம் வைத்த எரி -- ஒன்றான தீப்பிழம்பு, (போகம் வைத்த. பொழில் என்றது தனிமகன்வழங்காப்பனிமலர்க்கா என்றது போல இன்பச் சிறப்பு அறிவித்தவாறு.
Lord Civan is adorned with a serpent on His matted crest. He indwells in the minds of His devotees who hail His Feet with adoring hands. As a single blazing column of fire He soared into infinite height as a single column of fire causing Brahma and Vishnu to hail and adore Him. Pukaloor is our Lord God's shrine; it is rich in useful and shady groves filled with honey yielding flowers.
Note: Civa is both immanent and transcendent.
செய்தவத்தாமிகுதேரர்கள்சாக்கியா்செப்பிற்பொருளல்லாக்
கைதவத்தர்மொழியைத்தவிர்வார்கள்கடவுள்ளிடம்போலும்
கொய்துபத்தாமலரும்புனலுங்கொடுதூவித்துதிசெய்து
மெய்தவத்தின்முயல்வாருயர்வானகமெய்தும்புகலூரே.10
செய்த(அ)வத்தர் மிகு தேரர்கள்,சாக்கியர்,செப்பில் பொருள் அல்லாக்
கைதவத்தர்,மொழியைத்தவிர்வார்கள் கடவுள்(ள்) இடம்போலும்
கொய்து பத்தர்மலரும்புனலும்கொடுதூவி,தன்கை
மெய் தவத்தின்முயல்வார்உயர்வானகம்எயதும்புகலூரே.
பொருள்: சாக்கியர்களும்சமணர்களும்எண்ணிக்கையில்மிக்கவர்கள். இவர்கள் உண்மையல்லாத வஞ்சகம் நிறைந்த மொழிகளைக்கூறுபவர்கள். இவர்களது கூற்றைக்கேளாதவர்கள் நன்னெறி நிறைந்த மெய்யடியார்கள். மிகுதியான தவம் செய்பவர்கள்.இவர்களின் தலைவன் சிவபெருமான். அவனுடைய அடியவர்கள் மலர் கொய்து வந்து தூவிப்புனலாட்டி,துதி செய்து,தவநெறியில் முயன்று உயர் வானகத்தைஎய்துதற்குரியவழிபாடுகளை ஆற்றுகிறார்கள். இவர்கள் வாழும் ஊராகியபுகலூரைத் தனக்கு மிக உகந்த இடமாகக் கொண்டு சிவபெருமான் அருளாட்சி செய்து வருகிறார்.|
குறிப்புரை: மொழியைத்தவிர்வார்களாகியசெய்தவத்தரதுகடவுளிடம் என இயைக்க. அன்றிச் செய்த அவத்தர்எனப்பெயரெச்சத்து அகரம் விகாரத்தால்தொக்கதாகக் கொண்டு வீண்காரியம் விளைவிப்பவர்கள்எனத்தேரர்க்குஅடைமொழியாகவும்ஆக்கலாம். செப்பில் - உரையில்,மெய்தவம்எதுகை நோக்கி மிகாதாயிற்று.
Pukaloor is a shrine beloved for those that totally ignore the senseless utterances of the numerous Jains and Buddhists. The devotees engaged in asceticism pluck choice flowers, carry water for His ablutions and perform pooja with flowers. Hailing Him and being engaged in religious austerities, they thus gain the sublime and supernal world. The Lord's Pukaloor is filled with such devotees.
Note: Tapas: (Sarya, Kriya, Yoga constitute Tapas and Gnaanam is fruit of it).
புற்றில்வாழுமரவம்மரையார்த்தவன்மேவும்புகலூரைக்
கற்றுநல்லவவர்காழியுண்ஞானசம்பந்தன்றமிழ்மாலை
பற்றியென்றும்மிசைபாடியமாந்தர்பரமன்னடிசேர்ந்து
குற்றமின்றிக்குறைபாடொழியாப்புகழோங்கிப்பொலிவாரே.41
புற்றில் வாழும் அரவம்(ம்) அரை ஆர்த்தவன்மேவும்புகலூரைக்,
கற்று நல்ல அவர் காழியுள்ஞானசம்பந்தன்தமிழ்மாலை
பற்றி,என்றும்(ம்) இசை பாடிய மாந்தர்,பரமன் (ன்) அடி சேர்ந்து,
குற்றம் இன்றி,குறைபாடு ஒழியாப்,புகழ் ஓங்கி,பொலிவாரே.
பொருள்: புற்றில் வாழும் பாம்புகளைஇடையிலேகட்டியவனாகிய சிவபிரான் எழுந்தருளியபுகலூர்மீதுஇறைவனதுபொருள்சேர்புகழைக் கற்று வல்லவர்கள் வாழும்€காழிப்பதியில்தோன்றியஞானசம்பந்தன்பாடிய தமிழ் மாலையாகியஇந்தத்திருப்பதிகத்தை;என்றும் இசையோடு பாடி வழிபடும்மாந்தர்கள் இறைவன் திருவடி நீழலை அடைந்து குற்றம் குறைபாடு அகன்று புகழோங்கிப்பொலிவெய்துவார்கள்.
குறிப்புரை: பாம்பு என்ற பொதுமை பற்றி,யாகத்திலிருந்து வந்த இந்தப்பாம்புகளையும்,புற்றில் வாழும் அரவம் என்றார். சாதியடை. மேவும் - விரும்பும். கற்று நல்ல அவர் - இறைவன் புகழைப் படித்து நல்லவராயினார்கள். குற்றம் - சொல்லான்வருங்குற்றம் குறை - சிந்தனையால் வரும் தோஷம். ஞானசம்பந்தன்புகலூரைச் (சொன்ன) தமிழ் மாலை பற்றி,பாடிய மாந்தர் பொலிவார் என இயைத்துப்பொருள் கொள்க. கற்று நல்ல அவர் காழி என்றது. கற்றவர்கள்பணிந்தேத்தும்கழுமலத்துள் ஈசன் என்ற பகுதியை நினைவூட்டுவது. ஒழியா - ஒழிந்து,செய்யா என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம்.
Gnaana-Sambandar has sung about Civan whose waist is encircled by the serpent of the ant-hill and who is the presiding deity of Pukaloor. Gnaanasambandar belongs to Seekazhi, where people are learned and righteous. Those who cling to and chant the garlands of Tamil verses composed by Gnaana-Sambandar will be free from flaws and blemishes. They get poised in splendid glory and will eventually reach His hallowed Feet.
Note: Serpent of the ant-hill: Tradition holds that a deserted ant hill serves as a serpent's hide out.
2ஆம் பதிகம் முற்றிற்று
சிவமயம்
3. திரு வலிதாயம்
திருத்தலவரலாறு:
திருவலிதாயம் என்ற திருத்தலமானது தொண்டை நாட்டில் விளங்கும் தேவாரத்தலங்களில்21ஆவது தலம். சென்னைப்பெருநகரின்மேல்பால் உள்ளது. சென்னை மையப் பேருந்து நிலையத்திலிருந்துநகரப்பேருந்துகளில்செல்லலாம். இத்தலம் பாடி என இன்று வழங்குகிறது. பாரத்வாஜ மகரிஷி,வியாழன்,அநுமான் இவர்கள் வழிபட்டு முத்தி பெற்றதாகத் தலபுராணம் கூறும். கஜப்பிரஷ்ட விமானம். சுவாமி பெயர் வலிதாயநாதர். அம்மை பெயர் தாயம்மை;இங்கேயுள்ளகிணற்று நீர் மிக்க சுவையானது.
கல்வெட்டு:
இத்தலத்தைப் பற்றிய கல்வெட்டுக்கள்14 உள்ளன. அவற்றில் சுவாமி பெயர் திருவலிதாயமுடைய நாயனார் என வழங்கப்பெறுகிறது. அம்மை பெயர் திருவீதிநாச்சியார்என்பது. இன்ன அரசர் காலத்தது என்று அறியப் பெறாத கல்வெட்டு ஒன்று, திருவெண்காட்டிலிருந்து அழகிய திருச்சிற்றம்பலமுடையநாயனாரைஎழுந்தருள்வித்துப்பிரதிஷ்டை செய்து,அதனைப் பூசிக்க,அந்தணரையும் அங்கிருந்து குடியேற்றி,அவர்களுக்கும்உணவுக்காகஜயங்கொண்டசோழமண்டலத்து,புலியூர்க்கோட்டமானசங்கமசோழவள நாட்டு அம்பத்தூர் நாட்டு திருவலிதாயத்தில் நிலம் விட்டதாகக்கூறுகிறது. திருஞானசம்பந்த நாழி என்னும் மரக்காலால் நெல் அளந்து கொடுக்கும்படியும்எழுதியுள்ளது. திரிபுவனசக்ரவர்த்தியானஇராஜராஜசோழன் தமது ஆட்சி28ஆம் ஆண்டில்க்ஷேத்ரபாலப் பிள்ளையார் கோயிலையும் கட்டி, நிவேதனத்திற்காகநிலமும் விட்டான். விஜயகண்டகோபால தேவர் என்பவர்காஞ்சிபுரத்திலிருந்துநடனமாதரைக் கொண்டு வந்து குடியேற்றினார். சுவாமிக்கும் அம்மை திருவீதிநாச்சியாருக்கும்ஆபரணங்களும்,பாத்திரங்களும் வழங்கினார். இராஜராஜன் காலத்தில் சாளுக்கிய நாரணன் யாதவராயன்என்பவனால்பாடியைச் சேர்ந்த சிந்தாமணிபுரம் என்னும் இடத்தில் இருவீடுகளும்இரு நந்தவனங்களும்வழங்கப்பெற்றன.பரமேஸ்வரமங்கலத்துச்சிலம்பூரகோட்டத்துச்சிலம்பணிந்தான்மாதவராயனால்விளக்கிடப் பொன் வழங்கப் பெற்ற செய்தியும்அறியலாகும். இவையன்றி,விளக்கு,உணவு முதலியவற்றிற்குநிலமும்காசும்அளித்ததாக ஏனைய கல்வெட்டுக்கள்கூறுகின்றன.
பதிக வரலாறு:
திருஞானசம்பந்தசுவாமிகள் அடியார் கூட்டத்தோடும்மலையுங்கானுங் கடந்து போந்து, பாலியாற்றுவடகரையை அடைந்து, .திருவேற்காட்டை வணங்கி அதனை அடுத்துள்ளவலிதாயத்தைவணங்கும்போது “பத்தரோடு” என்னும் இத்திருப்பதிகத்தைப் பாடி அருளினார்கள்.
THE HISTORY OF THE PLACE
3. THIRU-VALI-THAAYAM
The sacred city of Thiru-vali-thaayam is one of the Thevaaram temples of Thondai Naadu. This is the 21st sacred site. It lies to the west of the city of Chennai. City buses from the Central Bust Stand of Chennai ply to this place. The place is called Paadi today. The temple chronicle states that Bhaaradvaaja Maharishi, Viyaazhan and Anumaan attained salvation by worshipping here. The vimaanam is of the Gajaprishta type. The Lord's name is Vali-thaayaNaathar and that of the Mother is Thaayammai. The well water here is exceptionally sweet.
Stone Inscriptions
There are 14 inscriptions about this temple. The name of the Lord is referred to as Thiru-Vali-Thaaya-mudaiyaNaayanaar. The Mother's name is Thiru-Veedhi- Naachchiyaar. An inscription, which could not be identified with a particular king's reign, states that Azhagiya Chitrambala-mudaiyaNaayanaar was brought from Thiru- ven-kaadu and installed here, and that in order to offer worship to that deity andhanar were also brought over from there and for their livelihood, land was endowed in Thiru- vali-thaayam of Ambaththoor Naadu in Sangama Chola Valanaadu of PuliyoorKottam. It is also inscribed that paddy was to be measured using a measure known as Thiru- Gnaana-SambandaNaazhi. In his 28th regnal year, Raajaraaja Chola, the emperor of three worlds, had the KshethrapaalaPillayaar temple built and endowed land for Nivedhanam. One VijayakandaGopaala Thevar brought dancing women from Kaanchipuram and settled them here. He also gifted utensils for the Lord and Goddess Thiru-VeedhiNaachchiyaar. During the time of Raajaraajan, two houses and two flower gardens situated in Chinthaamani-puram, a part of Paadi, were gifted by one ChaalukkiyaNaarananYaadhavaraajan. It is also known that one SilambaninthaanMaadhavaraayan of SilamboorKottam in Paramesvara-mangalam made a gift of gold for lighting the temple with a lamp. Besides these, land and money were donated for lamp and food, according to other inscriptions.
INTRODUCTION TO THE HYMN
Wading through hills and jungles, the godly saint arrived at Tiruverkaadu with bhaktas. After that he visited this holy town Tiru-vali-thaa-yam. This place is today known as Paadi.
திருச்சிற்றம்பலம்
3. திரு வலிதாயம்
பண் : நட்டபாடை
ராகம் : கம்பீரநாட்டை
பத்தரோடுபலரும்பொலியம்மலரங்கைப்புனல்தூவி
ஒத்தசொல்லியுலகத்தவர்தாந்தொழுதேத்தவுயர்சென்னி
மத்தம்வைத்தபெருமான்பிரியாதுறைகின்றவலிதாயம்
சித்தம்வைத்தவடியாரவர்மேலடையாமற்றிடர்நோயே.1
பத்தரோடு பலரும் பொலிய(ம்) மலர் அங்கைப் புனல் தூவி,
ஒத்த சொல்லி,உலகத்தவர் தாம் தொழுது ஏத்த,உயர் சென்னி
மத்தம் வைத்த பெருமான் பிரியாதுஉறைகின்றவலிதாயம்
சித்தம்வைத்த அடியார் அவர்மேல் அடையா,மற்று இடர்,நோயே.
பொருள்: வலிதாயம் சித்தம் வைத்த அடியார்களைஇடர்நோய்அடையா என வினை முடிபுகொள்க. சிவனடியார்கள்,விளங்குகின்ற அழகிய மலர்களை வலது உள்ளங்கையில் ஏந்தி மந்திரத்தோடு நீர் வார்த்துப் பூசிக்க அவர்களோடு ஓரேஇசையில்அம்மந்திரங்களைச்சொல்லி உலக மக்கள் தாமும்வெளிநின்றுதொழுதேத்துமாறு ஊமத்தை மலரைமுடிமிசைச்சூடிய பெருமான் பிரியாதுறையும்வலிதாயம் என்ற தலத்தைத் தம் சித்தத்தில்வைத்துள்ளஅடியவர்கள் மேல்,துன்பங்களோநோய்களோவந்தடையமாட்டா.
குறிப்புரை: இது திருவலிதாயத்தைத்தியானிப்பவர்களுக்குத் துன்பம் இல்லை என்கின்றது. மந்திர புஷ்பம் இடுவதற்காகவலக்கையில் பூவை வைத்து அர்க்கியஜலத்தைச் சொரிந்து கையைமூடிஅபிமந்திரித்துப்பலா்கூடி வேத மந்திரங்களைச் சொல்லி,இறைவற்குச் சாத்துதல் மரபாதலின்அதனைப்பத்தரோடு . . . ஒத்தசொல்லி என்பதால் குறிப்பிடுகிறார். பத்தர் - பூசிக்கும்சிவனடியார்கள். பலர் - உடனிருக்கும்சிவனடியார்கள். பொலியம்மலர் - விளங்குகின்ற அழகிய மலர். புனல் தூவி - அர்க்கியஜலத்தை மந்திரத்தோடு சொரிந்து,ஒத்த சொல்லி - ஒரே ஸ்வரத்தில் வேத மந்திரங்களைச் சொல்லி அங்ஙனம் அவர்கள் திருவணுக்கன்திருவாயிலில் நின்று வேத மந்திரங்களைச்சொல்கின்றகாலத்துவழிபடும்அடியார்கள்தொழுவார்கள்ஆதலின்,அதனை உலகத்தவர் தாம் தொழுதேத்த என்பதால் விளக்குகின்றார். பிரியாதுஉறைகின்ற என்றது இறைவன் எங்கணும் பிரியாதுஉறைபவனாயினும்இங்கே அனைவர்க்கும்விளங்கித் தோன்றும் எளிமை பற்றி. அடியாரவர்மேல்என்றதில்'அவர்” அடியார் என்னும் முன்மொழிப்பொருளையேஉணர்த்தி நிற்கிறது. இதனைச் சேர்த்து அடியார்கள் பெருமை விளக்கியவாறு. இடர் - ஆதி பெளதீகம் முதலிய வினைகளால் வரும் துன்பம். நோய் - பிறவிநோய். பத்தரோடு பலரும் தூவிச் சொல்ல உலகத்தவர் தொழுது ஏத்தப் பெருமான் பிரியாதுறைகின்றவலிதாயத்தைச் சித்தம் வைத்த அடியார்மேல் இடர் நோய் அடையாஎனக்கூட்டுக.
It is at Valithaayam the Lord-God who wears on His lofty crown Datura-flowers, abides for ever. Here, thrive many devotees who hold in their palms, flowers drenched in water, and offer them prayerfully to Him, all the while, reciting in unison the Siva- mantras. It is thus that men on earth hail Him. Neither difficulties nor any illness will besiege those that contemplate devoutly on the Deity entempled here.
படையிலங்குகரமெட்டுடையான்படிறாகக்கலனேந்திக்
கடையிலங்குமனையிற்பலிகொண்டுணுங்கள்வன்னுறைகோயில்
மடையிலங்குபொழிலின்னிழல்வாய்மதுவீசும்வலிதாயம்
அடையநின்றவடியார்க்கடையாவினையல்லற்றுயர்தானே.2
படை இலங்கு கரம் எட்டு உடையான்,படிறுஆகக்கலன்ஏந்திக்
கடை இலங்கு மனையில் பலி கொண்டு உணும் கள்வன்(ன்),உறை கோயில்,
மடை இலங்கு பொழிலின்(ன்) நிழல்வாய் மது வீசும் வலிதாயம்,
அடைய நின்ற அடியார்க்குஅடையா,வினை அல்லல் - துயர்தானே.
பொருள்: படைக்கலங்களைஏந்தியஎட்டுத்திருக்கரங்களை உடைய : பெருமானும், பொய்யாகப்பலியேற்பதுபோலப்பிரமகபாலத்தைக் கையில் ஏந்தி வீடுகளின் வாயில்களிற் சென்று பலியேற்று உண்ணும் கள்வனும் ஆகிய பெருமான் உறையும்கோயிலைஉடையதும்,நீர்வரும்வழிகள்அடுத்துள்ளபொழில்களின்நீழலில்தேன்மணம்கமழ்வதுமாகியவலிதாயத்தை அடைய எண்ணும் அடியவர்களை,வினை,அல்லல்,துயர் ஆகியன வந்தடையமாட்டா.
குறிப்புரை: இது வலிதாயத்தை அடையும் அடியார்கட்குவினையில்லை என்றது. படிறாக - பொய்யாக. கலனேந்தி - பிரமகபாலத்தைத்திருக்கரத்தில் ஏந்தி;என்றது உலகம் எல்லாவற்றையும் தமக்கு உடைமையாகக் கொண்ட இறைவன் பலிகொண்டுண்டான் என்பது பொருந்தாதுஆகலின்,அதுவும் அவருக்கோர் விளையாட்டு என்பதை விளக்க. படிறாக,ஏந்தி,கொண்டு,உண்டுணும் கள்வன் எனக்கூட்டுக,அன்றியும்,கள்வனாதற்குப்படிறும்இயைபுடைமை காண்க. வினை அல்லல் துயர் - வினை ஏதுவாக வரும் அல்லலும்துன்பமும்.
Eight are Lord Civan's arms adorned with an octad of weapons. Behold this temple where dwells He, holding a begging bowl, guilefully seeking alms from every threshold of the house, and imbibes it. In Vali-thaa-yam shody gardens full of flowering plants and trees exist near water running brooks. Honey is dripping from the flowers in these gardens. The wind blowing through these gardens carry the smell of honey. To such a rich place the devotees throng to pay their homage to our Lord who is templed there. Those devotees shall be relieved of their past karmaa and they will have no trouble in their life nor any misery.
ஐயனொய்யன்னணியன்பிணியில்லவரென்றுந்தொழுதேத்தச்
செய்யன்வெய்யபடையேந்தவல்லான்றிருமாதோடுறைகோயில்
வையம்வந்துபணியப்பிணிதீர்த்துயர்கின்றவலிதாயம்
உய்யும்வண்ணந்நினைமின்னினைந்தால்வினைதீருந்நலமாமே.3
ஐயன்,நொய்யன்(ன்),அணியன்,பிணிஇல்லவர் என்றும் தொழுது ஏத்த,
செய்யன்,வெய்ய படை ஏந்த வல்லான்,திருமாதோடு உறை கோயில் -
வையம் வந்து பணியப்,பிணி தீர்த்து உயர்கின்ற - வலிதாயம்
உய்யும் வண்ணம் நினைமின்! நினைந்தால் வினை தீரும்;நலம் ஆமே.
பொருள்: வலிதாயத்தைஉய்யும் வண்ணம். நினைமின்;நினைந்தால்பிணிதீரும்,இன்பம் ஆம் என வினை முடிபு கொள்க. அழகன்,நுண்ணியன்,அருகிலிருப்பவன்,செந்நிறமேனியன்,நெடிய மழுவை ஏந்தும் ஆற்றலன்,அவன் பாசங்கள்நீங்கிய அடியவர்'எக்காலத்தும்வணங்கித்துதிக்குமாறுஉமையம்மையோடுஉறையும் கோயில் உலக மக்கள் அனைவரும் வந்து பணிய அவர்களின் பிணிகளைத் தீர்த்து உயரும் திருவலிதாயம் என்ற அத்தலத்தைநீவீர்உய்யும் வண்ணம் நினையுங்கள். நினைந்தால்வினைகள்தீரும். நலங்கள் உண்டாகும்.
குறிப்புரை: இது வலிதாயம்உலகப்பிணியைத் தீர்ப்பது. அதனை நினைத்தால்நும்பிணியும்தீரும். இன்பம் ஆம் என்கின்றது. ஐயன் - அழகியன்,நொய்யன் - அணுவினுக்குஅணுவாய் இருப்பவன், பிணியில்லவர் - அநாதியேபந்தித்துநிற்பதாகியஆணவமலக்கட்டற்றபெரியார்கள். என்றும் தொழுதேத்த - முத்தி நிலையிலும் தொழ,வெய்ய'படை - கொடியவர்களுக்குவெம்மையாய்அடியவர்களுக்குவிருப்பமாய் இருக்கும் படை. திருமாது - உமா தேவி. முடியுடைமன்னனைக் கண்டு பிடியரிசி யாசிப்பார்போலாதுவலிதாயநாதரைத்தியானித்துக்காமியப்பயனைக்கருதாதீர்கள். உய்யுநெறியைக்கேளுங்கள். அப்போது அதற்கிடையூறாகியவினைகள்நீங்கும். இன்பம் உண்டாகும். வினை நீங்குதலொன்றுமே இன்பம் என்பது சித்தாந்த முத்தி அன்றாதலின் வினை தீரும்என்பதோடுஅமையாதுநலமாமே என்று மேலும் கூறினார்.
Behold the shrine of Lord Civan who is concorporate with His consort who is Grace, ever hailed and adored by those that are freed from the malady. He is the Supreme Lord, the subtlest of the subtle, the One of easy access; He is the ruddy One who wields awesome weapons. It is Vali-thaa-yam of ever-growing glory that annuls the malady of men on earth, when they pay obeisance to Him here. So, meditate on it to gain salvation. If you contemplate thus, even thus, Karmaa will cease to be and blissful weal will be yours.
Note: The Thief: 'Thief' as stated in verses 2, 6, 8 etc. Both Saivism and Vaishnavism hail their Deities thus. It is a term of endearment and not one of blasphemy. Nevertheless it is better to refer to the Lord as One who draws devotees to Him on the sly.
Tiru Maathu: Paarvathi. Lakshmi is Thiru Mahal in Saivism.
ஒற்றையேறதுடையானடமாடியோர்பூதப்படைசூழப்
புற்றினாகமரையார்த்துழல்கின்றவெம்பெம்மான்மடவாளோ
டுற்றகோயிலுலகத்தொளிமல்கிடவுள்கும்வலிதாயம்|
பற்றிவாழும்மதுவேசரணாவதுபாடும்மடியார்க்கே.4
ஒற்றை ஏறுஅது உடையான்;நடம்ஆடி,ஓர் பூதப்படைசூழப்;
புற்றில் நாகம் அரை ஆர்த்துஉழல்கின்றஎம்பெம்மான்;மடவாளோடு
உற்ற கோயில் - உலகத்து ஒளி மல்கிடஉள்கும் - வலிதாயம்
பற்றி வாழும்(ம்) அதுவே சரண் ஆவது,பாடும்(ம்) அடியார்க்கே.
பொருள்: அடியவர்க்குவலிதாயத்தைப் பற்றி வாழ்வதே சரண் என முடிபு காண்க. ஒற்றை விடையை உடையவன். இறந்த பூதப்படைகள் சூழ்ந்து வர,புற்றில் வாழும் நாகங்களைஇடையில் கட்டி நடனமாடி,உழலும் எம்பெருமான்,உமையம்மையோடுஉறையும் கோயில் உலகத்தின்பெருமையையும்சேரத்திகழ்கின்றதிருவலிதாயம். இறைவனையாடி துதி செய்யும் அடியவர்கட்குஅத்தலத்தைப் பற்றி வாழ்வதே அரணாம்.
குறிப்புரை: இது அடியார்களாகிய உங்களுக்கு வலிதாயத்தைப் பற்றி வாழ்வதே சரண் என்கின்றது. ஒற்றையேறு - மற்ற இடபங்களோடு உடன் வைத்து எண்ணக் கூடாத அறவடிவமாகிய இடபம். புற்றில்நாகம் சாதியடை. வலிதாயம் - உலகம் முழுவதுமே ஒளி நிறைய நினைக்கப்படுவது என்பது. வாழுமது - வாழ்வது. சரண் - அடைக்கல ஸ்தானம்.
Lord Civan's mount is the peerless Bull; He, our Lord-God, wears serpent of the ant-hill; He goes about dancing, encircled by the Bhuta-Host (an army of servitors). He is concorporate with His consort, and is enshrined in Thiru-Vali-thaa-yam. The fame of the entire cosmos is collectively enjoyed by the devotees, who stay in Thiru-Vali-thaa- yam. Those devotees, who pay obeisience and praise the lord of this place by singing will reach the path way for their salvation.
புந்தியொன்றிநினைவார்வினையாயினதீரப்பொருளாய
அந்தியன்னதொருபேரொளியானமர்கோயிலயலெங்கும்
மந்திவந்துகடுவன்னொடுங்கூடிவணங்கும்வலிதாயஞ்
சிந்தியாதவவர்தம்மடும்வெந்துயர்தீர்தலெளிதன்றே.5
புந்தி ஒன்றி நினைவார்வினைஆயினதீரப்,பொருள் ஆய
அந்தி அன்னது ஒரு பேர் ஒளியான் அமர் கோயில் - அயல் எங்கும்
மந்தி வந்து கடுவ(ன்)னொடும் கூடி வணங்கும் - வலிதாயம்
சிந்தியாதஅவர் தம் அடும்வெந்துயர் தீர்தல் எளிதன்றே.
பொருள்: வலிதாயம்கோயிலைச்சிந்தியாதவர் துயர் தீர்தல் எளிதன்று என முடிபு கொள்க. மனம் ஒன்றி நினைபவர்வினைகளைத் தீர்த்து அவர்க்குத்தியானப்பொருளாய்ச்செவ்வான்அன்னபேரொளியோடு காட்சி தரும் இறைவன் எழுந்தருளியுள்ளகோயிலாய்அயலில் மந்தி ஆண்குரங்கோடு கூடி வந்து வணங்கும்சிறப்பை உடைய திருவலிதாயத்தைச்சிந்தியாதஅவர்களைத் தாக்கும் கொடிய துன்பம் தீர்தல் எளிதன்று.
குறிப்புரை: இது,பரிபாக விசேடம் கைவரப் பெறாத மந்தியும்கடுவனும்கூடவணங்கும் பொழுது, அச்சிறப்பு வாய்ந்த மக்கள் வழிபடாராயின் அவர் வினை தீராதென்பதை அறிவிக்கின்றது. புந்தியொன்றிநினைவார் - மனம் பொறிவழிச் சென்று புலன்களைப்பற்றாமல்ஒருமையாய் நின்று தியானிக்கும்அடியார்கள்,பொருளாய - தியானிக்கும்பொருளாய,அந்தியன்னதொருபேரொளியான் - அந்திக்காலத்துச்செவ்வொளி போன்ற திருமேனியுடையான். மந்தியும்கடுவனும்வணங்கும்வலிதாயம்என்றமையால்மக்களும் தம் இல்லற இன்பம் குலையாதே வந்து வணங்கும்பெற்றியர் என்பது விளக்கியவாறு. குரங்கினம் மனிதர்கள் செய்வதைப் பார்த்து அது போல் செய்யும் குணம் உடையது. மனிதர்களில்பக்தியுணர்வில்லாதவர்களும்பக்தியுணர்வுடையவர்செய்வதைப்பார்த்தாவதுஅதுபோல்செய்து பயன் பெறலாமே என்பது குறிப்பு.
Behold the shrine of Lord Civan who blazes red, like the bright evening Sun! The Supreme Lord annuls the Karma of those that contemplate on Him in single- minded devotion. It is Vali-thaa-yam to which monkeys, male as well as female, resort in strength to adore Him. Ha, it is well-nigh impossible to get freed of the onslaught of excruciating misery for those that set not their mind on this shrine.
ஊனியன்றதலையிற்பலிகொண்டுலகத்துள்ளவரேத்தக்
கானியன்றகரியின்னுரிபோர்த்துழல்கள்வன்சடைதன்மேல்
வானியன்றபிறைவைத்தவெம்மாதிமகிழும்வலிதாயந்
தேனியன்றநறுமாமலர்கொண்டுநின்றேத்தத்தெளிவாமே.6
ஊன் இயன்ற தலையில் பலி கொண்டு,உலகத்துஉள்ளவர்ஏத்த,
கான் இயன்ற கரியின்(ன்) உரி போர்த்து,உழல் கள்வன்;சடைதன்மேல்
வான் இயன்ற பிறை வைத்த எம் ஆதி;மகிழும்வலிதாயம்
தேன் இயன்ற நறுமாமலர் கொண்டு நின்று ஏத்த,தெளிவு ஆமே.
பொருள்: வலிதாயத்துஇறைவனைநறுமாமலர் கொண்டு நின்றேத்தத் தெளிவு ஆம் என வினை முடிபு கொள்க. ஊன் கழிந்த பிரமகபாலத்தில் பலி ஏற்று உலகத்தவர் பலரும் ஏத்தக் காட்டில் திரியும்களிற்று யானையின் தோலை உரித்துப் போர்த்துத்திரியும்கள்வனும்,சடையின்மேல்வானகத்துப்பிறைக்கு அடைக்கலம் அளித்துச்சூடியஎம்முதல்வனும் ஆகிய பெருமான், மகழ்ந்துறையும்திருவலிதாயத்தைத் தேன் நிறைந்த நறுமலர் கொண்டு நின்று ஏத்தச்சிவஞானம் விளையும்.
குறிப்புரை: இது வலிதாயம் தொழ ஞானம் உண்டாம்என்கின்றது. ஊனியன்ற தலை - ஊனால்அமைந்த தலை. இயன்ற - ஆக்கிக்கொள்ளப்பட்ட. பலி - பிச்சை. கான் - காடு. வானியன்ற - வானில்இலங்குகின்ற. ஆதி - முதற்பொருள்;யாவற்றிற்கும்முதலாயுள்ளவன். தெளிவு - ஞானம்.
Hailed by men on earth, Lord Civan receives alms in a skull denuded of flesh; He is mantled in the hides of the jungle-roving mammoth elephant. He, the sly One, that wears in His crest the sky borne crescent moon; He is the Alpha (the Primordial) that abides joyously in Vali-thaa-yam. One gains liberation if He is adored with large honey filled sweet smelling flowers.
கண்ணிறைந்தவிழியின்னழலால்வருகாமன்னுயிர்வீட்டிப்
பெண்ணிறைந்தவொருபான்மகிழ்வெய்தியபெம்மானுறைகோயில்
மண்ணிறைந்தபுகழ்கொண்டடியார்கள்வணங்கும்வலிதாயத்
துண்ணிறைந்தபெருமான்கழலேத்தநம்முண்மைக்கதியாமே. [
கண் நிறைந்த விழியின்அழலால்வரு காமன்(ன்) உயிர் வீட்டிப்,
பெண் நிறைந்த ஒருபால் மகிழ்வு எய்தியபெம்மான் உறை கோயில் -
மண் நிறைந்த புகழ் கொண்டு அடியார்கள்வணங்கும் - வலிதாயத்து-
உள்-நிறைந்த பெருமான் கழல் ஏத்த,நம் உண்மைக்கதிஆமே.
பொருள்: வலிதாய நாதன் கழலை ஏத்தினால் வீட்டின்பத்தை அடையலாம் என வினை முடிபு காண்க. நெற்றி விழியின்அழலால்,தேவர் ஏவலால் வந்த காமனது உயிரை அழித்துத் தனது திருமேனியின்பெண்ணிறைந்தஇடப்பாகத்தால்மகழ்வெய்திய பெருமான் உறை கோயிலாய்நிலவுலகெங்கும் நிறைந்த புகழைக் கொண்ட அடியவர்கள் வணங்கும்திருவலிதாயத்துள் நிறைந்து நிற்கும் பெருமான்திருவடிகளைவணங்கினால் வீடு பேறு அடையலாம்.
குறிப்புரை: இது ஆன்மாக்கள் என்றும் அடையத்தகும்கதியாகியவீட்டின்பத்தைவலிதாய நாதன் கழல் ஏத்த அடையலாம் என்கின்றது. கண் நிறைந்த அழல் எனக்கூட்டுக. வருகாமன் - தேவ காரியத்தை முடிப்பதற்காகபிரம்மனுடையகோபத்திற்கு ஆளாகி இறப்பதைக் காட்டிலும் சிவபெருமான் மறக்கருணையால்உய்வேன் என்று விரும்பி வந்த காமன். வீட்டி - அழித்து. உயிர் வீட்டி என்றது நித்தியமாகிய உயிரை அழித்ததன்று,அதனைத்தன்னகத்தொடுக்கி,உண்மைக்கதி - என்றும் நிலைத்த - முத்தி.
This is the shrine of Lord Civan who is happily concorporate with His consort, and who, by the fire with which His (third) eye is full to the brim did away with (Manmatan-10606) cupid that confronted Him. It is Vali-thaa-yam that is pervaded full by the presence of the Lord that is adored by the devotees whose renown fills the world. Our true and salvific beatitude lies in hailing His ankleted Feet.
கடலினஞ்சமமுதுண்டிமையோர்தொழுதேத்தநடமாடி
அடலிலங்கையரையன்வலிசெற்றருளம்மானமர்கோயில்
மடலிலங்குகமுகின்பலவின்மதுவிம்மும்வலிதாயம்
உடலிலங்குமுயிருள்ளளவுந்தொழவுள்ளத்துயர்போமே.6
கடலில் நஞ்சம்அமுதுஉண்டு,இமையோர் தொழுது ஏத்தநடம்ஆடி,
அடல் இலங்கை அரையன்வலிசெற்று அருள் அம்மான் அமர் கோயில் -
மடல் இலங்கு கமுகின்,பலவின்,மது விம்மும் - வலிதாயம்
உடல் இலங்கும் உயிர் உள்ளளவும் தொழ,உள்ளத்துயர்போமே.
திருப்பாற்கடலைக்கடைந்தபோது எழுந்த நஞ்சினைஅமுதமாக உண்டு தேவர்கள்தொழுது வாழ்த்த நடனம் ஆடி,வலிமை மிக்க இலங்கை மன்னனின்ஆற்றலைஅழித்துப்பின் அவனுக்கு நல்லருள் புரிந்த இறைவன் எழுந்தருளியகோயிலைஉடையதும்,மடல்கள் விளங்கும் கமுகு பலாமரம் ஆகியவற்றின் தேன் மிகுந்து காணப்படுவதுமாகியதிருவலிதாயத்தலத்தை நினைக்க மனத்துயர் கெடும்.
குறிப்புரை: இது வினைக்கீடாகிய உடலில் உயிருள்ள அளவும்தொழுவாரதுமனத்துன்பம்மடியும்என்கின்றது. கடல் - பாற்கடல் நஞ்சம்அமுதுண்டு என்றது நஞ்சின் கொடுமை கண்டும் அதனை அமுதாகஏற்றமையை. இலங்கையரையன் வலி செற்று என்றது அவன் வலிமை காரணமாகவே செருக்கியிருந்தானாகலின்,அவனது வலிமை கெடுத்து ஆட்கொண்டார் என்றது.
குருவருள்: சிவபூசை எடுத்துக் கொள்பவர் என் உடலில் உயிர் உள்ள அளவும்பூசையை விடாது செய்து வருவேன்” என்ற உறுதிமொழி கொடுத்தே எடுத்துக் கொள்வர். அக்கருத்தைஇப்பாடலின்இறுதிவரிகுறிப்பிடுதலைக் காணலாம்.'பழனஞ்சேர்அப்பனைஎன்கண் பொருந்தும் போழ்தத்தும் கைவிட நான் கடவேனோ'என்ற அப்பர் தேவாரமும் காண்க.
It is the shrine of the Lord Civan who danced, and was hailed and adored by the celestials, when He quaffed the oceanic venom. He did away with the valour of the King of Sri Lanka (Raavana), and then mercifully graced him. It is Vali-Thaa-yam rich in arecanut trees over which honey drips from jack trees. Heart-corroding misery will cease, so long as life in its embodied state adores Him here.
Note: Jack-tree: Artocarpus integrifolia.
பெரியமேருவரையேசிலையாமலைவுற்றாரெயின்மூன்றும்
எரியவெய்தவொருவன்னிருவர்க்கறிவொண்ணாவடிவாகும்
எரியதாகியுறவோங்கியவன்வலிதாயந்தொழுதேத்த
உரியராகவுடையார்பெரியாரெனவுள்கும்முலகோரே.9
பெரிய மேருவரையேசிலையா,மலைவுற்றார்எயில்மூன்றும்
எரிய எய்த ஒருவன்(ன்),இருவர்க்கு அறிவு ஒண்ணா வடிவு ஆகும்
எரிஅதுஆகிஉறஓங்கியவன்,வலிதாயம் தொழுது ஏத்த,
உரியர் ஆக உடையார் பெரியார் என உள்கும்உலகோரே.
பொருள்: வலிதாயத்தைவணங்குவாரைப்பெரியார் என உலகோர்உள்குவர் என முடிபு காண்க. தேவர்களோடு மாறுபட்ட திரிபுரஅசுரர்களின்கோட்டைகள்மூன்றையும்,மிகப் பெரிய மேருமலையைவில்லாகக் கொண்டு எரியும்படிஅழித்தஒருவனும்,திருமால் பிரமன் ஆகிய இருவராலும் அறிய ஒண்ணாத அழல் வடிவாய் உயர்ந்து ஓங்கியவனும் ஆகிய சிவபிரானதுதிருவலிதாயத்தைத் தொழுது ஏத்தலைத்தமக்குரியகடமையாகக் கொண்ட உலக மக்கள் பலரும் பெரியார் என நினைந்து போற்றப்படுவர்.
குறிப்புரை: இது வலிதாயத்தைவணங்குவோரேபெரியர் என உலகத்தோர்உள்குவர்என்கின்றது. பெரிய மேருவரை என்றது மலைகளில் எல்லாம் பெரியதாய்,தலைமையாய்இருத்தலின். சிலை - வில். மலைவுற்றார் - சண்டை செய்த திரிபுராதிகள். எய்த ஒருவன் - அம்பு எய்து எரித்த ஒப்பற்றவன். இருவர் -பிரமனும்திருமாலும். எட்டுக்கண்ணும்,இருகண்ணும்படைத்திருந்தும் அறிய முடியாத அக்கினிப்பிழம்பாகியஅண்ணாமலையாய் நின்ற இறைவன். தாம் தெய்வம் என்று இறுமாப்பார்இருவராலும் அறிய ஒண்ணாதவன்என்பதாம். ஏத்தஉரியராக உடையார் - பணிதலே தமக்கு உரிமையாக உடைய அடியார்கள். உலகோர் - உலகத்தவரே. உள்கும் - நினைப்பீராக.
Lord Civan is the One who with immense Mount Meru as His bow guttered with fire the three sky based hostile citadels. He rose and soared up and up as a column of fire, unknowable unto the two (Brahma and Thirumaal). Men on earth esteem (only) those as great, who hold it as their privilege to adore His Vali-Thaa-yam.
Note: The Two: Vishnu and Brahma: Adoration is a privilege. It is a gift from God.
ஆசியாரமொழியாரமண்சாக்கியரல்லாதவர்கூடி
ஏசியீரமிலராய்மொழிசெய்தவர்சொல்லைப்பொருளென்னேல்
வாசிதீரவடியார்க்கருள்செய்துவளர்ந்தான்வலிதாயம்
பேசுமார்வமுடையாரடியாரெனப்பேணும்பெரியோரே.10
ஆசி ஆரமொழியார்அமண்சாக்கியர் - அல்லாதவர் - கூடி
ஏசி,ஈரம் இலராய்,மொழிசெய்தவர்'சொல்லைப் பொருள் என்னேல்!
வாசி தீர அடியார்க்கு அருள்செய்து வளர்ந்தான்வலிதாயம்
பேசும் ஆர்வம் உடையார் அடியார் எனப்பேணும்பெரியோரே.
பொருள்: மனமாரவாழ்த்தும்இயல்பினரல்லாத சமணர் சாக்கியர் ஆகிய புறச்சமயிகள் கூடி இகழ்ந்தும் அன்பின்றியும் பேசும் சொற்களைப்பொருளாகக்கொள்ளாதீர். குற்றம் தீர அடியவர்களுக்கு அருள் செய்து புகழால் ஓங்கிய பெருமானதுவலிதாயத்தின்புகழைப்பேசும் ஆர்வம் உடையவர்களுக்கு யாம் அடியர்எனப்பெரியோர்களேபேணுவீர்களாக.
குறிப்புரை: இது,ஏற்றத்தாழ்வற அடியார் எல்லார்க்கும் அருள் செய்யும் வலிதாயத்தைப்பேசுபவர்க்குயாம் அடியர்எனப்பெரியோர்கள்பேணுவார்என்கின்றது. ஆசியாரமொழியார் - ஆசிகளைநிரம்பச்சொல்லும் மனப்பண்பற்றசமணர்கள். அல்லாதவர் - சைவத்திற்குப்புறம்பானவர்கள். ஏசி - இகழ்ந்து, ஈரம் - அன்பு,பொருள் என்னேல் - உறுதிப்பொருளாகக்கொள்ளாதே. வாசி தீர - வேற்றுமை நீங்க.இறைவன் வாசி தீரக் காசு நல்கும்வள்ளன்மைவிளங்கக்கூறியதுமாம். ஆர்வம் - அமையாத காதல். பெரியோர் ஆர்வமுடையார் அடியார் பேணுமின் என இயைத்துப் பொருள் காண்க.
Ignore the pseudo-blessing of the Buddhists and the Jains and others whose hearts are crude and who ever foregather just to denigrate others. Lord Civan always mercifully graces the devotees, leaving out of account the shades of their differences. Such is He the ever-crescent One of Vali-Thaayam! They that glorify Him - the Lord of Vali-Thaayam - with words of praise are indeed worthy of being held as true servitors. Note: The Tamil word "Vaasi" means disparity
வண்டுவைகும்மணமல்கியசோலைவளரும்வலிதாயத்
தண்டவாணனடியுள்குதலாலருண்மாலைத்தமிழாக
கண்டல்வைகுகடற்காழியுண்ஞானசம்பந்தன்றமிழ்பத்துங்
கொண்டுவைகியிசைபாடவல்லார்குளிர்வானத்துயர்வாரே.11
வண்டு வைகும் மணம் மல்கிய சோலை வளரும் வலிதாயத்து
அண்டவாணன் அடி உள்குதலால்,அருள்மாலைத்தமிழ்ஆக,
கண்டல்வைகு கடல் காழியுள்ஞானசம்பந்தன்தமிழ்பத்தும்
கொண்டு வைகி இசை பாட வல்லார்குளிர்வானத்துஉயர்வாரே.
பொருள்: வலிதாயநாதன்மீதுபாடியஇத்திருப்பதிகத்தைஇசையோடு பாடுவார் குளிர் வானத்துயர்வார் என முடிபு காண்க. வண்டுகள் மொய்க்கும் மணம் நிறைந்த சோலைகள் வளரும் திருவலிதாயத்தில்விளங்கும் அனைத்துலகநாதனின்திருவடிகளைத்தியானிப்பதால்,தாழைகள் வளரும் கடற்கரையைஅடுத்துள்ளசீகாழிப்பதியில்தோன்றியஞானசம்பந்தன் தமிழ் மாலையாகஅருளிச் செய்த இந்தத்திருப்பதிகத்தைச்சிறந்ததோத்திரமாகக் கொண்டு அமர்ந்திருந்து இசையோடு பாட வல்லார் குளிர்ந்த வானுலகவாழ்க்கையினும் உயர்வு பெறுவர்.
குறிப்புரை: இது வலிதாயநாதன்மீதுபாடியஇப்பத்துப்பாடலையும்மனத்துள் கொண்டு சிந்தித்துத்தெளிந்து இசையோடுபாடவும்வல்லவர்கள்சுவர்க்கபோகத்தினும் பெரிய போகம் எய்துவர்என்கின்றது. மல்கிய - நிறைந்த. அண்டவாணன் - அண்டங்கள் தோறும் ஒன்றாயும்உடனாயுமிருந்து வாழ்பவன். அவன் திருவடியை இடைவிடாது தியானிப்பதால் மாலை போன்ற தமிழாகக் கூறிய ஞானசம்பந்தப்பெருமானதுதமிழ்ப்பாடல்கள்பத்தையும் வல்லவர் உயர்வார் எனக்கூட்டுக. கண்டல் - தாழை. கடற்காழி - கடற்கரை நாடாகியகாழி என்பது மட்டும் அன்று. கடலில் மிதந்தகாழிஎன்றதையும்உட்கொண்டு. மாலைத்தமிழ் - ஒரு பொருள் மேல் கூறிய கோவையாகிய பாடல். வலிதாயநாதரைமனமொழிமெய்களான்வணங்கியவர்வினையறுவர்வீடுபெறுவர் என்ற ஒரு பொருளையேகூறுதலின்இது மாலைத்தமிழாயிற்று. இசை பாட வல்லார்வானத்துவைகி உயர்வார் என இயைப்பாரும்உளர். இசை பாட வல்லார்க்குவானத்தின்பம் ஒரு பொருளாகத்தோன்றாதாதலின்வானத்தினும்உயர்வர்என்பதே அமையுமாறு காண்க.
This garland of Tamil tunefully woven by Gnaana-Sambandan of littoral Kaazhi, abounding in fragrant screwpines, is the graceful outcome of his constant thinking on the Feet of the celestial Lord of Gods, who abides at Vali-Thaayam where flourish for ever, the incense-filled gardens - the habitat of chafers. They that treasure this hymn and sing it melodiously will gain ascension to the cool heavens above. Note: Gardens are productive of honey which is symbolic of bliss. Chafers are symbolic of loving devotees.
3ஆம் பதிகம் முற்றிற்று
சிவமயம்
4.திருப்புகலியும் திரு வீழிமிழலையும்
திரு-வீழி-மிழலைதிருத்தலவரலாறு:
திருவீழிமிழலை என்ற திருத்தலமானதுசோழவளநாட்டில்காவிரித்தென்கரையில்விளங்கும்61ஆவதுதேவாரத்தலம். நாகை மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ளது. மயிலாடுதுறை - திருவாரூர் இருப்புப் பாதையில் பூந்தோட்டம் இரயில் நிலையத்திற்குமேற்கே10 கி. மீ'தொலைவில் உள்ளது. திருவாரூர்,மயிலாடுதுறை,கும்பகோணம் ஆகிய ஊர்களில் இருந்து பேருந்துகளில்செல்லலாம். : இத்தலம்காத்தியாயனமகரிஷியின்யாகத்தில்தோன்றியஉமாதேவியாரைத் திருமணம் செய்து கொண்டு இறைவன் என்றும் மணக்கோலத்தோடு இருக்கும் தலம். திருமால் சக்கரம் பெறும் பொருட்டு,நாள்தோறும் ஆயிரம் தாமரைப்பூக்களைக் கொண்டு அருச்சிக்க,ஒருநாள் ஒரு மலர் குறைய,அதற்காகத் தமது தாமரை மலர்போன்ற கண்ணைப் பிடுங்கி அருச்சித்துச் சக்கரம் பெற்ற தலம். திருநாவுக்கரசு சுவாமிகளும்திருஞானசம்பந்தசுவாமிகளும் படிக்காசு பெற்றுப் பஞ்சம் போக்கிய தலம். இத்தலத்து வடக்கு வீதியில் அப்பர் சம்பந்தர்திருமடங்கள் தனித்தனியே இருக்கின்றன. மூவர்அருளியதேவாரமும்,சேந்தனார்பாடியதிருவிசைப்பாவும்,அருணகிரிநாதரின்திருப்புகழும் உள்ளன.
விமானம்:
விண்ணிழி விமானம். இது விஷ்ணுவால்ஸ்தாபிக்கப் பெற்றது. மூலத்தானத்துக்குப் பின் பார்வதி பரமேசுவரரதுதிருஉருவங்கள் உள்ளன. இங்குக்காழிக்கோலத்தைச்சம்பந்தமூர்த்திக்குஇறைவன் காட்டியருளினார்.
விழா:
சித்திரைத்திங்களில் பெருவிழா நிகழும்;மணக்கோலத் திருவிழா இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. மணவாளப் பெருமான் திருவடியில் திருமால் கண்ணைப் பறித்து அருச்சித்தஅடையாளம் இன்றும் இருக்கிறது. சுவாமி நேத்திரார்ப்பணேசர்;வீழியழகர் எனவும் வழங்கப்பெறுவர். அம்மை சுந்தரகுசாம்பிகை.
தீர்த்தம்: விஷ்ணு தீர்த்தம்
தலவிருட்சம்: வீழிச்செடி
கல்வெட்டு:
இத்தலத்தில் உள்ள கல்வெட்டுக்கள்68.வீழிமிழலை என்றே இத்தலம்வழங்கப்பெறுகின்றது. முதற்குலோத்துங்கன்காலத்துஉலகுய்யக் கொண்ட சோழவள நாட்டு வேணாட்டுப்பிரமதேயம்திருவீழிமிழலை என வழங்கியது. சுவாமி பெயர் வீழிநாதர்,வீழிமிழலைநாதர்என்பன. கோயில் பிராகாரத்தில்சிலரால்பிரதிட்டை செய்யப் பெற்ற நின்றருளிய நாயனார்,நெறிவார்குழலிநாச்சியார்,திருவேட்டீஸ்வரமுடையமகாதேவர்,திருவேகம்பமுடையார்,பார்வதீஸ்வரமுடையார், திருத்தண்டூன்றியமகாதேவர்கோயில்களும்பிரதிட்டிக்கப் பெற்ற இடங்களும்குறிக்கப்பெறுகின்றன. அம்மை,காமக் கோட்டம் உடைய நாச்சியார் என்று அழைக்கப்பெறுகிறார். திருஞானசம்பந்தருக்கும்,திருநாவுக்கரசருக்கும்,மாணிக்கவாசகருக்கும் தனித்தனி ஆலயங்கள் அமைந்து இருந்தன. முன்னிருவருடையமடங்களும் வடக்கு வீதியில் இருந்தன என்பதும் அறியக்கிடக்கின்றன.
ஆதித்தன் மகனாகியமுதற்பராந்தகன்காலத்திலிருந்து பதினொரு சோழமன்னர்களின்காலத்துக்கல்வெட்டுக்களும்,சடாவர்மன்சுந்தர பாண்டியன்,வீரபாண்டிய தேவன் கல்வெட்டுக்களும்,விஜயநகரபரம்பரையைச் சேர்ந்த விருப்பண்ண உடையார் கல்வெட்டு ஒன்றும் பெயரறியப்பெறாதனபதினான்குமாகஅறுபத்தெட்டுக்கல்வெட்டுக்கள் உள்ளன. அவற்றுள்இராஜேந்திர சோழன் திருவீழிமிழலை வடக்கு வீதியில் உள்ள திருநாவுக்கரசர்திருமடத்திற்குநிலம்விட்ட செய்தி அறியப்படுகிறது. மூன்றாம் இராஜராஜன்திருவீழிமிழலைக் கோயில் மூன்றாம் பிராகாரத்தில்திருவாதவூரா் மாணிக்கவாசகர் படிமத்தைப்பிரதிட்டை செய்தான். சடாவர்மன்சுந்தரபாண்டி தேவன் திருக்கைகொட்டித்திருப்பதியம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்தான். முதல் இராஜராஜ சோழன் காலத்தில் ஐப்பசி ஒணத் திருவிழா தரிசனத்திற்காக வரும் அன்பர்களுக்குஅன்னம் வழங்கக் காசு அளிக்கப்பட்டசெய்தியும்இவ்விழா மிகச் சிறப்பாக நடைபெற்றமையும்அறிவிக்கும். முதல் குலோத்துங்கன் தமது ஆட்சி முப்பத்துநான்காம்ஆண்டில்சண்டேஸ்வரப்பிரதிட்டைசெய்வித்து நித்திய பூசைக்கு ஏற்பாடு செய்தான். சிறந்த செய்தியொன்றுவாணியின்பாதனானஅரிகுல கேசரி விழுப்பரையனால்ஸ்ரீகால காலன் என்னும் வாள்,வீழிமிழலைநாதருக்குவழங்கப் பெற்றது. மாப்பிள்ளைச்சாமிஎனப்பெறும்மணவாளத்திருக்கோலப் பெருமான் அழகிய மணவாளப்பெருமான் என்று குறிக்கப்பெறுகின்றார். இந்த மூர்த்தியையும்இராஜேந்திரசோழஅனுக்கப்பல்லவரையா்புதுப்பித்துப்பிரதிட்டைசெய்ததாகத் தெரிகிறது. திருவாவடுதுறைஆதீனஅருளாட்சிக்கு உட்பட்டது.
பதிக வரலாறு:
திருஞானசம்பந்தப் பிள்ளையார் திருப்பேணுபெருந்துறையும்,திருத்திலதைப்பதியும்வழிபட்டுத்திருவீழிமிழலைக்குமீட்டும்எழுந்தருளி அங்கே வீற்றிருந்தார். அப்போது சீகாழிப்பதியில் உள்ள அந்தணர்கள்வீழிமிழலைக்கு வந்து பிள்ளையாரைச்சீகாழிக்குஎழுந்தருளும்படிவேண்டிக் கொள்கின்றனர். சுவாமிகள், “தோணிநாதர்கழலிறைஞ்ச,நாளைக்கு வீழிநாதன்அருள்பெற்றுப் போகலாம்: என்றருளிச் செய்திருந்தனர். அன்றிரவு சுவாமிகள்கனவில், "தோணியில் நாம் அங்கிருந்த வண்ணம் தூமறைவீழிமிழலைதன்னுள்,சேணுயர்விண்ணின்இழிந்த இந்தச்சீர்கொள்விமானத்துக்காட்டுகின்றோம்பேணும்படியால்அறிதி என்று காழிநாதர்அறிவுறுத்தினார். இதனை அறிந்த சுவாமிகள்விம்மிதமுற்று,விடிந்ததும் எழுந்து திருமஞ்சனம் முடித்து வீழிக் கோயிலில் விண்ணிழிவிமானத்துட் சென்று வணங்கினார். அங்கே திருத்தோணியிற்காணுந்திருவோலக்கத்தைக் கண்டு வியந்து வினாவுரையாக “மைம்மருபூங்கழல்” என்ற இத்திருப்பதிகத்தைப் பாடி அருளினார்கள். இத்திருப்பதிகத்தின்ஒன்பதாம்பாடலில்வீழிமிழலையில் பெருமான்'எறிமழுவோடிளமான்கையின்றி?இருந்த பண்டைய நிலையைக் கூறி மகிழ்கிறார்கள். காழிக்காட்சியாகச்சுவாமிகள்வீழியிற்கண்டதைச் சேக்கிழார் பெருமான் “மறியுற்றகையரைத்தோணிமேல் முன் வணங்கும்படி அங்கு கண்டு” என்றுகுறிப்பிடுகின்றார்கள். இதுஅறிஞர்க்குப்பெருவிருந்தாகும்.
வினாவுரை: காழியில்அம்மையப்பராகஎழுந்தருளியிருக்கும்காட்சியைவீழிமிழலையில் காட்ட, தரிசித்தசம்பந்தப் பெருமான் வினாவாக உரைத்தன. இப்பதிகம் இது முதல் பத்துத்திருப்பாடல்களும்புகலிநிலாவியபுண்ணியனே ! நீ வீழிமிழலையில் உள்ள விண்ணிழி விமானம் விரும்பியது ஏன்?என வினவுவதாக அமைந்து உள்ளன.
திருச்சிற்றம்பலம்
4. THIRU-P-PUKALI AND THIRU-VEEZHI-MIZHALAI
THIRU-VEEZHI-MIZHALAI
THE HISTORY OF THE PLACE
The sacred city of Thiru-veezhi-mizhalai is the 61st sacred site on the south bank of river Cauvery in the Chola country. It is in the Nannilam taluk of Naagappattinam district, at a distance of 10 km west of the Poonthottam railway station in the Mayilaadu-thurai Thiru-vaaroor train route. It can be reached by buses from Nannilam, Mayilaadu-thurai and Kumbakonam. In this sacred place the Lord always remains in a form as on the day he wed Umaadevi who appeared in the sacrificing fire arranged by Kaaththiyaayana Maharishi here. It is here that Thiru-Gnaana-SambandaSwamigal and Thiru-Naavuk-karasuSwamigal obtained cash (Padi-k-kaasu) from the Lord to provide relief from famine. There are separate holy mutts of St. Appar and St. Sambandar at the North Street. This temple has been given a place in Thevaaram of the three saints, Thiru-visaippaa of Sendhanaar and Arunagirinaathar's Thiru-p-pugazh.
Vimaanam
This one is said to have descended from heaven. Behind the sanctum are the Here, God bestowed His grace on holy forms of Paarvathi and Paramesvarar. Sambandhar revealing His form as in Kaazhi.
Festival
The major festival falls in the month of Chiththirai. The festival of divine wedding is celebrated especially well. God's name is Neththiraarpanesar and Veezhi- Azhagar and that of the Goddess is Sundara-kusaambikai.
Sacred Ford Vishnu-theertam
Tree of the Sacred Place Veezhi Plant
Stone Inscriptions
There are 68 inscriptions in this temple. The place is denoted as Veezhimizhalai. During the reign of Kuloththungan I, it was known as Ulagu Uyyakkonda Chola ValanaaduVenaattupPiramadeyamThiruveezhimizhalai. The Lord is known by the names of Veezhinaathar, Veezhimizhalai-naathar etc. Shrines for NinraruliaNaayanaar, Nerivaar-kuzhazhliNaachchiyaar, Thiru-vetteesvara-mudaiyaMahadevar, Thiru- vekamba-mudaiyar, Paarvathees-varamudaiyaar and ThiruththandoonriyaMahadevar, installed by various persons along the prakaara are noted along with their location. The Mother is called KaamakkottamUdaiyaNaachchiyaar. Separate shrines for Thiru- Gnaana-sambandar, Thiru-Naavuk-karasar and Maanickavaachakar had existed. It is known from the inscriptions that the maths of the first two were situated in the North Street. The 68 inscriptions include those of eleven chola kings, beginning with those from the time of Paraanthakan I, son of Aathiththan; SataavarmanSundhara- paandiyan, and Veera-paandiyath-thevan; ViruppannaUdaiyaar of Vijayanagardynasty (one inscription); and fourteen of unknown names. The news of Raajendran's endowment of land to the Thiru-Naavuk-karasarThirumadam in the North Street is noted among the inscription. Raajaraajan III installed the image of Thiru-vaadha- voorarMaanickavaachakar in the third prakaraa of the Thiru-veezhi-mizhazhai. Sataavarman Sundara Paandiyath-thevan arranged for the recital of Thirup-padhiyam after "Thirukkaikottu". Information is given that during the reign of Raajaraajan I, the Onam festival in the Tamil month of Aippasi was celebrated in a very grand manner and that funds were endowed in order to provide food to the pilgrims attending the festival. Kuloththungan I, in his 34th regnal year, had arranged to install Chandesvararand also for daily worship services. An interesting piece of news is that one 'VaaniyinPaadhanaana' Arikula Kesari gifted a sword, Sree Kaalakaalan, to VeezhimizhalaiNaathar. The Lord in the attire and mode of a bridegroom, and known as Maapillai-ch- chaami is denoted as AzhakiyaManavaala-p-perumaan. It is known that one Raajendra Chola AnukkapPallavaraiyar had renovated and reinstalled this image of the Lord. This temple is one of those within the religious administration of the Thiru-vaavadu- thuraiAadheenam.
INTRODUCTION TO THE HYMN
Having adored the Lord at Thiru-p-Pēnu-Perun-Thurai and Thiru-th-Thilatai, the child saint once again visited Thiru-Veezhi-Mizhalai. Here, he experienced a vision of God. This hymn was sung during the next day.
4.திருப்புகலியும்திருவீழிமிழைலயும்
பண் : நட்டபாடை
ராகம் : கம்பீரநாட்டை
மைம்மருபூங்குழற்கற்றைதுற்றவாணுதன்மான்விழிமங்கையோடும்
பொய்ம்மொழியாமறையோர்களேத்தப்புகலிநிலாவியபுண்ணியனே
எம்மிறையேயிமையாதழுக்கணீசவெனேசவிதென்கொல்சொல்லாய்
மெய்ம்மொழி நான்மறை யோர்மிழலைவிண்ணிழி கோயில் விரும்பியதே.1
மைம்மருபூங்குழல்கற்றைதுற்ற,வாள்நுதல்மான்விழிமங்கையோடும்,
பொய்ம்மொழியாமறையோர்கள்ஏத்த,புகலிநிலாவியபுண்ணியனே!
எம்இறையே! இமையாதமுக்கண்ஈச! என் நேச! இது என்கொல்சொல்லாய் -
மெய்ம்மொழி நான்மறை யோர்மிழலைவிண்ணிழி கோயில் விரும்பியதே?
பொருள்: கற்றையாகச்செறிந்து கருமை மருவி வளர்ந்த அழகிய கூந்தலையும்,ஒளி சேர்ந்த நுதலையும்,மான்விழி போன்ற விழியையும் உடைய உமையம்மையோடு,பொய்ப்பொருளை உயர்த்திப்பேசாதநான்மறையைப் பேசும் அந்தணர்கள்ஏத்தப்புகலியில்விளங்கும் புண்ணியம்'இரண்டனையவடிவினனே,எம் தலைவனே! இமையாதமுக்கண்களை உடைய எம்ஈசனே! என்பால் அன்பு உடையவனே! வாய்மையே பேசும் நான்மறையைஓதிய அந்தணர் வாழும் திருவீழிமிழலையில்திருமாலால்விண்ணிலிருந்துகொண்டு வந்து நிறுவப்பட்ட கோயிலில் விரும்பியுறைதற்குரிய காரணம் என்னையோ? சொல்வாயாக!
குறிப்புரை: மை மரு - கருமை சேர்ந்த. பொய்மொழியாமறையோர்கள் - என்றும் பொய்யேசொல்லாவேதியர்கள். புகலி - சீகாழி. நேச - அன்புடையவனே,மெய் மொழி நான்மறை - மெய்ப்பொருளை(இறைவனை) மொழிகின்ற நான்மறை. மங்கையோடும்நிலாவிய,ஏத்தநிலாவியபுண்ணியன்எனக்கூட்டுக.
குருவருள்:'பொய் மொழியாமறையோர்'என்று காழிஅந்தணர்களைஎதிர்மறையால்போற்றியஞானசம்பந்தர்'மெய்ம்மொழிநான்மறையோர்” என வீழிஅந்தணர்களைஉடன்பாட்டுமுகத்தால்கூறியுள்ள நுண்மை காண்க.'பொய்யர்உள்ளத்துஅணுகானே் என்ற அருணகிரிநாதர்வாக்கினையும்இதனோடு இணைத்து எண்ணுக. சீன யாத்திரீகன்யுவான்சுவாங் என்பவன் தனது யாத்திரைக்குறிப்பில் பொய்,களவு,சூது,வஞ்சகம் இல்லாதவர்கள் என இந்தியரின்சிறப்பைக்குறித்துள்ளமை இங்கு ஒப்பு நோக்கத்தக்கதாம். ஞானசம்பந்தர் காலமும் யுவான்சுவாங் காலமும் கி.பி.7ஆம் நூற்றாண்டு ஆகும்.
Hailed by the Vedic scholars who speak no falsehood, You abide at Pukali concorporate with Thy fawn-eyed consort of bright forehead and fragrant flowery locks, dense and dark. Pray tell us; what may this be? Why is it? You, my Lord God, my beloved Deity of three non-winking eyes, love to abide at the temple endowed with the heaven descended Vimaana, at Veezhi-Mizhalai where true practitioners of the four Vedas dwell?
Note: The heaven-descended vimaana was a ritual offering from Vishnu to Lord Civa abiding at VeezhiMizhalai; Vimaana: The temple tower rising above the sanctum sanctorum. This vimaana is conjured up as a flying machine in mythological literature.
கழன்மல்குபந்தொடம்மானைமுற்றில் கற்றவர் சிற்றிடைக்கன்னிமார்கள்
பொழின்மல்குகிள்ளையைச்சொற்பயிற்றும்புகலிநிலாவியபுண்ணியனே
எழின்மலரோன்சிரமேந்தியுண்டோரின்புறுசெல்வமிதென்கொல்சொல்லாய்
மிழலையுள்வேதியரேத்திவாழ்த்தவிண்ணிழி கோயில் விரும்பியதே.2
கழல் மல்கு பந்தொடுஅம்மானைமுற்றில் கற்றவர்,சிற்றிடைக்கன்னிமார்கள்
பொழில் மல்கு கிள்ளையைச் சொல் பயிற்றும்புகலிநிலாவியபுண்ணியனே!
எழில் மலரோன் சிரம் ஏந்தி உண்டு ஓர் இன்பு உறு செல்வம் இது என்கொல்சொல்லாய் -
மிழலையுள்வேதியர் ஏத்தி வாழ்த்த,விண் இழி கோயில் விரும்பியதே?
பொருள்: மகளிர்க்குப் பொருந்திய கழங்கு,பந்து,அம்மானை,முற்றில் ஆகிய விளையாட்டுக்களைக் கற்ற சிற்றிடைக்கன்னிமார்கள்,சோலைகளில்தங்கியுள்ளகிளிகட்குச்சொற்களைக்கற்றுக்கொடுத்துப்பேசச்செய்யும்திருப்புகலியில் விளங்கும் புண்ணியனே! அழகிய தாமரை மலரில் விளங்கும் பிரமனதுதலையோட்டில்பலியேற்றுண்டு இன்புறும் செல்வனே! திருவீழிமிழலையில்வேதியர்கள்போற்றித் துதிக்க விண்ணிழிகோயிலை நீ விரும்பியதற்குக் காரணம் என்ன?சொல்வாயாக!
குறிப்புரை: கழல்,பந்து,அம்மானை,முற்றில் முதலிய மகளிர் விளையாட்டுப் பொருட்கள் குறிக்கப்பெறுகின்றன. கழல் - கழற்சிக்காய். முற்றில் - முச்சி (சிறுசுளகு),கன்னியர்,சோலையில் உள்ள கிளிகட்குச் சொல் கற்றுக் கொடுக்கும் புகலி. எழில் - அழகு. மலரோன் - பிரமன். ஒர் - அசை. விண்ணிழிகோயில் - வீழிமிழலையில் உள்ள கோயிலின் பெயர்.
O Holy One of Pukali in the gardens of which slender-waisted, virgins well- versed in the games of kazhal, ball, ammanai and mutril, train their parrots to articulate in words! You hold the skull of him whose seat is the beautiful lotus flower and rejoice in receiving alms in it and consuming it. Pray tell us; what may this be? Why is it that, You desire to reside in the shrine endowed with the heaven-descended vimaana at Mizhalai, hailed and adored by those that are well-versed in the Vedas?
Note: Kazhal, the nut of Guilandinabonduce. Ammaanai: A game played by girls and women. Three balls are tossed into the air, caught and again tossed in quick succession; Mutril/Mucchi: A small winnowing fan used as a toy by girls.
கன்னியராடல்கலந்துமிக்ககந்துக வாடை கலந்துதுங்கப்
பொன்னியன்மாடநெருங்குசெல்வப்புகலிநிலாவியபுண்ணியனே
இன்னிசை யாழ்மொழியாளோர்பாகத்தெம்மிறையேயிதுவென்கொல்சொல்லாய்
மின்னியனுண்ணிடையார்மிழலைவிண்ணிழி கோயில் விரும்பியதே.3
கன்னியர் ஆடல் கலந்து,மிக்க கந்துக வாடை கலந்து,துங்கப்
பொன் இயல் மாடம் நெருங்கு செல்வப்புகலிநிலாவியபுண்ணியனே!
இன்இசையாழ்மொழியாள்ஓர்பாகத்துஎம்இறையே! இது என்கொல்சொல்லாய் -
மின்இயல் நுண் இடையார்மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?
பொருள்: கன்னிப் பெண்கள் விளையாட்டை விரும்பிப்பந்தாடுதற்குரியதெருக்களில்கூடியாட உயர்ந்த பொன்னிறமானஅழகுடன் விளங்கும் மாடங்கள் நெருங்கும் செல்வப்புகலிநிலாவியபுண்ணியனே! யாழினது இனிய இசைபோலும் மொழி பேசும் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்ட எம் தலைவனே! மின்னல் போன்ற நுண்ணிய இடையினை உடைய அழகிய மகளிர் மருவும்திருவீழிமிழலையில்விண்ணிழிவிமானத்தைநீ விரும்பியதற்குக் காரணம் என்னையோ?சொல்வாயாக!
குறிப்புரை: கன்னியர்,விளையாட்டை விரும்பிப்பந்தாடுதற்குரிய வீதியில் கலந்து மாடங்கள்நெருங்குகின்றசெல்வப்புகலிஎனக்கூட்டுக. கந்துகம் - பந்து,துங்கம் - உயர்ச்சி. மின் இயல் - மின்னலைப் போலும் இயல்பினை உடைய,யாழ் இன்னிசை மொழியாள் - யாழினது இனிய இசை போலும் மொழியினைஉடையாள். புகலியும்கன்னியர்பந்தாடுதற்குரியவீதிகள்மாடங்கள் நெருங்கும் இயல்பினது. வீழியும்மின்னியல்நுண்ணிடையாரை உடையது. அங்ஙனமாகத் தேவரீர் வீழியைவிரும்பியது ஏன்?என்றதில் நயம் கொள்க. கந்துக வாடை - பந்து விளையாடும் இடம். வாடை - சேரி, தெரு என்னும் பொருள்களை உடைய சொல். புகலி நகர் பந்தாடும்இடங்களும்பொன்னியல் மாடம் நெருங்கு வீதிகளையும் உடையது என்றவாறு.
O Holy One of opulent Pukali in whose lofty and dense and golden mansions, young girls dance and romp with Kantukam (ball)! O Lord, concorporate with your consort whose speech is sweet like the tuneful Yaazh! Pray tell us; what may this be?
Why is it that You love to abide at the shrine endowed with the heaven- descended vimaana at Mizhalai where dwell the effulgent thin damsels? Kantukam: A ball.
நாகபணந்திகழல்குன்மல்குநன்னுதன்மான்விழிமங்கையோடும்
பூகவனம்பொழில்சூழ்ந்தவந்தண்புகலிநிலாவியபுண்ணியனே
ஏகபெருந்தகையாயபெம்மானெம்மிறையேயிதுவென்கொல்சொல்லாய்
மேகமுரிஞ்செயில்சூழ்மிழலைவிண்ணிழி கோயில் விரும்பியதே.4
நாகபணம்திகழ் அல்குல் மல்கும்நன்நுதல்மான்விழிமங்கையோடும்
பூகவனம்பொழில்சூழ்ந்தஅம்தண்புகலிநிலாவியபுண்ணியனே!
ஏக பெருந்தகைஆயபெம்மான்! எம்மிறையே! இது என்கொல்சொல்லாய் -
மேகம் உரிஞ்சுஎயில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?
பொருள்: பாம்பின் படம் போன்றுதிகழும்அல்குலையும்,அழகு மல்கும்நுதலையும், மான்விழி போன்ற விழியையும் உடைய பார்வதி அம்மையுடன் வளமான கமுகஞ்சோலைகள் சூழ்ந்து விளங்கும் அழகும் தண்மையும் உடைய சீகாழிப்பதியில்விளங்கும் புண்ணியனே! தன்னொப்பார்இன்றித் தானே முதலாயபெருமானே! எம்தலைவனே! மேகங்கள் தோயும்மதில்கள்சூழ்ந்ததிருவீழிமிழலையில்விண்ணிழிவிமானக்கோயிலை விரும்பியது ஏன்?சொல்வாயாக.
குறிப்புரை: புண்ணியனே! என் இறையே! விண்ணிழிகோயில் விரும்பியது என் கொல் சொல்லாய்எனக்கூட்டுக. நாகபணம் - பாம்பின் படம். அல்குலையும்,நன்னுதலையும்,மான்விழியையும் உடைய மங்கை எனக்கூட்டுக. பூகவனம் - கமுகந்தோட்டம். புகலி - சீகாழி. ஏகபெருந்தகை - பெருந்தகுதியால்தன்னொப்பார்பிறரின்றித் தான் ஒருவனேபெருந்தகையானவன். பெம்மான் - பெருமான் என்பதன் திரிபு,உரிஞ்சு - உராய்ந்து செல்கின்ற.
O Holy One of cool and beautiful Pukali which is girt with fecund groves of areca trees. You are concorporate with the antelope eyed consort and of 'cobra hood' like waist, and whose forehead is fair to behold. Oh our Lord, the sole God! Pray tell us; what may this be? Why is it that you love to reside in the shrine endowed with heaven-descended vimaana at Mizhalai over whose walls clouds do graze?
சந்தளறேறுதடங்கொள்கொங்கைத்தையலொடுந்தளராதவாய்மைப்
புந்தியினான்மறையோர்களேத்தும்புகலிநிலாவியபுண்ணியனே
எந்தமையாளுடையீசவெம்மானெம்மிறையேயிதுவென்கொல்சொல்லாய்
வெந்தவெண்ணீறணிவார்மிழலைவிண்ணிழி கோயில் விரும்பியதே.5
சந்து அளறு ஏறு தடம் கொள் கொங்கைத்தையலொடும்,தளராதவாய்மைப்
புந்தியின்நால்மறையோர்கள் ஏத்தும்,புகலிநிலாவியபுண்ணியனே!
எம்தமைஆள்உடைஈச! எம்மான்! எம்இறையே! இது என்கொல்சொல்லாய் -
வெந்த வெண்நீறு அணிவார் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?
பொருள்: சந்தனக் குழம்பு பூசிய பெரிதான தனங்களை உடைய உமையம்மையோடு, உண்மையில்தவறாதபுத்தியினை உடைய நான்மறை அந்தணர்கள்போற்றும்புகலியில்விளங்கும் புண்ணியனே! எம்மைஅநாதியாகவேஆளாய்க்கொண்டுள்ளஈசனே! எம்தலைவனே! எமக்குக் கடவுளே! வெந்த திருவெண்ணீற்றைஅணிந்த அடியவர் வாழும் திருவீழிமிழலையுள்விண்ணிழிகோயிலை நீ விரும்புவதற்குக் காரணம் என்னையோ? சொல்வாயாக!
குறிப்புரை: தளராதவாய்மைப்புந்தியின்நான்மறையோர்கள் - வேதங்களைப்பலகாலும்பயின்றதால்உண்மையினின்றும்தளராதபுத்தியினை உடைய மறையோர்கள். சந்து அளறு - சந்தனச்சேறு. வெந்த வெண்ணீறு - இனி வேகுதற்கில்லாத - மாற்றமில்லாதுஒருபடித்தான வெண்ணீறு. எந்தமையாளுடையீச - எம்மைஅநாதியேவழிவழியாளாக் கொண்ட தலைவ. ஈசன் - செல்வமுடையான். எம்மான் - எமக்கெல்லாம் பெரியோன். இறை - தங்குதலை உடையவன். அணிவார் என்றது அடியார்களை.
Hailed, in unswerving and single-minded devotion by those that are well-versed in the four Vedas, You the Holy One abide at Pukali, concorporate with your consort whose buxom breasts are smeared with the paste of sandalwood. O God Ruler! O Lord God! Pray tell us; what may this be? Why is it that You love to abide at the shrineendowed with heaven-descended vimaana at Mizhalai where thrive devotees who are adorned with the white (baked) ashes (of cow dung)?
சங்கொளியிப்பிசுறாமகரந் தாங்கி நிரந்துதரங்கமேன்மேற்
பொங்கொலிநீர்சுமந்தோங்குசெம்மைப்புகலிநிலாவியபுண்ணியனே
எங்கள்பிரானிமையோர்கள்பெம்மானெம்மிறையேயிதுவென்கொல்சொல்லாய்
வெங்கதிர்தோய்பொழில்சூழ்மிழலைவிண்ணிழி கோயில் விரும்பியதே.6
சங்கு,ஒளி இப்பி,சுறா,மகரம்,தாங்கி நிரந்து,தரங்கம்மேல்மேல்
பொங்கு ஒலிநீர் சுமந்து ஓங்கு செம்மைப்புகலிநிலாவியபுண்ணியனே!
எங்கள் பிரான்! இமையோர்கள்பெம்மான்! எம்இறையே! இது என்கொல்சொல்லாய் -
வெங்கதிர் தோய் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?
பொருள்: ஒளி உடைய சங்கு,முத்துச்சிப்பிகள்,சுறா,மகரம் முதலிய மீன்கள்,ஆகிய இவற்றைத் தாங்கி வரிசை வரிசையாய் வரும் அலைகளால் மேலும் மேலும்பொங்கும்ஒலியோடு கூடிய கடல்நீர் சுமந்து ஓங்கு இமையோர்பெருமானே! எம் கடவுளே! கதிரவன் தோயும்செம்மையானபுகலியில் விளங்கும் புண்ணியனே! எங்கள் தலைவனே! பொழில்களாற்சூழப்பெற்றவிண்ணிழிகோயிலைவிரும்பியதற்குக் காரணம் என்னையோ? சொல்வாயாக.
குறிப்புரை: காழிக்குள்ள பெருமை கடலோரத்தில்தாழாதுஒங்கியிருப்பது என்றது முதலிரண்டடிகளான்உணர்த்தப்பெறுகின்றது. நிரந்து - வரிசையாய். தரங்கம் - அலை;கடல். பிரான் - வள்ளன்மைஉடையவன். பெம்மான் - பெருமான் என்பதன் திரிபு,வெங்கதிர் - சூரியன்.
O Lofty One, of Lofty and great Pukali the creek of which is full of swelling and roaring waters, augmented by the billows of the sea where thrive conch, ippi, sura and makara! O our Lord, the Lord God of the celestials! Pray tell us; what may this be? Why is it that you love to abide at the shrine endowed with heaven-descended vimaana at Mizhalai the groves and gardens of which are bathed in the fierce rays of the sun? Note: Ippi: Bivalvularshell-fish. The shell is used as a toy. Sura: Shark fish and its species.
காமனெரிப்பிழம்பாகநோக்கிக்காம்பனதோளியொடுங்கலந்து
பூமரு நான்முகன் போல்வரேத்தப்புகலிநிலாவியபுண்ணியனே
ஈமவனத்தெரியாட்டுகந்தவெம்பெருமானிதுவென்கொல்சொல்லாய்
வீமருதண்பொழில்சூழ்மிழலைவிண்ணிழி கோயில் விரும்பியதே.7
காமன் எரிப்பிழம்பு ஆக நோக்கிக்,காம்பு அனதோளியொடும் கலந்து,
பூ மரு நான்முகன் போல்வர்ஏத்தப்,புகலிநிலாவியபுண்ணியனே!
ஈமவனத்துஎரிஆட்டு உகந்த எம்பெருமான்! இது என்கொல்சொல்லாய் -
வீமருதண்பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?
பொருள்: மன்மதன் தீப்பிழம்பாய்எரியுமாறு கண்ணால் நோக்கிய முக்கண்ணனே! மூங்கில் போலும் தோளினை உடைய உமையம்மையோடும் கூடி,தாமரை மலரில் விளங்கும் நான்முகன் போல்வார்போற்றப்புகலியில் விளங்கும் புண்ணியனே! சுடுகாட்டில்எரியாடலைவிரும்பும்எம்பெருமானே! மலர்கள் மருவிய குளிர்ந்த பொழில்களால்சூழப்பெற்றதிருவீழிமிழலையில்விண்ணிழிகோயிலைவிரும்பியதற்குக் காரணம் என்னையோ?சொல்வாயாக.
குறிப்புரை: காமன் - விருப்பத்தை விளைவிக்குந் தெய்வம். எரிப்பிழம்பாக - தீயின் திரட்சியாக. நோக்கி என்றதால் விழித்தெரித்தமைகுறிக்கப்படுகின்றது. காம்பு - முள்ளில்லாத மூங்கில். பூ மரு - தாமரைப்பூவைச் சேர்ந்த பிரமன். இந்திரன் முதலியவர்கள்பூசித்ததலமாதலின் நான்முகன் போல்வார்ஏத்த என்றார். ஈமவனம் - சுடுகாடு;என்றது சர்வசங்காரகாலத்து எல்லாம் சுடுகாடாதலைக்குறித்தது. வீ - பூ. காமனைஎரித்தவர் ஒரு பெண்ணோடுகலந்திருக்கின்றார் என்றது,அவர் கலப்பு எம்போலியர்கலப்புப்போல்காமத்தான்விளைந்ததன்று,.உலகம் போகந்துய்க்கத் தான் போகியாயிருக்கின்றநிலையைத்தெரிவித்தவாறு.
O! Lord! You are Hailed by those who are like unto the four-faced deity (Brahmma) seated on the lotus. You are concorporate with Umaa whose arms are bamboo-like. O Holy One, that in the days of yore, gutted with fire Manmata, by Your look, You abide at Pukali. O One that delights to dance in the fire of the burning ghat! O our Lord! Pray tell us; what may this be? Why is it that You love to dwell in theshrine endowed with heaven-descended vimaana at Mizhalai girt with cool gardens rich in odoriferous flowers?
இலங்கையர்வேந்தெழில்வாய்த்ததிண்டோள்இற்றலறவ்விரலொற்றியைந்து
புலங்களைகட்டவர்போற்றவந்தண்புகலிநிலாவியபுண்ணியனே
இலங்கெரியேந்திநின்றெல்லியாடுமெம்மிறையேயிதுவென்கொல்சொல்லாய்
விலங்கலொண் மாளிகை சூழ்மிழலைவிண்ணிழி கோயில் விரும்பியதே.8
இலங்கையர்வேந்து எழில் வாய்த்த திண்தோள்இற்றுஅலறஅவ்) விரல் ஒற்றி,ஐந்து-
புலம் களைகட்டவர் போற்ற,அம்தண்புகலிநிலாவியபுண்ணியனே!
இலங்கு எரி ஏந்தி நின்று எல்லி ஆடும் எம்இறையே! இது என்கொல்சொல்லாய் -
விலங்கல்ஒண்மாளிகை சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?
பொருள்: இலங்கையர்தலைவனாகிய இராவணன் அழகிய வலிய தோள்கள்ஒடிந்து; அலறுமாறுதன்கால் விரலால் சிறிது ஊன்றியஎம்பெருமானே,ஐம்புலஇன்பங்களைக்களைந்தவர்களாகியதுறவியர் போற்ற,அழகிய : தண்மையானபுகலியில் விளங்கும் புண்ணியனே! விளங்கும்தீப்பிழம்பைக் கையில் ஏந்தி இரவில்இடுகாட்டில் ஆடும் எம்தலைவனே! மலை போன்ற ஓளி - பொருந்திய மாளிகைகளால்சூழப் பெற்ற திருவீழிமிழலையில்விண்ணிழிகோயிலைவிரும்பியதற்குக் காரணம் என்னையோ? சொல்வாயாக.
குறிப்புரை: புலன்களைவெல்லாதஇராவணனைஅலறச் செய்து,புலன்களைவென்றவர்கள் போற்ற இருக்கும் புகலியான் என நயந்தோன்றக்கூறியவாறு,இற்று - ஒடிந்து,விரல் ஒற்றி - காற்பெருவிரலால்சிறிது ஊன்றி,புலன்களைகட்டவர் - புலன்களாகியகளைகளைக்களைந்தவர். எல்லி - இரவு,விலங்கல்-மலை.
You so pressed Your toe that the mighty and stately shoulders of the King of Sri Lanka were altogether crushed. Hailed by those who has quelled their five sense organs, You, the Holy One, abide at Pukali. O our Lord, You dance in the night, holding the blazing fire on Your palm. Pray tell us this; what may this be? Why is it You love to abide in the shrine endowed with heaven-descended vimaana at Mizhalai of radiant, hill-like mansions?
செறிமுளரித்தவிசேறியாறுஞ்செற்றதில்வீற்றிருந்தானுமற்றைப்
பொறியரவத்தணையானுங்காணாப்புகலிநிலாவியபுண்ணியனே
எறிமழுவோடிளமான்கையின்றியிருந்தபிரானிதுவென்கொல்சொல்லாய்
வெறிகமழ்பூம்பொழில்சூழ்மிழலைவிண்ணிழி கோயில் விரும்பியதே.9
செறி முளரித்தவிசு ஏறி ஆறும்செற்று அதில் வீற்றிருந்தானும்,மற்றைப்
பொறி அரவத்துஅணையானும்,காணாப்புகலிநிலாவியபுண்ணியனே!
எறிமழுவோடுஇளமான் கை இன்றி இருந்த பிரான்! இது என்கொல்சொல்லாய் -
வெறி கமழ் பூம்பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?
பொருள்: மணம் செறிந்த தாமரைத்தவிசில்அறுவகைக்குற்றங்களையும் விலக்கி ஏறி அதில் வீற்றிருக்கும்நான்முகனும்,புள்ளிகளை உடைய பாம்பினைப்படுக்கையாகக் கொண்ட திருமாலும் காண இயலாதவனாய்ப்புகலியில் விளங்கும். புண்ணியனே! பகைவரைக்கொல்லும் மழுஆயுதமும்இளமானும்கையின்கண் இன்றி விளங்கும் பெருமானே! மணம் “கமழும் அழகிய பொழில்களால்சூழப்பெற்றதிருவீழிமிழலையில் உள்ள விண்ணிழிகோயிலைவிரும்பியதற்குக் காரணம் என்னையோ! சொல்வாயாக.
குறிப்புரை: முளரித்தவிசு - தாமரை ஆசனம், (பதுமாசனம் என்னும் யோகாசனமுமாம்). ஆறும்செற்றி“காமம்,குரோதம்,லோபம்,மோகம்,மதம்,மாற்சரியம் என்னும் உட்பகை ஆறையும் அழித்து,அதில் வீற்றிருந்தான் - அந்தத் தாமரையில்வீற்றிருந்த பிரமன்,பொறி அரவம் - படப்பொறிகளோடு கூடிய ஆதிசேடன். அணையான் என்றது திருமாலை.
குருவருள்:'எறிமழுவோடிள மான் கையின்றி இருந்த பிரான்” ௭ன்றதனால் தனக்குத்திருவீழிமிழலையில்அருள்செய்தபெருமான்மழுஆயுதமும்மானும் கைகளில் இல்லாமல் சீகாழித்திருத்தோணி மலையில் வீற்றிருந்தருளும்உமாமகேசுவரர் என்பதைக் குறித்தருள்கின்றார் ஞானசம்பந்தர். அங்ஙனம் உள்ள காழிக்கோலத்தைவீழியிலும்காட்டியது என்னே என்று வியந்து பாடுவதாகஇப்பாடல்அமைந்துள்ளது.
O Holy One of Pukali unknowable to the One who having quelled the vile serpent, (the six evils) sits enthroned on the densely petalled lotus, and to the One whose bed is the speckled snake, O Lord God when You did not hold in Your hand the throwing hatchet or the fawn, pray tell us; what may this be? Why is it that You love to dwell in the shrine endowed with heaven-descended vimaana at Mizhalai girt with sweet smelling and gorgeous flowery gardens?
Note: The six evils: Lust, wealth, miserliness, delusion, egoistic and enmity.
பத்தர்கணம்பணிந்தேத்தவாய்த்தபான்மையதன்றியும்பல்சமணும்
புத்தருநின்றலர்தூற்றவந்தண்புகலிநிலாவியபுண்ணியனே
எத்தவத்தோர்க்குமிலக்காய்நின்றவெம்பெருமானிதுவென்கொல்சொல்லாய்
வித்தகர்வாழ்பொழில்சூழ்மிழலைவிண்ணிழி கோயில் விரும்பியதே.10
பத்தர்கணம் பணிந்து ஏத்த வாய்த்த பான்மை அது அன்றியும்,பல்சமணும்
புத்தரும் நின்று அலர் தூற்ற,அம்தண்புகலிநிலாவியபுண்ணியனே!
எத்தவத்தோர்க்கும்இலக்குஆய் நின்ற எம்பெருமான்! இது என்கொல்சொல்லாய் -
வித்தகர் வாழ் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?
பொருள்: தன்னிடம் பத்திமையுடையோர் பணிந்து போற்றும்பான்மையோடுகூடச்சமணரும்,புத்தரும் அவர் தூற்ற,அழகிய குளிர்ந்த புகலியின்கண் விளங்கும் புண்ணியனே! எவ்வகையான தவத்தைமேற்கொண்டோரும்அடைதற்கரியஇலக்காய் நின்ற எம்பெருமானே! சதுரப்பாடுடைய அறிஞர்கள் வாழும் பொழில்கள்சூழ்ந்ததிருவீழிமிழலையில் உள்ள விண்ணிழிகோயிலைவிரும்பியதற்குக் காரணம் என்னையோ! சொல்வாயாக.
குறிப்புரை: பத்தர்கணம்ஏத்த வாய்த்த பான்மையது அன்றியும் - அடியார்கள்தோத்திரிக்கப்பொருந்தியதோடல்லாமல். புறச்சமயத்தார்அலர்தூற்றவும்நிலவியபுண்ணியன்என்க. எத்தவத்தோர்க்கும் - சரியை முதலிய நான்கு நெறிகளுள்எந்நெறியில்நிற்பவர்க்கும் - நான்கும்வழிபாட்டு நெறி. சரியை,கிரியை,யோகம் என்பவற்றால் வருவது ஞானம். இலக்காய் - அவரவர் நிலைக்கேற்பக்குறித்துணரத்தக்கபொருளாய்,வித்தகர் - சதுரப்பாடுஉடையவர்கள்;ஞானிகள்.
O Holy One of cool and beauteous Pukali who, while being hailed and adored in all humility by the devotee-throngs, is also subject to slander by the Jains and the Buddhists who are in good number. O Lord God who is the sole goal of all Tapaswis of whatever shade. Pray tell us; what may this be? Why is it that You love to get housed in the shrine endowed with heaven-descended vimaana at Mizhalai girt with gardens, where thrive competent pundits galore?
விண்ணிழி கோயில் விரும்பிமேவும்வித்தகமென்கொலிதென்றுசொல்லிப்
புண்ணிய னைப்புகலிந்நிலாவு பூங்கொடி யோடிருந்தானைப்போற்றி
நண்ணிய கீர்த்தி நலங்கொள்கேள்வி நான்மறை ஞானசம்பந்தன்சொன்ன
பண்ணியல்பாடல்வல்லார்களிந்தப்பாரொடுவிண்பரிபாலகரே.11
விண் இழி கோயில் விரும்பி மேவும் வித்தகம் என்கொல் இது!” என்று சொல்லிப்,
புண்ணியனை,புகலி(ந்) நிலாவுபூங்கொடியோடுஇருந்தானைப் போற்றி,
நண்ணிய கீர்த்தி நலம் கொள் கேள்வி நால்மறைஞானசம்பந்தன் சொன்ன
பண் இயல் பாடல் வல்லார்கள்இந்தப்பாரொடு விண் பரிபாலகரே.
பொருள்: விண்ணிழி கோயில் விரும்பிய புண்ணியனைப் போற்றி ஞானசம்பந்தன் சொன்ன பாடலைப் பாட வல்லார்கள்பாரொடுவிண்ணகத்தையும் பரிபாலனம் புரிவர். புகலிப்பதியில் விளங்கும் புண்ணியனாய்,அழகியஇளங்கொடி போன்றஉமையம்மையோடுவிளங்குவானைத்துதித்துத்திருவீழிமிழலையில்விண்ணிழிகோயிலைவிரும்பிய வித்தகம் என்னையோசொல்லாய் என்று கேட்டுப்புகழால்மிக்கவனும்நலம்தரும்நூற்கேள்விஉடையவனும் நான்மறை வல்லவனும் ஆகிய ஞானசம்பந்தன்பாடியபண்ணிறைந்தஇப்பதிகத்திருப்பாடல்களைஓதுபவர்நிலவுலகத்தோடுவிண்ணுலகத்தையும் ஆளும் சிறப்புடையவர்ஆவர்.
குறிப்புரை: நண்ணிய கீர்த்தி நலங்கொள் கேள்வி நான்மறை ஞானசம்பந்தன்எனத் தன்னை வியந்ததாமோஎனின்;அன்று,ஞானசம்பந்தப் பிள்ளையார் இறைவனருள்வழிநின்று,தன் வசமற்றுஅவனுரைதனதுரையாகப்பாடியபாடல்களாதலின் இது அவனுரை. ஆதலின் தன்னை வியந்து தான் கூறியதன்று. பாரொடு விண் என்ற ஒடுஉயர்பின்வழித்தாய்,பார் கன்மபூமியாய் வீட்டிற்கு வாயிலாகும்சிறப்புடைமையின்சேர்க்கப் பெற்றது.
Gnaana-Sambandhan of abiding renown who is endowed with the weal- conferring learning and who is well-versed in all the four Vedas, hailed the Lord thus; "Pray tell us this; what may be the speciality of this splendour that caused you to dwell in love in the shrine endowed with heaven-descended vimaana (at Mizhalai). Thus hailed is He, the Holy One at Pukali who is concorporate with His consort who is much like tendril flower. They, who can chant these tuneful hymns, will be blessed to reign in this world and in the supernal world as well.
திருச்சிற்றம்பலம்
4ஆம் பதிகம் முற்றிற்று
உ
சிவமயம்
5. கீழைத்திருக்காட்டுப் பள்ளி
திருத்தலவரலாறு:
கீழைத்திருக்காட்டுப்பள்ளி என்ற திருத்தலமானதுசோழ நாட்டில் காவிரி வடகரையில்விளங்கும்12ஆவதுதேவாரத்தலம். நாகை மாவட்டம் சீகாழி வட்டத்தில் உள்ளது. பூம்புகாருக்குவடமேற்கில்திருவெண்காட்டுக்குமேற்கே2கி.மீ. தூரத்தில் உள்ளது. திருவெண்காடு வரை பேருந்து வசதி உள்ளது. விருத்திராசுரனைக்கொன்றபழிநீங்கத் தேவேந்திரன் பூசித்துத்தேவலோக ஆட்சியை மீண்டும் பெற்ற தலம். இதனை “இமையோர் பெருமான் நுண்ணறிவால்வழிபாடு செய்யும்” என இத்தலப்பதிகம்நான்காம் பாடல் தெரிவிக்கின்றது. நண்டு பூசித்தவிநாயகர் சந்நிதி இருக்கிறது. சுவாமி பெயர் ஆரணிய சுந்தரர். இறைவி பெயர் அகிலாண்டநாயகி. தீர்த்தம் காவிரி. இத்தலத்தைப்பற்றிக் கல்வெட்டு எதுவும் இருப்பதாக அறியக்கூடவில்லை.
பதிக வரலாறு:
திருவெண்காடு முதலிய தலங்களைவணங்கிக் கொண்டு சீகாழியைவந்தடைந்தபிள்ளையார்,கீழ்பாலுள்ளதலங்களாகியமயேந்திரப்பள்ளி,குருகாவூர்முதலியவற்றையும்வணங்கத்திருவுளங்கொண்டுஎழுந்தருளியபோது,தென்கீழ்த்திசையில் உள்ள காழி நகருக்கு12 கி.மீ'தொலைவில் உள்ள கீழைத்திருக்காட்டுப்பள்ளியை அடைந்து வணங்கினார்கள். வணங்கியசுவாமிகள் “செய்யருகே” என்னும் இப்பதிகத்தைஅருளிச் செய்தார்கள்.
5. KEEZHAI-TH-THIRU-K-KAATU-P-PALLI
THE HISTORY OF THE PLACE
The sacred city of Keezhai-th-thiru-k-kaatu-p-palli is the 12th sacred Thevaaram site on the north bank of river Cauvery in the Chola country. It is in the Seekaazhi taluk of Naaga-p-pattinam district. It is at a distance of 2 km west of Thiru-ven-kaadu and to the north-west of Poompukaar. Buses ply upto Thiru-ven-kaadu. This is the place where Devendiran offered worship in order to regain the lordship of Devalokam by ridding himself of the sin of having killed Viruth-thira-suran. This is revealed by the 4thverse of the temple chronicle (Thalappadikam) as 'imaiyorperumaannunnarivaalvazhipaaduseiyyum ...". There is a shrine for the Vinaayakar who was worshipped by a crab. The Lord's name is Aaraniya Sundarar and that of the Goddess is AkilaandaNaayaki. The holy ford is Cauvery. There is no evidence of any inscriptions about this temple.
INTRODUCTION TO THE HYMN
The young saint returned to Seekaazhi after his pilgrimage to Thiru-Venn-Kaadu and other holy places. A few days passed, He was again impelled to undertake another pilgrimage. He visited Mahendra-p-Palli, Kurukaavoor and arrived at Keezhai-th- Thiru-k-Kaatu-p-Palli where he sang the following hymn. The verse number 2 in this hymn is not available.
திருச்சிற்றம்பலம்
5.கீழைத்திருக்காட்டுப் பள்ளி
பண் : நட்டபாடை
ராகம் : கம்பீரநாட்டை
செய்யருகேபுனல்பாயவோங்கிச்செங்கயல்பாயச்சிலமலர்த்தேன்
கையருகேகனிவாழையீன்றுகானலெல்லாங்கமழ்காட்டுப்பள்ளிப்,
பையருகேயழல்வாயவைவாய்ப்பாம்பணையான்பணைத்தோளிபாகம்
மெய்யருகேயுடையானையுள்கிவிண்டவரேறுவர்மேலுலகே.1
செய் அருகே புனல் பாய,ஒங்கிச்செங்கயல்பாய,சில மலர்த்தேன் -
கை அருகே கனி வாழை ஈன்று - கானல் எலாம் கமழ் காட்டுப்பள்ளிப்,
பை அருகே அழல் வாயஐவாய்ப்பாம்புஅணையான்பணைத்தோளி பாகம்
மெய் அருகே உடையானைஉள்கி,விண்டவர்ஏறுவர்,மேல்உலகே.
பொருள்: வயலின்கண் நீர் பாய,அதனால் களித்தசெங்கயல் மீன்கள் துள்ள,துள்ளியமீன்கள்,வயலின்மீதுதொங்கிக் கொண்டு இருந்த பூங்கொம்புகள்மீது உரச,அதனால் சில மலர்களில் இருந்து தேன் வடிந்துகொண்டிருக்கின்றது. கைக்கெட்டும் தூரத்தில் வாழை மரங்கள் கனிகளைஈன்று பழங்கள் வெடித்து முதிர்ந்துள்ளன. இதனால் காடெல்லாம்தேன் மணமும் வாழைப்பழ மணமும் திருக்காட்டுப்பள்ளியுள்கமழ்ந்து கொண்டு இருந்தன. நச்சுப்பையினருகேஅழலும் தன்மை உடைய ஐந்து வாயை உடைய ஆதிசேடனைஅணையாகக் கொண்ட திருமாலையும்,உமையம்மையையும்பாகமாகக் கொண்டு (அரியர்த்தர்,அர்த்தநாரீசுரம்) விளங்கும் இறைவன்மீதுபற்றுக் கொண்டு ஏனைய பற்றுக்களைவிட்டவர்,வீட்டுலகைஅடைவர்.
குறிப்புரை: இது,ஆரணியசுந்தரரைத்தியானித்துநெகிழ்ந்தமனத்தடியவர்கள்மேலுலகடைவர்என்கின்றது. செய் - வயல். வயலருகேநீர்பாய (அதனாற்களித்த) கயல்மீன்ஓங்கிப்பாய,சிலவாகியமலர்களில் இருந்து தேன்,காடெல்லாம்கமழும்காட்டுப்பள்ளி எனவும்,கைக்கெட்டும் தூரத்தில் வாழை, கனிகளைஈன்றுகமழ்கின்றகாட்டுப்பள்ளி எனவும் கூட்டிப் பொருள் கொள்க. திருமால் பாம்பணைமேலிருந்துஆனந்தத்தாண்டவத்தைத்தியானித்து மனம் நெகிழ்ந்தார். ஆதலின்,அவ்வரலாற்றைஉட்கொண்டு கூறியதாம். பணை - மூங்கில். மெய்யருகே - மெய்யில். அரியர்த்தர் - ஆரணிய சுந்தரர்; இத்தலத்து இறைவனின் பெயர்.
In the town Keezhai-th-Thiru-k-Kaatu-p-Palli, several channels are running, carrying water in plenty to the fields. In the gushing waters of these channels, happy Kaajat fish leap, one over the other. While leaping thus, they dash against flowers that are hanging in their branches just above the water, resulting in the dripping of honey from the flowers. Very close by, plantain trees are many in the garden. Fully ripe and busted bunches of banana fruits are hanging in these plantain trees. The pleasant aroma from the dripping honey and from the plantain fruits fill up the air in Kaattu-p-palli. Such fertile place is Kaattu-p-palli. Thirumaal rests over the five-hooded snake called Aadhi-seshan whose fiery fangs are situated close to its venomous sacs. This Thirumaal is also concorporated with Lord Civa similar toUmaa Devi whose arms are like bamboo. This posture is known as (Ariyarthar-Artha-Naareeswarar). Those who emulate Lord Civan in these forms templed in Kaattu-p- palli, giving up all else will for sure gain ascension.
Note: Lord Civan's Sakthi is energy personified as Umaa Devi (and also in many other names) is only ONE entity. She occupies Lord Civan's frame on His left side. This posture is known as (Artha-Naareeswarar). However, when the sakthi (energy) goes into action, the sakthi is taking four different forms as under.
1. During Pleasure - Bhavaani பவானி
2. Protection mode- Thirumaal
3. In angry mode -Kaali காளி
4. In war - Durgai
Kayal: Carp fish; The snake: Aadhi-Seshaa, the thousand hooded serpent.
திரைகளெல்லாமலருஞ்சுமந்துசெழுமணிமுத்தொடுபொன்வரன்றிக்
கரைகளெல்லாமணிசேர்ந்துரிஞ்சிக் காவிரி கால்பொருகாட்டுப்பள்ளி
உரைகளெல்லாமுணா்வெய்திநல்லவுத்தமராயுயர்ந்தாருலகில்
அரவமெல்லாமரையார்த்தசெல்வர்க்காட்செய வல்ல லறுக்கலாமே.3
திரைகள் எல்லா மலரும் சுமந்து,செழுமணிமுத்தொடு பொன் வரன்றிக்,
கரைகள் எல்லாம் அணி சேர்ந்து உரிஞ்சிக்,காவிரி கால் பொரு காட்டுப்பள்ளி,
உரைகள் எல்லாம் உணர்வு எய்தி நல்ல உத்தமராய் உயர்ந்தார் உலகில்,
அரவம் எல்லாம் அரை ஆர்த்தசெல்வர்க்குஆட்செய,அல்லல் அறுக்கல்ஆமே.
பொருள்: காவிரியின்வாய்க்கால்கள் எல்லா மலர்களையும்சுமந்தும்,செழுமையாக மணிகள்முத்துக்கள் பொன் ஆகியவற்றை வாரிக்கொண்டும் வந்து இருகரைகளிலும் அழகு பொருந்த உராய்ந்து வளம் சேர்க்கும் ஊர் திருக்காட்டுப் பள்ளி ஆகும். பாம்புகளைஇடையில் கட்டியசெல்வராய்எழுந்தருளியிருக்கும்சிவபிரானுக்கு,வேதம் முதலான மேம்பட்ட உரைகள்யாவற்றையும்உணர்ந்த நல்ல உத்தமராய்த் தொண்டு செய்யின்,அல்லல் அறுக்கலாம்.
குறிப்புரை: இது இறைவற்குஆட்செய்யின் அல்லல் அறுக்கலாம் என்கிறது. காவிரி கால் திரைகள்எல்லா மலருஞ் சுமந்து,மணி முத்தொடுபொன்வரன்றி,கரைகள் எல்லாம் அணிசேர்ந்துஉரிஞ்சிபொருகாட்டுப்பள்ளி என இயைத்து,காவிரியாற்றின்வாய்க்கால்களின் அலைகள் எல்லா வகையான மலரையும் சுமந்து மணிகளையும்முத்துக்களையும்பொன்னையும்வாரிக்கொண்டு,இரு கரைகளிலும்அழகு பொருந்த மோதிப்பொருதற்குஇடமாகியகாட்டுப்பள்ளிஎனப் பொருள் கொள்க. உரைகள்எல்லாம் உணர்வெய்தி - வேதங்கள்யாவற்றையும் உணர்ந்து,நல்ல உத்தமராய் உலகில் உயர்ந்தார் செல்வர்க்குஆட்செய அல்லல் அறுக்கலாம் எனக்கூட்டுக.
The wavelets of the channels of the Cauvery carry with them flowers of many kinds, lustrous gems, pearls and gold and leaves them upon the entire stretches of the banks, thus adoring them. Such fertile place is Kaatu-p-Palli. They who have grown lofty and noble in this world by their conscious imbibation of all the scriptures, indeed, eliminate their troubles, if they serve the opulent ONE - Lord Civan who wears serpent in His waist.
தோலுடையான்வண்ணப்போர்வையினான்சுண்ண வெண்ணீறு துதைந்திலங்கு
நூலுடையானிமையோர்பெருமான்நுண்ணறிவால்வழிபாடுசெய்யுங்
காலுடையான்கரிதாயகண்டன்காதலிக்கப்படுங்காட்டுப்பள்ளி
மேலுடையானிமையாதமுக்கண்மின்னிடையாளொடும்வேண்டினானே.4
தோல் உடையான்;வண்ணப்போர்வையினான்;சுண்ணவெண் நீறு துதைந்து,இலங்கு
நூல் உடையான்;இமையோர் பெருமான்;நுண் அறிவால் வழிபாடு செய்யும்
கால் உடையான்;கரிதுஆயகண்டன்;காதலிக்கப்படும்காட்டுப்பள்ளி -
மேல் உடையான்,இமையாதமுக்கண்; -மின்இடையாளொடும்வேண்டினானே.
பொருள்: புலித்தோலைஆடையாகஉடுத்தவன். யானைத்தோலை அழகிய போர்வையாகப்போர்த்தவன். திருவெண்ணீறாகியசுண்ணத்தில்செறிந்து விளங்கும் பூணூலைமார்பகத்தே உடையவன். தேவர்கட்குத் தலைவன். பதிஞானத்தாலே அன்பர்கள் வழிபாடு செய்யும் திருவடிகளை உடையவன். கரிய கண்டத்தை உடையவன். பலராலும் விரும்பப் பெறும் திருக்காட்டுப் பள்ளியில் இமையாத மூன்றாவது கண்ணை நெற்றியில் உடைய அவ்விறைவன் மின்னல் போன்ற இடையினை உடைய உமையம்மையோடு விரும்பி எழுந்தருளியிருந்தான்.
குறிப்புரை: இது இறைவன் உமையாளோடுகாட்டுப்பள்ளியை விரும்பி மேவினான்என்கின்றது. வண்ணப் போர்வை - அழகிய போர்வை. துதைந்து - செறிந்து,நுண்ணறிவால் வழிபாடு செய்யும்காலுடையான் - சிவஞானத்தால்அருளேவடிவாகக் கொண்டு வழிபடும்திருவடியை உடையவன். நுண்ணறிவால்வழிபடாதவர்க்குத் திருவடி அருளாகக்காட்சியளிக்காது என்பது வெளிப்படை. நுண்ணறிவு - மெய்யறிவு.
He wears the tiger skin in His waist. He covers His body with the lovely elephant's skin. He smears with the bright and white ash in His body; He wears the sacred thread; He is the Lord of celestials; It is through sublime and subtle Gnosis His Feet are to be adored, His throat is dark-blue; He presides over Kaatu-p-Palli which is His beloved shrine. Three are His non-winking eyes; He is happily housed in Kaattu-p- palli with Uma whose waist is as lean as lightning.
சலசல சந்தகிலோடுமுந்திச் சந்தன மேகரைசார்த்தியெங்கும்
பலபலவாய்த்தலையார்த்துமண்டிப்பாய்ந்திழிகாவிரிப்பாங்கரின்வாய்க்
கலகல நின்றதிருங்கழலான்காதலிக்கப்படுங்காட்டுப்பள்ளிச்
சொலவலதொண்டர்களேத்தநின்றசூலம்வல்லான்கழல்சொல்லுவோமே.5
சலசல சந்து அகிலோடும்உந்திச்,சந்தனமே கரை சார்த்தி,எங்கும்
பலபலவாய்த்தலைஆர்த்துமண்டிப்,பாய்ந்து இழிகாவிரிப்பாங்கரின்வாய்க்,
கலகல நின்று அதிரும்கழலான்காதலிக்கப்படும்காட்டுப்பள்ளிச் -
சொலவல தொண்டர்கள் ஏத்த நின்ற - சூலம்வல்லான் கழல் சொல்லுவோமே!
பொருள்: காவிரி நதி சலசல என்னும் ஒலிக்குறிப்போடு சந்தனம் அகில் முதலியவற்றை அடித்து வந்து,சந்தனத்தைக்கரையில்சேர்த்துப் பற்பல வாய்க்கால்களின் தலைப்பில் ஆரவாரித்து ஓடிப் பாய்ந்து வயல்களில் இழிந்து திருக்காட்டுப் பள்ளிக்கு வளம் சேர்க்கின்றது. கலகல என்னும் ஓசையோடுஅதிரும்கழல்களைஅணிந்தஇறைவனால்விரும்பப்படும்திருக்காட்டுப்பள்ளியை அடைந்து இறைவனதுபொருள்சேர்புகழ்பேசும்தொண்டர்களால்துதிக்கப்படும்அச்சூலபாணியின்திருவடிப். பெருமையை நாமும் கூறித்தோத்திரிப்போம்.
குறிப்புரை: இது காட்டுப்பள்ளியுள் தொண்டர்கள் துதிக்க இருந்த பெருமான் கழல்களைத்தோத்திரிப்போம்என்கின்றது. சலசல கலகல - ஒலிக்குறிப்பு. சந்து - சந்தனம்,உந்தி - செலுத்தி. வாய்த்தலை - வாய்க்காலின்தலைப்புக்கள். ஆர்த்து - ஒலித்து. கழலான் - கழலானாய சிவபெருமான்.
Gurgling runs the Cauvery river carrying with it sandalwood and eaglewood and shoring them up on the banks; The river flows into its many, many channels. Close to the Cauvery river is Kaatu-p-Palli; where Lord Civan's beloved shrine is situated. Here, He dances with His anklets, jingling and tinkling; Joining the devotees who know how to hail Him, Let us laud the ankleted feet of the Trident Holder, Lord Civan.
தளையவிழ்தண்ணிறநீலநெய்தறாமரைசெங்கழுநீருமெல்லாங்
களையவிழுங்குழலார்கடியக்காதலிக்கப்படுங்காட்டுப்பள்ளித்
துளைபயிலுங்குழலியாழ்முரலத்துன்னியவின்னிசையாற்றுதைந்த
அளைபயில்பாம்பரையார்த்தசெல்வர்க்காட்செய வல்ல லறுக்கலாமே.6
தளை அவிழ் தண் நிற நீலம்,நெய்தல்,தாமரை,செங்கழுநீரும்,எல்லாம்
களை அவிழும் குழலார்கடியக்,காதலிக்கப்படும்காட்டுப்பள்ளித்,
துளை பயிலும் குழல்,யாழ்,முரலத்,துன்னிய இன் இசையால் - துதைந்த
அளை பயில் பாம்பு அரை ஆர்த்தசெல்வர்க்குஆட்செய,அல்லல் அறுக்கலாமே.
பொருள்: திருக்காட்டுப்பள்ளியில் வாழ்கின்ற உழத்தியர் தங்கள் தலைமுடிகள்அவிழும்படியாகவயல்களில்செழித்துள்ளநீலம்,நெய்தல்,செங்கழுநீர்,தாமரை முதலிய மலர்களைக்களைந்துஎறிகின்றனர். அத்துணை வளம் உடைய களர்திருக்காட்டுப்பள்ளி. இவ்வூர்எல்லாராலும்விரும்பப்படுவது. புல்லாங்குழல் போன்ற துளைக்கருவிகளில்பயிலுகின்றவர்கள்எழுப்புகின்ற ஒலியும்,யாழ்வாசிப்போர்எழுப்புகின்றஇன்னிசையும்இவ்வூரில் இடைவிடாது ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. பாம்புகள் தங்கள் வளையினின்றும்வெளிவராதவைகள். அப்பேர்ப்பட்ட பாம்புகளைத் தன் இடையில் கட்டி எழுந்தருளியசெல்வராகியசிவபெருமானுக்குஅடியவர்களாய்விளங்கித் தொண்டு செய்யுங்கள். உங்கள் துன்பங்கள்நீங்கும்.
குறிப்புரை: இதுவும் ஆரண்யசுந்தரர்க்குஆட்செய்தால் அல்லல் அறுக்கலாம் என்கிறது. தளை - இதழ்களின்கட்டு. அவிழுங்கூந்தலையுடையகடைசியர்கள்களையாகநீலம்முதலாயமலர்களையும்பிடுங்கி எறிகின்றார்கள். குழலார்களைகடியஎனக்கூட்டுக. துதைந்தஆர்த்தசெல்வர்எனக்கூட்டுக.
In Kaatu-p-Palli - His beloved city, farm wives while removing weeds from the fields, throw them away now and then. Similarly they throw away cool and bright and blooming blue lilies, neytal, lotuses and sengkazhunir and other flowers which come out of their heads. Also the sweet music from hollowed flutes as well as yaazh, wafts around the city. Such fertile and enjoyable place is Kaattu-p-palli. Lord Civan ties a snake round His waist, though the snake's permanent habitat is the hole in the ground. Those who serve Lord Ciyan in this place will be relieved of their misery.
Note: Neytal: Nymphaea alba; Senkazhuneer: The red lilly.
முடிகையினாற்றொடுமோட்டுழவர்முன்கைத்தருக்கைக்கரும்பின்கட்டிக்
கடிகையினாலெறிகாட்டுப்பள்ளிகாதல்செய்தான்கரிதாயகண்டன்
பொடியணிமேனியினானையுள்கிப்போதொடுநீர்சுமந்தேத்திமுன்னின்
றடிகையினாற்றொழவல்லதொண்டரருவினையைத்துரந்தாட்செய்வாரே. [
முடி கையினால் - தொடும்மோட்டு உழவர் முன்கைத்தருக்கைக்கரும்புஇன்கட்டிக்
கடிகையினால் எறி காட்டுப்பள்ளி,காதல்செய்தான்கரிதுஆயகண்டன்,
பொடி அணி மேனியினானைஉள்கிப்,போதொடு நீர் சுமந்து ஏத்தி,முன்நின்று,
அடி கையினால் - தொழ வல்ல தொண்டர் அருவினையைத்துரந்துஆட்செய்வாரே.
பொருள்: திருக்காட்டுப் பள்ளியில் வாழ்கின்ற வலிய உழத்தியர்கள்நெற்பயிர்களின்நாற்றைப் பிடுங்கி எடுக்கும் வேலை செய்யும் பொழுது,வயல் சேற்றில் இருக்கும் நுண் திருமிகளால் அவர்கள் கைகளின்மணிக்கட்டுகளில்இனவு (ஊரல்) ஏற்படுகின்றது. அந்தத் தினவைப்போக்குவதற்குக்கரும்பின் ௬வையுடைய வெல்லக்கட்டியை தங்கள் மணிக்கட்டில் வைத்து உடைத்து நசுக்கி விடுகிறார்கள். தினவு நீங்கி விடுகிறது. இத்துணை வளம் பொருந்திய திருக்காட்டுப்பள்ளியை விரும்பி உறைகின்றான் சிவபெருமான்.தேவர்களும்அசுரர்களும்திருப்பாற்கடலைகடைந்த பொழுது,அக்கடலில் இருந்து வெளிப்போந்தது,ஆலகால விஷம். அந்த விஷத்திலிருந்துவீசியநச்சுக் காற்று உலகனைத்தையும் அழித்து விடும் தன்மையில்விளங்கியது. அந்த விஷத்தை எடுத்து சிவபெருமான் உண்டான். அதனால் அவனது கழுத்து கருநிறமாகமாறியது. அவன் திருமேனியில் திருநீறு அணிந்துள்ளான். இப்பெருமானை நினைந்து அபிடேக நீர் மலர்கள் ஆகியவற்றை எடுத்துச் சென்று அவன் முன் நின்று துதித்துஅவன்திருவடிகளைக் கையால்தொழும் திறம் உடைய தொண்டர்கள் தமது அரிய வினைகள்நீங்கப் பெற்று அவனுக்குஅடிமை செய்து வாழ்வர்.
குறிப்புரை: இது பூவும் நீரும் கொண்டு பூசித்துத்தொழும் தொண்டர்கள் வினை நீங்கி ஆட்செய்வர்என்கின்றது. முடி - நாற்று முடி,தொடும்பறிக்கின்ற. மோட்டுழவர் - வலிய உழவர்கள். நெல் வயல்களில்உள்ளசேற்றில் நின்று கொண்டு உழத்தியர்களைகளைபிடுங்குங்காலை: அங்குள்ள நுண்கிருமிகள்தன்வாயிலிருந்து வெளிப்படும் திரவத்தை மணிக்கட்டுகளில்உமிழ்ந்து கடிக்கின்றன. அதனால் தினவு ஏற்படுகின்றது. அருவினை-இறைவனருள்ஒன்றாலன்றி வேறு எவற்றாலும் நீங்காத ஆகாமிய,சஞ்சிதவினைகள். எனவே,இறைவற்குஆட்செய்யவும்வினை நீக்கம் வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.
In Kaatu-p-Palli, His beloved town, the strong farmers who pluck the weedlings, get rid of the itching of their wrists by breaking and squashing small pieces of jaggery in their wrists. The blue-throated Lord, annulling the mighty karma will rule over them who constantly contemplate on His sacred and ash-smeared person. The devotees carry with them flowers and water, hail Him standing in his presence and adore His Feet with their hands.
Note: Itching: The Tamil word '' is thus translated. It is a type of paraethesia. The farmers while removing the weeds, find acidic bacteria bite their wrists causing itching sensation in their hands. To get rid of the itching sensation the farmers break small pieces of jaggery and squash it well on their wrists. The calcium content in the jaggery which is alkaline in nature instantaneously neutralises the acidity, relieving the itching sensation.
பிறையுடையான்பெரியோர்கள்பெம்மான்பெய்கழனாடொறும்பேணியேத்த
மறையுடையான்மழுவாளுடையான் .வார்தருமால்கடனஞ்சமுண்ட
கறையுடையான்கனலாடுகண்ணாற்காமனைக்காய்ந்தவன்காட்டுப்பள்ளிக்
குறையுடையான்குறட்பூதச்செல்வன்குரைகழலேகைகள்கூப்பினோமே.8
பிறை உடையான்,பெரியோர்கள்பெம்மான்,பெய் கழல் நாள்தொறும் பேணி ஏத்த
மறை உடையான்,மழுவாள் உடையான்,வார் தரு மால்கடல்நஞ்சம்உண்ட
கறை உடையான்,கனல் ஆடு கண்ணால் காமனைக்காய்ந்தவன்,காட்டுப்பள்ளிக்
குறை உடையான்,குறள்பூதச்செல்வன்,குரைகழலே கைகள் கூப்பினோமே!
பொருள்: தலையில் பிறையைஅணிந்தவனும்,பெரியோர்கள்தலைவனும்,வேதங்களைஅருளியவனும்,;மழுவையும்வாளையும்உடையவனும்,நீண்ட கரிய கடலிடையேதோன்றியநஞ்சினைஉண்டகறைக்கண்டனும்,கலை சேர்ந்த நுதல்விழியால்காமனைக்காய்ந்தவனும்,அன்பர்களின்குறைகளைக்கேட்டறிபவனும்,குறட்பூதச்செல்வனுமாகியதிருக்காட்டுப்பன்ளியில் உள்ள இறைவன் திருவடிகளைநான்தோறும் விரும்பி ஏத்தி அத்திருவடிகளையேகைகூப்பினோம்.
குறிப்புரை: இது ஆரண்யசுந்தரரின்அடிகளைக் கைகூப்பி வணங்கினோம் என்கிறது;பிறை - முதற்பிறை. வார்தரு - ஒழுகுகின்ற,மால்கடல் - மால் துயிலுகின்றகடலாகிய பாற்கடல். கறை - களங்கம். கனலாடு கண்ணால் - நெற்றிக்கண்ணால். காட்டுப் பள்ளிக்குறையுடையான் - காட்டுப் பள்ளியில் நேர்த்திக் குறையை நிறைவித்தலை உடையவன். குறள் - குறுகிய.
He wears a crescent moon on His crest; He is the Lord of the great ones as well as the Vedas. His ankleted Feet are to be hailed in daily worship. He wields an axe and a sword; He quaffed the venom that rose up from the vast sea and his neck bears its mark. He smote Manmata with a look of His fire-abiding eye. He is the Lord of Kaatu- p-Palli who approves of the performance of vows (undertaken in his name), He is the opulent Lord of the diminutive Bhoodha-Hosts. Forever, we fold our palms in adoration of His feet adorned with resounding anklets.
Note: Ankleted Feet: The Tamil original refers to 'peykazhal'. These are anklets containing grains of gold, pearls or gems.
செற்றவர்தம்மரணம்மவற்றைச்செவ்வழல்வாயெரிபூட்டிநின்றுங்
கற்றவர் தாந்தொழுதேத்தநின்றான்காதலிக்கப்படுங்காட்டுப்பள்ளி
உற்றவர்தாமுணர்வெய்திநல்லவும்பருள்ளார்தொழுதேத்தநின்ற
பெற்றமரும்பெருமானையல்லாற் பேசுவது மற்றொர்பேச்சிலோமே.9
செற்றவர்தம்அரணம்(ம்) அவற்றைச்செவ்அழல்வாய்எரியூட்டி,நின்றும்
கற்றவர் தாம் தொழுது ஏத்த நின்றான் காதலிக்கப்படும்காட்டுப்பள்ளி
உற்றவர்தாம் உணர்வு எய்தி,நல்ல உம்பர் உள்ளார் தொழுது ஏத்த நின்ற
பெற்றமரும்பெருமானைஅல்லால்,பேசுவதும்மற்று ஓர் பேச்சு இலோமே.
பொருள்: தேவர்க்குப்பகைவராயதிரிபுரத்துஅசுரர்களுடைய மூன்று கோட்டைகளையும்செவ்வழலால்எரியூட்டிஅழித்துப்பெருவீரத்தோடுவிளங்குகின்றான் சிவபெருமான்.அவன் கற்றவர்களால் தொழுது ஏத்தி வணங்கப்படுவதால் மேம்பட்டு விளங்குகின்றான்.அவன் விரும்பிக் காதலித்து அருளாட்சிசெய்துவரும் ஊர் திருக்காட்டுப்பள்ளி ஆகும். மெய்யுணர்வு பெற்ற தேவர்கள் பலரும் இங்கு வந்து இறைவனைத் தொழுது ஏத்தி வணங்குகிறார்கள். அவன் அறவிடை மீது ஏறி அமர்ந்திருப்பவன். அப்பெருமானுடையபுகழை அன்றி மற்றோர்பேச்சுப் பேசுவதில்லை.
குறிப்புரை: இது நாம் ஆரண்யசுந்தரரைப்பற்றியன்றிவேறொன்றையும்பற்றிப்பேசோம்என்கின்றது. செற்றவர் - பகைவர். அரணம் - கோட்டை. உற்றவர்தாம் - மலபரிபாகம் உற்ற ஆன்மாக்கள். உணர்வு - மெய்ஞ்ஞானம். பெற்றம்அமரும் - இடபத்தைஊர்கின்ற;பெற்றமரும் என அம் ஈறு கெட்டது. அவனையன்றிப் பேசும் பேச்சு மற்றொன்றிலாமையால்மற்றொர்பேச்சிலோம் என்றார். பெற்றம் - இடபம்; அறவிடை,
He destroyed with fire the (three) citadels of the recalcitrant (asuras). He is hailed and adored by the learned in Kaatu-p-Palli which is dear to Him; The bull is the riding mount for Lord Civan. We, the Devas fully grasped in Divine knowledge come over here and worship Him. We do not speak on anything other than the glory of Lord Civan of Kaattu-p-paalli.
ஒண்டுவரார்துகிலாடைமெய்போர்த்துச்சிகொளாமையுண்டேயுரைக்குங்
குண்டர்களோடரைக்கூறையில்லார்கூறுவதாங்குணமல்லகண்டீர்
அண்டமறையவன்மாலுங்காணாஆதியினானுறைகாட்டுப்பள்ளி:
வண்டமரும்மலர்க்கொன்றைமாலைவார்சடையான்கழல்வாழ்த்துவோமே.10
ஒண்துவர்ஆர் துகில் ஆடை மெய் போர்த்து,உச்சி கொளாமைஉண்டே,உரைக்கும்
குண்டர்களோடு அரைக் கூறைஇல்லார் கூறுவது ஆம்குணம்அல்லகண்டீர்;
அண்டமறையவன்மாலும்காணாஆதியினான், -உறை காட்டுப்பள்ளி -
வண்டு அமரும்மலர்க்கொன்றைமாலைவார்சடையான்,கழல் வாழ்த்துவோமே!
பொருள்: நிறம் பொருந்திய காவியாடையைமேனியில் போர்த்து,உச்சி வேளையில் வயிறு கொள்ளாத அளவில் தின்று பொய் கூறும் உடல் பருத்த புத்தர்,இடையில் உடையில்லாததிகம்பர சமணர் கூறுவனநற்பயனைத்தாராதன என்பதை அறிந்து கொள்ளுங்கள். உலகைப் படைத்த வேதாசாரியனானபிரமனும்,மாலுங்காணாதமுதல்வன்உறையும்திருக்காட்டுப்பள்ளிக்குச் சென்று வண்டு அமரும் மலர்க் கொன்றை புனைந்தவார்சடையோன் கழல்களை ஏத்தி வாழ்த்துவோம்.
குறிப்புரை: இது புத்தரும்,சமணரும்கூறுவனகுணமற்ற சொற்கள்;அவைகளை உறுதியெனநம்பாதீர். இறைவன் கழலை ஏத்துவோம் என்கின்றது. துவர்ஆர் துகில் - காவியாடை. கொள்ளாமை உண்டு - கொள்ளாத அளவு மிகுதியாக உண்டு,குண்டர்கள் - உடல் பருத்த புத்தர்கள்,அரைக்கூறையில்லார் - அரையில் ஆடை இல்லாதவர்கள்;திகம்பரசமணர்கள்கூறுவனகுணமல்ல. தாம் அசை கண்டீர் - கண்டு தெளியுங்கள். அண்ட மறையவன் - இரண்யகருப்பனாகிய பிரமன். பிரமன் நீரையே முதலில் படைத்தான் என்பதும்,அதில் பொன்மயமான முட்டையாக உலகை ஆக்கினான் என்பதும் புராணவரலாறு. அமரும் - விரும்பும்.
The Buddhist monks who wear Brown-red cloth and having obese frame due to over-eating in the mid-day, as well as Jain monks who roam about naked - both speak ignoble things which will never yield any good for any body. Know this well and avoid them. It is Kaatu-p-Palli where abides, Lord Civan who is unknowable even to Brahmaand Vishnu. Let us hail the ankleted Feet of Him whose long, matted hair is decked with a chaplet of konrai flowers where honey bees come and settle!
Note: Uchchi means head. Metaphorically it refers to the brain. Kolaamai refers to not holding/receiving. UchchiKolaamai may therefore mean that which is rejected by the brain/that which is not believed in.
பொன்னியறாமரைநீலநெய்தல்போதுகளாற்பொலிவெய்துபொய்கைக்
கன்னியர்தாங்குடைகாட்டுப்பள்ளிக்காதலனைக்கடற்காழியர்கோன்
துன்னியவின்னிசையாற்றுதைந்துசொல்லியஞானசம்பந்தனல்ல
தன்னிசையாற்சொன்னமாலைபத்துந்தாங்கவல்லார்புகழ்தாங்குவாரே.11
பொன் இயல் தாமரை,நீலம்,நெய்தல்,போதுகளால் பொலிவு எய்து பொய்கைக்,
கன்னியர் தாம் குடை காட்டுப்பள்ளிக்காதலனை,கடல் காழியர்கோன் -
துன்னிய இன் இசையால் - துதைந்துசொல்லியஞானசம்பந்தன் - நல்ல
தன் இசையால் சொன்ன மாலைபத்தும் தாங்க வல்லார் புகழ் தாங்குவாரே.
பொருள்: திருமகள் வாழும் தாமரை. நீலம்,நெய்தல் ஆகிய மலர்களால்பகலும்இரவும்பொலிவெய்தும்'பொய்கைகள்திருக்காட்டுப்பள்ளியில் மிகுதியாக உள்ளன. அக்குளங்களில்கன்னிப் பெண்கள் குடைந்தாடுகின்றனர். அவ்வூரைவிரும்பும்"இறைவனைக்கடல்சூழ்ந்தகாழிமாநகர்த்தலைவனாகியஞானசம்பந்தன் பொருந்திய இன்னிசை கூட்டிச் சொன்ன இத்திருப்பதிகப்பாடலாகிய மாலை பத்தையும்மனத்திடைத்தரிக்க வல்லவர் புகழ் எய்துவர்.
குறிப்புரை: இது ஞானசம்பந்தன்இசையாற் சொன்ன இந்த மாலை பத்தும்வல்லார் புகழ் எய்துவர் என இம்மைப்பயன் கூறி,மறுமைப்பயனும் உடன் தோன்றத்தெரிவித்துத்திருக்கடைக் காப்பு அருளிச்செய்கிறது. பொன்னியல் தாமரை - இலக்குமி வசிக்கும் தாமரை. தாமரை பகலில் பொலிவது. நீலமும்நெய்தலும்இரவிற்பொலிவன். இவைகளை . உடைமையால் பொய்கை எஞ்ஞான்றும் பொலிகின்றதுஎன்பது குறித்தவாறு: காட்டுப்பள்ளிக் காதலன் - காட்டுப் பள்ளியில் விருப்புடைய பெருமான்,துதைந்து - செறிந்து. நல்லதன்இசையால் சொன்ன -நல்ல தனது மிடற்றிசையால் அமைத்து அருளிய. பத்துத்திருப்பாடல்களும்கூடியமாலையாகவும்,மாலை பத்தும் என்றது. ஒவ்வொரு திருப்பாடலுமேதனித்தனிப்பயனுடையதாய்,வழிபடும் முறைகளை உடையதாய் இருக்கும் சிறப்பு நோக்கி,ஒவ்வொரு பாடலுமே ஒரு மாலை போன்றது. அங்ஙனமாகிய பத்து மாலைகளையும் மனத்தில் தரிக்க வல்லவர் இம்மையிற் புகழ் எய்துவர். எனவே மறுமையில்வீடெய்துவர் என்பது தாமேபெறப்பட்டது.
In Kaatu-p-Palli, there are tanks that are bright both in the day and night because Lotus flowers (seat of goddess Lakshmi) blossom in the day and the blue lillies and neytal blossom at night (ஆம்பல்குவிந்ததே; தாமரையும்மலர்ந்ததே ... by அன்புப் புலவர்). In these tanks, virgins dive and sport and enjoy. In such a lovely Kaattu-p-palli, Lord Civan is templed. Gnaana-sambandhan, the Prince of Kaazhi which is close to the sea, has hailed this Lord in melodic sweet hymns of his own accord. They that can treasure this melodic hymn - the garland of ten verses - will come by great renown.
Note: Poikai: A natural pond / pool unexcavated by human hands.
.....திருச்சிற்றம்பலம்
5ஆம் பதிகம் முற்றிற்று
உ
சிவமயம்
6.திருமருகலும்திருச்செங்காட்டங்குடியும்
திரு-மருகல்திருத்தலவரலாறு:
திருமருகல் என்ற திருத்தலமானதுசோழநாட்டுக்காவிரித்தென்கரைத்தலங்களில்80ஆவது தலம். நாகை மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ளது. நன்னிலம்,நாகை,திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய ஊர்களில் இருந்து பேருந்துகளில்செல்லலாம். மருகல் என்பது ஒருவகை வாழை. இது கல்வாழை எனவும் வழங்குகின்றது. கருங்கல் தளத்திலேயேவளர்வதால்இப்பெயர்வந்தது என்கிறார்கள். அதன் பழத்தை இறைவனுக்கு நிவேதிக்கலாமேயன்றி மக்கள் உண்ணல் ஆகாது;உண்டால் வயிற்றுநோய் உண்டாகும் என்பது அவ்வூர் மக்கள் வாய்மொழி. இந்த வாழை தலவிருட்சமாதலின்இத்தலத்திற்குஇப்பெயர் வந்தது. கோச்செங்கட்சோழநாயனார் எழுப்பிய எழுபது மாடக் கோயில்களில் இதுவும் ஒன்று. யானையேறாப்பெருங்கோயில்.
பாண்டிய நாட்டு வணிகனாகியதாமன் என்பவன் தன்மக்கள்எழுவரில்ஒருத்தியைத் தன் மருமகனுக்குக் கொடுப்பதாக வாக்களித்திருந்தான். அவர்களுக்குப் பருவம் வந்த காலத்துஒவ்வொருத்தியாகப் பிறருக்கு மணம் செய்து கொடுத்து விட்டான். அதனை உணர்ந்தஏழாமவள்தாய்தந்தையர் அறியாமல் தன் நன்மாமன்மகனோடுஉடன்போக்குநிகழ்த்தினாள். திருமருகலைஅடைந்து இருவரும் ஒரு திருமடத்தில்இராத்-தங்கினார்கள். அன்றிரவு அந்தச் செட்டி குமரன் வினைவயத்தால் பாம்பு தீண்டி இறந்து விட்டான். அவள் இறைவனை நோக்கி முறையிட்டுப்புலம்பினாள். சுவாமி தரிசனத்திற்காக வந்த திருஞானசம்பந்தர்சுவாமிகள்திருஉள்ளத்தை இவள் அழுகை ஒலி,அருள்சுரக்கச் செய்தது. சுவாமிகள் திருப்பதிகம் பாடி அவனை எழுப்பினார். தம் திருமுன்பேஅவர்களுக்குத் திருமணம் முடிப்பித்தார் என்பது இத்தலத்தைப் பற்றிய சிறந்த நிகழச்சி. இறைவன் மாணிக்கவண்ணார். இறைவி வண்டுவார்குழலி. தலவிருட்சம் வாழை.தீர்த்தம் மாணிக்க தீர்த்தம். இது கோயில் சந்நிதியிலேயே இருக்கிறது. கிழக்கு பார்த்த சந்நிதி. அம்மன் சந்நிதிக்கு எதிரில் விஷந்தீர்த்த பிள்ளையார் கோயில் இருக்கிறது.
இடம்:
நன்னிலம் இரயில் நிலையித்திலிருந்துகிழக்கே7கி.மீ. தூரமுள்ளதிருப்புகலூரைஅடைந்து,அங்கிருந்து மட்சாலைவழியாகக்கிழக்கே5கி.மீ'சென்றால் இத்தலத்தை அடையலாம்.
கல்வெட்டு: அறியக்கூடவில்லை.
திருச்-செங்காட்டங்-குடிதிருத்தலவரலாறு:
திருச்செங்காட்டங்குடி என்ற திருத்தலமானதுசோழநாட்டுக்காவிரித்தென்கரைத் தலம். நாகை மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ளது. திருவாரூரிலிருந்து பேருந்து வசதி உள்ளது. விநாயகப் பெருமான் கஜமுகாசுரனைக்கொன்றகாலத்து அவன் உடலினின்றும் பெருகிய இரத்தவெள்ளத்தால் இவ்விடம் முழுவதும் செந்நிறமாயிற்று. ஆதலால் இத்தலம்செங்காடு, செங்காட்டங்குடிஎனப் பெயர் பெற்றது. விநாயகப் பெருமான் கயமுகனைக்கொன்ற கறை நீங்கச்சிவலிங்கப்பெருமானைத் ஸ்தாபித்து வழிபட்டார். அதனால் “கணபதீச்சரம்” எனத்திருக்கோயில்வழங்கப்பெறுவதாயிற்று. இவ்வரலாற்றைக்கந்தபுராணத்தில்,
ஏடவிழிஅலங்கல்திண்டோள்இபமுகத்தவுணன்மார்பில்
நீடியகுருதிச் செந்நீர் நீத்தமாய் ஒழுகும் வேலைப்
பாடுறவருங்கான்ஒன்றிற்பரத்தலின் அதுவே செய்ய
காடெனப்பெயர்பெற்றின்னுங்காண்டக இருந்த தம்மா!
மீண்டும்செங் காட்டில் ஒர்சார்மேவிமெய்ஞ்ஞானத்தும்பர்
தாண்டவம் புரியுந்தாதைதன்னுருத்தாபித்தேத்திப்
பூண்டபேர்அன்பிற்பூசைபுரிந்தனன்புவியுளோர்க்குக்
காண்டகும்அனைய தானம் கணபதீச்சரமதென்பர்
என்ற செய்யுட்களால் அறியலாம்.
மிகப் பழமையான திருவாத்தி விருட்சம் ஒன்று,எழுந்தருள் நாயகர் திருமுன்புஇருக்கின்றது. பிரகாரத்தின்கீழ்ப்பக்கத்தில்இத்தலத்து வாழ்ந்த சிறுத்தொண்டர், திருவெண்காட்டு நங்கை,சீராளன்,சந்தனத்தாதியர் இவர்கள் திருவுருவங்கள் இருக்கின்றன. சிறுத்தொண்டர்,உத்தராபதியினின்றும் வந்த பைரவ வேடம் தாங்கியபரமனுக்குத்தம்மகன்சீராளனையே கறி சமைத்திட்டு முத்தி அடைந்தனர் என்பது வரலாறு. அப்பர் மூர்த்திகளும்எழுந்தருளியகாலத்து,அவர்கள் நட்பைப் பெற்று அவர்கள் பதிகத்துச்சிறப்பிக்கப் பெறும் தகுதியைப் பெற்றவர். சித்திரைப்பூர்ணிமையில்சிறுத் தொண்டர் திருவமுது படைத்த திருவிழா நடைபெறும். அமுது படையல் என்றே அது வழங்குகிறது. இறைவன் - கணபதீச்சரத்தார் இறைவி -திருக்குழல்நன்மாது;விருட்சம் - திருவாத்தி;தீர்த்தம் - சூர்யதீர்த்தம்,பைரவகோலத்துடன்உத்திராபதியார்எழுந்தருளி இருக்கிறார்.
கல்வெட்டு:
முதலாம் இராஜராஜன்முதலாக ஏழு சோழஅரசர்கள்காலத்தனவும்,பராக்கிரம பாண்டியன் காலத்ததும்,வீரவிருப்பண்ண உடையார் "முதலிய இரு விஜயநகரஅரசர்கள்காலத்தனவும் ஆகியகல்வெட்டுக்கள் உள்ளன. அவற்றால் அறியப் பெறும் சில உண்மைகள்: இத்தலம்கயாமாணிக்கவளநாட்டுமருகல்நாட்டுத்திருச்செங்காட்டங்குடி என வழங்கப்பெறுகின்றது. முதல் இராஜராஜன்காலத்திய கல்வெட்டு மும்முடிச்சோழவளநாட்டுமருகல்நாட்டுத்திருச்செங்காட்டங்குடிஎனக்காட்டுகிறது. இறைவன் கணபதீச்சரமுடைய நாயனார் கணபதீச்சரமுடைய நாயகர் எனவும், பைரவமூர்த்திஉத்திராபதி நாயகர் எனவும்,சீராளர்சீராள தேவர் என்வும்,சிறுத்தொண்டர்சிறுத்தொண்ட நம்பி எனவும்,விநாயகப்" பெருமான்வாதாபி கணபதி எனவும் குறிக்கப்பெறுகின்றனர்.
சித்திரை மாதத்திருவாதிரையில்சீராளதேவர்க்குத் திருவிழா நடந்ததாக முதல்இராஜராஜன்காலத்துக் கல்வெட்டு கூறுகிறது. மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் சிறுத்தொண்டர்மடத்தில் இருந்து சீராளப்பிள்ளையைஎழுந்தருள்வித்த செய்தி தெரிகிறது. உத்தராபதிநாயனாருக்குச்சித்திர பெளர்ணமி அன்று விழா நடந்தமையை மூன்றாம் இராஜராஜன் கல்வெட்டு தெரிவிக்கிறது. ஒவ்வொரு மாதமும் பரணி விசேடமாகக்கொண்டாடப்பெற்றமை மற்றொரு கல்வெட்டு காட்டுகிறது. இந்த விழாவிற்கு விடப்பட்ட நிலம் திருவோட்டுக்கட்டளை என வழங்கப்பெற்றமை அறிந்து இன்புறுக. சித்திரை,ஐப்பசிப்பரணிகள் மிக விசேஷமானவை. ஆதலால் இவ்விழாவைக் கொண்டாட கி. பி.1245-1267இல் வாழ்ந்த மூன்றாம் இராஜேந்திரன் நிலம் விட்டான். மூன்றாம் இராஜராஜன் ஆட்சி24ஆம் ஆண்டில்அரசகாரியம்பர்ர்ப்பவனானஅரசூர் உடையார் திருச்சிற்றம்பலம் உடையானான் திருச்சிற்றம்பலம் உடைய பல்லவராயன்;உத்தராபதியார்சித்திரா பெளர்ணமி விழாவிற்கு எழுந்தருளும்போதுதிருமுத்துவிதானநெறியில்உணவளிக்க ஏற்பாடு செய்தமை ஒரு கல்வெட்டால்அறியப்படுகிறது. மற்றும்'சீராள தேவர் விழாவிற்கு வேளாளன் உலகஞ்சிறியவனானதாப்பிள்ளைமூவேந்தவேளாளனும் விழாவிற்கு வரும் அடியார்களுக்கு அமுது படிக்காகத்தாயன் சிற்றம்பலம் உடையானும்நிவந்தம் அளித்தார்கள். விளக்கிற்கும்,நிவேதனத்திற்குமாக மற்றும் பலர் வழங்கி இருக்கின்றனர்.
பதிக வரலாறு:
திருஞானசம்பந்தப் பெருமான் வணிகனதுவிடந்தீர்த்து அவனுக்கு மணவாழ்வுவகுத்துத்திருமருகலில்எழுந்தருளி இருந்தார்கள்... அப்போது சிறுத்தொண்ட நாயனார் வந்து மீட்டும் தமது ஊருக்கு (திருச்செங்காட்டங்குடி) வரவேண்டும் என விண்ணப்பித்தார். பிள்ளையார் மற்ற தலங்களையும் சென்று வழிபட வேண்டும் என்ற திருவுள்ளக்குறிப்போடுமருகலான்அடியைப்போற்றத்திருக்கோயிலுள்சென்றார்கள். அப்போது மருகற்பெருமான்திருச்செங்காட்டங்குடிக்கணபதீயீச்சரத்தில் உள்ள திருவோலக்கத்தைக் காட்டி அருள இப்பதிகத்தைப் பாடினார்கள். இங்கேயே அக்கோலத்தைக் காட்டி அருளியஉள்ளக்குறிப்பைஉணர்த்திச்சிறுத்தொண்டர்க்குவிடை கொடுத்தனுப்பினார்கள். இப்பதிகம்திருமருகற்பெருமானைக்கணபதீயீச்சரங்காமுறக்காரணம் என்ன?என்று வினாவுவதாகஅமைந்தமையின்வினாவுரை ஆயிற்று. திருச்செங்காட்டங்குடியில் உள்ள கோயிலின் பெயர் கணபதியீச்சரம்.
6. THIRU-MARU-KAL AND THIRU-CH-CHEN-KAATTAN-KUDI
THIRU-MARU-KAL
THE HISTORY OF THE PLACE
The sacred town of Thiru-marukal is the 80th sacred site on the South bank of river Cauvery in the Chola country. It is in the Nannilam taluk of Naagap-pattinam district. One can get here by bus from Nannilam, Naagap-pattinam, Thiruvaaroor or Mayilaaduthurai. Marukal is a type of plantain. It is also called as 'Kalvaazhai', as this is capable of growing on granite floor. The fruit of this tree can only be offered to the Lord, and not for eating by people, according to local legend. If any person eats it, it will cause stomach pain. Since this tree is the Tree of the Sacred Place, the site of the temple came to be called after it. This is one of the seventy temples with narrow entrance and in raised mounds. They were built raised by Kochchengat CholaNaayanaar. This great temple is said to belong to the class of temples, not approachable for elephants (யானை உள் புக முடியாத திருக்கோவில்கள்).
A merchant of Paandiya country, Thaaman, had promised that he would give in marriage to his nephew one of his seven daughters. However, as each of his daughters reached marriageable age, he gave each one of them in marriage to others. When the seventh daughter noticed this, she eloped with this nephew of Thaaman, without the knowledge of her parents. In her travel, she reached Thirumarukal and stayed for the night in a pilgrim matam. As fate would have it, her chosen groom was bitten by a snake and died during that night. She cried in her anguish addressing the Lord of this temple. Thiru-Gnaana-sambandar, who had by chance arrived there to offer worship to the Lord, was moved by her lamentation and took pity on her. The saint then sang a hymn and raised the dead man to life. He also had their wedding performed in his presence. This is an interesting event relating to this holy site.
The God's name is Maanickavannar and that of the Goddess is Vanduvaarkuzhali. The tree of the Sacred Place is plantain tree. The holy ford is known as MaanickaTheerththam. This is right in front of the shrine. The shrine is east facing. The shrine for Pillaiyaar "who overcame the venom" is right opposite the shrine of the Goddess.
Place
This place can be reached first by getting to Thiruppugaloor, which is at a distance of 7 km to the east of the Nannilam railway station, and from there by taking the mud road for a distance of 5 km.
Stone Inscriptions
None to our knowledge.
THE HISTORY OF THE PLACE
THIRU-CH-CHEN-KAATTAN-KUDI
This sacred town of Thiru-ch-chengaataangudi is on the South bank of river Cauvery in the Chola country. It is in the Nannilam Taluk of Naagapattinam district. One can get there from Thiruvaaroor by bus. At the time, Lord Vinaayaka killed Gajamukaasuran, the blood that flowed from the latter's body turned all the earth red in this entire area. Thus this place came to be named Sengaadu (red field) or Chengaattangudi. To rid Himself of the stain of Gajamukaasuran's blood, Lord Vinaayaka installed Lord Civa in Lingam form and worshipped Him. Thus, this holy temple came to be known as Ganapatheechchuram.
A very old Thiruvaaththi tree is in front of the shrine of EzhundarulNaayakar. In the eastern praakaara, there are images of Siruththondar, Thiruvenkaattu Nangai, Seeraalan, and Sandana Nangai, who lived in this place. Legend says that Siruththondar attained salvation by cooking his own son Seeraalan's flesh to feed Lord Civa, who claimed to have arrived from Uththiraapadhi in the disguise of Bairavar. This devotee of the Lord was a contemporary of Saint Thiru-Gnaana-sambandar and Saint Appar, and having gained their friendship had the honour of being mentioned in their poems. A festival to commemorate the event of his feeding the Lord is celebrated on the full-moon day of the month of Chiththirai. This festival is called "The Holy Feeding (AmudhuPadaiyal)".
The Lord is called Ganapathee-ch-charaththaar and the Goddess ThirukkuzhalNanmaadhu. The Tree of the Sacred Place is Thiruvaaththi. The Holy Ford is Sooriya Theerththam. Lord Uththiraapadhiyaar appears here in the form of Bairavar.
Stone Inscriptions
There are inscriptions of seven Chola kings, starting with Raajaraajan I, of Parakkirama Paandiyan, and two Vijayanagara kings, one whom wasVeeraviruppannaUdaiyaar. The following facts are revealed by those inscriptions. This place is called Thiru-ch-chengaataangudi, of Marukal Naadu in the KayaamaanickaValanaadu. The inscriptions by Raajaraajan I shows the name as Thiru- ch-chengaataangudi of Marukal Naadu in MummudichcholaValanaadu. The Lord is referred to as GanapatheechcharamudaiyaNaayanaar or Ganapathee-ch-charamudaiyaNaayar, the Bairavar as UththiraapathiNaayakar, Seeralan as Seerala Thevar, Sirththondar as Siruththonda Nambi, and Lord Vinayaka as Vaathaapi Ganapathi. An inscription of Raajaraajan I says that a festival to honour Seeraala Thevar was celebrated on the Thiruvaadhirai day in the month of Chiththirai. The information is known that during the reign of Kuloththugan III, procession of Seetaalapillai starting from the Siruththondar Matam took place. The inscription by Raajaraajan III reveals that a festival was celebrated for UththiraapathiNaayanaar. Another inscription shows that the Barani was celebrated in each month in a special way. It may be interesting to note that the land gifted for this purpose, was called "Thiruvottu-kattalai (Endowment of the Begging Bowl)". The Barani days of the months of Chiththirai and Aippasi are special; hence Raajendran (1245-67 CE) had gifted land to celebrate this festival. It is known from another inscription that a royal official of Raajaraajan III, known as ArasoorUdaiyaar Thiru-ch-chitrambalamUdaiyaPallavaraayan, had made arrangements, in the 24th regnal year, to provide food along the Thirumuththuvidhaana Neri (way) in which the procession of Uththiraapadhiyaar took place on the full-moon day of the month of Chiththirai. In addition, VelaalanUlakamSiriyavanaanaThaapillaiMovendhaVelaalan and ThaayanSirrambalamudaiyaan had made endowments, for Seeraala Thevar and for feeding the devotees attending that festival, respectively. Many others had made endowments for lighting lamps and food offerings to the Gods.
INTRODUCTION TO THE HYMN
Interrogative Verses
Our saint, during his sojourn at Marukal, restored the life of a lad belonging to the mercantile clan who died of a snake-bite. He also had the lad married to his closely related beloved who had eloped with him.
St. Siruth-thondar called on our saint and entreated him to visit once again his town (our saint had visited this place and the shrine Thiru-ch-chen-kaattan-kudi twice earlier). Desirous of proceeding to that sacred town, our saint visited the shrine at Marukal to take leave of the Lord before departure. The Lord of Marukal revealed Himself to our saint as the Lord of Ganapathi-eecharam at Chen-kaattan-kudi. It was then the following decad was sung by our saint.
திருச்சிற்றம்பலம்
6.திருமருகலும்திருச்செங்காட்டங்குடியும்
பண் : நட்டபாடை
ராகம் : கம்பீரநாட்டை
அங்கமும்வேதமுமோதுநாவர் அந்தணர் நாளுமடிபரவ
மங்குன்மதிதவழ் மாடவீதி மருகனிலாவியமைந்தசொல்லாய்
செங்கயலார்புனற்செல்வமல்குசீர்கொள்செங்காட்டங்குடியதனுள்
கங்குல் விளங்கெரியேந்தியாடுங் கணபதி யீச்சரங்காமுறவே.1
அங்கமும்வேதமும் ஓதும் நாவர் அந்தணர் நாளும் அடி பரவ
மங்குல்மதி தவழ் மாடவீதி மருகல்நிலாவியமைந்த! சொல்லாய் -
செங்கயல்ஆர் புனல் செல்வம் மல்கு சீர் கொள் செங்காட்டங்குடிஅதனுள்
கங்குல் விளங்கு எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம்காமுறவே?
பொருள்: நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் ஓதும் நாவினராகியஅந்தணர்கள்நாள்தோறும் மருகற்பெருமான்திருவடிகளைவணங்குகின்றார்கள். வானமண்டலத்தில்உள்ள சந்திரன் தவழ்ந்து செல்லுதற்குஇடமாய் உயர்ந்து விளங்கும் மாடவீதிகளைஉடையது திருமருகல். அங்கு எழுந்தருளியுள்ளஇறைவனே! செங்கயல்கள் நிறைந்த புனல் சூழ்ந்ததும்,செல்வ;வளம் நிறைந்ததுமானபுகழார்ந்ததிருச்செங்காட்டங்குடியில்எரியைக்கையில் ஏந்தி நள்ளிருளில் நட்டம் ஆடுதற்குஇடமாய்க்கணபதீயீச்சரத்தைக்காமுறுதல்ஏன்?சொல்வாயாக.
குறிப்புரை: அங்கம் - வேதத்தின்அங்கங்களாகிய நிருத்தம்,சிட்சை,கற்பம்,சந்தஸ்,வியாகரணம், ஜோதிஷம் என்ற ஆறு. மங்குல்மதி - வானமண்டலத்துச் சந்திரன்,அந்தணர் அடிபரவமருகல்நிலாவியமைந்த! கணபதியீச்சரம்காமுறவுசொல்லாய் என இயைக்க. கங்குல் - அர்த்தயாமம். எரி - திருக்கரத்தில் உள்ள தீ.
The Anthanars, (á) men of Dharmic disposition are engaged daily in reciting the vedaas and the related angam in adoration of Lord Civan who is templed in the town of Thiru-Marukal and offer obeisance to His Holy Feet. In the streets of Marukal tall mansions are many over which the moon sails in the night. Oh! Lord Civa, You are holding the dazzling Fire in Your hand and dancing at dead of night at Ganapathi-eecharam temple situated in the opulent and gloriusChengaattan-kudi town rich in waters where flourish red carp fishes. Pray tell us what indeed has induced You to select the Ganapathi-eecharam Temple for Your dance at dead of night. Note: Ganapathi-eecharam: The shrine at Chenkaattaan-kudi; Marukal: This town named after the temple tree Marukal, a kind of plantain tree. Chenkaattaan- kudi: It was here Lord Ganapathy smote the asura called gajamukha. The Asuraa's blood coloured the town red, which then came to be known as Chen- kaattan-kudi (The place red with blood). Andhanar: Men of great compassion and virtue and high level of erudition and scholarship.
நெய்தவழ்மூவெரிகாவலோம்புநேர்புரிநூன்மறையாளரேத்த
மைதவழ்மாடமலிந்தவீதிமருகனிலாவியமைந்தசொல்லாய்
செய்தவ நான்மறை யோர்களேத்துஞ்சீர்கொள்செங்காட்டங்குடியதனுள்
கைதவழ்கூரெரியேந்தியாடுங் கணபதி யீச்சரங்காமுறவே.2
நெய் தவழ் மூஎரி காவல் ஓம்பும் நேர் புரிநூல்மறையாளர்ஏத்த,
மை தவழ் மாடம் மலிந்த வீதி மருகல்நிலாவியமைந்த! சொல்லாய் -
செய் தவநால்மறையோர்கள் ஏத்தும் சீர் கொள் செங்காட்டங்குடிஅதனுள்
கை தவழ் கூர் எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சரம்காமுறவே?
பொருள்:திருமருகலில் வாழும் அந்நணர்கள்முப்புரிநூல்அணிந்த வேத வித்துக்களாய்விளங்குகிறார்கள். அவர்கள் முத்து வளர்த்து அதில் அவிப்பொருளாகநெய்விட்டுஓம்புகிறார்கள். அந்த யாககுண்டத்தில் தவழ்ந்து எரியும் முத்தீயைப் பாதுகாப்பாக ஓம்பிவருகிறார்கள்.திருமருகலில் கரிய மேகங்கள் தவழும் மாடங்கள் நிறைந்த வீடுகள் உடைய வீதிகள் பல உள. இத்தனை திறப்புகள் வாய்ந்த திருமருகலில்எழுந்தருளியஇறைவனே! தவங்கள்பலவும் செய்யும் நான்மறையோர்போற்றும் புகழ் பொருந்திய ஊர் திருச்செங்காட்டங்குடி ஆகும். அங்குள்ள கணபதீயீச்சரக் கோயில் உனது திருக்கரத்தில்மிக்கதீயை ஏந்தி ஆடுதற்குஇடமாய்காமுறக் காரணம் என்ன?சொல்வாயாக.
குறிப்புரை: அக்கினி காரியம் செய்யும் அந்தணர்கள்வழிபடும்மருகல் என்றும்,தவமுதியோர்களாகியமறையோர்போற்றும்செங்காட்டங்குடி என்றும் இரண்டினியல்பும்ஒத்தமைஉரைக்கப்பெறுகின்றது. மூஎரி - ஆகவனீயம்,காருகபத்யம்,தக்ஷிணாக்கினி என்ற முத்தீ. அந்தணர்கள்மணக்காலத்து எடுத்த தீயைஅவியாதே பாதுகாக்க வேண்டியது மரபாதலின் மூ௭ரிகாவல் ஓம்பும்மறையாளர் என்றார். நேர் - நேர்மை,புரிநூல் - மூன்று புரியாகத்திரிக்கப் பெற்ற பூணூல். மை - மேகம்,கை தவழ் - திருக்கரத்தில்திகழ்கின்ற. கூர் எரி - மிக்க தீ.
Hailed by the righteous who are well-versed in the Vedas the wearers of the sacred thread who foster that triple fire with pure ghee, O Mighty One, You abide at Marukal in whose streets in the mansions over which clouds graze. O Lord You sport in Your hand the blazing fire and dance; Pray tell us; what indeed has impelled You to abide in love at Ganapathi-eecharam, situated in the renowned Chen-kaattan-kudi, hailed by them who are well-versed in the Vedas and who are poised in tapas?
தோலொடு நூலிழை சேர்ந்தமார்பா்தொகுமறையோர்கள்வளர்த்தசெந்தீ
மால்புகைபோய்விம்மு மாடவீதி மருகனிலாவியமைந்தசொல்லாய்
சேல்புல்குதண்வயற்சோலைகசூழ்ந்தசீர்கொள்செங்காட்டங்குடியதனுள்
கால்புல்குபைங்கழலார்க்கவாடுங் கணபதி யீச்சரங்காமுறவே.3
தோலொடு நூல்-இறை சேர்ந்த மார்பர்,தொகும்மறையோர்கள்,வளர்த்த செந்தீ
மால்புகை போய் விம்மு மாட வீதி மருகல்நிலாவியமைந்த! சொல்லாய் -
சேல்புல்குதண்வயல் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடிஅதனுள்
கால் புல்குபைங்கழல்ஆர்க்க ஆடும் கணபதியீச்சரம்காமுறவே?
பொருள்: மான் தோலோடு கூடிய முப்புரி நூல் அணிந்தமார்பினராய்த்திரளாய் நின்று வேதம் பயிலும்அந்தணர்கள் வளர்த்த செந்தீயிலிருந்து எழுந்த கரிய புகை திருமருகலின்ஆகாயத்தில் மிகவும் மிகுதியாக வெளிப்படுகின்றன. அங்கு மாடங்களோடு கூடிய வீதிகள்பல உள. சேல்கள் நிறைந்த குளிர்ந்த வயல்களை அடுத்த சோலைகளால்சூழப்பட்டசிறப்புமிக்க ஊர் திருச்செங்காட்டங்குடி ஆகும். இவ்விருஊர்களிலும் விளங்கும் இறைவனே,உன் திருவடிகளில்கட்டியகழல்கள்ஆர்க்கஆடிக் கொண்டு கணபதீயீச்சரத்தைக்காமுறுதற்குக் காரணம் என்ன?சொல்வாயாக.
குறிப்புரை: இது,யாகப்புகைவிம்முகிறமருகலில் உள்ள தேவனை,குளிர்ந்த வயலும்,சோலையும்சூழ்ந்தசெங்காட்டங்குடியைவிரும்புவதேன் என்று வினாவுகிறது. தோல் - கிருஷ்ணாஜினம் என்னும் மான்தோல். மால் புகை - கரிய புகை. சேல்புல்கு - சேல்மீன்கள்தழுவிய கால் - திருவடி.
O Mighty One! You abide at Marukal in whose streets are mansions where smoke from the ruddy fire of the yagas spirals up and up, fostered by the assembled vedic scholars whose chests are adorned with strands of sacred thread to which are fastened snippets of dear skin, Oh! Lord Civa - You are dancing so perfectly which creates a sweet rythmic tune from Your anklets. Pray, tell us; what indeed has goaded You to abide in love and dance at Ganapathi-eecharam, situated in the celebrated Chen-kaattan-kudi girt with gardens and cool fields
Note: Cale - Carnatic carp. Yaga - Vedic sacrifice.
நாமருகேள்வியர்வேள்வியோவா நான்மறை யோர்வழிபாடுசெய்ய
மாமருவும்மணிக்கோயின்மேயமருகனிலாவியமைந்தசொல்லாய்
தேமருபூம்பொழிற்சோலைசூழ்ந்தசீர்கொள்செங்காட்டங்குடியதனுள்
காமருசீர்மகிழ்ந்தெல்லியாடுங் கணபதி யீச்சரங்காமுறவே.4
நா மருகேள்வியர்வேள்விஓவாநால்மறையோர் வழிபாடு செய்ய,
மா மருவும்மணிக் கோயில் மேயமருகல்நிலாவியமைந்த! சொல்லாய் -
தேமருபூம்பொழில்-சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடிஅதனுள்
காமரு சீர் மகிழ்ந்து எல்லி ஆடும் கணபதியீச்சரம்காமுறவே?
பொருள்: நாவிற்பொருந்தியவாய்ப்பயிலப்பட்டு வரும் வேதங்களை ஓதி உணர்ந்தவர்களும், வேள்விகளை இடைவிடாமல் செய்து வருபவர்களுமாகியநான்மறையாளர்வழிபடச், செல்வம் மருவியமணிக்கோயிலை உடைய மருகலில் விளங்கும் மைந்தனே! தேன் நிறைந்த அழகிய பொழில்களால்சூழப்பெற்ற சிறப்புமிக்க செங்காட்டங்குடியில்விளங்குகின்றஅழகும் பெருமையும் மிக்க கணபதியீச்சரத்தைக்காமுற்றுஇராப்போதில் நடனம் ஆடுதற்குக் காரணம் யாது?சொல்வாயாக.
குறிப்புரை: இது,அந்தணர் வேள்வி இடையறாத மருகல்நிலாவிய நீ,பொழிலும்சோலையும்சூழ்ந்தசெங்காட்டங்குடியைக்காமுறுதல் ஏன் என்கின்றது. நா மருகேள்வியர் - நாவிற் பொருந்திய வேதங்களை உடையவர். கேள்வி - வேதம் (சுருதி என்பதன் மொழி பெயர்ப்பு) மா - பெருமை,இலக்குமி. காமுறு - அழகிய.
Hailed by scholars well-versed in four vedas who never cease performing yagas with appropriate vedic mantras, O Mighty One, You abide at the great and gem filled shrine at Marukal! Pray, tell us; what indeed has induced you to abide in love and dance in delight during the night at the beauteous and bewitching Ganapathi-eecharam temple situated in the glorious Chen-kaattan-kudi town girt with flowery gardens and groves divine?
பாடன்முழவும்விழவுமோவாப்பன்மறையோரவர்தாம்பரவ
மாடநெடுங்கொடிவிண்டடவுமருகனிலாவியமைந்தசொல்லாய்
சேடகமாமலர்ச்சோலைசூழ்ந்தசீர்கொள்செங்காட்டங்குடியதனுள்
காடகமேயிடமாகவாடுங் கணபதி மீச்சரங்காமுறவே.5
பாடல் முழவும்விழவும்ஓவாப்பல்மறையோர்அவர்தாம் பரவ,
மாடநெடுங்கொடி விண் தடவு மருகல்நிலாவியமைந்த! சொல்லாய் -
சேடகம் மா மலர்ச்சோலைசூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடிஅதனுள்
காடு அகமேஇடம்ஆக ஆடும் கணபதியீச்சரம்காமுறவே?
பொருள்: பாடலும்,அதற்கசைந்தமுழவு ஒலியும்,திருவிழாக்கள் ஒலியும் இடைவிடாமல் நிகழ்வதும்மாடவீடுகளில்கட்டிய கொடிகள் வானைத்தடவுவதும்ஆகியசிறப்புக்களைஉடைய திருமருகலில்வேதங்கள்பலவும் கற்ற அந்தணாளர் பரவ எழுந்தருளியஇறைவனே! உயரமான மணம் மிக்க மலர்ச் சோலைகளால்சூழப்பெற்ற சிறப்புமிக்க செங்காட்டங்குடியில்,காட்டிடமே நாடகம் ஆடுதற்கு இடமாக இருக்கவும்,நீ நடனம் புரியம்இடமாகக்கணபதியீச்சரத்தைக்காமுறக் காரணம் என்ன?சொல்வாயாக.
குறிப்புரை: இது விழவறாதமாடங்களோடுகூடியமருகலில் உள்ள நீ,காடகமேயிடமாக ஆடும் கணபதீயீச்சரம்காமுறல் ஏன் என்கிறது. பாடலும்,முழவும்,விழாவும் இடையறாத மருகல் எனவும், மறையோர் பரவ நிலாவியமைந்த எனவும்,கொடி தடவு மருகல் எனவும் இயைத்துப் பொருள் காண்க. சேடகம் - கேடகம் போலும் வட்டமாகிய மலர். ஆடும் - ஆடுதற்கிடமாகிய.
Hailed by vast numbers of scholars, You abide at Marukal where flags fastened to the tall poles in mansions, brush the heavens. At Marukal abound song and beat of drums and festivities. O Lord You are dancing in the temple , while there is a specific forest place for dancing in. Pray, tell us; what indeed has induced You to abide in love and dance at the Ganapathi-eecharam temple situated in the glorious Chen-kaattan-kudi town, girt with groves rich in large 'cetaka' flowers?
Note: Cetakam - A flower.
புனையழலோம்புகையந்தணாளர்பொன்னடிநாடொறும்போற்றிசைப்ப
மனைகெழுமாடமலிந்தவீதிமருகனிலாவியமைந்தசொல்லாய்
சினைகெழுதண்வயற்சோலைகசூழ்ந்தசீர்கொள்செங்காட்டங்குடியதனுள்
கனைவளர்கூரெரியேந்தியாடுங் கணபதி யீச்சரங்காமுறவே.6
புனை அழல் ஓம்பு கை அந்தணாளர் பொன் அடி நாள்தொறும் போற்று இசைப்ப,
மனை கெழு மாடம் மலிந்த வீதி மருகல்நிலாவியமைந்த! சொல்லாய் -
சினை கெழுதண்வயல்,சோலை,சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடிஅதனுள்
கனை வளர் கூர் எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சரம்காமுறவே?
பொருள்: கிரியைகள்பலவற்றாலும் அழகு செய்யப் பெற்ற முத்தீயை வளர்க்கும் கைகளை உடைய அந்தணர்கள்,நாள்தோறும் உன் திருவடிகளைப் போற்றி வருகின்றனர். இல்லங்களில் "விளங்கும் மாடங்கள் நிறைந்த வீதிகளைஉடையதுதிருமருகல். அங்கு விளங்கும் இறைவனே! நெற்பயிர்கள் திளைத்து வளரும் தண்வயல்களை அடுத்த சோலைகளால்சூழப்பெற்றநீர்வளம் மிக்க செங்காட்டங்குடி- அங்குள்ள கணபதியீச்சரத்தைக்காமுற்று நீ எரியேந்தி நடனம் புரியக் காரணம் என்ன?சொல்வாயாக.
குறிப்புரை: இதுஅழலோம்பும்அந்தணர்கள் வணங்க மருகலில்எழுந்தருளி உள்ள மைந்தனே! கணபதீயீச்சரம்காமுறல் ஏன் என்கின்றது. புனையழல் - சாதகன்மம் முதலான பதினாறுகிரியைகளாலும் அழகு செய்யப்பெற்றயாகாக்கினி. பொன்னடி - பொன்போலஅனைவராலும்போற்றப்பெறுகின்ற திருவடி: இயற்கையே ஒளிபெற்று என்றும் மங்காதபொன்னைப் போல,இயற்கையே பாசம் இன்றி அடைந்தாரையும்பாசங்களினின்றும்நீக்குகின்ற திருவருள்,கல்லெறியவிலகும் பாசி போல ஒருநாள் ஒருகால் போற்ற,சிவஞானம்சித்திக்கும்;அந்தணர்கள்நாடோறும்போற்றிசைப்பதால் நிலைத்த ஞானத்தைஎய்துகின்றனர்என்பதாம். உடன்பிறந்தே கொல்லும் பகையாய்,தன்னையும்காட்டாதுதலைவனையும்காட்டாதுநிற்கின்றமூலமலப்பகையைவெல்லும்வீரனாதலின்மைந்த என்றார். மைந்து_வலிமை. சினை - கிளை;முளையுமாம். கனை - மிகுதி,ஓசையுமாம்.
Dharmic scholars who foster the ritualistic sacrificial fire, daily hymn and hail Your golden Feet. Thus O Almighty, You abide at Marukal, the streets of which are filled with houses and commodious mansions. Pray, tell us; what indeed has impelled You to abide in love holding in Your hand the fierce and crackling fire and dance atGanapathi-eecharam temple situated in the celebrated Chen-kaattan-kudi town, girt with glorious and cool fields of sprouting crops?
பூண்டங்குமார்பினிலங்கைவேந்தன்பொன்னெடுந்தோள்வரையாலடர்த்து
மாண்டங்குநூன்மறையோர்பரவமருகனிலாவியமைந்தசொல்லாய்
சேண்டங்குமாமலர்ச்சோலைகூழ்ந்தசீர்கொள்செங்காட்டங்குடியதனுள்
காண்டங்குதோள்பெயர்த்தெல்லியாடுங் கணபதி யீச்சரங்காமுறவே.8
பூண் தங்கு மார்பின் இலங்கை வேந்தன் பொன் நெடுந்தோள்வரையால்அடர்த்து,
மாண் தங்கு நூல் மறையோர்,பரவ மருகல்நிலாவியமைந்த! சொல்லாய் -
சேண் தங்கு மா மலர்ச்சோலைசூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடிஅதனுள்
காண் தங்கு தோள் பெயர்த்து எல்லி ஆடும் கணபதியீச்சரம்காமுறவே?
பொருள்: இலங்கை மன்னன் இராவணன் அழகிய பெரிய தோள்களை உடையவன் அவன் மார்பில் அணிகலன்கள் பல அணிந்துள்ளான். அவன் இவன் வீற்றிருக்கும் கயிலை மலையைத் தூக்கி நகர்த்து வைக்க முற்பட்டான். சிவன் தன் கால் கட்டை விரலால் சிறிது அழுத்தினான். இராவணன் மலையால்நசுக்கப்பட்டு அலறி மன்னிப்புக் கோரி சாமகீதம்பாடினான். மாட்டுமை பொருந்திய நான்மறையோர்கள் பரவி வணங்கப்படும் சிவபெருமான் திருமருகலில்எழுந்தருளியிருக்கின்றான். அங்கு விளங்கும் இறைவனே! வானளாவியமணமலர்ச்சோலைகளால்சூழப்பெற்றசீர்மிக்கசெங்காட்டங்குடியில் அழகிய உன் திருத்தோள்களை அசைத்து இரவில்நடமிடுதற்குஇடனாய்க்கணபதீயீச்சரத்தைக்காமுறக்காரணம் யாதோ?சொல்வாயாக.
குறிப்புரை: பூண் - மதாணி முதலிய மார்பணிகள்,மாண் தங்கு - மாட்சிமை தங்கிய. சேண் - ஆகாயம், "காண் தங்கு - அழகு தங்கப் பெற்ற. எல்லி - இரவு.
Seated on Mount Kailas, You crushed the big and beautiful shoulders of the King of Sri Lanka, the one adorned with jewels galore in His chest. Hailed by scholars well versed in the sacred scriptures, You, O Almighty abide at Marukal; You dance at night flexing Your beauteous arms. Pray, tell us; what indeed has induced You to abide inlove and dance at Ganapathi-eecharam temple, situated in the famed Chen-kaattan- kudi town girt with flowery and sky-vaulting gardens?
அந்தமுமாதியுந்நான்முகனுமரவணையானுமறிவரிய
மந்திர வேதங்களோதுநாவர்மருகனிலாவியமைந்தசொல்லாய்
செந்தமிழோர்கள்பரவியேத்துஞ்சீர்கொள்செங்காட்டங்குடியதனுள்
கந்தமகிற்புகையேகமழுங்கணபதியீச்சரங்காமுறவே.9
அந்தமும்ஆதியும்,நான்முகனும்அரவுஅணையானும்,அறிவு அரிய,
மந்திரவேதங்கள்ஓதும்நாவர்மருகல்நிலாவியமைந்த! சொல்லாய் -
செந்தமிழோர்கள் பரவி ஏத்தும் சீர் கொள் செங்காட்டங்குடிஅதனுள்
கந்தம் அகில்புகையேகமழும்கணபதியீச்சரம்காமுறவே?
பொருள்: நான்முகனும்அரவணையானும்ஆதியாயமுடியையும்அந்தமாகியஅடியையும்அறிதற்குஅரியவனானசிவனே,மந்திர வடிவான வேதங்களை ஓதும் நாவினரான அந்தணர் பரவி ஏத்தத்திருமருகலில் விளங்கும் இறைவனே! செந்தமிழ் வல்லோர்பரவித்துதிக்கும்சிறப்புமிக்க செங்காட்டங்குடியில் அகில் புகை,மணமேகமழும்கணபதீயீச்சரத்தைக்காமுறக் காரணம் யாதோ?சொல்வாயாக.
குறிப்புரை: அந்தம் அரவணையானும் ஆதி நான்முகனும்அறிவரிய என எதிர்நிரனிறை. அந்தம் ஆதி - அடிமுடி. மந்திர வேதங்கள் - மந்திர வடிவாகியவேதங்கள்,அவை இருக்கு,யஜுர்,சாமம். வேதங்களில்இருக்கு மந்திரங்களும்,யஜுர்பிரயோகங்களும்,சாமம் கானங்களுமாகஅமைந்தன. வேதம் ஓதும் அந்தணர்கள் விளங்கும் மருகலில் இருக்கும் இறைவன்,செந்தமிழ் நூலோர்பரவியேத்தும்செங்காட்டங்குடியைவிரும்பியதில்நயமிருத்தல்ஓர்க. கந்தமேகமழும் என மாற்றுக.
Vishnu could not find Your Feet, so too Bramha Your Crown. You, O Almighty, who abide at Marukal where dwell those that recite the vedas and chant their mantras! Pray, tell us; what indeed impelled You to abide in love and dance at Ganapathi- eecharam temple - ever pervaded, by the smoke of eaglewood and incense - situated in the renowned Chen-kaattan-kudi town hailed and adored by the scholars of chaste Tamil?
இலைமருதேயழகாகநாளுமிடுதுவர்க்காயொடுசுக்குத்தின்னும்
நிலையமண்டேரரைநீங்கிநின்றுநீதரல்லார்தொழுமாமருகல்
மலைமகடோள்புணர்வாயருளாய்மாசில்செங்காட்டங்குடியதனுள்
கலைமல்குதோலுடுத்தெல்லியாடுங் கணபதி யீச்சரங்காமுறவே.10
இலை மருதே அழகு ஆக நாளும் இடு துவர்க்காயொடுசுக்குத் தின்னும்
நிலை அமண்தேரரை நீங்கி நின்று,நீதர்அல்லார்தொழும் மா மருகல்,
மலைமகள் தோள் புணர்வாய்! அருளாய்-மாசு இல்செங்காட்டங்குடிஅதனுள்
கலை மல்கு தோல் உடுத்து எல்லி ஆடும் கணபதியீச்சரம்காமுறவே?
பொருள்: மருதமரத்துஇலையின்சாற்றினால் சாயம் பூசிக்கொண்டு,கடுக்காய்,சுக்கு இவற்றைத் தின்னும் புத்தர்,சமணர் ஆகியோரைவிடுத்து,சைவர்கள்தொழத்திருமருகலில்மலைமகளோடுஉறையும்மைந்தனே! குற்றமற்றசெங்காட்டங்குடியில் மான் தோலைஉடுத்தி நள்ளிருளில்ஆடுதற்குஇடனாய்க்கணபதியீச்சரத்தைக்காமுறுதற்குக் காரணம் யாதோ?சொல்வாயாக.
குறிப்புரை: மருது இலை - மருத மரத்தின் இலை. துவர்க்காய் - கடுக்காய்,தேரர் - சாக்கியர்,நீதர் - இழிந்தோர்,நீசர் என்பதன் போலி. கலைமல்கு தோல் - மான் தோலாடை,எல்லி - இரவு. கடுக்காயும்சுக்கும் தின்னுதல் சமணத்துறவியர் இயல்பு போலும். நீதரல்லார்தேரரை நீங்கி நின்று தொழும்மாமருகல்எனக்கூட்டுக.
The robes of the Buddhist monks are dyed with the essence of marutham leaves. The samanars eat daily Kadukkaai (Chebulic myrobalam) and dried ginger. Thou, worshipped by those who shun the depraved Jains and Buddhists. Thou abideth at Thiru Marukal, along with the daughter of the Mountain King. Clad in deer skin, O Lord, You are dancing during night at Ganapathi-eecharam temple situated in the flawless Chen-kaattan-kudi town. Pray, tell us; what has induced You to select the above temple to dance?
Note: Marutham - A flowering hard big tree. Kadukkaai - Also known as inknut. The botanical name is Terminalia chebula Retz. It has 51 names in all the Indian languages. A very highly effective fruit for good health. The highest edible astringent.
நாலுங்குலைக்கமுகோங்குகாழிஞானசம்பந்தனலந்திகழும்
மாலின்மதிதவழ்மாடமோங்குமருகலின்மற்றதன்மேன்மொழிந்த
சேலும்கயலும்திளைத்தகண்ணார்சீர்கொள்செங்காட்டங்குடியதனுள்
சூலம்வல்லான்கழலேத்துபாடல்சொல்லவல்லார்வினையில்லையாமே.11
நாலும்குலைக் கமுகு ஓங்கு காழிஞானசம்பந்தன்,நலம் திகழும்
மாலின் மதி தவழ் மாடம் ஓங்கு மருகலில்மற்று அதன்மேல் மொழிந்த,
சேலும்கயலும்திளைத்த கண்ணார் சீர் கொள் செங்காட்டங்குடிஅதனுள்
சூலம் வல்லான் கழல் ஏத்து,பாடல் சொல்ல வல்லார் வினை இல்லைஆமே.
பொருள்: தொங்குகின்றகுலைகளோடு பாக்கு மரங்கள் ஓங்கி வளரும்€காழிப்பதியினனாயஞானசம்பந்தன்,நலம் இகழ்வதும்,மேகமும்பிறையும் தவழும் மாடங்கள்ஓங்கியதுமானதிருமருகல்இறைவனையும்,சேல்கயல் ஆகிய மீன் வகைகளை ஒத்த கண்களை உடைய மகளிர் வாழ்வதும் சிறப்பு மிக்கதும் ஆகிய செங்காட்டங்குடியில்முத்தலைச் சூலம் ஏந்தியவனாய் விளங்கும் பெருமானையும் புகழ்ந்து ஏத்தியபாடல்களைச்சொல்லித் துதிக்க வல்லார்வினைகள்இல்லையாகும்.
குறிப்புரை: நாலும் - தொங்குகின்ற. மாலின் மதி தவழ் மாடம் - மேகத்தோடுபிறையும்தவழ்கின்றமாடங்கள். திளைத்த - ஒத்த. சூலம் ஞானப்படையாய்மலமாயாகன்மங்களைப்போக்குவதாகலின், சூலம் வல்லான் கழல் ஏத்து பாடல் வல்லார் வினை இல்லையெனக் காரணம் குறிப்பித்தருளினார்கள்.
Gnaana-Sambandhan of Kaazhi where abound tall araca trees in which clusters of flowers and fruits are hanging. He has sung these weal-conferring hymns, hailing the Lord of Marukal. Over the lofty mansions of this place the moon and clouds sail. The Lord of this glorious Chen-kaattan-kudi wields a trident in His hand. Here live damsels whose eyes are as beautiful as those of cale and kayal fish. The Karma of those who recite these verses in devotion and with sincerity will cease to be.
திருச்சிற்றம்பலம்
6ஆம் பதிகம் முற்றிற்று
உ
சிவமயம்
7. திருநள்ளாறும்திருஆலவாயும்
திரு-ஆலவாய் (மதுரை)
திருத்தலவரலாறு:
திருஆலவாய் (மதுரை) என்ற திருத்தலத்திற்குத்தமிழகத்தின் அனைத்துப் பெருநகர்களில்இருந்தும் இரயில்,பேருந்துகளில்செல்லலாம். இத்தலத்திற்கு மதுரை,நான்மாடக் கூடல், திருஆலவாய்,கடம்பவனம்,துவாதசாந்தபுரம்,பூலோகக் கயிலாயம்,சிவராஜதானி,கன்னிபுரீசம், ஜீவன்முத்திபுரம்,சிவநகரம்எனப் பல பெயர்கள்தலபுராணநூல்களிற்கூறப் பெற்று உள்ளன. இது பாண்டிய நாட்டின் தலைநகரம். கடைச்சங்கமிருந்து தமிழ் ஆராய்ந்த தலைநகர். சொக்கலிங்கப்பெருமான்64திருவிளையாடல்களைஇயற்றிய தனி நகரம். மூர்த்தி நாயனார் விபூதி, உருத்திராக்கம்,சடைமுடி என்ற மூன்றனையும்துணைக் கொண்டு மும்மையால்உலகாண்டதலைநகரம். சைவங்காத்ததிருஞானச்செம்மலும்,மங்கையர்க்கரசியாரும்,குலச்சிறையாரும், நெடுமாறநாயனாரும்எழுந்தருளிய இடம். இந்திரன்,வருணன்,முருகன்,விநாயகர் முதலிய தேவர்கள்வழிபட்டுப் பேரின்பம் எய்திய தலம். மணிவாசகப்பெருந்தகை மந்திரியாக இருந்து, திருவாசகத்தேனைவடித்தெடுத்த திருப்பதி. தருமைஆதீனமுதற்பெருங்குரவர்குருஞானசம்பந்தசுவாமிகள்சொக்கலிங்கப்பெருமானைப் பெற்ற இடம். இவர் திருவுருவம் சொக்கநாதர்சந்நிதிக் கோபுர வாயில் குடவறையில் உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலிக்கும்திருச்செந்தூருக்கும் உள்ள நெடுஞ்சாலையில்திருவைகுண்டம் என்ற ஊர் பொருநை (தாமிரவருணி) நதிக்கரையில் உள்ளது. அந்த ஊரின்கண்கைலாசபுரம் என்று ஒரு பகுதி உள்ளது. அங்கு பரம்பரையாகத்தமிழ்ப்புலமையும்,முருகக்கடவுளதுபக்தியும் வாய்ந்த சைவவேளாளர்குலத்தில்சண்முகசிகாமணிக் கவிராயர் என்ற ஒருவர் தம் மனைவியாரானசிவகாமசுந்தரிஅம்மையாரோடுவாழ்ந்து வந்தார். அவ்விருவருக்கும்அருமகவாக ஒரு ஆண் குழந்தை உதித்தது (1625-1686; 24- 06-1625இல் பிறந்தார் என்றும்8-05--1688இல் முத்தி பெற்றார் என்றும் காசிமடத்தார்கணித்துக்கடைப்பிடித்து வருகின்றனர்). ஐந்து வயது வரை அக்குழந்தை பேசாமல் இருந்ததை அறிந்த பெற்றோர்கள் உளம் நொந்து திருச்செந்தூர் முருகப்பெருமானிடம்குழந்தையைக் கொண்டு விட்டு பாடு கிடந்தனர். முருகப் பெருமான் பேரருளினாலேஅருமைப்புதல்வர்க்குஆறுமுகச்செவ்வேளின்அருட்திரு வடிவம் அவர் உள்ளக்கண்ணிற்குப்புலனாயிற்று. அவ்வடிவத்தையேநினைந்து தொழுதிருக்கும் நாளில் ஒரு நாள் குமரவேள்அடிகட்குத் தோன்றி “நீ யார்?”என்று வினவிஅருளியவுடன்அக்குழந்தைவாய்திறந்து “அடியேன்” என்றது. முருகப் பெருமான் அவர்க்குச்சைவசித்தாந்த உணர்ச்சி நல்கி - “குருபரன்”: என்ற திருப்பெயருமிட்டுமறைந்தருளினார். அவரது வாக்கிற்கு எங்கு தடை ஏற்படுகின்றதோ அங்கு பரஞானம் கிட்டுமென்றும்அறிவுறுத்தப்பெற்றார். அத்தருணத்தில் அடிகள் முருகப்பெருமான்மீது கந்தர் கலிவெண்பா என்ற பொருள் வளமும்,சாத்திரக்கருத்துக்களும் கொண்ட பாமாலை சாத்தி வழிபட்டார். இறையருள் கிடைத்து விட்டால் அறிவின் துணைக் கொண்டு பெறவேண்டியதுஅனைத்தும் தாமேவந்துவிடும்என்பதைச் சேக்கிழார் பெருமான் திருஞானசம்பந்தர்புராணத்தில்அற்புதமாக எடுத்துக் காட்டியுள்ளார்.
“உவமையிலாக்கலைஞானம்உணர்வறியமெய்ஞ்ஞானம்
தவமுதல்வர்சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில் ” - பெரியபுராணம்
அன்று முதல் பெற்றோர்கள் அக்குழந்தையை “குமரகுருபரன்” என்று அழைக்கலாயினர்.அதிலிருந்து அடிகள் தூய தவவேடத்துடன் துறவு வாழ்க்கை நடத்துவாராயினர். குமரகுருபரர்தல: யாத்திரை மேற்கொண்டு பல தலங்களையும்தரிசித்து மதுரை வந்துஆலவாய்ப்பெருமானையும்,அங்கயற்கண்ணியையும் தொழுது வணங்கி,மீனாட்சி அம்பாள் மீது பிள்ளைத் தமிழ் பாடி அருளினார்கள். அதுகாலைமதுரையில் திருமலை நாயக்கர்என்பவர் அரசு வீற்றிருந்தார். திருமலை நாயக்கர்கனவிலே மீனாட்சி அம்மை தோன்றி “என் புதல்வன் திருவருள் பெற்றுப் பாடியசெந்தமிழ்ச்சிறுநூலை நான் கேட்க விரும்புகின்றேன். ஆவனசெய்வாயாக” என்று சொல்லி மறைந்தாள். அரசன் அதிகாலை எழுந்து அமைச்சர் முதலியோரை அழைத்து,தான் கனவில்கண்டதைக் கூறி அப்பெரியவர் யார் என்று வினவ,அதற்கு அவர்கள் குமரகுருபரஅடிகளைப் பற்றி எல்லா விபரங்களையும்தெரிவித்தனர். அரசன் அவரை அணுகி வணங்கி,தான் கண்ட கனவையுங்கூறி,தானும்அச்சிறுகாப்பியத்தைக் கேட்க விரும்புவதாகத் தெரிவித்தான். அடிகள் அவ்வாறே ஆகுக” என்று பணித்துத் திருநீறு அளித்தார். நாயக்கர் அதனை ஏற்று அணிந்து நன்னாள் ஒன்று குறித்து,அந்நாளிலேஅரங்கேற்றந்தொடங்குவித்தார். அடிகள் அங்கயற்கண்நாயகியை வணங்கி அரசன்,அமைச்சர்கள் முதலிய யாவருங்கூடியபேரவையில்அனைவரும் பெருமகிழ்வெய்தும் வண்ணம் பிள்ளைத்தமிழினை தமது பெருஞ்சொல்லால்'விளக்கிக் கொண்டு இருந்தார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பருவமாகப் படித்து வரும் பொழுது, ஒருநாள் வருகைப் பருவம் படித்துக் கொண்டிருந்தார். அச்சமயம் அங்கயற்கண்ணி அம்மை ஒரு குழந்தை வடிவம் கொண்டு திருமலை நாயக்க மன்னன் மடிமீதுவீற்றிருந்தாள். அவ்வருகைப்பருவத்தில் “தொடுக்குங்கடவுட்பழம்பாடல்தொடையின்பயனே” என்ற திருப்பாடலைப்பாடியபொழுது திருமலை நாயக்கர்மடியிலிருந்த குழந்தை எழுந்து முத்துமாலை ஒன்றை அடிகள் கழுத்திலிட்டுமறைந்தருளினாள். ஆலவாயில் இறைவன் இது போன்றுநேரடியாகவும்சிவனடியார்கள்மூலமாகவும் செய்த அருட்செயல்கள்பலப்பல. பாண்டிமாதேவிமங்கையர்க்கரசியார் தன் நாட்டில் சமணம் ஒங்கிவளருவதைக் கண்டு மனம் வருந்தி வாடுகிறார். சைவம் தழைக்க வேண்டி ஆலவாய்ப்பெருமானை உள்ளம் உருகித்தினமும் பிரார்த்தித்து வருகிறார். அதுசமயம்,திருஞானசம்பந்தப் பெருமான் திருமறைக்காட்டில்எழுந்தருளிஇருப்பதைக்கேள்வியுற்று,அவரை மதுரைக்கு அழைத்து வர ஏற்பாடுகள் செய்து வரவழைத்தார். திருஞானசம்பந்தர்அடியார்களுடன்மதுரைக்குஎழுந்தருளி ஒரு மடத்தில்தங்கினார். சமணார்கள்இதைக்கேள்வியுற்று,மனம் புழுங்கிதிருஞானசம்பந்தர்தங்கியிருந்தமடத்திற்குத் தீ வைத்தனர். தீயானதுமடத்தில்இருந்தவர்களைப்பாதிக்காமல் ஒரு பகுதி தீப்பற்றிஎரிந்தது. இதனை அறிந்த திருஞானசம்பந்தர், 'இத்தீ அரசன் முறை செய்யாமையால்நேர்ந்ததாகும்;ஆதலால்,இத்தீஅவனைச் சென்று பற்றுதலேமுறையாயினும், மங்கையர்க்கரசியாரின் மங்கல நாணுக்கு ஊறு நேராதவாறுபையச்சென்றுபாண்டியனைப்பற்றுவதாகுக” என்று கூறி,
“செய்யனேதிருஆலவாய்மேவிய
ஐயனே அஞ்சல் என்று அருள் செய் எனப்
பொய்யராம்அமணர்கொழுவுஞ் சுடர்
பையவே சென்று பாண்டியற்கு ஆகவே”
இப்பதிகம் பாடினார். பாண்டி மன்னன் வெப்பு நோயால்வாடினான். சமணமுனிவர்கள்அரசனைக்குணப்படுத்த எவ்வளவோ முயன்றும் அரசன் நோய் தீரவில்லை. சமணர்களால்குணப்படுத்த முடியாத கூன்பாண்டியனது வெப்பு நோயைதிருஞான . சம்பந்தப் பெருமான் ஆலவாய்அரன்திருவடிகளைத் தொழுது கீழ்க்கண்ட பதிகத்தைப் பாடி குணப்படுத்தினார்.
“மந்திரமாவது நீறு வானவர்மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாய் உமை பங்கன் திரு ஆலவாயான்திருநீறே”
சமணமுனிவர்கள் தங்களால் குணப்படுத்த முடியாத வெப்பு நோயைதிருஞானசம்பந்தப்பெருமான் குணப்படுத்திவிட்டாரே என்று மனம் புழுங்கினா். இருப்பினும்,தருக்க வாதம் புரிவதைவிடுத்துத்தீயிலும்நீரிலும்திருஞானசம்பந்தரைவெல்லலாம் என்று எண்ணி சவால் விடுத்தனர். பிள்ளையாரும்இசைந்தார். சமணர்கள் தங்கள் நூற்பொருள்எழுதப்பெற்றஏட்டினைத்தீயில்இட்டனர். அது எரிந்து சாம்பலாயிற்று. திருஞானசம்பந்தர் தாம் அருளியதிருப்பதிகச்சுவடியைக்கொணரச் செய்து,வழிபட்டு,அதில் கயிறு சாத்திப் பார்த்தனர்.
“போகமார்த்தபூண்முலையாள்தன்னோடும்பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண் வெள்ளேற்றண்ணல்பரமேட்டி
ஆகமார்த்ததோலுடையன்கோவணஆடையின்மேல்
நாகமார்த்தநம்பெருமான்மேயதுநள்ளாறே"
என்ற திருநள்ளாற்றுப் பதிகம் உதயமாயிற்று. அந்த ஏட்டினைநள்ளாற்றுஇறைவனைப் போற்றி அவ்வேடுஅனலிடைவேகாதிருக்க வேண்டி “தளிரிளவளரொளி: என்றதொரு திருப்பதிகம் பாடி எடுத்த ஏட்டைத்தீயில் இட்டார். அவ்வேடு,தீயில்எரியாதுமுன்னையினும்பச்சென்றிருந்தது. ஆதலால்,அப்பதிகம்பச்சைப் பதிகம் என்று போற்றப்பெறுவதாயிற்று. சமணர்கள் ஓர் வாதினைமும்முறை செய்து முறை காணுதலேமுறையாகும்எனக்கூறிப்புனல் வாதம் செய்ய அழைத்தனர். சமணர்கள் தங்கள் சமய உண்மையாகக் கூறும் “அஸ்தி நாஸ்தி” என்ற வசனத்தை எழுதி வைகை ஆற்றில் இட்டனர். அந்த ஏடு ஆற்று நீரோட்டத்தைஎதிர்க்கும் ஆற்றல் இன்றி நீரோடும்நெறியிலேயே விரைந்து ஓடிற்று. திருஞானசம்பந்தர், “திருப்பாசுரம்” எனப்படும்
“வாழ்க அந்தணர் வானவர்ஆனினம்
வீழ்கதண்புனல்வேந்தனும்ஓங்குக
ஆழ்கதீயதெல்லாம்அரன்நாமமே
சூழ்கவையகமும் துயர் தீர்கவே”
..என்ற திருப்பதிகத்தைஅருளிச் செய்து அதனை ஏட்டில்எழுதச் செய்து அந்த ஏட்டை வைகை ஆற்றில் இட்டு அருளினார். ஏடு வைகை ஆற்று வெள்ளத்தைக் கிழித்து எதிர் ஏறிச் சென்றது. “வேந்தனும்ஒங்குக* என்று அருளிச் செய்தமையால் பாண்டிய மன்னனின் கூன் நிமிர்ந்து நின்றசீர்நெடுமாறன்ஆயினான். மந்திரி குலச்சிறையார்குதிரையின்மீது ஏறி ஏட்டினைத் தொடர்ந்து சென்றார். ஏடு வைகையின்வடகரையில் அமைந்த ஒரு கோவிலின் அருகே சென்று நின்றது. ஏடு நின்ற கோயில் திருவேடகம்எனப் பெயர் பெற்றது. குலச்சிறையார் அதனை எடுத்து திருஞானசம்பந்தரிடம்சோப்பித்தார்.
இவ்வாறு பற்பல அற்புதங்கள் நடந்த இடம் திருஆலவாய் என்னும் திருக்கோவிலைஉள்ளடக்கிய மதுரையம்பதி ஆகும். திருஞானசம்பந்தப் பெருமான் “கூடலாலவாய்க்கோனை” எனக்குறிப்பிடுவதால் கூடல் மதுரை என்பனதலப்பெயராகவும்ஆலவாய் என்பது கோயிற்பெயராகவும்இருக்கலாமோ என ஐயுறஇடமுண்டு. இறைவன் சொக்கலிங்க மூர்த்தி,அம்மை மீனாட்சியம்மை. தலவிநாயகர்சித்திவிநாயகர். தலவிருட்சம்கடம்ப மரம். தீர்த்தம் பொற்றாமரை. எழுகடல்,வைகை முதலியன. விமானம் விண்ணிழிவிமானமாகியஇந்திர விமானம். இதனை இந்திரன் கொண்டு வந்து வைத்துச்சோமசுந்தரக்கடவுளைப்பூசித்தான். இவ்விமானம் எட்டு யானைகளால்தாங்கப் பெறுவது. மன்று - வெள்ளிமன்று;இரசதசபை என வழங்கும். இங்கே இராசசேகர பாண்டியன் வருந்தி வணங்கி வேண்டியதற்காகப் பெருமான் இடது காலையூன்றிவலது காலைத் தூக்கி மாறி ஆடினார்.
மண்டபம்:
“மண்டபங்கள்நாயன்” என்பது. இதனை சாலிவாகனசகம்1448இல்சென்னப்ப நாயகர் என்பவர் திருப்பணி செய்வித்தார். இன்னும் சுவாமி கோயிலில் அர்த்த மண்டபம்,மகா மண்டபம், மணி மண்டபம்,அறுகாற்பீடம் முதலியன இருக்கின்றன. இவற்றைக்கட்டுவித்தவன்குலசேகரபாண்டியன். மீனாட்சியம்மன் சந்நிதியில் அஷ்டசித்தி மண்டபம்,மீனாட்சி நாயக்கர் மண்டபம் முதலிய மண்டபங்கள் இருக்கின்றன. இவையன்றிக்கல்யாண மண்டபம்,ஆயிரங்கால் மண்டபம், வீரவசும்புரானா மண்டபம்,ஆடிவீதிநிருதிவீதி மண்டபம்,சம்பந்தர் மண்டபம்,அறுபத்துமூவர் மண்டபம் முதலியனவும்விளங்குகின்றன. அவற்றுள்ஆயிரங்கால் மண்டபம் சகம்1494இல்அரசாண்டகிருஷ்ணவீரப்பநாயக்கரது திருப்பணி என்று சொல்லுகிறார்கள். சொக்கநாதப்பெருமான் கோயிலின் திருவாயில்முத்தளத்தின்திருவாயில் என்று சொக்கநாதர் உலா கூறுகிறது.
சொக்கலிங்கப்பெருமானுக்குஅட்டாலைச் சேவகன்,அடியார்க்குநல்லான்,அதிரவீசிஆடுவான்,அபிடேகச் சொக்கன்,பண்ணிசைச் சொக்கன் முதலான பல பெயர்கள்வழங்குகின்றன. அம்மைக்குஅபிஷேகவல்லி,அங்கயற்கண்ணி,தமிழ் அறியும் பெருமாட்டிமுதலிய பல நாமங்கள் உள்ளன.
கல்வெட்டு:
மதுரை தொன்றுதொட்டேவரலாறுடைய தலம். கி.மு.302இல்பாடலிபுத்திரத்தில்அரசாண்டசந்திரகுப்தன்அவையில்செலுக்கஸின்தூதனாக வந்த மெகஸ்தனிஸ் பாண்டிய நாட்டையும்மதுரையையும்குறிப்பிடுகிறார். கி.பி.140இல்தாலமியும்குறிப்பிடுகிறார். சங்க இலக்கியங்கள் மதுரையின் இயற்கை வளத்தை எடுத்து இயம்புகின்றன. உலகப்பொதுநூலாகியதிருக்குறள் அரங்கேறிய இடமும் இதுவே. முதலாம் நெடுஞ்செழியன் முதல் பல பாண்டிய மன்னர்களினுடைய நிகழ்ச்சிகள் குறிக்கப்பெறுகின்றன.
இத்தலத்தைப்பற்றியகல்வெட்டுக்களாகசுந்தரேஸ்வர ஸ்வாமி கோயிலிலும்,மதனகோபால சுவாமி கோயிலிலும்,கூடல் அழகர் கோயிலிலுமாக35கல்வெட்டுக்கள் உள்ளன.17 தாமிரசாஸனங்கள் உள்ளன. அவற்றுள்36 (1909)கல்வெட்டு எண் கொண்ட பெருமாள் கோயிலில் உள்ளது.557 எண் கொண்ட முதல் மூன்று கல்வெட்டுக்கள்கூடலழகர்கோயிலைப்பற்றியன. செப்புப்பட்டயங்களில்6,அந்தணார்களுக்கும்பூந்தோட்டத்துக்குமாககிருஷ்ணப்பநாயக்கர் ராணி ரங்கம்மாள் இவர்கள் நிலம் அளித்தமையை அறிவிக்கின்றன.6செப்புப்பட்டயங்கள் சேது மன்னர்கள் செய்த அறச்செயல்கள்அறிவிப்பன. ஏனையனசுந்தரேஸ்வரர்கோயிலுக்கும்மீனாட்சியம்மைகோயிலுக்கும் செய்த பல பணிகளை அறிவிக்கின்றன. ஜடாவர்மன்குலசேகர பாண்டியன்,மாறவர்மன் சுந்தரபாண்டியன்,பராக்கிரம பாண்டியன், வீரபாண்டியன்,ஸ்ரீவல்லபன் முதலிய பாண்டிய மன்னர்கள்திருக்கோயிலுக்கு நிலம் அளித்ததையும்வரி தள்ளுபடி செய்ததையும்,வரி வசூலித்துக் கொள்ள உரிமை அளித்ததையும் அறிவிக்கின்றன. 507 எண் கொண்ட (1907)கல்வெட்டில்ஸ்ரீவல்லப தேவன் காலத்தில் சோமசுந்தரப்பெருமாளுக்குஇருசந்நிதியிலும் நந்தவனம் அமைத்த செய்தி அறிவிக்கப்படுகின்றது. இவள் ஏழுலகம் முழுதுடையாள் எனவும் வழங்கப்படுகிறாள். கி.பி.1572 முதல்1595 வரை அரசாண்டவீரப்பநாயக்கர்கம்பத்தடிமண்டபத்தைக் கட்டினார் (35 எண் கொண்ட -1906).ஒரு செப்புப் பட்டயம் ஞானக்கூத்தரானசத்தியஞானதரிசினிமடத்திற்கு நிலம் விட்டதையும், (160)கல்வெட்டு ஆமர்த்தமடம் நந்திகேஸ்வர சந்தானம் சைவஆச்சார்யரானஞானமூர்த்திக்குமேலக்குடி நாட்டு வடகரைவாரணவாசி பட்டணத்து அண்ணன் விழுப்பாதராசன் மனம் பிரியான் மடம் என ஒன்றைக் கட்டிப் பத்துமா பூதானம் வழங்கினான் என்ற செய்தியையும்குறிக்கிறது. நரலோகசூரியன்திருமடம்என்றும்,அன்னதான மடம் என்றும் சில மடங்களின்பெயர்கள்குறிக்கப்படுகின்றன.
திரு-நள்ளாறுதிருத்தலவரலாறு:
திருநள்ளாற்றுத்திருத்தலமானதுசோழநாட்டுக்காவிரித்தென்கரைத் தலம். நாகை மாவட்டத்தில் காரைக்காலை அடுத்து உள்ளது. பேரளம்,காரைக்கால்,கும்பகோணம், மயிலாடுதுறை,நாகை ஆகிய ஊர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது. இது அரசிலாற்றுக்கும்வாஞ்சநதிக்கும் நடுவில் இருப்பதால் நள்ளாறு என்று அழைக்கப்படுவதாயிற்று. தர்ப்பாரணியம், நகவிடங்கபுரம்,நளேசுரம்என்பன இதன் மறுபெயர்கள். இது சப்தவிடங்கத்தலங்களுள் ஒன்று. நளன் வழிபட்ட தலம். இறைவன் பெயர் - நள்ளாறர். இறைவி பெயர் - போக மார்த்தபூண்முலையம்மை. விநாயகர் - கற்பக விநாயகர்,சொர்ணவிநாயகர்;தியாகர் - நகவிடங்கத்தியாகர்;அம்மன் - நீலோற்பலாம்பாள்;நடனம் - உன்மத்த நடனம். இத்தலத்தில் சனி பகவான் சந்நிதி மிகச்சிறப்பு உடையது.
பதிக வரலாறு:
திருக்கொள்ளம்பூதூரைவழிபட்டசிரபுரச்செல்வராகியதிருஞானசம்பந்தப் பிள்ளையார். மதுரையில்பாண்டியனதுஅவைக்களத்திலே,அனல் வாதத்தில்பச்சைப்பதிகமாக இருந்த “போகமார்த்த* என்னும் பதிகம் பெற்ற தலமாகியதிருநள்ளாற்றை அடைந்து “பாடகமெல்லடிப்பாவை” என்ற இப்பதிகத்தைப்பாடியருளுகிறார்கள்.
இதில் நள்ளாறுடையநம்பெருமானே ! அமணா் செய்த வாதில்தீயிலிடும் ஏடு பச்சையாக்கிஎன்னுள்ளத்துணையாகி,திருஆலவாயின்கண்அமாந்தவாறு என்னை?என்று வினவிஅருளுகின்றார். பச்சைப்பதிகமும் “போகமார்த்தபூண்முலையாள்” என அம்மையைக் கொண்டு தொடங்குகின்றது. இதுவும் “பாடகமெல்லடிப்பாவையோடும்* என அம்மையையேநினைவூட்டுவதாகத்தொடங்குகின்றது. இவை ஊன்றி உணர்ந்து இன்புறுதற்குஉரியன. ஒன்று முதல் பத்துப்பாடல்களும்நள்ளாறுடைய நம் பெருமானே! நீ ஆலவாயினைவிரும்பியவனாய்அங்கு உறைதற்குக் காரணம் யாதோசொல்வாயாக என்னும் வினை முடிபுடையன.
7. THIRU-NALL-AARU AND THIRU-AALAVAAI
THE HISTORY OF THE PLACE
THIRU-AALAVAAI (MADURAI)
This sacred city of Thiru-aalavaai (Madurai) is the capital of Paandi Naadu and can be reached by bus and train from all major towns. This temple town is known by many names, stated in the temple chronicles (Thalapuraanam books) as Madurai, Naanmaadak-koodal, Thiruvaalavaai, Kadambavanam, Dhuvaadha-saandhapuram, Sivanagaram etc. The last of the Thamizh Sangam was situated here and was a centre of learning for Tamil. This is the great city that has the unique distinction of being the place where Lord Chokkalingaperumaan's divine plays of 64 holy episodes took place. This is the place which was the capital of Moorthi Naayanaar, who ruled the earth with the help of Holy Ashes (Viboothi), Uruththiraakkam (seed of Elaeocarpus), and matted hair. The guardian of Saiva faith, Lord Thiru-Gnaana-sambandar, Mangaiyark- karasiyaar, Kulach-chiraiyaar and Nedumaaranaayanaar had lively stayed in this city. This is the temple in which the gods Indhiran, Varunan, Murugan and Vinayakar worshipped and attained ultimate bliss. It is here the great Maanikkavaachakar was a royal minister and gifted to the world the sweet honey of Thiruvaachakam. The first and great Guru of the Dharmapuram Aadheenam, Guru-gnaana-sambandar obtained the grace of Lord Chokkanaathar here. His image is in the 'kudavarai' of the entrance to the shrine of Chokkanaathar. This place also has the distinction of receiving Kumaragurupara Swaamigal who sang the 'Meenaakshiammai Pillaith-Thamizh', the Goddess Herself listened to it in person.
As Saint Thiru-Gnaana-sambandar denotes this by the names, 'Koodal Aalavaai' and 'Madurai Aalavaai', there is room for the suspicion that Koodal Madhurai might be the name of the town and Aalavaai, the name of the temple. The God's name is Chokkalinga Moorthi and the Goddess, Meenakshi Ammai. The Vinayakar is known as Sidhdhi Vinayakar. The sacred tree of the site is kadamba tree. The Holy Ford is Portaamarai, with Ezhukadal and Vaihai etc. The vimaanam of the temple, Indira Vimaanam, is said to have come down from heaven, 'Vinnizhi Vimaanam'. This was brought down by Indhiran as he worshipped God Somasundarar in this town. This vimaanam is supported by eight elephants. The assembly hall is made up of Silver, known as the 'Silver Assembly Hall'. At this place, the Lord switched His dancing Feet by standing on His Left Foot and lifting up His Right Foot according to the prayers of king Raajasekara Paandiyan.
Mandapam
The mandapam (pavilion) is known as Mandapangal Naayan. This was renovated by one Chennappa Naayakar in the year 1448 of Saalivaahana Era. Besides this, there are other mandapams: the ardhamandapam of the God's shrine, the mahaamandapam, manimandapam, Arukaarpeedam etc. These were built by Kulasekara Paandiyan. In the shrine for Goddess Meenakshi, there are mandapams such as Ashtasidhdhi Mandapam, Meenaakshi Naayakkar Mandapam etc. In addition, there are also the Kalyaana Mandapam, Aayirangaal (thousand-pillared) Mandapam, Veeravasumpuraana Mandapam, Aadiveedhi Niruthi Mandapam, Sambandhar Mandapam, and Arupaththumoovar Mandapam, etc. Of these, the thousand-pillared mandapam is said to be due to the endowment by Krishna Veerappa Naayakkar, who ruled in the year 1494 of the Saalivaahana era. The holy entrance to the shrine of Lord Chokkanaathar is called the entrance to the three levels by the Chokkanaathar Ulaa. Lord Chokkalingar is called by many names, such as Attalaich Chevakan, Adiyaarkku Nallan, Adhiraveesi Aaduvaan, Abidekach Chokkan and Pannisaich Chokkan. The Goddess is known by many names too, such as Abishekavalli, Angayarkanni and Thamizh Ariyum Perumaatti.
Stone Inscriptions
Madurai is a place with an ancient history. Megastanis, the envoy of Seleucas to Chandhira Guptan who ruled in Paatalipuram in 302 BC, refers to the Paandiyan country and Madurai. Ptolomy also refers to this place in 140 CE. The Sangam literature speaks of nature's bounty in Madurai. It is here that Thirukkural, the universal book, was first presented to the world. Episodes relating to many Paandiyan kings, starting with Nedunjchezhiyan are noted.
There are thirty-five inscriptions about this city in the three temples of Sundaresvarar, Madhanagopaala Swami and Koodal Azhagar. Copper Plate engravings of 17 are in existence. Of the inscriptions, 36 of 1938 are located in Perumaal temple. Three inscriptions, from 557 are about the Koodal Azhagar temple. Of the copper plate engravings, 6 give information on Rangammaal's (Queen of Krishnappa Naayakkar) gift of land for andhanars and for flower gardens and six other various works done for the Sundareswarar temple and Meenakshi Ammai Temple. The endowments, tax remissions and tax-collection rights granted by many of the Paandiya kings, such as Jatavarman Kulasekara Paandiyan, Maaravarman Sundara Paandiyan, Parakkirama Paandiyan, Veera Paandiyan, and Sri Vallaban are mentioned in these. In the inscription 507 of 1907, the information is given that Sri Vallabadevan arranged to create flower gardens to supply flowers for the two shrines of Lord Somasundarar. Veerappa Naayakkar, who ruled between 1572 and 1595 CE, had the Kambaththadi Mandapam built (35 of 1908). A copper plate speaks of the land gift to the matam of Gnaanakkoththaraana Saththiyagnaana Dharshini and an inscription 160 refers to the information that one Melakkudi Naattu Vadakarai Vaaranavaasi Pattanaththu Annan Vizhuppaadharaasan had built a 'Manam Piriyaan Matam' and gifted ten maa of land to Amarththa Matam Nandhikeswara Santhaanam Saiva Achchaaryar Gnaanamoorthi. Certain other matams are named as Naraola Sooriyan Thirumatam and Annadhaana Matam.
THIRU-NALLAARU
THE HISTORY OF THE PLACE
This sacred city of Thiru-nallaaru is on the south bank of river Cauvery in the Chola country. It is in the Naagapattinam district, next to Kaaraikkaal. Buses ply from Peralam, Kaaraikkaal, Kumbakonam, Mayilaaduthurai, Naagapattinam etc. to this place. As this place is situated between two rivers, Arasilaaru and Vaanjchanadhi, it came to be known as Nallaaru. Its other names are Tharppaaranniyam, Nakavidangapuram, and Nalesuram. This is one of the seven''vidanga' temples. It was here that Nalan offered worship.
Ammai.
The God's name is Nallaarar and that of the Goddess Bogamaarththa Poonmulai Vinaayaka here is known as Karpaka Vinaayakar, Sorna Vinaayakar. Thiyaagar is Nakavidangath Thiyaagar and the Mother is Neelorpalaambaal. The dance here is the frenzy (Unmatha) dance. The shrine for Sani (Planet Saturn) is of particular importance here.
INTRODUCTION TO THE HYMN
In the test by fire, our saint vanquished the samanars. His palm leaf hymn of Nallaaru when consigned to the raging fire, remained not only unburnt but also fadeless and fresh. He returned from Madurai and continued his pilgrimage. After visiting Kollam-puthur, he arrived at Nallaaru and hailed the Lord in the following hymn. In the town Koodal (Madurai) golden mansions exist everywhere. Ladies wearing bangles in their hands visit the Aalavaai temple with their husbands and offer worship.
7.திரு நள்ளாறும்திருஆலவாயும்
பண : நட்டபாடை
ராகம் : கம்பீரநாட்டை
பாடகமெல்லடிப்பாவையோடும்படுபிணக்காடிடம்பற்றிநின்று
நாடக மாடுநள்ளாறுடையநம்பெருமானிதுவென்கொல்சொல்லாய்
சூடகமுன்கைமடந்தைமார்கள்துணைவரொடுந்தொழுதேத்திவாழ்த்த
ஆடகமாடநெருங்குகூடல்ஆலவாயின்கணமர்ந்தவாறே. 1
பாடகமெல்அடிப்பாவையோடும்,படு பிணக்காடு இடம் பற்றி நின்று,
நாடகம்ஆடும்,நள்ளாறு உடைய,நம்பெருமான் இது என்கொல்சொல்லாய் -
சூடகமுன்கைமடந்தைமார்கள்துணைவரொடும் தொழுது ஏத்தி வாழ்த்த,
ஆடகமாடம் நெருங்கு கூடல் ஆலவாயின் கண் அமர்ந்தஆறே?
பொருள்: பாடகம் என்னும் அணிகலன் அணிந்த மென்மையான அடிகளை உடைய உமையம்மையோடு,பிணக்காடாகியஇடுகாட்டைப் பற்றி நின்று நாடகம் ஆடும் நள்ளாற்றுநம் பெருமானே! கையில் வளையல் அணிந்த மகளிர் தம் துணைவர்களோடும் கூடி வந்து வழிபடும்படியாய்ப் பொன் மாளிகைகள் நிறைந்த கூடல் ஆலவாயின்கண் நீ விரும்பிஉறைதற்குக் காரணம் யாதோ?சொல்வாயாக.
குறிப்புரை: பாடகம் - காலணிகளுள் ஒன்று. பாடக,மெல்லடி என்று இணைத்ததுபாடகத்தின்வன்மையும்அதனைத் தாங்கல் ஆற்றாதஅடியின்மென்மையும்குறித்தவாறு. சூடகம் - வளை. துணைவர் - கணவர். ஆடகமாடம் - பொன் மாளிகைகள்.
குருவருள்: பாண்டி நாட்டில் மூன்று வாதங்களிலும் வெற்றி கொண்டு சைவசமயத்தைநிலைநிறுத்தியபிள்ளையார்,பாண்டியன் நெடுமாறன்,மங்கையர்க்கரசியார்,குலச்சிறையார் ஆகிய மூவரும் பிரிவாற்றாதுஉடன்வர பாண்டி நாட்டுத்தலங்களைத்தரிசித்துப் பதிகம் பாடிப் பாண்டி நாட்டுக்கீழ் எல்லையில் உள்ளதும் குலச்சிறையார்அவதரித்ததுமானமணமேற்குடி வந்து வழிபட்டுச்சுற்றியுள்ள பல பதிகளையும்வணங்கிப்போற்றினார். காவிரி நாடு மீண்டருளத் திருவுள்ளம் பற்றினார். தன்னோடு. உடன் வந்த மன்னன் முதலிய மூவரும் பிரிவாற்றாதுஉடன்வரும் குறிப்பு நோக்கிய பிள்ளையார்,இங்கு நான் மொழிந்ததனுக்குஇசைந்தீராகில்ஈசர்சிவநெறி போற்றி இருப்பீர் என்று அவர்கட்குவிடைகொடுத்துப்பொன்னி நாடு அணைந்தார். பாண்டி நாட்டில் அனல்வாதம்செய்தகாலை கயிறு சாத்திப்பார்த்தபோது“போகமார்த்தபூண்முலையாள்” என்னும் திருநள்ளாற்றுப் பதிகம் கிடைத்தது. அதனால் வெற்றியும்கிடைத்தமையைத் திருவுள்ளம் : கொண்டு நள்ளாறு சென்று வழிபட எண்ணினார். வழியில் திருக்கொள்ளம்பூதூர் முதலிய தலங்களைவழிபட்டுத் திருநள்ளாறு சேர்ந்து நம்பெருமானைப்'பாடகமெல்லடிப்பாவையோடும்'என்னும் பதிகத்தால் பெருமான் நடத்திய நாடகத்தை "நாடகம் ஆடும் நள்ளாறுடையநம்பெருமான் இது என்கொல்சொல்லாய்?'என்று வினவினார். பிள்ளையார் இத்தலத்துஇறைவனை “நள்ளாறுடையநம்பெருமான் ” என்றே இப்பதிகப் பாடல் அனைத்திலும்குறிப்பிட்டுள்ளார். தர்ப்பாரண்யேசுரர் என்று இன்று வழங்கும் பெயர் குறிக்கப்பெறாமைசிந்திக்கத்தக்கது.
O Lord, tell us the reason why You had a desire to be entempled at the Aalavaai temple in the city of Koodal. Thou, that danceth in the forests of dead bodies along with Umaa Devi of soft heal bedecked with ornaments.
Note: Koodal: Madurai is known as Naan-maada-k-koodal. When Varuna sent the seven great clouds to Madurai to destroy it with their downpour, Siva bade a set of four clouds to form themselves into a foursome palladium (safety towers) nullifying the disastrous downpour. Since that day Madurai came to be known as Naan-maada-k-koodal.
The Lord's desire to stay at () is mentioned by our saint in order to highlight the sanctity of this shrine.
திங்களம்போதுஞ்செழும்புனலும்செஞ்சடைமாட்டயல்வைத்துகந்து
நங்கண்மகிழுநள்ளாறுடையநம்பெருமானிதுவென்கொல்சொல்லாய்
பொங்கிளமென்முலையார்களோடும்புனமயிலாடநிலாமுளைக்கும்
அங்கழகச்சுதைமாடக்கூடல்ஆலவாயின்கணமர்ந்தவாறே.2
திங்கள் அம்போதும்செழும்புனலும்செஞ்சடைமாட்டு அயல் வைத்து உகந்து
நம் கண் மகிழும்,நள்ளாறு உடைய நம்பெருமான்! இது என்கொல்சொல்லாய் -
பொங்கு இளமென்முலையார்களோடும்புனமயில் ஆட,நிலா முளைக்கும்
அம்கழகச்சுதைமாடக் கூடல் ஆலவாயின் கண் அமர்ந்தஆறே?
பொருள்: பிறைமதி,அழகிய மலர்கள், .வளமான கங்கை நதி. ஆகியவற்றைத் தன் செஞ்சடையின்மேல் அருகருகே வைத்து மகிழ்ந்து நம்கண்களிக்குமாறுநள்ளாற்றின்௧கண் எழுந்தருளியநம்பெருமானே! பூரித்து எழும் மென்மையான இளைய தனங்களை உடைய மடந்தையரோடுகானகத்தில் வாழும் ஆண் மயில்கள்கூடலில்களித்தாடுகின்றன. பெருமை மிக்க தமிழ்ச்சங்கத்தனையும்;நிலவொளிமிகுதியாகப்பிரகாசிக்குமாறுவெண்மையானசுண்ணாம்பினால் கட்டப்பட்ட: மாடங்களையும் உடைய கூடல் ஆலவாயின்கண் நீ விரும்பி உறைதற்குக் காரணம் யாதோ?சொல்வாயாக.
குறிப்புரை: போதுவாடாமைப் புனல் வைப்பார்போல,திங்களும்வாடாத வண்ணம் செழும்புனலைச் சேர வைத்தார் என்பது சிந்தித்தற்குரியது. நங்கண் - நம்மிடத்து. மகளிரோடுமயிலாட என்றது சாயலால்வேற்றுமை தோன்றாமையால். கார் வரவால்களிப்பது மயில். கணவர் வரவால் களிப்பவர் மகளிர். ஆட்டம் ஈரிடத்தும் நிகழ்வது இயல்பு,அம்கழகம் - பெருமை மிக்க தமிழ்ச் சங்கம். நிலா - வெள்ளொளி.
O Lord God of Nallaaru! You are wearing on Your matted crest, the crescent moon, fragrant flowers and the Ganges river with plenty of water - all closeted to each other. We rejoice in seeing You like this by our naked eyes and offer our obeisance to You. The forest bound male peacocks dance with the damsels of Koodal. The famous Tamil Sangam exists here. The mansions in this town built with white slaked lime enhances the brightness of the moon light. O Lord Civa! Now tell us why You longed for and got enthroned at Aalavaai?
Note: The terrace(s): It is known as Aramiyam - "a terrace on the top of a house for a walk by moonlight" - Winslow.
தண்ணறுமத்தமும்கூவிளமும் வெண்டலை மாலையும்தாங்கியார்க்கும்
நண்ணலரியநள்ளாறுடையநம்பெருமானிதுவென்கொல்சொல்லாய்
புண்ணிய வாணரும்மாதவரும்புகுந்துடனேத்தப்புனையிழையார்
அண்ணலின் பாட லெடுக்குங்கூடல்ஆலவாயின்கணமர்ந்தவாறே.3
தண்நறுமத்தமும்கூவிளமும்வெண்தலைமாலையும் தாங்கி,யார்க்கும்
நண்ணல் அரிய நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்கொல்சொல்லாய் -
புண்ணியவாணரும் மா தவரும் புகுந்து உடன் எத்த,புனையிழையார்
அண்ணலின் பாடல் எடுக்கும் கூடல் ஆலவாயின்கண்அமர்ந்தஆறே?
பொருள்: குளிர்ந்த மணம் வீசும் ஊமத்தை மலர்,வில்வம் ஆகியவற்றையும்வெண்மையானதலை மாலையையும்அணிந்துள்ளநம்பெருமானே! உன் அருள் இருந்தாலன்றி உன்னை யாராலும் அடைந்து வழிபடற்கரியநள்ளாற்றின்கண்எழுந்தருளியவனே! புண்ணிய வாணரும்,மாதவர்களும் வந்து ஏத்துவதும்,அணிகலன்கள் புனைந்த மகளிர் உனது புகழ் சேர்ந்த பாடல்களைப்பாடுவதுமான கூடல் ஆலவாயின்கண் நீ விரும்பி உறைதற்குக்காரணம் யாதோ?சொல்வாயாக.
குறிப்புரை: தண்ணறுமத்தம் - குளிர்ந்த மணம் வீசுகின்றஊமத்தம்பூ. இறைவனுக்கு உன்மத்தசேகரன் என்பதும் ஒரு பெயர். கூவிளம் - வில்வம். தாங்கி உடைய பெருமான் என முடிக்க. யார்க்கும்நண்ணலரியநள்ளாறு - எவர்க்கும் அணுக முடியாத நள்ளாறு. என்றது நாடிழந்தும்நகரிழந்தும்மனைவியை இழந்தும் உருமாறியும்வினையைநுகர்ந்துகழித்த நளன் போன்றோரன்றிவினைச்சேடமுடையஎவர்க்கும்நணுக முடியாதது என்பதை விளக்க. புண்ணியவாணர் - சென்ற பிறவிகளில்ஈட்டிய புண்ணியம் கொண்டு வாழ்பவர்கள். மாதவர் - இப்பிறவியில் புண்ணியம் ஈட்டுவார். அண்ணலின்பாடல் - இறைவனடைய புகழ் சேர்ந்த பாடல்கள்.
O Lord God of Nallaaru! You are inaccessible to anyone, whoever he may be, unless he is already endowed with Your grace. You are wearing cool and olent unmattam, koovilam and garland of crania! Holy men and tapaswis enter Your temple and pay obeisance to You. Also bejewelled ladies are singing divine songs in the Aalavaai temple. Pray tell us why You longed for and got enthroned at the Aalavaai temple?
Note: Oomattham: Datura. Its flower is dear to Siva. Koóvilam: 'Aegle marmelos. Bael/bel/ bhel. The leaves of this tree are used in Siva archana. See Thiru-vaa-chakam - Siva Puraanam -
- அவன்தாள்வணங்கி ...
பூவினில் வாசம் புனலிற்பொற்புப்புதுவிரைச்சாந்தினினாற்றத்தோடு
நாவினிற்பாடனள்ளாறுடையநம்பெருமானிதுவென்கொல்சொல்லாய்
தேவர்கடானவர்சித்தர்விச்சாதரர்கணத்தோடுஞ்சிறந்துபொங்கி
ஆவினிலைந்துகந்தாட்டுங்கூடல்ஆலவாயின்கணமர்ந்தவாறே.4
பூவினில் வாசம்,புனலில்பொற்பு,புது விரைச்சாந்தினில்நாற்றத்தோடு,
நாவினில் பாடல்,நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்கொல்சொல்லாய் -
தேவர்கள்,தானவர்,சித்தர்,விச்சாதரர்,கணத்தோடும் சிறந்து பொங்கி
ஆவினில் ஐந்து உகந்து ஆட்டும் கூடல் ஆலவாயின்கண்அமர்ந்தஆறே?
பொருள்: பூக்களில்வாசனையாய்,நீரில் தண்மையாய்,புதிய சந்தனத்தில்மணமாய்,நாவில்பாடலாய்க் கலந்து விளங்கும் நள்ளாற்று நம் பெருமானே! தேவர்களும்,அசுரர்களும், சித்தர்களும்,வித்யாதரர்களும் ஆகிய கூட்டத்தினரோடு சிறந்து விளங்குபவனே! பசுவினிடம் தோன்றும் பஞ்சகவ்வியங்களால்ஆட்டிவழிபடக்கூடியவனே! கூடல் ஆலவாயின்கண் நீ விரும்பி உறைதற்குக் காரணம் யாதோ?சொல்வாயாக.
குறிப்புரை: பூவினில் வாசம் போன்று இறைவன் கலந்து நிற்கும் நிலை கூறியன.'பூவினுள் நாற்றம் நீ தீயினுள்தெறலும்நீ் என்னும் பரிபாட்டாலும் அறிக. புனலில்பொற்பு - நீரில் அழகு. புது விரைச் சாந்து - புதிதாக அரைத்து எண் வகை மணப்பொருள்களும்கூட்டப் பெற்ற சந்தனம். நள்ளாறன்ஐம்பொறிகளுக்கும்இன்பப்பொருளாய் இருக்கும் தன்மையைச் சில சொல்லித் தெரிவிக்கின்றார் பூவினில் வாசம் என்பது முதல் நாவினில் பாடல் என்பது வரை. பொற்பு - அழகு ௭ன்றது தட்பமும்தெளிவும். தானவர் - அசுரர். ஆவினில் ஐந்து - பால்,தயிர்,நெய்,கோசலம்,கோமயம் என்பன.
O Lord God of Nallaaru! You are the fragrance in flowers. You are the soothing coolness of water. You are the fresh aroma of sandalwood paste. You are the song in the tongue. Pray, tell us; what may this be? why is it You are enthroned at Aalavaai in Koodal delighting in Your ablutions of pancha-kavvya, and hailed in swelling love by the deva host Taanavas, siddhas and vidhyadaras?
Note: Pancha-kavvya: It is compounded of cow's milk, curd, ghee, cow's urine, and cow-dung. This is considered to be very sacred.
செம்பொன்செய்மாலையும்வாசிகையும்திருந்துபுகையுமவியும்பாட்டும்
நம்பும் பெருபைநள்ளாறுடையநம்பெருமானிதுவென்கொல்சொல்லாய்
உம்பருநாகருலகந்தானும்ஒலிகடல்சூழ்ந்தவுலகத்தோரும்
அம்புதநால்களானீடுங்கூடல்ஆலவாயின்கணமர்ந்தவாறே. 5
செம்பொன் செய் மாலையும்,வாசிகையும்,திருந்து புகையும்,அவியும்,பாட்டும்,
நம்பும் பெருமை,நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்கொல்சொல்லாய் -
உம்பரும்நாகர்உலகம்தானும்,ஒலிகடல்சூழ்ந்தஉலகத்தோரும்,
அம்புதம்நால்களால்நீடும் கூடல் ஆலவாயின்கண்அமர்ந்தஆறே?
பொருள்: செம்பொன்னால் செய்த மாலைகள்,திருவாசிமாலைகள்ஆகியவற்றுடன்மணப்புகை,நிவேதனம்,தோத்திரம்,முதலியவற்றையும் விரும்பி ஏற்கும் பெருமை உடைய விண்ணவரும்,நாகர்உலகத்தவரும்,ஒலிக்கும்நள்ளாற்றில் விளங்கும் நம் பெருமானே! கடலால்சூழப்பட்டமண்ணுலகமக்களும் உன்னை ஏத்துகின்றனர். நான்கு மேகங்களால்சூழப்பட்ட கூடல் ஆலவாயின்கண் நீ விரும்பி உறைதற்குக் காரணம் யாதோ?சொல்வாயாக.
திருவாசி (ஒருவகை மாலை). அவி -'நைவேத்தியம். பாட்டு - தோத்திரம். விரும்பும் பெருமை - அனைவரும் இவரேஎமக்குஅடைக்கலமாவார் என்று நம்பும் பெருமை. உம்பர் - அம்புதம்நால்களான்நீடுங்கூடல் - நான்கு மேகங்கள் கூடிய கூடல் நகர்.
குறிப்புரை: வாசிகை - திருவாசிமாலைகள்தேவர். அம்புதம் - மேகம். நால்கள் - நான்கு. நால் - நான்கு. அதன் மேற் பன்மை விகுதி நால்கள். இது அரும்பிரயோகம்.
O Our Lord God of loving kindness of Nallaaru! You are adorned with chains of ruddy gold, and the Thiru-vaachi garland. You love and enjoy the smoke of incense. You accept the oblation and enjoy listening to hymns. Koodal is extensively roofed over with four clouds. You are hailed by the heavenly devas and by the land of Nagas and by the people of this earth girdled with resounding oceans? Pray, tell us; why You longed for and got enthroned at Aalavaai?
Note: Thiru-vaachi: A type of garland. (Havis): Oblations offered in the sacrificial fire. The World of Nagas: The nether world serpents.
பாகமுந்தேவியை வைத்துக்கொண்டு பைவிரிதுத்திப்பரியபேழ்வாய்
நாகமும்பூண்டநள்ளாறுடையநம்பெருமானிதுவென்கொல்சொல்லாய்
போகமுநின்னைமனத்துவைத்துப்புண்ணியர்நண்ணும்புணர்வுபூண்ட
ஆகமுடையவர்சேருங்கூடல்ஆலவாயின்கணமர்ந்தவாறே.6
பாகமும்தேவியை வைத்துக்கொண்டு,பை விரி துத்திப்பரியபேழ்வாய்
நாகமும்பூண்ட,நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்கொல்சொல்லாய் -
போகமும்நின்னைமனத்துவைத்துப்புண்ணியர்நண்ணும்புணர்வுபூண்ட
ஆகம் உடையவர் சேரும் கூடல் ஆலவாயின்கண்அமர்ந்தஆறே?
பொருள்: இடப்பாகமாகஉமையம்மையை வைத்துக் கொண்டு,படமும்புள்ளிகளும்பெரிதாகப்பிளந்தவாயையும் உடைய நாகத்தைப்பூண்டுள்ளநள்ளாறுடைய நம் பெருமானே!சிவபுண்ணியத்தில் மிக்க அடியவர் நின்னை மனத்தில் வைத்துத்தியானிப்பதனால்போகமும்,நண்ணுவதற்குரிய யோக நெறியினை மேற்கொண்டு ஒழுகுதற்கேற்ற உடம்பு உடையவராய்சேர்ந்துறையும் கூடல் ஆலவாயின்கண் நீ,அமர்ந்து உறைதற்குக் காரணம் யாதோ?சொல்வாயாக.
குறிப்புரை: பாகமும்தேவியை வைத்துக் கொண்டு நாகமும்பூண்ட என்றது பாம்பைக்கண்டாற் பெரிதும் அஞ்சுகின்றதேவியை வைத்துக் கொண்டேயும் நாகம் பூணுதல் சாலாது என்ற நயம் தோன்ற நின்றது. பை - படம். துத்தி - படப்பொறி. பேழ்வாய்பிளந்த வாய். புண்ணியர்நின்னைமனத்துவைத்துப் போகம் நண்ணும்புணர்வுபூண்டஆகமுடையவர் என இயைக்க. போகியாய்உமையொருபாதியாய் இருக்கும் இறைவனைத்தியானிப்பதாலேயேபுண்ணியர் போகம் நண்ணுவர்என்பதாம். புணர்வு - சம்பந்தம். ஆகம் திருமேனி,புணர்வு - யோகம். புணர்வுபூண்டஆகம் - யோகத்தில் உறைந்து நிற்பதற்கேற்றதகுதியுடைய உடம்பு,
O Our Lord God of Nallaaru, You are concorporate with Your consort. You wear a serpent of spotted hood whose large mouth is (ever) agape! Pray, tell us; what may this be? Why is it You are enthroned at Aalavaai in Koodal sought after by the holy ones who entempled You in their Civa consciousness and are in Civa-bhoga?
Note: Bhoga: Bliss. Civa-bhoga - A musical composition of spiritual excellence (from Guru-Gnaana-Sambandhar's Civa Bhoga Saaram).
கோவணவாடையுநீறுப்பூச்சுங்கொடுமழுவேந்தலுஞ்செஞ்சடையும்
நாவணப்பாட்டுநள்ளாறுடையநம்பெருமானிதுவென்கொல்சொல்லாய்
பூவண மேனி யிளையமாதர்பொன்னும்மணியும்கொழித்தெடுத்து
ஆவணவீதியிலாடுங்கூடல்ஆலவாயின்கணமர்ந்தவாறே.7
கோவணஆடையும்,நீறுப்பூச்சும்,கொடுமழுஏந்தலும்,செஞ்சடையும்,
நாவணப்பாட்டும்நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்கொல்சொல்லாய்
பூவண மேனி இளைய மாதர்,பொன்னும்மணியும் கொழித்து எடுத்து,
ஆவண வீதியில் ஆடும் கூடல் ஆலவாயின்கண்அமர்ந்தஆறே?
பொருள்: வேதமாகியகோவணஆடையும்,திருநீற்றுப்பூச்சும்,கொடிய மழுவாயுதத்தைஏந்தலும்,சிவந்த சடையும்) நாவில்பல்வேறுசந்தங்களில் பாடும் வேதப்பாட்டும்உடையவனாய்இலங்கும்நள்ளாற்றுள் எழுந்த ருளிய நம் பெருமானே! பூப்போலும்மெல்லியமேனியை உடைய இளம் பெண்கள் பொன்,மணி முதலியவற்றைக் கொழித்துஎடுத்துக்கடைவீதியில் விளையாடும் கூடல் ஆலவாயின்கண் நீ அமர்ந்து விளங்கக்காரணம்யாதோ?சொல்வாயாக.
குறிப்புரை: இறைவனுக்கு வேதமேகோவணமாதலின்கோவணஆடையர் என்றார். .. நீறுப்பூச்சும்எனற்பாலது ஓசை நோக்கி இரட்டாதாயிற்று. இறைவன் நீறுபூசி ஒளிர்தலைமாணிக்கவாசகசுவாமிகளும்'நீறுபட்டேஒளிகாட்டும் மேனி ௭ ன்பார்கள். நாவணப்பாட்டும் - நாவில் பல்வேறு வண்ணங்களை உடைய பாட்டும்,வண்ணம் - பா வண்ணம் முதலிய செய்யுள் வண்ணங்கள், பூவணமேனி - பூப்போலும் மெல்லிய மேனி,ஆவண வீதி - கடை வீதி.
O Our Lord, God of Nallaaru, You are clad in a loin-cloth; You have smeared Your body with the holy ash; You wield a fierce mazhu; Your red hairy crest is matted. Your tongue reverberates in multi-form hymns. Pray, tell us; why is it You longed for and got enthroned at Aalavaai in Koodal in the streets of which young girls of 'flower like' physique sift gold and gems and play in the market street.
இலங்கை யிராவணன்வெற்பெடுக்கவெழில்விரலூன்றியிசைவிரும்பி
.நலங்கொளச்சேர்ந்தநள்ளாறுடையநம்பெருமானிதுவென்கொல்சொல்லாய்
புலன்களைச்செற்றுப்பொறிவைநீக்கிப்புந்தியிலுந்நினைச்சிந்தைசெய்யும்
அலங்கனல்லார்களமருங்கூடல்ஆலவாயின்கணமர்ந்தவாறே. ப்
இலங்கை இராவணன் வெற்பு எடுக்க,எழில் விரல் ஊன்றி,இசை விரும்பி,
நலம் கொளச் சேர்ந்த நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்கொல்சொல்லாய் -
புலன்களைச்செற்று,பொறியை நீக்கி,புந்தியிலும்நினைச்சிந்தைசெய்யும்
அலங்கல்நல்லார்கள்அமரும் கூடல் ஆலவாயின்கண்அமர்ந்தஆறே?
பொருள்: இலங்கை மன்னன் இராவணன் கயிலை மலையைப்பெயர்த்தபோது, சிவபெருமான் தனது அழகிய கால் விரலை ஊன்றி அடர்த்துப் பின் அவனது இசையைவிரும்பிக் கேட்டு,அவனுக்கு நன்மைகள்பலவும் பொருந்துமாறு உளங்கொண்டநள்ளாறுடைய நம் பெருமானே! ஐம்புலஇன்பங்களை வெறுத்து,அவற்றைத் தரும் ஐம்பொறிகளை மடை மாற்றி,புந்தியில்உன்னையே சிந்தனை செய்யும் தூய வாழ்க்கையை உடைய சிவஞானிகள் வாழும் கூடல் ஆலவாயின்கண் நீ அமர்ந்துறைதற்குக் காரணம் யாதோ?சொல்வாயாக.
'குறிப்புரை: விரல் ஊன்றி என்றது நிக்கிரகம். விரும்பி என்றது கருணைக்கு ஏது. நலங்கொள் என்றது அநுக்கிரகம். விரலூன்றியவரலாற்றைமணிவாசகப்பெருந்தகை'மதிக்குந்திறனுடையவல்லரக்கன்தோள்நெரியமிதிக்குந் திருவடி'என்பதைக் காண்க. புலன்களைச்செற்று - விஷயங்களைக் கெடுத்து, பொறியை நீக்கி - இந்திரியங்களைச்சேட்டியாதே செய்து. நினைப்புந்தியிலும் சிந்தை செய்யும் - தேவரீரைப்புத்தியாலும்தியானிக்கின்றபொறிகள்புலன்களின்வழிச்செல்லாதுஅடக்கியபெரியோர்களின்புத்தியில்சென்றும்பதியும் பொருள்,கருவி கரணங்களைக் கடந்து நிற்கும் இறைப்பொருள் ஒன்றுமேயாதலின் இங்ஙனம் கூறினார். அலங்கல் - தாபதவாகைக்குரிய மாலை. நல்லார்கள்-சிவஞானிகள். கூடல் ஆலவாய் என்பது ஒரு பொருட்பன்மொழி.
O Our Lord God of Nallaaru, You crushed with Your beautiful toe Sri Lanka's Raavana who tried to uproot Your abode the Mount Kailas. Then pleased with his music, You graced him with many good things. Pray, tell us; why is it You longed for and got enthroned at Aalavaai in precious Koodal - the abode of those who are poised in austerities and who having quelled their senses and sense organs, meditate (forever) on You?
பணியுடைமாலும்மலரினோனும்பன்றியும்வென்றிப்பறவையாயும்
நணுகலரியநள்ளாறுடையநம்பெருமானிதுவென்கொல்சொல்லாய்
மணியொலிசங்கொலியோடுமற்றைமாமுரசின்னொலியென்றுமோவா
தணிகிளர்வேந்தர்புகுதுங்கூடல்ஆலவாயின்கணமர்ந்தவாறே.9
பணி உடை மாலும்மலரினோனும்,பன்றியும்வென்றிப்பறவைஆயும்
நணுகல் அரிய,நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்கொல்சொல்லாய் -
மணிஒலிசங்குஒலியோடுமற்றை மா முரசின் ஒலி என்றும் ஓவாது
அணி கிளர் வேந்தர்புகுதும் கூடல் ஆலவாயின்கண்அமர்ந்தஆறே?
பொருள்: பாம்பணையானாகியதிருமாலும் தாமரை மலரில்எழுந்தருளியநான்முகனும்முறையே பன்றியாயும் பறவை இனங்களில் மேம்பட்ட அன்னமாயும்,அடிமுடிகளைத்தேடியும் நணுக முடியாத நள்ளாறுடைய நம் பெருமானே! மணி ஓலியும்,சங்கொலியும்சிறந்த முரசின் ஒலியும் என்றும் இடையறாதுகேட்கும்சிறப்பினதும்,மேம்பட்ட வேந்தர்கள்புகுந்து வழிபடும்பெருமையதும் ஆகிய கூடல் ஆலவாயின்கண் நீ எழுந்தருளிவிளங்கக் காரணம் யாதோ?சொல்வாயாக
குறிப்புரை: பணி - ஆதிசேடன்,வென்றிப் பறவை - திருமுடி கண்டேன் என்று பொய் கூறிய பறவையாகிய அன்னம். பாண்டிய மன்னனிடம்கப்பங்கட்ட வரும் மன்னர்கள் பலர். பலவகை ஒலிகள்இடையறாதுஒலிக்கின்ற,கூடல் என்பதாம்.
O Our Lord God of Nallaaru, who is inaccessible to Vishnu whose bed is the snake Aadhi-seshaa and Bramha on the lotus who both pursued You in the assumed forms of a hog and a bird (but neither could see You). Pray, tell us; why You longed for and got enthroned at Aalavaai in Koodal where the noise of bells and shells and commanding drums resounds for ever. Kings decked with lustrous jewells foregather in the temple to pay their tribute to You?
தடுக்குடைக்கையருஞ்சாக்கியருஞ்சாதியினீங்கியவத்தவத்தர்
நடுக்குறநின்றநள்ளாறுடையநம்பெருமானிதுவென்கொல்சொல்லாய்
எடுக்கும் விழவுந்நன்னாள்விழவும்இரும்பலியின்பினோடெத்திசையும்
அடுக்கும்பெருமைசேர்மாடக்கூடல்ஆலவாயின்கணமர்ந்தவாறே.10
தடுக்கு உடைக்கையரும்சாக்கியரும்,சாதியின்நீங்கியஅத்தவத்தர்
நடுக்குஉற நின்ற,நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்கொல்சொல்லாய் -
எடுக்கும் விழவும்நல்நாள்விழவும்இரும் பலி இன்பினோடுஎத்திசையும்
அடுக்கும் பெருமை சேர் மாடக் கூடல் ஆலவாயின்கண்அமர்ந்தஆறே?
பொருள்: ஓலைத்தடுக்கைக் கையில் ஏந்தித்திரியும்சமணர்களும்சாக்கியர்களும் மரபு நீங்கிய வீண் தவத்தராவர். அவர்கள் மெய்ந்நெறியாகியசைவசமயத்தைக்கண்டும், அச்சமயிகளின் வழிபடு கடவுளைக்கண்டும்,நடுக்கம் உறுமாறுதிருநள்ளாற்றுள் விளங்கும் நம் பெருமானே! நாள் விழாவும்,சிறப்பு விழாவும்,நன்கு நடைபெற,அவ்விழாவில் வழங்கும் பெருவிருந்தால் விளையும் மகிழ்வு எத்திசையும்பொருந்திப் பெருமை சேர்க்கும் மாடக்கூடல் ஆலவாயின்கண் நீ மகிழ்ந்துறைதற்குக் காரணம் யாதோ?சொல்வாயாக.
குறிப்புரை: தடுக்கு -ஓலையிருக்கை. சாதியின்நீங்கியதவத்தவத்தர் - தத்தம் மரபின் நீங்கி வீணான தவத்தைச் செய்பவர்கள். எடுக்கும் விழா - நைமித்திகத் திருவிழா,நன்னாள் விழா - நித்தியத் திருவிழா.
O Our Lord God of Nallaaru, the Jain monks who hold mats in their hands and the Buddhist monks (the pseudo tapaswis) have gone astray from their (true) tradition. They shudder even to think of You. Here daily festivals and the special seasonal festivities take place in a grand manner! The joy arising out of the grand feasts, that the people enjoy during those festivities reaches far beyond on all directions and enhances the greatness of the city. Pray tell us why You longed for and got enthroned at Aalavaai in Koodal.
அன்புடை யானை யரனைக்கூடல்ஆலவாய்மேவியதென்கொலென்று
நன்பொனைநாதனைநள்ளாற்றானைநயம்பெறப் போற்றி நலங்குலாவும்
பொன்புடைசூழ்தருமாடக்காழிப்பூசுரன்ஞானசம்பந்தன்சொன்ன
இன்புடைப்பாடல்கள்பத்தும்வல்லார்இமையவரேத்தவிருப்பர்தாமே.11
அன்புஉடையானைஅரனை, “கூடல் ஆலவாய்மேவியதுஎன்கொல்?”என்று,
நன்பொனை,நாதனை,நள்ளாற்றானை,நயம்பெறப் போற்றி நலம் குலாவும்
பொன் புடை சூழ்தருமாடக்காழிப்பூசுரன் - ஞானசம்பந்தன் - சொன்ன
இன்பு உடைப்பாடல்கள்பத்தும்வல்லார்இமையவர்ஏத்தஇருப்பர்தாமே.
பொருள்: எல்லா உயிர்களிடத்தும்அன்புடையவனாம்,அரனைக் கூடல் ஆலவாயில்மேவியதற்குக் காரணம் யாதெனக்கேட்டுத் தூய பொன் போன்றவனாகவும், தலைவனாகவும்விளங்கும்திருநள்ளாற்றுஇறைவனைநயமாகப் போற்றி,நலம் பயக்கும்செம்பொன் நிறைந்த மாடவீடுகளால்சூழப்பட்டசீகாழிப்பதியில்தோன்றியபூசுரனாகியஞானசம்பந்தன்பாடிய இனிய இத்திருப்பதிகப்பாடல்கள்பத்தையும்ஓதவல்லவர், இமையவர்ஏத்தத்தேவருலகில்விளங்குவர்.
குறிப்புரை: அன்புடையானை - உலகமே இறைவனுடையமக்களாதலின்வாற்சல்யம்உடையவனை,நயம் பெறப் போற்றி - போற்றுவதில் ஒரு நயம் உண்டாம்படிப் பணிந்து,அல்லது தாம் நலம் பெறப் போற்றி என்றுமாம். இமையவர்ஏத்தஇருப்பர் - தேவர்க்கெல்லாம்தேவராய் அவர்கள் தொழ விளங்குபவர். இந்திரனார்என்றுமாம்.
Gnaana-Sambandhan - truly the Deva on earth - of golden Kaazhi abounding in mansions has in exquisite excellence hailed in weal-conferring hymns the Pure Gold - the Lord of Nallaaru thus: "Wherefore have You, O Hara of abiding love chosen to get entempled at Aalavaai in Koodal?” They that can chant these ten psalms will be hailed by the celestial and abide in heaven.
7ஆம் பதிகம் முற்றிற்று
சிவமயம்
8.திரு ஆவூர்ப்பசுபதீச்சரம்
திருத்தலவரலாறு:
திரு ஆவூர்ப்பசுபதீச்சரம் என்ற திருத்தலமானதுசோழநாட்டுக்காவிரித்தென்கரைத்தலம் ஆகும். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது. கும்பகோணத்தில்இருந்து பேருந்து வசதி உள்ளது. இப்பெயரமைப்பால்தலத்தின் பெயர் ஆவூர் என்பதும்,கோயிலின் பெயர் பசுபதீச்சரம் என்பதும் அறியலாம். இந்திரன்,சப்தரிஷிகள்,பசுக்கள்பூசித்த தலம். சுவாமி பெயர் - பசுபதீசர்;அம்மை பெயர் - மங்கள நாயகி,தீர்த்தம் - பிரமதீர்த்தம்.
கல்வெட்டு:
அரசாங்கத்தாரால்படியெடுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று கர்ப்பக் கிருகத்துக்கு மேல்தளம் அடிப்பக்கத்தில் இருக்கின்றது. திரிபுவனச்சக்கரவர்த்தியான மூன்றாம் இராஜேந்திரசோழதேவன் மூன்றாம் ஆட்சி ஆண்டில்நித்ததினோதவளநாட்டுஆவூர்க்கூற்றத்துப்பசுபதீஸ்வரமுடையார் கோயிலுக்கு நிலங்கள்அளித்தமையைத் தெரிவிக்கிறது.
பதிக வரலாறு:
திருப்பூவனூர் சென்று வணங்கியதிருஞானசம்பந்தர்,சிவனடியார்கள் பலர் ஏத்தொலியெடுப்ப,மிகப்பழம்பதியாகியஆவூரை அடைந்தார்கள். அங்குள்ள பசுபதீச்சரம் என்ற கோயிலுக்குச் சென்று வணங்கி இப்பதிகத்தைஅருளிச் செய்தார்கள்.
8. TIRU-AAVOOR-P-PASU-PATHI-EECH-CHARAM
THE HISTORY OF THE PLACE
This sacred site is on the south bank of river Cauvery in the Chola country. It is near Kumbakonam in Thanjavoor district. Buses from Kumbakonam ply to this place. From the name of this holy site, it can be seen that the place is known as Avoor and the temple as Pasupatheechcharam. Indhiran, the Saptharishis (Seven Sages) and cows offered worship here. The Lord's name is Pasupatheesar and the Mother's is Mangala Naayaki. The holy ford is Biramatheerththam.
Stone Inscriptions
There is one inscription, copied by the government epigraphists, at the bottom side of the upper deck of the sanctum sanctorum. This informs about the gift of lands to the temple of Niththavinodha Valanaattu Avoork Koorraththup Pasupatheesvara- mudaiyaar by the Chola monarch Thiribuvana Chakkaravarth-thiyaana (Emperor of the Three Worlds) Raajendhira Choladevan III in his third regnal year.
INTRODUCTION TO THE HYMN
From Tiru-p-poovanoor the Saint arrived at Aavoor where he hymn. The name of the town is 'Aavoor'. The temple is called 'Pasu-pathi-eech- charam'.
திருச்சிற்றம்பலம்
8.திரு ஆவூர்ப்பசுபதீச்சரம்
பண் : நட்டபாடை
ராகம் : கம்பீரநாட்டை
புண்ணியர்பூதியர்பூதநாதர்புடைபடுவார்தம்மனத்தார்திங்கட்
கண்ணியரென்றென்றுகாதலாளர்கைதொழுதேத்தவிருந்தவூராம்
விண்ணுயர் மாளிகை மாடவீதி விரை?சோலை சுலாவியெங்கும்
பண்ணியல்பாடலறாதவாவூர்ப் பசுபதி யீச்சரம்பாடுநாவே.1
“புண்ணியர்,பூதியர்,பூதநாதர்,புடைபடுவார் தம் மனத்தார்,திங்கள் -
கண்ணியர்என்றுஎன்றுகாதலாளர்கைதொழுதுஏத்த,இருந்த ஊராம் -
விண்உயர்மாளிகைமாட வீதி விரை கமழ்சோலைசுலாவி,எங்கும்
பண் இயல் பாடல் அறாத - ஆவூர்ப்பசுபதியீச்சரம் பாடு,நாவே!
பொருள்: புண்ணியம் இரண்டனையவடிவினர் எனவும்,நிறைந்த செல்வம் உடையவர் எனவும்,பூதகணங்களின் தலைவர் எனவும்,அருகில் வந்து பரவுவாரின்மனத்தார் எனவும், பிறைமதிக்கண்ணியர் எனவும்,அன்புடை அடியவர்கள் கூறி நின்று கைதொழுதுபோற்றச்சிவபிரான் எழுந்தருளிய ஊர் ஆவூர் ஆகும். வானளாவ உயர்ந்த மாடமாளிகைகளோடுகூடியதும்,மணம் கமழும்சோலைகளால்சூழப்பெற்றதும்,எங்கும் பண்ணியலோடு கூடிய பாடல்கள் இடைவிடாது கேட்கப்படுவதும்ஆகியதுஆவூர். இவன் அடியார்களே! இத்துணைச்சிறப்புற்றஆவூர்ப்பசுபதியீச்சரத்தில்எழுந்தருளியிருக்கன்றசிவபெருமானைத் தொழுது உங்கள் நாவால் பாடுவீர்களாக!
குறிப்புரை: பூதியர் - செல்வம் உடையார். புடைபடுவார் - பக்கம் நண்ணிப்பரவுவார். கண்ணி - திருமுடியிற்சூடப்பெறும் மாலை.
Aavoor is the place where abides the Lord-God hailed by loving devotees with folded hands as embodiments of virtue, the Righteous One, the One that wears the chaplet of a crescent moon, and the One who abides in His loving servitors as a guiding force. Thus the devotees hail Him standing close to Him. O tongue, hail Pasu-pathi- eech-charam pervaded by ceaseless and tuneful music at Aavoor the streets of which are girt with fragrant gardens and sky-high mansions.
Notes: Tongue: It is regarded as sacred. The tongue is the seat of goddes Saraswathi.
Again the tongue is both Gnaanendrya and Kanmendrya.
Addressing the tongue is addressing the devotees.
முத்தியர்மூப்பிலராப்பினுள்ளார்முக்கணர்தக்கன்றன்வேள்விசாடும்
அத்தியரென்றென்றடியரேத்தும்ஐயனணங்கொடிருந்தவூராம்
தொத்தியலும்பொழில்மாடுவண்டுதுதைந்தெங்குந்தூமதுப்பாயக்கோயிற்
பத்திமைப்பாடலறாதவாவூர்ப் பசுபதி யீச்சரம்பாடுநாவே.2.
“முத்தியர்,மூப்புஇலர்,ஆப்பின் உள்ளார்,முக்கணர்,தக்கன்தன் வேள்வி சாடும்
அத்தியர்என்றுஎன்றுஅடியர் ஏத்தும் ஐயன் அணங்கொடு இருந்த ஊராம் -
தொத்து இயலும் பொழில் மாடு வண்டு துதைந்து எங்கும் தூமதுப்பாயக்,கோயில்
பத்திமைப் பாடல் அறாத - ஆவூர்ப்பசுபதியீச்சரம் பாடு,நாவே!
பொருள்: முத்துச்செல்வத்தை உடையவர் என்றும்,மூப்பு இலர் என்றும்,மாட்டுத்தறியில்விளங்குபவர் என்றும்,முக்கண்ணர் என்றும்,தம்மை இகழ்ந்து செய்த தக்கனின்வேள்வியைஅழித்தவர் என்றும்,அடியவர்கள் போற்றித்துதிக்கும்தலைவராகிய சிவபிரான் உமையம்மையாரோடுஎழுந்தருளிய ஊர் ஆவூர் ஆகும். : இவ்வூரில்பொழில்களில்கொத்தாக மலர்ந்த பூக்களில் வண்டுகள் தோய்தலால் எங்கும் தூயதேன்துளிகள்பாய்கின்றன. கோயிலில் பத்தி பூண்ட அடியவர் பாடும் பாடல் இடைவிடாது கேட்கின்றன. குறிப்புரை: முத்தியர் - முத்தியின்பத்தை உடையவர். ஆப்பு - மாட்டுத்தொழுவத்துள் கன்று கட்டப்படும்முளை அல்லது தறி. கன்றாப்பூர் - நடுதறிநாதர். வேள்வி சாடும்அத்தியர் என்றது தக்கன்வேள்விக்கண் அளிக்கும் அவியைஏற்கும்இரவலராய் இருந்தும் வேள்வியைஅழித்தமைசாலாது என்னும் பழிப்பு தோன்றக் கூறியது. அத்தியர் - இரவலர். ஹத்தி என்பதன் திரிபாகக் கொண்டு கொலை என்பாரும்உளர். அது பொருந்தாமை ஓர்க. தொத்து இயலும் - பூங்கொத்துக்கள் அழகு செய்கின்ற - பத்திமைப் பாடல் - சிவபத்தியைப்பயக்கும்பாடல்கள்.
Aavoor is the place where abides the Lord-God with His consort Uma. He is hailed by the devotees as the One, who is the Conferrer of moksha. He is the One that never ages. He is the One abiding at Aappu. He is the One with three eyes. He is the One who ordered the destruction of Dakshan's yaga as Dakshan did not give due respect to Him. O tongue, hymn thee on the shrine of Pasu-pathi-eech-charam ever pervaded by ceaseless and tuneful music divine in Aavoor. The aroma from the bunches of flowers in the gardens fills the air everywhere in Aavoor. The honeybees fly from one flower to another piercing it to suck the honey resulting the honey to drip on the ground and flow in all directions in Aavoor (such a fertile place is Aavoor).
Notes: Moksha: The bliss of release from the cycle of birth and death.
Aappu: The peg to which calf is bounded in a cowshed. In the town called "Thiru-k-kantra-p-poor" a saivite girl was married to a vaishnavite boy. Without the knowledge of family members, the girl was worshipping Lord Civan in the peg fixed in the cowshed of their house. One day her husband noticed this and started breaking the peg. Alas! While breaking the peg, Lord Civa appeared as a Civa Lingam out of the peg. That is referred to in this poem as “Aappin-ullaar” .
பொங்கி வரும்புனல்சென்னிவைத்தார்போம்வழிவந்திழிவேற்றமானார்
இங்குயர்ஞானத்தர்வானோரேத்துமிறையவரென்றுமிருந்தவூராம்
தெங்குயர்சோலைசேராலைசாலிதிளைக்கும்விளைவயல்சேரும்பொய்கைப்
பங்கய மங்கை விரும்புமாவூர்ப் பசுபதி யீச்சரம்பாடுநாவே.3
பொங்கி வரும் புனல் சென்னி வைத்தார்,போம் வழி வந்து இழிவு ஏற்றம் ஆனார்,
இங்கு உயர் ஞானத்தர்,வானோர் ஏத்தும் இறையவர்,என்றும் இருந்த ஊராம் -
தெங்கு உயர் சோலை,சேர் ஆலை,சாலிதிளைக்கும்விளைவயல்,சேரும் பொய்கைப்
பங்கயமங்கைவிரும்பும் - ஆவூர்ப்பசுபதியீச்சரம் பாடு,நாவே!
பொருள்: சினந்து வந்த கங்கையைத் தம் திருமுடியில்வைத்தசிவபெருமான்எழுந்தருளியிருக்கும் ஊர் ஆவூர் ஆகும். திருமகளால்விரும்பப்படும் ஊர் ஆவூர் ஆகும். வானவரும் துதிக்க வருகின்ற சிவபிரான் எழுந்தருளிய ஊர் ஆவூர் ஆகும். பிறப்பு-இறப்பு இவைகளினின்றும் விடுபட்டு முத்தி அடைவதற்குஇப்பூமியில்பிறந்தே ஆகவேண்டும்.அவ்வாறு ஆவூரில்பிறந்தவர்களாகிய சிலர் நற்செயல்கள் செய்து ஏற்றம் அடைகிறார்கள்; சிலர் தீய செயல்களைச் புரிந்து இழிவடைகிறார்கள். ஏற்றம் பெற்றவர்களில்இலர்சிவஞானத்தைப்பெற்றவர்களாய்உள்ளார்கள். இந்த முத்திறத்தார்களும்,வானவர்களும்துதிக்க வருகின்ற சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் ஊர் ஆவூர் ஆகும். உயரமாக வளர்ந்த -தென்னஞ்சோலைகளும்,கரும்பாலைகளும்,செந்நெல்பயிர்கள் திளைத்து விளைவு தரும் வயல்களும்,பொய்கைகள்சூழ்ந்ததுமாகிய வளம் சான்ற ஊர் இவ்வூராகும். சிவனடியார்களேஅதனைப்பாடுவீர்களாக! குறிப்புரை: பொங்கி வரும் புனல் - கங்கை. அது வந்த செருக்கினைக்குறிப்பித்தபடி. போம்வழிவந்து - பிறவியினீங்கிஉய்ந்துபோகக்கூடிய மனிதப் பிறவியில் வந்து,இழிவு ஏற்றம் ஆனார் - தீயன செய்து இழிந்தும்நல்லன செய்து உயர்ந்தும்உய்ந்த மக்கள். இழிவேற்றமானாரும்,ஞானத்தரும்,வானோரும்ஏத்தும் இறைவர் என்று ஒரு தொடராக்குக. தென்னஞ்சோலைகளும்ஆலைகளும்வயல்களில்நெற்பயிர்களும் சேரும் ஆவூர் எனவும்,பங்கய மங்கை விரும்பும்ஆவூர் எனவும் கூட்டுக.'பொய்கை' மனிதர்களால்உருவாக்கப்படாத இயற்கையான நீர் நிலை.
The temple at Pasu-pathi-eechharam in Aavoor town is very dear to Goddess Lakshmi whose seat is Lotus flower. The town is rich in coconut groves and paddy fields. Sugarcane presses are located near the pools in this town. Here our Lord Civan controlled and kept the fierce upsurging river ganges on His matted crest. Men have to be born in the earth to get relieved from the cycle of death and birth. Out of those born in Aavoor town some go down in their way of life; some others rise up in their life by virtuous deeds and acquire divine knowledge. All these people and the celestial ones throng to Lord Civan here, to pay their obeisance. Oh! Devotees! Let your tongue sing the praise of Lord Civan templed at Pasu-pathi-eech-charam in Aavoor.
Notes: Dear to Lakshmi : Aavoor is the place of opulence and plenty.
தேவியோர்கூறினரேறதேறுஞ்செலவினர்நல்குரவென்னைநீக்கும்
ஆவியரந்தணரல்லறீர்க்கும்அப்பனாரங்கேயமர்ந்தவூராம்
பூவியலும்பொழில்வாசம்வீசப்புரிகுழலார்சுவடொற்றிமுற்றப்
பாவியல்பாடலறாதவாவூர்ப் பசுபதி யீச்சரம்பாடுநாவே.4
தேவி ஓர் கூறினர்,ஏறுஅது ஏறும் செலவினர்,நல்குரவு என்னை நீக்கும்
ஆவியர்,அந்தணர்,அல்லல் தீர்க்கும்அப்பனார்,அங்கே அமர்ந்த ஊராம் -
பூ இயலும் பொழில் வாசம் வீசப்,புரிகுழலார் சுவடு ஒற்றி,முற்றப்
பா இயல் பாடல் அறாத - ஆவூர்ப்பசுபதியீச்சரம் பாடு,நாவே!
பொருள்: சிவபெருமான் உமாதேவியை ஒரு பாதியாக உடையவர். இடபவாகனத்தில் ஏறி வருபவர். வறுமை புகாதவாறுஎன்னைக்காப்பவர். எனக்கு உயிர் போன்றவர். கருணையர், என் துயர் போக்குதலால்எனக்குத்தந்தையாகவும்விளங்குபவர். அவர் எழுந்தருளிய ஊர் ஆவூர் ஆகும். பூக்கள் நிறைந்த பொழில்களின் வாசனை வீசுவதும்;சுருண்ட கூந்தலை. உடைய மகளிர் காலாலேதாளமிட்டுஆடித் தேர்ந்த இசையோடு பாடும் பாடல்கள்இடைவிடாது கேட்கப்படுவதுமாகிய ஊர் இவ்வூரேதான்.
குறிப்புரை: நல்குரவு என்னை நீக்கும் ஆவியர் - வறுமை புகுதாதேஎன்னைக் காக்கும் உயிர் போன்றவர். இதனோடு "இடரினும்தளரினும்எனதுறுநோய்தொடரினும்உனகழல்தொழுதெழுவேன்' என்று யாகத்துக்குப் பொன் வேண்டிய காலத்து இவர் பாடியபாடலையும்ஒப்பிடுக. அந்தணர் - முனிவர். புரிகுழலார் சுவடு ஒற்றி - பெண்கள் காற்சுவட்டினாலேதாளமிட்டு,பாவியல் பாடல் - இசையமைந்தபாடல்,பா - பரந்துபட்டுச்செல்வதோர் ஓசை.
His consort is part of Him; His carrier is the Bull; He is my very life; He rids me of my indigence; (needs or wants) He is the Andhanar; He quells my troubles and so He is my father; He is entempled in Aavoor. In the pools of Aavoor plenty of flowers blossom. The air is full with the fragrance of these flowers. Damsels having curly hairs sing and dance here. To keep time in their music, instead of using a cymbal, they keep time to their music by stamping their feet on the ground. This tuneful music is always heard in the town. In such an enraptured town, Oh! Devotees! Let your tongue sing the praise of Lord Civan templed at Pasu-pathi-eech-charam in Aavoor.
இந்தணை'யுஞ்சடையார்விடையார்இப்பிறப்பென்னையறுக்கவல்லார்
வந்தணைந்தின்னிசைபாடுவார்பால்மன்னினர் மன்னி யிருந்தவூராம்
கொந்தணையுங்குழலார்விழவிற் கூட்ட மிடையிடைசேரும்வீதிப்
பந்தணையும்விரலார்தமாவூர்ப் பசுபதி யீச்சரம்பாடுநாவே.5
இந்து அணையும் சடையார்,விடையார்,இப் பிறப்பு என்னை அறுக்க வல்லார்,
வந்து அணைந்து இன்னிசை பாடுவார்பால்மன்னினர்,மன்னி இருந்த ஊராம் -
கொந்து அணையும் குழலார்விழவில் கூட்டம் இடைஇடை சேரும் வீதி,
பந்து அணையும் விரலார்தம் - ஆவூர்ப்பசுபதியீச்சரம் பாடு,நாவே!
பொருள்:திங்கள் தங்கும் சடையினரும்,விடையைஊர்தியாகஉடையவரும்,இப்பிறவியில்என்னைப் பற்றிய வினையை நீக்கி முத்தியளிக்கவல்லவரும்,தம்மை வந்தடைந்துஇன்னிசையால் பாடி வழிபடுவாரிடம்மன்னியிருப்பவரும் ஆகிய சிவபிரான்;நிலைபெற்றுவிளங்கும்ஊர்ஆவூர் ஆகும். பூங்கொத்தணிந்த கூந்தலை உடைய மங்கல மகளிர் வாழ்வதும்,திருவிழாக்களில் மக்கள் கூட்டம் இடையிடையே சேரும் அகன்ற வீதிகளைஉடையதும்,பந்தாடும்கைவிரல்களினராகியஇளம்பெண்கள்நிறைந்ததுமாகியஊரும்இவ்வூரே ஆகும்.
குறிப்புரை: இந்து - சந்திரன்;இப்பிறப்பு அறுக்க வல்லார் என்றது என் வினை முழுவதும் உலர்ந்து போதலின் முத்தி அளிக்க வல்லார்என்பதாம். வந்து அணைந்து - திருக்கோயிலின்திருவணுக்கன்திருவாயிலை வந்து அடைந்து. மன்னினர் - நிலைபெற்று இருப்பவர். கொந்து - பூங்கொத்து;குழலார்விரலார்என்பனமகளிரைக் குறித்து நின்றன.
Lord Civan sports a crescent moon on His matted hair; the Bull is His mount. He is, capable of bestowing salvation on me by removing the ill effects of my karmaa in this birth. Lord Civan abides with those devotees who approach Him, offer their obeisance, and worship Him with Divine Music. He is enthroned at Pasu-pathi-eech-charam temple in Aavoor town. Damsels living here wear big bunches of flowers in their heads. During temple festivals men walk around the broad streets of Aavoor. Young girls are in large number here whose fingers sport the flower balls. Oh! Devotees! Let your tongue sing the praise of Lord Civan templed at Pasu-pathi-eech-charam in Aavoor.
Notes: Flower Balls: Girls in ancient Tamilnadu used flower balls at play.
குற்ற மறுத்தார் குணத்தினுள்ளார் கும்பிடு வார்தமக்கன்பு செய்வார்
ஒற்றை விடையினர்நெற்றிக்கண்ணார்உறைபதியாகுஞ்செறிகொண் மாடம்
சுற்றியவாசலின்மாதர்விழாச்சொற்கவிபாடநிதானநல்கப்
பற்றிய கையினர்வாழுமாவூர் பசுபதி யீச்சரம்பாடுநாவே.
குற்றம் அறுத்தார், குணத்தின் உள்ளார், கும்பிடுவார் தமக்கு அன்பு செய்வார்ஒற்றை விடையினர்நெற்றிக்கண்ணார்உறைபதி ஆகும் செறிகொள் மாடம்சுற்றிய வாசலில் மாதர்விழாச் சொல் கவி பாட நிதானம் நல்கப்பற்றிய கையினர் வாழும் ஆவூர் பசுபதி யீச்சரம் பாடு நாவே.
பொருள்: அடியவர் செய்யும் குற்றங்களை நீக்கியவரும்,நற்குணங்களைஉடையோரிடம்வாழ்பவரும்,தம்மைக்கும்பிடுவார்க்கு அன்பு செய்பவரும்,ஓர் எருதைத் தமக்கு ஊர்தியாகக்கொண்டவரும்,பிறர்க்கல்லாதநெற்றிக் கண்ணை உடையவரும் ஆகிய சிவபிரான் உறையும் பதி ஆவூர் ஆகும். செறிந்த மாடவீடுகளைச்சார்ந்துள்ள வாசலில் விழாக் காலங்களில் பெண்கள் புகழ்ந்து கவி பாடக் கேட்டு அவ்வீடுகளில் வாழும் செல்வர்கள்பொற்காசுகள் வழங்க,அதனைப் பற்றிய கையினராய் மகளிர் மகிழ்ந்துறையும்ஊரும் இதுவே ஆகும்.
குறிப்புரை: குற்றம் அறுத்தார் - அடியார்கள் செய்த குற்றங்களை நீக்கியவர். குற்றம் மறுத்தார் - நறுநாற்றத்திலன்றிதீநாற்றத்தில் செல்லாத வண்டுபோல்குற்றங்களில் சென்று பொருந்த மறுத்தவர். மாதர்கள்விழாவின்கண்சொல்லானியன்றகவிகளைப் பாட,அதனைக் கண்ட மாந்தர்கள்பொன்னளிக்க,அதனை ஏற்ற கையர்களாய் வாழ்கின்ற ஆவூர்என்க. நிதானம் - பொன்,நிதானம் - “முற்காரணம் தூய்மை நியமம் நிதி மறைத்துக்கொள் பொருள் கன்றின்கயிறாம்’ என்பது நானார்த்ததீபிகை.
He annuls the flaws of His servitors. He is poised in virtue. His mount is the peerless bull. He sports an eye in His forehead. Aavoor is where He resides in the Pasu-pathi-eech-charam temple. During festive days women gather in front of mansions and sing in praise of Lord Civan. Hearing the Divine songs the rich who live in those mansions bestow gold gifts on them. They gladly receive these and live joyfully in Aavoor. Oh! Devotees! Let your tongue sing the praise of Lord Civan templed at Pasu-pathi-eech-charam in Aavoor.
நீறுடையார்நெடுமால்வணங்குநிமிர்சடையார்நினைவார்தமுள்ளம்
கூறுடையாருடைகோவணத்தார்குவலயமேத்தவிருந்தவூராம்
தாறுடைவாழையிற்கூழைமந்திதகுகனியுண்டுமிண்டிட்டினத்தைப்
பாறிடப் பாய்ந்து பயிலுமாவூர்ப் பசுபதி யீச்சரம்பாடுநாவே.7
நீறு உடையார்,நெடுமால்வணங்கும்நிமிர்சடையார்,நினைவார் தம் உள்ளம்
கூறு உடையார்,உடை கோவணத்தார்,குவலயம்ஏத்த இருந்த ஊராம் -
தாறு உடை வாழையில்கூழைமந்தி தகு கனி உண்டு மிண்டிட்டு,இனத்தைப்
பாறிடப் பாய்ந்து பயிலும் - ஆவூர்ப்பசுபதியீச்சரம் பாடு,நாவே!
பொருள்: திருவெண்ணீற்றைஅணிந்தவரும்,திருமாலால்வணங்கப்பெறுபவரும்,நிமிர்த்துக்கட்டிய சடைமுடி உடையவரும்,தம்மை நினைவார்உள்ளத்தில் குடி கொண்டிருப்பவரும், கோவண ஆடை தரித்தவரும் ஆகிய சிவபிரான்,மண்ணுலக மக்கள் தம்மைப் புகழ்ந்து போற்ற எழுந்தருளிய ஊர் ஆவூர் ஆகும். குள்ளமான மந்தி பழுத்துள்ளவாழைத்தாற்றில்உண்ணத் தகுதியான பழங்களைவயிறார உண்டு,எஞ்சியுள்ளபழங்களைஉண்ணவரும்குரங்குகளைஅஞ்சுமாறு பாய்ந்து விரட்டும் தோட்டங்களைஉடையதும்இவ்வூரே ஆகும்.
குறிப்புரை: நீறுடையார் - தாம்;தொன்மைக்கெல்லாம்தொன்மையாயிருத்தலைத்தோற்றுவிக்கச்சர்வசங்காரகாலத்துத்திருநீற்றினைத்திருமேனியில்அணிந்தவர். உள்ளம் கூறுடையார் - உள்ளத்தில்குடி கொண்டிருப்பர்,தாறிட்டவாழையில்தழைவால்மந்திகள்கனிந்தபழத்தை உண்டு செருக்கி, குரங்கினத்தைக்கலைந்தோடப்பாய்கின்றஆவூர் என்றதால் நினைந்து உருகும் அடியார்க்குச்சிவாநுபவவன்மையளிக்கும்ஆவூர் என்பது குறிப்பால்போந்த பொருள்.
He smears His body with the holy ash. He, the One, that holds fast His matted hair in an upright position. He is adored by Vishnu; He abides in the minds of devotees who always think of Him. He wears a loincloth. Aavoor is the town where He dwells hailed by all worldly people. In the plantain gardens of Aavoor, monkeys eat the ripe fruits to the fullness of stomach, and chase away the other monkeys that come to eat the residual fruits. Such fertile place is Aavoor. Oh! Devotees! Let your tongue sing the praise of Lord Civan templed at Pasu-pathi-eech-charam in Aavoor.
வெண்டலை மாலை விரவிப்பூண்டமெய்யுடையார்விறலாரரக்கன்
வண்டமர்பூமுடிசெற்றுகந்தமைந்தரிடம்வளமோங்கியெங்கும்
கண்டவர் சிந்தைக்கருத்தின்மிக்கார்கதியருளென்றுகையாரக்கூப்பிப்
பண்டலர் கொண்டு பயிலுமாவூர்ப் பசுபதி யீச்சரம்பாடுநாவே.8
வெண்தலைமாலைவிரவிப்பூண்ட மெய் உடையார்,விறல்ஆர் அரக்கன்
வண்டு அமர் பூ முடி செற்று உகந்த மைந்தர்,இடம்-வளம் ஓங்கி,எங்கும்
கண்டவர்,சிந்தைக்கருத்தின்மிக்கார், “கதி அருள் என்று கை ஆரக்கூப்பிப்,
பண்டு அலர் கொண்டு பயிலும் - ஆவூர்ப்பசுபதியீச்சரம் பாடு,நாவே!
பொருள்: வெண்மையானதலைகளைமாலையாகக்கோத்துப் பிற மாலைகளுடன்அணிந்துள்ளதிருமேனியைஉடையவரும்,வண்டுகள் மொய்க்கும்மலர்களைச்சூடிய வலிய இராவணனின் முடியை நெரித்து மகிழ்ந்த வலியரும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளியுள்ளஇடம் ஆவூர் ஆகும். எங்கும் வளம் ஓங்கியதும்,தரிசித்தவர்கள்சித்தத்தால்உயர்ந்தவர்களாய்த்தமக்குக்கதியருள் என்று கைகளைக்கூப்பிப்பழமைதொட்டுச்சிவபெருமானுக்குஉரியனவாகியமலர்களைச் சாத்தி வழிபடும்இயல்பினதும்ஆகியதும்இவ்வூரே.ஆகும்.
குறிப்புரை: வெண்டலை மாலை உம்மைத் தொகை;வெண்தலைகளையும்மாலைகளையும் கலந்து அணிந்த திருமேனி உடையவர். விறல் - வலிமை. நாளும் புதுப்பூச்சூடி,போகம் நுகர்பவனாதலின்இராவணன் முடி வண்டமர்பூமுடிஎனப்பட்டது. அதனைச்செற்றுகந்தமைந்தர் என்பதால் வினைப்போகக்கழிவின்கண் ஆட்கொள்ளும் இறைவன் என்பதும் போதரும்,சிந்தைக் கருத்து - இடைவிடாத சிந்தனையால் எழுந்த கருத்து.
He wears garland of white skulls and other wreaths. He is the mighty One who crushed the heads of the martial Raakshasa (Raavanan) who wore wreaths of flower buzzed by bees. This fertile Aavoor is the place where seers eye Him everywhere, contemplate on Him with intense concentration, adore Him with folded hands, offer unto Him fruits and flowers and implore Him thus: 'O Lord! Be pleased to bless us with salvation'. Oh! Devotees! Let your tongue sing the praise of Lord Civan templed at Pasu-pathi-eech-charam in Aavoor.
மாலுமயனும்வணங்கிநேடமற்றவருக்கெரியாகிநீண்ட
சீலமறிவரிதாகிநின்றசெம்மையினாரவர்சேருமூராம்
கோல விழாவினரங்கதேறிக்கொடியிடைமாதர்கண்மைந்தரோடும்
பாலெனவேபொழிந்தேத்துமாவூர்ப் பசுபதி யீச்சரம்பாடுநாவே.9
மாலும்அயனும் வணங்கி நேட,மற்று அவருக்கு எரியாகி நீண்ட,
சீலம் அறிவு அரிதுஆகி நின்ற,செம்மையினார் அவர் சேரும் ஊராம் -
கோல விழா வின் அரங்கு அது ஏறிக்,கொடி இடை மாதர்கள்மைந்தரோடும்,
பால் எனவே மொழிந்து ஏத்தும் - ஆவூர்ப்பசுபதியீச்சரம் பாடு,நாவே!
பொருள்: திருமாலும்,பிரமனும்வணங்கித் தேட,அவர்கட்குச்சோதிப் "பிழம்பாய் நீண்டு தோன்றியவரும்,தமது எளிமை பிறரால் அறிதற்குஅரியராய்விளங்குபவரும்செம்மையாரும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய ஊர் ஆவூர் ஆகும். அழகிய விழாக்காலங்களில் கொடி போன்ற இடையினை உடைய பெண்கள் அரங்கின்௧கண் ஏறி ஆடவர்களோடுகூடிப் பால் போன்று இனிக்கும் மொழிகளால்இறைவனை ஏத்தும் ஊரும்இவ்வூரே ஆகும்.
குறிப்புரை: நேட - தேட. மற்றுவினைமாற்றுப்பொருளில் வந்தது. சீலம் - எளிமை;இதனைச்செளலப்யம்என்பர் வடநூலார். சீலமாவதுஅடியார்க்குஎளியராய் இருக்கும் தன்மை. மாலும்அயனும்தேட அவர்களுக்கு அறிதற்கரியசோதிப்பிழம்பாய்த்தோன்றியும் பின்னர் அவர்கள் துதித்து நிற்க அருளியஎளிமையை விளக்கியது. அதனைச்சிற்றறிவுடையஆன்மாக்கள்அறியமுடியாமையால்அறிவரிதாகிநின்ற என்றார். கோல விழா - அழகிய விழா. மாதரும்மைந்தரும்அரங்கேறியும்பால்போன்றமொழியால்இறைவனை ஏத்துகிறார்கள் என்பது. இன்பக்காலத்தும்இறைவனையேதியானிக்கும்பெருமை விளக்கியவாறு.
He is the perfect One of incomprehensible excellence, who when searched for by Vishnu and Brahma, soared up as a huge and tall column of fire, beyond their reach. Aavoor is the place where He abides. In this town during festivals, the lean-waisted women ascend the forum with their valiant spouses and hail Lord Civan in words, sweet as milk. Oh! Devotees! Let your tongue sing the praise of Lord Civan templed at Pasu-pathi-eechharam in Aavoor.
Notes: An insight into the elaborate festival arrangements glorifying Lord Civa. Also confer St. Appar's “முத்துவிதானமணிப்பொறகவரி ...
..", describing various details of festivities (Appar on return from at திருவாரூர்).
பின்னியதாழ்சடையார்பிதற்றும்பேதையராஞ்சமண்சாக்கியர்கள்
தன்னியலும்முரைகொள்ளகில்லாச்சைவரிடந்தளவேறுசோலைத்
துன்னியமாதருமைந்தர்தாமுஞ்சுனையிடைமூழ்கித்தொடர்ந்தசிந்தைப்
பன்னிய பாடல் பயிலுமாவூர்ப் பசுபதி யீச்சரம்பாடுநாவே._ 10
பின்னியதாழ்சடையார்,பிதற்றும்பேதையராம்சமண்சாக்கியர்கள்
தன்இயலும்(ம்) உரை கொள்ளகில்லாச் சைவர்,இடம் - தளவு ஏறு சோலைத்
துன்னியமாதரும்மைந்தர்தாமும்சுனை இடை மூழ்கித்,தொடர்ந்த சிந்தைப்
பன்னிய பாடல் பயிலும் - ஆவூர்ப்பசுபதியீச்சரம் பாடு,நாவே!
பொருள்: பின்னித்தொங்கவிடப்பட்டசடையை உடைய சமணஇல்லறத்தார்களும்சாக்கியர்களும்தங்களைப் பற்றியும் தாங்கள் சார்ந்த மதங்களின்சிறப்புக்களைப் பற்றியும் கூற,அவற்றை ஏற்க மறுத்தவராய் விளங்கும் சிவபெருமானாகிய ஆதி சைவன் விரும்பி உறையும் இடம் ஆவூர் ஆகும். முல்லைக் கொடி படர்ந்த சோலைகளில்மாதரும்மைந்தரும்நெருங்கிச்சுனையில்மூழ்கிச்சிவபிரானை மனம் ஒன்றிப்பாடுவதும்இவ்வூரே ஆகும்.
குறிப்புரை: பின்னிய தாழ் சடையார் - பின்னித்தொங்கவிடப் பெற்ற சடையைஉடையவர்கள்: சமணரில்இல்லறத்தாராகிய ஆண்கள் தலையைப்பின்னித் தொங்க விடுதல் மரபு. இன்றும் உலகத்தில் பல இனத்து ஆடவரிடையே இந்த மரபைக் காணலாம். சாக்கியர் - புத்தர். தன்னியலும் உரை - தன்னைப் பற்றி அவர்கள் சொல்லும் உரைகள். உரைகொள்ளகில்லாச் சைவர் - அவ்வுரைகளுக்குப்பொருளாகத்தாம் ஆகாத சிவபெருமான் என்றது,சிவத்தைப் பற்றி அவர்கள் கூறும் உரைகள்சிற்றறிவினால்சொல்லப்பட்டனஆதலின்அவற்றைக்கடந்துநின்றஇயல்பினை உடையவர் என்பதாம். தளவு - முல்லை. மாதரும்மைந்தரும்சுனையில்மூழ்கிப்புறத்தூய்மையோடுஅகத்தூய்மையும் கொண்டு வழிபடுகின்றனர்என்றவாறு.
The Jain householders plait their hair and let it hang it on their back. These people and the Buddhists blabber about themselves and their religion. Lord Civan who is beyond these remarks ignores their sayings. He loves to stay in Aavoor. Mullai creepers grow in the pools situated in the gardens where women bathe with their spouses and proceed to the shrine singing psalms, with their mind solely set on the Lord God at Pasu-pathi-eech-charam. Oh! Devotees! Let your tongue sing the praise of Lord Civan templed at Pasu-pathi-eech-charam in Aavoor.
Notes: Saint Sambandhar refers to Civa as a Saiva. Civa is indeed the Anaadhi Civa (aeviternal saivite). Mullai: A fragrant flower.
எண்டிசையாரும்வணங்கியேத்துமெம்பெருமானையெழில்கொளாவூர்ப்
பண்டுரியார்சிலர்தொண்டர்போற்றும் பசுபதி யீச்சரத்தாதிதன்மேல்
கண்டல்கண்மிண்டியகானற்காழிக்கவுணியன்ஞானசம்பந்தன்சொன்ன
கொண்டினிதாவிசைபாடியாடிக்கூடுமவருடையார்கள்வானே.11
எண்திசையாரும் வணங்கி ஏத்தும் எம்பெருமானை,எழில் கொள் ஆவூர்ப்
பண்டு உரியார் சிலர் தொண்டர் போற்றும்பசுபதியீச்சரத்து ஆதி தன் மேல்,
கண்டல்கள்மிண்டிய கானல் காழிக்கவுணியன் - ஞானசம்பந்தன் - சொன்ன
கொண்டு,இனிதா இசை பாடி ஆடிக்கூடுமவர்உடையார்கள்,வானே
பொருள்: எட்டுத்இசையில்உள்ளவர்களும்வணங்கிப்போற்றும்எம் தலைவரும்,அழகிய ஆவூரில்பழஅடியார்களால்போற்றப்பெறுபவரும் ஆகிய பசுபதீயீச்சரத்துஇறைவர்மேல்தாழை மரங்கள் நிறைந்த கடற்கரைச்சோலைகளால்சூழப்பட்ட€காழிப்பதியில்கவுணியர்குடியில்தோன்றியஞானசம்பந்தன்பாடிய பாடல்களை இசையோடு பாடி ஆடி வணங்குபவர்கள்,வானகத்தைத் தமது உடைமையாகப்பெறுவர்.
குறிப்புரை: திசையில் உள்ளார் அனைவரும் வணங்கும்பெருமானைஆவூரில்வழிவழிஉரிமைபூண்டசிவஅடியார்கள்போற்றுகின்றார்கள்என்பதாம். கண்டல் - தாழை,சொன்ன - சொல்லினவாயபாடல்கள்,பாடி - வாய்த்தொண்டு. ஆடி - மெய்த் தொண்டு. கூடுதல் - சிந்தைத் தொண்டு. கூடுமவர் - தியானிப்பவர்.
Gnaana-sambandhan, the Kauniya of litoral Kaazhi rich in fragrant screwpines, hath sung of the Lord God who is hailed by all the gods of the eight fold directions. He who has no Alpha or Omega (the primordial), is enshrined in beautiful Pasu-pathi- eech-charam. He is hailed by the blessed traditional servitors of Aavoor. Heaven is theirs who gather to recite these hymns melodiously, and dance (in glee).
திருச்சிற்றம்பலம்
8ஆம் பதிகம் முற்றிற்று
சிவமயம்
9. திரு வேணுபுரம்
திருத்தல வரலாறு:
முதல் பதிகம் பார்க்க.
பதிக வரலாறு:
மயிலையில்பூம்பாவையைஉயிர்ப்பித்த பிள்ளையார்,திருவான்மியூர்,இடைச்சுரம், கழுக்குன்றம்,அச்சிறுபாக்கம்,அரசிலிபுறவார்பனங்காட்டூர் ஆகிய தலங்களை வழிபட்டு,நற்றவர்குழாத்தோடும்,ஆனந்த நடராஜர்ஞானநடஞ்செயும்தில்லையம்பதியின் எல்லையில் வணங்கிக்கொண்டு,திருக்கழுமலம்சென்றடைந்து,சீகாழிப்பதியைத்தூரத்தேகண்டதும்,பல்லக்கைவிட்டிறங்கி, ‘வண்டார் குழல் அரிவை’ என்னும் இத்திருபதிகத்தைப் பாடி அருளுகிறார். இத்திருப்பதிகத்தின் ஒன்று முதல் பத்துப்பாடல்களும்சிவபிரானது ஊர் வேணுபுரம் என உள்ளவாறே பொருள் கொள்ளத்தக்கன. தூரத்தேகண்டதும் பாடினார் என்பதற்கு “வேணுபுரம் அதுவே” என்றதேஅகச்சான்றாயிற்று. வேணுபுரம் என்பது சீகாழியின்12 பெயர்களில் ஒன்று.
9. THIRU-VENU-PURAM
THE HISTORY OF THE PLACE
See First Hymn.
INTRODUCTION TO THE HYMN
Returning from his pilgrimage of Thondai Nadu, the young saint reached the outskirts of Seekaazhi, which is Venupuram. He then got down from the palanquin in which he was travelling and sang the following hymn.
திருச்சிற்றம்பலம்
9.திரு வேணுபுரம்
பண் : நட்டபாடை
ராகம் : கம்பீரநாட்டை
வண்டார்குழலரிவையொடுபிரியாவகைபாகம்
பெண்டான்மிகவானான்பிறைச்சென்னிப்பெருமானூர்
தண்டாமரைமலராளுறைதவளந்நெடுமாடம்
விண்டாங்குவபோலும்மிகுவேணுபுரமதுவே.
வண்டு ஆர் குழல் அரிவையொடுபிரியா வகை பாகம்
பெண்தான் மிக ஆனான்,பிறைச்சென்னிப் பெருமான்,ஊர் -
தண்தாமரைமலராள் உறை தவள(ந்)நெடுமாடம்
விண் தாங்குவபோலு(ம்) மிகு - வேணுபுரம் அதுவே.
பொருள்: வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடைய பெண்ணாகியஉமையம்மை,தன்னிற்பிரியாதிருக்கத்தன்திருமேனியில்இடப்பாகத்தை அளித்து,அப்பாகம் முழுதும் பெண் வடிவானவனும்,பிறையணிந்ததிருமுடியைஉடையவனும் ஆகிய பெருமானது ஊர், தாமரை மலரில் விளங்கும் திருமகள் வாழும் வெண்மையான பெரிய மாடங்கள்விண்ணைத்தாங்குவன போல உயர்ந்து விளங்கும் வேணுபுரமாகும். குறிப்புரை: இது உமாதேவியைப்பிரியாதிருக்க ஒரு பாகமேபெண்ணான பெருமான் ஊர் வேணுபுரம் என்கின்றது. வண்டார் குழல் அரிவை - வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடைய பெண்ணாகிய உமை. பிரியாவகை - பிரியாதிருக்க. பாகம் - ஒரு பாகத்திலேயே. மிகப் பெண் ஆனான் - முழுதும் பெண் வடிவானவன். தவளம் - வெண்மை. மாடம் விண் தாங்குவ போலும் என்றது உயர்வு நவிற்சியணி.
Lord Civan who sports a crescent moon on His crest is inseparably concorporate with His Consort Umaa whose (flowery) locks are buzzed by honeybees. His left half is wholly of a woman's frame. Venupuram is His town where He is enthroned and from where graces His devotees. Goddess Lakshmi whose seat is Lotus flower lives here in huge, white tall mansion which appears as though they are holding aloft the sky. Such tall mansions are many in Venupuram.
Note : Venupuram is one of the twelve names of Seekaazhi. Venu means Bamboo. Scard of Soorapadma, Indra hid himself in a bamboo tree in this place and performed Civa Pooja.
படைப்புந்நிலையிறுதிப்பயன்பருமையொடுநேர்மை
கிடைப்பல்கணமுடையான்கிறிபூதப்படையானூர்
புடைப்பாளையின்கமுகின்னோடுபுன்னைமலர்நாற்றம்
விடைத்தேவருதென்றன்மிகுவேணுபுரமதுவே.
படைப்பு(ந்)நிலை,இறுதிப் பயன்,பருமையொடு,நேர்மை,
கிடைப்பல்கணம் உடையான்,கிறிபூதப்படையான்,ஊர் -
புடைப்பாளையின்கமுகி(ன்)னோடுபுன்னைமலர் நாற்றம்
விடைத்தேவரு தென்றல் மிகு - வேணுபுரம் அதுவே.
பொருள்: படைத்தல்,காத்தல்,அழித்தல் ஆகிய முத்தொழில்புரிவோனும்,அவற்றின் முடிந்த பயனாயவீட்டின்ப வடிவாய் விளங்குவோனும்,பருமை நுண்மை இவற்றிற்கோர்எல்லையாகஇருப்பவனும்,வேதங்களை ஓதும் கணங்களைஉடையோனும்,வஞ்சகமான பூதப்படைகளைஉடையவனும் ஆகிய சிவபிரானதுஊர்,பக்கங்களில் வெடித்து மலர்ந்திருக்கும்கமுகம்பாளையின்மணத்தோடுபுன்னை மலர்களின் மணத்தைத் தாங்கி மெல்லெனப்பெருமிதத்தோடு வரும் தென்றல் காற்று மிகுந்து வீசும் வேணுபுரம் ஆகும். குறிப்புரை: படைப்பு - சிருஷ்டி. நிலை - திதி. இறுதி - சம்ஹாரம். பயன் - முத்தொழிலின்பயனாகியவீட்டின்பத்தின் வடிவாய் இருப்பவன். பயன் - பயன்,வடிவாகியஇறைவனைஉணா்த்திற்று. பருமை - பருப்பொருள். நேர்மை. - நுண் பொருள். என்றது அணுவுக்குஅணுவாயும்பெரியவற்றிற்கெல்லாம்பெரிதாயும் நிற்கும் இறைவனின் நிலை உணர்த்தியவாறு. கிடை பல் கணம் உடையான் - வேதத்தை ஓதும் கூட்டமாகிய பல சிவகணங்களை உடையவன். கிடை - வேதம் ஒதும் கூட்டம்.'ஓதுகிடையின்உடன் போவார். (பெரிய,சண்டே -17)கிறி - வஞ்சகம். புடைப்பாளை - பக்கங்களில் வெடித்து மலர்ந்திருக்கின்றபாளைகள். விடைத்தே - வேறுபடுத்திய,கமுகு புன்னைகளின்நாற்றத்தைஒன்றாகக்காட்டாதுமிக்கு வேறு படுத்திக்காட்டுகிறது.
Lord Civan's main threefold activities are creation, sustenance and absorption. He is the ultimate fruit that is moksha. He is ir-reducible speck as well the biggest of all the big. He is the Lord of Hosts of (gobbins) demons (warrior giants) who are reciting the Vedas. He is also the Lord of deceitful demons. Behold He abides in Venupuram. The areca flower bunches burst out from the sides of the plant, and blossoms. The fragrance emanating from the flowers of mast wood (Punnai trees) trees as well the smell from the areca flowers fill the proud southern wind that gently blows through Venupuram.
Note: Punnai: Mast wood - A tree. The oil extracted from its fruit is used to light lamps (Alexandrian laural).
கடந்தாங்கியகரியையவர்வெருவவுரிபோர்த்துப்
படந்தாங்கியவரவக்குழைப்பரமேட்டிதன்பழவூர்
நடந்தாங்கியநடையார்நலபவளத்துவர்வாய்மேல்
விடந்தாங்கியகண்ணார்பயில்வேணுபுரமதுவே.3
கடம் தாங்கியகரியை அவர் வெருவ உரி போர்த்து,
படம் தாங்கியஅரவக்குழைப்பரமேட்டி தன் பழ ஊர் -
நடம் தாங்கியநடையார்,நலபவளத்துவர்வாய்,மேல்
விடம்தாங்கிய கண்ணார்,பயில் - வேணுபுரம் அதுவே.
பொருள்: தாருகாவனத்துமுனிவர்கள்ஏவியமதநீர் ஒழுகும் யானையைஅம்முனிவர்கள்வெருவுமாறு உரித்துப் போர்த்தவரும்,படத்தோடு கூடிய பாம்பைக்குழையாகஅணிந்தவரும் ஆகிய சிவபிரானது பழமையான ஊர்,நடனத்துக்குரியசதிகளோடு கூடிய நடையையும்,அழகிய பவளம் போன்ற சிவந்த வாயினையும் குளிர்ச்சியான பார்வை உடைய கண்களையும்,கொண்டுள்ள அழகிய மகளிர் பலர் வாழும் வேணுபுரம் ஆகும். குறிப்புரை: கடம் - மதநீர். அவர் வெருவ - யானையைஏவியதாருகாவனத்துமுனிவர்கள் அஞ்ச, பழவூர் என்றது மகா-ப்-பிரளயகாலத்திற்கும்தொன்மையதாதலின். நடந்தாங்கியநடையார் - நடனத்திற்கு ஏற்ற ஜதிவைப்பைத்தாங்கியநடையைஉடையவர்கள். துவர் - சிவப்பு,விடந்தாங்கிய - குளிர்ச்சி பொருந்திய. விடம் - மிகவும் குளிர்ச்சியான பொருள்.
The Munis of Darukaa Vanam (தாருகாவனத்துமுனிவர்கள்) commandeered a rutting male elephant to kill Lord Civan. When the tusker approached Lord Civan, He tore its skin and wore it on His body that made all the Munis tremble. Lord Civan wore the hooded serpent as His ear pendant (male ornament). Venupuram is the very old town where Lord Civa abides. Here live lovely girls of ruddy and coral like lips. Even their ordinary steps follow the rule of dance. Their eyes bear a piercing cool look.
Note: Munis: The munis of Tarukaavanam who performed a sacrifice with intent to do away with Civa, in vain.
தக்கன்றனசிரமொன்றினையரிவித்தவன்றனக்கு
மிக்கவ்வரமருள்செய்தவெம்விண்ணோர்பெருமானூர்
பக்கம்பலமயிலாடிடமேகம்முழவதிர
மிக்கம்மதுவண்டார்பொழில்வேணுபுரமதுவே.4
தக்கன்தன சிரம் ஒன்றினைஅரிவித்து,அவன் தனக்கு
மிக்க(வ்) வரம் அருள் செய்த எம்விண்ணோர் பெருமான் ஊர் -
பக்கம் பலமயில்ஆடிட,மேகம் முழவு அதிர,
மிக்க(ம்) மது வண்டு ஆர்பொழில் - வேணுபுரம் அதுவே.
பொருள்: தக்கனது தலையை வீரபத்திரக்கடவுளைக் கொண்டு அரியச் செய்து,பிழையைஉணர்ந்து அவன் வேண்டிய போது அவனுக்கு மிகுதியான வரங்கள்பலவற்றைஅளித்தருளிய வானோர் தலைவனாகியசிவபெருமானது ஊர்,மேகங்கள் முழவாகஒலிக்க, நாற்புறமும்மயில்கள்ஆடுவதும்,மிகுதியான தேனை வண்டுகள் அருந்தும் வளமுடையதுமானபொழில்கள்சூழ்ந்த வேணுபுரம் ஆகும்.
குறிப்புரை: தக்கன் தன் சிரம் - தக்கன் தலை. தன அகரம் வேண்டாவழிச் சாரியை. அரிவித்து என்றது வீரபத்திரக்கடவுளைக் கொண்டு வெட்டுவித்தவரலாற்றினை உட்கொண்டு. மிக்கவரம் அருள் செய்த என்றது. பின்னர்,அவனை மன்னித்து அவன் வெட்டுண்டதலைக்குப் பதில் ஆட்டுத் தலையை வைத்து அவன் உயிர் பிழைக்கச்செய்ததனையும்அவனைச்சிவகணநாயகனாக்கிப்புனிதப்படுத்தியதனையும்உட்கொண்டு.
Lord Civan commanded Veerabahu to punish Daksha who showed disrespect to Him. Veerabahu cut off Daksha's head. Later, he was excused; his head was replaced by a sheep's (ram's) head. Then, He granted him many a boon; He indeed is the Lord of gods. Behold His town is Venupuram in the skies of which clouds rumble; peacocks dance in ecstasy in all the gardens on the four sides of the town. It is the fertile Venupuram full of gardens where honeybees galore buzz around and sip honey from the flowers.
Note: Daksha was punished by Veera Bhadra under orders of Lord Civa. After the execuse, his head was replaced by a sheep's head and he got back to life.
நானாவித வுருவானமையாள்வானணுகாதார்
வானார்திரிபுரமூன்றெரியுண்ணச்சிலைதொட்டான்
றேனார்ந்தெழுகதலிக்கனியுண்பான்றிகழ்மந்தி
மேனோக்கிநின்றிறங்கும்பொழில்வேணுபுரமதுவே.5
நானாவித உருவாய்,நமை ஆள்வான்,நணுகாதார்
வான் ஆர் திரி புரம்மூன்றுஎரியுண்ணச் சிலை தொட்டான், -
தேன் ஆர்ந்து எழு கதலிக்கனி உண்பான் திகழ் மந்தி
மேல் நோக்கி நின்று இறங்கும் பொழில் - வேணுபுரம் அதுவே.
பொருள்: அன்போடு வழிபடும் நாம் எவ்வுருவில்நினைக்கின்றோமோஅவ்வுருவில் தோன்றி நம்மை ஆட்கொள்பவனும்,தன்னை நணுகாதவராகியஅசுரர்களின்வானில்திரிந்த மூன்று புரங்கள்வெந்தழியுமாறு வில்லை வளைத்துக் கணை தொடுத்துஎரியூட்டியவனும் ஆகிய சிவபிரானது ஊர்,மரங்களில் அமர்ந்த மந்திகள்தேனின்சுவைபொருந்தியனவாய்ப்பழுத்துத்தோன்றிய வாழைப் பழங்களைக் கண்டு அவற்றை உண்ணுதற் பொருட்டு மேல்நோக்கியவாறே தாம் ஏறிப்பறிக்க இயலாத தம் நிலைக்கு வருந்தும் பொழில்கள்சூழ்ந்தவேணுபுரம் ஆகும். “வாழை மரத்தில் குரங்கு ஏறாதன்றோ”.
குறிப்புரை: நானாவித உருவால்நமையாள்வான் - தியானிக்கின்றஅடியார்கள் நினைத்த உருவத்தோடுவெளிப்பட்டுஅருள்புரிபவன். அதுவுமல்லாமல்சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு தேவைப்படும் பலபலவித்தியாசமான உருவங்களில் தோன்றி அருள்புரிவான். உதாரணமாக தாயாகவும்,குழந்தையாகவும், சந்நியாசியாகவும்,வேடனாகவும் - இவ்வாறு பல உருவங்களிலும் தோன்றி அருள்புரிந்துவிட்டு உடன் மறைந்தும் விடுவான். நணுகாதார் - பகைவர்களாகியதிரிபுராதிகள். வானார் - வானத்திற்பறந்துதிரிகின்ற சிலை தொட்டான் - வில்லால்அம்பைச்செலுத்தியவன். தொடுதல் - செலுத்துதல். “கடுங்கணைகள்தம்மைத்தொட்டனன்” (கந்த. சூரபன்மன் வதை191)சிலை தொட்டான் என்றது சிலையைத்தொட்டஅளவே! திரிபுரங்கள் எரிந்தன என்னும் நயப்பொருள் தோன்ற. தேன் ஆர்ந்து எழு கதலி - தேன்கதலி என்னும் ஒரு வகை வாழை. மந்தி மேல் நோக்கி ஏறிப்பறிக்க இயலாத நிலைக்கு இரங்குகின்ற(வருந்துகின்றஇயற்கையைஅறிவித்தபடி. இறங்கும் என்றும் பாடம். இதற்கு,குரங்கு மேல் நோக்கியவாறேகீழிறங்கும் என்பது பொருள்.
Lord Civan is our ruler and He assumes a good many forms. In whatever form, His servitors think of Him in their mind and pray, He will be visible to them in that very form. Also, according to the need in a particular situation, He will take that form - say as a mother, as a child, as a mendicant, as a hunter, and so on, and will disappear instantaneously when the mission is over. He touched his bow and gutted with fire the three, hostile citadels that flew in the sky. Behold His town is Venupuram where in its plantain gardens monkeys driven by a longing to eat the ripe banana fruits of lofty plantain trees look up in despondency and climb down facing (upwards).
Note: Manthi is a female monkey and Kaduvan is male monkey.
மண்ணோர்களும்விண்ணோர்களும்வெருவிம்மிகவஞ்சக்
கண்ணார்சலமூடிக்கடலோங்கவ்வுயர்ந்தானூர்
தண்ணார்நறுங்கமலம்மலர்சாயவ்விளவாளை
விண்ணார்குதிகொள்ளும்வியன்வேணுபுரமதுவே.6
மண்ணோர்களும்விண்ணோர்களும்வெருவி(ம்) மிக அஞ்ச,
கண் ஆர் சலம் மூடிக் கடல் ஓங்க(வ்),உயர்ந்தான் ஊர் -
தண்ஆர்நறுங்கமலம் மலர் சாய(வ்),இள வாளை
விண் ஆர்குதிகொள்ளும் - வியன் வேணுபுரம் அதுவே.
பொருள்: மண்ணுலகமக்களும்விண்ணகத்தேவரும் கண்டு நடுங்கி மிகவும் அஞ்சுமாறுநிலமெல்லாம் நிறைந்த நீர் மூடிக் கடல் ஊழி வெள்ளமாய்ஒங்க,அவ்வெள்ளத்திலும்அழியாது உயர்ந்து தோணியாய்த்தோன்றுமாறு செய்த சிவபிரானது ஊர்,தண்ணிய மணம் கமழும் தாமரை மலர்கள் சாயுமாறு "இளவாளை மீன்கள் வானிடை எழுந்து குதிக்கும்நீர்வளம் சான்ற பெரிய வேணுபுரம் ஆகும்.
குறிப்புரை: கண்ணார் சல மூடி - நிலமெல்லாம் நிறைந்து நீர் மூடி,மூடி ஓங்க உயர்ந்தான் ஊர் எனக்கூட்டுக.
When the great deluge sweeps the entire universe the dwellers of the world and the celestial ones shudder in utter dread. The whole universe sinks under the ocean which spreads out everywhere. Behold His lofty town Venupuram untouched by the deluge! It is indeed the tall Venupuram which by His grace appeared as a boat and was floating. In the pools of Venupuram the cool and fragrant lotus flowers bend down while the young vaalai (fish) leap heavenward and play.
Note: Vaalai - Scabbard fish.
மலையான்மகளஞ்சவ்வரையெடுத்தவ்வலியரக்கன்
றலைதோளவைநெரியச்சரணுகிர்வைத்தவன்றன்னூர்
கலையாறொடுசுருதித்தொகைகற்றோர்மிகுகூட்டம்
விலையாயினசொற்றேர்தருவேணுபுரமதுவே.
மலையான்மகள் அஞ்ச(வ்),வரை எடுத்த(வ்) வலிஅரக்கன்
தலை தோள் அவை நெரியச் சரண் உகிர்வைத்தவன்தன் ஊர் -
கலைஆறொடுசுருதித்தொகைகற்றோர் மிகு கூட்டம்
விலைஆயின சொல்-தேர்தரு - வேணுபுரம் அதுவே.
பொருள்: மலையரையன்மகளாகிய பார்வதி தேவி அஞ்சுமாறு கயிலை மலையைப்பெயர்த்தெடுத்த வலிமை சான்ற இராவணனின்தலைகள்தோள்கள் ஆகியவை நெரியுமாறுகால் விரலைஊன்றியசிவபிரானது ஊர்,ஆறு அங்கங்களோடுவேதங்களின்தொகுதியைக்கற்றுணர்ந்தோர்தம்முள் கூடும் கூட்டத்தில் விலை மதிப்புடையவராகதேர்ந்துபேசும் கல்வி நலம் சான்றவர் வாழும் வேணுபுரம் ஆகும்.
குறிப்புரை: இராவணனதுதலையும்தோளும்நெரியவிரலினதுநுனியை ஊன்றி மறக்கருணைகாட்டியதுவரையையெடுத்ததற்காக அன்று;உமாதேவிக்கு அச்சம் விளைத்தமையான். பெண்மையின் பொதுமை நோக்கி உரைத்தலாயிற்று. உகிர் - நகம். சுருதித் தொகை - சாகைகளின்கூட்டமாகியவேதம். விலையாயின சொல் - பெறுமதியுடைய சொற்கள்.
When the king of Sri Lanka, Raavana, tried to uproot the mountain (Kailas) - the abode of Lord Civa, Goddess Uma, the daughter of Himavan (King of Himalayas) grew scared. The Lord slightly pressed the mount by the tip of His toe. Raavanaa's heads and shoulders got crushed (thereunder). This Lord Civan resides in Venupuram. Here the great assembly of those who are well-versed in the Vedas and its six angas exercise themselves to gain the import of the words of incalculable worth.
Notes: The Angas: The six texts that supply the key to the understanding of the Vedas.
வயமுண்டவமாலும்மடிகாணாதலமாக்கும்
பயனாகியபிரமன்படுதலையேந்தியபரனூர்
கயமேவியசங்கந்தருகழிவிட்டுயர்செந்நெல்
வியன்மேவிவந்துறங்கும்பொழில்வேணுபுரமதுவே.9
வயம்உண்ட அ(ம்)மாலும் அடி காணாதுஅலமாக்கும்,
பயன் ஆகிய பிரமன்படுதலைஏந்தியபரன் ஊர் -
கயல்மேவிய சங்கம் தரு கழி விட்டு,உயர் செந்நெல்
வியல்மேவி,வந்து உறங்கும் பொழில் - வேணுபுரம் அதுவே.
பொருள்: உலகை உண்டதிருமாலும் தன் அடிகளைக்காணாதுஅலமருமாறுசெய்தவனும், அச்சம் உடைய பிரமனதுகிள்ளப்பட்டதலையோட்டினைஏந்தியவனுமாகியசிவபிரானதுஊர்,ஆழ்ந்த கடலில் வாழும் சங்குகள்,கடல் தரும் உப்பங்கழியைச் சேர்ந்து,பின்னர் அதை விடுத்துச் செந்நெல் விளைந்த அகன்ற வயலில் வந்து உறங்கும் வேணுபுரம் ஆகும்.
குறிப்புரை: வயம் - வையம் - போலி,வயம் உண் தவம் மாலும் - உலகை உண்டதவத்தைச் செய்த திருமாலும். அடிகாணாதுஅலமாக்கும் - திருவடியைக்காணப்பெறாது சுழலும். அலமாக்கும்(அலமருதற்குக்காரணமாயிருந்த) பரன் எனவும்,ஏந்தியபரன் எனவும் தனித்தனியே கூட்டுக. பயன் ஆகிய பிரமன் - அச்சத்தைஉடையவனாகிய பிரமன். கயம் - ஆழ்ந்த நீர் நிலை. சங்கம் உப்பங்கழியைவிட்டுச் செந்நெல் வயலில் வந்து உறங்கும் வேணுபுரம். செந்நெல்வியன் - செந்நெல் விளைந்துள்ளஅகன்ற இடம். -
Lord Civa made Vishnu get bewildered for his vain search to reach His holy Feet. People in this world aspire to reach Brahma Loka, the Lord of which is Brahman. One of his five heads was ripped. The dried skull of his ripped head was being used as a begging bowl by Lord Civan. This Lord Civa resides in Venupuram. It is here that 'chanks' (shells) from the deep waters of the sea get uprooted and reach the salt pans. Again they leave the salt pans and reach the wide fields where red paddy grows, and slumber there.
Notes: Ruddy paddy: Sennel (Sambha paddy) - paddy with red rice.
மாசேறியவுடலாரமண்குழுக்கள்ளொடுதேரா்
தேசேறியபாதம்வணங்காமைத்தெரியானூர்
தூசேறியவல்குற்றுடிபிடையார்துணைமுலையார்
வீசேறியபுருவத்தவர்வேணுபுரமதுவே.10
மாசு ஏறியஉடலார்அமண்குழுக்க(ள்)ளொடுதேரர்,
தேசுஏறிய பாதம் வணங்காமைத்தெரியான் ஊர் -
தூசுஏறிய அல்குல் - துடி இடையார்,துணைமுலையார்,
வீசு ஏறியபுருவத்தவர், -வேணுபுரம் அதுவே.
பொருள்: அழுக்கேறியஉடலினைஉடையவர்களாகிய சமணர் கூட்டத்தினரோடு,புத்தமதத்தினராகியதேரர்களும் ஒளி பொருந்தியதிருவடிகளைவணங்காமையால்,அவர்களால் அறியப்பெறாதசிவபிரானது ஊர்;அழகிய ஆடை தோயும்அல்குலையும்,உடுக்கை போன்ற இடையையும்,பருத்த தனங்களையும்,ஆடவர் மேல் தம் குறிப்பு உணர்த்து நெரியும்புருவங்களையும் உடைய அழகிய மகளிர் வாழும் வேணுபுரம் ஆகும்.
குறிப்புரை: மாசு ஏறிய உடல் - தேயாதுதோய்வதால் அழுக்கு ஏறியஉடல்.தேரர்-புத்த முனிவர் தேசுஏறிய பாதம் - ஒளியுள்ள திருவடி. வணங்காமைத்தெரியான்வணங்காதபடி அவர்களால் அறியமுடியாதவன். தூசு - ஆடை,துடி - உடுக்கை. வீசு ஏறியபுருவத்தவர் - ஆடவர் மேல் பார்வையைச்செலுத்தி நெற்றியின்கண்ஏறியபுருவத்தினை உடையார்.
The Jains of dirt-ridden bodies and the Buddhist monks know not how to adore the splendourous Feet of Lord Civan, whose town is Venupuram. Here live beautiful maidens. Their waist is slender like the (shape of the) small drum in Civa's hand, tapering at the middle (Udukkai). Their alkul is veiled by choice vestments, their arching eyebrows and their sharp eyes indicate their mind.
Notes: Thudi Idai: The waist that is like a small drum resembling an hour glass.
வேதத்தொலியானும்மிகுவேணுபுரந்தன்னைப்
பாதத்தினின்மனம்வைத்தெழுபந்தன்றனபாடல்
ஏதத்தினையில்லாவிவைபத்தும்மிசைவல்லார்
கேதத்தினையில்லார்சிவகெதியைப்பெறுவாரே.11
வேதத்துஒலியானும் மிகு வேணுபுரம் தன்னைப்
பாதத்தினில் மனம் வைத்து எழு பந்தன்தன பாடல்,
ஏதத்தினை இல்லா இவை பத்தும்),இசை வல்லார்
கேதத்தினைஇல்லார்,சிவகெதியைப்பெறுவாரே.
இவைபத்தும் - துன்பம் தரல் இல்லாத இந்தப்பத்துப்பாடல்களும். துன்பம் நீக்குமாற்றை ஊன்றி நோக்கி இன்புறுக. கேதம் - இன்பம்.
In Venupuram the voice of auspicious music and the voice of scholars chanting the Vedas fill the air forever. Gnaana-sambandan fixing his mind on the holy Feet of the Lord of Venupuram has sung these ten flawless verses. Those who can sing melodiously these ten verses stand freed from misery. Also they will gain salvation, which is the eternity of saivism.
Notes: Bandhan: Gnaana-sambandhar.
திருச்சிற்றம்பலம்
9ஆம் பதிகம் முற்றிற்று
சிவமயம்
10.திரு அண்ணாமலை திருத்தலவரலாறு:
திரு அண்ணாமலை என்ற திருத்தலமானதுநடுநாட்டுத் தலம் ஆகும். புகழ்பெற்ற தமிழக நகரங்களில் ஒன்று. விழுப்புரம் - காட்பாடி வழியில் இரயில் நிலையம். அனைத்து நகரங்களில்இருந்தும் பேருந்துகள் உள்ளன. நினைக்க முத்தி கிடைக்கும் தலம் ஆகும். இது வடஆர்க்காடுமாவட்டத்தில் திருவண்ணாமலை கோட்டத்தின் தலைநகரம். சூரியன்,பிரதத்தராஜன், அஷ்டவசுக்கள்,பிரமதேவன்,சந்திரன்,திருமால்,புளகாதிபன் முதலியோர் பூசித்துப்பேறுபெற்றதலம் ஆகும். வித்தியாதரர்களாகிய இருவர் ஒரு ரிஷியின்சாபத்தால்பூனையாகவும்குதிரையாகவும் இருந்த நிலை இத்தலத்தை வலம் வந்தமையால்மாறின. இறைவன் பெயர் - அண்ணாமலைநாதர்அருணாசலேசுவரர் என்றும் கூறுவர். இறைவி பெயர் - உண்ணாமுலையம்மை;அபீதகுஜாம்பாள் என்றும் கூறுவர். விநாயகர் பெயர் ஸ்ரீ சம்பந்த விநாயகர்; முக்குறுணி விநாயகர் என்றுங்கூறுவர். தலவிருட்சம் - மகிழ மரம்.
தீர்த்தம்-
கோயிலுக்கு உள்ளும் வெளியிலும் மலைப்பகுதியிலுமாக360தீர்த்தங்கள் உள்ளன. சிறந்தவைசிவகங்கையும்,பிரமதீர்த்தமும்,மலைப்பகுதியில் உள்ள அக்னி தீர்த்தமும்,இந்திரதீர்த்தமும் ஆகும். இந்திரதீர்த்தத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும். இத்தலத்தில் நடைபெறும்
பெரிய விழா கார்த்திகைத் திருவிழா ஆகும். இது கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நாளைத்தீர்த்தமாகக் கொண்டு நடைபெறும். சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தைத்தீர்த்தமாகக்கொண்டு பிரமோற்சவமும்,பங்குனி உத்திரத்தில்திருக்கல்யாணமும்ஆறுநாள்விழாவும்,மாசிமகத்தில்வல்லாளன்திருவிழாவும்,தை மாதம் திருவூடல்விழாவும்,ஆனி விழாவும்,ஆடியில்அம்பிகை விழாவும்,பவித்ரோற்சவம்,நவராத்திரி,கந்தசஷ்டி,திருவெம்பாவை உற்சவம், திருவாதிரை முதலியனவும்சிறப்பாகக்கொண்டாடப்பெறுகின்றன.
அயனும்மாலும் அகந்தை கொண்டு,அடிமுடிதேடஅன்னமும்வராகமுமாகமாறித்தேடிஅயற்சிஅடைந்தாராக,அக்கினி வடிவாய் நின்று அருள்செய்தவர்அண்ணாமலைநாதர். முருகன் தாருகனை வதம் செய்து வணங்கிச் சென்ற தலம் பலவற்றுள் இதுவும் ஒன்று. சம்பந்தர்,அப்பர், மணிவாசகர்இம்மூவராலும்பாடப் பெற்றது. சுந்தரர் பாடியதாகப் பாடல் இல்லையாயினும்சேக்கிழார் வரலாற்றால் ஊகிக்க வேண்டி உள்ளது. நக்கீரர்,பரணர்,கபிலர்,பட்டினத்தார் ஆகிய இந்நால்வரும்அண்ணாமலையைப்பற்றிப்பாடிய பாக்கள் பதினொராம்திருமுறையில் உள்ளன. வச்சிராங்கதன் என்னும் பாண்டியன் தினமும் வலம் வந்து திருப்பணி பல செய்து 'உள்ளான். வல்லாளமகராஜன்அண்ணாமலையை ஆண்டு வந்தான். அருணகிரிநாதர்கோபுரத்தில் இருந்து விழுந்து இறக்க எண்ணி வீழ்ந்தபோது முருகன் தோன்றி அருள் செய்தான். குகை நமச்சிவாயர், குருநமச்சிவாயர்முதலானவர்கள் சித்தி பல செய்தனர்.
கோயிலின் வடகிழக்கு மூலையில் ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. கிழக்குப் பக்கத்தில் நுழையும்போது உள்ள உட்கோபுரம்வல்லாளமகராஜன் கோபுரம் . என்று வழங்கப்படுகிறது. வல்லாளகோபுரத்தின் வடகிழக்கு மூலையில் சக்தி விலாஸமும் உள்ளது. மேற்கு நோக்கி உட்சென்றால்கிளிக்கோபுரம் காணலாம். தலவிருட்சத்திற்குமேற்கேகல்யாண மண்டபம் உள்ளது.
கல்வெட்டு:
பதிவு செய்யப் பெற்ற மொத்தக்கல்வெட்டுக்கள்119.இவைகளில் பெரும்பாலனசோழர்காலத்தன. திருவிளக்கேற்றல்,திருமஞ்சனம்,திருநந்தனவனம்,திருவமுது,திருவெழுச்சி, அடியார்க்குஅமுதளித்தல் முதலிய பல அறங்களுக்காக நிலம்,பொன்,கால்நடை முதலியனவற்றைஅளித்தமையை அறிவிக்கின்றன. பாண்டியர்,பல்லவர்,ஹொய்சாளமன்னரானவீரவல்லாள தேவர்,விஜயநகரத்துராயர்,தஞ்சாவூர் நாயக்கர் மற்றும் வணிகர்,வேளாளர்முதலியவர்கள்கல்வெட்டுக்களும்காணக்கிடக்கின்றன.
முதல் இராஜேந்திரனுடைய காலத்தில் (கி.பி.10389)திருவண்ணாமலை,மதுராந்தகவளநாட்டுப் பெண்ணை வடகரைத் திருவண்ணாமலை என்றும்,மூன்றாம் குலோத்துங்கன்(கி.பி.1179)காலத்தில் இராஜராஜவளநாட்டுவாணகோப்பாடி பெண்ணை வடகரை அண்ணா நாட்டுத் திருவண்ணாமலை என்றும்,மேற்படி சோழனுடைய27ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி.1204) வாணகோப்பாடிப் பெண்ணை வடகரை அண்ணா நாட்டுத் திருவண்ணாமலை என்றும்,விஜயநகரஇராயர்கள் காலத்தில் ஜெயங்கொண்டசோழமண்டலத்துச்செங்குன்றக்கோட்டத்துப் பெண்ணை வடகரைவாணகோப்பாடி அண்ணா நாட்டுத்தனியூர் திருவண்ணாமலை என்றும் குறிக்கப்பெற்றுள்ளது. இதனால் திருவண்ணாமலையின்உள்ளடங்கியவளநாட்டுப் பெயர் முதலில் மதுராந்தக வளநாடு என்று இருந்து,பிறகு இராஜராஜ வளநாடு என்று -மாறி,இறுதியில் ஜெயங்கொண்டசோழ மண்டலம் ஆயிற்று என்றும்,இம்மண்டலத்தின்உட்பிரிவாகியசெங்குன்றக்கோட்டத்தினுள் அண்ணா நாட்டுத்தனியூராகக் குறிக்கப்பட்டது என்றும் அறியக்கிடக்கும். பல்லவர் காலத்திற்குமுந்தியகல்வெட்டொன்றும்இல்லாமையால்,கோயில் செங்கற்சுதைமாடமாகஇருந்ததென்றும்,மலையின் மேல் அண்ணாமலையார் கோயில் கொண்டு இருந்திருக்கவேண்டும் என்றும் யூகிக்க வேண்டி உள்ளது. முதல் பிராகாரத்துச்சுவரில் கங்கை கொண்ட இராஜேந்திரன் கல்வெட்டு (கி.பி.1026)காணப்பெறுவதால்,இதற்கு முன்பே கருங்கல் திருப்பணி நடந்திருக்க வேண்டும். முதல் பிராகாரத்தில் விளங்கும் ஏகாம்பரநாதர் கோயில்,சிதம்பரேசர்கோயில் ஆகிய இரண்டின்சுவர்களிலும்கி.பி.12ஆம் நூற்றாண்டுச்சாஸனங்கள்காணப்படுகின்றன. திருக்காமக்கோட்டம் உடைய உண்ணாமுலை நாச்சியார் கோட்டம் தனியாக கி.பி.12ஆம் நூற்றாண்டில்அமைக்கப் பெற்றது கல்வெட்டுக்களில்திருக்காமக் கோட்டம் எனக்குறிக்கப் பெற்று உள்ளது.
பதின்மூன்றாம்நூற்றாண்டின்நடுப்பகுதியில் எழுந்த கல்வெட்டுக்களில்வீரராகவன்திருமதில்,வாணாதிராயன்திருமதில்,திருவேகம்பமுடையான்திருமதில் முதலியன குறிக்கப்பட்டுஉள்ளன. அம்மையப்பன்சந்நிதிக்கு இடையில் மேற்குப் பக்கத்தில் நங்கையாழ்வீசுவரம் என்னும் கோயில் பல்லவகுடும்பத்தைச் சேர்ந்த ஒரு அரசியால் (கி.பி.1269)எடுப்பிக்கப்பதினாலடிக்கோலால்பதின்மூன்றரை குழி விற்றுப்பதினாலாயிரம் பொற்காசு பெற்றுக்கட்டிய பகுதி இன்று இல்லை. கிருஷ்ணதேவராயர் (கி.பி.1516)ஆயிரங்கால்மண்டபத்தையும்,எதிரில் உள்ள திருக்குளத்தையும் பதினொரு நிலை உள்ள கோபுரத்தையும்,வேறுபலதிருப்பணிகளையும்அமைத்தமைஅறியப்படுகிறது.
பல்லவமன்னனானகோப்பெருஞ்சிங்கனும்,அவன் மகன் வேணாவுடையானும் செய்த திருப்பணிகள்மிகப்பல. பூஜைக்கும்,திருப்பணிக்குமாக அண்ணாமலை நாதர்தேவதானப்பற்றுக்களும் அண்ணா நாட்டு நாற்பாக்கெல்லைக்கு உட்பட்ட நன்செய்,புன்செய் ஆக உள்ள நிலத்திற்குஆயம் பாடி காவலால் வந்த நெல்லும்காசாயமும் மற்றும் எப்பேர்ப்பட்ட பல்லாயங்களும்இவன் தானமாகஈந்தான். கல்வெட்டுக்களில்காணப்பெறும் கோயில் அதிகாரிகள் ஸ்ரீருத்திரா,ஸ்ரீமாகேசுரர், ஸ்ரீமாகேசுரக் கண்காணி செய்வார்,தானத்தார்,தானபதிமாகேசுரர்,தேவகன்மிகள், கோயிற்கணக்கா,ஸ்ரீகாரியஞ்செய்வார்எனப் பலர் ஆவர். இவரில்ஸ்ரீமாகேசுரர்,தர்மசாசனங்கள்ஒழுங்காக நடைபெறக் காரியம் பார்ப்பவராவர். அண்ணாமலை நாதருக்கும் உண்ணாமுலை அம்மைக்கும் . பிச்சதேவர் முதலிய மூர்த்திகட்கும்திருப்பள்ளி எழுச்சி,சிறுகாலை சந்தி,உச்சிப்போது,இரவை,அர்த்தசாமம் முதலிய காலங்களில் அழுது முதலியவற்றிற்கு நிலம் அளித்தமை அறியலாம். சில சாஸனங்களில்பிரமநாயனார் பெரிய மடத்துமுதலியார்,வையந்தொழுவார் பெரிய மடத்துமுதலியார், திருவண்ணாமலை உடையார் திருமுற்றத்தேஇராஜேந்திர சோழன் சாலை,காங்கேயன் மடம், அம்மைமடம் முதலியன குறிப்பிடப்பட்டுள்ளன.
நெய்,மிளகு,உப்பு,தயிர்,அடைக்காய்,வெற்றிலை,சீரகம்,வாழைப்பழம், 'வாழையிலைமுதலியன நெல்லளந்துபெறப்பட்டவை. மங்கையர்க்கரசி என்னும் நங்கை தன்னாபரணங்களைவிற்ற பொருள் கொண்டும்,நெல்லைக்கொண்டும்ஏரிபுதுக்கி உதவினாள் என்ற செய்தியும்கல்வெட்டால்அறியப்படுகின்றது.
பதிக வரலாறு:
திருஅறையணிநல்லூரைவழிபட்ட பிள்ளையாருக்கு,அன்பர்கள் அண்ணாமலையைக்காட்டினார்கள். அண்ணாமலை,இறைவன் திருவுருவாகவே காட்சி அளித்தது. அதனைக்கண்ணாற்பருகிக்கைதொழுது கலந்து போற்றுங்காதலினால்இப்பதிகத்தைஅருளிக் கொண்டே தலத்தை: அடைகின்றார்கள். இப்பதிகமும்சேய்மையின்அண்ணாமலையை அன்பர் காட்டக்கண்டு தொழுது பாடியதாகவே சேக்கிழார் தெரிவிக்கின்றார் (பெரிய. திருஞா.969, 970). இப்பதிகப்பாடல்கள்உள்ளவாறே பொருள் கொள்க.
THE HISTORY OF THE PLACE
10. THIRU-ANNAAMALAI
The sacred city of Thiru-annaamalai is in Nadunaadu. It is one of the famous towns of Tamil Naadu. It has a railway station on the Kaatpaadi route. Buses ply to this town from all major towns. It is the capital of the Thiruvannamalai taluk in the North Aarkkaadu district. This sacred site gives salvation to those who just contemplate it. Sooriyan, Pirathaththaraajan, the eight Vasus, Biramadevan, Chandhiran, Pulakaadhipan, etc. offered worship and obtained salvation at this temple. Two Viththiyaatharars who had become a cat and a horse as a result of a curse by a rishi (sage), regained their original forms by circumambulating (going around) the temple. The God's name is Annaamalainaathar, also called Arunaachalesvarar. The Goddess is named Unnamulai Ammai, also known as Apeethakujambaal. Vinaayaka here is known as Sree Sambandha Vinayakar, also called as Mukkuruni Vinayakar. The tree of this sacred place is Makizhamaram.
Sacred Fords
There are 360 holy fords inside and outside the temple in the nearby hill area. Of these, the important ones are Sivagangai, Biramatheerththam, and the Agnitheerththam and Indhiratheerththam in the hill area. The 'float festival' takes place in the Indhiratheerththam. The major festival of this temple is the Kaarthigai Festival. This is celebrated in the month of Kaarthigai on Kaarthigai day. The other festivals celebrated with pomp are: the Biramotsavam in the month of Chiththirai, with Chiththirai day as the theerththam. The Divine Wedding (Thirukkalyanam) on the Uththiram day and a six day festival in the month of Panguni; Vallaalan festival on Magam day of the month of Maasi.Thiru-oodal festival in the month of Thai; Festival in Aani; Ambikai festival in
Aadi; and the festivals of Pavithrorsavam, Navaraaththiri, Kandhasashti, Thiruvembavai, Thiruvaadhirai etc. This is one of the sacred temples in whichMurugan, after killing Dhaarukan, offered worship. Saints Thiru-Gnaana-sambandar, Appar and Maanikavaachakar have sung in adoration of the deity here. Although there is no poem by Sundarar on this deity, one can guess based on the biography of Sekkizhaar. The Eleventh Thirumurai contains songs on Anaamalai by Nakkeerar, Paranar, Kabilar and Pattinaththaar. A Paandiyan king, Vachchiraangathan who was in the habit of circumambulating the temple daily, has caused to perform much renovation of this temple. One Valaala Maharajan was the ruler of Annamalai. When Arunagirinaathar tried to end his life by falling from atop the Gopuram, and God Murugan appeared and saved him by His grace. Gugai Namachchivaayar, Guru Namachchivaayar and such saints have performed feats of supernatural ability (siddhi). There is a thousand pillared Mandapam at the north-east corner of the temple. The inner Gopuram on the East entrance is known as Vallaala Maharajan gopuram. At the north-east corner of Vallala Gopuram Sakthi Vilaasam is situated. Proceeding further nside towards the west, one can see the Killi (Parrot) Gopuram. A Kalyaana Mandapam is located to the west of the sacred tree of the temple.
Stone Inscriptions
There are 119 officially registered inscriptions in this temple. Most of these are from the time of the Cholas. They inform about the gifts of land, gold, cattle etc., for performing such sacred ceremonies as, lamp-lighting, anointing, flower garden, offering of holy food to the divine, feeding the devotees, Thiruvezhuchchi etc. Inscriptions by Paandiyars, Pallavars, Hoysala King Veera Vallaala Thevar," Vijayanagar Rayars, Naayakkar of Thanjavoor are found, besides those by merchants and farmers. During the reign of Raajendran I (1038 CE), Thiruvannaamalai, was called Thiruvannaamalai on the north shore of the Pennai river of Madhuraanthaka Valanaatu; during the reign of Kulothungan III (1179 CE) it was called Anna Naattuth Thiruvannaamalai on the north shore of Pennai river of Vaanakoppaadi in Raajaraaja Valanaatu; in the regnal year 27 of the above Chola King (1204 CE), it was called Annaa Naattuth Thiru- vannaamalai on the north shore of Pennai river of Vaanakoppaadi; during the Raayars of Vijayanagar, it was called Annaanaattuth Thanivoor Thiruvannaamalai on the northshore of Pennai river of Vaanakoppaadi in Sengkunrakk Kottam of Jeyangkonda Cholamandalam. From this it is known that the name of subdivision (Valanaatu) in which Thiruvannaamalai was situated was first Madhuraanthaka Valanaatu, which changed to Raajaraaja Valanaatu later and finally became Jeyangkonda Chola- mandalam; and that a subdivision of this mandalam was known as Sengkunrak Kottam within which this place was referred to as Annaa Naattuth Thaniyoor. As there is no inscription predating the Pallava kings, it has to be presumed that the temple was built of bricks and mortar and that the Annaamalaiyaar shrine might have been located on the hill. As an inscription of Gangai Konda Raajendhiran (1028 CE) is found on the wall of the first piraakaaram (ambulatory), it could be inferred that the temple must have been renovated prior to this time. The walls of the shrines for Ekaambaranaathar and Chidambaresar, located in the first ambulatory, contain inscriptions of twelfth century CE. The inscription number 33 in the Kili, Gopuram reveals that the temple walls were made of granite even before the second regnal year of Veera Raajendhira Chola (1063 CE). The separate shrine for Thiruk Kaama Kottamudaiya Unnaamulai Naachchiyaar was made in the 12th century CE. This is referred to as Thiruk Kaamak Kottam in inscriptions.
In the inscriptions of mid 13th century CE, temple walls are referred to as Veeraraakavan Thirumathil, Vaanaathiraayan Thirumathil, Thiruvekampam-udaiyaan Thirumathil etc. A shrine, known as Nangai Aazhveesuvaram, once located on the west side between the shrines of the God and the Goddess, and which was built with ten thousand gold pieces raised by the sale of thirteen and a half kuzhi (as measured by fourteen-feet measuring rod), is not to be found today. It is known that Krishnadeva Raayar (1516 CE) had arranged for the construction of the thousand-pillared mandapam and the holy tank opposite that, and a gopuram of eleven stages, besides many other such sacred works.
Kopperunjsingan, the Pallava king, and his son Venaavudaiyaan have made endowments for many sacred construction works. He had gifted much paddy and cash, for worship services and construction works. The names of temple officers are given in the inscriptions as Sree Ruththirar, Sree Maakesurar, Sree Maakesurak Kankaani Seivaar, Thaanaththaar, Thaanapathi Maakesurar, Thevakanmikal, Koyirkanakkar, Sree Kaariyanj Seivaar etc. Among these, Sree Maakesurar supervised holy works specified in the endowment inscriptions. It is known that land was endowed for the preparation and presentation of holy food etc., for Annaamalai Naathar, Unnaamulai Ammai and other gods as Pichcha Thevar etc., at the worship services designated as Thiruppalli Ezhuchchi, Sirukaalai, Sandhi, Uchchippodhu, Iravai and Ardhasaamam. Some inscriptions reveal information on such as Biramanaayanaar Periya Madaththu Mudhaliyaar, Vaiyam Thozhuvaar Periya Madaththu Mudhaliyaar, Oorukkup Periya Madaththu Mudhaliyaar, Thiruvannaamalai Udaiyaar Thirumurraththe Raajendhira Cholan Saalai (road), Kaangkeyan Matam and Ammai Matam etc. Ghee, pepper, salt, curd, betel nuts, betel leaves, cumin seeds, plantain fruits and plantain leaves were bought in exchange for paddy. It is known from an inscription that a certain lady, Mangkaiyarkkarasi had contributed for the renovation of a reservoir, with money got from selling her jewelry and paddy.
INTRODUCTION TO THE HYMN
Devotees standing on the hill of Araianinallur pointed towards Thiru-annaa-malai. The saintly youth beheld it. To him, it appeared as the very lord. He hailed this and proceeded towards it, singing the following hymn.
திருச்சிற்றம்பலம்
10.திரு அண்ணாமலை
பண் : நட்டபாடை
ராகம் : கம்பீரநாட்டை
உண்ணாமுலை யுமையாளொடுமுடனாகியவொருவன்
பெண்ணாகியபெருமான்மலைதிருமாமணிதிகழ
மண்ணார்ந்தனவருவித்திரண்மழலைம்முழவதிரும்
அண்ணாமலை தொழுவார்வினைவழுவாவண்ணமறுமே.
உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய ஒருவன்,
பெண்ஆகிய பெருமான்,மலை- திரு மா மணி திகழ,
மண் ஆர்ந்தனஅருவித்திரள் மழலை(ம்) முழவுஅதிரும் -
அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே.
பொருள்: நமது முழுமுதற்பொருளாகிய சிவபெருமான்,உண்ணாமுலை என்னும் தருப்பெயருடையஉமையம்மையாரோடுஉடனாகஎழுந்தருளியவர். தம் இடப்பாகம்முழுவதும் பெண்ணாடகியவர். அவரது மலை திருஅண்ணாமலை. இம்மலையில் இருந்து அருவிகள்,சுடர்விடுகன்றமணிகளைத்தாங்கிக் கொண்டு பேரிரைச்சலோடு மண்ணை நோக்கி வருகின்றன. சிறார்கள் பேசும் பொருள் புரியாத மழலைஒலியோடு,முழவு ஒலியும் சேர்ந்து ஒலிக்கின்ற ஒலி போல அமைகின்றது அந்த அருவியின்பேரிரைச்சல். இத்தனைசிறப்பு வாய்ந்ததிருஅண்ணாமலையைத்தொழுவார்களுடையவினைகள்தவறாதுகெடும். குறிப்புரை: உமையாளொடும்உடனாகிய ஒருவன் என்றது உமாதேவியைஇடப்பாகத்து இருத்தி இருக்கிற உடனாய நிலையை உணர்த்தியது. பெண்ணாகிய பெருமான் என்றது உமையம்மையோடுஒன்றாகிய நிலையை உணர்த்தியது. மழலை முழவு - சொற்றூய்மை இல்லாத முழவொலி. சொல் - மத்தளத்தின் ஜதி ஒலி.
Lord Civan, the unique One, is concorporate with His Consort Unnaa-mulai, thus having a feminine structure on the entire left side of His frame. The Lord's hill is Annaa-malai from where, water is gushing through the falls bringing choice gems along with it. This waterfall creates heavy noise, similar to the lisping of babies in combination with the drum music. They who adore it will, for sure, be freed from their karma.
Note: Annaa-malai: Literally means the mountain which is unapproachable. It is said that it is the very form - less form of Lord. Civan i.e., Civa Lingam.
தேமாங்கனி கடுவன்கொளவிடுகொம்பொடுதீண்டித்
தூமாமழைதுறுகன்மிசைசிறுநுண்டுளிசிதற
ஆமாம்பிணையணையும்பொழிலண்ணாமலையண்ணல்
பூமாங்கழல்புனைசேவடிநினைவார்வினையிலரே.2
தேமாங்கனி கடுவன் கொள விடு கொம்பொடுதீண்டித்,
தூ மா மழை துறுகல்மிசைசிறுநுண் துளி சிதற,
ஆமாம்பிணை அணையும் பொழில் அண்ணாமலை அண்ணல்
பூ மாங் கழல் புனை சேவடி நினைவார் வினை இலரே.
பொருள்: ஆண் குரங்குகள்,மாமரங்களின்கிளைகளை வளைத்து,கனிகளைஉண்டபின், அக்கிளைகளை விட்டு விடுகின்றன. அக்கொம்புகள் வேகமாக மேலே செல்லும்போது, அதுசமயம்,தவழ்ந்து செல்லும் மழை மேகங்கள்மீதுகிளைகள்தீண்டுகின்றன. அவ்வாறு தீண்டுவதால் சிறிய நுண்ணிய மழைத்துளிகள் மலைப் பாறைகளில்சிதறுகின்றன. இதைக்கண்ட காட்டுப் பசுக்கள் மழை எனக் கருதி,மரங்களின் அடியில் போய்ச்சேருகின்றன. இத்துணை செழிப்பு வாய்ந்த அண்ணாமலை இறைவனின் அழகிய மலர் போன்றனவும், வீரக்கழல்அணிந்தனவுமான சிவந்த திருவடிகளைநினைவார் வினை இலராவர்.
குறிப்புரை: கடுவன் - ஆண் குரங்கு. விடுகொம்பு - மாம்பழத்தைப்பறித்தபின் விடப்பட்ட மாங்கொம்பு. தூமாமழை - தூய்மையான கரிய மேகம். துறுகல் - பாறை. ஆமா பிணை - காட்டுப் பசு;பெண் பசுவோடு. ஆமாப்பிணை என்பது எதுகை நோக்கி ஆமாம் பிணை ஆயிற்று. பூமாங்கழல் - .அழகிய மாவிலையின்வடிவந்தோன்றப்புனையப்பட்ட காலணி,மான் கழலுமாம். நினைக்க முத்தி தரும் தலம் ஆதலின்நினைவார்வினையிலரே என்றார்.
Male monkeys (Kaduvan) pull down and bend the heavy top branches of the mango trees, pluck and eat the ripe mangoes and release the branches. The branches swiftly spring back dashing against the rain bearing clouds that pass through. Because of the friction, droplets of pure water scatter onthe boulders of the mountain. Seeing this, the wild cows (Bison) think that rain is imminent and move to the shades of nearby trees. Indeed such is Annaa-malai. They who meditate on the flower-bedecked and ankleted Feet of the great Lord of this shrine stand rid of their karma.
Note: Pinai: A female animal; Aamaan Pinai: The jungle cow.
பீலிம்மயில்பெடையோடுறைபொழில்சூழ்கழைமுத்தம்
சூலிம்மணிதரைமேனிறைசொரியும்விரிசாரல்
ஆலிம்மழைதவழும்பொழிலண்ணாமலையண்ணல்
காலன்வலிதொலைசேவடிதொழுவாரனபுகழே.3
பீலி(ம்),மயில் பெடையோடு உறை பொழில் சூழ் கழை முத்தம்
சூலி(ம்) மணி தரைமேல் நிறை சொரியும் விரி சாரல்,
ஆலி(ம்) மழை தவழும் பொழில் அண்ணாமலை அண்ணல்
காலன் வலி தொலை சேவடி தொழுவாரனபுகழே.
பொருள்: அண்ணாமலையில்சோலைகள்சூழ்ந்துள்ள இடங்களில் தோகைகளோடு கூடிய ஆண் மயில்கள் பெண் மயில்களோடு உறைகின்றன. மூங்கில்கள்சூல்கொண்டுமுத்துக்களைஉதிர்க்கின்றன. விரிந்த மலைப் பகுதிகளில் நீர்த்துளிகளோடு கூடிய மழை மேகங்கள் தவழ்ந்து செல்லுகின்றன. காலனைக்காலால்கடிந்தஇறைவனின்அந்ததிருவடிகளைத்தொழுவார் புகழ் பெறுவர்.
குறிப்புரை: பீலிம்மயில்,ஆலிம்மழை,சூலிம்மணிஎன்பன விரித்தல் விகாரம். சூலி மணி - சூலிருந்துபெற்ற முத்துக்கள். ஆலி - நீர்த்துளி. திருவடியால்எட்டியுதைத்தார்ஆகலின் காலன் வலிதொலைசேவடி என்றார். காலனைக் காலால் கடிந்தவன் சிவபெருமான். திருக்கடவூரில் மார்க்கண்டேயன் உயிரைக் கவர வந்த யமனைச் ( அறக்கடவுளை) சிவன் காலால் உதைத்து அழித்தான். புகழ் தொழுவாரனஎனக்கூட்டுக.
In the groves of Thiru-Annaa-malai fan-tailed peacocks live with their hens. The ground here is resplendent with pearls dropped down by bamboos, Rain bearing clouds carrying drops of water crawl over the broad mountain. Such itideed is Annaa- malai of the great Lord who kicked down and incapacitated Yama, the god of death. Those who worship this Lord's Feet which became red by kicking the god of death, will become well renowned.
உதிரும்மயிரிடுவெண்டலைகலனாவுலகெல்லாம்
எதிரும்பலியுணவாகவுமெருதேறுவதல்லால்
முதிருஞ்சடையிளவெண்பிறைமுடிமேல்கொளவடிமேல்
அதிருங்கழலடிகட்கிடமண்ணாமலையதுவே.
உதிரும் மயிர் இடு வெண்தலைகலனா,உலகுஎல்லாம்
எதிரும் பலி உணவு ஆகவும்,எருது ஏறுவதுஅல்லால்,
முதிரும் சடை இளவெண்பிறைமுடிமேல்கொள,அடிமேல்
அதிரும் கழல் அடிகட்கு இடம் - அண்ணாமலை அதுவே.
பொருள்: பிரம்மாவின் உடலில் இருந்து பிரிக்கப்பட்டமயிர்நீங்கியவெண்மையான தலை ஓட்டை,சிவபெருமான் தனது உண்கலமாகக் கொண்டு உலகெலாம் திரிந்து பலியை ஏற்று வருகிறான். அவன் எருதின்மீது ஏறி வருகிறான். முதிர்ந்த தன் சடை முடியின்மீதுவெண்பிறையைச் சூடி உள்ளான். அவன் திருவடிகளில்அதிரும்வீரக்கழல்கள்விளங்குகின்றன. அவனுக்குரியஇடம்திருஅண்ணாமலை ஆகும்.
குறிப்புரை: உதிரும் மயிர் இடு வெண்டலை - சதை வற்றிப் போனதால்உதிர்கின்றமயிரை உடைய காட்டில் இடப்பெற்றபிரம கபாலம். எதிரும் பலி - வந்து இடப்பெறும் பிச்சை. பிச்சை ஏற்பார்யாசியாதுதெருவிற்செல்ல மகளிர் தாமே வந்து இடுதல் மரபாதலின் அதனை விளக்க எதிரும்பலி என்றார். முதிருஞ்சடை இள வெண் பிறை: முரண்.
He receives alms from all over the world in His bowl, of white, hairless, skull of Brahma from willing givers, and pretends as though He is imbibing it as His food. He also rides the bull. In His growing matted hair He gave protection to the young white crescent moon. He is decked with resounding anklets. Behold His place is Annaa- malai!
Note: Alms: symbolic of love towards God.
மரவஞ்சிலைதரளம்மிகுமணியுந்துவெள்ளருவி
அரவஞ்செயமுரவம்படுமண்ணாமலையண்ணல்
உரவஞ்சடையுலவும்புனலுடனாவதுமோரார்
குரவங்கமழ்நறுமென்குழலுமைபுல்குதல்குணமே.5
மரவம்,சிலை,தரளம்,மிகு மணி,உந்து வெள்அருவி
அரவம் செய,முரவம்படும் அண்ணாமலை அண்ணல்
உரவம் சடை உலவும் புனல் உடன் ஆவதும்ஓரார்,
குரவம் கமழ் நறுமென் குழல் உமை புல்குதல்குணமே?
பொருள்: திருஅண்ணாமலையில்வெண்மையானஅருவிகள்,பறையைபோல ஆரவாரம் செய்து கொண்டு,வெண்கடம்ப மரம்,சிலை மரம்,முத்து,மிக்க மணிகள் ஆகியவற்றை எடுத்து வருகின்றன. சிவபெருமான் சடையில்பாம்பும்,கங்கையும்உடனாய் இருந்து உலவுவதைஓராமல்,குறாப்பூ மணம் கமழும் மென்மையான கூந்தலையுடையஉமையம்மையாரைத்தழுவுதல் நன்றோ?
குறிப்புரை: சிலை -ஒருவகை மரம். தரளம் - முத்து. மணி - இரத்தினம். அரவம் - ஒலி,உரவம் - பாம்பு உரகம் என்பதன் திரிபு. உரகழும்,கங்கையும்சடையில்உலாவுதலையும்ஒராமல்உமையம்மையைத்தழுவுதல் குணமாகுமா என்று வினவுகிறார். புணர்ச்சிக்குத் தனிமை இனியதாய்,நாணங்காப்பாகவும், இவர் பாம்பும்கங்கையும்சடைமீதுஉலாவப்புல்குதல்நன்றன்று என்று நகைபடச்சொல்லிற்றாம்.
In Thiru-annaa-malai, the roaring and white cataracts roll down uproariously with gems and pearls and logs of maravam and silai. Without any consideration that ganga devi and the serpent are moving about on His matted hair, is it fair for Lord Civan to hug His consort Uma whose soft hair smells sweet by the flowers of Kuravam she is wearing.
Note: Maravam: Indian Oak Tree; Silai (Cilai): A Jungle Tree; Kuravum (Kure): Common bottle flower.
பெருகும்புனலண்ணாமலைபிறைசேர்கடனஞ்சைப்
பருகுந்தனைதுணிவார்பொடியணிவாரதுபருகிக்
கருகும்மிடறுடையார்கமழ்சடையார்கழல்பரவி
உருகும்மனமுடையார்தமக்குறுநோயடையாவே.6
பெருகும் புனல் அண்ணாமலை,பிறை சேர்,கடல் நஞ்சைப்
பருகும்தனைதுணிவார்,பொடி அணிவார்,அது பருகிக்
கருகும் மிடறு உடையார்,கமழ் சடையார்,கழல் பரவி
உருகும் மனம் உடையார் தமக்கு உறு நோய் அடையாவே.
பொருள்: பெருகிவரும் அருவி நீரையுடையதிருஅண்ணாமலையில்வீற்றிருப்பவன்சிவபெருமான். அவன் பிறைமதிதோன்றியபாற்கடலிடைத்தோன்றியநஞ்சைஉட்கொள்ளும் அளவிற்கு துணிபுடையவன். அந்நஞ்சினை உண்டு கண்டம் கருத்தவன். திருவெண்ணீற்றைஅணிந்தவன். மணம் கமழும்சடைமுடியை உடையவன். இவனுடைய திருவடிகளை வாழ்த்தி உருகும் மனம் உடையவர்க்கு மிக்க நோய்கள்எவையும்வாரா
குறிப்புரை: பிறை சேர் கடல் - ஒருகலைப் பிறை உண்டாதற்குஇடமாகிய பாற்கடல். பருகுந்தனைதுணிவார் - உட்கொள்ளும்அளவிற்குத்துணிவுடையவர். பொடி - விபூதி. கருகும் மிடறு - கருமை ஒரு காலைக்கு ஒரு கால் மிக்குத் தோன்றும் கழுத்து.
The swelling waters in the waterfalls are flowing forever in the Thiru-Annamalai mountain. In the ocean of milk the crescent moon was born. From the same ocean poison emerged. Lord Civan had courage enough to quaff the poison. As a result His throat became dark blue in colour. He smears the holy ash on His body. His matted hair is always fragrant. They who praise this Lord Civan's ankleted Feet with melting hearts will no longer suffer from the malady of rebirth.
கரிகாலனகுடர்கொள்வனகழுதாடியகாட்டில்
நரியாடியநகுவெண்டலையுதையுண்டவையுருள
எரியாடியவிறைவர்க்கிடமினவண்டிசைமுரல
அரியாடியகண்ணாளொடுமண்ணாமலையதுவே.7
கரி காலன,குடர்கொள்வன,கழுது ஆடிய காட்டில்
நரி ஆடிய நகுவெண்தலைஉதையுண்டவைஉருள,
எரி ஆடிய இறைவர்க்கு இடம் - இனவண்டு இசை முரல,
அரி ஆடிய கண்ணாளொடும் அண்ணாமலை அதுவே.
பொருள்: இடுகாட்டில்கரிந்தகால்களைஉடையதும்குடரைப் பிடுங்கி உண்பதும் ஆகிய பேய்கள்நடமாடுகின்றன. நரிகள்உருட்டி விளையாடும் வெண் தலை ஓடுகள் உதைக்கப்பட்டுஉருளஅவைகள்சிரிப்பன போன்ற காட்சியைத் தருகின்றன. சிவபெருமான் கையில் எரி ஏந்த ஆடுகின்றான். வண்டுக்கூட்டங்கள்இசைபாடசெவ்வரிபொருந்திய கண்களை உடைய உமையம்மையோடுஎழுந்தருளிய இடம் திருஅண்ணாமலை.
குறிப்புரை: கரிகாலன - எரிபிணத்தைநுகரஏரியில்நிற்பதால்கரிந்து போன கால்களைஉடையன. கழுது - பேய். நரியாடிய - நரிகள்உருட்டிவிளையாடிய. எரியாடிய - இடுகாட்டில்தீப்பிழம்பில்நின்றாடிய. அரி - செவ்வரி._
Their legs are charred; they eat the entrails; they are the ghouls that dance in the crematory. The skulls are kicked and tossed about by jackals. The exposed teeth in the white skulls will appear as though they are smiling. Group of beetles fly all around creating music in Thiru-Annaa-malai. Lord Civan holding fire in His hand dances. Thiru-Annaa-malai is the place where Lord Civan - abides with His Consort Umaa whose eyes are streaked red.
ஒளிறூபுலியதளாடையனுமையஞ்சுதல்பொருட்டால்
பிளிறூகுரன்மதவாரணவதனம்பிடித்துரித்து
வெளிறூபடவிளையாடியவிகிர்தன்னிராவணனை
அளறூபடவடர்த்தானிடமண்ணாமலையதுவே.8
ஒளிறூ புலி அதள்ஆடையன்,உமை அஞ்சுதல் பொருட்டால்,
பிளிறூ குரல் மதவாரணம்வதனம் பிடித்து உரித்து,
வெளிறூபடவிளையாடியவிகிர்தன்;இராவணனை
அளறூபடஅடர்த்தான்;இடம் - அண்ணாமலை அதுவே.
பொருள்: சிவபெருமான் ஒளிசெய்யும்புலித்தோலைஆடையாகக் கொண்டவன். உமையம்மைஅஞ்சுமாறுபிளிறும் குரலை உடைய மதம் பொருந்திய யானையின் தலையைப் பிடித்து, அதன் தோலை உரித்து எளிதாக விளையாடியவிகிர்தன். இராவணனைமலையின்கீழ்அகப்படுத்திஇரத்தவெள்ளத்தில்அடர்த்தவன். இவனது இடம்திருஅண்ணாமலை.
குறிப்புரை: ஒளிறூபுலியதள் -ஒளி செய்யும் புலித்தோல். பிளிறூவெளிறூஅளறநூஎன்ப சந்தம் நோக்கி நீண்ட ன. மதவாரணம் - மதம் பிடித்த யானை.வதனம் பிடித்து உரித்து - முகத்தில் திருவடியைஊன்றிப் பிடித்து க் கொண்டு உரித்து,வெளிறுபடவிளையாடிய - வெள்ளையாகவிளையாடியவயிரமில்லாதமரத்தை.வெளிறுஎன்றல்போல. கபடமின்றி விளையாடுதலை இங்ஙனம் கூறி இன்புற்றார்.
Lord Civan is clad in a bright tiger skin; As His Consort Uma once got scared, He, the valourous One, caught the musty and trumpeting tusker by its face, and tore off its hide as though it were child's play. He crushed Raavana to bleed. His abode is indeed Annaa-malai!
விளவார்கனிபடநூறியகடல்வண்ணனும்வேதக்
கிளர்தாமரைமலா்மேலுறைகேடில்புகழோனும்
அளவாவணமழலாகியவண்ணாமலையண்ணல்
தளராமுலைமுறுவல்லுமைதலைவன்னடிசரணே.
விளவு ஆர் கனி பட நூறிய கடல் வண்ணனும்,வேதக்
கிளர் தாமரை மலர் மேல்உறைகேடுஇல்புகழோனும்,
அளவாவணம் அழல் ஆகிய அண்ணாமலை அண்ணல் -
தளராமுலை,முறுவல்(ல்)உமை தலைவன் (ன்) - அடி சரணே!
பொருள்: விளாமரத்தில்கனியைஉகுப்பது போல அம்மரவடிவாக நின்ற அரக்கனைஅழித்தகருங்கடல்வண்ணனாகியதிருமாலும் நீரில் கிளர்ந்துதோன்றிய தாமரை மலர்மேல்உறையும்குற்றமற்ற புகழ் கொண்ட பிரம்மாவும்அடிமுடிகளைக் காண இயலாதவாறுநெருப்பு வடிவாக நின்ற தலைவனும்,தளராததனபாரங்களையும் மலர்ந்த சிரிப்பையும்உடைய உமையம்மையின்கணவனுமாகியசிவபெருமானின்திருவடிகளேநமக்குக் காப்பு.
குறிப்புரை: விளவு ஆர்கனிபடநூறிய கடல்வண்ணன் - விளாமரமாய் நின்ற கபித்தன்அழியக்கொன்ற கண்ணபிரான்;கேடில்புகழோன் - அழியாப் புகழ் பெற்ற பிரமன். அளவா வண்ணம் - அளந்தறியாதபடி. இது இத்தலத்தில்பிரமவிஷ்ணுக்கள்செருக்கிச் செய்த சண்டையைத்தீர்க்கப்பெருமான் தீப்பிழம்பாகியஅண்ணாமலையாய் நின்ற தலவரலாற்றுக்குறிப்பைவிளக்குவது. உண்ணத்தளர்தல் நகிற்குஇயல்பாதலின் உண்ணாமுலை என்பார் தளராமுலை என்றார்.
The Lord rose up as a column of fire whose base and top grew beyond the search of Thirumaal whose hue is sea blue and who smote the asura that stood disguised as a wood apple tree, and also beyond the reach of Brahma the master of the Vedas - the one of endless fame whose seat is the resplendent lotus. Such indeed is Lord Civan the Lord God of Annaa-malai who is the consort of Umaa whose face is ever lit with a smile and whose breasts never sag. Indeed His Feet are our refuge.
Note: This verse is the Sthala-puraana of Annaa-malai, in short.
வேர்வந்துறமாசூர்தரவெயினின்றுழல்வாரும்
மார்வம்புதைமலிசீவரமறையாவருவாரும்
ஆரம்பர்தமுரைகொள்ளன்மினண்ணாமலையண்ணல்
கூர்வெண்மழுப்படையானல்லகழல்சேர்வதுகுணமே.10
வேர் வந்துஉற,மாசு ஊர் தர,வெயில் நின்று உழல்வாரும்,
மார்வம் புதை மலிசீவரம்மறையாவருவாரும்,
ஆரம்பர்தம் உரை கொள்ளன்மின்! அண்ணாமலை அண்ணல்,
கூர்வெண்மழுப்படையான்,நல்ல கழல் சேர்வதுகுணமே!
பொருள்: உடலில் வியர்வை தோன்றவும்,அழுக்கேறவும்வெயிலில் நின்று உழல்வதைத்தவமாகக்கொள்வோராகியசமணரும்,மரவுரியால் மார்பை மிகவும் மறைத்து வருபவர் ஆகிய புத்தரும்,ஆரம்பவாதிகளாகியதார்க்கீகர்களும் கூறும் உரைகளைக்கொள்ளாதீர். திருவண்ணாமலையில்உறையும்தலைவனும் கூரிய வெண்மையானமழுவாயுதத்தைக் கைக் கொண்டவனும் ஆகிய சிவபெருமானதுநன்மைதரும்திருவடிகளைஅடைதலே மேலான |குணம்.
குறிப்புரை: வேர் - வியர்வை. மாசு - அழுக்கு. சீவரம் - ஒண் செம்பொன் நிற ஆடை. மார்பு புலப்படாதவண்ணம் மறைத்தல் பெளத்தத்துறவியர் இயல்பு,ஆரம்பர் - ஆரம்பவாதிகள்.
They (Jains and Buddhists) roam in the sun, sweat it out, and get unhygenic. They and those that veil their chests with the bark of trees are but ignorant folks - hearken not to their words. To pay obeisance to the weal-conferring Holy Feet of Lord Civan, the Lord of Annaa-malai who wields a sharp white mazhu (weapon) in His hand is the highest virtue for all.
வெம்புந்தியகதிரோனொளிவிலகும்விரிசாரல்
அம்புந்திமுவெயிலெய்தவனண்ணாமலையதனைக்
கொம்புந்துவகுயிலாலுவகுளிர்காழியுன்ஞான
சம்பந்தனதமிழ்வல்லவரடிபேணுதறவமே.11
வெம்பு உந்திய கதிரோன் ஒளி விலகும்விரிசாரல்,
அம்பு உந்தி மூஎயில்எய்தவன் அண்ணாமலை அதனை,
கொம்பு உந்துவ,குயில் ஆலுவ,குளிர் காழியுள்ஞான
சம்பந்தன தமிழ் வல்லவர் அடி,பேணுதல் தவமே.
பொருள்: சிவபெருமான் அம்பைச் செலுத்தி முப்புரங்களையும்எரித்தவன். அவன் எழுந்தருளிய இடம் திருஅண்ணாமலை. இங்கு வெம்மை மிக்க கதிரவன் ஒளி மலையைத்தாண்டாமல் விலகிச் செல்கின்றது. குளிர்ந்தசீகாழிப்பதியில் கொம்பு என்னும் வாத்தியங்களின்ஒலியைக் கேட்டு குயில்கள் எதிரொலிக்கின்றன. இங்கு தோன்றியஞானசம்பந்தன்பாடியஇத்திருப்பதிகத்தமிழைஓதவல்லவர்களின்திருவடிகளைவணங்குதல் சிறந்த தவமாகும்.
குறிப்புரை: வெம்பு உந்திய - வெப்பமிக்க,மலையே இறைவன் திருமேனியாதலின்அவனைத்தீண்டிப்பழியேற்கவிருப்பின்றி கதிரோன் விலகிச் சென்றான் என்பதாம். கொம்பு ஒருவகை வாத்திய விசேடம். கொம்பு ஊதிய இனிய ஓசையைக் குயில் ஒலிக்கும்காழி.
குருவருள்: இப்பாடலின்இறுதிவரி'ஞானசம்பந்தன் தமிழ் வல்லவர் அடிபேணுதல்தவமே'என்கின்றது. இத்திருப்பதிகத்தைவல்லவாறுஓதுவார்களின்அடியைவிரும்பிப்போற்றுதலேஒருவருக்குத்தவமாகஅமையும் என்கிறது. இவ்வாறே. திருவலஞ்சுழி பற்றிய'விண்டெலாம்'என்ற பதிகத்தின்திருக்கடைக்காப்பாகியவீடும்ஞானமும்வேண்டுதிரேல்'என்ற பாடலும், 'நாடி ஞானசம்பந்தன செந்தமிழ் கொண்டு இசை பாடும் ஞானம் வல்லார்அடிசேர்வதுஞானமே'என்ற வரிகளால்இப்பதிகத்தைஓதுவார்களின்அடிசேர்ந்துவாழ்தலே உண்மை ஞானம் கிடைத்தற்குஏதுவாம்என்கின்றது. இவ்விருபாடல்களும்காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கிஓதுவார்அடிபோற்றின் தவழும் அதன் வழி ஞானமும்உண்டாம்என்பதை வற்புறுத்துவது காணலாம்.
The extensive tree filled slopes of Annaa-malai hill do not let the very hot sun's rays pierce through and fall on the hills. Lord Civan who is entempled in Thiru-Annaa- malai destroyed the three hostile citadels with His arrow. Thiru Gnaanasambandar hails from cool and serene Seekaazhi where the kuyil birds reverberate the sound of the blaring trumpet. It is indeed a truly virtuous deed (Tapas) - (Penance) to adore the feet of those songsters who have mastered this Tamil hymn sung by Thiru Gnaanasambandar [according to the prescribed tune.
திருச்சிற்றம்பலம்
10ஆம் பதிகம் முற்றிற்று
சிவமயம்
1 1.திருவிழிமிழலை
திருத்தல வரலாறு:
நான்காவது பதிகம் பார்க்க.
பதிகவரலாறு:
திரும்பாம்புரம் என்னும் தலத்தைவணங்கிக் கொண்டு பிள்ளையார் திருவீழிமிழலைக்குஅப்பருடன்எழுந்தருளஅந்தணார்கள் எதிர் கொண்டு அழைத்தார்கள். பிள்ளையார் சிவிகையினின்றிழிந்துஅந்தணர்கள் புடைசூழ விண்ணிழிந்தகோயிலைவலங்கொண்டார். வியந்தார். கீழே விழுந்து வணங்கினார். உள்ளத்தில் உணர்ச்சி பொங்கி வழிந்தது. இசை ஆயிற்று. “சடையார் புனல் உடையான்” என்றெடுத்துச்சந்தஇசைத்தமிழைச்சாற்றிமணவாளப்பெருமானதுதிருவடிக்கீழ் ஆனந்த வெள்ளத்தாடினார். இத்திருப்பதிகத்தின்பத்துப்பாடல்கள், பல்வகைப்பெருமைகளையும் உடைய சிவபிரான் எழுந்தருளியுள்ள இடம் திருவீழிமிழலைஎன்கின்றது.
THE HISTORY OF THE PLACE
INTRODUCTION TO THE HYMN
11. THIRU-VEEZHI-MIZHALAI
The saintly youth visited Thiru-Veezhi-Mizhalai alongwith saint Appar. It was here that he sang the following hymn.
திருச்சிற்றம்பலம்
11.திரு வீழிமிழலை
பண் : நட்டபாடை
ராகம் : கம்பீரநாட்டை
சடையார்புனலுடையானொருசரிகோவணமுடையான்
படையார்மழுவுடையான்பலபூதப்படையுடையான்
மடமான்விழியுமைமாதிடமுடையானெனையுடையான்
விடையார்கொடியுடையானிடம்வீழிம்மிழலையே.1
சடை ஆர் புனல் உடையான்,ஒரு சரி கோவணம் உடையான்,
படை ஆர்மழு உடையான்,பலபூதப்படை உடையான்,
மடமான்விழிஉமைமாது இடம் உடையான்,எனை உடையான்,
விடை ஆர் கொடி உடையான்,இடம் - வீழி(ம்) மிழலையே.
பொருள்: சிவபெருமான் தன் சடைமுடியில்கங்கையைத்தரித்தவன். இடையினின்று சரிந்து தழுவும் ஒப்பற்ற கோவணஆடையைஅணிந்தவன். மழுப்படையை உடையவன். பலவகையானபூதங்களைப்படையாகக் கொண்டவன். மடமைத் தன்மை பொருந்திய மான்விழி போன்ற விழிகளைஉடையஉமையம்மையாகிய பெண்ணை இடப்பாகத்தில்கொண்டவன். அவன் என்னை ஆளாக உடையவன். அவன் விடைக்கொடி உடையவன். அவன் எழுந்தருளிய இடம் திருவீழிமிழலை.
குறிப்புரை: சடையார் புனல் - சடைக்கண் நிறைந்த கங்கை. படையார்மழு என்றது தீப்பிழம்பன்று; எரியாகிய படை என்பதை விளக்க. இடம் - இடப்பாகத்து. எனை உடையான் - என்னை அநாதியேஆளாக உடையவன். விடையார் கொடி - இடபக்கொடி. இது இறைவனுக்குரியஅடையாளக்கொடி. இறைவன் தருமஸ்வருபியாதலால்அறவடிவான காளை அவன் கொடிக்கண்ணதாயிற்று.
Ganga Devi (River Ganges personified as a celestial woman) abides in the matted hair of Lord Civan. He wears a sliding loin-cloth; His weapon is mazhu. He is the Chief of the different types of Bhuta soldiers (army of servitors) numberless. His bashful, fawn-eyed consort Uma abides in His left half. He owns me. His banner sports the bull. Veezhi-Mizhalai is verily His abode.
ஈறாய்முதலொன்றாயிருபெண்ணாண்குணமூன்றாய்
மாறாமறைநான்காய்வருபூதம்மவையைந்தாய்
ஆறார்சுவையேழோசையொடெட்டுத்திசைதானாய்
வேறாயுடனானானிடம்வீழிம்மிழலையே.2
ஈறு ஆய்,முதல் ஒன்று ஆய்,இரு பெண் ஆண்,குணம் மூன்று ஆய்,
மாறாமறைநான்குஆய்,வரு பூதம்(ம்) அவை ஐந்து ஆய், _-
ஆறு ஆர்சுவை,ஏழ்ஓசையொடு,எட்டுத்திசைதான்ஆய்,
வேறுஆய்,உடன்ஆனான்,இடம் - வீழி(ம்)மிழலையே.
பொருள்: ஊழிக்காலத்தில்அனைத்தையும்ஒடுக்கி,அங்ஙனம்ஒடுக்கப்பட்டஉலகைத் தான் ஒருவனேமுதற்பொருளாய் நின்று மீளத்தோற்றுவிப்பவன் சிவபெருமான். அவன் சக்தி, சிவம் என இருவகைப்பட்டவன். முக்குணங்களின்வழிநின்றுமுத்தொழில் செய்யும் கடவுளாய்,எக்காலத்தும்மாறுபடாத நான்மறை வடிவினன். ஐம்பெரும்பூதங்கள், ஆறுசுவை,ஏழு ஓசை,எட்டுத் திசை ஆகியவற்றில் நிறைந்தவனாய் உள்ளான். அவன் குணம் மூன்றாய்ஒவ்வொன்றோடும்அவ்வப்பொருளேயாகியும் அவற்றின் வேறாகியும், உடனாகியும்விளங்குகின்றான். அவனது இடம் திருவீழிமிழலை.
குறிப்புரை: ஈறாய் - உலகத்துஉயிர்களெல்லாம்தன்னிடத்துஒடுங்கத் தான் ஒருவனேநிற்றலின்இயங்குவநிற்பவானஎல்லாவற்றிற்கும் தான் இறுதியாய். முதல் ஒன்றாய் - இறுதியாக நிற்பவனே உலக காரணனாய் (முதலாய்) நிற்குந்தன்மையன்ஆதலின் ஒடுங்கிய உலகமெல்லாம்மீளத்தோன்றுதற்குக்காரணமான (முதற்) பொருள் தானொருவனேயாய்,பெண்,ஆண் இரண்டாய் என்பது இரு பெண் ஆண் (ஆய்) என நின்றது. குணம் மூன்றாய் - சத்துவ முதலிய குணங்கள்மூன்றாய்,மாறா மறை நான்காய் - எக்காலத்தும்மாறுபடாதவேதங்கள்நான்குமாய். அவை இருக்கு,யசுர்,சாமம்,அதர்வணம் என்பன. மாறா மறை - என்றும் ஒரு படித்தான வேதம் எனினுமாம். வருபூதம் அவை ஐந்தாய் - தத்தம் காரணமாகியதன்மாத்திரைகளிலிருந்துதோன்றுகின்ற பூதம் ஐந்தாய். ஆறு ஆர் சுவை - ஆறாகஅமைந்த சுவை (ஆய்);அவை,அறுவகையானநாப்பொறிகவரும் உப்பு,துவர்ப்பு,கார்ப்பு,கைப்பு,புளிப்பு, தித்திப்பு என்பன. ஏழ் ஒசை - சட்சம்,ரிஷபம்,காந்தாரம்,மத்யமம்,பஞ்சமம்,தைவதம்,நிஷாதம்,என்ற ஓசைகள் ஏழு. குரல்,துத்தம்,கைக்கிளை,உழை,இளி,விளரி,தாரம் என்பனதமிழ்நூல் வழக்கு. எட்டுத்திசை - மாயாகாரியமான உலகத்தில் காணப்பெறும்எட்டுத் திசை. தானாய் - அப்பொருள்தானேயாய், வேறாய் - அவற்றின் வேறாய்,உடனானான் - உடனாய்நிற்பவன். இறைவன் உடலும்உயிரும்,கண்ணும்கதிரவனும்,கண்ணொளியும் ஆன்ம போதமும் போல உயிர்களோடுகலந்திருக்கின்றமூவகைநிலைகளைஉணர்த்தியவாறு. இப்பாடல்எண்ணலங்காரம் பட வந்தது.
குருவருள்: இப்பாடலில்ஈறாய் என்பது தலஎட்டுத்திசைதானாய்'என்பது முடிய இறைவன் அவையேதானேயாய்ப்பிரிவின்றிஉடலும்உயிரும் போல் ஒன்றாயிருந்து அருள் புரியும் நிலையையும்,காணும் ஒளியாகியகண்ணுக்குக் காட்டும் ஒளியாகிய சூரியன் வேறாயிருந்து உதவுவது போல் இறைவன் வேறாயிருந்துஅருள்புரியும்நிலையையும்,கண் ஒளி ஒரு பொருளைப் பார்த்தாலும் அக்கண்ஒளியுடன்உடனாய் உயிர் அறிவு கலந்தாலன்றி,கண் காணாதவாறு போல் இறைவன் உயிர்களுடன்உடனாயிருந்துஅருள்புரியும்நிலையையும் உணர்த்துகின்றார் ஞானசம்பந்தர்.|
Lord Civan is the end; He is the sole beginning. He is two as male and female; His gunas are three; He is the four vedas among which there is no deviation; He is the five evolving elements; He is the sextuple in taste; He is the seven fold music; He is the eight directions; With the souls He is One; He is different; and He is together with. Veezhi-Mizhalai is indeed His abode.
Note: The figure employed in this verse is known as 'enn alangaram'. Numbers 1 to 8 According to Saiva Siddaantha philosophy the are employed in this verse. relationship of god to the souls and the material world is a threefold relationship of identification. He is One with the soul; and He is different ; He is together with.
வம்மின்னடியீர்நாண்மலரிட்டுத்தொழுதுய்ய
உம்மன்பினொடெம்மன்புசெய்தீசன்னுறைகோயில்
மும்மென்றிசைமுரல்வண்டுகள்கெண்டித்திசையெங்கும்
விம்மும்பொழில்சூழ்தண்வயல்வீழிம்மிழலையே.
வம்மின்(ன்),அடியீர்,நாள்மலர்இட்டுத் தொழுது உய்ய!
உம் அன்பினொடுஎம் அன்பு செய்து,ஈசன்(ன்) உறை கோயில் -
மும்என்று இசை முரல் வண்டுகள் கெண்டித் திசை எங்கும்
விம்மும்பொழில் சூழ் தண்வயல் - வீழி(ம்) மிழலையே.
பொருள்: அன்று அலர்ந்தமலர்களைச் சார்த்தி வணங்கி உய்தி பெற அடியவர்களேவாருங்கள். உயர்ந்த உம்முடைய அன்போடு எனது அன்பையும் அவன் ஏற்றருளுகின்றான்.அவன் கோயிலில்‘மும்’ என்ற ஒலிக்குறிப்போடு வண்டுகள் கிளறுவதால்திசையெங்கும்பூமணம்கமழும்சோலைகளும் தண்ணிய வயல்களும்சூழ்ந்துள்ளதுதிருவீழிமிழலையாகும். குறிப்புரை: இது அடியார்களை அழைத்து அறிவித்தது. நாண் மலர் - அன்று அலர்ந்தபுதுப்பூ. அடியீர்உம் அன்பினோடுமலரிட்டுத்தொழுதுய்யவம்மின்எனக்கூட்டுக. அன்றி,உம் அன்பினோடுஎம்மன்புசெய்து இட்டுத் தொழுது உய்யவம்மின்என்றுமாம். செய்து செய்ய எனத்திரிக்க. மும்மென்பதுஒலிக்குறிப்பு முரல் - ஒலிக்கின்ற. கெண்டி - மகரந்தங்களைக் கிளறி. வண்டு முரல்பொழில் சூழ் மிழலை எனவே புதுப்பூவிற்குக்குறைவில்லை. ஆதலால் உம்மன்பினோடுஇட்டுத்தொழுவதேவேண்டப்படுவது என்பது குறிப்பு எம்மன்பு செய்து என்றற்கு,எம்மன்பின் பயனாக எழுந்த திருப்பாடல்களைப்பாடிக் கொண்டே என்பது பொருளாம். பின்னர்த்திருக்கடைக்காப்பில்'தமிழ்பத்தும்இசை வல்லார்சொலக் கேட்டார் வினைபோயிட வான் அடைவார்’ என்று அருள்வாராதலின் இதுவே கருத்தாதல்துணிபாம். .
Lord Civan accepts your love as well as mine; Come ye devotees to gain salvation by adoring the Lord with fresh-bloom flowers. The shrine of Lord is at Veezhi-Mizhalai girt with cool fields and gardens where humming bees kindle the flowers and wing in all the directions.
Note : Civa is the only One that remains when the cosmos is swept away by the great deluge. Through this deluge, Civa absorbs everything unto Himself. Since He alone exists at the dissolution of the cosmos, it is He who re-creates it. Siva is 'Ammai-Appan', the Lord God who is mother as well as father.
பண்ணும்பதமேழும்பலவோசைத்தமிழவையும்
உண்ணின்றதொர்சுவையும்முறுதாளத்தொலிபலவும்
மண்ணும்புனலுயிரும்வருகாற்றுஞ்சுடர்மூன்றும்
விண்ணும்முழுதானானிடம்வீழிம்மிழலையே.4
பண்ணும்,பதம்ஏழும்,பலஓசைத் தமிழ் அவையும்,
உள்-நின்றது ஓர் சுவையும்(ம்),உறு தாளத்து ஒலி பலவும்,
மண்ணும்,புனல்,உயிரும்,வருகாற்றும்,சுடர் மூன்றும்,
விண்ணும்,முழுது ஆனான் இடம் - வீழி(ம்)மிழலையே.
பொருள்: இசையும்,அதற்கு அடிப்படையான ஏழு சுரங்களும்,வல்லோசை,மெல்லோசைமுதலியவற்றையுடையதமிழும்உள்ளத்துஉணர்வாகியசுவையும் பொருந்திய தாள வேறுபாட்டுஒலிகளும் மண்,புனல்,உயிர்,காற்று,நெருப்பு,சூரியன்,சந்திரன்,விண் ஆகிய எண்வகை வடிவங்களும் ஆகியவற்றில் முழுதும் அவையேயாகக்கலந்திருப்பவன்சிவபெருமான். அவனது இடம் திருவீழிமிழலை.
குறிப்புரை: பண் - இசை. பதம் ஏழு - ஸ்வரஸ்தானங்கள் ஏழு. பதம் - தானம். பல ஓசைத் தமிழ் - வல்லோசை,மெல்லோசை,இடையோசை முதலிய வேறுபாடுகளை உடைய தமிழ். உள் நின்றது ஓர் சுவை -பண்ணைச்சுரத்தானங்களில் நின்று ஆலத்தி பண்ணி,பல ஓசை: பொருந்தப்பாடுங்கால்உண்டாகின்றஉள்ளத்துஉணர்வாகிய சுவை. ஊறதாளத்தொலி *. அங்ஙனம் சுவையைஅனுபவிக்கும்போதுஉண்டாகின்றசச்சபுடம்சாசபுடம் முதலான தாளஒத்துக்கள்பலவும்,சுடர் மூன்றும் - சூரியன் சந்திரன் அக்கினி என்ற ஒளிப் பொருள் மூன்றும்,இப்பகுதிஇறைவனுடையஅட்டமூர்த்தம் வடிவம் கூறுகிறது. உயிர் - இயமானனாகிய ஆன்மா. முழுதானான் என்பது அவற்றுடன் வேற்றுமையின்றிஅவையேயாகக்கலந்திருத்தலைஉணர்த்திற்று. இந்தப்பாடல்சித்தாந்த சைவம் கூறும் அத்துவிதம் இன்னது என்பதைத்தெளிவாக விளக்குகின்றது.
Lord Civa is music, its constituent and basic notes seven, the manifold melody of multifarious Tamil Songs, their truly abiding relish as well as the rhythms galore of taalam. His are the forms of earth, water, life, air, fire, sun, moon and the heaven. Veezhi-Mizhalai is verily where He abides.
Note: Civa is not only the Lord of seven-fold dance but He is also the Lord of seven- fold music. Civa is ashtamurthy. Ashtam (octad) comprises the five elements, the soul, as also the sun and the moon.
ஆயாதனசமயம்பலவறியாதவனெறியின்
றாயானவனுயிர்கட்குமுன்றலையானவன்மறைமுத்
தீயானவன்சிவனெம்மிறைசெல்வத்திருவாரூர்
மேயானவனுறையும்மிடம்வீழிம்மிழலையே.5
ஆயாதனசமயம்பல அறியாதவன்,நெறியின்
தாய்ஆனவன்,உயிர்கட்கு முன் தலைஆனவன்,மறை முத்-
தீஆனவன்,சிவன்,எம் இறை,செல்வத் திரு ஆரூர்
மேயான் அவன்,உறையும்(ம்) இடம் - வீழி(ம்)மிழலையே.
பொருள்: சிவபெருமான்,சுருதி,யுக்தி,அனுபவங்களால் ஆராய்ச்சி செய்யாத பல சமயங்களால்அறியப்பெறாதவன். அறநெறிகளின்தாயாய்விளங்குவோன். எல்லா உயிருக்கும்அனாதியாகவே தலைவன். வேத வேள்விகளில்முத்தீவடிவினன். சிவன் என்னும் திருப்பெயருடையவன். எங்கட்குத் தலைவன். செல்வம் நிறைந்த திருவாரூரில்எழுந்தருளியிருப்பவன். அத்தகையோன்உறையுமிடம்திருவீழிமிழலை.
குறிப்புரை: ஆயாதன சமயம் பல அறியாதவன் - இறை உண்மையையும் இறை இலக்கணத்தையும், அளவையானும்,அநுபவத்தானும் உள்ளவாறு ஆராயாதனவாகிய (சித்தாந்த சைவம் ஒழிந்த) ஏனைச்சமயங்களால்சிறப்பியல்புஅறியப்பெறாதவன். நெறி - இறைவனைஅடைதற்கு ஏற்ற நான்கு நெறிகள். உயிர்கட்கு முன் தலையானவன் - ஆன்மாக்கட்குஅநாதியேதலைமையாகஅமைந்தவன். மறைமுத்தீயானவன் - வேத வேள்விக்கேற்றசிவாக்கினியாகியமுத்தீயானவன். ஆயாதன என்பது முதல் தீயானவன் என்பது வரை இறை இலக்கணம் கூறியது. சிவன் எனச்சிறப்பியல்பு கூறியது. எம்மிறைஎனத் தம்மோடு உளதாகியஅநாதித் தொடர்பு கூறியது. செல்வத் திருவாரூர் மேயான் என்றது திருவாரூரின் தொன்மை நோக்கிக் கூறியது.
Lord Civan is unknown to many a philosophical order not founded on actual experience or logical reasoning. He is the mother of the true path, the supreme Lord of souls, He is the triple Vedic fire; He is Siva, our Lord God, the One that favours opulent Tiruvaarur. Veezhi-Mizhalai is indeed His abode.
Note: The hymn affirms that any faith should stand the test of experience / logical reasoning.
கல்லானிழற்கீழாயிடர்காவாயெனவானோர்
எல்லாமொருதேராயயன்மறைபூட்டிநின்றுய்ப்ப
வல்லாயெரிகாற்றீர்க்கரிகோல்வாசுகிநாண்கல்
வில்லாலெயிலெய்தானிடம்வீழிம்மிழலையே.
“கல்லால் நிழல் கீழாய்! இடர் காவாய்!” என வானோர் -
எல்ஆம் ஒரு தேர் ஆய்,அயன் மறை பூட்டி நின்று உய்ப்ப,
வல்லாய் எரி காற்று ஈர்க்கு,அரி கோல்,வாசுகி நாண்,கல் -
வில்லால்,எயில் எய்தான் இடம் - வீழி(ம்)மிழலையே.
பொருள்: சிவபிரான் கல்லாலமரநிழலின்கீழ்யோகியாய்வீற்றிருந்தான். அக்காலத்தில்திரிபுரத்துஅசுரர்களால்துன்பமடைந்த வானோர், “காவாய்” என வேண்டினார்கள். சூரிய சந்திரராகிய சக்கரம் பூட்டியபூமியைத்தேராகக் கொண்டான். வேதங்களாகியதேரிற்பூட்டியகுதிரைகளை நான்முகன் செலுத்தினான். அக்னி தேவனை வலிய வாயாகவும்,வாயு தேவனைஇறகாகவும் கொண்ட திருமாலாகிய அம்பை கையில் ஏந்தினான். வாசுகி என்னும்பாம்பினைநாணாகப் பூட்டி மேருமலையாகியவில்லால்அம்பைச்செலுத்தித்திரிபுரங்களை அழித்தான். அவனது இடம் திருவீழிமிழலை.
குறிப்புரை: கல் ஆல் நிழற்கீழாய் - இறைவன் யோகியாய்க்கல்லாலநிழலின் கீழ் அறம் நால்வர்க்குஉரைத்திருந்தகாலத்து. வானோர் காவாய் என - அசுரர்களால்வருந்தியதேவர்கள்காவாய் என்று வேண்டிக் கொள்ள,என்றது வேண்டுதல் வேண்டாமையற்ற சனகாதியர் யாதொரு துன்பமுமின்றி இருந்த காலத்தே வினை வயத்தான் வருந்தும் தேவர்கள்அசுரர்ஒறுத்தற்குஆற்றாதுவருந்திக்காவாய் என வேண்டினர் என்பதை விளக்கியவாறு காண்க. எல் ஆம் ஒரு தேர் - ஒளிப்பொருளாகிய சூரிய சந்திரர்கள் ஆகிய சக்கரம் பூண்ட ஒரு தேர். அயன் - பிரமன்,இங்கே பாகனானான். மறை பூட்டி என்றதால் வேதங்கள்குதிரைகளாயினமை வெளிப்படை. வல்லாய் எரி - விரைந்து பற்றும் நெருப்பு. காற்று ஈர்க்கு - காற்றாகிய இறகு. அரி கோல் - திருமாலாகியஅம்பு.கல்- மேரு மலை. வல்லாய் எரி -
The Lord Civan was poised in yoga under the kallaala tree. implored Him thus: 'O Lord, save us from troubles" and formed themselves into a charriot to which the charioteer Brahma yoked the Vedas as its steeds, and drove it on. The Lord held Mount Meru as His bow; Vasuki its string, Vishnu its dart, Wind its feathers, and Agni the tip of the dart. For such a one, Lo Veezhi-Mizhalai is His abode.
Note: Kallaala tree: The banian tree that has no stilt-roots, it is peculiarly sacred to Civa. This hymn affirms the truth that all gods serve the supreme Lord Civa.
கரத்தான்மலிசிரத்தான்கரியுரித்தாயதொர்படத்தான்
புரத்தார்பொடிபடத்தன்னடிபணிமூவர்கட்கோவா
வரத்தான்மிகவளித்தானிடம்வளர்புன்னைமுத்தரும்பி
விரைத்தாதுபொன்மணியீன்றணிவீழிம்மிழலையே.7
கரத்தால்மலிசிரத்தான்;கரி உரித்து ஆயது ஓர் படத்தான்;
புரத்தார் பொடி பட,தன் அடி பணிமூவர்கட்குஓவா
வரத்தான் மிக அளித்தான்;இடம் - வளர் புன்னை முத்து அரும்பி,
விரைத் தாது பொன் மணி ஈன்று,அணி - வீழி(ம்)மிழலையே.
பொருள்: பிரம கபாலம் பொருந்திய திருக்கரத்தினன். யானையைஉரித்ததால்கடைத்ததொருமேற்போர்வையினன். முப்புர அசுரர் அழியத்தன்னடிபணிந்தஅம்முப்புரத்தலைவர்மூவர்கட்கும் மிக்க வரங்களைஅளித்தவன். அப்பெருமானது இடம், வளர்ந்தோங்கியபுன்னை மரங்கள் முத்துக்கள் போல் அரும்பி மலர்ந்து பொன் தாதுக்களைஈன்று பச்சை மணிகளைப் போல் காய்த்து அழகு செய்கின்றதிருவீழிமிழலை ஆகும்.
குறிப்புரை: சிரத்தான்மலிகரத்தான் என மாற்றிப்பிரமகபாலத்தான் நிறைந்த திருக்கரத்தைஉடையவன் எனப் பொருள் காண்க. படம் - மேற்போர்வை,புரத்தார்படும். முப்புரங்களின் வரிசை பொடியாக,தன்னடிபணிமூவர்கட்கு - தம் திருவடியைப்பணிந்த மேம்பட்ட அடியவர்களானதாரகாசுரன், கமலாக்ஷன்,வித்யுன்மாலி என்ற மூவர்கட்கும். ஓவா வரத்தான் மிக அளித்தான் - சுதர்மன்,சுநீதி,சுபுத்திஎனப்பெயரீந்துவாயிற்காவலர் ஆகும் வரத்தால் மிக அருள் செய்தவன். புரத்தார்பொடிபட என்பதற்கு முப்புராதிகள்பொடியாயினர்எனப் பொருள் கொள்ளின்உய்ந்தமூவரில் இருவர் நின் திருக்கோயிலின்வாயில் காவலாளர்என்றேவி'என்பதனோடு மாறு கொள்ளும். அன்றியும் அதிகைப்புராணவரலாற்றோடும்முரணும். ஆதலால் புரத்தார்பொடிபடஎனப்பிரித்தலே சால்பு உடைத்து. திரிபுரம் ரதகாலத்து அடியவர்கள் மூவர்அழிந்திலர்என்பதைப் புரம் எரிந்த காலத்து இவர்கள் மூவரும் கைலாசத்தில்துவாரபாலகராகும்பதவியைக் கொடுக்க வேண்டும் என வேண்டிக் கொண்டார்கள் என்னும் தர்மசங்கிதைவசனமும் வலியுறுத்தும். புன்னைமுத்துப்போலரும்பி,மலர்ந்து,பொன் தாதுக்களைஈன்று, காய்த்துப் பச்சை மணிகளையீன்று,அழகு செய்கின்றமிழலைஎனக் கூட்டிப் பொருள் கொள்க.
Lord Civan holds in His hand the skull; He peeled the hide of a tusker and stood mantled in it; He smote the citadels; All perished except three; He conferred many boons on the three that hailed His feet. His abode is indeed Veezhi-Mizhalai, rich in punnai flowers which bloom like pearls, with golden pollen, grow, ripe and yield emerald (aquamarine) like fruits.
Note: The three that escaped the destruction of the three citadels are named Taarakaakshan, Kamalaakshan and Vidhyunmaali. They were respectively renamed as Sudharman, Suneeti and Subuddhi when they were made servitors in Mount Kailas.
முன்னிற்பவரில்லாமுரணரக்கன்வடகயிலை
தன்னைப்பிடித்தெடுத்தான்முடிதடந்தோளிறவூன்றிப்
பின்னைப்பணிந்தேத்தப்பெருவாள்பேரோடுங்கொடுத்த
மின்னிற்பொலிசடையானிடம்வீழிம்மிழலையே.8
முன் நிற்பவர் இல்லா முரண் அரக்கன்,வடகயிலை -
தன்னைப் பிடித்து எடுத்தான்,முடி தடந்தோள் இற ஊன்றிப்,
பின்னைப் பணிந்து ஏத்தப்,பெரு வாள் பேரோடும் கொடுத்த
மின்னின்பொலிசடையான் இடம் - வீழி(ம்). மிழலையே.
பொருள்: தன்னை எதிர்த்து நிற்பார் யாரும் இல்லாத அரக்கனாகிய இராவணன் வடதிசையில் உள்ள கைலாயமலையைத் தூக்கி நகர்த்தி வைக்க முற்பட்டான். அவன் தலைகள்தோள்கள் ஆகியன நசுக்கப்பட்டு அதனால் துன்பம் அடைந்தான். பின்னர் அவன் சிவபெருமானைப் பணிந்து,சாம கீதம் பாட சிவபெருமான் அவன்மீது அருள் செய்தான். அவனுக்குப்பெரிதாகிய வாள்,இராவணன் என்ற பெயர் ஆகியனவற்றைக்கொடுத்தருளினான். மின்னல் போல் பொலிவும்,சடைமுடியையும் உடைய சிவபிரானதுஇடம் திருவீழிமிழலை.
குறிப்புரை: முன் நிற்பவர் இல்லா. முரண் அரக்கன் - தன்னொடு எதிர்த்து நின்று பொருவார் யாரும் இல்லா வலிமை பெற்ற தசக்கிரீவன். இற - இற்றறும்படி. ஊன்றி - வலக்காற்பெருவிரல்நுனியைஊன்றி. பெருவாள் - சந்திரகாசம் என்னும் வாள். பேர் - மலைக்கீழ்அகப்பட்டுஅழுதமையால் உண்டான இராவணன் என்னும் பெயர்;கீர்த்தியுமாம். இதனால் ஆன்மாக்கள்முனைப்புற்றகாலத்துமறக்கருணைகாட்டித்தண்டித்து நற்புத்தி வரச்செய்து'நின்னல்லது உறுதுணை வேறில்லை'என உணர்ந்து பணிந்தகாலத்து அருள் செய்தல் கூறப்பட்டது.
The mighty valourous king of Sri Lanka - Dasakreevan was one of the greatest devotees of Lord Civan having obtained a lot of boons from Him. There is no one who can dare to oppose him. This absolute power corrupted him. Once when he was travelling in his aircraft towards north, Mount Kailas, the abode of Civan was situated on his straight pathway. His aircraft could not fly higher up above the mountain. He, therefore tried to lift and put aside even the abode of Civan - Mount Kailas. Lord Civan slightly pressed the mountain by His toe. Dasakreevan got crushed under the mountain. He repented, begged pardon and proclaimed with conviction "Oh! Lord Civa! There is no real help except You". By saying this he sang a song very melodiously in a particular tune known as 'Saama Gaanam' which pleased Lord Civan. Civan blessed him, gave him a mighty sword for defence (Chandra Haasam - Å) and good life. Also He named him as 'Raavanan' one who wept. Thereafter he is permanently known and addressed as 'Raavanan'. Veezhi-Mizhalai is indeed the abode of the Lord Civan whose matted hair is very effulgent one in His head.
Note: It also means an honoured name. Sri Lankan King Dasakreevan came to be known as Raavana as his lamentation was vociferous when he stood crushed by Mount Kailas. The sword he received from Civa is known as Chandrahasa. Raavanaa means one who has wept. The name Raavanan prevailed permanently thereafter. Dasakreevan, one with large head, - large like ten heads put together. - Colour. Perhaps it refers to (a man of dark-Night that is dark. complexsion).
பண்டேழுலகுண்டானவைகண்டானுமுன்னறியா
ஒண்டீயுருவானானுறைகோயின்னிறைபொய்கை
வண்டாமரைமலர்மேன்மடவன்னந்நடைபயில
வெண்டாமரை செந்தாதுதிர்வீழிம்மிழலையே.9
பண்டு ஏழ் உலகு உண்டான்,அவை கண்டானும்,முன் அறியா
ஒண்தீஉருஆனான் உறை கோயில் - நிறை பொய்கை
வண்தாமரைமலர்மேல்மடஅன்னம் நடை பயில,
வெண்தாமரைசெந் தாது உதிர் - வீழிம்) மிழலையே.
பொருள்: முன்னொரு காலத்துஏழுலகையும் தன் வயிற்றில் அடக்கிக் காட்டிய திருமாலும், அவ்வுலகங்களைப்படைத்தருளியநான்முகனும் தன்னை அறியாதவாறு ஒளி பொருந்திய ஐயுருவான சிவபிரான் உறையும் கோயில்;நீர் நிறைந்த பொய்கைகளில்பூத்த செழுமையான தாமரை மலர்மீது இள அன்னம் நடை பயிலவெண் தாமரை சிவந்த தாதுக்களைஉதிர்க்கும்திருவீழிமிழலை ஆகும். அன்னத்தின்நிறத்தால்செந்தாமரைவெண்தாமரை ஆயிற்று. அதன் கால்களின்செம்மையால்பொன்னிறத்தாதுக்கள்செந்தாதுக்கள்ஆயின. குறிப்புரை: உலகுண்டான் - ஏழுலகையும் தன் வயிற்றில் அடக்கிய திருமால். அவை கண்டான் - அந்த உலகைப் படைத்த பிரமன்.
Behold the shrine of Lord Civan who grew into a lofty column of bright fire beyond the understanding of Thirumaal who devoured the seven worlds and Brahma who created them. His town is verily Veezhi-Mizhalai. In the natural pools around Veezhi-Mizhalai the Red Lotus flowers are blooming, over which the swans practice their stately gait. Because of the whiteness of swans, the red Lotus looked white and the golden pollen looked red because of the redness of the swan's feet.
மசங்கற்சமண் மண்டை க்கையர்குண்டக்குணமிலிகள்
இசங்கும்பிறப்பறுத்தானிடமிருந்தேன்களித்திரைத்துப்
பசும்பொற்கிளிகளிமஞ்ஞைகளொளிகொண்டெழுபகலோன்
விசும்பைப்பொலிவிக்கும்பொழில்வீழிம்மிழலையே.
மசங்கல்சமண்,மண்டைக் கையர்,குண்டக்குணம்இலிகள்,
இசங்கும் பிறப்பு அறுத்தான் இடம் - இருந்தேன் களித்து இரைத்து,
பசும்பொன்கிளிகளிமஞ்ஞைகள் ஒளி கொண்டு எழு பகலோன்
விசும்பைப்பொலிவிக்கும்பொழில் - வீழி(ம்) மிழலையே.
பொருள்: மயக்க உணர்வுடையவரும்,பிச்சை ஏற்கும் மண்டை என்னும் பாத்திரத்தைகையில் ஏந்தியவரும்,நற்குணங்கள்இல்லாதவர்களும் ஆகிய சமணர்களும்,புத்தர்களும்திருவீழிமிழலையில்வாழ்கின்றார்கள். அவர்களைப்புறக்கணித்துவிட்டு தன்னை வழிபடும்அன்பர்களுக்குவினைவயத்தால் பொருந்திய பிறப்பினைப்போக்கியவன் சிவபெருமான்.மிகுதியான தேனீக்கள்தேனை உண்டு களித்து ஒலி செய்கின்றன. பசுமை நிற மேனியும், பொன்நிறக்காலுமுடையகிளிகளும்,களிப்புற்றமயில்களும்,இங்குள்ள சோலைகளில்மிகுதியாக உன்ளன. இங்குள்ள சோலைகள்ஒளியோடு தோன்றும் கதிரவன் இருக்கும் வானமண்டலத்தைஅழகுறுத்துகின்றன. இத்தகையசிறப்பு வாய்ந்த திருவீழிமிழலையில்சிவபெருமான் எழுந்தருளி அருள் செய்கின்றான்.
குறிப்புரை: மசங்கல்,மயங்கல் - மயக்கம்,மண்டை - பிச்சையேற்கும்பனையோலைக்குடைப் பாத்திரம். குண்டர் - அறிவற்றவர். இசங்கும் - வினைவயத்தான் பொருந்திய. இருந்தேன் - பெரிய வண்டு;கரிய வண்டுமாம். பசும்பொற்கிளி - பசுமை நிறமும் பொன் போலுஞ்செந்தாளும் உடைய கிளி. திருவீழிமிழலைப்பொழில்விண்ணளவும் ஓங்கி வளர்ந்து பொலிவு செய்யும் என்று உரைத்து அருளியதால்இன்றும் அச்சிறப்பிற்குன்றாது ஒளிர்கின்றது.
The confused minded Jains and Buddhists are devoid of virtuous deeds in their life. They hold a begging bowl in their hands called as 'Mandai'. Leaving these folks aside, Lord Civan graces His devotees by eliminating their re-birth, the outcome of their karma. In Veezhi-Mizhalai a large number of honeybees suck the nectar from flowers and make noise in their joyment. Parrots with their green-feathered body and golden coloured feet as also peacocks are in good number in the town. The various gardens in the town augment the beauty of firmament where shines the resplendent sun.
வீழிம்மிழலைம்மேவியவிகிர்தன்றனைவிரைசேர்
காழிந்நகர்க்கலைஞானசம்பந்தன்றமிழ்பத்தும்
யாழின்னிசைவல்லார்சொலக்கேட்டாரவரெல்லாம்
ஊழின்மலிவினைபோயிடவுயர்வானடைவாரே.11
வீழி(ம்) மிழலை(ம்) மேவியவிகிர் தன் தனை,விரைசேர்
காழி(ந்) நகர் கலை ஞானசம்பந்தன்தமிழ்பத்தும்
யாழின்(ன்)இசை வல்லார்,சொலக் கேட்டார்,அவர் எல்லாம்
ஊழின்மலி வினை போயிட,உயர்வான் அடைவாரே.
பொருள்: வீழிமிழலையுள்எழுந்தருளியவிகிர்தனாகியஇறைவனைப்பற்றி மணம் பொருந்திய சீகாழிப்பதியில் தோன்றி கலைவல்லஞானசம்பந்தன்பாடியருளியபாடல்கள்பத்தினையும்யாழிசையில் பாட வல்லார்களும்சொல்லக்கேட்டார்களும் ஆகிய அனைவரும் ஊழான் வரும் வினைகள்நீங்கச்சிவப்பேறுஎய்துவர். குறிப்புரை: ஊழ் - பிராரத்தம். ஊழின்மலிவினை - பிராரத்த அனுபவத்தால் வந்து நிறைகின்றஆகாமிய வினை. போயிட - கழிய. பிராரத்தவினை அனுபவத்தால் உடலூழாய்க்கழிய,ஆகாமிய வினை ஏறாமல்கழிய. இத்திருப்பதிகத்தையாழிசை வல்லவர் பாடக்கேட்டுச்சிவபக்தியுடன்வழிபட்டவர்எல்லாரும் ஊழ்வினை ஒழியவும்வீட்டுலகம்எய்தவும்பெறுவர் என்றதால்,தேவாரத்திருப்பதிகங்களைஇசையுடன் பாடல் வேண்டும் என்பதும்,அது பத்தியைவிளைத்துப் பேரின்ப வீட்டை அருளும் என்பதும் புலனாகும். யாழின் இசை என்றும்,யாழ் இன்னிசை என்றும் பிரிக்கலாம். ஊழின்மலி வினை போயிடல் - பாச நீக்கம். உயர் வானடைதல் - சிவப்பேறு.
They, those who can sing and play well on the Yaazh (stringed musical instrument) as well those who have heard the musical rendering of these ten hymns and offer worship to Lord Civan with all sincerity will be rid of the impact of their past karma and will also reach the abode of Lord Civan. These hymns composed by Gnaana-sambandan belonging to incense smelling Kaazhi town. He is well versed in the scriptures and in this hymn has celebrated the 'Vikirthan' of Veezhi-Mizhalai.
திருச்சிற்றம்பலம்
17ஆம் பதிகம் முற்றிற்று
உ
சிவமயம்
12.திரு முதுகுன்றம்
திருத்தலவரலாறு:
திருமுதுகுன்றம் என்ற திருத்தலமானதுநடுநாட்டுத்தலங்களில்9ஆவது தலம். விருத்தாசலம் என வழங்கப்படுகிறது. சிதம்பரம்,சேலம் முதலிய ஊர்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. கடலூர் - சேலம் இருப்புப் பாதையில் இரயில் நிலையம் உள்ளது. சுவாமி பெயா்-முதுகுன்றநாதர்;பழமலைநாதர் அம்மை பெயா் - பெரியநாயகி.
தீர்த்தங்கள்:
நித்யானந்தகூபம்,அக்கினிதீர்த்தம்,சக்கரதீர்த்தம்,குபேர தீர்த்தம் என்பன. மணிமுத்தாறுசிறப்புடையது.
தலவிருட்சம்:
வன்னிமரம். கோயிலின் வடக்குக்கோபுரத்திற்குநேர்வடக்கேயுள்ளமணிமுத்தாற்றுப்-பகுதிக்குப்புண்ணியமடு என்று பெயர். இங்கேதான் இறந்தவர்களின்எலும்புகளை இட்டு முழுகுவது வழக்கம். இங்கே ஆழத்துப் பிள்ளையார் என்பது தலவிநாயகர்திருப்பெயர். முதல் பிராகாரத்திற்குக்கைலாசப் பிராகாரம் என்று பெயர். இந்தப்பிராகாரத்தில் வடமேற்கு மூலையில் இருபத்தெட்டுஆகமக்கோயில் உள்ளது. அம்மை திருமுக மண்டலம் கிழக்கு நோக்கியது.அம்மையின் திருநாமம் வடமொழியில்விருத்தாம்பிகை,சுவாமி பெயர் விருத்தகிரீசர். கற்பகமரமேவன்னிமரமாக வந்து பழமலைநாதர்திருக்கோயில்திருப்பணியைச்செய்ததாக வரலாறு. உற்சவ மூர்த்தி நாமம் பெரிய நாயகர். இவர் ஆண்டிற்கு ஒருமுறை மாசிமக விழாவில் ஆறாந்திருநாள்மட்டுமே எழுந்தருளிக் காட்சி வழங்குவார். பிரமன் படைப்புக்கு முன் சிவபெருமான் தாமே மலை வடிவாகிநிற்கப் பிரமன் அதனையறியாது,பல மலைகளையும் படைத்து,அவற்றை நிலைபெறுத்தஇடமின்றிமயங்கச் சிவபெருமான் தோன்றியருளி தானே பழமலையாதலைத்தெளிவித்தார்.ஆதலின்முதுகுன்றம் எனவும்,பழமலை எனவும் வழங்குவதாயிற்று.
வழிபட்டவர்கள்:
சுக்கிராச்சாரியார்,யாக்ஞவல்க்கிய முனிவர்,சிகண்டி,கோசிகன்,விதார்க்கண-- செட்டி, விபசித்து முனிவர்,அகத்தியர்,சுவேத மன்னா,நாதசர்மா,அநவர்த்தினி முதலியோர். சுந்தரமூர்த்திசுவாமிகள் திருப்பதிகம் பாடிப்பன்னீராயிரம் பொன் பெற்று அதனை மணிமுத்தாற்றில்விட்டுத்திருவாரூரில் பெற்ற அற்புதம் நிகழ்ந்த இடம். இத்தலத்தில் விழா நிகழ ஏற்பாடுகள் செய்தவர் கச்சிராயமன்னார். துறவு பூண்டு உண்மை ஞானியான கன்னட நாட்டு மன்னர் ஒருவர்க்காகஇறைவனேதண்ணீர்ப் பந்தல் வைத்துக் காத்ததாகவும்,அம்மை அவருக்கு பாலளித்துக்குமாரதேவர்எனத் திருநாமம் சூட்டி அழைத்ததாகவும்,குமாரதேவர்க்காக அம்மை பாலாம்பிகையாகி அமுது படைத்ததாகவும் வரலாறு. கி. பி.11ஆம் நூற்றாண்டின்பிற்பகுதியில்வாழ்ந்த இலிங்காரெட்டியாரும்,அவர் மகன் அண்ணாமலை ரெட்டியாரும் திருப்பணி செய்து கி.பி. 1623இல் கும்பாபிஷேகம் செய்தனர். அண்மையில்1994இல் மகா கும்பாபிஷேகம் நிகழ்த்தப் பெற்று உள்ளது.
கல்வெட்டு:
இராஜகேசரிவர்மனானகுலோத்துங்க சோழன் காலத்தில் இத்தலம்விருதராஜ பயங்கர வளநாட்டுமேற்காநாட்டுஇருங்கோளப்பாடியின் ஒரு பகுதியானமருவூர்க்கூற்றத்துத்திருமுதுகுன்றம்எனக்குறிக்கப்பெற்றுள்ளது. சுவாமி பெயர் முதுகுன்றுடைய நாயனார் எனவும், திருமுதுகுன்றத்துடையார் எனவும் வழங்கப்பெறுகின்றது. கோப்பெருஞ் சிங்கன் சுவாமிக்கு ஒரு மாங்காய் மாலையும்,விளக்குக்குப்பொன்னும்,ஆடுகளும்,பசுக்களும் அளித்தான். இராஜராஜன், பரகேசரிவர்மன்,குலோத்துங்கன் இவர்களும் பசுக்களையும்,பொன்னையும்,நிலத்தையும்அளித்தனர்.
இராஜகேசரிவர்மனானகுலோத்துங்கனதுகாலத்து,ஆளப்பிறந்தான் ஏழிசை மோகனானகுலோத்துங்கசோழகாடவராதித்தன்இறைவற்குஸ்நபன மண்டபம் கட்டினான். புக்கணஉடையார்,ரங்கப்ப நாயகர்,செவ்வப்பநாயகன் இவர்கள் காலத்திய நிபந்தங்களும் மிகுதியாக உள்ளன. சகம்1545இல்கச்சிராயன் என்பவன் குகை காவலனுக்கு நான்கு கலம் நெல் கொடுக்க எற்பாடுசெய்திருந்தான். ரங்கப்பமாவைராயர்என்பவர்அரியலூர்சந்தைப்பேட்டையில் மூட்டை ஒன்றுக்கு அல்லது ஆள்தூக்கக்கூடியகைமூட்டைஇரண்டுக்குஒருகாசு விழுக்காடு வரிவாங்கிக்கொள்ள உரிமை வழங்கி இருக்கிறார். கி.பி.16ஆம் நூற்றாண்டினனானசெவ்வப்ப நாயகன் நான்கு இராசகோபுரங்களையும்கட்டியதாகச்சொல்வர். கி.பி.1602இல்முத்துக்கிருஷ்ணப்பராயாஎன்பவர்திருமுதுகுன்றமுடையார்க்குப்பஞ்சாவரணப் பிரகாரம் கட்டி வைத்ததாகத்தெரிகின்றது. அப்பிரகாரம்,புறமதிலுக்கு வெளியிலிருந்து முகமதியர் கலகத்தில் இடிந்து போனதாகக்கூறுவர்.தென்னாற்காடு மாவட்ட ஆட்சியராக இருந்த ஹைட்துரைகைலாசப்பிரகாரத்திற்குத்தளவரிசைபோட்டதால் இன்றும் அது ஹைட்தளவரிசையெனவழங்குகின்றது.
பதிக வரலாறு:
திருஎருக்கத்தம்புலியூரைவணங்கிப்பதிகம்பாடிப் புறப்பட்ட ஆளுடைய பிள்ளையார்.இடையிலுள்ளதலங்கள்பலவற்றையும்வணங்கித்துதித்துத்திருமுதுகுன்றம் என்னும் விருத்தாசலத்தை அடைந்தார். போகின்றவழியிலேயேமுதுகுன்றநாதருடையஅருட்செயல்களும், ஆட்கொள்ளுந்திறனும்,தலத்தின் இயற்கை வளமும்,நதியின் செலவும் மனத்தைக் கவர அவற்றை அமைத்து‘மத்தாவரை நிறுவி’ என்னும் பதிகத்தைத்தொடங்கி‘முத்தாறுவந்தடிசூழ்தருமுதுகுன்றடைவோம்'என அருளிச் செய்கின்றார்.
THE HISTORY OF THE PLACE
12. THIRU-MUTHU-KUNDRAM
The sacred city of Thirumudhukunram is the 9th one among those in Nadunaadu. It is known as Virudhdhaachalam. It is connected by bus from such places as Chidhambaram and Salem. There is a station in the Kadaloor-Salem railway route. It is an important station in the train route from Trichy to Villupuram. The name of the God is Mudhukunranaathar, or Pazhamalainaathar; that of the Goddess is Periya Nayaki.
Sacred Fords
Nithyaanandha Koopam, Akkini Theerththam, Chakkara Theerththam, and Kubera Theerththam are the sacred fords or waterways situated here. The river Manimuthaaru is also considered as a sacred one.
Tree of the Sacred Place
Vanni tree. Straight north of the north Gopuram of the temple is a part of the river Manimuththaaru, known as Punniya Madu. It is the custom to bathe here after immersing the cremated remains of the dead. The name of the temple Vinaayakar is Aazhaththup Pillaiyaar. The first ambulatory is known as Kailaasa-p-piraakaaram. At the northwest corner of this ambulatory is a shrine known as the shrine of 28 Aagamas. The Goddess faces towards the east. The Goddess is known in Sanskrit as Vriddhaambika and the God as Vriddha Gireesa. Legend holds that the heavenly 'Karpaka' tree incarnated as the Vanni tree and built the holy temple of Pazhamalai Naathar. The name of the processional deity is Periya Naayakar. He appears only once a year on the sixth day of the Makam festival in the month of Maasi. Before Biraman's creation, Lord Civa Himself became a hill that stood here. Not knowing this, Biraman tried to create many hills but could not find any room to place them. Lord Civa then appeared and revealed that it was He who had become the Pazha Malai (Old Hill). Hence the name Mudhu Kundram or Pazhamalai.
Devotees Offering Worship
Those who have adored the Lord here include Yaagjnyavalkkiya Munivar, Sikandi, Kosikan, Vitharkana Chetti, Vipachiththu Munivar, Agaththiyar, Suvetha Mannar, Naatha Sarma, Anavarththini and others. This was where a miracle took place in which Sundhara Moorthi Swaami sang ten songs in praise of the Lord, received twelve thousand gold pieces for that, and after depositing the gold in the Manimuththaaru river, reclaimed it in the holy temple of Thiruvaaroor. The person who made the arrangements for celebration of festivals is Kochchiraaya Mannar. There is a legend that the God Himself established and administered a 'Thanneer-p-pandhal' (place to dispense free drinking water) for the sake of a king of Kannada country who has become a hermit and a truly enlightened sage. It further holds that the Goddess turned the sage into a baby, called him Kumaara Thevar and suckled him with milk, and having become Baalaambikai, fed him with holy food. Lingaa Reddiyaar, who lived towards the end of the 16th century and his son Annaamalai Reddiyaar renovated the temple and performed the consecration in 1623 CE. Re-consecration was performed in 1994.
Stone Inscriptions
This temple was referred to as Thirumudhukunram of Maruvoork Koorram, which was a part of Irungkolappaadi in the Merkaanaadu of Virudharaaja Bayangkara Valanaadu. The God's name is known as Mudhukunrudaiya Naayanaar or Thirumudhukunraththudaiyaar. Kopperunjchingan is known to have gifted a necklace of mango-fruit design along with cows, sheep and gold for lighting lamps. Raajaraajan, Parakesarivarman and Kuloththungan also gifted cows, gold and lands.
During the reign of Raajakesarivarman Kuloththungan, one Aalappirandhaan Azhisaimokanan Kuloththunga Chola Kaadavaraadhiththan built a pavilion for giving holy bath (snapana mandapam). There are many endowments from the times of Bukkana Udaiyaar, Rangappa Naayakar and Sevvappa Naayakan. One Kachchiraayan had endowed four kalams of paddy to the watchman of the cave in the year 1545 of Saka era. One Rangappamaavairaayar has gifted the right to collect tax at the rate of one kaasu per sack (or two if they can be lifted by a man) at the market place in Ariyaloor. It is said that Sevvappa Naayakan of the 16th century CE built the four Raaja Gopurams. It is known that in 1602 CE, one Muththuk Krishnappa Raayar built the 'Panjchaavarnap Piraakaaram' (ambulatory for five rounds) for the Lord Thiru Mudhukunramudaiyaar. It is believed that the piraakaaram, outside the outer wall, collapsed during the Muslim rule. The Kailaasa-p-piraakaaram was paved by a collector of South Aarkkaat district by name Hyde and to this day it is known as the Hyde Durai Pavement.
INTRODUCTION TO THE HYMN
Adoring the Lord at many shrines, the saintly youth proceeded to Thiru-Muthu- Kundram. On his way to this holy place, he sang the following hymn.
திருச்சிற்றம்பலம்
12.திரு முதுகுன்றம்
பண் : நட்டபாடை
ராகம் : கம்பீரநாட்டை
மத்தாவரைநிறுவிக்கடல்கடைந்தவ்விடமுண்ட
தொத்தார்தருமணிநீண்முடிச்சுடர்வண்ணனதிடமாம்
கொத்தார்மலர்குளிர்சந்தகிலொளிர்குங்குமங்கொண்டு
முத்தாறுவந்தடிவீழ்தருமுதுகுன்றடைவோமே.1
மத்தா வரை நிறுவிக்,கடல் கடைந்த, (வ்)விடம்உண்ட
தொத்துஆர்தரு மணி நீள் முடிச்சுடர்வண்ணனதுஇடம்ஆம் -
கொத்து ஆர் மலர்,குளிர்சந்து,அகில்,ஒளிர்குங்குமம்,கொண்டு
முத்தாறு வந்து அடிவீழ்தரு - முதுகுன்றுஅடைவோமே.
பொருள்: தேவர்கள் எல்லோரும் கூடி மந்தரமலையைமத்தாகநட்டுக்கடலைக்கடைந்தபோது கொடிது எனக்கூறப்பெறும்ஆலகாலவிடம் தோன்ற அதனை உண்டவன்சிவபெருமான். அவன்,தன் அழகிய நீண்ட சடைமுடியில்பூங்கொத்துக்களைச்சூடியவன். அவன் எரிசுடர்வண்ணன். அவன் எழுந்தருளிய இடம் திருமுதுகுன்றம் ஆகும். மலர்க் கொத்துக்கள்,குளிர்ந்த சந்தனம்,அகில்,ஒளி தரும் குங்கும மரம் ஆகியவற்றைத் தன் அலைக்கரங்களால்ஏந்திக் கொண்டு வந்து மணிமுத்தாறு நதி திருமுதுகுன்றத்தில்அடிவீழ்ந்துவணங்குகின்றது. அதனை நாம் அடைவோமாக.
குறிப்புரை: வரை மத்தா நிறுவி - மந்தரமலையைமத்தாக நிறுத்தி. கடைந்தவ்விடம் - கடைய எழுந்த விடம். தொத்து - கொத்து. மணிமுத்தாறு மலர்,சந்தனம்,குங்குமப்பூ முதலிய காணிக்கைகளைக்கொண்டு வந்து சமர்ப்பித்து அடிவணங்குகிறதுஎன்பதாம்.
In the days of yore, when the ocean of milk was churned with the Mountain Manthara serving as the churning stick, venom welled up and Lord Civan quaffed it to save all others. Behold the shrine of the radiant one whose lofty gem studded crown is decked with flower clusters. Let us reach Muthu-Kundram where the river Mani- Muttaaru pays obeisance to the Feet of the Lord God. The river flows on, carrying with it bunches of flowers, cool sandalwood, eaglewood and also bright logs of kunkumam trees.
Note: Muthukundru / Muthukundram: The ancient hill. In Sanskrit, it is known as Virudhdhaachalam. Kunkuma is saffron.
c.f. Vallalar 'பழமலையைக்கிழமலையாய்ப்பகருவதும் ..'
பழமலை - Ancient hill. முதுகுன்று was translated into a in Sanskrit. Actually பழமலை is ancient mount. முதுகுன்று not முதுமையானகிழமலை.
தழையார்வடவியவீதனிற்றவமேபுரிசைவன்
இழையாரிடைமடவாளொடுமினிதாவுறைவிடமாம்
மழைவானிடைமுழவவ்வெழில்வளைவாளுகிரெரிகண்
முழைவாளரிகுமிறும்முயர்முதுகுன்றடைவோமே.2
தழை ஆர்வடவியவீதனில்தவமே புரி சைவன்,
இழை ஆர் இடை மடவாளொடும்,இனிதாஉறைவுஇடம்ஆம்2
மழை வான்இடைமுழவ(வ்),,எழில் வளைவாள்உகிர்,எரிகண்,
முழைவாள்அரிகுமிறும்(ம்) உயர் - முதுகுன்றுஅடைவோமே.
பொருள்:சிவபெருமான்தழைகளுடன் கூடிய ஆலமரநீழலில்யோகியாய் இருந்து தவம் செய்கின்றான். நூல் இழை போன்ற இடையினை உடைய உமையம்மையோடுமகிழ்ந்துதிருமுதுகுன்றத்தில்போகியாய் உறைகின்றான். திருமுதுகுன்றத்தில் மேகங்கள் உயர்வானில்இடிகளை உண்டாக்குகின்றன. இந்த ஒலியை யானையின் பிளிறு என அங்கு வாழும் சிங்கங்கள் கருதுகின்றன. அவைகளின் நகங்கள் அழகாய் வளைந்த ஒளியோடுவிளங்குகின்றன. அவைகள்எரிபோலும் கண்களை உடையன. அவைகள்குகைகளில்வாழ்ந்து கொண்டு கர்ச்சிக்கின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்தது திருமுதுகுன்றம்.
குறிப்புரை: வடவியவீதனில் - ஆலமரத்தினது அகன்ற நீழலில்பதுமாசனத்திலிருந்துதவஞ்செய்கின்ற-சைவன் என்றது அநாதி சைவனாகியசிவனை. இழையார் இடை - நூலிழையை ஒத்த இடை. மழை வானிடைமுழவ - மேகம் வானத்தில் பிளிற. முழவம் என்றும் பெயரடியாகமுழவ என்ற வினையெச்சம் பிறந்தது. ஒலிக்க என்பது பொருளாம். எழில் வளை வாள் உகிர் - அழகிய வளைந்த ஒளி பொருந்திய நகத்தையும். எரி கண் - காந்துகின்றகண்ணையும். முழை - மலைக்குகை. அரி - சிங்கம். சிங்கம் உறுமுதல் மழை ஒலியை யானையின் பிளிறல் என்று எண்ணி. மேரு மலையின் வடபால் தனித்து யோகத்திருந்த இறைவன் முதுகுன்றில்உமையாளொடுபோகியாக உறைகின்றான் என்றது.
Lord Civan, the saiva, performs austerities seated under the leafy banyan tree (The Lord observes austerities. He has no need for so). He abides here in His shrine in the aspect of Sadaa Civan (Curl) with His consort Umaa whose waist is slender like thread. To offer our obeisance to the Lord here we shall proceed to lofty Muthukundram where when rain bearing clouds rumble on the high, the cave dwelling, fiery-eyed lion of bright and beautiful curved toe-nails doth roar aloud.
Note: The Saiva: Civa who is known as Anaadhi Saiva. He is the One and only Anaadhi Saiva.
விளையாததொர்பரிசில்வருபசுபாசவேதனையொண்
டளையாயினதவிரவ்வருடலைவன்னதுசார்பாம்
களையார்தருகதிராயிரமுடையவ்வவனோடு
முளைமாமதிதவழும்முயர்முதுகுன்றடைவோமே.
விளையாதது ஓர் பரிசில் வருபசுபாசவேதனை,ஒண்
தளைஆயின தவிர(வ),அருள் தலைவன்) அது சார்புஆம் -
களை ஆர்தரு கதிர் ஆயிரம் உடைய(வ்) அவனோடு
முளை மா மதி தவழும்(ம்) உயர் - முதுகுன்றுஅடைவோமே.
பொருள்: உயிர்களுடன்அநாதியாகவேவருகின்றபசுவேதனைஎனப்படும்ஆணவமலத்துன்பம்,அத்துன்பத்தைநீக்குவதற்காகக்கூட்டப்படுகின்றபாசவேதனைஎனப்படும்நல்வினைதீவினைகளுக்குமூலமாகியகன்மமலத் துன்பம்,ஆன்மாவுக்குச் சிறிது அறிவையும் சிறிது மயக்கத்தையும்தருமாறுகூட்டப்படுகின்றமாயாமலத்துன்பம் ஆகிய இவை . நீங்குமாறு சிவபெருமான் திருமுதுகுன்றத்தில்எழுந்தருளிஅருள்புரிந்துவருகின்றான். இங்குள்ள வானளாவிய மலையில் ஒளி பொருந்திய ஆயிரம் கிரணங்கள்கொண்ட சூரியனும்,முளைத்தெழுந்து வளரும் சந்திரனும் தவழ்ந்து செல்லுகின்றன. அதனை நாம் அடைவோம்.
குறிப்புரை: சார்பு - இடம். களை - தேஜஸ். ஆயிரம் பன்மை குறித்து நின்றது. கதிர் ஆயிரம் உடையவன் - சூரியன். சகத்திர கிரணன் என்னும் பெயருண்மையையும் அறிக. செங்கதிரோடு முளை மாமதி தவழும் முதுகுன்றுஎன்றமையால் பிள்ளையார் கண்ட காலம் வளர்பிறைக்காலத்து மூன்றாம் நாளாகலாம் என்று ஊகிக்கலாம்.
குருவருள்: இறை,உயிர்,தளை என்ற முப்பொருள்களும் என்றும் உள்ள உண்மைப் பொருள்கள். ஒரு காலத்தேதோன்றியன அல்ல. இவற்றுள் தளை என்பது ஆணவம்,கன்மம்,மாயை என மூவகைப்படும். இவையும் ஒரு காலத்தில் தோன்றியன அல்ல. இவற்றையே’விளையாததோர் பரிசில் வரும் பசு பாசவேதனை ஒண்தளை’ என்றார். விளையாதது - ஒரு காலத்தில் தோன்றாதது. பரிசு - தன்மை. இவற்றுள் பசு வேதனை - பசுத்துவம்எனப்படும்ஆணவமலத்தால் விளையும் துன்பம். பாசவேதனை - இருவினைக் கட்டு எனப்படும் நல்வினை தீவினைகளுக்குமூலமாகியகன்மமலத்தால் விளையும் துன்பம். வேதனை என்பது பசு என்பதனுடலும்இயையும். ஒண்தளை - மாயை.ஒளியுடையபாசம்மாயைஆன்மாவுக்குச் சிறிது அறிவைவிளக்கும். ஆதலின்’ஒள்‘என்று அடைமொழி கொடுக்கப்பட்டது.எனினும் மயக்க அறிவைத்தருதலால் தளை எனப்பட்டது. இம்மூவகைமலங்களையும் நீக்கி அருள்பவனேஇறையாகிய தலைவன் என்று திருஞானசம்பந்தப் பெருமான் இப்பாடலில்குறிப்பிட்டுள்ளார்.
Lord Civan is ever ready here in Thiru-muthu-kundram to grace His devotees by nullifying the effect of the perversely fierce worldly fetters, and cause the souls' recurring misery to end. Let us reach the lofty Muthukundram over which the myriad - rayed sun and sprouting crescent crawls.
Note: Fetters: The three malas of Aanavam, Kanmam and Maaya. Paasam, it means literally 'a rope'. The three malas constitute paasam. Aanava mala is chiefly referred to by this word.
சுரர்மாதவர்தொகுகின்னரரவரோதொலைவில்லா
நரரானபன்முனிவர்தொழவிருந்தானிடநலமார்
அரசார்வர்வணிபொற்கலனவைகொண்டுபன்னாளும்
முரசார்வருமணமொய்ம்புடைமுதுகுன்றடைவோமே.4
சுரர்,மாதவர்,தொகு கின்னரர்அவரோ,தொலைவு இல்லா
நரர் ஆன பல்முனிவர்,தொழ இருந்தான் இடம் - நலம்ஆர்
அரசார் வர அணிபொன்கலன்அவை கொண்டு பல்-நாளும்
முரசு ஆர்வருமணமொய்ம்பு உடை - முதுகுன்றுஅடைவோமே.
பொருள்: சிவபெருமான் எழுந்தருளியதிருமுதுகுன்றத்தில்தேவர்களும்,சிறந்த தவத்தைமேற்கொண்டவர்களும்,கின்னரி என்ற வாத்தியத்தைமீட்டிஇசைபாடும் தேவ இனத்தவரானகின்னரர்களும் கூட்டமாக வந்து மக்களுலகில் வாழும் மாமுனிவர்களுடன்சேர்ந்து தொழுது செல்லுகின்றார்கள். இங்கு நடக்கும் திருமணத்திற்கு அரசிளங்குமரர்கள்வருகின்றார்கள். அவர்களைப் பொன் அணிகலங்கள் கொண்டு வரவேற்கும்மண முரசு பன்னாளும்ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. நாமும் அந்த ஊரை அடைவோம். குறிப்புரை: தொகு கின்னரர் - எப்பொழுதும் கூட்டமாகவே இருந்து கின்னரிபயிலும் தேவ கூட்டத்தார்.
To adore Lord Civan in Thiru-muthu-kundram, gather devas, tapaswis, the celestial kinnarars who always play the instrument 'Kinneri' in groups and the mighty munis on earth. The town is visited by princes who are received with jewels of gold. The drums that proclaim their advent resound here for many many days. Such is Muthukundram to which let us all reach.
Note: Kinnarar: Celestial instrumentalists. They play on the instrument called kinnara in groups.
அறையார்கழலந்தன்றனையயின்மூவிலையழகார்
கறையார்நெடுவேலின்மிசையேற்றானிடங்கருதில்
மறையாயினபலசொல்லியொண்மலர்சாந்தவைகொண்டு
முறையான்மிகுமுனிவர்தொழுமுதுகுன்றடைவோமே.5
அறை ஆர் கழல் அந்தன்தனை,அயில் மூலை,அழகுஆர் -
கறைஆர் - நெடுவேலின்மிசைஏற்றான் இடம் கருதில்,
மறை ஆயினபலசொல்லி,ஒண்மலர்சாந்து அவை கொண்டு,
முறையால்மிகும் முனிவர் தொழும்முதுகுன்றுஅடைவோமே.
பொருள்: திருமுதுகுன்றத்தில்எழுந்தருளிய சிவபெருமான்,ஒலிக்கின்றவீரக்கழல்அணிந்தஅந்தகாசூரனைக் கூரிய மூவிலை வடிவாய் அமைந்த குருதிக் கறை படிந்த அழகிய நீண்ட வேலின் முனையில் குத்தி ஏந்திக்கொண்டிருக்கின்றான். இங்கு முனிவர்கள் பலரும் வேதங்கள்பலவும் சொல்லி நறுமலர்,சந்தனம் முதலான பொருள்களைக் கொண்டு முறைப்படி சார்த்தி வழிபடுகின்றார்கள். நாமும் அங்கு சென்று அவனை வழிபடுவோமாக.
குறிப்புரை: இப்பாட்டின்முன்னடியிரண்டிலும்,அந்தகனைமுத்தலைச்சூலத்தின்உச்சியில்தாங்கியவரலாறு குறிப்பிடப்படுகிறது. அந்தன் - அந்தகாசுரன். அயில் - கூர்மை. வேலுக்கு அழகு இவ்வண்ணம்தண்டிக்கத்தக்கவர்களைத் தண்டித்தல். முனிவர் மறையாயின சொல்லி,மலர்,சாந்து கொண்டு முறையான் தொழு முதுகுன்றுஎனக்கூட்டுக.
Anthakasuran an Asura who wore the resounding valorous anklets was terrorising, and annoying the Devaas. As commanded by Lord Civan 'Bairavar' pierced the Asura's body with the furious, radiant long and sharp trident and brought him before Lord Civan. This Lord Civan abides in Thiru-muthu-kundram, where the munis chanting many a vedic mantra, poised in propriety, gather to adore Him with bright flowers and sandal paste. Let us reach this place.
Note: Anthakan: An asura who tortured the devas. The devas fled away from him and lived in secret seclusion in the guise of women. In answer to their prayer, Lord Civa came as Bairava to take on the asura and revealed His identity and the trident. This asura then gained gnosis by His darshan of Civa.
ஏவார்சிலையெயினன்னுருவாகியெழில்விசயற்
கோவாதவின்னருள்செய்தவெம்மொருவற்கிடமுலகில்
சாவாதவர்பிறவாதவர்தவமேமிகவுடையார்
மூவாதபன்முனிவர்தொழுமுதுகுன்றடைவோமே.6
ஏ ஆர் சிலை எயினன் (னன்) உரு ஆகி,எழில் விசயற்கு
ஓவாதஇன்அருள் செய்த எம்ஒருவற்கு இடம் - உலகில்
சாவாதவா்,பிறவாதவர்,தவமே மிக உடையார்,
மூவாதபல்முனிவர்,தொழும் - முதுகுன்றுஅடைவோமே.
பொருள்: திருமுதுகுன்றத்தில்விருப்பத்தோடுஎழுந்தருளியுள்ள சிவபெருமான்,அம்புகள்பூட்டிய வில்லை ஏந்திய வேடன் உருவந்தாங்கிஅருச்சுனனிடம் போர் செய்து அவனைத்தோற்கடித்தான். பின்னர் அவன் இரங்க அவனுக்கு அருள் செய்தான் (அவனுக்கு பாசுபதாஸ்திரமும்கொடுத்தருளினான்). சாவாமைபெற்றவர்களும்,மீண்டும் பிறப்பு எய்தாதவர்களும்,மிகுதியான தவத்தைப்புரிந்தவர்களும் மூப்பு அடையாத முனிவர் பலரும் இங்கு வந்து இறைவனைவணங்கிச்செல்லுகிறார்கள். நாமும் அவனைச் சென்று அடைவோம்.
குறிப்புரை: இதில் இறைவன் வேடஉருத்தாங்கிப்பன்றியை எய்து வீழ்த்தி அருச்சுனன் தவங்கண்டுவந்து பாசுபதம் அருளிய வரலாறு குறிக்கப்பெறுகின்றது. ஏ - அம்பு,சிலை - வில். எயினன் - வேடன்.விசயற்கு - அருச்சுனற்கு. ஓவாத - கெடாத. சாவாதவர்களும்மீட்டும்பிறப்பெய்தாதவர்களும். ஆகத்தவமிக்கமுனிவர்கள்;என்றும் இளமை நீங்காத முனிவர்கள்தொழும்முதுகுன்றம்என்றவாறு.
Lord Civan went in the guise of a hunter and defeated the fair (and valiant) Arjuna who confronted Him, without knowing who He was. Realising this thereafter, Arjuna pleaded, prayed and offered his obeisance to Lord Civan. Civa graced him and gave him the super missile known as Paasupatham. This Lord Civan loves to abide in Thiru-muthu-kundram. Here the deathless and the birthless and also the great tapaswis and non-aging munis gather to offer worship to Lord Civan. Let us also reach this place. Note the hint of Eternity available to Civa worshippers.
தழல்சேர்தருதிருமேனியர்சசி சேர் சடைமுடியா்
மழமால்விடைமிகவேறியமறையோனுறைகோயில்
விழவோடொலிமிகுமங்கையர்தகுமாடகளாலை
முழவோடிசைநடமுன்செயுமுதுகுன்றடைவோமே.
தழல் சேர்தருதிருமேனியர்,சசி சேர் சடைமுடியர்,
மழமால்விடை மிக ஏறியமறையோன்,உறை கோயில் -
விழவோடு ஒலி மிகு மங்கையர்,தகும்ஆடகசாலை,
முழவோடு இசை நடம் முன் செயும் - முதுகுன்றுஅடைவோமே.
பொருள்: சிவபெருமான் தழலைஒத்த சிவந்த திருமேனியர். பிறைச்சந்திரனைத் தனது சடைமுடியில்அணிந்தவர். திருமால் இடபமாக வர,அதன்மீது மிகவும் உகந்து ஏறி வருபவர். அவர் வேதங்களைஅருளியவர். அவர் எழுந்தருளியுள்ள கோயில் உள்ள ஊர்திருமுதுகுன்றம் ஆகும். அங்கு,கோயில் விழாக்களில்பலவிதமான ஓசைகள் ஒலிக்கின்றன. அழகுமிகுநங்கையர்கள் தக்க நடன சாலைகளில்முழவோசையோடு பாடி நடனம் செய்கிறார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த திருமுதுகுன்றத்தை நாமும் சென்று அடைவோம்.
குறிப்புரை: தழல் சேர்தருதிருமேனியர் - தழலை ஒத்த செந்நிறமேனியைஉடையயர். தழல் வண்ண -வண்ணார் என்றதும் அது நோக்கி. சசி - சந்திரன். மழமால் விடை - இளைய பெரிய இடபம். நாடகசாலை - நடனசாலை.
Lord Civan's divine frame dazzles like flame; His matted crest sports a crescent; He, the author of Vedas, rides cheerfully on the young bull, which is none else than Thirumaal. He is entempled in Thiru-muthu-kundram, where in its dancing halls during festivals, women of jingling anklets sing hymns accompanied by drums and dance. Let us also reach there and offer worship.
செதுவாய்மைகள்கருதிவ்வரையெடுத்ததிறலரக்கன்
கதுவாய்கள்பத்தலறியிடக்கண்டானுறைகோயில்
மதுவாயசெங்காந்தண்மலர்நிறையக்குறைவில்லா
முதுவேய்கண்முத்துதிரும்பொழின்முதுகுன்றடைவோமே.8
செதுவாய்மைகள் கருதி(வ்) வரை எடுத்த திறல் அரக்கன்
கதுவாய்கள் பத்து அலறியிடக் கண்டான் உறை கோயில் -
மது வாயசெங்காந்தண்மலர்நிறையக்,குறைவு இல்லா
முதுவேய்கள் முத்து உதிரும்பொழில் - முதுகுன்றுஅடைவோமே.
பொருள்: இலங்கை மன்னனாகிய இராவணன் பொல்லாமொழிகளைக்கருதிக் கயிலை மலையைப்பெயர்த்துத் தள்ளி வைக்க முயன்றான். அவன் வடுவுள்ளவாய்கள்பத்தும்அலறும்படி,தன் விரலால் மலையை ஊன்றி அடர்த்தசிவபெருமானது கோயில் விளங்குவதுதிருமுதுகுன்றமாகும். இத்தலத்தில்செங்காந்தள் மலர் பூத்திருக்கின்றன. அம்மலர்களின் கைகள் நிறையும்படி அருகில் உள்ள முதிய மூங்கில்கள்குறைவின்றிமுத்துக்களைஉதிர்க்கும்சோலைகளால்சூழப்பட்டதுஇவ்வூராகும். அங்கு சென்று நாம் அடைவோம்.
குறிப்புரை: செதுவாய்மைகள் கருதி - பொல்லாச் சொல்லை எண்ணி. செதுவாய்மை - பொல்லா மொழி. “செதுமொழிசீத்தசெவி''என்பது போல நின்றது. கதுவாய்கள் - வடுவுள்ளவாய்.’கதுவாய்எஃகின்’ என்னும் பதிற்றுப்பத்தடி ஒப்பு நோக்குக. மலைப் பிளப்பை ஒத்த வாயுமாம். மதுவாய - தேனைமலரின்முகத்தே உடைய. செங்காந்தள்பூக்களில் நிறைய மூங்கில்கள்முத்தைச்சொரிகின்றன என்பது. செங்காந்தள் கையேந்தி ஏற்போரையும்,வேய்வரையாதுகொடுப்பாரையும்ஒத்திருக்கின்றன என்று கொள்ள வைத்தவாறு.
Lord Civan caused the mighty Raavanaa's ten mouths suffer scars and made him cry aloud; when impelled by his own arrogance, he tried to lift Mount Kailas. He is entempled in Thiru-muthu-kundram. Let us reach Muthukundru, rich in gardens, where the flawless and ageing bamboos fill the melliferous kaanthal with their pearls and honey.
Note: Kaanthal: Glory lilly. In Tamil classics, the human hand is compared to this Kaanthal. The idea suggested in this verse is, bamboos are donors who pour their pearls into the hands (Kaanthal Flowers) that willingly receive them.
இயலாடியபிரமன்னரியிருவர்க்கறிவரிய
செயலாடியதீயாருருவாகியெழுசெல்வன்
புயலாடுவண்பொழில்சூழ்புனற்படப்பைத்தடத்தருகே
முயலோடவெண்கயல்பாய்தருமுதுகுன்றடைவோமே.9
இயல் ஆடிய பிரமன்(ன்) அரி இருவர்க்கு அறிவு அரிய,
செயல் ஆடிய தீ ஆர் உரு ஆகி எழு செல்வன் -
புயல் ஆடு வண்டொழில்குழ் புனல் படப்பைத்தடத்து அருகே
முயல் ஓட,வெண்கயல்பாய்தரு - முதுகுன்றுஅடைவோமே.
பொருள்: தற்பெருமை பேசிய பிரம்மன் திருமால் ஆகிய இருவராலும்அறிதற்கு அரியதிருவிளையாடல் செய்து வென்று எரிஉருவில்தீப்பிழம்பாக விளங்கிய சிவபெருமான்விரும்பிய ஊர் திருமுதுகுன்றமாகும். இங்கு மேகங்கள் தோயும் வளமையான சோலைகள்உள்ளன. நீர்வளம் மிக்க நிலப்பரப்புகள் உள்ளன. இந்த நீர்நிலைகட்கு அருகில் வரும் முயல்கள் பயந்து ஓடுமாறுவெள்ளியகயல் மீன்கள் துள்ளிக்குதிக்கின்றன. இத்தகைய வளமுடையதிருமுதுகுன்றத்தை நாம் அடைவோம்.
குறிப்புரை: இயலாடிய பிரமன், -இயலாடிய அரி என அடைமொழியைஇருவர்க்கும்கூட்டுக. இயல் - தற்பெருமை. செயல் ஆடிய - செயலால் வெற்றி கொண்ட. புயல் - மேகம். புனற் படப்பை - நீர் பரந்த இடம்.
As a sacred sport Lord Civan rose up in a mighty column of fire, before the two arrogant gods Vishnu and Brahma, who could not trace His Holy Feet and Head. This Lord Civan is entempled in Thiru-muthu-kundram. Here the clouds sail over the fertile pools and the vast water spreads. The joyful jumping of the silvery kayal fishes scares away the rabbit that approaches the pools. Let us reach such fertile land and offer our worship to Lord Civan entempled there.
அருகரொடுபுத்தரவரறியாவரன்மலையான்
மருகன்வருமிடபக்கொடியுடையானிடமலரார்
கருகுகுழன்மடவார்கடிகுறிஞ்சியதுபாடி
முருகன்னதுபெருமைபகர்முதுகுன்றடைவோமே.10
அருகரொடு புத்தர் அவர் அறியா அரன்,மலையான்
மருகன்,வரும் இடபக்கொடி உடையான்,இடம் - மலர்ஆர்
கருகுகுழல்மடவார் கடி குறிஞ்சி அது பாடி,
முருக(ன்;)அது'பெருமை பகர் - முதுகுன்றுஅடைவோமே.
பொருள்: சமணர்களாலும்புத்தர்களாலும்அறியப்பெறாதவன் சிவபெருமான். அவன்இமவான் மருமகன் ஆவான். அவன் இடபக்கொடியை உடையவன். அவன் விரும்பி எழுந்தருளிய இடம் திருமுதுகுன்றம். இங்கு மலர்சூடிய கரிய கூந்தலை உடைய இளம்பெண்கள் தெய்வத்தன்மை வாய்ந்த குறிஞ்சிப்பண்ணால்முருகப்பெருமானின்பெருமைகளைப் பாடி வணங்குகின்றார்கள். இந்தத்திருமுதுகுன்றத்தை நாம் அடைவோம்.
குறிப்புரை: புறச் சமயிகளால்அறியப்படாமைஅறிவித்தவாறு. மலையான் மருகன் - இமவானுக்குமருமகன். வருமிடபம் என்ற சொற்றொடர் இவர் பதிகங்களிற்பலவிடத்தும்வரல் கண்டு இன்புறற்பாலர்முதற்காட்சியதுவாதலின். கருகு குழல் - ஒருகாலைக்கொருகால் கருப்பு ஏறிக்கொண்டேபோகின்றகுழல். கடிகுறிஞ்சி - தெய்வத் தன்மை பொருந்திய குறிஞ்சிப் பண். இப்பண்ணேமுருகனதுபெருமையைக்கூறுதற்கு ஏற்றது என்பது.
The Jains and Buddhists are unable to realise the greatness of our Lord Civan who is presented in puraanaas as the son-in-law of Himavaan, (King of Himaalayaas) and whose flag sports the Bull. This our Lord abides in Thiru-muthu-kundram. Young girls having dense-dark tresses decked with flowers hail Lord Murugan in this town by singing melodiously the Divine songs in the special tune known as 'Kurinji-p-pann' . Let us also reach this place and hail our Lord.
முகில்சேர்தருமுதுகுன்றுடையானைம்மிகுதொல்சீர்ப்
புகலிந்நகர்மறைஞானசம்பந்தன்னுரைசெய்த
நிகரில்லனதமிழ்மாலைகளிசையோடிவைபத்தும்
பகரும்மடியவர்கட்கிடர்பாவம்மடையாவே.11
முகில் சேர்தருமுதுகுன்றுஉடையானைம்,மிகு தொல்சீர்
புகலி(ந்) நகர் மறைஞானசம்பந்தன்(ன்),உரை செய்த
நிகர் இல்லனதமிழ்மாலைகள்இசையோடுஇவைபத்தும்
பகரும்(ம்) அடியவர்கட்கு இடர்,பாவம்(ம்),அடையாவே.
பொருள்: மேகங்கள் வந்து தங்கும் திருமுதுகுன்றத்தில் விளங்கும் பெருமானைப்பழமையான மிக்க புகழுடையபுகலி நகரில் தோன்றியமறைவல்லஞானசம்பந்தன்உரைத்தஒப்பற்ற தமிழ் மாலையாகியஇப்பதிகப்பாடல்கள்பத்தையும்இசையோடு பகர்ந்து வழிபடும்அடியவர்களைத்துன்பங்களும்அவற்றைத் தரும் பாவங்களும்அடையா.
குறிப்புரை: நிகர் இல்லன தமிழ் மாலை என்றார்;ஒவ்வொரு திருப்பாடலின்முதலிரண்டடிக்கண்ணும்இறைவன் ஆன்மாக்களின்மலத்தை நீக்கி ஆட்கொள்ளும் முறைமையும்,உபதேசகுருமூர்த்தியாய்வந்தருளும் சிறப்பும்,தானே முதல் என உணர்த்தும் தகுதியும் உணர்த்திப்பின்னிரண்டடிகளிலும்இயற்கை அழகுகளின் வழியாக இறை வளத்தைஉணர்த்துதலின். இடர் - பாவம்.
Neither trouble nor sin will get attached to the devotees who tunefully recite these ten verses·the peerless garland of Tamil Verses, extolling the Lord of Thiru- muthu-kundram that is ever covered over by clouds, composed by Gnaanasambandan, well versed in the Vedas hailing from Pukali - the hoary city of glory.
Note: Marai: The vedas.
திருச்சிற்றம்பலம்
12ஆம் பதிகம் முற்றிற்று
உ
சிவமயம்
13. திரு வியலூர்
திருத்தலவரலாறு:
திருவியலூர் என்ற திருத்தலமானதுபண்டாரவாடைதிருவியநல்லூர் என்று வழங்கப்பெறுகிறது. வியலூர் என்ற பெயரோடுதஞ்சை மாவட்டத்தில் வேறு இரண்டு ஊர்களும் உள்ளன. சோழநாட்டுக் காவிரி வடகரைத் தலம். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திலிருந்துவேப்பத்தூர்வழியாகப் பேருந்து வசதி உள்ளது. சுவாமி பெயர் யோகானந்தீசுவரா். அம்மை பெயா்சாந்த நாயகி. தீர்த்தம் சடாயு தீர்த்தம். இறைவன் புராதனேசுவரர்,வில்வாரண்யேசுவரர் எனவும் பெயர் பெறுவர். அம்மை செளந்தரநாயகி எனவும் வழங்கப்பெறுவர். ஜடாயு வழிபட்டுப் பேரின்பம் எய்திய தலம்.
கல்வெட்டு:
அரசியலார்படியெடுத்தகல்வெட்டுக்கள் மொத்தம்94 உள்ளன. இத்தலம்கி.பி.985- 1013இல்அரசாண்ட முதல் இராஜகேசரி வர்மன் காலத்துஅவனிநாராயண சதுர்வேதி மங்கலத்தைச்சேர்ந்தவன் என்றும், 1011-1043இல்அரசாண்டஇராஜேந்திரசோழ தேவன் காலத்துவடகரைஇராஜேந்திரசிம்மவள நாட்டு மண்ணிநாட்டுப்பிரம்மதேயமானவேப்பத்தூர்சோழமார்த்தாண்ட சதுர்வேதி மங்கலத்தைச்சேர்ந்தது என்றும் தெரிகிறது. சுவாமி பெயர் சிவயோகநாதர் எனவும்,உமாமகேசருக்குஆண்ட நாயகர் எனவும்,கல்வெட்டுக்கள் பெயர் கூறுகின்றன. இத்தலத்துக்கல்வெட்டுக்களால்குறிக்கப்பெறுகின்றசோழமன்னர்கள்பன்னிருவர். பாண்டியர்ஒருவர். விஜயநகரகிருஷ்ணதேவராயர் ஒருவர். இவர்களில்கி.பி.662 முதல்894 வரை ஆண்டபாண்டிய மன்னனாகியவரகுணபாண்டியனது38ஆம் ஆண்டின் நிகழ்ச்சி ஒன்று குறிக்கப்பெறுவதால்இக்கோயில் அதற்கு முன்பே கற்றிருப்பணியாகச் செய்யப் பெற்றமை தெளிவு. முதலாம் பராந்தகன் கி.பி.907 முதல்947 வரை ஆட்சி நடத்தியவன். இவனுடைய ஆட்சியில்விளக்கீட்டிறகாக ஆடுகள் விடப்பெற்றன. பொன்னும்கொடுக்கப்பெற்றன. இவன் மதுரை கொண்ட பரகேசரிவாமன்எனக்குறிக்கப்பெறுகின்றான்.
முதலாம் மற்றும் இரண்டாம் பராந்தகன் காலங்களில் விளக்குக்காகப்பொன்னும்ஆடுகளும்,அபிஷேகத்திரவியங்கட்காகநிலமும்அளிக்கப்பெற்றன. செம்பியன்காரைக்காடுஉடையானாலும்பராந்தகப் பல்லவராயன் என்பவனாலும்விளக்கிற்காக ஆடுகளும் பணமும் அளிக்கப்பெற்றன. இவன் தருமங்களில்விளக்கிற்காகஅளித்தமையே பெரிதும் காணப்படுகின்றன. விசலூர் உடைய நாயனாருக்குத் திருமஞ்சன நீர் காவிரியிலிருந்துகொண்டுவர நிலம் விட்டான். இதில் திருவிசலூர்மகாதேவபட்டாரகர் என இறைவன் திருநாமம் குறிக்கப்பெறுகின்றது.
முதல் இராஜராஜன்கி.பி.985 முதல்1013 வரையில் ஆண்டவன். இவன் காலத்தில் கோவில் விளக்குக்குப் பணம் கொடுக்கப்பட்ட செய்திகள் குறிக்கப்பெறுகின்றன. கிராமங்களில்நிலவிற்பனைகளும்பொறிக்கப் பெற்றுள்ளன. இவனுடைய அரசி ஒருத்தி பொன்னளித்துஇருக்கின்றாள். திருமஞ்சனத்தில்இடப்பெறுகின்றஸ்நானதிரவியங்களுக்காகவும்,பிராமணபோஜனத்திற்காகவும் பொன் அளித்திருக்கிறாள். மிகச் சிறப்பாக இவன் ஆட்சி29இல் அரசன் துலாபாரம் புக்குத் தானம் செய்தான் என்றும்,அரசி தந்திசத்திவிடங்கியாரானலோகமாதேவியார்ஹேமகர்ப்பதானம் செய்தாள் என்றும் குறிக்கப்பெறுகின்றன. பிச்சுதேவன் என்னும் அரசகாரியம்பார்ப்பான் கருப்பக்கிருகப்பணிக்காக நிலம் விட்டமை தெரிகிறது. இராஜேந்திரன்,கி.பி.1011 முதல் 1043 வரை ஆண்டவன். இவன் காலத்திய கல்வெட்டுக்கள்பதின்மூன்று உள்ளன. அவற்றால், திருவிசநல்லூர் உடைய மகாதேவர்க்குத்தங்கக் கச்சை அளித்ததும்,சிதாரிக்காகநறும்புகையிடநிலம் அளித்ததும்,விளக்கிடப் பணமும் நிலமும் ஆடுகளும் அளித்ததும்அறிவிக்கப்பெறுகின்றன. அவனுடைய மனைவியானஅரசியொருத்தியால்வெள்ளிக் கலசம் ஒன்று அபிஷேகத்திற்குஅளிக்கப் பெற்றது. இவன் தனது மூன்றாவது ஆண்டில்திருவிசநல்லூர்மாதேவர்கோயிலையும்கோபுரத்தையும் திருப்பணி செய்தான். இவன் மனைவியானநக்கன்செம்பியன்மாதேவியாரால்விளக்குக்கு ஏற்பாடு செய்யப் பெற்றது. இவனுக்கு உருத்திரன் அருள்மொழியானபிருதி மகாதேவி என்றொரு மனைவியும் இருந்தனள். இவனுக்கு அத்தையும்,வல்லவராயர்வந்தியத் தேவர் மனைவியுமானகுந்தவைதேவியார்பழையாறையில் இருக்கும்போது நிலம் அளித்தார் என்ற செய்தியை அறிவிக்கும் கல்வெட்டு சரித்திரஆராய்ச்சியாளர்க்கும்பெருவிருந்தாய்அமைகின்றது.
மூன்றாம் குலோத்துங்கன்கி.பி.1178 முதல்1218 வரை ஆண்டவன். இவனுடைய ஆட்சி பதினெட்டாம்ஆண்டில் நில விற்பனையைப்பற்றிக் கூறுவது. அதில் வேம்பத்தூர்எதிரிலிச்சோழச்சதுர்வேதி மங்கலமான வேம்பத்தூர் என அழைக்கப்பெறுகின்றது. ஏனைய முதல் மூன்று கல்வெட்டுக்கள் அரசாங்க நில அளவை முறைகளையும் நில விற்பனைகளையும்அறிவிப்பன. தென்புறப்பிராகாரத்தில் உள்ள கருப்பக்கிருகத்தில்வடக்குச்சுவரில் அந்த மண்டபத்தைக்கட்டியவனான ஆனந்த சிவன் என்பவனுடைய உருவம் இருக்கிறது. அதில் ஒரு பகுதியைச் சுவர் மறைத்து விட்டது.
பதிக வரலாறு:
திருமங்கலக்குடியைவணங்கிப்போந்த பிள்ளையார்,திருவியலூருக்குஎழுந்தருளிஇறைவனைவணங்கிக்குரவங்கமழ் என்னும் இன்னிசை கூடும் இத்தமிழ்ப்பதிகத்தொடை சாத்த, இறைவன் அவருக்கு அருளார்திருவேடங்காட்டியருளினார். பிள்ளையார் வணங்கி உய்ந்தார். இதனைப் பிள்ளையார் இப்பதிகஐந்தாம் பாட்டில் கண்ணார்தரும்உருவாகிய கடவுள் என்றும், ஒன்பதாம் பாட்டில் உருவம் விளம்பட்டு அருள் செய்தான் என்றும் குறிப்பித்துஅருளுகிறார்கள்.
THE HISTORY OF THE PLACE
13. THIRU-VIYALOOR
The sacred city of Thiru-viyaloor is also called Pandaaravaadai Thiruviyanallur. There are two other villages named Viyaloor in the Thanjai district. This sacred site is on the north bank of river Cauvery in the Chola country. Buses ply here from Kumbakonam in Thanjai district via Veppaththoor. The God's name is Yogaanandheesuvarar and that of the Goddess is Saanthanaayaki. The holy ford is Sataayu Theerththam. The God is also known by the names Puraathanesuvarar or Vilvaaranyesuvarar and the Goddess by the name of Soundharanaayaki also. Jataayu offered worship here and attained the ultimate bliss.
Stone Inscriptions
Government epigraphists have copied a total of 94 inscriptions. This holy place was said to belong to Aavani Naaraayana Chathurvedhi Mangalam during Raajakesarivarman I, who ruled during 985-1013 CE, and to the Veppaththoor Chozha Maarththaanda Chathurvedhi Mangalam, a Biramatheyam in the Manni Naatu of the Vadakarai Raajendhira Simma Valanaatu during the rule of Raajendhira Chola Thevan, 1011-1043 CE. The God's name is given in the inscriptions as Siva Yoga Naathar and as Umaa Mahesarukku Aanda Naayakar. The names of twelve Chola Kings, one Paandiya King, and Krishnadeva Raayar of Vijayanagaram are mentioned in the inscriptions. Among these an incident in the 38th year of the Paandiya King-Varaguna Paandiyan (862 - 894 CE) is noted, making it clear that this temple would have been built of stone prior to this time. Paraanthakan I ruled during 907 - 947 CE. In the 16th regnal year of his, sheep was gifted for lamp lighting and gold was also given. He is referred to as Parakesari Varman, the conqueror of Madhurai.
During the times of Paraanthakan I and II, gold and sheep were given for lighting of lamps and land was gifted for securing materials for performing holy ablutions. Semibiyan Kaaraikkaadu Udaiyaan and Paraanthaka-p-Pallavaraayan gifted sheep and money for lighting of lamps. Among the latter's gifts most were for lamps. He also gave land for bringing holy water from river Cauvery for Visaloor Udaiya Naayanaar. In this the name of the Lord is given as Thiruvisaloor Mahaadeva Battaarakar.
Raajaraajan I ruled from 985 to 1013 CE. Information is given on the gift of money for lighting of lamps at the temple during his reign. Sale transactions of land in the villages are also noted in the inscriptions. One of his queens had given gold for materials for performing holy ablutions of the Lord's image and for feeding Brahmins. Of special note is the information that the king gave a 'Thulaabaaram' gift (gift of gold or similar item of value of weight equal to that of the giver) in his 29th regnal year and that the queen, Thanthisaththi Vitangkiyaar Lokamahaa-deviyaar, gave a gift of golden icon. A royal official, Pichchu Thevan gave land to finance the renovation of the sanctum. There are thirteen inscriptions of Raajendhiran, who ruled from 1011 to 1043 CE. These inscriptions reveal that he gifted a gold 'kachchai' to the Lord Thiruvisaloor Udaiya Mahaadevar, and gave land for incense offering during worship service and money, sheep and lands for lighting of lamps. One of his queens gave a silver pot for performing holy ablutions. In his third regnal year he had the temple and gopuram of Thiruvisanaloor Maadevar renovated. His wife, Nakkan Sembiyan Maadeviyaar made endowments for lighting of lamps. He also had a wife by name Uruththiran Arulmozhi Piruthi Mahaadevi. The information that his aunt, Kundhavai Theviyaar, wife of Vallavaraayar Vandhiyath Thevar, gifted land while she was in Pazhayaarai, is of special interest to epigraphists and historians. Kuloththungan III ruled from 1178 to 1218 CE. A sale of land during his eighteenth regnal year is noted. In this, Vempaththoor is called Ethirili Chozhach Chathurvethi Mangalamaana Vempaththoor. Other three inscriptions reveal information on the measurement scheme for lands and on the sale of lands. In a shrine located in the southern ambulatory an image of Aanandha Sivan, the builder of the shrine, is engraved on the north wall, but it is partly obscured by a wall.
INTRODUCTION TO THE HYMN
Adoring Lord Civa at Thiru-mankalak-kudi, our youthful saint arrived at Thiru- Viyaloor. Here, when he sang the following hymn, Lord Civa revealed to him His person.
திருச்சிற்றம்பலம்
13.திருவியலூர்
பண் : நட்டபாடை
ராகம் : கம்பீரநாட்டை
குரவங்கமழ்நறுமென்குழலரிவையவள்வெருவப்
பொருவெங்கரிபடவென்றதனுரிவையுடலணிவோன்
அரவும்மலைபுனலும்மிளமதியும்நகுதலையும்
விரவுஞ்சடையடிகட்கிடம்விரிநீர்வியலூரே.
குரவம் கமழ் நறுமென்குழல்அரிவைஅவள்வெருவ,
பொருவெங்கரிபடவென்று அதன் உரிவை உடல் அணிவோன்,
அரவும்(ம்),அலைபுனலும்,இளமதியும்,நகுதலையும்,
விரவும் சடை அடிகட்கு இடம் - விரிநீர்வியலூரே.
பொருள்: குராமலரின் மணம் கமழ்வதும்,இயற்கையிலேயே மணம் உடையதுமானமென்மையான கூந்தலை உடைய உமையம்மை,அஞ்சும்படியாகச் சிவபெருமான் தன்னோடுபொருதற்கு வந்த யானையைக் கொன்று அதன் தோலைஉரித்துத் தன் திருமேனியில்போர்த்துக் கொண்டான். அலன்சடையில் பாம்பு,கங்கை,சந்திரன், வெண்தலை ஓடு ஆகியவற்றை அணிந்துள்ளான். அவனுக்கு உரிய இடம் நீர்வளம் மிக்க வியலூர் ஆகும்.
குறிப்புரை: குரவம் - குராமலர். அரிவை என்றது உமாதேவியை. சிவனுக்குஉமையம்மைவெருவயானையை உரித்துப் போர்த்ததாகச் சொல்லுதல் வழக்கம். அரவு முதலியன விரவிய சடை என்பது தம்முள் மாறுபட்ட பல பொருள்களும் பகை நீங்கி வாழ்தற்கிடமாகிய சடை என்றவாறு.
The soft hair locks of Umaa Devi, is sweet smelling by itself. Added to this She has decked her hair with the flower known as 'Kuravam' which also spreads it fragrance all around. This Umaa Devi got scared when she saw a cruel elephant rushing towards her as though to kill her. Lord Civa faced and killed that elephant, tore off its hide and wore it on His body. Behold the spacious and well-watered Viyaloor - the shrine, of Lord Civa of spreading matted hair in which abide the serpent, the billowy river ganga, the crescent moon and the white skull.
Note: Thiru-Viyaloor is now known as Thiru-visaloor.
ஏறார்தருமொருவன்பலவுருவன்னிலையானான்
ஆறார்தரு சடையன் அனலுருவன்புரிவுடையான்
மாறார்புரமெரியச்சிலைவளைவித்தவன்மடவாள்
வீறார்தரநின்றானிடம்விரிநீர்வியலூரே.2
ஏறு ஆர் தரும் ஒருவன்,பல உருவன்(ன்),நிலை ஆனான்,
ஆறு ஆர்தரு சடையன்,அனல் உருவன்,புரிவு உடையான்,
மாறார் புரம் எரியச் சிலை வளைவித்தவன்,மடவாள்
வீறுஆர்தர நின்றான்,இடம் - விரிநீர்வியலூரே.
பொருள்: சிவபெருமான் எருதின்மேல் ஊர்ந்து வருகின்றான். பல்வேறு மூர்த்தங்களைக்கொண்டவன். அவன் என்றும் நிலையானவன். கங்கை ஆற்றை சடையில்நிறுத்தியவன். அனல் போன்ற சிவந்த மேனியன். பேரன்புடையவன். பகைவராக வந்த அசுரர்களின்முப்புரங்கள்எரியுமாறு வில்லை வளைத்தவன். உமையம்மை பெருமிதம் கொள்ள பலவகைச்சிறப்புக்களோடுநிற்பவன். இவனுக்கு உரிய இடம் நீர்வளம் மிக்க வியலூர்ஆகும்.
குறிப்புரை: ஆர்தருதல் - ஆர்தல். பல உருவன் - அடியார்கள் வேண்டிய வேண்டியாங்குக் கொள்ளும் வடிவங்களை உடையவன். அதாவது எம்போலியர்க்குவினைவாய்ப்பால் கிடைக்கும் உடல் போல்வதன்று, அவன் வடிவென்பது. நிலையானான் - என்றும் அழியாமல் ஏனைய பொருள்கள் தத்தம் கால எல்லை வரை நிலத்து நிற்க ஏதுவானவன். புரிவுடையான் - அன்புடையான். ஆன்மாக்களிடத்துக்காரணமின்றியே செலுத்தும் அன்புடையவன் என்பது கருத்து.மாறார் - பகைவர். வீறு - பிறிதொன்றற்கில்லாத பெருமை.
Lord Civan is One who rides the Bull; His forms are manifold; He is the ever enduring One; He holds the river ganga in His matted hair; His body is as red as fire; He is full of compassion. He bent His bow and gutted with fire the (three) hostile citadels. Umaa Devi was very proud of Lord Civan's multifaceted splendour.
செம்மென்சடையவைதாழ்வுறமடவார்மனைதோறும்
பெய்ம்மின்பலியெனநின்றிசைபகர்வாரவரிடமாம்
உம்மென்றெழுமருவித்திரள்வரைபற்றிடவுரைமேல்
விம்மும்பொழில்கெழுவும்வயல்விரிநீர்வியலூரே.3
செம்மென்சடை அவை தாழ்வுஉற,மடவார்மனைதோறும்,
“பெய்ம்மின்,பலி என நின்று இசை பகர்வார் அவர் இடம்ஆம் -
உம்மென்று எழும் அருவித்திரள் வரை பற்றிட,உரை மேல்
விம்மும்பொழில்கெழுவும்,வயல் - விரிநீர்வியலூரே.
பொருள்: செம்மையும்மென்மையும் உடைய சடை தாழ்ந்து தொங்கும்படியாகத்தாருகாவனத்து முனிவர் மனைவியர் வாழும் இல்லங்கள் தோறும் சிவபெருமான் சென்று உணவு இடுங்கள் என்று இசை பாடினான். அவன் உறைகின்ற இடம் திருவியலூர். இங்கு “உம்‘என்றஒலிக்குறிப்போடுஅருவிகள்குடகு மலை உச்சியிலிருந்துகாவிரியாய் வர அந்நீர்வளத்தால்புகழோடு செழித்து வளரும் சோலைகளையும் பொருந்திய வயல்களையும்உடைய நீர்வளம் மிக்கது வியலூர் ஆகும்.
குறிப்புரை: செம்மென்சடை - செம்மையாகிய மெல்லிய சடை. மடவார் - கர்மபிரமவாதிகளானதாருகாவனத்து முனிவர் பெண்கள். பலி - பிச்சை. உம் - ஒலிக்குறிப்பு. உரை - புகழ்.
Lord Civan, with His soft red matted hair dangling, went around singing and visited the homes where the wives of the saints (Rishis) of Tharu-ka-vanam were residing and implored them to give Him alms. This Civan's abode is Thiru- Viyaloor, where water from the top of Kudagu mountains descend down as waterfalls, creating a noise as 'Um' and runs in the plains as Cauvery river . Because of the abundance of water brought by Cauvery, glorious and rich gardens and fertile fields exist in and around Thiru-Viyaloor.
Note: Civa, as the Lord Bikshaadana , is celebrated in this verse.
அடைவாகியவடியார்தொழவலரோன்றலையதனில்
மடவாரிடுபலிவந்துணலுடையானவனிடமாம்
கடையார்தரவகிலார்கழைமுத்தந்நிரைசிந்தி
மிடையார்பொழில்புடைசூழ்தருவிரிநீர்வியலூரே.4
அடைவு ஆகிய அடியார் தொழ,அலரோன்தலைஅதனில்
மடவார் இடு பலி வந்து உணல் உடையான் அவன் இடம் ஆம் -
கடை ஆர்தர அகில்,ஆர்கழை முத்தம் நிரை சிந்தி,
மிடைஆர்பொழில் புடை சூழ்தரு - விரிநீர்வியலூரே.
பொருள்: அடியவர்கள் தத்தம் அடைவின்படிசிவபெருமானைத் தொழுது வணங்குகிறார்கள். அவன் பிரம்மகபாலத்தில் மகளிர் இட்ட உணவை உண்பவன். அவன்விரும்பி உறையும் இடம் திருவியலூர். இங்கு உழவர்கள்வயல்களில்நீரைப்பாய்ச்சுகின்றார்கள். அங்கு மூங்கில்கள்முத்துக்களைவரிசையாகச்சொரிகின்றன. ஆற்றில் அகில் மரங்கள் மிதந்து வருகின்றன. சோலைகளில் மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளன. இத்தகைய நீர்வளம் மிக்கது வியலூர் ஆகும்.
குறிப்புரை: அடைவாகிய அடியார் - தத்தம் நெறியினின்றுவழிபடுமடியவர்கள். அடைவு - முறைமை. அலரோன் - பிரான். கடையார் - பள்ளர்கள். அகில் ஆர்கழைஎனப்பிரித்துஅகிலும் நிறைந்த
Lord Civan is adored by His devotees assembling in their strength as per their respective guidelines . He consumes the alms dropped by women in His begging bowl which is the skull of Brahma, whose seat is Lotus. The town Viyaloor is endowed with abundant water. Agricultural labourers work in great numbers in the fields. The bamboo trees drop their pearls in rows in the fields. Akil trees are brought by the river and scattered all around. The gardens are rich with closely grown trees. Such a fertile place is Viyaloor that is desired by Lord Civan for His abode.
Note: Civa, it is said, used to recieve alms. Alms are symbolic of devotional love and humility. Lord Civa expects all humanity to supplicate for mercy and for gifts of food. He Himself needs no begging bowl but this object is a visible symbol of the act of supplication. Supplicate and be blessed is the message.
எண்ணார்தருபயனாயயனவனாய்மிகுகலையாய்ப்
பண்ணார்தருமறையாயுயர்பொருளாயிறையவனாய்க்
கண்ணார்தருமுருவாகியகடவுள்ளிடமெனலாம்
விண்ணோரொடுமண்ணோர்தொழும்விரிநீர்வியலூரே. 5
எண் ஆர்தருபயன்ஆய்,அயன் அவனாய்,மிகு கலை ஆய்,
பண் ஆர்தருமறைஆய்,உயர் பொருள்ஆய்,இறையவனாய்க்,
கண் ஆர்தரும் உரு ஆகிய கடவுள்(ள்) இடம் எனல் ஆம் -
விண்ணோரொடுமண்ணோர்தொழும் - விரிநீர்வியலூரே.
பொருள்: சிவபெருமான் தியானத்தின்பயனாய் இருப்பவன். நான்முகனாய்உலகைப்படைப்போனும் அவனே. எண்ணற்றகலைகளாய்த்திகழ்வோனும்சந்தஇசையோடு கூடிய வேதங்களாய்விளங்குபவனும் அவனே. உலகில் மிக உயர்ந்த பொருளாய்இருப்போனும்அவனே. அவன் எல்லோர்க்கும் தலைவன் ஆவான். அவன் கண் நிறைந்த பேரழகு உடையோன் ஆவான். விண்ணவர்களாகியதேவர்களும்மண்ணவர்களாகியமக்களும்வந்து வணங்கும்நீர்வளம் மிக்க வியலூர் அவனது இடமாகும்.
குறிப்புரை: எண் - தியானம். எண்ணார்தருபயன் - தியானப்பயன். . அயனவனாய் - பிரமனாய்என்றது. பவமலிநினைவொடுபதுமனன்மலரதுமேவிய நிலையை. மிகுகலையாய் - ஒன்றினொன்றுமிகுந்திருக்கின்றகலைப்பொருள்களாய். பண் - சந்தம். கண்ணார் தரு உரு. - கண்நிறைந்த வடிவம். பேரழகன் என்றபடி.
Lord Civan is the fruit of meditation; He is 'eka Brahmam' . He is indeed the scriptures galore; He is the chandas of the tuneful vedas; He is the supreme beatitude; He is the Lord-God, beautiful to behold. Behold His shrine where dwellers of the earth as well as the celestial adore Him, at spacious and well-watered Viyaloor.
Note: Chandas - Metric rhythm that characterises the Vedas.
வசைவிற்கொடுவருவேடுவனவனாய்நிலையறிவான்
திசையுற்றவர்காணச்செருமலைவானிலையவனை
அசையப்பொருதசையாவணமவனுக்குயர்படைகள்
விசையற்கருள்செய்தானிடம்விரிநீர்வியலூரே.6
வசை வில்கொடுவரு வேடுவன் அவனாய்,நிலை அறிவான்,
திசை உற்றவர்காணச்,செருமலைவான்நிலையவனை
அசையப்பொருது,அசையாவணம் அவனுக்கு உயர் படைகள்
விசையற்கு அருள் செய்தான் இடம் - விரிநீர்வியலூரே.
பொருள்: சிவபெருமான் வேட்டுவ வடிவம் கொண்டு வளைந்த வில்லை ஏந்தித் தன்னை நோக்கித் தவம் இயற்றும் அர்ச்சுனனின்ஆற்றலைஅறிதற்பொருட்டு அவனிடம் போராடினான். எல்லா திசைகளிலும்உள்ளோரும் காண ஒற்றைக் காலில் நின்று தவம்செய்து கொண்டிருந்தான் அர்ச்சுனன். அவனோடு போர் செய்து அவனைத்-தோற்கடித்தான். பின்னர் அவனுடைய ஆற்றலைப் பாராட்டி அவன் அழியாதவாறுஅவனுக்குப் பாசுபதம் போன்ற படைக்கலங்களைஅருளினான் நம் சிவபெருமான். அவனது இடம் நீர்வளம் மிக்க வியலூர் ஆகும்.
குறிப்புரை: வசைவில் - வளைந்த வில். நிலையறிவான் - அருச்சுனனுடைய உண்மையான தவநிலையைஉணர்த்தும்படி. செரு - போர். நிலையவன் - ஒரு காலில் நின்று தவம் செய்யும் விசயன்.
Lord Civan appeared as a hunter with His bending bow, gauged the might of Arjuna, and engaged Himself in a fight witnessed by men in all the eight directions; He assailed him and shook him to his roots; then He gifted to him invincible weapons. Behold His shrine is in the spacious and well-watered Viyaloor!
Note: The fight between Arjuna and Civa is elaborately dealt with by Bhaaravi in his Kiraataarjuniya. 'Design and rhetoric in a sanskrit court epic' by Indira Viswanathan Peterson (State University of New York Press - Albany, 2003) is a well indited thesis on Bhaaravi's opus. Also many Saiva psalms make reference to this confrontation between Arjuna and Lord Civa. “பார்த்தர்குப்பாசுபதமருள்செய்தவன்பத்தருள்ளீர் ...” St. Appar திருமுறை - IV Verse 494 - திருவிருத்தம்.
மானாரரவுடையானிரவுடையான்பகனட்டம்
ஊனார்தருமுயிரானுயர்விசையான்விளைபொருள்கள்
தானாகியதலைவன்னெனநினைவாரவரிடமாம்
மேனாடியவிண்ணோர்தொழும்விரிநீர்வியலூரே.7
“மான்,ஆர்அரவு உடையான்;இரவு, -உடையான், -பகல் நட்டம்;
ஊன் ஆர்தரும்உயிரான்;உயர்வு இசையான்;விளை பொருள்கள்
தான் ஆகிய தலைவன்(ன்) என நினைவார் அவர் இடம்ஆம் -
மேல் நாடியவிண்ணோர்தொழும் - விரிநீர்வியலூரே.
பொருள்: சிவபெருமான் தலைமையானஅரவைஅணிந்தவன். தலையோட்டில் இரத்தல் தொழில் புரிகின்றவன். பகலில் நட்டம் ஆடுபவன். ஊனிடை உயிராக விளங்குபவன்.பசுபோதமுனைப்பால் உயர்வாக எண்ணுகின்றஉயிர்களிடத்துப்பொருந்தாதவன். அனைத்து விளைபொருள்களாய் நிற்கும் தலைவன். இவ்வாறு நினைத்தற்குஉரியவனாகியசிவபெருமானது இடம் புண்ணியப்பயனால் மேன்மை நாடியவிண்ணவர்களால்தொழப்பெரும் நீர்வளம் சார்ந்த வியலூர் ஆகும்.
குறிப்புரை: மான் - மான்தோல். இரவுடையான் - இரத்தற்றொழில் உடையான். உடையான் என்பதுநடுநிலைத்தீவகமாகப் பகல் நட்டம் உடையான் எனப்பின்னதனோடும்சென்றியையும். ஊனார் தரும் உயிரான் - உடம்பினுள் எங்கும் வியாபகமாய் இருக்கும் உயிர்க்குயிராய் இருப்பவன். உயர்வு இசையான் - பசுபோதமுனைப்பால் உயர்வாக எண்ணுகின்றஉயிர்களிடத்துப்பொருந்தாதவன். பொருள்கள் எல்லாமாய் இருக்கின்ற இறைவன். மேல்நாடியவிண்ணோர்தொழும் என்றது விண்ணோர்கள் தாம் செய்த புண்ணியப்பயனைநுகர்தலிலேயே மயங்கி நிற்பவராதலின்,மேல் நாடற்குரிய சிறப்பு என்றும் இல்லாதவர் என்று குறிப்பித்தவாறு.
Lord Civan wears antelope skin and serpents too; He goes dancing and begging during the day. His valour is of the highest order; He is the producer of all; He is the life of life that animates fleshy embodiments. Thus, even thus, is He contemplated on. Behold His shrine, spacious and well watered, at Viyaloor hailed and worshipped by all the celestial that seek the upper world.
பொருவாரெனக்கெதிராரெனப்பொருப்பையெடுத்தான்றன்
கருமால்வரைகரந்தோளுரங்கதிரநீண்முடிநெரிந்து
சிரமாயினகதறச்செறிகழல்சேர்திருவடியின்
விரலாலடர்வித்தானிடம்விரிநீர்வியலூரே.7
“பொருவார் எனக்கு எதிர் ஆர்எனப்பொருப்பைஎடுத்தான்தன்
கருமால்வரை கரம்,தோள்,உரம்,கதிர் நீள்முடி,நெரிந்து,
சிரம் ஆயினகதறச்,செறி கழல் சேர் திருவடியின்
விரலால் அடர்வித்தான் இடம் - விரிநீர்வியலூரே.
பொருள்: எனக்கு எதிராகப் போர் புரிபவர் யார்?என்ற செருக்கால் கயிலை மலையைநகர்த்தமுயன்றவன் இராவணன். அவன் வலிய பெரிய மலைபோலும் கைகள்,தோள்கள்மற்றும் மார்புகளை உடையவன். ஒளி பொருந்திய நீண்ட மகுடங்களுடன் கூடிய தலைகளும் உடையவன். அத்தலைகள்நெரிதலால் அவன் கதறுமாறு,செறிந்த கழல்களுடன் கூடிய திருவடியின் விரலால் சிவபெருமான் மலையைஅழுத்தினான். இவனது இடம் நீர்வளம் மிக்க வியலூர் ஆகும்.
குறிப்புரை: எனக்கு எதிர் பொருவார்ஆர் என,எனக்கூட்டுக. பொருப்பை எடுத்தான் - இராவணன், கருமால் வரை - வலிய பெரிய மலையை ஒத்த,முடி நெரிந்து - கிரீடம் நெரிதலால்,சிரமாயின கதற - சிரங்கள்பத்தும் கதற,அடர்த்தான்என்னாதுஅடர்வித்தான் என்றது அவனுடைய ஆணவம் குறைந்து பரிபாகம்ஏற்படும்வரை வருத்தி என்றநயம் தோன்ற நின்றது.
Saying: "Who will dare fight against me?" (King of Sri Lanka) lifted up the Kailas mountain the abode of Civa. With the toe of His ankleted and hallowed foot, He crushed the dark hill-like Raakshasha's long and radiant crowns, his hands and shoulder, and caused his ten mouths to cry aloud. This Lord Civan's shrine is the spacious and well-watered Viyaloor!
வளம்பட்டலர்மலர்மேலயன்மாலும்மொருவகையால்
அளம்பட்டறிவொண்ணாவகையழலாகியவண்ணல்
உளம்பட்டெழுதழற்றூணதனடுவேயொருவுருவம்
விளம்பட்டருள்செய்தானிடம்விரிநீர்வியலூரே.9
வளம்பட்டுஅலர்மலர்மேல் அயன்,மாலும்(ம்),ஒருவகையால்
அளம்பட்டு அறிவு ஒண்ணா வகை அழல் ஆகிய அண்ணல்,
உளம்பட்டு எழு தழல் - தூண் அதன் நடுவே ஓர் உருவம்
விளம்பட்டு அருள் செய்தான் இடம், -விரிநீர்வியலூரே.
பொருள்: வளமையோடுஅலர்ந்த தாமரை மலர்மேல்உறையும்நான்முகனும்திருமாலும்தமக்குள் யார் பெரியவர் என்று செறுக்குற்றுஅலைந்தனர். அப்பொழுது அவர்களின் முன் சோதிப்பிழம்பு ஒன்று தோன்றி நின்றது. அப்பொழுது அசரீரி ஒன்று இதன் அடியினையும்முடியினையும்காணுங்கள் என்று கூறியது. அதன்படி இவர்கள் அச்சோதிப்பிழம்பின்அடியினையும்முடியினையும் காண முனைந்தனர். நான்முகனும்திருமாலும்அன்னமும்பன்றியுமாய் வருந்தி முயன்றும்அறியவொண்ணாதவாறு அழல் உருவாய் நின்றிருந்தான் சிவபெருமான். அவ்விருவரும் தம் செருக்கு அடங்கி வேண்டத் தழல் வடிவான தூணின்நடுவே ஓர் உருவமாகவெளிப்பட்டு சிவபெருமான் அருள் செய்தான். இவனது இடம் நீர்வளம் மிக்க வியலூர் ஆகும்.
குறிப்புரை: வளம்பட்டுஅலர்மலர் - திருமாலின்உந்தியினின்றும் தோன்றியது ஒன்றாதலால்,வளமான தாமரை மலர். அளம் பட்டு - வருந்தி,உளம் பட்டு - மனம் உடைய;பட என்பது பட்டெனத் திரிந்து நின்றது எதுகை நோக்கி. விளம்பட்டு - வெளிப்பட்டு,விள்ளப்பட்டு என்பது எதுகை நோக்கி விளப்பட்டுஆகி அது மெலிந்து விளம்பட்டு என நின்றது. விளம் - அகந்தை. செருக்கொழியஎன்றுமாம்.
Brahama seated on the rich and well blossomed lotus and Vishnu, quarrelled with each other as to who is superior to the other. They came to a settlement by which they took the form of a boar and swan to reach out to the holy Feet and Head of Lord Civan. They both failed in their attempt to know the growing column of Fire before them that was Lord Civan. When they stood heart-broken Lord Civan graced them with a darshan of His form that manifested in the middle of that column of fire. This Lord Civan's shrine is in Viyaloor, which is spacious and well watered.
தடுக்காலுடன்மறைப்பாரவர்தவர்சீவரமூடிப்
பிடக்கேயுரைசெய்வாரொடுபேணார்நமர்பெரியோர்
கடற்சேர்தருவிடமுண்டமுதமரர்க்கருள்செய்த
விடைச்சேர்தருகொடியானிடம்விரிநீர்வியலூரே.10
தடுக்கால் உடல் மறைப்பார்அவர்,தவர்சீவரம்மூடிப்
பிடக்கே உரை செய்வாரொடு,பேணார்நமர்பெரியோர்;
கடல் சேர்தருவிடம் உண்டு அமுது அமரர்க்கு அருள் செய்த
விடை சேர்தரு கொடியான் இடம் - விரிநீர்வியலூரே.
பொருள்: ஓலைப்பாயால் உடலை மறைப்பவராகியசமணமுனிவர்களுடனும்,பொன்னிற ஆடையால் உடலை மூடிப்பிடகம் என்னும் நூலைத் தம் மத வேதமாக உரைக்கும் புத்தமதத்தலைவர்களுடனும் நம் பெரியோர் நட்புக்கொள்ளார். கடலில் தோன்றியநஞ்சைத்தான் உண்டு,அமுதைஅமரர்க்களித்தருளியவிடைக்கொடியை உடைய சிவபிரானது இடம் நீர்வளம் மிக்க வியலூராகும். அதனைச் சென்று வழிபடுமின்.
குறிப்புரை: தடுக்கு - ஒலைப்பாய். சீவரம் - பொன் நிற ஆடை. பிடக்கு - பிடகம் என்னும் புத்த நூல். நமர் பெரியோர் - நம்மவர்களாகிய பெரியோர். கடல் - பாற்கடல். விடமுண்டு அமுது அமரர்க்கு அருள் செய்த - ஆலகாலவிடத்தைத் தாம் அருந்தி,இனிய அமுதத்தைத்தேவர்க்கு அளித்த கருணையைக்காட்டியவாறு.
The Jains veil their bodies with woven mats; the Buddhist monks cover their body with brown-red cloth and cite portions from their Pitakas as their Vedas; Our great Ones ignore them. Behold Viyaloor, spacious and well-watered, is the place of our Lord Civan whose flag sports the Bull and who, of Yore, quaffed the oceanic venom and I gave the ambrosia to the celestial ones and graced them.
Note: Pitakas: They are three in numbers; (i) Sutra Pitaka; (ii) Vinaya Pitaka; (iii) Abidamma Pitaka. These constitute the Buddhist cannon.
விளங்கும்பிறைசடைமேலுடைவிகிர்தன்வியலூரைத்
தளங்கொண்டதொர்புகலித்தகுதமிழ்ஞானசம்பந்தன்
துளங்கிற்றமிழ்பரவித்தொழுமடியாரவரென்றும்
விளங்கும்புகழதனோடுயர்விண்ணும்முடையாரே.11
விளங்கும் பிறை சடைமேல் உடை விகிர்தன்வியலூரை,
தளம் கொண்டது ஓர் புகலித் தகு தமிழ் ஞானசம்பந்தன்
துளங்குஇல் - தமிழ் பரவித்தொழும் அடியார் அவர்,என்றும்
விளங்கும் புகழ் அதனோடு,உயர்விண்ணும் (ம்) உடையாரே.
பொருள்: விளங்கும் பிறையைச்சடைமேல் உடைய விகிர்தனாயசிவபிரானதுவியலூரை, இடமகன்றஊராகியபுகலியில்தோன்றிய தக்க தமிழ் ஞானசம்பந்தன்போற்றிப்பாடியதுளக்கமில்லாதஇத்தமிழ்மாலையைப்பாடிப்பரவித்தொழும் அடியவர்,எக்காலத்தும்விளங்கும் புகழோடு உயரிய விண்ணுலகையும்தமதாக உடையவர் ஆவர்.
குறிப்புரை: விகிர்தன் - வேறுபாடு உடையவன். தான் ஒருவனாய் இருந்தே பலவேறுபொருள்களுடன்பலவேறுஉருவுடையவனாய்வேறுபட்டுத்தோன்றுபவன். விகிர்தம் - வேறுபாடு. தளம் - இடம். துளங்குஇல் தமிழ் - நடுக்கமில்லாத தமிழ்.
Gnaana-Sambandan of spacious Pukali is adept in Tamil. He hath sung these hymns on the "Vikirthar" Lord Civan who wears a crescent in His matted crest and abides in Viyaloor. Droopless are his Tamil verses; devotees that sing these Tamil verses and adore Lord Civa will get poised in glory and eventually reach the Heavenly abode.
Note: In the concluding verse, the saintly youth describes himself as Tamizh Gnaana- Sambandan. He does so in many other hymns as well, highlighting the need to appeal to the masses, using delightful metrical notes.
திருச்சிற்றம்பலம்
13ஆம் பதிகம் முற்றிற்று
உ
சிவமயம்
14.திருக்கொடுங்குன்றம்
திருத்தலவரலாறு:
திருக்கொடுங்குன்றம் என்ற திருத்தலமானது பாண்டிய நாட்டுத் தலம். இது பிரான்மலை என இக்காலத்துவழங்குகின்றது. மதுரை,மேலூர்சிங்கம்புணரியிலிருந்துபேருந்துகளில்செல்லலாம். திருக்கோயில்அடிவாரத்தில் உள்ளது. மகோதரமகரிஷியும்,நாகராஜனும்வழிபட்டதலம். அருணகிரிநாதர் திருப்புகழ் பெற்ற சுப்பிரமணியத்தலமாகும். மலை மேல் வைரவர் சந்நிதி மிக விஷேசம். சுவாமி சந்நிதியில் திருக்கல்யாணக் கோலம் சிறப்பானது. தேவசபா மண்டபம் என்ற ஒரு மண்டபம் இருக்கின்றது. இறைவன் பெயர் கொடுங்குன்றீசர். தேவியார்குயிலமுதநாயகி. தேவாரம்’தனிற்பொலிமொழியாள்‘எனக்குறிப்பிடுகின்றது. இத்தலம்குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனஅருளாட்சியில் உள்ளது.
கல்வெட்டு:
இத்தலத்தைப்பற்றியனவாகஇருபத்தொருகல்வெட்டுக்கள்அரசியலாரால்கி.பி.1903ஆம் ஆண்டில்படியெடுக்கப் பெற்றுள்ளன. அவற்றுள்எட்டுக்கல்வெட்டுக்கள் ஆராய்ந்து முடிவு கட்டப்பெற்றன. ஏனையவை அறியப்பெறாதன. நான்கு கல்வெட்டுக்கள்குலசேகரபாண்டியனுடைய ஆட்சி10, 13ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்தவை. இவற்றை இங்ஙனம் வரையறுத்துஎழுதியவர்ஸெவல்பாதிரியார். இத்தலத்தில்சுந்தர பாண்டியன் மண்டபம் (இது கருப்பக்கிருகவாயிலில் உள்ளது). ஆறுகால் மண்டபம்,லக்ஷ்மி மண்டபம் முதலிய மண்டபங்களும்,விசுவநாதர்கோயில்,சுப்பிரமணிய சுவாமி கோயில் முதலியனவும்கோயிலுக்குள் இருக்கின்றன. பிரான்மலைக் கிராமத்தில் ஸ்ரீ சொக்கநாதர் கோயில் உள்ளது. இறைவன் மங்கைநாதர் எனவும், கொடுங்குன்றமுடைய நாயனார் எனவும்,நல்ல மங்கை பாகர் எனவும்,குன்றாண்ட நாயனார் எனவும் குறிப்பிடப்பெறுகின்றார்.
பாண்டிய மன்னர்களில் முதலாம் சுந்தரபாண்டியன்,இரண்டாம் சுந்தரபாண்டியன், பராக்கிரம பாண்டியன்,குலசேகர பாண்டியன்,வீரபாண்டியன் இவர்கள் விளக்குக்காகப்பசுக்களும்,பொன்னும்,சேவார்த்திகட்குஉணவிற்கும்,விளக்குத் தண்டு செய்தற்குமாகப்பொன்னும்நிலமும் அளித்த செய்திகளை அறிவிக்கின்றன. பல கல்வெட்டுக்கள்கி.பி.1251 - 1264க்குள்ஆண்டகோனேரின்மைகண்டான் காலத்தில் துவராபதிவேளார்,பிரபாவபுரந்தரன்ஆகிய இருவரும் நிலம் அளித்தனர். இம்மடிநரசிங்கராயர் காலத்தில் பிரான்மலைச் சீமை என்றும், திருமலை நாட்டுப்பகுதியான பிரான்மலை என்றும் குறிக்கப்பெறுகின்றது. திப்பரசரையன்நன்மைக்காகக்கேரளசிங்கவளநாட்டுஇப்புலி நாயகர் நிலம் அளித்தார். இங்கு ஒரு வியாபாரிகள் சங்கம் இருந்ததாகவும் கல்வெட்டு கூறுகிறது.
1924ஆம் ஆண்டில்படியெடுக்கப் பெற்ற கல்வெட்டுக்கள்16.அவற்றுள்ஐந்து, பாண்டியர்கள்காலத்தன. ஏனையவை விசய நகர அரசர்கள்காலத்தன. சடாவர்மன்வீரபாண்டியன் ஆட்சி9ஆம் ஆண்டில்,திருஞானம் பெற்ற பிள்ளையார் படிமத்தைஎழுந்தருளவித்துக்கேரளசிங்கவளநாட்டுக்குலசேகரன்பட்டினத்துஅருவியூரானானகொடுங்குன்றமுடையான் ஒருவன் பூசைக்குநிபந்தமும் அளித்தான். குலசேகர பாண்டியன் காலத்தில் கீழவேம்பு நாட்டு இராசவல்லிபுரத்துக்கொன்றைசேர்முடியானும்,திருநெல்வேலி உடையானும்விளக்குக்கு ஆடுகள் அளித்தனர். கண்ண மங்கலமான திருவெங்கா உடைய நல்லூர்,அமோக மங்கலமான முதலிநாயகநல்லூர் உடையான் இருவரும் அர்த்தயாமபூசைக்குநிலம் அளித்தனர். அந்தப் பூசைக்குத் தாழ்வு செய்யாதான் சந்தியென்று பெயர். காரைக்குடியான்ஒருவன் மங்கை நாயகர் வசந்த உற்சவத்திற்காகவானராயநல்லூரை இறையிலி செய்து அளித்தான். விஜயநகரஅரசர்கள்வேதபாராயணத்திற்காகவும்,உற்சவத்திற்காகவும்கானூர்முதலிய இடங்களைஅளித்தனர்.
பதிக வரலாறு:
பாண்டிய நாடு செல்லத்திருவுளம் பற்றிய ஆளுடைய பிள்ளையார்,நதிகள்பலவற்றையும், காடுகள் பலவற்றையும் கடந்து,திருக்கொடுங்குன்றத்தை அடைந்தார்கள். அங்கு எழுந்தருளியுள்ளகொழும்பவளச்செழுங்குன்றைவணங்கி’வானிற்பொலி'என்னும் இப்பதிகத்தைஅருளிச் செய்தார்கள்.
THE HISTORY OF THE PLACE
14. THIRU-K-KODUNG-KUNDRAM
The sacred city of Thiru-k-kodung-kundram is in the Paandiya Naadu. It is It can be reached by bus from Madhurai, Meloor, known now as Piraanmalai. Singampunari etc. The temple is at the foot of the hill. Mahodhara Maharishi and Naagaraajan offered worship at this sacred place. The Subbiramania Temple is among those sung by Arunagirinathar. The Vairavar shrine at the top of the hill is of special importance. At the shrine for the Lord, the wedding mode of attire is of especial interest. A pavilion named Devasabaamandapam is in this temple. Name of the God is Kodungkunreesar. His Consort is Kuyilamudha Naayaki. Thevaaram refers to her as "Thenir Poli Mozhiyaal'. This temple is under the spiritual administration of Kunrakudi Thiruvannaamalai Aadheenam.
Stone Inscriptions
Twenty-one inscriptions about this temple have been copied by government epigraphists in 1903. Of these eight could be studied thoroughly and four remain obscure. Four inscriptions pertain to the 10th and 13th regnal years of Kulasekara Paandiyan. Father Sewel has clearly written about them. Inside the temple there are mandapams such as Sundhara Paandiyan Mandapam (at the entrance to the sanctum), six pillared Mandapam, Lakshmi Mandapam, etc., and shrines such as Visuvanaathar Shrine and Subbiramania Suvaami Shrine etc. There is a temple for Sree Chokkanaathar in the village of Piraanmalai. The God is referred to as Mangainaathar, Kodungkunramudaiya Naayanaar, Nallamangaipaakar and Kunraandanaayanaar.
The inscriptions reveal that among the Paandiayan kings, Sundhara Paandiyan I, Sundhara Paandiyan II, Paraakrama Paandiyan, Kulasekara Paandiyan and Veera Paandiyan had gifted cows and gold for lamp lighting, and lands and gold for feeding temple devotees and making a lamp stand. Many inscriptions pertain to the gift of land by Thuvaraapadhi Velaar and Pirabaavapurandharan during the reign of Konerinmaikandaan, who ruled between 1251 and 1264 CE. This place is referred to as Piraanmalaich Cheemai and as Piraanmalai, a part of Thirumalai Naadu in the reign of Immadi Narasinga Raayar. Ippuli Naayakar of Kerala Singa Valanaadu gave land for the benefit of Thipparasaraiyan. An inscription says that there was a guild of merchants here.
Sixteen inscriptions were copied in 1924. Among these, five belong to Paandiyan times. The rest belong to the period of Vijayanagar kings. During the 9th regnal year of Sataavarman Veerapaandiyan, one Kodungkunramudaiyaan of Aruviyoor, of the Kulasekaran Pattinam in the Keralasinga Valanaadu installed the image of Thirujnaanam Perra Pillaiyaar and made endowments for conducting the worship services. Konraisermudiyaan of Raasavallipuram in Keezhvembu Naadu and Thirunelveli Udaiyaan gifted sheep for lamps during the reign of Kulasekara Paandiyan. Two persons, one from Thiruvengaa Udaiya Nallur of Kannamangalam, and the other from Mudhali Naayaka Nallur of Amogamangalam, gave land for the performance of the 'ardhdhayaama' worship service. This service is named 'Thaazhvu Seiyaadhaan Sandhi'. A person belonging to Kaaraikkudi gifted Vaanaraaya Nallur, after making it tax-free, for the celebration of the Spring festival for Mangainaayakar. Vijayanagar kings gave such places as Kaanoor for the recital of Vedhas and for celebrating festivals.
INTRODUCTION TO THE HYMN
On his way to the Paandiya country, crossing rivers and jungles, the saintly youth arrived at Kodung-Kundram. It was from here he sang the following hymn.
திருச்சிற்றம்பலம்
14.திருக்கொடுங் குன்றம்
பண் : நட்டபாடை
ராகம் : கம்பீரநாட்டை
வானிற்பொலிவெய்தும்மழைமேகங்கிழித்தோடிக்
கூனற்பிறைசேருங்குளிர்சாரற்கொடுங்குன்றம்
ஆனிற்பொலியைந்தும்அமர்ந்தாடியுலகேத்தத்
தேனிற்பொலிமொழியாளோடுமேயான்றிருநகரே.1
வானில் பொலிவு எய்தும் மழைமேகம் கிழித்து ஓடிக்,
கூனல்பிறை சேரும் குளிர்சாரல்கொடுங்குன்றம் -
ஆனில்பொலஐந்தும்அமர்ந்து ஆடி,உலகு ஏத்தத்,
தேனில் பொலிமொழியாளோடுமேயான் திரு நகரே.
பொருள்: வளைந்த பிறைச் சந்திரன் வானின்கண் விளங்கும் மழை மேகங்களைக் கிழித்துஓடிச் சென்று சேரும் குளிர்ந்த சாரலை உடையது கொடுங்குன்றம். இது,பசுவிடம்விளங்கும்,பால்,நெய்,தயிர்,கோமயம்,கோசலம் ஆகிய ஐந்து பொருள்களையும் மகிழ்ந்து ஆடி (அபிஷேகித்துக் கொண்டு) உலகம் போற்றத் தேன் போலும் மொழியினைப் பேசும் உமையம்மையோடு சிவபிரான் மேவியதிருத்தலமாகும்.
குறிப்புரை: கூனல்பிறைமேகங்கிழித்துஓடிச்சேருங்கொடுங்குன்றம்எனக்கூட்டுக. மழை மேகம் - சூல்முற்றி மழை பொழியும் மேகம். தேனில் பொலிமொழியாள் - குயில் அமுதநாயகி. இளம் பிறை கனத்த மேகப்படலத்தைக்கிழித்துச் சென்று சேர்தற்கிடமாகியகுளிர்சாரல் குன்று என்றமையால்,ஆன்மாக்கள்அநாதியானஆணவமலப்படலத்தைக்கிழித்துச் சென்று எய்தி,திருவடி நிழலாகிய தண்ணிய இடத்தைச்சாரலாம் என்பது குறித்தவாறு.
The curved crescent moon that shines in the sky runs apparently tearing through the clouds and reaches the cool slopes of Kodung-Kundram. Lord Civan who is anointed in the five products of cow i.e., milk, curd (yogurt), ghee (melted butter), cow dung and urine happily abides with His consort Umaa Devi who is hailed by all the world and whose voice is as sweet as honey.
Note: Kodung-Kundram, like Kaalatthi, Eengoimalai and Thiru-Vidai-ch-churam, was surrounded by forests during the days of St. Sambandar. Wild animals roamed about here freely. Kodung-Kundram is now known as Piraan Malai. Gnaana- Sambandar describes the goddess as Thenin-Poli-Mazhiyaal. She is also known as Kuil-Amutha-Naayaki. In Sanskrit, her name is 'Amruteswari'.
மயில்புல்குதன்பெடையோடுடனாடும்வளர்சாரல்
குயிலின்னிசைபாடுங்குளிர்சோலைக்கொடுங்குன்றம்
அயில்வேன்மலிநெடுவெஞ்சுடரனலேந்திநின்றாடி_
எயில்முன்படவெய்தானவன்மேயவ்வெழினகரே.2
மயில் புல்கு தன் பெடையோடு உடன் ஆடும் வளர் சாரல்,
குயில் இன்(ன்) இசை பாடும் குளிர் சோலைக்,கொடுங்குன்றம் -
அயில்வேல்மலிநெடு வெஞ்சுடர் அனல் ஏந்தி நின்று ஆடி,
எயில்முன்பட எய்தான் அவன் மேய(வ்) எழில் நகரே.
பொருள்: கொடுங்குன்றத்தில் உள் விரிந்த மலைகளில் ஆண் மயில்கள்,தண்ணிய தம் பெடைகளைத்தழுவித் தோகை விரித்தாடுகன்றன. அங்குள்ள குளிர்ந்த சோலைகளில்குயில்கள் இன்னிசை பாடுகின்றன. இது கூரிய வேல்போலும் நெடிய வெம்மையானஒளியோடு கூடிய அனலைக் கையில் ஏந்தி நின்று,ஆடுபவனும்முப்புரங்கள்மீது கணை தொடுத்துஅழித்தவனுமாகிய சிவபெருமான் எழுந்தருளியதிருத்தலமாகும்.
குறிப்புரை: புல்கு - தழுவிய,தன்பெடை என்றது மயிலுக்குள்ளகற்பின்சிறப்புக் கருதி. குயில் இன்னிசைபாடும் சாரல்,மயில் தன் பெடையோடு ஆடும் சாரல் என்பதில்,தன்வசமற்றுப் பாடியும் ஆடியும் செல்லும் அன்பர்க்குக்குளிருஞ்சாரல்கொடுங்குன்றம் என்ற கருத்துத்தொனித்தல் காண்க.
In its cool and vast slopes of Kodung-kundram, the peacock hugs and dances with its mate; in its cool gardens Kuyil birds sing sweet music. Lord Civan is entempled in this town and in the days of yore, He destroyed the three citadels holding in His hands the fiercely - raging fire and a sharp spear too, and danced His number. Note: Even today, the town is the habitat of peacocks and peahens.
மிளிரும்மணிபைம்பொன்னொடுவிரைமாமலருந்திக்
குளிரும்புனல்பாயுங்குளிர்சாரற்கொடுங்குன்றம்
கிளாகங்கையொடிளவெண்மதிகெழுவுஞ்சடைதன்மேல்
வளர்கொன்றையுமதமத்தமும்வைத்தான்வளநகரே.
மிளிரும் மணி பைம்பொன்னொடுவிரைமாமலர்உந்திக்,
குளிரும் புனல் பாயும் குளிர்சாரல்கொடுங்குன்றம் -
கிளர்கங்கையொடுஇளவெண்மதிகெழுவும்சடைதன்மேல்
வளர் கொன்றையும்மதமத்தமும் வைத்தான் வளநகரே.
பொருள்: அருவிகள்,ஒளிவீசும்மணிகளையும்,பசும்பொன், முதல் மணமுள்ள மலர்கள்ஆகியவற்றைத்தள்ளிக் கொண்டு வந்து நீரைச்சொரியும்படியானமலைச்சாரலை உடைய கொடுங்குன்றம்,சடைமுடியில் பொங்கி எழும் கங்கை நதியையும்,வெண்மையானபிறைச்சந்திரனையும்,மணம் கமழும் கொன்றை மலரையும்,மதத்தைஊட்டும் ஊமத்தை மலரையும்அணிந்துள்ள சிவபெருமான் எழுந்தருளி உள்ள வளமையான நகரமாகும்.
குறிப்புரை: கிளர்கங்கை - பொங்கும்கங்காநதி. மதமத்தம் - மதத்தையூட்டும்ஊமத்தம்பூ.
In the cool slopes of Kodung-Kundram, the cataracts descend down and flow; in its cool waters, roll dazzling gems, gold and fragrant flowers. In this Kodung-kundram Lord Civan abides. He sports on His matted hair the roaring Ganga, the young silvery moon and flowers of kondrai and Oo-math-tham flower, (Datura) that causes madness. Note: The cataracts spoken of in this verse, are things of the past.
பருமாமதகரியோடரியிழியும்விரிசாரல்
குருமாமணிபொன்னோடிழியருவிக்கொடுங்குன்றம்
பொருமாவெயில்வரைவிற்றருகணையிற்பொடி செய்த
பெருமானவனுமையாளொடும்மேவும்பெருநகரே.
பரு மா மதகரியோடு அரி இழியும்விரிசாரல்,
குரு மா மணி பொன்னோடுஇழிஅருவிக்கொடுங்குன்றம் -
பொரு மா எயில்வரைவில் - தரு கணையில்பொடிசெய்த
பெருமான் அவன் உமையாளொடும்மேவும்பெருநகரே.
பொருள்: கொடுங்குன்றத்தில் பெரிய மலைச் சாரல்கள் உள்ளன. அங்கு பெரிய கரிய மத யானைகளும்,சிங்கங்களும்,இரை தேடவும்,நீர் பருகவும் இறங்கி வருகின்றன. அங்கு, பெரிய மணிகளைப்பொன்னோடுசொரியும்அருவிகள் உள்ளன. இது,எதிர்த்துப் பொரவந்த பெரிய முப்புரக்கோட்டைகளை,மலையாகியவில்லில்தொடுத்தகணையால்பொடியாக்கின சிவபெருமான் உமையம்மையோடுஎழுந்தருளிய தலம் ஆகும்.
குறிப்புரை: கரி - யானை. அரி - சிங்கம். இழியும் - இறங்குகின்ற சாரல். எனவே,பகை கொண்ட வலிவுள்ளயானையும்சிங்கமுமாகியஇவ்விரண்டின் வலிமை யடங்க,அருவி கிழித்து வருவது போல, கொடுங்குன்றச்சாரலைஅடையின்தம்முள் மாறுபட்ட ஆணவக்களிறும்,ஐம்பொறிகளாகியஅரிகளும்தம் வலிமையற்றுக் கருணை யருவியின் வழியே இழுக்கப்பட்டுஅமிழ்த்தப்படும் என்பது அறிவித்தவாறாம்.
In the extensive slopes of Kodung-Kundram roam huge, dark and musty elephants and lions in search of food and water. Cataracts flow down with gems and with His gold, great and bright. Behold this great town of Him who in the days of yore, mountain-bow and dart, pulverized the three great, hostile citadels. It is here He abides with Goddess Uma.
மேகத்திடிகுரல்வந்தெழவெருவிவ்வரையிழியும்
கூகைக்குலமோடித்திரிசாரற்கொடுங்குன்றம்
நாகத்தொடுமிளவெண்பிறைசூடிந்நலமங்கை
பாகத்தவனிமையோர்தொழமேவும்பழநகரே.5
மேகத்து இடி குரல் வந்து எழ,வெருவி(வ்) வரை இழியும்
கூகைக்குலம்ஓடித் திரி சாரல் கொடுங்குன்றம் -
நாகத்தொடும்இளவெண்பிறை சூடி ( ந்) நல மங்கை
பாகத்தவன்இமையோர் தொழ,மேவும்பழநகரே.
பொருள்: கொடுங்குன்றத்தில் பெரிய மலைச் சாரல்கள்உன்ளன. அங்கு,மேகத்திடம்தோன்றும் இடியின்ஓசையைக் கேட்டு,கோட்டான் என்னும் பறவை இனங்கள் அஞ்சி மலையினின்றும் இறங்கி வந்து பறந்து திரின்றன.சிவபெருமான் தனது முடியில்நாகத்தையும்,இள வெண்பிறையையும் சூடி உள்ளான். அழகிய உமையம்மையை ஒரு பாகமாகக்கொண்டுள்ளான். தேவர்கள் தன்னை வணங்குமாறு பழமையான கொடுங்குன்றத்தில்எழுந்தருளி உள்ளான்.
குறிப்புரை: கூகைக்குலம் - கோட்டான்களின் கூட்டம். கூகைகள் இருள் வாழ்க்கை உடையன. அவைகள் மேக இடிக்குரல் கேட்டு அஞ்சி மலையைவிட்டிறங்கிப் புகலிடம் காணாதுதிரிகின்றன என்றது. அஞ்ஞானமாகியவாழ்க்கையையுடையஆன்மாக்கள் கருணை மழை பொழியும்இறைவனதுமறக்கருணைகாட்டும் மொழியைக் கேட்டு மலையை அணுக முடியாதே அலைவர் என்று குறிப்பித்தவாறு. நல மங்கை - அழகிய உமாதேவி.
When clouds rumble rock horned owls get scared and fly away helter-skelter in the slopes of Kodung-Kundram. Lord Civan who sports on the crest the serpent and the young moon and who is concorporate with His consort beautiful Umaa abides in this hoary town Kodung-kundram enabling Devaas to worship Him.
Note: Owls were not regarded as birds of ill-omen in the past. Their hooting were held auspicious. In Bengal, this bird is hailed as Lakshmi's Vahana. Its cry is a harbinger of fortune.
கைம்மாமதகரியின்னினமிடியின்குரலதிரக்
கொய்ம்மாமலர்ச்சோலைபுகமண்டுங்கொடுங்குன்றம்
அம்மானெனவுள்கித்தொழுவார்கட்கருள் செய்யும்
பெம்மானவனிமையோர்தொழமேவும்பெருநகரே.6
கைம்மாமதகரியின்(ன்) இனம் இடியின் குரல் அதிரக்,
கொய்ம் மா மலர்ச்சோலை புக மண்டும்கொடுங்குன்றம் -
“அம்மான்!” என உள்கித்தொழுவார்கட்கு அருள் செய்யும்
பெம்மான் அவன்,இமையோர் தொழ,மேவும்பெருநகரே.
பொருள்: கொடுங்குன்றத்தில்கொய்யத்தக்கமணமலர்களைக் கொண்ட சோலைகள்உள்ளன. துதிக்கை உடைய கரிய மத யானைகளின் கூட்டம் இடியின் குரல் அதிரக் கேட்டு அஞ்சி இச்சோலைகளில் புகுந்து ஒளிந்து கொள்ள வருகின்றன. இவரே நம் தலைவர் என இடைவிடாது நினைந்து தொழும்அடியவர்கட்கு'அருள் செய்யும் சிவபெருமான் விண்ணோர்தன்னைத் தொழ இக்கொடுங்குன்றத்தில்வீற்றிருந்து அருள் வழங்குகின்றான்.
குறிப்புரை: கைம்மா - யானை. வெளிப்படை மொழி. யானை,இடியோசையைக்கேட்டுச்சோலைகளிற்புகுகின்றன. இது நெறி நில்லார்தீயோசை கேட்டு அஞ்சிஓடித்தாணிழல் செல்லும் அன்பரைநினைவூட்டும் நிகழ்ச்சி. அம்மான் - தலைவன். உள்கி - தியானித்து.
When it thunders, the herd of huge and trunked tuskers barge into the gardens rich in great and large fragrant flowers, which are easy to pluck. Such is Kodung- Kundram. The devotees who always worship without any break, chanting that Lord Civan is their only god-head and none else, get His grace. This Lord Civan abides in the big Kodung-kundram enabling the Devaas to worship Him.
Note: Ammaan: It means Chief.
மரவத்தொடுமணமாதவிமெளவல்லதுவிண்ட
குரவத்தொடுவிரவும்பொழில்சூழ்தண்கொடுங்குன்றம்
அரவத்தொடுமிளவெண்பிறைவிரவும்மலர்க்கொன்றை
நிரவச்சடைமுடிமேலுடன்வைத்தானெடுநகரே.
மரவத்தொடுமணமாதவிமெளவல் அது விண்ட
குரவத்தொடுவிரவும்பொழில்சூழ்தண்கொடுங்குன்றம் -
அரவத்தொடும்இளவெண்பிறைவிரவும்மலர்க்கொன்றை
நிரவச்சடைமுடிமேல்உடன்வைத்தான்,நெடுநகரே.
பொருள்: கடம்பு,குருக்கத்தி,முல்லை ஆயவற்றின் நாள் அரும்புகள்குரவமலர்களோடுவிண்டு மணம் விரவும்பொழில்சூழ்ந்த தண்ணிய கொடுங்குன்றம்,அரவு,வெள்ளியஇளம்பிறை,மணம் கமழும் கொன்றை மலர் ஆகியவற்றை நிரம்பத் தன் முடிமேல்அணிந்துள்ளசிவபிரானதுநெடுநகராகும்.
குறிப்புரை: மரவம் - கடம்பு,மாதவி - குருக்கத்தி. மெளவல் - முல்லை. நிரவ - நிரம்ப. ஒன்ற என்றுமாம்.
Cool Kodung-Kundram is girt with gardens rich in maravam, fragrant maatavi, mourval and burgeoning Kuravam blossoms. Lord Civan who wears abundant Kondrai flowers, a serpent and a young white moon, in His matted crest, abides in this cool Kodung-kundram.
Note: Maravam: Indian oak. Maatavi: Common delight of the woods. Mowval: Wild jasmine. Kuravam: Common bottle flower.
முட்டாமுதுகரியின்னினமுதுவேய்களைமுனிந்து
குட்டாச்சுனையவைமண்டிநின்றாடுங்கொடுங்குன்றம்
ஒட்டாவரக்கன்றன்முடியொருபஃதவையுடனே
பிட்டானவனுமையாளொடுமேவும்பெருநகரே.8
முட்டா முது கரியின்(ன்) இனம் முது வேய்களைமுனிந்து,
குட்டாச்சுனைஅவை மண்டி நின்று ஆடும் கொடுங்குன்றம் -
ஒட்டா அரக்கன் தன் முடி ஒருபஃது அவை உடனே
பிட்டான் அவன் உமையாளொடும்மேவும்பெருநகரே.
பொருள்: யானைக்கூட்டங்கள் யாரும் தடுப்பார் இன்றி முதிய மூங்கில்களை உண்டு வெறுத்துப் பிறரால் அகழப்படாதுஇயற்கையிலேயே ஆழமாக உள்ள சுனைகளில் இறங்கி நின்று நீராடுகின்ற இடம் கொடுங்குன்றம். தன்னோடு மனம் பொருந்தாது கயிலை மலையைஎடுத்த அரக்கனாகியஇராவணனின்முடியணிந்தபத்துத்தலைகளையும்அடர்த்துநசுக்கியவன் ஆகிய சிவபெருமான் உமையம்மையோடுமேவும்பெருநகர் ஆகும்.
குறிப்புரை: முட்டா - தடையில்லாத. முதுவேய்கள் - முதிர்ந்த மூங்கில்கள். யானைகள்மூங்கிலைஉண்டு வெறுத்துப் பின் சுனைகளில் இறங்கி ஆடுகின்றன. குட்டாச்சுனை - தானே ஆழமான சுனை என்பதாம். குட்டம் - ஆழம். குட்டா - ஆழமாக்கப்படாத. ஒட்டா - பொருந்தாத. பிட்டான் - இரண்டாகஒடித்தான்;நசுக்கினான்.
In Kodung-Kundram, herds of elephants without let or hindrance, break bamboo clusters, gobble them up and getting satiated, invade the deep and natural pools and bathe in them. Lord Civan abides in this great city with His Consort Umaa Devi. It is He, who in the days of yore crushed the ten crowned heads of the King of Sri Lanka.
அறையும்மரிகுரலோசையையஞ்சியடுமானை
குறையும்மனமாகிம்முழைவைகுங்கொடுங்குன்றம்
மறையும்மவையுடையானெனநெடியானெனவிவர்கள்
இறையும்மறிவொண்ணாதவன்மேயவ்வெழினகரே.9
அறையும் (ம்) அரி குரல் ஓசையை அஞ்சி,அடும் ஆனை
குறையும் மனம் ஆகி(ம்),முழைவைகும்கொடுங்குன்றம் -
மறையும்(ம்) அவை உடையான் என,நெடியான் என,இவர்கள்
இறையும்(ம்) அறிவு ஒண்ணாதவன்மேய(வ்) எழில் நகரே.
பொருள்:சிங்கத்தின் கர்ச்சனை ஓசையைக் கேட்டு வெருண்டு,கொல்லும் தன்மையினவாகியயானைகள் மன எழுச்சி குன்றிமலையிடையே உள்ள குகைப்பகுதிகளில் மறைந்து வைகும் இடம் ஆகிய கொடுங்குன்றம்வேதங்களுக்குஉரியவனானநான்முகன்,திருமால் ஆகிய இருவரும் சிறிதும் அறிய முடியாதவனாய் நின்ற சிவபிரான் மேவிய அழகிய நகரம்.
குறிப்புரை: அறையும் - முன்கால்களால் அறைந்து கொல்லும். அடும் ஆனை - கொல்லும் தன்மை வாய்ந்த மதயானை. குறையும் மனமாகி - வன்மை குறைந்த மனத்தை உடையனவாகி. முழை - குகை. மறையும் அவை யுடையான் - வேதங்களையுடையவனாய பிரமன். நெடியான் - திருமால். இறையும் - சிறிதும்.
Kodung-Kundram is His place where the murderous tusker, hearing the roar of a lion, gets scared exhausted, and hides itself in a cave. Both Brahma - the Master of Vedas - and Vishnu, the tall one - were unable to recognise Lord Civan who appeared before them as an endless column of fire. It is in this beauteous city, He is entempled.
மத்தக்களிறாளிவ்வரவஞ்சிம்மலைதன்னைக்
குத்திப்பெருமுழைதன்னிடைவைகுங்கொடுங்குன்றம்
புத்தரொடுபொல்லாமனச்சமணார்புறங்கூறப்
பத்தர்க்கருள்செய்தானவன்மேயபழநகரே. . 10
மத்தக்களிறுஆளி(வ்) வர அஞ்சி(ம்),மலைதன்னைக்
குத்திப்பெருமுழைதன்இடைவைகும்கொடுங்குன்றம் -
புத்தரொடுபொல்லா மனச் சமணர் புறம்கூறப்,
பத்தர்க்குஅருள்செய்தான் அவன் மேயபழநகரே.
பொருள்: மதம் பொருந்திய யானைகள்தம்மின் வலிய சிங்கம் வருதலைக் கண்டு அஞ்சி மலையைக்குத்திப் பெரிய குகையில்தங்கியிருக்கும்கொடுங்குன்றம்புத்தர்களும்பொல்லாமனமுடையசமணர்களும்,புறங்கூறத் தன் பக்தர்கட்குஅருன்செய்பவனாகிய சிவபிரான் மேவிய பழமையான நகராகும்.
குறிப்புரை: யானை ஆளிவர அஞ்சி,மலையைக் குத்திக் கொண்டு குகையில் தங்குகின்றது என்பதாம்.
Kodung-Kundram is the place where a musty tusker, scared at the (possible) advent of a lion punches a hill with its tusks and hide itself in the huge cavern thus created. Lord Civan abides at this hoary town and blesses His devotees, ignoring the back-biting of the Buddhists and the evil-minded samanars.
கூனற்பிறைசடைமேன்மிகவுடையான்கொடுங்குன்றைக்
கானற்கழுமலமாநகர்தலைவன்னலகவுணி
ஞானத்துயர்சம்பந்தனநலங்கொடமிழ்வல்லார்
ஊனத்தொடுதுயர்தீர்ந்துலகேத்தும்மெழிலோரே.11
கூனல்பிறைசடைமேல் மிக உடையான் கொடுங்குன்றைக்
கானல் கழுமலமாநகர்த் தலைவன்(ன்) - நலகவுணி,
ஞானத்து உயர் சம்பந்தன - நலம் கொள் தமிழ் வல்லார்,
ஊனத்தொடு துயர் தீர்ந்து,உலகு ஏத்தும் எழிலோரே.
பொருள்: வளைந்த பிறைச்சந்திரனைச் சடைமுடி மீது அழகு மிகுமாறுஅணிந்துள்ளசிவபிரான் எழுந்தருளப் பெற்றது திருக்கொடுங்குன்றம் ஆகும். கடற்கரைச்சோலைகளால்சூழப்பட்டதுகழுமல மாநகர். இவ்வூர்த்தலைவனும்,நல்ல கவுணியர்கோத்திரத்தில்தோன்றியவனுமாகியஞானசம்பந்தன்திருக்கொடுங்குன்றத்துஇறைவனைப்பாடிய தமிழ் மாலைகளை ஓதி வழிபட வல்லவர் தம்மிடமுள்ளகுறைபாடுகள்நீங்கித்துன்பங்கள்அகன்று உலகம் போற்றும்புகம்உடையோர்ஆவர்.
குறிப்புரை: கானல் - கடற்கரைச் சோலை. தலைவன் நல்ல கவுணி - தலைவனாகிய நல்ல கவுண்டின்யகோத்திரத்துண்டானவன். ஊனம் - குறைபாடு. எழில் - எழுச்சி.
Sambandhan, the Chief of Kazhumalam which is girt with littoral gardens, the one of lofty gnosis - hath sung these Tamil verses on the lord of Kodung-Kundram who wears on His matted crest the curved and glorious crescent. They who are well-versed in these Tamil psalms will be rid of their flaws and misery; and get beatific, hailed by all the world.
திருச்சிற்றம்பலம்
14ஆம் பதிகம் முற்றிற்று
உ
சிவமயம்
15.திரு நெய்த்தானம்
திருத்தலவரலாறு:
திருநெய்த்தானம் என்ற திருத்தலமானதுசோழநாட்டுத் தலம். தஞ்சையைஅடுத்துள்ளதிருவையாற்றிற்குமேற்கே1.5கி.மீ. தூரத்தில் உள்ளது. திருவையாற்றுசப்தஸ்தானக்ஷேத்திரங்களில்ஏழாவது தலம். இங்கே கலைமகள் வழிபட்டுப் பேறு பெற்றாள். சுவாமி பெயர் நெய்யாடியப்பர். அம்மை பெயர் பாலாம்பிகை. இளமங்கையம்மைஎனத் தேவாரம் குறிப்பிடுகின்றது. தீர்த்தம் காவிரி,கிழக்கு பார்த்த சந்நிதி. இப்போது தில்லை ஸ்தானம் என வழங்குகின்றது. வடமொழியில்கிருத ஸ்தானம் ஆயிற்று. இறைவற்குப்பசுநெய்அபிஷேகிப்பதுவழக்கம்.
கல்வெட்டு:
இத்தலத்தில்அரசியலார்படிஎடுத்த வண்ணம்5கல்வெட்டுக்கள் உள்ளன. அவற்றுள்இத்தலம்இராஜாதிராஜன் காலத்தில் இராஜராஜவளநாட்டுப்பைங்காநாட்டுத்திருநெய்த்தானம்எனக்குறிக்கப்பெறுகின்றது. இத்தலத்து முதலாம் பராந்தகன் முதலாக ஐந்து சோழஅரசர்களின்தானங்களைக்குறிக்கும்நிகழ்ச்சிகளும்,நந்திவர்மன்தானநிகழ்ச்சிகளும்குறிக்கப்பெறுகின்றன. செம்பியன்ஈக்காட்டுவேளாளனானபரிசைக்கிழான் மறவன் நக்கன் என்பவன்13 கழஞ்சு பொன்னைக் கோயில் விளக்கிற்காகக் கொடுத்தான். கூத்தன் அருள்மொழியான வானவன்பேரரையன் நிலத்தை25 கழஞ்சு பொன்னுக்கு நங்கை வரகுணபெருமானார் வாங்கி விளக்கிற்காக வைத்தாள். சாமரகேசரிதெரிஞ்சகைக்கோளர்,விக்ரமசிங்கதெரிஞ்சகைக்கோளர்,இருவராலும்பைங்காநாட்டுக்கீழப்பிலாறு கிராமத்தில் நிலம் அளிக்கப் பெற்றது. முற்கூறியசாமரகேசரிதெரிஞ்சகைக்கோளருள்ஒருவனான மல்லன் ஆரியனால்நிவந்தம்விடப்பெற்றது. கோயில் காரியத்தலைவனானகாமக்கோடநல்லூர்ஆயனால் இரு பொன் பட்டங்கள்கடவுளுக்குக்கொடுக்கப்பெற்றன. சோழப்பெருமானடிகளுடைய காமக் கிழத்தியானநங்கை கூத்தப்பெருமானார்30 கழஞ்சு பொன்னைவிளக்குக்காக வைத்தார். அதனைத்திருநெய்த்தானச் சபையார் சுவாமிக்குஸ்நபனமண்டபங்கட்டப் பயன்படுத்தி விட்டனர். அதற்குப்பதிலாகக் கோயில் நிலங்கள்சிலவற்றை ஏற்பாடு செய்தனர். வளவர்கோன்பேரரையன்என்பவனும்,செம்பியன்தமிழ்வேளான்விக்கணன் மனைவி கடம்பமாதேவியும்,தென்னவன் பிரதிமாரர்சனான கட்டி ஒற்றியூரான்பராந்தகனும்,இளங்கோ வேண்மான்மனைவியானவரகுணப்பெருமானாரும்விளக்கிற்காகப்பொன்னும்,நிலமும்அளித்தனர். முண்டங்குடிஉடையானானகண்ணங்குடி நாராயணன் நைவேத்யத்திற்கு நெல் அளித்தான். இது அளித்த காலம் முதலாம் பராந்தகன் காலம். மேளக்காரன்,தேவதாசி,வாணிகன் இவர்கள் தருமமும்விளங்கின என்பதை மூன்று கல்வெட்டுக்கள்குறிப்பிடுகின்றன. கோப்பரகேசரியான முதலாம் பராந்தகனின் மாமியார் முள்ளூர் நங்கை என்று தெரிகிறது.
பதிக வரலாறு:
பெரும்புலியூர் முதலிய தலங்களைவணங்கிப் பிள்ளையார் வீற்றிருக்குங் காலத்தில், மேற்குத்திசைத்தலங்களையும்வணங்கத்திருவுள்ளவ் கொண்டு விடைபெற்றுத்திருவருட்குறிப்பின் வழியே செல்லுகின்றார்கள். திருநெய்த்தானத்தை அடைந்தார்கள். மனம் பொருந்த வணங்கினார்கள்.’மையாடியகண்டன்'என்னும் இப்பதிகத்தைப் பாடினார்கள். இதில் “நெய்யாடியபெருமானிடம்நெய்த் தானம் என்னுங்கள்;செல்வன் அடி,சிவகதி சேரலாம்: என்று ஆணை வழங்குகின்றார்கள்.
THE HISTORY OF THE PLACE
15. THIRU-NEITH-THAANAM
The sacred city of Thiru-neith-thaanam is in Chola Naadu. It is situated 1.5 km to the west of Thiruvaiyaaru, next to Thanjai. Of the 'Sapthasthaana' temples, this is the seventh. Kalaimagal (Sarasvathi) offered worship and got her wish fulfilled here. The Lord's name is Neiyaadiappar and the Goddess is known as Baalambikai, or 'Ilamangaiyammai', as noted in the Thevaaram. The holy ford is Cauvery. The shrine faces east. The place is now known as Thillaisthaanam. It is the custom to use ghee from cow's milk for anointing the God.
Stone Inscriptions
There are 51 inscriptions in this temple that have been copied by government epigraphists. In the inscriptions of the time of Raajaadhiraajan, this temple is referred to as Thiruneiththaanam of Paingkanaadu in Raajaraaja Valanaadu. Gifts and endowments by five Chola kings, beginning with Paraanthakan I and Nandhivarman are noted in the inscriptions. A man named Sembiyan Eekkaattu Velaan Parisai Kizhaan Maravan Nakkan, gifted 13 'kazhanju' of gold for lighting lamps in the temple. A lady, Nangai Varaguna Perumaanaar bought the land belonging to Kooththan Arulmozhiyaana Vaanavan Peraraiyan for 25 'kazhanju' gold and gifted it for lamps. Land situated in Keezhappilaaru village of Paingkaanaadu was gifted by two persons, Saamarakesari Therinja Kaikkolar and Vikramasinga Therinja Kaikkolar. Endowments for temple services were made by Mallan Aariyan, of the above-noted Saamarakesari Therinja Kaikkolars. Two gold ornaments for the Lord were given by Kaamakkodanalloor Aayan, who was the manager of the temple. A concubine of Cholap Perumaanadikal, Nangai Kooththap Perumaanaar, gave 30 'kazhanju' of gold for lamps. The Thiruneiththaanam assembly members used that gift for building a bathing pavilion (Snapana Mandapam) for the Lord. In exchange for it they arranged to get some temple lands. One Valavarkon Peraraiyan, Sembiyan Thamizhavelan Vikkanan's wife Kadambamaadevi, Thennavan Biramaadhiraasanaana Katti Orriyooraan Paraanthakan, and Ilangkovennmaan's wife Varagunap Perumaanaar gave land and gold for lamps. Munnadangkudi Udaiyaan Kannangkudi Naaraayanan gave land and gold for lamps. Three inscriptions refer to donations from percussionists, temple dancers (Devadaasi) and traders. It is known from an inscription that the mother-in-law of Kopparakesari Paraanthakan I was one Mulloor Nangai.
INTRODUCTION TO THE HYMN
It is from Perum-puliyur, the youthful saint arrived at Thiru-neith-thaa-nam. It was here he sang the following hymn.
திருச்சிற்றம்பலம்
15.திரு நெய்த்தானம்
பண் : நட்டபாடை
ராகம் : கம்பீரநாட்டை
மையாடியகண்டன்மலைமகள்பாகமதுடையான்
கையாடியகேடில்கரியுரிமூடியவொருவன்
செய்யாடியகுவளைம்மலர்நயனத்தவளோடும்
நெய்யாடியபெருமானிடம்நெய்த்தானமெனீரே.1
மை ஆடிய கண்டன்,மலைமகள் பாகம் அது உடையான்,
கை ஆடிய கேடுஇல் கரி உரி மூடிய ஒருவன்,
செய் ஆடிய குவளை(ம்) மலர் நயனத்தவளோடும்
நெய்ஆடிய பெருமான்,இடம் நெய்த்தானம்எனீரே!
பொருள்: சிவபெருமான் கருநிறம் அமைந்த கண்டத்தை உடையவன். மலை மகளாகியபார்வதியைஇடப்பாகமாகக் கொண்டவன். துதிக்கையோடுகூடியதாய்த் தன்னை எதிர்த்து வந்த அழிவற்ற புகழ் பெற்ற யானையைக் கொன்று அதன் தோலைப்போர்த்ததன்னொப்பார்இல்லாத் தலைவன். வயல்களில் முளைத்த குவளை மலர்போலும்கண்களை உடைய உமையம்மையோடும்நெய்யாடிய பெருமான் என்ற திருப்பெயரோடும்விளங்கும் இடமாகியநெய்த்தானம் என்ற திருப்பெயரைச்சொல்வீராக.
குறிப்புரை: மையாடியகண்டன் - விஷம் பொருந்திய கழுத்தை உடையவன். கையாடிய கரி - கையோடு கூடிய யானை,கேடில்கரி என்றது இறைவன் உரித்துப் போர்த்ததால் நிலைத்த புகழ் கொண்டமையின்.செய் - வயல். நெய்யாடிய பெருமான் என்பது இத்தலத்து இறைவன் திருநாமம். நெய்த்தானம்எனத்தலப்பெயரைச்சொல்லுங்கள் போதும் என்கின்றார்கள்.
Lord Civan's throat bears the dark blue mark of venom. His Consort, the daughter of the Himaalayaa 'mountain king', is part of His physical frame. The elephant was fleeced by the peerless One who then wore its skin on His frame. Ye folks, say Neith-thaa-nam which is the place of the Lord Civan. He is anointed in ghee. He is concorporate with His Consort goddess Umaa Devi whose eyes are verily like the blue lilies of fertile fields.
Note: Thiru- neith-thaa-nam is now known as Thillas-thaanam.
பறையும்பழிபாவம்படுதுயரம்பலதீரும்
பிறையும்புனலரவும்படுசடையெம்பெருமானூர்
அறையும்புனல்வருகாவிரியலைசேர்வடகரைமேல்
நிறையும்புனைமடவார்பயினெய்த்தானமெனீரே.
பறையும்,பழிபாவம்;படு துயரம்பலதீரும்;
பிறையும்,புனல்,அரவும்,படு சடை எம்பெருமான் ஊர் -
அறையும்,புனல்வரு காவிரி அலை சேர் வடகரைமேல்,
நிறையும்,புனை மடவார் பயில் - நெய்த்தானம்எனீரே!
பொருள்: திருநெய்த்தானம்காவிரியின்வடகரையில் உள்ளது. . ஆரவாரத்துடன் வரும் நதியின் அலைகள் இங்கு வந்து மோதுகின்றன. சிவபெருமான்,தன் சடையில் சந்திரன், கங்கை,பாம்பு இவைகளைக்கொண்டுள்ளான். இவன் எழுந்தருளி இருப்பது நெய்த்தானம். மனத்தைக் கற்பு நெறியில்நிறுத்தும் நிறை குணத்துடன் தம்மை ஒப்பனை செய்து கொள்ளும் மகளிர்: இங்கு விளங்குகின்றார்கள். நெய்த்தானம் என்ற ஊரின்பெயரைச்சொல்லுமின். உங்கள் மீதுள்ள பழி நீங்கும். பாவங்கள்,துன்பங்கள்அனைத்தும்தீரும்.
குறிப்புரை: பறையும் - கழியும்,அறையும் - ஒலிக்கும்,நிறையும்புனைமடவார் - மனத்தைக் கற்பு நெறிக்கண்நிறுத்துவதாகியநிறைக்குணத்தால் தம்மை ஒப்பனை செய்த மடவார்.
Neith-thaa-nam is the abode of our Lord Civan who sports on His matted hair the crescent, the river, and the serpent. Ye folks, say 'Neith-thaa-nam' your blame and sin will perish; your manifold misery will end. This township is situated on the northern bank of the Cauvery river whose waves dash against the banks of this town. In this town girls adorn themselves well and live around, observing chastity to its core even in their mind.
Note: Araiyum: This word means proclaims / will proclaim. It also means 'resounding'. The Cauvery courses its joyous way proclaiming the glories of Lord Civa.
பேயாயினபாடப்பெருநடமாடியபெருமான்
வேயாயினதோளிக்கொருபாகம்மிகவுடையான்
தாயாகியவுலகங்களைநிலைபேறுசெய்தலைவன்
நேயாடியபெருமானிடநெய்த்தானமெனீரே.3
பேய்ஆயின பாட,பெருநடம்ஆடிய பெருமான்,
வேய்ஆயினதோளிக்குஒருபாகம் மிக உடையான்,
தாய் ஆகிய உலகங்களைநிலைபேறுசெய் தலைவன்,
நேஆடிய பெருமான்,இடம் நெய்த்தானம்எனீரே!
பொருள்: சிவபெருமான் பேய்கள் பாட,நடனம் ஆடிய பெரியோன். மூங்கில் போலத்திரண்ட தோள்களை உடைய உமையம்மைக்குத் தன் திருமேனியின் ஒரு பாகத்தைவழங்கியவன். அனைத்து உலகங்களிலும் வாழும் உயிர்களை நிலைபேறு செய்தருளும் தாய் போன்ற தலைவன். அன்பர்களின் அன்பு நீரில் ஆடுபவன். இவன் எழுந்தருளியநெய்த்தானம்என்றதிருப்பெயரைப்பலகாலும்சொல்லுவீராக.
குறிப்புரை: பெருநடம் - மகாப்பிரளயகாலத்துச்செய்யப்பெறும் மகா நடனம். வேய் - மூங்கில். அவ்வுலகங்களைத்தாயாகி நிலைபேறு செய்த தலைவன் எனக்கூட்டுக. நெய்யாடிய என்பது எதுகை நோக்கி நேயாடியஎன்றாயிற்று. நே - அன்பு,அன்பே அபிடேகமாதல்ஞானபூசையில் உண்டு.
Lord Civan dances His magnum to the singing of ghouls. His consort goddess Umaa Devi's shoulders are bamboo like and she forms half part of His frame. He is anointed in the love of His devotees. He abides in Neith-thaa-nam. Ye folks, say the name of the town 'Neith-thaa-nam'. He is the chief who protects all lives in all the worlds like a mother.
Note: Perunatam: The magnum dance number; Half of His frame: One half is as good as the other. Yet, Uma who forms the left half of Civa, is our merciful Mother. Indian tradition holds that a mother is higher than a father.
சுடுநீறணியண்ணல்கசுடர்சூலம்மனலேந்தி
நடுநள்ளிருணடமாடியநம்பன்னுறையிடமாம்
கடுவாளிளவரவாடுமிழ்கடனஞ்சமதுண்டான்
நெடுவாளைகள்குதிகொள்ளுயர்நெய்த்தானமெனீரே.4
சுடுநீறு அணி அண்ணல்,சுடர் சூலம்(ம்) அனல் ஏந்தி
நடுநள்இருள் நடம் ஆடிய நம்பன்(ன்),உறைவு இடம் ஆம் -
கடுவாள் இள அரவு ஆடு உமிழ் கடல் நஞ்சம்அது உண்டான்,
நெடுவாளைகள்குதிகொள்(ள்) - உயர் நெய்த்தானம்எனீரே!
பொருள்: சிவபெருமான் சுடப்பட்ட திருநீற்றை அணியும் தலைமையானவன். ஒளி பொருந்திய திரிசூலம்,நெருப்பு ஆகியவற்றைக் கைகளில் ஏந்தியவன். இருள் செறிந்த இரவின் நடு யாமத்தில் நடனம் ஆடும் நம்பன். கொடிய ஒளி பொருந்திய இளைய வாசுகியாகிய பாம்பு உமிழ்ந்தநஞ்சோடு,கடலில் தோன்றியநஞ்னைஉண்டவன். இவன் உறையும் இடம் நெய்த்தானம். இங்கு நீண்ட வாளை மீன்கள் துள்ளி விளையாடும் நீர்வளம்மிக்க குளங்கள் உண்டு. இந்த நெய்த்தானம் என்ற ஊரின்பெயரைச்சொல்லுவீராக.
குறிப்புரை: சுடுநீறு - சுட்ட நீறாகிய விபூதி. நடுநள்ளிருள் - அர்த்த யாமம்,நடுநள் - ஒருபொருட்பன்மொழி. நள் - செறிவுமாம். நம்பன் - நம்பப்படத்தக்கவன்,விருப்பிற்குரியவன். கடுவாள் இள அரவுஆடு உமிழ் நஞ்சு - கொடிய ஒளி பொருந்திய இளைய வாசுகியாகிய பாம்பு உமிழ்ந்தஅடுதலை உடைய
Lord Civan, the Supreme, wears in His body the holy white ash. Holding in His hands the blazing spear and fire He dances at midnight. He is an exceedingly desirable One. He quaffed the venom spat out by the fierce young bright Vaasuki snake and the venom of the ocean (Thiru-p-paar-kadal) when it was churned. The town Neith-thaa-nam has abundant water in its pools where silvery fishes leap and play in joy. Ye folks! say Neith-thaa-nam, the name of this place.
Note: The serpent referred here is Vaasuki, the divine serpent.
நுகராரமொடேலம்மணிசெம்பொன்னுரையுந்திப்
பகராவருபுனல்காவிரிபரவிப்பணிந்தேத்தும்
நிகரான்மணலிடுதண்கரைநிகழ்வாயநெய்த்தான
நகரானடியேத்தந்நமைநடலையடையாவே.5
நுகர் ஆரமொடு ஏலம் மணி செம்பொன் நுரை உந்தி,
பகரா வருபுனல் காவிரி பரவிப் பணிந்து ஏத்தும்,
நிகரால் மணல் இடு தண் கரை நிகழ்வு ஆய,நெய்த்தான -
நகரான் அடி ஏத்த(ந்)நமை நடலைஅடையாவே.
பொருள்: திருநெய்த்தானத்தில்ஓடுகின்ற காவிரி நதி,நுகரத்தக்கபொருளாகிய சந்தனம், ஏலம்,மணி,செம்பொன் ஆகியவற்றை நுரையோடு உந்தி விலை பகர்வது போல ஆரவாரித்து வருகின்றது. காவிரி நதி பரவிப் பணிந்து ஏத்துவது போல,ஒரு வகையான மணலையும் தன் கரையில் கொண்டு வந்து சேர்க்கிறது. இவ்வாறு விளங்குகின்றநெய்த்தானத்துக் கோயிலில் அருள்புரிகின்ற சிவபிரான் திருவடிகளைஏத்தத்துன்பங்கள்நம்மை அடையா.
குறிப்புரை: நுகர் ஆரம் - நுகரத்தக்கபொருளாகிய சந்தனம். பகராவரும் - விலை கூறி வருகின்ற. நிகரான் மணல் - ஒருவிதமான மணல். நடலை - துன்பம்.
The river Cauvery flows down here at Neith-thaa-nam, hawking as it were, its wares sandalwood, cardamom, gems and ruddy gold. It rolls down with these, pays obeisance and hails Lord Civan, all the while showing up bright sands on its cool banks. If we hail the holy feet of the Lord of Neith-thaa-nam misery will not touch us.
Note: The Cauvery carries with it sacred articles of civa-puja. The temple priest uses sandal wood paste in the Lord's abisheka. Cardamom is used to add flavour to neivedya. Gems and gold are dropped into the holy water which is used for the Lord's ablution. Ornaments of gold and gems are used to bedeck the Lord. The suggestion implicit in this verse is that the holy river vicariously performs the services of a priest.
விடையார்கொடியுடையவ்வணல்வீந்தார்வெளையெலும்பும்
உடையாரநறுமாலைசடையுடையாரவர்மேய
புடையேபுனல்பாயும்வயல்பொழில்சூழ்ந்தநெய்த்தானம்
அடையாதவரென்றும்அமருலகம்அடையாரே.6
விடைஆர் கொடி உடைய(வ்) அணல்,வீந்தார்வெளை எலும்பும்
உடையார்,நறுமாலை சடை உடையார் அவர்,மேய,
புடையே புனல் பாயும்,வயல் பொழில்சூழ்ந்த,நெய்த்தானம்
அடையாதவர் என்றும் அமருலகம்அடையாரே.
பொருள்: இடபக்கொடியை உடைய அண்ணலும்,வெள்ளெலும்பு மாலையும்,மணம் கமழும் மலர் மாலையும்சடைமேல்அணிந்தவனும் ஆகிய சிவபிரான் மேவியதும்,அருகில் உள்ள கண்ணிகளிலும்வாய்க்கால்களிலும் வரும் நீர்பாயும்வயல்களும்பொழில்களும்சூழ்ந்ததும் ஆகிய நெய்த்தானம் என்னும் தலத்தைஅடையாதவர்எக்காலத்தும்வீட்டுலகம்அடையார்.
குறிப்புரை: உடைய அண்ணல்,உடையவ்வணல் என விரித்தல் தொகுத்தல் விகாரம் வந்தன சந்தம் நோக்கி. வீந்தார் - இறந்தவர்களாகியபிரமவிஷ்ணுக்களது. வெளை;வெள்ளை என்பதன் தொகுத்தல். நெய்த்தானம்அடையாதவர்அமருலகம்அடையார் என எதிர்மறை முகத்தால் பயன் கூறியவாறு. அமருலகம்,தேவருலகம்என்பாரும்உளர். விரும்பிய தலமாகியவீடென்பதேபொருந்துவதாம். அமரர் உலகு என்னாதுஅமருலகென்றேஇருத்தலின்.
Lord Civa, the supreme, sports the bull on His flag. He wears the white bones of Brahma and Vishnu (whose tenure had ended). His matted hair is fragrant with flower garlands; He abides at Neith-thaa-nam girt with fields and groves beside which flow streams and channels. They who have not visited it, cannot gain access to the celestial world.
Note: The Bull, the mount of Lord Civa. His flag also sports this insignia. “ஊர்திவால்வெள்ளேறேசிறந்தசீர்கொடியும்அவ்வேறென்ப - புறநானூறு (பாடல் 1).
நிழலார்வயல்கமழ்சோலைகணிறைகின்றநெய்தானத்
தழலானவனனலங்கையிலேந்தியழகாய
கழலானடிநாளுங்கழலாதேவிடலின்றித்
தொழலாரவர்'நாளுந்துயரின்றித்தொழுவாரே.
நிழல் ஆர் வயல் கமழ்சோலைகள்நிறைகின்றநெய்தானத்து
அழல் ஆனவன்,அனல் அங்கையில் ஏந்தி,அழகுஆய
கழலான் அடி நாளும் கழலாதே,விடல்இன்றித்
தொழலார் அவர் நாளும் துயர் இன்றித்தொழுவாரே.
பொருள்: திருநெய்த்தானத்தில் உள்ள வயல்கள் பயிர் செழித்து வளர்வதால் ஒளி நிறைந்து விளங்குகின்றன. மணம் கமழும்சோலைகள் அங்கு நிறைந்து உள்ளன. இத்தலத்தில் தழல் உருவில்விளங்குபவனும்,அனலைத் தன் கையில் ஏந்தியவனும்,அழகிய வீரக்கழல்களைஅணிந்தவனும்ஆகியசிவபெருமான்எழுந்தருளியுள்ளான். இப்பெருமானுடையதிருவடிகளை நாள் தோறும் தவறாமலும்,மறவாமலும்தொழுதலை உடைய அடியவர் எந்நாளும்துயரின்றிமற்றவர்களால்தொழத்தக்கநிலையினராவர்.
குறிப்புரை: கழலாதே - நீங்காதே. விடல் இன்றி - இடைவிடாமல். தொழலார் அவர் - தொழுதலைஉடைய அடியார்கள்.
Neith-thaa-nam is rich in bright fields and fragrant groves; The Lord here, in the yore, became a column of fire; His beautiful palm holds the fire. They who hold fast to the ankleted Feet of this handsome One and adore Him uninterruptedly, will be freed from misery; also they will be blessed with access to pay obeisance for ever thereafter.
அறையார்கடலிலங்கைக்கிறையணிசேர்கயிலாயம்
இறையாரமுனெடுத்தானிருபதுதோளிறவூன்றி
நிறையார்புனனெய்த்தானனன்நிகழ்சேவடிபரவக்
கறையார்கதிர்வாளீந்தவர்கழலேத்துதல்கதியே.8
அறை ஆர் கடல் இலங்கைக்கு இறை அணி சேர் கயிலாயம்
இறை ஆர முன் எடுத்தான்,இருபது தோள் இற ஊன்றி,
நிறை ஆர் புனல் நெய்த்தானன்நன்நிகழ் சேவடி பரவக்,
கறை ஆர் கதிர் வாள் ஈந்தவர் கழல் ஏத்துதல்கதியே.
பொருள்: ஓசை கெழுமிய கடல் சூழ்ந்த இலங்கை மன்னனாகிய இராவணன்,அழகிய கயிலாயமலையை தன் இருபது முன் கரங்களாலும்பெயர்த்துத் தள்ளி வைக்க முயன்றான். சிவபிரான் தன் கால் விரலால் உச்சி மலையின் மீது சிறிது அழுத்தினான். இராவணனதுஇருபது தோள்களும் நெறியவருந்தினான். நீர் நிறைந்த நெய்த்தானத்துபெருமானதுவிளங்கும் திருவடிகளை இராவணன் பரவி வாழ்த்தி வணங்கினான். சிவபிரான் அவனுக்கு முயற்கறையை உடைய சந்திரனின்பெயரைப்பெற்ற’சந்திரகாசம்‘என்றவாளைக்கொடுத்தருளினான். அப்பெருமான்திருவடிகளைஏத்துதலேஒருவற்குஅடையத்தக்ககதியாகும்.
குறிப்புரை: அறை - ஓசை. இறை ஆர - மணிக்கட்டுப் பொருந்த,நெய்த்தானன் - நெய்த்தானத்தவனாகிய இறைவன். கறையார்கதிர்வாள்ஈந்த - சந்திரன்பெயரைப்பொருந்தியவாளைத் தந்த என்றது சந்திரகாசம் என்னும் வாளைத் தந்த என்பதாம். அவர் கழல் ஏத்துதல்கதியே - அந்த இறைவனுடையகழலைஏத்துதலேமீட்டும்அடையத் தக்க கதியாம்.
Sri Lanka is surrounded by the roaring sea on all its four sides. In the days of yore, the King of Sri Lanka, Dasakreevan, tried to uproot the ornate Kailas with his forearms. The Lord of Neith-Thaa-nam, rich in waters, pressed His toe at the top of the mount, and crushed Sri Lanka King's twenty arms. Dasakreevan repented, for his folly, and begged for pardon. He expressed his sincerity by singing in Saama Gaana tune. At this, the Lord gifted to him the sword, named after the moon that hath in it a murky patch. Lo, the hailing of His ankletted Feet brings about salvation. (Also c.f. Verse - 8 of திருவீழிமிழலை)
Note: The sword gifted by Civa bears the name Chandrahasa. Without this, Raavanaa could not have vanquished Jataayu who intercepted him to prevent the kidnapping of Sita.
கோலம்முடிநெடுமாலொடுகொய்தாமரையானும்
சீலம்மறிவரிதாயொளிதிகழ்வாயநெய்த்தானம்
காலம்பெறமலர்நீரவைதூவித்தொழுதேத்தும்
ஞாலம்புகழடியாருடலுறுநோய்நலியாவே.
கோலம் முடி நெடுமாலொடு,கொய் தாமரையானும்
சீலம்(ம்) அறிவு அரிதுஆய் ஒளி திகழ்வுஆயநெய்த்தானம்,
காலம் பெற மலர்நீர்அவைதூவித் தொழுது ஏத்தும்
ஞாலம் புகழ் அடியார் உடல் உறு நோய் நலியாவே.
பொருள்: அழகிய முடியை உடைய திருமாலும்,கொய்யத்தக்க தாமரை மலர் மேல் விளங்கும் நான்முகனும்,தன் இயல்பைஅறிதற்கியலாத நிலையில் ஒளிவடிவாய்த்திகழ்ந்தநெய்த்தானப்பெருமானைவிடியற்பொழுதிலேநீராட்டி மலர் சூட்டித்தொழுதேத்தும்உலகு புகழ் அடியவருடையஉடம்பினை மிக்க நோய்கள் துன்பம் செய்ய மாட்டா.
குறிப்புரை: கோலம் முடி - அழகிய கிரீடம். சீலம் - செளலப்யம் என்னும் எளிமைக் குணம். காலம் பெற -விடியலிலேயே. உடலை நோய் நலியாஎன்க. உறுநோய் - பிராரத்த: வினையான் வரும் துன்பம்.
The exalted Vishnu and Bramha of the lotus could not, at all, comprehend the greatness of Lord Civan. In His dazzling and splendorous saivite form He abides at Neith-thaa-nam. The renowned devotees of the world hail and adore Him, at the ordained hour, sprinkling flower soaked holy water on His frame. The malady of physical embodiment will not afflict these devotees hereafter.
Note: 'Kolam' is Civa vēdam . ‘Kolam mudi' may also refer to the beautiful crown of Vishnu.
மத்தம்மலிசித்தத்திறைமதியில்லவர்சமணர்
புத்தரவர்சொன்னம்மொழிபொருளாநினையேன்மின்
நித்தம்பபினிமலன்னுறைநெய்த்தானமதேத்தும்
சித்தமுடையடிபாருடல்செறுநோயடையாவே.10
மத்தம்மலிசித்தத்து இறை மதிஇல்லவர் சமணர்,
புத்தர் அவர்,சொன்ன(ம்) மொழி பொருளாநினையேன்மின்!
நித்தம் பயில் நிமலன்(ன்) உறை நெய்த்தானம்அது ஏத்தும்
சித்தம்(ம்) உடை அடியார் உடல் செறு நோய் அடையாவே.
பொருள்: சித்தத்தில்செருக்குடையவரும்,சிறிதும் மதியில்லாதவரும் ஆகிய சமணர்களும், புத்தர்களும் கூறும் பொருளற்றஉரைகளை ஒரு பொருளாக நினையாதீர். நாள்தோறும் நாம் பழகிவழிபடுமாறு,குற்றமற்ற சிவபிரான் உறையும்நெய்த்தானத்தைவணங்கிப்போற்றும்சித்தத்தை உடைய அடியவர் உடலைத்துன்புறுத்தும்நோய்கள்அடையா.
குறிப்புரை: மத்தம் - மதம். இறைமதியில்லார் - கடவுளுணர்ச்சி சிறிதும் இல்லாதவர்கள். செறுநோய் - வருத்தும்நோய்கள்.
The demented Samanars are altogether of muddled brains. The Buddhists blabber in confusion. Ignore their utterances. The devotees, who with all their heart, hail Neith-thaa-nam daily, where the eternal Lord who is free from impurity (Malam) abides, will cease to suffer from the malady of physical ailment.
தலமல்கியபுனற்காழியுட்டமிழ்ஞானசம்பந்தன்
நிலமலகியபுகழான்மிகுநெய்த்தானனைநிகரில்
பலமல்கியபாடல்லிவைபத்தும்மிகவல்லார் -
சிலமல்கியசெல்வன்னடிசேர்வர்சிவகதியே. 11
தலம் மல்கிய புனல் காழியுள் தமிழ் ஞானசம்பந்தன்
நிலம் மல்கியபுகழால்மிகும்நெய்த்தானனை நிகர் இல்
பலம் மல்கிய பாடல்(ல்) இவை பத்தும் மிக வல்லார்,
சில மல்கிய செல்வன்(ன்) அடி சேர்வர்,சிவகதியே.
பொருள்: தலங்களில் சிறந்த புனல் சூழ்ந்தகாழிப்பதியுள்தோன்றிய தமிழ் ஞானசம்பந்தன்உலகெங்கும் பரவிய புகழால் மிக்க நெய்த்தானத்துப்பெருமான்மீதுபாடியஒப்பற்றபயன்கள்பலவற்றைத் தரும் பாடல்களாகியஇவற்றைக்கற்றுப்பலகாலும் பரவ வல்லவர் சீலம் நிறைந்த செல்வன் அடியாகியசிவகதியைச்சேர்வர்.
குறிப்புரை: பலம் மல்கியபாடலிவைபத்தும் என்றது,முதல் நான்கு பாடலிலும்நெய்த்தானம்என்னுங்கள், உங்களை நடலையடையா,அமருலகு அடையலாம்,துயரின்றித்தொழலாம்,நோய் நலியா,அடையா, கழலேத்துதல் கதி என இம்மைப்பயனையும்,மறுமைப்பயனையும்எய்தலாம்என்கிறார்கள்.
Gnaanasambandan of famed Kaazhi which is adored with the wealth of abundant waters, has sung these ten verses to celebrate the Lord of Neith-thaa-nam whose unbounded glory pervades all the worlds. They who can chant well these ten boon-conferring hymns will gain the godly way and its goal, the Feet of the opulent One who is Civa.
Note: 'Sila': perhaps 'sila' is used in this verse to denote 'Seelam' nobility. For the sake of rhyme, 'seela' is shortened into 'sila'.
திருச்சிற்றம்பலம்
15ஆம் பதிகம் முற்றிற்று
சிவமயம்
16.திருப்புள்ள மங்கை
திருத்தலவரலாறு:
திருப்புள்ளமங்கை என்ற திருத்தலமானதுசோழநாட்டுக்காவிரித்தென்கரைத் தலம்.பசுபதி கோயில் இரயில் நிலையத்தில் இருந்து வடக்கே3கி.மீதஞ்சையைஅடுத்துள்ளஐயம்பேட்டையில் இருந்து கண்டியூர் செல்லும் பேருந்துச் சாலையில் உள்ளது. ஊர் பெயர் - புள்ளமங்கை. கோயில் பெயர் ஆலந்துறை. தேவர்கள் அமுதம் கடைந்தபொழுது உண்டான விடத்தை அமுது செய்த இடம். ஆதலின்ஆலந்துறைஎனத்திருக்கோயில்வழங்கப்பெறுகின்றது. தலம் திருப்புள்ள மங்கை. இன்று பசுபதி கோயில் எனவும் வேளாளப் பசுபதி கோயில் என அடைமொழி சேர்த்தும் வழங்குகிறது. பிரமன் பூசித்த தலம். புள்ளமங்கை என்பதற்கு ஏற்பக்கோபுரத்தில் கழுகுகள் எப்பொழுதும் வசித்து வருகின்றன. பொந்தின் இடை தேனூறிய என்னும் அருளாளர்வாக்கிற்கியையப்பொந்துகளில் எல்லாம் தேனடைகள் காணப்படும். திருச்சக்கரப்பள்ளியின்சப்தஸ்தானத்தலங்களில் இதுவும் ஒன்று. இறைவன் ஆலந்துறைநாதர். இறைவி அல்லியங்கோதை. பசுபதிநாதர் எனவும் வழங்கும். தீர்த்தம் காவிரி.
கல்வெட்டு:
அரசியலாரால்கி.பி.1921இல்படியெடுக்கப்பட்ட546 முதல்559வரையுள்ளபதின்மூன்றுகல்வெட்டுக்கள் உள்ளன.
பதிக வரலாறு:
வேதங்களில்சொல்லப்பட்டஅருங்கருத்துக்களின்உள்ளீடாகியசிவஞானம்தம்மறிவில்நிரம்பப் பெற்ற பிள்ளையார் திருச்சக்கரப்பள்ளியைவணங்கிக் கொண்டு வயற்கரை வழியாகப்புள்ளமங்கையை அடைந்தார்கள். அங்கேயுள்ளஆலந்துறை என்னும் திருக்கோயிலுக்குச்சென்றார்கள். இறைவன் திருவடித்தலத்தை அன்போடு வணங்கிப்’பாலுந்துறுதிரளாயின‘ திருப்பதிகத்தைஅருளிச் செய்தார்கள்.
THE HISTORY OF THE PLACE
16. THIRU-P-PULLA-MANGAI
The sacred city of Thiru-p-pulla-mangai is in Chola Naadu on the south bank of river Cauvery. It is situated on the bus route connecting Iyampettai (near Thanjai) and Kandiyoor, at a distance of 3 km to the north of Pasupathikoyil railway station. The name of the village is Pullamangkai and that of the temple is Aalanthurai. The temple is called so as it is here that the Lord swallowed the poison (aalam) that came when up the Devas churned the ocean of milk to get the divine ambrosia that bestows immortality. The sacred place is known as Thiruppullamangkai. Now it is referred to as Pasupathikoyil or Velaalap Pasupathikoyil. Biraman offered worship at this temple. Befitting its name Pullamangkai, vultures always nest in the temple tower. In all the crevices one can see bee hives, consistent with the saying of the saint, “pondhin idai then ooriya". This temple is one of the Saptha Sthaana sites of Thiruchchakkarappalli. The Lord's name is Aalanthurai Naathar and that of the Goddess is Alliyangkodhai. The Lord is also known as Pasupathinaathar. The holy ford is river Cauvery.
Stone Inscriptions
There are 13 inscriptions, from No. 546 to No. 558, in this temple that have been copied by government epigraphists in 1921.
INTRODUCTION TO THE HYMN
From Chakkara-p-palli, the saint arrived at Pulla-Mangai where he sang the following hymn. The temple at Pulla-Mangai town is called Aalanthurai. In modern days this town is known as pasu-pathi-koyil and/or Vellaala-p-pasu-pathi-koyil.
திருச்சிற்றம்பலம்
16.திருப்புள்ள மங்கை
பண் : நட்டபாடை
ராகம் : கம்பீரநாட்டை
பாலுந்துறுதிரளாயினபரமன்பிரமன்றான்
போலுந்திறலவர்வாழ்தருபொழில்சூழ்புளமங்கைக்
காலன்றிறலறச்சாடியகடவுள்ளிடங்கருதில்
ஆலந்துறைதொழுவார்தமையடையாவினைதானே.
பால் உந்துஉறு திரள் ஆயின பரமன்,பிரமன்தான்
போலும் திறலவர்வாழ்தருபொழில்சூழ்புளமங்கை,
காலன் திறல்அறச்சாடிய கடவுள்(ள்) இடம் கருதில்,
ஆலந்துறைதொழுவார்தமைஅடையா,வினைதானே.
பொருள்: திருப்புள்ள மங்கை என்ற ஊரில் உள்ள ஆலந்துறை என்னும் கோவிலில்சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். அவர்,பாலைக்காய்ச்ச,தயிராக்கி,அத்தயிரைக்கடைதலால் விளைந்து வரும் வெண்ணைத் திரள் போன்றவர். காலனது வலிமை முழுவதையும்அழித்தவர். வேதப்புலமையில்நான்முகனைப் போன்ற அந்தணர்கள்வாழ்கின்ற ஊர் திருப்புள்ள மங்கை. இவ்வூரைச் சுற்றி சோலைகள்சூழ்ந்துள்ளன. இவ்வூர்க்கோயிலில் எழுந்தருளியுள்ளசிவபெருமானை நினைந்து வழிபடுபவர்களைத்தீயவினைகள்அடையா.
குறிப்புரை: பால் உந்து உறுதிரள் - பாலைத்தயிராக்கிக்கடைதலால்விளைந்த வெண்ணெய். பிரமன் தான் போலுந்திறலவர் - பிரமனும் அவன் போலும் தன்மையினராகியஅந்தணரும். ஆலந்துறை - கோயிலின் பெயர்;புள்ளமங்கை - தலத்தின் பெயர். இதனை புளமங்கைஆதியவர் கோயில் திருவாலந்துறைதொழுமின்* என்ற இப்பதிகம்பத்தாம்பாடலால் அறிக. வினையடையா என்றது ஆகாமியங்கள்அடையாஎன்பதாம்.
The lord is like the mass of butter churned out of curd/yogurt. At Pulla-Mangai sages are living whose skill matches that of Brahma. It is the sacred place of Lord Civa who kicked Yaman (god of death) to death. This town is surrounded by gardens full of trees. The effect of karma will be lessened to those who offer worship to Lord Civan in the Aalanthurai temple.
Note: Butter is symbolic of triumphant Bhakthi. St. Appar affirms this. 'He will manifest Himself when with ceaseless effort, churning yogurt is done with the rod of affinity and the rope of consciousness".
மலையான்மகள்கணவன்மலிகடல்சூழ்தருதண்மைப்
புலையாயினகளைவானிடம்பொழில்சூழ்புளமங்கைக்
கலையான்மலிமறையோரவர்கருதித்தொழுதேத்த
அலையார்புனல்வருகாவிரியாலந்துறையதுவே.2
மலையான்மகள் கணவன்,மலிகடல்சூழ்தருதண்மைப்
புலைஆயினகளைவான்,இடம் - பொழில்சூழ்புளமங்கைக்,
கலையால்மலிமறையோர் அவர் கருதித் தொழுது ஏத்த,
அலை ஆர் புனல் வரு காவிரி ஆலந்துறை அதுவே.
பொருள்:சிவபெருமான்இமவான்மகளாகிய பார்வதி தேவியின் கணவன் ஆவான். அவன் புள்ள மங்கை என்னும் ஊரில் உள்ள ஆலந்துறை என்னும் கோயிலில் எழுந்தருளிஉள்ளான். இவ்வூர்,அலைகளோடு கூட,நீர் பெருகி வரும் காவிரிக்கரையில் உள்ளது. இவ்வூரைச்சுற்றிச்சோலைகள்நிறைந்துள்ளன. இவ்வூரில் கலைகள் பலவற்றை அறிந்த, அறிவால் நிறைந்த மறையவர்கள்வாழ்கிறார்கள். அவர்கள் இவ்வூர்இறைவனைமனத்தால்கருதி,காயத்தால் தொழுது,வாயால் ஏத்தி வழிபடுகிறார்கள். இப்பூவுலகம் நீர் நிறைந்த கடலால்சூழப்பட்டது. இந்த உலகத்தில் உயிர்கள் பிறவி எடுத்து,இறந்தும்,பிறந்தும்மீண்டும் மீண்டும்இப்பிறவிச்சூழூலில் உழல்கின்றன. இவ்வாறு உழல்வதைக்களைந்துபிறவா வரம் அளிக்கக்கூடியவன் சிவபெருமான் ஒருவனே. இவ்வூரில் இருக்கின்ற சிவனைவழிபாடு செய்து பிறவிப்பெருங்கடலைநீந்திக் கரை சேருங்கள்.
குறிப்புரை: கடல்சூழ்தருதண்மைப்புலையாயினகளைவான் இடம் பொழில்சூழ்புளமங்கை - கடல் சூழ்தலால் வந்த பண்பாகியகுளிர்ச்சியோடு புலால் மணத்தைக்களைகின்ற பெரிய இடம் (மணந்தருகின்ற) பொழில்சூழ்ந்தபுள்ளமங்கைஎன்க. களைவான் என ஒரு சொல்லாக்கி,நிற்பவனாகியஇறைவன் என்பாரும்உளர். புலை களைதல் பொழிலின்செயலேயன்றி இறைவன் செயலாகாமைஓர்க.
Goddess Parvathi is the daughter of the Himaalayan mountain king. Her consort is Lord Civan. His abode is Alanthurai in the town Pulla-Mangai, which is surrounded by rich gardens full of sweet smelling flowers. The foul smell that pervades the city caused by the dead fish of the sea is nullified by the sweet smelling flowers in the gardens that surround the city. On the banks of river Cauvery of wavy waters, Vedic scholars meditate and hail Lord Civan who is stationed at Alanthurai in the town Pulla- mangai.
Note: Mountain daughter: Paarvathi. 'Parvatham' means mountain. Paarvathi is the offspring of the mountain Chief called Himavaan.
கறையார்மிடறுடையான்கமழ்கொன்றைச்சடைமுடிமேல்
பொறையார்தருகங்கைப்புனலுடையான்புளமங்கைச்
சிறையார்தருகளிவண்டறைபொழில்சூழ்திருவாலந்
துறையானவனறையார்கழதொழுமின்றுதிசெய்தே.3
கறை ஆர் மிடறு உடையான்,கமழ்கொன்றைச் சடைமுடி மேல்
பொறைஆர் தரு கங்கைப்புனல் உடையான்,புளமங்கைச்
சிறை ஆர் தரு களிவண்டு அறை பொழில்சூழ்திருஆலந்-
துறையான் அவன்,நறைஆர் கழல் தொழுமின்,துதி செய்தே!
பொருள்: சிவபெருமான் விடக்கறை பொருந்திய கண்டத்தை உடையவன். மணம் கமழும்கொன்றை மலர் அணிந்தசடைமுடியினை உடையவன். அச்சடையின்மீதுசுமையாகஅமைந்த கங்கை ஆற்றை அணிந்தவன். இவன் புள்ளமங்கையில் உள்ள ஆலந்துறைஎன்னும் கோயிலில் எழுந்தருளி உள்ளான். இவ்வூர்சோலைகளால்சூழப்பட்டது. அங்கு சிறகுகளுடன் கூடிய தேனைஉண்ட வண்டுகள் ரீங்காரம் செய்து கொண்டிருக்கின்றன. அக்கோயிலுக்குச் சென்று அப்பெருமானதுதிருவடிகளைத் துதி செய்து தொழுவீராக.
குறிப்புரை: கறை - விடம். மிடறு - கழுத்து. பொறையார்தரு - சுமையாகப் பொருந்திய. நறை - மணம்.
Lord Civa's neck is of dark blue colour. The kondrai flower He has worn on His matted hair spreads sweet smell all around. Also on His head He bears the heavy ganges river. He is the Lord of Thiru-Aalanthurai girt with gardens where the winged bees hum gladly. Hail and adore His fragrant and ankleted Feet.
Note: The heavy flood. The infuriated Ganga came down with all her force and with intent to devastate the entire earth. She, however, stood denuded of her might and weight when Lord Civa received her on His matted crest.
தணியார்மதிபரவின்னொடுவைத்தானிடமொய்த்தெம்
பணியாயவனடியார்தொழுதேத்தும்புளமங்கை
மணியார்தருகனகம்மவைவயிரத்திரளோடும்
அணியார்மணலணைகாவிரியாலந்துறையதுவே.4
தணி ஆர் மதி அரவின்(ன்),னொடு வைத்தான் இடம் - மொய்த்து,எம்
பணி ஆயவன் அடியார் தொழுது ஏத்தும் புளமங்கை,
மணி ஆர் தரு கனகம்(ம்) அவை வயிரத்திரளோடும்
அணி ஆர் மணல் அணை காவிரி - ஆலந்துறை அதுவே.
பொருள்:சிவபெருமான் தன் முடியின்மீது குளிர்ந்த பிறைச்சந்திரனைச் சூடி உள்ளான். பாம்பையும் தன் முடிமிசைவைத்துள்ளான். இவன் காவிரி நதியின்தென்கரையில் உள்ள புள்ளமங்கையில் உள்ள ஆலந்துறை என்னும் கோயிலில் எழுந்தருளியுள்ளான். இவ்வூரில்உள்ள காவிரி நதியானது,பொன்னையும்,வைரக்குவியல்களையும் அழகிய மணியோடுகொண்டு வந்து கரையில் சேர்க்கின்றன. இவ்வூரில் உள்ள அடியவர்கள் எமதுதொண்டுகளுக்கு உரியவன் இவனே என்று அங்குள்ள சிவனைத் தொழுது ஏத்தவணங்குகிறார்கள்.
குறிப்புரை: தணிஆர் மதி - குளிர்ந்தநிறை. இகரம் சாரியை. எம் பணி ஆயவன் - எமது தொண்டு விளங்குதற்குஇடமாயவன். எம்மைப்பணிகொள்ளும்தலைவனானவன்என்பாரும் உண்டு. பொன்னும்மணியும்முதலாயினமணலில் அணையும் காவிரி என்றதுஓடும்பொன்னும்ஒக்கநோக்கும் இயல்பு காவிரிக்குஉண்டென்பதால்அடியாரியல்புவிளக்கியவாறு. தணியார் - தண் சாரியை பெற்று வந்தது.
Lord Civan gave protection to the cool crescent moon on His matted hair. Also a serpent stays on His head. He is our Lord who accepts our devotional service. The river Cauvery deposits on its banks in Pulla-mangai gems, gold and heaps of diamonds along with the sand.
Note: Thani-aar-mati: It means the moon of decreased digits. Also the cool crescent moon.
தணியார் - தண்சாரியைபெற்றுவந்தது.
மெய்த்தன்னுறும்வினைதீர்வகைதொழுமின்செழுமலரின்
கொத்தின்னொடுசந்தாரகில்கொணர்காவிரிக்கரைமேல்
பொத்தின்னிடையாந்தைபலபாடும்புளமங்கை
அத்தன்னமையாள்வானிடமாலந்துறையதுவே.
மெய்த் தன் உறும் வினை தீர் வகை தொழுமின்! செழுமலரின்
கொத்தின்(ன்)னொடு சந்து ஆர் அகில் கொணர் காவிரிக்கரைமேல்,
பொத்தின்(ன்) இடை ஆந்தைபல பாடும் புளமங்கை
அத்தன் (ன்),நமை ஆள்வான்,இடம் - ஆலந்துறை அதுவே.
பொருள்: உயிர் உடலை அடுத்தற்குக் காரணமான வினைகள்நீங்கும் வகையில் பெருமானைநீவீர்வணங்குவீர்களாக. செழுமையான மலர்க் கொத்துக்களை உடைய சந்தனம்,அகில் முதலியவற்றைக் கொண்டு வரும் காவிரியாற்றின்கரைமேல் உள்ளதும் பொந்துகளில்ஆந்தைகள் பல தங்கிப்பாடுவதும் ஆகிய புள்ளமங்கையில் அமைந்த ஆலந்துறை என்னும் கோயிலைஇடமாகக்கொண்டுள்ளதலைவனாகிய சிவபெருமான் நம்மை ஆள்வான்.
குறிப்புரை: மெய் - உண்மையாகவே,அல்லது உடலானது உயிரை அடுத்தற்குக்காரணமாகியவினைதீரும் வகை என்றுமாம். .தொழுதற்கேற்றசாதனப்பொருள்களைத்தேடிச் செல்ல வேண்டாம். காவிரியே சந்தனம்,பூங்கொத்து,அகில் முதலியவற்றைக் கொணர்ந்து தருகின்றது. அவற்றைக்கொண்டு நீவிர் தொழ வேண்டும் என்பதுதான் கருத்து.
Ye devotees! You need not go out anywhere else, and search for materials needed to worship Lord Civan in Pulla-mangai. Because the river Cauvery carries sandalwood, eaglewood, bunches of flowers and deposits them on its banks in Pulla- mangai. These things you can utilise to worship our Lord Civan in Pulla-mangai. In this town owls are singing (hoot-screech) from its holes and hollows. Alanthurai is such a sacred place where our Lord Civan abides.
Note: The screech of owls, is mistakenly construed as inauspicious sign; but it is truly benedictory.
மன்னானவனுலகிற்கொருமழையானவன்பிழையில்
பொன்னானவன்முதலானவன்பொழில்சூழ்புளமங்கை
என்னானவனிசையானவனிளஞாயிறின்சோதி
அன்னானவனுறையும்மிடமாலந்துறையதுவே.6
மன் ஆனவன்,உலகிற்கு ஒரு மழை ஆனவன்,பிழையில்
பொன் ஆனவன்,முதல்ஆனவன்,பொழில்சூழ்புளமங்கை
என்ஆனவன்,இசை ஆனவன்,இள ஞாயிறின் சோதி
அன்னான் அவன்,உறையும்(ம்) இடம் - ஆலந்துறை அதுவே.
பொருள்: சிவபெருமான் விரும்பி உறையும் இடம் புள்ளமங்கையில் உள்ள ஆலந்துறைஇவன் உலகிற்குத்,தான் ஒருவனேமன்னனாய்விளங்குபவன். மழையாய்ப்பயிர்களைவிளைவிப்பவனும் அவனே. குற்றமற்றநால்வகைப்பொன்னில் சிறந்த சாம்பூநதம்ஆகியவனும் அவனே. அவனே எனக்குத் தலைவன். அவன் இசைவடிவாய்விளங்குபவன். அவன் இள ஞாயிற்றின்ஒளியைப் போன்ற ஒளியை உடையவன். புள்ளமங்கை சென்று ஆலந்துறையில்வீற்றிருக்கின்றசிவனைவணங்குவீர்களாகுக. .
குறிப்புரை: உலகிற்கு ஒரு மன்னனானவன்மழையானவன்எனக்கூட்டுக,பிழையில் பொன் - குற்றமறஓடவிட்டபொன்னாகியசாம்பூநதம் முதலியன. என் ஆனவன் - எனக்குத் தலைவன் ஆனவன்.
Lord Civan is the king; He is rain unto the earth; He is flawless Gold; He is the beginning and first; He is my very own; He is music; He is like unto the radiance of the rising sun. He is at Aalanthurai in Pulla-Mangai girt with groves, where He abides in Grace.
Note: The word 'isai' means both music and renown.
முடியார்தருசடைமேன்முளையிளவெண்மதிசூடிப்
பொடியாடியதிருமேனியர்பொழில்சூழ்புளமங்கைக்
கடியார்மலர்புனல்கொண்டுதன்கழலேதொழுதேத்தும்
அடியார்தமக்கினியானிடமாலந்துறையதுவே.
முடி ஆர் தரு சடைமேல் முளை இளவெண்மதி சூடி,
பொடி ஆடிய திருமேனியர்,பொழில்சூழ்புளமங்கை,
கடி ஆர் மலர் புனல் கொண்டு தன் கழலே தொழுது ஏத்தும்
அடியார் தமக்கு இனியான்,இடம் - ஆலந்துறை அதுவே.
பொருள்: சிவபெருமான் விரும்பி உறையும் இடம் சோலைகளால்சூழப்பெற்றபுள்ளமங்கையில் உள்ள ஆலந்துறை என்னும் கோயில் ஆகும். இவன் தன் தலைமேல் விளங்கும்சடையின் மீது முளை போன்ற இளம் பிறையைச் சூடி உள்ளான். தன் இருமேனியில்வெள்ளிய திருநீறு அணிந்துள்ளான். மணம் கமழும்மலர்களையும் புனிதமான நீரையும்கொண்டு தன் திருவடிகளை வணங்கி ஏத்தும் அடியார்களுக்குஇனியனாய்விளங்குகின்றான். அவன் இருக்கும் இடம் சென்று அவனை வழிபாடு செய்வீராக.
குறிப்புரை: முளைஇளவெண்மதி - முளைவடிவான இளைய பிறை. பொடி - திருநீறு. திருமேனியர், இனியான் என ஒருமை பன்மை மயங்கி வந்தது,செய்யுளாதலின்.
Lord Civan wears on His matted crest the young white crescent moon. His divine body is smeared with the holy ash. He is dear to His devotees of Pulla-Mangai surrounded by groves, who hail nothing but His ankleted Feet, with fragrant flowers and holy water. His sacred shrine is Aalanthurai.
இலங்கைமனன்முடிதோளிறவெழிலார்திருவிரலால்
விலங்கல்லிடையடர்த்தானிடம்வேதம்பயின்றேத்திப்
புலன்கள்தமைவென்றார்புகழவர்வாழ்புளமங்கை
அலங்கல்மலிசடையானிடமாலந்துறையதுவே.8
இலங்கை மனன்முடிதோள் இற,எழில் ஆர்திருவிரலால்
விலங்கல்(ல்) இடை அடர்த்தான் இடம் - வேதம் பயின்று ஏத்திப்,
புலன்கள்தமைவென்றார்புகழவர் வாழ் புளமங்கை,
அலங்கல்மலிசடையான் இடம் - ஆலந்துறை அதுவே.
பொருள்: சிவபெருமான் விரும்பி உறையும் இடம் புள்ளமங்கையில் உள்ள ஆலந்துறைஎன்னும் கோயிலாகும். இவன் மாலைகள்அணிந்துள்ளான். சடை முடியை உடையவன். இவ்வூரில்புலன்களை வென்ற புகழுடையஅந்தணர்கள்,வாழ்கின்றனர். வேதங்களைமுறையாகக்கற்றறிந்தமறையவர்கள் அவனை ஓதித்துதிக்கின்றார்கள். இலங்கை மன்னனாகிய தசக்கிரீவன் தலைகளும் தோள்களும் நெறிய சிவபெருமான் தன் எழுச்சிபொருந்திய அழகிய கால் விரலால் மலையின் உச்சியில்ஊன்ற,அவனைக் கயிலை மலையிடைஅகப்படுத்திஅடர்த்தான். இவன் ஊரை அடைந்து இவனை ஏத்தித்தொழுவீர்களாக.
குறிப்புரை: மனன் - மன்னன். தொகுத்தல் விகாரம். எழில் - எழுச்சி. விலங்கலிடை - மலையின் அடியில். புலன்கள் தம்மை வென்றார் - புலன்களாகியபொறிகளைத்தன்வயமாக்க விடாமல் வென்ற முனிவர்கள். அலங்கல் - மாலை.
The King of Sri Lanka (Dasakreevan) was trying to lift and keep aside mount Kailas, abode of Lord Civan. Civan pressed the mountain with His beautiful toe slightly. The head and shoulders of the King got crushed. Pulla-Mangai is the town where dwell renowned sages, the conquerors of the five sense - organs, who practise the Vedas and hail Him. Behold the shrine at Aalanthurai where abides Lord Civan whose matted crest is decked with plenty of sweet smelling garlands.
செறியார்தருவெள்ளைத்திருநீற்றின்றிருமுண்டப்
பொறியார்தருபுரிநூல்வரைமார்பன்புளமங்கை
வெறியார்தருகமலத்தயன்மாலுந்தனைநாடி|
அறியாவகைநின்றானிடமாலந்துறையதுவே.9
செறி ஆர் தரு வெள்ளைத்திருநீற்றின்திருமுண்டப்
பொறி ஆர் தரு புரிநூல்வரைமார்பன்புளமங்கை,
வெறி ஆர்தருகமலத்து அயன் மாலும்,தனை நாடி
அறியா வகை நின்றான் இடம் - ஆலந்துறை அதுவே.
பொருள்: சிவபெருமானுக்கு உரிய இடம் புள்ளமங்கையில் உள்ள ஆலந்துறையாகும். இவன் வெண்மையானதிருநீற்றை மூன்று பட்டைகளாய்ச்செறியப்பூசியவன். உத்தம இலக்கணம் ஆகிய மூன்று வரி பொருந்திய முப்புரி நூல் அணிந்த மலை போன்ற திண்ணியமார்பினை உடையவன். மணங்கமழும் தாமரை மலர்மேல்உறைகின்றநான்முகனும், திருமாலும்தன்னைத் தேடி அறியாவகை ஓங்கி அழலாய்நின்றவன். அவன் இருக்கும் இடம் சென்று அவனை வணங்குவீர்களாக.
குறிப்புரை: செறி ஆர்தரு - நெருங்குதல் பொருந்திய. திருமுண்டம் - அழகிய திரிபுண்டரம். பொறியார்தருமார்பன்எனக்கூட்டுக. உத்தம இலக்கணம் பொருந்திய மார்பு (சிந்தாமணி1462, 1706). வெறி - மணம். அறியாவகை நின்றான் - (அவர்கள்) ஞானக்கண்ணினிற்சிந்தையில்நாடவேண்டியபதியைஊனக்கண்ணினிற்காணலுற்றார்களாதலின் அறியா வண்ணம் சோதிவடிவாய்நின்றவன்.
Lord Civan's sacred forehead bears the white and dense strips of the holy ash. The lofty and hill-like chest of the Lord of Pulla-Mangai is adorned with the three strips of sacred thread. Behold the sacred temple at Aalanthurai of the Lord who stood incomprehensible to the questing Brahma of the fragrant lotus and Vishnu.
நீதியறியாதாரமண்கையரொடுமண்டைப்
போதியவரோதும்முரைகொள்ளார்புளமங்கை
ஆதியவர்கோயிறிருவாலந்துறைதொழுமின்
சாதிம்மிகுவானோர்தொழுதன்மைபெறலாமே.10
நீதி அறியாதார்அமண்கையரொடுமண்டைப்
போதியவர் ஓது(ம்) உரை கொள்ளார்புளமங்கை
ஆதிஅவர் கோயில்-திரு ஆலந்துறைதொழுமின்!
சாதி(ம்) மிகு வானோர் தொழு தன்மை பெறல்ஆமே.
பொருள்: நீதி அறியாத அமணராகிய கீழ் மக்களும்பிச்சைப்பாத்திரத்தைக் கையில் ஏந்திப்போதி மரத்தடியில்உறையும்புத்தமதத்தினரும் கூறும் உரைகளைமெய்ம்மைஎனக்கொள்ளாதுஎல்லாப்பொருள்கட்கும்ஆதியானவனாகியபுள்ளமங்கையில் உள்ள ஆலந்துறைக் கோயிலில் உறையும்'இறைவனைத்தொழுமின்;பல்வேறு பிரிவினராகியதேவர்கள்தொழும் தன்மை பெறலாம்.
குறிப்புரை: அமண்கையர் - அமணர்களாகிய கீழ்மக்கள். மண்டைப்போதியவர் - மண்டையை (பிச்சைக்கலத்தை)க்கையிலுடைய புத்தர். சாதி மிகுவானவர் - முப்பத்து மூன்று கோடியாகச்சாதியினையுடையதேவர்கள்.
The Primal Lord Civan is abiding at Pulla-Mangai. Ignoring the words of the samanars ill-versed in Neeti, and the Buddhists who carry begging-bowls, do adore His sacred shrine at.Aalanthurai. If you adore it, you will be adored by celestial folks of a multitudinous order.
Note: The just and righteous path, An exhortation addressed to the general public.
பொந்தின்னிடைத்தேனூறியபொழில்சூழ்புளமங்கை
அந்தண்புனல்வருகாவிரியாலந்துறையரனைக்
கந்தம்மலிகமழ்காழியுட்கலைஞானசம்பந்தன்
சந்தம்மலிபாடல்சொலியாடத்தவமாமே.11
பொத்தின்(ன்) இடைத் தேன் ஊறியபொழில்சூழ்புளமங்கை
அம்தண்புனல்வரு காவிரி ஆலந்துறைஅரனைக்
கந்தம் மலி கமழ் காழியுள் கலை ஞானசம்பந்தன்
சந்தம் மலி பாடல் சொலி,ஆடத்,தவம் ஆமே.
பொருள்: மரப்பொந்துகளில்தேனீக்கள்சேகரித்த தேன் மிகுதியான அளவில் கடைக்கும்பொழில்கள்சூழ்ந்ததும்,அழகிய தண்மையானநீரைக் கொணர்ந்து தரும் காவிரிக்கரையில்உள்ளதும் ஆகிய புள்ளமங்கையில் உள்ள ஆலந்துறைஇறைவனை,மணம் நிறைந்து கமழும்காழிப்பதியில்தோன்றிய கலை நலம் உடைய ஞானசம்பந்தன்பாடிய சந்தம்நிறைந்த இத்திருப்பதிகப் பாடல்களை ஓதிப்பரவசமாய்ஆடத்,தவம் கைகூடும்.
குறிப்புரை: பொந்து - மரப்பொந்துகள். இப்பதிகச் சந்தம். படிக்குங்காலத்தேயேபரவசமாய் ஆட வருந்தன்மையது என்பது குறித்தவாறு.
Verily does it constitute penance to sing out and dance, to the metrical songs of Gnaanasambandan, the one that had mastered the scriptures. He hails from Kaazhi girt with gardens. His hymns celebrate Hara, entempled in Aalanthurai at Pulla-Mangai on the banks of the cool Cauvery river. Pulla-mangai is rich in honey stored by bees in holes and hollows.
Note: Metrical songs: Songs composed in unison with or conforming to the classical chhandas.
திருச்சிற்றம்பலம்
16ஆம் பதிகம் முற்றிற்று
சிவமயம்
17.திரு இடும்பாவனம்
திருத்தலவரலாறு:
திரு இடும்பாவனம் என்ற திருத்தலமானதுசோழநாட்டுக்காவிரித்தென்கரைத் தலம். நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டியிலிருந்தும்முத்துப்பேட்டையில் இருந்தும் பேருந்துகளில்செல்லலாம். இடும்பன்பூசித்துப்பேறுபெற்ற தலம் ஆதலின்இப்பெயர் பெற்றது. இடும்பனதுதலைநகரமாகியகுன்றளூரும் அருகாமையில் இருப்பது அறியத்தக்கது. இங்கு வெண்மை நிறமுடைய வெள்ளை விநாயகர் விசேஷமானது. இறைவரதுமணவாளக் கோலம் மூலத்தானத்தின் பின்புறம் அமைந்துள்ளது. அகத்தியர்க்கு காட்சி கொடுத்த தலம். சுவாமி பெயர் சற்குணநாதர். அம்மை பெயர் மங்கள நாயகி. தீர்த்தம் சமூகபுஷ்கரணி. இத்தலத்தைப்பற்றியதாகக் கல்வெட்டு ஒன்றும் அறியக்கூடவில்லை.
பதிக வரலாறு:
சிவபெருமான் மிக விரும்பிய தலமாகிய *திருக்கடிக்குளம்” என்னும் தலத்தைவணங்கிப்பிள்ளையார் இடும்பாவனத்தைஎய்தினார்கள். அங்கே எழுந்தருளியசுவாமிகள் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் சற்குணநாதரை’மனமார்தரு'என்னும் பதிகம் பாடி வணங்கினார்கள். இதில் இடும்பன்தலைநகரமாகியகொடிமாடக்குன்றளூரையும்சேர்த்துக்குறிப்பிட்டிருத்தல் காண்க.
THE HISTORY OF THE PLACE
17. THIRU-IDUM-BAA-VANAM
The sacred city of Thiru-idum-baa-vanam is in Chola Naadu on the south bank of river Cauvery. It is accessible by bus from Thiruththuraippoondi and Muthuppettai in Naagai district. It got its name because Idumban offered worship and got his wish fulfilled here. It may be noted that Idumban's capital of Kunraloor is near here. A white-coloured 'Vellai Vinaayakar' is of special note here. The Lord's wedding scene is seen at the back of the sanctum sanctorum. This is also the sacred place where sage Agasthiyar had the vision of the Lord. The God's name is Sargunanaathar and that of the Goddess is Mangalanaayaki. The holy ford is known as Samookapushkarani. No stone inscription pertaining to this temple is known.
INTRODUCTION TO THE HYMN
Idumban was the leader of Lord Skanda's hosts. His capital is Kodi-maada-k- kundra-loor. This is situated near Idumbaa-vanam. Idumban offered worship to Lord Civan in Idumbaa-vanam and was graced by this Lord. Hence, the place is called Idum-baa-vanam. Thiru-k-kadi-k-kulam is one of most desired place for Lord Civan. Our saints Thiru-Gnaanasambandar after offering worship at this shrine came to Thiru-Idum-baa-vanam. Here he offered worship to Lord Civan and sang the above hymn.
திருச்சிற்றம்பலம்
1 7.திருஇடும்பாவனம்
பண : நட்டபாடை
ராகம் : கம்பீரநாட்டை
மனமார்தருமடவாரொடுமகிழ்மைந்தர்கள்மலர்தூய்த்
தனமார்தருசங்கக்கடல்வங்கத்திரளுந்திச்
சினமாரதருதிறல்வாளெயிற்றரக்கன்மிகுகுன்றில்
இனமாதவரிறைவர்க்கிடமிடும்பாவனமிதுவே.
மனம் ஆர்தருமடவாரொடு மகிழ் மைந்தர்கள் மலர் தூய்,
தனம் ஆர்தருசங்கக்கடல்வங்கத்திரள் உந்தி,
சினம் ஆர்தருதிறல்வாள்எயிற்றுஅரக்கன்மிகு,குன்றில்
இன மாதவர்இறைவர்க்கு இடம் - இடும்பாவனம் இதுவே.
பொருள்: சிவபெருமான் குன்றளூர் என்னும் தலத்தில்எழுந்தருளியுள்ளார். வளம் மிக்க குன்றளூர்இடும்பன் என்னும் அரக்கனுக்குரியது. இடும்பன் சினம் மிக்க வலிய ஒளி பொருந்திய பற்களை உடையவன். கூட்டமாகிய முனிவர் குழாங்கள் இங்குள்ள சிவபெருமானைவணங்குகிறார்கள். சிவபெருமானுக்குரிய இடம் இடும்பாவனமும் ஆகும்.இங்குள்ள சிவபெருமானைமகழ்ச்சி மிக்க இளைஞர்கள்,தங்கள் மனத்தால்விரும்பப்பெற்ற மனைவியரோடு மலர் தூவி வழிபாடு செய்கிறார்கள். இறைவன்,அவர்கள் பொருட்செல்வம் பெற்றுய்வதற்கு அருள் புரிகின்றான். இங்கு,சங்குகளை உடைய கடலில் கப்பல்கள் வந்து கொண்டிருக்கும். அக்கப்பல்களைக் கடல் அலைகள் உந்தி வந்து கரை சேர்க்கின்றன.
குறிப்புரை: மனம் ஆர்தருமடவார் - மனம் பொருந்திய சிறு பெண்கள். குன்றில் - குன்றளூரில். இது இடும்பன் தலைநகரம்,மத்தியிலுள்ள தனம் ஆர்தருகுன்றில்,உந்தி மிகு குன்றில்,எனத்தனித்தனிக்கூட்டுக. போக காமிகளாகிய காதலர்கள் அருச்சனை செய்து அதற்குக்காரணமாகியதனத்தைஅடைகின்றனர். கடலில் அலைகள் இருப்பதால் கப்பல்களை உந்தி மிகுகின்றன. அரக்கன் - இடும்பன். சினம் ஆர்தரு,திறல்வாள்,எயிறு என்பனஅரக்கனுக்குத் தனித்தனியே அடைமொழியுமாம். இனமாதவர்இறைவர் - கூட்டமாகியமுனிவர்களுக்குஇறைவர்;என்றது சிவபெருமானை.
The bright-toothed fierce and mighty Raakshashaa Idumban's capital is Kundraloor. It stands close to Idum-baa-vanam. To this seashore town, ships ply now and then. The sea shells (chunks-) are found in plenty here. Young women with their beloved youthful and joyous husbands hail the Lord here in loving devotion offering flowers. This is Idum-baa-vanam where abides Lord Civan hailed by great tapaswis galore.
Note: The Raakshasha: Idumpan; Kundru: Kundralur, the abode of Idumpan.
மலையார்தருமடவாளொருபாகம்மகிழ்வெய்தி
நிலையார்தருநிமலன்வலிநிலவும்புகழொளிசேர்
கலையார்தருபுலவோரவர்காவன்மிகுகுன்றில்
இலையார்தருபொழில்சூழ்தருமிடும்பாவனமிதுவே.2
மலையார் தரு மடவாள் ஒரு பாகம் மகிழ்வு எய்தி,
நிலை ஆர்தரு நிமலன் வலி நிலவும்புகழ்ஒளி சேர்,
கலை ஆர்தருபுலவோர் அவர் காவல் மிகு,குன்றில்
இலை ஆர்தருபொழில்சூழ்தரும்இடும்பாவனம் இதுவே.
பொருள்: சிவபெருமான்,குன்றளூரைஅடுத்துள்ள இலைகள் அடர்ந்த சோலைகளால்சூழப்பட்டஇடும்பாவனத்தில்எழுந்தருளி உள்ளான். இவன்,இமவான்மகளாய்மலையிடைத் தோன்றி வளர்ந்த பார்வதி தேவியைஒருபாகமாகக் கொண்டு,மகிழ்ந்து நிலையாக வீற்றிருந்துஅருள்புரிகின்றான். இவ்வூரில்குற்றமற்றசிவபெருமானது வெற்றி விளங்குகின்றது. இங்கு கலை வல்ல புலவர்கள் தங்களுடைய புகழால்ஒளிமிக்கவர்களாய்விளங்குகிறார்கள். அவர்கள்,இடைவிடாது எல்லாக்கலைகளையும் பயின்று கொண்டிருப்பதால்அவ்வூர் காவல் மிக்குவிளங்குகின்றது.
குறிப்புரை: மலையார் - மலையரசனாகியஇமவான். தரு - பெற்ற,மலை ஆர்தருமடவாள்எனப் பிரித்து மலையிடத்துவசிக்கின்றஉமாதேவிஎன்பாரும்உளர். நிலையார்தருநிமலன் - என்றும் எங்கும் நிற்றலையுடையநித்தியப்பொருளாகிய இறைவன். ஒளிசேர்இடும்பாவனம்,பொழில்சூழ்தரும்இடும்பாவனம்எனக்கூட்டுக. கலைஆர்தருபுலவோர் - ஒளிமிகுந்ததேவர்கள்.
Lord Civan who is concorporate with His Consort Umaa Devi, daughter of Himaalayan King, is joyfully entempled in Idum-baa-vanam. Pervading everywhere, He is omnipresent and omnipotent (எங்கும்நிற்றலைஉடையநித்தியப்பொருளானவன்). Idum-baa-vanam is surrounded by leafy groves and fostered with care by wise men well-versed in scriptures.
Note: Nimalan - The One who is everfree from malas. Siva is so hailed. He is also Amalan, the One who rids others of their malas.
சீலம்மிகுசித்தத்தவர்சிந்தித்தெழுமெந்தை
ஞாலம்மிகுகடல்சூழ்தருமுலகத்தவர்நலமார்
கோலம்மிகுமலர்மென்முலைமடவார்மிகுகுன்றில்
ஏலங்கமழ்பொழில்சூழ்தருமிடும்பாவனமிதுவே.3
சீலம் மிகு சித்தத்தவர் சிந்தித்து எழும் எந்தை,
ஞாலம் மிகு கடல் சூழ்தரும்உலகத்தவர் நலம் ஆர்,
கோலம் மிகு மலர்மென்முலைமடவார் மிகு,குன்றில்
ஏலம் கமழ் பொழில்சூழ்தரும்இடும்பாவனம் இதுவே.
பொருள்: சிவபெருமான் எழுந்தருளிய இடம் திரு இடும்பாவனம் ஆகும். இங்கு,தவஒழுக்கத்தால் மேம்பட்ட முனிவர்கள்எம்தந்தையாகியசிவபெருமானைச் சிந்தித்து வணங்கி வருகிறார்கள். நிலப்பரப்பைக் காட்டிலும் அதிகப்பரப்பை உடையது கடல்.இக்கடலால்சூழப்பட்டதுதிருஇடும்பாவனம் ஆகும். இங்கு சான்றோர்கள் பலர் வாழ்கின்றனர். நற்குணங்களும்,அழகும்,மலர் போலும் மென்மையான தனங்களும் உடைய பெண்கள் இவ்வூரில்மிக்குஉள்ளார்கள். இவ்வூர்குன்றளூரைச் சார்ந்து உள்ளது.மணம்கமழும்சோலைகள் பல இவ்வூரைச் சுற்றி உள்ளன.
குறிப்புரை: சீலம் - காட்சிக்கெளியனாந் தன்மை. இயமம் முதலான தவஒழுக்கங்களும் ஆம். ஒழுக்கம் என்றும் ஆம். சிந்தித்தெழும் எந்தை என்றது,கொழுநற்றொழுதெழுவாள்” போல முனிவர்கள்சிந்தித்துக்கொண்டே எழுவர்என்பதாம். அன்றி ஒழுக்கம் மிக்க மனத்தை உடையவர்களைத்திருவுள்ளத்தடைத்துத்திருவோலக்கம்கொண்டருளுகின்ற எந்தை. ஞாலம் மிகு கடல் - நிலத்தின்பரப்பைக் காட்டிலும் மிகுந்திருப்பதாகிய கடல். நிலப்பரப்புக்கால்பங்கும்,நீர்ப்பரப்புமுக்கால்பங்கும் என்பது மரபாகலின். கோலம் - அழகு. நலமார்இடும்பாவனம்எனக்கூட்டுக. உலகத்தவர்நன்மையடைதற்கு(முத்தியின்பத்தைஅடைதற்கு) இடமாகியஇடும்பாவனம்.
Our father Lord Civan is invoked when holy men poised in righteousness, rise up and contemplate on Him. He abides at Kundru, the town where beauteous and bashful damsels of flower-soft breasts, dwell. It is by the grace of this Lord, men on this earth which is surrounded by the vast sea receive all wealth. Verily is this Idum-baa- vanam, surrounded by cardamom gardens. The fragrance from these groves fills all around.
Note: A saivite should always chant the name of Lord Civa when he wakes up. He should open his day with the key - Lord Civa's name.
பொழிலார்தருகுலைவாழைகளெழிலார்திகழ்போழ்தில்
தொழிலான்மிகுதொண்டரவர்தொழுதாடியமுன்றில்
குழலார்தருமலர்மென்முலைமடவார்மிகுகுன்றில்
எழிலார்தருமிறைவர்க்கிடமிடும்பாவனமிதுவே.4
பொழில்ஆர்தரு,குலைவாழைகள் எழில் ஆர் திகழ் போழ்தில்,
தொழிலால் மிகு தொண்டர் அவர் தொழுது ஆடிய முன்றில்,
குழல் ஆர்தருமலர்மென்முலைமடவார் மிகு,குன்றில்
எழில் ஆர்தரும்இறைவர்க்கு இடம் - இடும்பாவனம் இதுவே.
பொருள்: சிவபெருமான்,அழகுக்கு அழகு செய்யும் இடும்பாவனத்தில்எழுந்தருளியுள்ளான். அது குன்றளூரைஅடுத்துள்ளது. இவ்வூரைச்சுற்றிக்குலைகள்தள்ளிய செழிப்பான வாழைத்தோட்டங்கள் உள்ளன. மிகுதியான சிறப்புடைய தொண்டர்கள் அழகு திகழும்காலையிலும்,மாலையிலும்இங்குப் பணி செய்கின்றனர்,பணி செய்வதால் உண்டான மகிழ்ச்சியில் இந்தத் தொண்டர்கள் அவரவர்கள்வீட்டின்முன் பக்கத்தில் ஆடிப்பாடிஇறைவனைத்தொழுகின்றார்கள். இவ்வூரின்கண்மலர்சூடிய கூந்தலை உடைய மென்முலைமடவார்கள் நிறைந்து விளங்குகின்றார்கள்.
குறிப்புரை: முன்றில்இடும்பாவனம் இது எனக்கூட்டுக. சோலைகளில்விளங்குகின்ற குலை வாழைகள்அழகுமிகுகின்றகாலத்துத் தொண்டர்கள் தொழுது ஆடுகின்ற முன்றிலையுடைய குன்று எனவும், அத்தகையகுன்றில்இறைவர்க்கு இடம் இத்தகைய இடும்பாவனம் எனவும் கொண்டு கூட்டிப் பொருள் கொள்க. குலைவாழைகள்அழகோடுகூடிவிளங்கும்போது மஞ்சள் வெயிற்படும்மாலைக் காலம். அப்போது அடியார்கள் தொழுது ஆனந்த மேலீட்டால் ஆடுகின்றார்கள் என்பது. குழலார்தருமலர்மென்முலைமடவார் - குழலின்கண் பொருந்திய மலரையும் மெல்லிய முலையினையுமுடையமடவார்என்கின்றதுவேட்டுவமகளிரை. எழில் - அழகு. எழுச்சியுமாம்.
At the time, when the banana bunches on the plantain trees ripen with spectacular splendour, servitors - renowned for their excellence, hail Him and dance in the foreyard of Kundru. It is the town where dwell damsels of hunter families with delicate breasts, and whose locks are decked with fragrant flowers. Veril is the temple at Idum-baa-vanam the place where our splendorous Lord of elegant charm resides.
பந்தார்விரலுமையாளொருபங்காகங்கைமுடி மேல்
செந்தாமரைமலர்மல்கியசெழுநீர்வயற்கரைமேல்
கொந்தார்மலர்புன்னைமகிழ்குரவங்கமழ்குன்றில்
எந்தாயெனவிருந்தானிடமிடும்பாவனமிதுவே.5
“பந்து ஆர் விரல் உமையாள் ஒரு பங்கா! கங்கை,முடி மேல் -
செந்தாமரைமலர்மல்கியசெழுநீர் வயல் கரைமேல்,
கொந்துஆர்மலர்ப்புன்னை,மகிழ்,குரவம்,கமழ் குன்றில் -
எந்தாய் என,இருந்தான் இடம் - இடும்பாவனம் இதுவே.
பொருள்: குன்றளூரில்எழுந்தருளிஎந்தாய்எனப்போற்றப்படுகின்ற சிவபெருமான் விரும்பி உறையும் இடம் திருஇடும்பாவனம் ஆகும். இவ்வூரிலசெந்தாமரை மலர்கள் நிறைந்த நீர் நிரம்பிய நிலைகள் உள்ளன. இங்குள்ள வளமான வயல்களின்கரைமேல்கொத்துக்கொத்தாக மலர்ந்த பூக்களைக் கொண்ட புன்னை மரங்கள் பல உள. மகிழ்,குரவம்மலர்ஆகியனவும்பூத்துக்குலுங்குகின்றன. இந்த மணம் இவ்வூரைச்சுற்றிக்கமழ்ந்து கொண்டு இருக்கின்றது. இவ்வூரில்எழுந்தருளிய சிவபெருமான்,பந்தாடும்கைவிரல்களை உடைய உமையம்மையின் கணவன் ஆவான். அவன்தன்சடைமுடியில் கங்கை நதியைஅணிந்துள்ளான். இவனைச் சென்று அடைந்து வழிபடுவீர்களாக.
குறிப்புரை: பந்தார்விரல் உமையாள் ஒரு பங்கா - பந்தணைமெல் விரலி எனவும்,அம்மைக்கொரு நாமம் உண்மையைக்குறிப்பித்தவாறு. பங்காக என்பது பங்காஎனச்செயவென்னெச்சத்தீறு கெட்டது. பங்காகக்கரைமேல்,குன்றில் இருந்தான் எனக்கூட்டுக. கங்கையைமுடிமேற்கொண்டு என ஒரு சொல் வருவித்து முடிக்க. வயற்கரைமேல்புன்னை,மகிழ்குரவம்,கமழ்குன்றில் என்றது இடும்பாவனத்தலம்மருதநிலமும் நெய்தல் நிலமும்தம்முள்மயங்கியிருந்தமைபுலனாம். குன்று என்பது குன்றளூர் என்பதன் மரு௨. எந்தாய் என - அனைத்துயிரும்எமது தாயே என்ன. எந்தை என்பதன் விளியுமாம். தாயும்தந்தையுமாகஒர்உருவிலேயே நின்று அருள்வதுஇறைவற்குச்சிறப்பியல்பாகலின்எந்தாய்எனச் சொல் ஒன்றானேநயம்தோன்றக்கூறியவாறு'தோடுடையசெவியன்'என்றதற்கேற்பஎந்தாய் என இருந்தான் என ஆண்பால் முடிபேற்றவாறு.
Lord Civan who is concorporate with Uma whose fingers sport a ball, bears on His crest the Ganga river. He abides at the balmy kundru in whose watery fields red lotuses bloom in plenty; Their ridges are dotted with 'punnai' trees burgeoning in bunches as well as makiza and kuravam flowers. Behold, verily is this Idum-baa- vanam, the shrine where He abides with all devotees hailing Him thus: "O our Father who is also our Mother!"
Note: Makizh - A flower (Mimusops clengi) dear to Lord Civa; Enthaai The word means 'our father'. It also means 'our mother'. Civa is 'Ammai-Appar' - both mother and father.
நெறிநீர்மையர்நீள்வானவர்நினையுந்நினைவாகி
அறிநீர்மையிலெய்தும்மவர்க்கறியும்மறிவருளிக்
குறிநீர்மையர்குணமார்தருமணமார்தருகுன்றில்
எறிநீர்வயல் புடை சூழ்தருமிடும்பாவனமிதுவே.6
நெறி நீர்மையர்,நீள் வானவர்,நினையும் நினைவு ஆகி,
அறி நீர்மையில் எய்தும்(ம்) அவர்க்கு அறியும்(ம்) அறிவு அருளி,
குறி நீர்மையர் குணம் ஆர்தரு மணம் ஆர்தருகுன்றில்,
எறி நீர் வயல் புடை சூழ்தரும்இடும்பாவனம் இதுவே.
பொருள்: சிவபெருமான் விரும்பி விளங்கும் இடம் இடும்பாவனம் ஆகும். இது குன்றளூரைஅடுத்து உள்ளது. இவ்வூரில் தூய சிந்தனையைத் தூண்டும் மணத்தைவீசுகின்ற மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன.இடும்பாவனத்தில் உள்ள இறைவர்,தவஒழுக்கத்தால் சிறந்த முனிவர்கள்,உயர்ந்த தேவர்கள் ஆகியோர் நினையும்நினைவுப்பொருளாகிவிளங்குகின்றான். ஞானத்தால்தொழும் மேலான ஞானியர்கட்குத் தன்னை அறியும் அறிவைநல்குகின்றான். இவன் சிவலிங்கம் முதலான குறிகளில் இருந்து அருள்புரிகின்றான்.
குறிப்புரை: நெறிநீர்மையர் - ஒழுக்கத்தின்கண் நிற்கும் இயல்பினையுடையமுனிவர்கள்,முனிவர்க்கும்தேவர்க்கும்தியானப்பொருளாய் இருப்பார் என்பது குறித்தவாறு. இவர்களைக் காட்டிலும் உயர்ந்தவர்கள்ஞானிகள். அவர்களை'அறிநீர்மையினில் எய்தும் அவர்'எனக்குறித்தார்கள். அதாவது அறிவானும்அறியப்படும் பொருளும் அறிவுமாகியமூன்றும்தனிநிலையற்றுஒன்றாயிருந்து அறியும் பரமஞானிகளுக்குஅறியும் அறிவருளி - சிவமாகியதன்னையறியத் தக்க அறிவும் அருள,என்றது இறைவன் அறியுமாறு அறிந்தாலன்றிஆன்மாக்கள்தாமாக அறிந்து கொள்ளும் ஆற்றல் இல்லாதன என்பது. உணருமாஉணரே'என்பதும் இப்பொருட்டு. குறிநீர்மையர் - அங்ஙனம் அவனருளேகண்ணாகக் காணும் குறிக்கண்நிற்கும் சிவஞானிகள். குணமார்தரும் - இறைவனுக்குள்ள ஐந்தொழில் ஆற்றுதல் ஒழிந்த ஏனைய குணங்களைப் பொருந்த வைக்கும்.
He becomes the very form meditated upon by those who are poised in the righteous way, and by the supernal beings. Lord Civan confers on sages and seers the supreme knowledge. This will enlighten them to know the Divine path to salvation and finally to reach Him (ஆன்மாஅறிவித்தால்அறியும்பொருள். தானாகஅறியும்ஆற்றல்அதற்கில்லை. அறிவானும், அறியப்படும்பொருளும், அறிவும்ஆகியஇம்மூன்றையும்ஒரேபொருளாகஉள்ளத்தில்உணரக்கூடியஆற்றல்வாய்ந்தவர்கள்பரமஞானிகள். இவர்களுக்குச்சிவபெருமான்தன்னைஅறியத்தக்கஅறிவைஅறிவுறுத்துகிறவன்). Idum-baa-vanam is surrounded by fields overflowing with waters. Cool fragrant air flows from the hill. In such a sacred and fascinating Idum-baa-vanam Lord Civa graces those saints and seers with spectacular powers (except His five fold activities).
Note: His divine symbols: The Civa-linga, the holy ash, the matted hair, the beads of Rudraksha.
நீறேறியதிருமேனியர்நிலவும்முலகெல்லாம்
பாறேறியபடுவெண்டலைகையிற்பலிவாங்கக்
கூறேறியமடவாளொருபாகம்மகிழ்வெய்தி
ஏறேறியவிறைவர்க்கிடமிடும்பாவனமிதுவே.7
நீறு ஏறியதிருமேனியர்,நிலவும்(ம்) உலகு எல்லாம்
'பாறுஏறியபடுவெண்தலை கையில் பலி வாங்க,
கூறு ஏறியமடவாள்ஒருபாகம் மகிழ்வு எய்தி,
ஏறு ஏறியஇறைவர்க்கு இடம் - இடும்பாவனம் இதுவே.
பொருள்: சிவபெருமானுக்குரிய இடம் இடும்பாவனம் ஆகும். இவன் திருமேனியில் நீறு அணிந்துள்ளான். விளங்கும் உலகெங்கணும் சென்று அன்பர்கள் இடும் உணவைப்பிரமகபாலத்தில்பெறுகின்றான். அந்தப் பிரம கபாலம் பருந்து உண்ணவரும்தசையோடு கூடிய காய்ந்த மண்டை ஓடு ஆகும். உமையம்மையைத் தன் திருமேனியின் ஒரு கூறாகியஇடப்பாகத்தில்ஏற்றுக்கொண்டுள்ளான். அவன் விடைமீது ஏறி மகிழ்ந்து அடியார்களுக்குஅருள் செய்ய வருகின்றான். இவனை அடைந்து வணங்குவீர்களாக.
குறிப்புரை: ஏறிய - மிகுந்த. பாறு - பருந்து. தலை - பிரமகபாலம். கூறு ஏறியமடவாள் - தமது திருமேனிக்கண்ணேயே ஒரு பாதியாயமைந்தஉமையாளை. ஒருபாகம்மகிழ்வெய்தி - தன்னின் வேறாக இடப்பாகத்து வைத்து மகிழ்ந்து. இதனால் சொற்பொருள் போல அம்மையோடுஒன்றாய்இருக்குந்தன்மையும் சொல்லும் பொருளும் போல அம்மையை வேறாக வைத்து விரும்பும் தன்மையும் விளக்கியவாறு. ஏறு - இடபம்.
Lord Civan's divine body is smeared with holy ash. He seeks alms all over the world holding in His hand a severed white skull on which hawks are perched. Behold the shrine Idum-baa-vanam, of the Lord whose mount is the Bull, who is joyously concorporate with His bashful consort.
Note: The begging bowl of Lord Civa is a skull. It is occasionally described as a skull to which some flesh is sticking. This attracts the sharp-eyed hawk.
தேரார்தருதிகழ்வாளெயிற்றரக்கன்சிவன்மலையை
ஓராதெடுத்தார்த்தான்முடியொருபஃதவைநெரித்துக்
கூரார்தருகொலைவாளொடுகுணநாமமுங்கொடுத்த
ஏரார்தருமிறைவர்க்கிடமிடும்பாவனமிதுவே.
தேர் ஆர்தரு திகழ் வாள் எயிற்று அரக்கன்,சிவன்மலையை
ஓராது எடுத்து ஆர்த்தான்,முடி ஒருபஃது அவை நெரித்துக்,
கூர் ஆரதருகொலைவாளொடு குணம் நாமமும் கொடுத்த,
ஏர் ஆர்தரும்,இறைவர்க்கு இடம் - இடும்பாவனம் இதுவே.
பொருள்: வானவெளியில்தேர்மிசைஏறிவந்தஒளிபொருந்தியபற்களையும் உடைய அரக்கனாகிய இராவணன்,சிவபிரான் எழுந்தருளிய கயிலை மலையின் சிறப்பைஓராது, தன் தேர் தடைப்படுகிறது என்ற காரணத்திற்காகமலையைப் .பெயர்த்துச்செருக்கால்ஆரவாரம் செய்ய,அவன் பத்துத்தலைமுடிகளையும்நெரித்த பின் அவன் வருந்தி வேண்ட, கருணையோடு கூரிய தெய்வீக வாள்,குணத்தைப்புலப்படுத்தும் இராவணன் என்ற பெயர் ஆகியவற்றைக்கொடுத்தருளியஅழகனாகியஇறைவற்கு இடம் இடும்பாவனம் ஆகும்.
குறிப்புரை: தேர்ஆர்தரு - ஆகாயத்தின்கண்ணேஅமர்ந்துவந்து. அரக்கன் - இராவணன். ஓராது - ஆராயாமல்,அரக்கனாகியஆர்த்தானது முடி பத்தினையும் நெரித்து என இயைத்துப் பொருள் காண்க. கொலைவாள் - சந்திரஹாசம். இது அரக்கனைநெரித்தபின்னரே இரங்கி அருளப்பெற்றது. குணநாமம்-அழுகைக்குணத்தால் வந்த பெயராகிய இராவணன் என்பது.
When the aerial car of the bright-toothed King of Sri Lanka was blocked, he thoughtlessly tried to uproot Civa's mountain, all the while raising a loud cry. The Lord crushed his ten heads and then relenting, blessed Him with a sharp divine sword and also a characteristic name, Raavanan. Behold, this Lord Civan's beauteous shrine is Idum-baa-vanam.
Note: Characteristic name: The name Raavanaa means 'He who cries aloud'.
பொருளார்தருமறையோர்புகழ்விருத்தர்பொலிமலிசீர்த்
தெருளார்தருசிந்தையொடுசந்தம்மலர்பலதூய்
மருளார்தருமாயன்னயன்காணார்மயலெய்த
இருளார்தருகண்டர்க்கிடமிடும்பாவனமிதுவே.9
பொருள் ஆர்தருமறையோர் புகழ் விருத்தர்பொலிமலிசீர்த்
தெருள்ஆர்தருசிந்தையொடு சந்தம் மலர்பலதூய்,
மருள் ஆர்தரு மாயன்(ன்) அயன் காணார் மயல்எய்த,
இருள் ஆர்தருகண்டர்க்கு இடம் - இடும்பாவனம் இதுவே.
பொருள்: தருக்கு மிகுந்த மாயனும்அயனும்காணாதுமயங்கப் பொருள் நிறைந்த வேதங்களைக்கற்றுணர்ந்தஅந்தணர்களால் புகழ்ந்து போற்றப் பெறும் பழமையானவரும், புகழ்மிக்கஅம்மறையோர்களால் தெளிந்த சிந்தையோடுபல்வகைநிறங்களுடன் கூடிய மலர்களைத்தூவிவழிபடப்பெறுபவரும் ஆகிய அருள் நிறைந்த கண்டத்தை உடைய சிவபிரானுக்குரிய இடமாக விளங்கும் இடும்பாவனம்இதுவேயாகும்.
குறிப்புரை: பொருளார் தரும் மறை - பொருள் நிறைந்த வேதம். புகழ் விருத்தர் - புகழால்பழையவர்கள். தெருள் - தெளிவு. மருளார்தருமாயன் அயன் - தாமேதலையென்னும் தருக்கு நிறைந்த அவரிருவரும். இருளார்தரு - இருளையொத்த. மலர்பலதூய் (தொழும்) இடம் இடும்பாவனம் என ஒருசொல் வருவித்து முடிக்க.
'Maya ridden' Vishnu and Brahma, unable to behold Lord Civan stood amazed. With metric hymns and flowers galore, He is hailed by men of renown the practitioners of the Vedas rich in import - whose intellect is marked by clarity par excellence. Behold Idum-baa-vanam, the shrine of Lord Civan whose neck has a dark blue patch.
Note: Brahma, Vishnu and Guna-Rudran form the trinity. However, neither Brahma nor Vishnu could comprehend Civa's greatness. Civa, the Almighty is Maha- Rudran (குணாதீதருத்ரன்).
தடுக்கையுடனிடுக்கித்தலைபறித்துச்சமணடப்பார்
உடுக்கைபலதுவர்க்கூறைகளுடம்பிட்டுழல்வாரும்
மடுக்கண்மலர்வயல்சேர்செந்நென்மலிநீர்மலர்க்கரைமேல்
இடுக்கண்பலகளைவானிடமிடும்பாவனமிதுவே.10
தடுக்கை உடன் இடுக்கித் தலை பறித்துச்சமண் நடப்பார்,
உடுக்கைபலதுவர்க்கூறைகள் ௨டம்பு இட்டு உழல்வாரும்,
மடுக்கண் மலர் வயல் சேர் செந்நெல் மலி நீர் மலர்க் கரைமேல்
இடுக்கண்பலகளைவான் இடம் - இடும்பாவனம் இதுவே.
பொருள்: பனை ஓலையால் செய்த தடுக்கைத் தம் கையில் இடுக்கிக் கொண்டு தலையில் உள்ள உரோமங்களைப் பறித்து முண்டிதமாக நடக்கும் சமணரும்,உடுப்பதற்குரியகாவியுடைகளை அணிந்து திரியும்புத்தரும் அறிய இயலாதவனாய்,துன்பம் நீக்கி இன்பம் அருளும்இறைவனது இடம்,தாமரை செங்கழுநீர் போன்ற மலர்களை உடைய மடுக்களும், செந்நெல் வயல்களும்சூழ்ந்த,நீர்மலர் மிக்க நீர்நிலைகளின்கரைமேல் விளங்கும் இடும்பாவனம்இதுவேயாகும்.
குறிப்புரை: தடுக்கு - பனையோலை மணை. இடுக்கி - தமது அக்குளுள் அடக்கி. உடுக்கை பல துவர்க்கூறைகள் உடம்பு இட்டு - உடுத்துவனவாகப் பல காவியாடைகளை உடம்பில் பூண்டு. மடுக்கள் - ஆழமான நீர்நிலைகள். இடுக்கண் - துன்பம்.
With mats held in armpits the samanars of shaved heads, roam about here and there. So too the Buddhists robed in manifold brown-red vestments. Behold this is Idum-baa-vanam, the shrine of Lord Civan who sets at nought all troubles! It is girt with pools and choice rice fields enclosed by ridges where flowers bloom.
கொடியார்நெடுமாடக்குன்றளூரிற்கரைக்கோல
இடியார்கடலடிவீழ்தருமிடும்பாவனத்திறையை
அடியாயுமந்தணா்காழியுளணிஞானசம்பந்தன்
படியாற்சொன்னபாடல்சொலப்பறையும்வினைதானே.11
கொடி ஆர்நெடுமாடக்குன்றளூரின்கரைக் கோல
இடி ஆர் கடல் அடி வீழ்தரும்இடும்பாவனத்துஇறையை,
அடி ஆயும் அந்தணர் காழியுள் அணி ஞானசம்பந்தன்
படியால் சொன்ன பாடல் சொல,பறையும்,வினை தானே.
பொருள்: கொடிகள் கட்டிய நீண்ட மாடங்களோடு கூடிய குன்றளூரின்கரைமீது இடித்து மோதுகின்றஅலைகளையுடைய அழகிய கடல் தன் அலைகளால்அடிவீழ்ந்துஇறைஞ்சும்இடும்பாவனத்துஇறைவனை,திருவடிகளையே சிந்தித்து ஆய்வு செய்யும் அந்தணர்கள்வாழும் காழிப்பதிக்குஅணியாயஞானசம்பந்தன்முறையோடுஅருளியஇப்பாடல்களைஓத,வினைகள்நீங்கும்.
குறிப்புரை: கொடியார்நெடுமாடக்குன்றளூர் - கொடிகள் கட்டிய நீண்ட மாடங்களோடு கூடிய குன்றளூரினது. குன்றளூர் என்பது இடும்பனது தலைநகரம். இதனையேசுவாமிகள்பெயர்க்குறையாக்குன்றில் என்று குறித்தவாறுபலவிடங்களில் காண்க. கோலக்கரைஇடியார் கடல் அடிவீழ்தரும்இடும்பாவனம் - அழகிய கரையைஇடித்தலைப் பொருந்திய கடல் அடிக்கண்மடங்கிவீழும்இடும்பாவனம். அடி ஆயும் அந்தணர் - திருவடியின்பத்தைச்சிந்திக்கும்அந்தணர்கள். படியாற் சொன்ன பாடல் - அவர் அவர்பக்குவத்திற்கேற்பமுறையால் சொன்ன பாடல். ஊதப்பறையும்மணல்போலப் பாடல் சொல்லப்பறையும் வினை என்பதாம்.
Gnaanasambandan - the Jewel of Kaazhi where dwell compassionate men of virtue, who, forever, contemplate on the feet of Lord Civa hath chanted these hymns on the Lord-God of Idum-baa-vanam at Kundralur which is close to the sea whose waves dash against the shore and flow back to the sea. It abounds in huge mansions whence waft flags galore. All Karmas stand annulled if these hymns are sung in propriety.
Note: It is good to remember that the singing of the verses of this youthful saint, tones down our karmic sufferings.
17ஆம் பதிகம் முற்றிற்று
உ...
சிவமயம்
18.திரு நின்றியூர்
திருத்தலவரலாறு:
திருநின்றியூர் என்ற திருத்தலமானதுசோழ நாட்டு காவிரி வடகரைத் தலம். நாகை மாவட்டம் மயிலாடுதுறை,வைத்தீஸ்வரன் கோயில் பேருந்து வழியில் உள்ளது. திருமகள் வழிபட்டு நிலைப்பேறுஎய்திய தலம். சோழன் ஒருவன் திருவிளக்கிட்டுத் தினந்தோறும் வழிபட்டு வந்தான். அவன் கொண்டு வந்த திரி ஒருநாள் நின்றுவிடவே,சிவலிங்கத்தினின்றும் ஒரு சோதி தோன்றி, அவன் வழிபாட்டிற்கு இடையூறு உண்டாகாமல் உதவியது. அதனால் திரிநின்றவூர் ஆயிற்று. அது இப்போது திருநின்றவூர் என வழங்குகின்றது என்பது செவி வழிச் செய்தி. பரசுராமன் நின்றியூரைஇறைவற்கும்,பக்கத்தில் உள்ள360 வேலி நிலத்தை வேதியர்கட்கும் அளித்து வழிபட்டான் என்பது புராண வரலாறு. இதனையே சுந்தரர் தேவாரம் தக்கேசி மூன்றாம் பாடல் குறிப்பிடுகிறது. அடுத்த பாடலில் பசு பால் சொரிந்து அபிஷேகித்துவந்ததாகவும் ஒரு வரலாறு குறிக்கப்பெற்றுள்ளது. சுவாமி பெயர் லக்ஷ்மிபுரீசுவரா்,மகாலட்சுமிநாதர். அம்மை பெயர் உலகநாயகி. தீர்த்தம் நீலதீர்த்தம்(இது அபிதான சிந்தாமணி கூற்று) மகாலக்ஷ்மி தீர்த்தம் எனவும் வழங்கும்.
கல்வெட்டு:
இத்தலத்தைப் பற்றிய கல்வெட்டு ஒன்றே ஒன்றுதான் உள்ளது.1921ஆம் ஆண்டில்படியெடுக்கப்பெற்றுள்ளது. திரிபுவனசக்ரவர்த்திஇராஜராஜதேவர்க்கு ஆண்டு15ஆவதுகும்பரவி அட்டமி ஞாயிறு மூல நட்சத்திரம் என்று தொடங்குகிறது. தருமைஆதீனக் கோயில்களில் ஒன்று.
பதிக வரலாறு:
புள்ளிருக்குவேளூரைவணங்கியபுகலிவேந்தர்புகழான் நீண்ட நின்றியூருக்குஎழுந்தருளினார்கள். அங்கே எழுந்தருளியுள்ள சிவபெருமான் திருவடிகளைஆராக்காதலோடுவணங்கினார்கள்.’சூலம் படை'என்னும் பதிகத்தைஅருளிச் செய்தார்கள். அதில் நின்றியூர்நிமலரையல்லாது எனது உள்ளம் வேறு ஒருவரையும்உணராது எனவும்,பாதம் பணிவார் அச்சம் பழி பாவம் இலராவர் எனவும் குறிப்பிடுவது அன்பருள்ளத்திற்குப்பெருவிருந்து.
THE HISTORY OF THE PLACE
18. THIRU-NINDRI-OOR
The sacred city of Thiru-nindri-oor is a sacred place in Chola Naadu on the north bank of river Cauvery. It is situated in the bus route between Mayilaaduthurai and Vaiththeeswaran Koyil in the Naagai district. This is sacred place where Kalaimagal offered worship to get salvation. A Chola King is said to have offered worship daily after lighting a lamp. One day, the lamp wick he had brought stopped burning; a light from the Siva Lingam appeared so as not to let the darkness interrupt his worship. From this episode came the name Thirininravoor. That name got corrupted 'Thiruninravoor', according to folklore.
According to Puraana lore, Parasuraaman giftd Ninriyoor to the Lord and 360 'veli' of land situated nearby to Vedhiyar and offered worship. This is also mentioned in the third verse of Thakkesi of Sundharar Thevaaram. The next verse depicts the story of a cow bathing the Lord with its milk. The Lord's name is Lakshmipureesvarar, or Mahaalakshminaathar and the Goddess's name is Ulaganaayaki. The holy ford is Neelatheerththam (As noted in the Abidhaana Chinthaamani). It is also known as Mahaalakshmi Theerththam.
Stone Inscriptions
There is only one inscription in this temple. It has been copied in 1921. It starts with the words 'In the 15th Year of Thiribuvana Chakravarthi Raajaraaja Thevar, on Kumbaravi Attami Sunday Moolam asterism'. This temple is under the administration of Dharumai Aadheenam.
INTRODUCTION TO THE HYMN
This shrine is close to Pulli-ruk-ku-veloor also adored by our saint. From Pulli- ruk-ku-veloor, now known as Vaidheeswaran Kovil, our young saint went to Thiru-Nindri-oor, a holy town celebrated by the Thēvaaram trio (மூவர்முதலிகள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்). It was here he sang the following hymn.
திருச்சிற்றம்பலம்
18.திரு நின்றியூர்
பண் : நட்டபாடை
ராகம் : கம்பீரநாட்டை
சூலம்படை சுண்ணப்பொடி சாந்தஞ்சுடுநீறு
பாலம்மதிபவளச்சடைமுடிமேலதுபண்டைக்
காலன்வலிகாலின்னொடுபோக்கிக்கடிகமமும்
நீலம்மலர்ப்பொய்கைநின்றியூரின்னிலையோர்க்கே.1
சூலம் படை;சுண்ணப்பொடி சாந்தம் சுடுநீறு;
பால் அம்மதிபவளச்சடைமுடிமேலது - பண்டைக்
காலன் வலி காலி(ன்)னொடுபோக்கிக்,கடி கமழும்
நீலம்மலர்ப்பொய்கைநின்றியூரின்நிலையோர்க்கே.
பொருள்: சிவபெருமான் திருநின்றியூரில் நிலையாக எழுந்தருளியுள்ளான். அவ்வூரில் மணம் கமழும்நீலமலர்கள் மலர்ந்த பொய்கைகள் பல உள்ளன. சிவன் முன்னொரு காலத்தில்காலனின்வலிமையைக் காலால் உதைத்துப்போக்கினவன். இவனுக்குப் படைக்கலம் “சூலம்.சுண்ணப்பொடியும்,சந்தனமும்’திருநீறே'.பால்போலும்வெண்மையானபிறைமதி அவனது செந்நிறச்சடைமுடியின் மேல் உள்ளது.
குறிப்புரை: காலன் வலிபோக்கி,நின்றியூரின்நிலையோர்க்கு,சூலம் படை,சுண்ணப்பொடி,சாந்தம், சுடுநீறு,மதி முடிமேலதுஎன்க. நிலையோர் - நிலைபெறுதலை உடையார். சுண்ணப்பொடியும்சாந்தமும்நீறேயாம். பால் அம்மதி - பால்போலும் அழகிய மதி. அம்தவிர்வழி வந்த சாரியையுமாம். பண்டைக்காலன்என்றது இப்போது சிவனடியார்மேல் செல்லும் முனைப்பற்று இருக்கின்ற நிலையை உளத்தடைத்து.
Lord Civan’s weapon is a trident (Trisool, மூவிலைச்சூலம்); Holy ash is His golddust as well as sandalwood paste are worn by Him; the milk-white crescent moon adorns His ruddy matted hair; In the days of yore, He kicked Yama to death. He ever abides at Nindri-oor. There are pools all around this place where fragrant blue lilies all are bloom.
Note : Thiru-Nindri-oor is not to be confused with Thiru-Nindra-oor which is associated with Poosalar Naayanaar and is in Tondai Mandalam.
அச்சம்மிலர்பாவம்மிலர்கேடும்மிலரடியார்
நிச்சம்முறுநோயும்மிலர்தாமுந்நின்றியூரில்
நச்சம்மிடறுடையார்நறுங்கொன்றைநயந்தாளும்
பச்சம்முடையடிகடிருப்பாதம்பணிவாரே.
அச்சம்(ம்) இலர்;பாவம்(ம்) இலர்;கேடும்(ம்) இலர்;அடியார்,
நிச்சம்(ம்) உறு நோயும்(ம்) இலர்;தாமும் - நின்றியூரில்
நச்சம் மிடறு உடையார்,நறுங்கொன்றைநயந்து ஆளும்
பச்சம்(ம்) உடை அடிகள்,திருப்பாதம்பணிவாரே.
பொருள்: திருநின்றியூரில்எழுந்தருளிவிளங்கும்சிவபெருமான்நஞ்சைமிடற்றிலேநிறுத்தித்தேவர்களைக் காத்து அருளியவர். மணம் கமழும் கொன்றை மலர்களைவிரும்பிச்சூடியவர். தம்மை வழிபடும்அடியவர்களைஆட்கொண்டருளும் அன்புடையவர். அவரது பாதம் பணிவார் அச்சம்,பாவம்,கேடு,நாள்தோறும் வரும் நோய் ஆகியன இலராவர்.
குறிப்புரை: நின்றியூரில் அடிகள் திருப்பாதம்பணியும் அடியார் அச்சமுதலாயினஇலராவர்எனக்கூட்டுக. அச்சம் இலர் என்றது தமக்கு உறுதுணையாவார் ஒருவரைப் பெற்றமையால். இந்நிலையைஅப்பர் சுவாமிகளும்சுண்ணவெண்சந்தனச்சாந்தும்'என்னும் பதிகத்து "அஞ்சுவதுயாதொன்றும்மில்லைஅஞ்சவருவதுமில்லை'என்றமை காண்க,பாவம் இலர் - பிராரத்தநுகர்ச்சிக்கண்ணும் இவர்கள் இது செய்தார் யானிது செய்தேன் என்னும் தருக்கதின்றிச் செய்வார்கள் ஆதலின்மேல்வினைக்குவித்துமாகும் பாவம் இலர். கேடும்இலர் - அவ்வினை காரணமாக வரும் கேடும்இலராவர். நிச்சம் - நித்யம். நோய் - துன்பங்கள். நச்சம் - நஞ்சு. அம் சாரியை. நறுங்கொன்றைநயந்து - மணம் பொருந்திய கொன்றைப் பூவை விரும்பி. ஆளும் - அதனை விரும்பி அன்போடு சாத்தும்அடியார்களை ஆளுகின்ற. பச்சம் உடை அடிகள் - பட்சமுடைய பெருமான். பச்சம்,பக்ஷம் என்பது எதுகை நோக்கித் திரிந்து நின்றது.
The Lord of Nindri-oor held the venom in His throat and gave protection to devas. He much loves to wear the fragrant Kondrai flower. He confers His grace on His faithful devotees. Those who worship His Feet will get rid of fear, sin, loss, as well as day-to-day sufferings and all diseases and all evil.
Note: His special preference: Kondrai garland is Civa's ‘Adaiyaala Maalai' the wreath - of identification.
பறையின்னொலிசங்கின்னொலிபாங்காரவுமார
அறையும்மொலியெங்கும்மவையறிவாரவர்தன்மை
நிறையும்புனல்சடைமேலுடையடிகணின்றியூரில்
உறையும்மிறையல்லதெனதுள்ளம்முணராதே.3
பறையின்(ன்) ஒலி சங்கின்(ன்) ஒலி பாங்கு ஆரவும்,ஆர
அறையும்(ம்) ஒலி எங்கும்(ம் அவை அறிவார். அவர் தன்மை:
நிறையும் புனல் சடைமேல் உடை அடிகள்,நின்றியூரில்
உறையும்(ம்) இறை,அல்லது எனது உள்ளம்(ம்) உணராதே!
பொருள்: திருநின்றியூரில்உறையும் சிவபெருமான் நிறைந்த கங்கைப்புனலைச்சடைமிசைஉடையவர். அவ்வூரில்பறையடிக்கும் ஒலி,சங்கு முழங்கும் முழக்கம்,ஊரின்எல்லாப்பக்கங்களிலும் மிகவும் ஒலிக்கும் ஏனைய ஒலிகள்,ஆகிய யாவும்,இறைவனதுநாததத்துவத்தை உணர்த்துகின்றன என்பதை அறிவாளர்கள்உணர்வர். இல்லான்உனையும்சிவபெருமானைஅல்லாது என் உள்ளம் வேறு எவரையும்உணராது
குறிப்புரை: பாங்கு ஆரவும் - பக்கங்களில். மிகவும் - அறையும் ஒலி - மிகஅடித்தலால் உண்டாகும் (ஏனைய) ஒலிகள். இவை தோற்கருவி ஒலிகள். அறிவார் அடிகள் இறை அவர் தன்மையல்லது உள்ளம் உணராது என முடிக்க. எங்கும் அவையறிவார் - எவரும் அவ்வொலியினை அறிபவர். என் உள்ளம் உணராது என்பது எங்குங்காண்பதுஅவனுருவேஆதலின்.
The sound of drum, the blare of conch, and the various other heavy noise resonating from the sides pervade all space, and these are familiar unto the knowledgeable ones that know of His nature. My soul cognizes nothing but the deity of Nindri-oor, the Lord that sports on His matted crest the abundant flood waters of the river Ganges.
Note: Knowledgeable ones - Devotees who are wholly solely and exclusively devoted to Civa. The Naayanmaars adore Civa alone. They leave out of account 'Siru Deivangal' - minor gods.
பூண்டவ்வரைமார்பிற்புரிநூலன்விரிகொன்றை
ஈண்டவ்வதனோடும்மொருபாலம்மதியதனைத்
தீண்டும்பொழில்சூழ்ந்ததிருநின்றியதுதன்னில்
ஆண்டகழறொழலல்லதுவறியாரவரறிவே.4
பூண்ட(வ்) வரைமார்பில்புரிநூலன்விரிகொன்றை
ஈண்ட(வ்) அதனோடு(ம்) ஒரு பால் அம்மதிஅதனைத்
தீண்டும்பொழில்சூழ்ந்த திரு நின்றிஅதுதன்னில்
ஆண்ட கழல் தொழல் அல்லது,அறியார் அவர் அறிவே.
பொருள்: வானளாவியசோலைகள்சூழ்ந்ததிருநின்றியூரில்எழுந்தருளிய சிவபெருமான் தனது மலை போன்ற மார்பில் அணிகலன்களைப்பூண்டுள்ளான். முப்புரிநூலை அணிந்துஉள்ளான். விரிந்த கொன்றை மலர் மாலையையும் அணிந்து உள்ளான். அதனோடு பொருந்தப் பால் போன்ற வெண்மையானதிங்களைத்தன்சடைமேல் சூடி உள்ளான். அவ்விறைவன்திருவடிகளைத் தொழுதல் அல்லது;அவன் இயல்புகளை அடியவர் எவரும் அறியார்.
குறிப்புரை: பூண்டவரை மார்பு - அணிகளைப்பூண்ட மலை போலத் திண்ணிய மார்பு. பூண்டவ்வரை - விரித்தல் விகாரம். ஈண்ட - செறிய. கொன்றை ஈண்ட மதி அதனைத்தீண்டும்பொழில்சூழ்ந்ததிருநின்றிஎனக்கூட்டுக. திருவடியைத்தொழுதலல்லது அவர் அறிவான் அறியார் என ஆன்மாக்கள்அருளேகண்ணாகக் காணும் ஆற்றல் விளக்கியவாறு.
The Lord wears on His hill like and well adorned chest the three strands of a sacred thread. In His crest rests the crescent moon, beside the burgeoning kondrai. True devotees know not but the worship of the Lord-God's ankleted Feet enshrined in Nindri-oor girt with gardens the tops of which brush against the beauteous moon.
குழலின்னிசைவண்டின்னிசைகண்டுகுயில்கூவும்
நிழலின்னெழிறாழ்ந்தபொழில்சூழ்ந்தநின்றியூரில்
அழலின்வலனங்கையதுவேந்தியனலாடும்
கழலின்னொலியாடும்புரிகடவுள்களைகண்ணே.5
குழலின்(ன்) இசை வண்டின்(ன்) இசை கண்டு குயில் கூவும்
நிழலின்(ன்) எழில் தாழ்ந்த பொழில்சூழ்ந்தநின்றியூரில்,
அழலின்வலன்அங்கையது ஏந்தி,அனல் ஆடும்
கழலின்(ன்) ஒலி ஆடும் புரி கடவுள் களைக(ண்)ணே.
பொருள்: திருநின்றியூரில்குழலின் இசை,வண்டின் இசை ஆகியவற்றைக்கேட்டுக்குயில்கள்கூவுகின்றன. அங்குள்ள சோலைகளில் நிழல் அழகாகத் தங்கி உள்ளது. இவ்வாறு சோலைகளால்சூழப்பட்டதிருநின்றியூரில்விளங்கும்சிவபெருமான் தனது வலத்திருக்கரத்தல்அழலை ஏந்தி,அனலிடை நின்று,தனது திருவடிகளில்அணிந்துள்ளவீரக்கழல்களின்ஒலிகள் கேட்குமாறு ஆடுகின்றான். அவ்வாறு ஆடுகின்ற விரும்பத்தக்கசிவன்தான் நமக்கு என்றும் ஆதாரமானவன்.
குறிப்புரை: பாடுவாரைப் பார்த்து மற்றவர்க்கும்பாடத்தோன்றுவதுபோலக்குழலிசையும்வண்டிசையும்கேட்டுக் குயில் கூவுகின்றன. நிழலின் எழில் தாழ்ந்த பொழில் - ஒளியும் நிழலும் விரவித் தோன்றும் நிலை சித்திரப்பூம்படாம் விரித்தது போலுமாகலின்நிழலின் எழில் தாழ்ந்த பொழில்என்பர். அழலின்வலன் - வலமாகச்சுற்றியெரியும்மழு. ஆடும்புரி கடவுள் - ஆடுகின்ற விரும்பத்தக்க கடவுள். களைகண்-நமக்கு ஆதாரம்.
Listening to the music of the flute and the humming of bees, Kuyils chirp melodies in the shady charming groves of Nindri-oor where, holding a flame in His right hand, He dances in fire. It is the resounding ankleted Feet of the Lord that dances in fire, that constitute our sole refuge.
Note: The Kuyils (Indian cuckoos) sing in sympathetic reaction.
மூரன்முறுவல்வெண்ணகையுடையாளொருபாகம்
சாரன்மதியதனோடுடன்சலவஞ்சடைவைத்த
வீரன்மலியழகார்பொழின்மிடையுந்திருநின்றி
யூரன்கழவல்லாதெனதுள்ளம்முணராதே.6
மூரன் முறுவல் வெண்நகைஉடையாள்ஒருபாகம்
சாரல் மதி அதனோடு உடன் சலவம் சடை வைத்த
வீரன் மலி அழகு ஆர்பொழில்மிடையும் திரு நின்றி -
ஊரன்,கழல் அல்லாது எனது உள்ளம் (ம்) உணராதே!
பொருள்: அழகு மலிந்த,சோலைகள் செறிந்த திருநின்றியூரில்எழுந்தருளிய வீரம் பொருந்திய சிவபெருமான் புன்முறுவலைத் தரும் வெண்மையான பற்களை உடைய உமையம்மையைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக்கொண்டுள்ளான். சடைமுடியில்பிறைமதியை வைத்து உள்ளான். அதைச் சார்ந்து கங்கையையும்வைத்துள்ளான். இவனுடைய திருவடிகளைஅல்லாது எனது உள்ளம் வேறு ஒன்றையும் உணராது. குறிப்புரை: மூரல் முறுவல் - மிகச் சிறிய புன்சிரிப்பு,சலவம் - கங்கை. கழலைப் பற்றிய உள்ளத்திற்கு, வேறொன்றையும் உணர முடியாமையானும் உணர்ந்து ஆகவேண்டுவதுஇன்மையானும் உள்ளம் உணராதுஎன்றார்.
The Lord Hero Civan who is concorporate with Umaa Devi of white teeth and gentle smile, sports on His matted crest the cool moon and the Ganga. It is of Nindri- Yur which abounds in exceedingly beautiful gardens. My soul will cognise nothing but His ankleted Feet.
Note: 'Saaral Mathi' - The word 'Saaral' means slope/drizzle/driven wind. It is best, translated in Shakespeare's phrase 'Moist Moon' - 'Cool Moon', also reflects the idea of சாரல் or drizzle.
பற்றியொருதலைகையினிலேந்திப்பலிதேரும்
பெற்றியதுவாகித்திரிதேவார்பெருமானார்
சுற்றியொருவேங்கையதளோடும்பிறைசூடும்
நெற்றியொருகண்ணார்நின்றியூரின்னிலையாரே.7
பற்றி ஒரு தலை கையினில்ஏந்திப் பலி தேரும்
பெற்றி அது ஆகித் திரி தேவர்பெருமானார்,
சுற்றி ஒரு வேங்கை அதளோடும் பிறை சூடும்
நெற்றி ஒருகண்ணார்நின்றியூரின்நிலையாரே.
பொருள்: திருநின்றியூரின்கண் நிலையாக எழுந்தருளி உள்ள சிவபெருமான் பிரமனதுதலைகளில் ஒன்றைக் கிள்ளி,அதனைக் கையில் ஏந்திப் பலி கேட்கும்இயல்பினனாய்த்திரிகின்றான். தேவர்களுக்குத்தலைவனாகவிளங்குகின்றான். புலித்தோலைத் தனதுஇடுப்பில் ஆடையாகச்சுற்றிக் கட்டி உள்ளான். தனது சடைமுடியில்பிறைச்சந்திரனைச்சூடி உள்ளான். நெற்றியில் மூன்றாவதாக ஒரு கண்ணை உடையவன். அவனை நாம் துதிப்போமாக.
குறிப்புரை: தலை கையினில் பற்றி ஏந்தித்தேரும்பெற்றியதுவாகியேதிரிகின்ற தேவர் பெருமானார் என இயைக்க. பலி பெற்றியதுவாகி எனவே அப்பெற்றிஅவர்க்குஇயல்பன்மையும்,தாருகாவனத்துமுனிவர்கள்பால் வைத்த தடையிலாக்கருணையே காரணம் என்பதும் வெளிப்படை. சுற்றி - அரையைச்சுற்றி. வேங்கை - புலித்தோல்.
Holding a skull in His hand and seeking alms from the public, the God of the Devas roams about. He is clad in a tiger-skin; He wears a crescent moon and sports an eye on His forehead. He, for ever, abides in Nindri-oor.
Note: According to the Dharmapuram Aadheenam Edition (1953/1997) verse no. 8 of this hymn is not traceable. According to the edition of Institute Francais D' Indologic (1984), this patikam has only ten verses. The eighth verse of Sambandar's hymn usually refers to Raavanaa's uprooting Mount Kailas. In the present patikam, the last verse makes a reference to Raavanaa, so it is likely that this patikam contains ten verses only.
நல்லம்மலர்மேலானொடுஞாலமதுவுண்டான்
அல்லரெனவாவரெனநின்றும்மறிவரிய
நெல்லின்பொழில்சூழ்ந்தநின்றியூரின்னிலையாரெம்
செல்வரடியல்லாதெனசிந்தையுணராதே.
நல்ல(ம்) மலர் மேலானொடு ஞாலம்(ம்) அது உண்டான்
“அல்லர்” என, “ஆவர்” என,நின்றும்(ம்) அறிவு அரிய -
நெல்லின்பொழில்சூழ்ந்த - நின்றியூரில் நிலை ஆர்எம்
செல்வர் அடி அல்லாது,என சிந்தை உணராதே.
பொருள்: நெல் வயல்களால்சூழப்பட்டதிருநின்றியூரின்கண் நிலையாக எழுந்தருளி உள்ள சிவபெருமானே முழு முதற்பொருள் ஆவான் என்றும்,அல்லன் என்றும் தருக்கிக் கொண்டு நின்றவர்கள்பிரம்மாவும்,திருமாலும் ஆவார்கள். பிரம்மா நல்ல தாமரை மலர் மேல் உறைகின்றவன். உலகத்தைத் தன் வயிற்றகத்து அடக்கிக் காட்டியவன் திருமால். இவர்கள் இருவரும் சிவபிரானது அடி,முடியைத் தேடிக் காண முடியாமல் திகைத்தவர்கள். இவர்களால் காண்பதற்கு அரியவராய்விளங்கியவர் சிவபிரான். அவர் எம்செல்வர். அவருடைய திருவடிகளை அன்றி என் சிந்தை வேறு எதையும் உணராது.
குறிப்புரை: நல்ல மலர் நல்லம்மலராயிற்று. மலர்மேலான்பிரமன். ஞாலமது உண்டான் திருமால். அல்லர் என ஆவர் என - தலைவர் அல்லர் எனவும் தலைவர் ஆவர் எனவும் தாமேதருக்கி நின்று.
The Lord is unknowable to Brahma who is seated in the lotus and to Vishnu who swallowed the earth, both of whom doubted His supremacy. (But) My mind will cognise nothing but the Feet of the ever opulent One of Nindri-oor, girt with fields of paddy.
நெறியில்வருபேராவகைநினையாநினைவொன்றை
அறிவில்சமணாதருரைகேட்டும்மயராதே
நெறியில்லவர்குறிகள்நினையாதேநின்றியூரில்
மறியேந்தியகையானடிவாழ்த்தும்மதுவாழ்த்தே.| 10
நெறியில்வருபேரா வகை நினையா நினைவு ஒன்றை
அறிவு இல்சமண்ஆதர் உரை கேட்டும்மயராதே,
நெறிஇல்லவர்குறிகள்நினையாதே,நின்றியூரில்
மறி ஏந்தியகையான் அடி வாழ்த்தும்(ம்) அது வாழ்த்தே!
பொருள்: சமணர்கள்நெறியற்றகீழ்மக்கள். தமக்கென்று உண்மை நெறி எதுவும் இல்லாத புறச்சமயிகள். சமய நெறியில்பயில்வதால்பேராமலும்,மறவாமலும்நினைக்கும் முழு முதற்பொருளாகியசிவபெருமானைஅறியக் கூடிய அறிவு இல்லாதவர்கள். இவர்களது அடையாளங்களைக்கருதாமல்,திருநின்றியூரில் மான் ஏந்தியகையனாய் விளங்கும் சிவபெருமானின்திருவடிகளைவாழ்த்துவதே வாழ்த்து என்று சொல்லப்படும்.
குறிப்புரை: நெறியில் வரும் - தொன்றுதொட்டுக் குரு காட்டிய நெறியினின்றுபயில்வதால்வருகின்ற. பேராவகைநினையாநினைவொன்றைஅறிவில்சமண்ஆதர் - பேராதேமறவாதேதன்மயமாய் இருந்து நினைக்கப்படும் ஒரு பொருளை அறியும் அறிவு அற்ற சமணர்களாகிய கீழ்மக்கள். மயராது - மயங்காது. நெறியில்லவர் - தமக்கென்று உண்மை நெறியில்லாதவர்களாகியபுறச்சமயிகள். குறிகள் - அடையாளங்கள். மறி - மான்.
Do not get befuddled on hearing the words of the base and the brainless samanars who cannot apprehend the enlightenment yielded by the righteous and the virtuous way . Ignore the symbols, marks and insignia of those that do not pursue the salvific way. To hail the feet of Him who sports a fawn in His hand and who abides at Nindri-oor, is indeed the true and abiding hailing.
குன்றம்மதுவெடுத்தானுடறோளுந்நெரிவாக
நின்றங்கொருவிரலாலுறவைத்தானின்றியூரை
நன்றார்தருபுகலித்தமிழ்ஞானம்மிகுபந்தன்
குன்றாத்தமிழ்சொல்லக்குறைவின்றிநிறைபுகழே.11
குன்றம்(ம்) அது எடுத்தான் உடல் தோளும்நெரிவு ஆக
நின்று அங்கு ஒருவிரலால்உற வைத்தான் நின்றியூரை
நன்று ஆர்தருபுகலித் தமிழ் ஞானம் மிகு பந்தன்
குன்றாத் தமிழ் சொல்லக் குறைவு இன்றி நிறை புகழே.
பொருள்: கயிலை மலையைத் தூக்கி நகர்த்த முயற்சி செய்த இலங்கை மன்னனாகியதசக்கிரீவனின் உடல்,தோள் ஆகியன நெரியத் தன் கால்விரல்ஒன்றால் கயிலை மலை உச்சியில்இலேசாகஅழுத்தியவன்திருநின்றியூரில்எழுந்தருளிய சிவபெருமான். புகலிஎன்று சொல்லப்பெறும்சீகாழியில்நன்மைகளே செய்யும் மெய்யடியார்கள் பலர் உளர். அப்பதியில்தோன்றியவர் ஞானசம்பந்தர். இவர் திருநின்றியூர்இறைவனைப்போற்றிப்பாடிய திருவருள் நலம் குன்றாதஇத்திருப்பதிகப் பாடல்களை உரைப்பதனால்குறைவின்றிப் புகழ் நிறையும்.
குறிப்புரை: உற - பொருந்த. ஞானம்மிகுபந்தன் - ஞானசம்பந்தன். இச்சொல்ஞானசம்பந்தன்என்பதற்குப் பொருள் காட்டியது போலும். குன்றாத் தமிழ் - எஞ்ஞான்றும் திருவருள் குறையாத தமிழ்.
Gnaanasambandan of profound gnosis of prosperous Pukali well versed in Tamil of never-diminishing value hath hailed the Lord of Nindri-oor, who by pressing His toe, crushed the body and arms of him (Raavana) who lifted the mountain (Kailas). They that recite his ever-enduring verses will gain consummate glory that will never suffer decrease.
Note: 'Kundraath Thamizh' - The verses of Tamil which never suffer and decrease in divine grace.
திருச்சிற்றம்பலம்
18ஆம் பதிகம் முற்றிற்று
உ
சிவமயம்
19.திருக்கழுமலம்
திருத்தலவரலாறு:
முதலாம் பதிகம் பார்க்க.
திருஇராகம்:
தடையின்றி முடுகிய ஓசை உடையதாய்ச்செல்லுவது. பழைய காலத்தில் அராகம் என வழங்கினர். பெரும்பாலும் குறிலிணைநிரையாகவே பாடல் முழுவதும் அமைந்திருக்கும். சிறுபான்மை வேறுபட்டு அமையும். பழங்காலத்தில் பரிபாடல் என்னும் இசைப்பாடலில் ஓர் உறுப்பாகஅராகம்அமைந்திருந்தது. திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள்அதனைத் தன் பண்ணிசைப்பாடலுக்குப்பயன்படுத்திக்கொண்டார். முதல் மூன்று திருமுறைகளிலும்மிகப்பலபதிகங்கள்இவ்வோசையுடையனவாக அமைந்துள்ளன. குறிலிணையாகியசொற்களே வந்த அடி சிறப்புடையது. பிறவகையால் வந்த அடிகளும் ஒரே வகையான சீரமைப்பில்செல்வதனால்அராகம்எனப்படுகின்றது. முதல் திருமுறையில்10பதிகங்கள்,இரண்டாம் திருமுறையில்6பதிகங்கள்மற்றும் மூன்றாம் திருமுறையில்23பதிகங்கள் இந்த இராகத்தில் அமைந்துள்ளன.
பிறையணிபடர்சடைமுடியிடைபெருகியபுனலுடையவனிறை
இறையணிவளையிணைமுலையவளிணைவனதெழிலுடையிடவகை
கறையணிபொழினிறைவயலணிகழுமலமமர்கனலுருவினன்
நறையணிமலர்நறுவிரைபுல்குநலமலிகழறொழன்மருவுமே.4
பிறை அணி படர்சடைமுடி இடை பெருகிய புனல் உடையவன்;நிறை
இறை அணி வளை,இணைமுலையவள்,இணைவனது எழில் உடை இட வகை -
கறை அணி பொழில் நிறை வயல் அணி - கழுமலம் அமர் கனல்உருவினன்
நறை அணி மலர்நறுவிரைபுல்கு நலம் மலி கழல் தொழல்மருவுமே!
பொருள்: சிவபெருமான் தனது விரிந்த ஒரு சடையில்பிறையைக்கொண்டுள்ளான். ஒன்பது சடைகளில்மற்றொன்றில் பெருகி வந்த கங்கையையும் உடையவன் அவனே. தனது முன் கைகளில் அழகிய வளையல்களைஅணிந்தஉமையம்மையின் இரண்டு தனங்களோடுஇணைபவனும் அவனே. அவன் திருக்கழுமலத்தில்எழுந்தருளிஅடியார்களுக்குஅருள்புரிந்து வருகின்றான். திருக்கழுமலம் அழகிய பல ஊர்களில் ஒன்றாக விளங்குகின்றது. நிழல்மிக்க மரங்களை உடைய சோலைகளை உடையது. நெல் வயல்கள்இந்த ஊரை அணி செய்கின்றன. சிவபெருமான் அழல் போன்ற சிவந்த திருமேனியன். அவனுடைய அழகிய திருவடிகளில் தேன் நிறைந்த மலர்களினின்று தேன் மணமும், மலர்களின் நறுமணமும் பரந்து நல்ல வாசத்தை வீசிக் கொண்டே இருக்கின்றன. உலகீர்!சிவபெருமானுடையதிருவடிகளைத் தொழுதல் செய்து உய்மின்கள்.
சிறு விளக்கம்: பரஞானம்,அபரஞானம் என்ற உயர்ந்த இரு மெய்ஞ்ஞானங்களாகவிளங்குபவன் சிவபெருமான். அவைகளோடு இணைந்து அவைகளுக்குத்தலைவனாகவும்விளங்குபவனும் அவனே. கண்ணால் காண முடியாத இந்த மெய்ஞ்ஞானங்களைக் குறியீடு மூலமாக விளக்குவதற்கு நம் முன்னோர்கள்,பராசக்தியாகிய பார்வதி தேவியின் இருதனங்களைஒப்புமையாகவைத்துள்ளார்கள். இத்தத்துவத்தைஉள்ளத்தில் கொண்டு ஆங்காங்கே வரும் பாடல்களுக்கு இந்த மெய்ப் பொருளை உணர்ந்து கொள்க.
குறிப்புரை: இறை - முன் கை. இணை முலையவள்இணைவனது - பரஞானம் அபரஞானம் என்றஇரண்டு முலைகளையுடையஉமாதேவியோடுஇணைபவனாகியசிவனது. கறையணிபொழில் - நிழல் மிக்க பொழில். நறையணிமலர் - தேனோடு கூடிய அழகிய மலர். உலகீர்! இடமாகியகழுமலம் அமர் கனல் உருவினனது கழல் தொழுதலைமருவும்எனக்கூட்டுக. மருவும் - பொருந்துங்கள்.
On His crest of spreading matted hair, He sports a crescent moon and the swelling floods of the river Ganges; He shares in His beautiful left-half, the bangle wearing lady of two maiden breasts. He whose form is flame-like, is entempled in Kazhu-Malam rich in fertile fields. His ankleted Feet decked with fragrant and melliferous flowers confer weal and well-being. Adore Him, eh folks!
Note: Kazhumalam is one of the twelve names of Seekaazhi. It means the place where malam gets washed away. The double breasted chest. They are symbolic of Para (Godly) knowledge and apara (phenomenal) knowledge (perceptible to the senses).
பிணிபடுகடல்பிறவிகளறலெளிதுளததுபெருகியதிரை
அணிபடுகழுமலமினிதமரனலுருவினனவிர்சடைமிசை
தணிபடுகதிர்வளரிளமதிபுனைவனையுமைதலைவனைநிற
மணிபடுகறைமிடறனைநலமலிகழலிணைதொழன்மருவுமே.2
பிணி படு கடல்பிறவிகள்அறல் எளிது;உளது அது பெருகிய திரை;
அணி படு கழுமலம் இனிது அமர் அனல் உருவினன்,அவிர்சடைமிசை
தணிபடுகதிர்வளர்இளமதிபுனைவனை,உமைதலைவனை,நிற
மணி படு கறைமிடறனை,நலம் மலி கழல் இணை தொழல்மருவுமே!
பொருள்: பிறவிப்பெருங் கடல் நீந்துவர்நீந்தார்இறைவனடிசேராதார்என்ற திருக்குறளை மனத்தில் கொண்டு இப்பாட்டின் மேல் செல்க. பிறவியாகிய கடல் மிகப் பெரிதாகிய துன்ப அலைகளை உடையது. பிறவியானது இடைவிடாமல் நம்மைப்பிணித்துக் கொண்டே இருக்கும். உலகீர்! பிறப்பு - இறப்பு ஆகியவைகளினின்று நீங்கி விடுதலை பெற சிவபெருமானின் நலம் நிறைந்த திருவடிகளை தொழுதல் செய்மின். அவ்வாறு செய்தால் பிறவிகள்நீங்குவதுஎளிதாகும். சிவபெருமான் விரும்பி இனிதாகஅமர்கின்ற ஊர் அழகிய கழுமலம் ஆகும். அவன் செந்தழல் நிறத்தை உடையவன். விரிந்த சடைமீது குளிர்ந்த கிரணங்களை உடைய பிறைமதியைச்சூடியவன். அவன் உமையம்மையின்மணாளனும் ஆவான். அவனுடைய கழுத்து நீலமணியின் நிறம் போன்றது(அதனால் அவனை நீலகண்டன் என்று சொல்லுவதுண்டு.
குறிப்புரை: பிணிபடு கடல் பிறவிகள் - ஆதி ஆன்மிகம் முதலிய பிணிகளோடுதொடக்குண்ட கடல் போன்ற பிறவிகள். தன்னகப்பட்டாரைமீளவிடாதே மேலும் மேலும்பிணிக்கின்ற பிறவிக்கடல் என்றுமாம். அறல் - நீங்குதல். அது பெருகிய திரை உளது. அப்பிறவிக்கடல் மிகப் பெருகுகின்றஅலைகளைஉடையது. அனல் உருவினனாகியமதிபுனைவனை,உமை தலைவனை,கறைமிடறனை,கழலிணைதொழல்மருவும்எனக்கூட்டுக. புனைவன் - சூடுபவன். நிறமணிபடும்கறைமிடறன் - ஒளிபொருந்தியநீலமணி போலும் விடம் பொருந்திய கழுத்தினையுடையவன். நலம் - வீட்டின்பம்.
It is easy to end the fettering, multi-billowed and sea-like embodiments. Lord Civan whose form is flame-like is entempled in resplendent Kazhu-Malam. On His shiny matted crest, He wears the cool young moon of abundant rays. He is the Lord of Uma; His neck displays a lustrous dark blue patch. His ankleted feet confer weal and well-being. Adore Him, ye folks!
Note: The ways of the sea typify recurring births and deaths.
வரியுறுபுலியதளுடையினன்வளர்பிறையொளிகிளர்கதிர்பொதி
விரியுறுசடைவிரைபுரைபொழில்விழவொலிமலிகழுமலமமர்
எரியுறுநிறவிறைவனதடியிரவொடுபகல்பரவுவர்தம
தெரியுறுவினை செறி கதிர்முனையிருள்கெடநனிநினைவெய்துமதே.3
வரி உறு புலி அதள்உடையினன்,வளர்பிறை ஒளி கிளர் கதிர் பொதி
விரி உறு சடை, -விரை புரைபொழில்விழவு ஒலி மலி - கழுமலம் அமர்
எரி உறு நிற இறைவனது அடி இரவொடு பகல் பரவுவர் தமது
எரி உறு வினை,செறி கதிர் முனை இருள் கெட,நனி நினைவு எய்தும் அதே.
பொருள்: சிவபெருமான் திருக்கழுமலத்துள் அழல் வண்ணனாய்விளங்குகின்றான்.திருக்கழுமலத்தின் எல்லா மருங்கிலும் மணம் பொருந்திய சோலைகள் உள்ளன.அவ்வூரின்கண்திருவிழாக்களின்ஓலிநிறைந்துவிளங்குகின்றது. அங்கு எழுந்தருளி அருள் பாலித்து வரும் இறைவன் திருவடிகளைஇரவும்பகலும் பரவி வாழ்த்துகின்றஅடியார்கள்பலர் உளர். அவர்களை வருத்த இருக்கும் வினைகளும் மிக்க ஒளியை உடைய ஞாயிற்றினையும் வெறுத்து ஓட்டுகின்றஇருளன் போன்ற ஆணவமலமும்கெடும்படியாகஉலகீரே! அப்பெருமான்திருவடிகளை நன்றாக நினைந்து வழிபாடு செய்வீர்களாக.
குறிப்புரை: வரியுறுபுரிஅதள் - கோடுகள் பொருந்திய புலித்தோல். வளர்பிறையையும்கதிரையும்பொதிந்த விரியுறுசடையையுடைய இறைவன்,கழுமலம் அமர் இறைவன் எனத்தனித்தனிக்கூட்டுக, எரியுறு நிற இறைவன் - தீவண்ணன். பரவுவர் தமது நினைவெய்தும்எனக்கூட்டுக. எரியுறுவினை - வருத்துகின்ற நல்வினை தீவினைகள். கதிர்முனை இருள் - ஒளிப்பொருளாகியசூரியனையும்வெறுத்தோட்டுகின்ற இருள் என்றது ஆணவமலம்என்றவாறு. நனிநினைவெய்தும் - தயிலதாரை போல இடைவிடாது இறைவன் நினைப்பெய்தும்.
Lord Civan is clad in the striped skin of a tiger; His spreading matted hair dazzles with the bright rays of the moon. He whose form is flame-like is enthroned in Kazhu-Malam rich in pools and fragrant gardens. Festive sounds of the town reverberate everywhere. The scorching karma of those that hail Him, and their murky mala will vanish like darkness before the effulgent Sun. May you, for ever, contemplate on Him, ye folks!
Note: Irul - Mark which is Aanava malam.
வினைகெடமனநினைவதுமுடிகெனினனிதொழுதெழுகுலமதி
புனைகொடியிடைபொருடருபடுகளிறினதுரிபுதையுடலினன்
மனைகுடவயிறுடையனசிலவருகுறள்படையுடையவன்மலி
கனைகடலடைகமுமலமமர்கதிர்மதியினனதிர்கழல்களே.4
வினை கெட மனநினைவு அது முடிகஎனின்,நனி தொழுது எழு - குலமதி
புனை கொடிஇடை பொருள் தரு படு களிறினது உரி புதை உடலினன்,
மனை குடவயிறுஉடையன சில வரு குறள் படை உடையவன்,மலி
கனைகடல் அடை கழுமலம் அமர் கதிர் மதியினன்,அதிர்கழல்களே!
பொருள்: ஆரவாரம் நிறைந்த கடற்கரையைஅடுத்துள்ளதிருக்கழுமலத்துள் சிவபெருமான், சூரியன்,சந்திரன் ஆகியவற்றைக்கண்களாகக் கொண்டு அமர்ந்து அருள்புரிந்துவருகின்றான். அவன் உயர்ந்த ஒற்றைப்பிறைச்சந்திரனைத் தனது ஒரு சடையில் அபயம் கொடுத்து அமர்த்தி உள்ளான் (சிவபெருமான் திருமுடியில் விளங்கும் சந்திரன் நாம் காணும் பிரகிருதி சந்திரன் அல்லன் என்பதைத் தெரிந்து கொள்க). கொடி போன்ற இடையைஉடைய கங்கையையும் தன் சடையில்கொண்டுள்ளான். கயாசுரன் என்னும் யானையின்தோலைஉரித்துத் தன் உடலைப்போர்த்துக்கொண்டுள்ளான். வீட்டுக்குடம் போலும் வயிற்றினை உடைய பூதகணங்கள்சிலவற்றின்படையைஉடையவனாகவிளங்குகின்றான். உலகீரே! உங்களுடைய தீய வினைப்பயன்கள் கெட்டு நீங்கவும்,உங்கள் மனத்தில் நினைக்கும்நற்செயல்கள்நிறைவேறவும்சிவபெருமானின்ஒலிக்கும்கழற்சேவடிகளைவணங்குவீர்களாக.
குறிப்புரை: குலமதிபுனை - உயர்ந்த பிறைமதியைஅணிந்த. கொடியிடை - சுற்றிக்கொண்டிருக்கின்றகாட்டுக்கொடிகளினிடையே. பொருள்தருபடுகளிறினது - பல பொருள்களைக் கொண்டு வருகின்றஇறந்த யானையினது. உரி - தோல். இவருடைய மேனியின்செவ்வொளியைக்களிற்றின்கருந்தோல்புதைத்ததுஎன்பதாம். மனைகுட வயிறு உடையன குறள் படை - வீட்டுக்குடம் போன்ற வயிறு உடையனவாகியபூதப்படைகள். கதிர் மதியினன் - சூரியனையும்சந்திரனையும் தமது திருக்கண்களாகப்படைத்தவன். உடலினன்,உடையவன். மதியினன்,கழல்கள்,வினைகெடமனநினைவதுமுடிகெனின், நனிதொழுது எழு எனக்கூட்டுக. மனநினைவிற்கு எல்லாம் காரணமாகியவினைகள்கெடவும்,மனம் நினைந்ததுநிறைவேறவும்,விரும்பின்,கழல்களைத்தொழுதெழு என்று நெஞ்சை நோக்கி அறிவித்தவாறு. முடிகஎனின் என்பது முடிகெனின்எனத் தொகுத்தல் விகாரம் பெற்றது. முடியுமாயின்எனப் பொருள் காண்பதும் உண்டு. பொருந்துமேல்கொள்க.
Lord Civan is decked with the lofty crescent moon and the willowy-waisted Ganga. His body is covered by the hide of a tusker, that came out of the Yaaga fire kindled by Munis of Daarukavanam. Among His army are some diminutive and pot- bellied soldiers. He abides in Kazhu-Malam, which is close to the roaring sea. His eyes are the Sun and the Moon. To annul your karma and gain fulfillment of your destiny, adore Him well, ye folks!
Note: Soldiers: Bhutas. They are pot-bellied. The verse in Tamil refers to 'Manai kudam' the pot in domestic use.
தலைமதிபுனல்விடவரவிவைதலைமையதொருசடையிடையுடன்
நிலைமருவவொரிடமருளினனிழன்மழுவினொடழல்கணையினன்
மலைமருவியசிலைதனின்மதிலெரியுணமனமருவினனல
கலைமருவியபுறவணிதருகழுமலமினிதமர்தலைவனே.5
தலைமதி,புனல்,விடஅரவு,இவை தலைமையது ஒரு சடை இடை உடன் -
நிலை மருவ ஓர் இடம் அருளினன்;நிழல் மழுவினொடு அழல் கணையினன்;
மலை மருவியசிலைதனில் மதில் எரியுண மனம் மருவினன் - நல
கலை மருவியபுறவுஅணிதருகழுமலம் இனிது அமர் தலைவனே.
பொருள்: சிவபெருமான்,நல்ல கலைமான்கள் வாழ்ந்து வருகின்ற சிறு காடுகளின்புறத்தேஅழகு பெற அமைந்துள்ள திருக்கழுமலத்தில்எழுந்தருளிஅருள்புரிந்து வருகின்றான்.அவன்,தன் தலைமையானசடைக்காட்டின் நடுவில்,ஒருநாட்பிறை,கங்கை,நஞ்சு பொருந்திய பாம்பு ஆகியவைகள் ஒன்றாக இருக்குமாறு இடம் அருளியவன். ஒளி பொருந்திய மழுவோடு,அழல் வடிவான அம்பினை,மேருமலையாகியவில்லில் பூட்டி எய்தலால்,திரிபுரங்கள் எரி உண்ணுமாறுமனத்தால்சந்தித்தவன் (சந்தித்த அளவில் முப்புரம் எரித்து அழிந்தது. ஒவ்வொரு யுகத்திலும் வெவ்வேறு விதமாக அழித்தான் என்பது புராணவரலாற. உலகீரே! இத்தலைவனை நினைந்து வழிபாடு செய்மின்.
குறிப்புரை: இடமருளினன்,கணையினன்,மருவினன் தலைவன் எனப் பொருந்த முடிக்க. தலைமதி - ஒருநாட்பிறை. தலைமையது ஒரு சடை இடை - தலைமையதாகியசடைக்காட்டின் நடுவில். பகைபட்டபொருளாகிய மதி அரவு ஆகிய இவைகள் பகை நீங்கி வாழ ஒரிடத்துஅருளினன் என்பது குறித்தவாறு. நிழல்மழு - ஒளி விடுகின்றமழு. மலை மருவியசிலைதனில் - மேருமலையாகியவில்லில். மதில் - முப்புரங்கள். மனம் மருவினன் - மனம் பொருந்தினன். நலகலைமருவியபுறவு - நல்ல கலைமான்கள்பொருந்திய சிறுகாடு. புறவம் என்ற தலப்பெயர்க் காரணம் புலப்படும்.
Lord Civan holds side by side on His matted crest, the single crescented moon, the Ganges river (Ganga Devi) and the poisonous snake, which are inimical to each other by nature (Here all of them are docile to each other). His hand wields a bright mazhu and a flaming dart. He willed the annihilation of the three walled-citadels by fire, through His mountain bow. He, the Chief of Gods is enthroned in Kazhu-Malam beside woodlands abounding in dotted deers.
வரைபொருதிழியருவிகள்பலபருகொருகடல்வரிமணலிடை
கரைபொருதிரையொலிகெழுமியகழுமலமமர்கனலுருவினன்
அரைபொருபுலியதளூடையினனடியிணைதொழவருவினையெனும்
உரைபொடிபடவுறுதுயர்கெடவுயருலகெய்தலொருதலைமையே.6
வரை பொருதுஇழிஅருவிகள் பல பருகு ஒரு கடல் வரி மணல் இடை,
கரை பொரு திரை ஒலி கெழுமியகழுமலம் அமர் கனல் உருவினன்;
அரை பொரு புலி அதள்உடையினன்;அடிஇணை தொழ,அருவினைஎனும்
உரை பொடிபட உறு துயர் கெட,உயர் உலகு எய்தல் ஒருதலைமையே.
பொருள்: சிவபெருமான் கனல் போலும் சிவந்த திருமேனியை உடையவன். அவன் திருக்கழுமலத்தில்எழுந்தருளிஅருளாட்சி செய்து வருகின்றான். திருக்கழுமலத்தைஅடுத்து பெரிய கடல் உள்ளது. மலைகளைப்பொருதுஇழிகின்றஅருவிகள்பலஇக்கடலில்வந்து சங்கமம் ஆகின்றன. கடலின்கரைகளில்வரிகளாக அமைந்த மணற்பரப்புகள்விளங்குகின்றன. இவ்வூரில்கடல்அலைகளின் ஓசை எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. இங்குள்ள சிவபெருமான் தன் இடுப்பில் புலித்தோலைஆடையாகக்கட்டிக்கொண்டுள்ளான். இவனது இரு திருவடிகளைத்தொழுவார்களுடைய,போக்குவதற்குஅரியனவாகியவினைகன் என்னும் வார்த்தையேபொடிபட்டுவிடும் அவர்களுடைய துயர்கள் நிரந்தரமாக நீங்க,மேல் உலகமாகியவீட்டுலகத்தையும்நிச்சயமாகப்பெறுவார்கள்.
குறிப்புரை: கழுமலத்தில்எழுந்தருளியுள்ளதீவண்ணப்பெருமானின்திருவடியைத் தொழ, வினையென்னும் சொல்லும் பொடி பட உயர்ந்த உலகத்தை அடைதல் துணிபுஎன்கின்றது. அருவிகள் பல பருகு ஒரு கடல் - பல அருவிகளைப்பருகுகின்ற பெரிய கடல். திரை ஒலி கெழுமியகழுமலம் - அலையோசையோடு எப்பொழுதும் கூடியிருக்கிற சீகாழி. உரையும்பொடிபடவே அதன் பொருளாகியவினை பொடிபடுதல்சொல்லாமலேயமையும்என்பதாம்.
The peerless sea that swallows all the waters flowing from the numberless waterfalls that come crashing down the mountains, has a shrine of streaked sands. Lord Civan is enthroned in Kazhu-malam where resounds the roar of waves that dash against the shore. His waist is covered by a tiger skin. If His twin feet are adored, the very name of 'Aru Vinai' would be pulverized, and all grieving sorrows would end. Be assured that the attainment of salvation would then be a certainty.
Note: 'Aru vinai' - Karma well nigh impossible to vanquish. This phrase recurs in the ninth verse.
முதிருறுகதிர்வளரிளமதிசடையனைநறநிறைதலைதனில்
உதிருறுமயிர்பிணைதவிர்தசையுடைபுலியதளிடையிருள்கடி
கதிருறுசுடரொளிகெழுமியகழுமலமமர்மழுமலிபடை
அதிருறுகழலடிகளதடிதொழுமறிவலதறிவறியமே.7
முதிர் உறு கதிர் வளர் இளமதிசடையனை,நற நிறை தலைதனில்;
உதிர்உறு மயிர் பிணை தவிர் தசை உடை புலி அதள் இடை;இருள் கடி
கதிர் உறுசுடர் ஒளி கெழுமியகழுமலம் அமர் - மழுமலி படை,
அதிர் உறு கழல், -அடிகளது அடி தொழும்அறிவுஅலது அறிவு அறியேமே.
பொருள்: சிவபெருமான் திருக்கழுமலத்துள் அமர்ந்து அருள்புரிந்து வருகின்றான். அவன் திருமுடியில் மலர்கள் சூடுவதால் தேன் நிறைந்துள்ளது. உலகில் பயிர்களைமுகிர்விக்கும்ஆற்றல் சந்திர கிரணங்கட்கு உண்டு. அக்கிரணங்கள்வளர்கின்றமதியை இவன் தன் சடையில்வைத்துள்ளான். இவன் தன் இடுப்பில்,தசை தவிர்ந்தும் ஆனால் உதிரத்தக்க மயிர் உதிராமல்பிணைந்தும் உள்ள புலித்தோலைக் கட்டி உள்ளான். இருளை நீக்கும் சூரியனின்சுடர் ஒளி போன்ற ஒளி பொருந்திய மழுவாகியபடையை கையில் ஏந்தி உள்ளான். இவனுடைய கழல் அணிந்த: திருவடிகளைத்தொழும்அறிவுடையவர்களாக நாம் விளங்குவோம். இந்த அறிவின்றி வேறு எந்த அறிவையும் நாங்கள் அறிய மாட்டோம்.
குறிப்புரை: நற நிறை தலைதனில் - தேனிறைந்ததிருமுடியில் முதிர் உறுகதிர் வளர் இளமதி - முதிர்ச்சியடையும்கதிர்கள் வளரும் இளைய ஒரு கலைப்பிறைச்சடையையுடையவனை. உதிர் உறு மயிர்பிணை - உதிரத்தக்கமயிர்கள்உதிராதேபிணைந்திருக்கும்,தவிர் தசையுடைபுலியதள் - கழன்றதசையையுடையபுலித்தோலை உடுத்த இடை - இடையினையுடையவனை. இடை என்பது உடையானைக் காட்டி நின்றது. படையையும்கழலையும் உடைய அடிகள். அடிகளின்திருவடியைத்தொழும்அறிவல்லதுபிறவற்றையறியோம் என்று உறைத்ததிருத்தொண்டைக்கூறியருளியவாறு.
Lord Civan on His nectarean crust, wears a young moon. The rays of the moon accelerate the growth of vegetation; and these rays grow and grow, dense and bright. He wears in His waist a tiger-skin thick with hair that will not fall, but will stay void of flesh. He is enshrined in Kazhu-Malam and His multi-layered and radiant mazhu chases murk away. Our whole knowledge is the sole knowledge of His resounding and ankleted feet, and nothing else.
Note: A young moon: The moon of a single ray.
கடலெனநிறநெடுமுடியவனடுதிறறெறவடிசரணென
அடனிறைபடையருளியபுகழரவரையினனணிகிளர்பிறை
விடநிறைமிடறுடையவன்விரிசடையவன்விடையுடையவனுமை
உடனுறைபதிகடன்மறுகுடையுயர்கழுமலவியனகரதே.
கடல் என நிற நெடுமுடியவன்அடுதிறல்தெற, “அடி சரண்! என,
அடல் நிறை படை அருளிய புகழ் அரவுஅரையினன்,அணி கிளர் பிறை,
விடம் நிறை மிடறு உடையவன்,விரி சடையவன்,விடை உடையவன்,உமை -
உடன் உறை பதி - கடல் மறுகு உடை உயர் கழுமலவியல் நகர் அதே.
பொருள்: சிவபெருமான் உமையம்மையோடுஉறையும் பதி,உயர்ந்த அலைகள் உடைய கடலால்சூழப்பட்டகழுமலம்எனப்படும் பெரிய நகராகும். கருங்கடல் போன்ற கரிய நிறமுள்ளவன்தசக்கரீவன். இவன் வலிமை கெடுமாறு செய்தவன் சிவபெருமான். பின்னர் இலங்கை மன்னனாகிய தசக்கிரீவன் வன்திருவடிகளே சரண் என வேண்ட,அவனுக்கு வலிமை மிக்க வாட்படையையும்,இராவணன் என்ற பெயரையும்,நீண்ட வாழ்நாளையும்அருளிய புகழ் உடையவன். சிவபெருமான் பாம்பை இடையில் கச்சாகக்கட்டியவன். அழகு மிக்க பிறையை தன் தலையில் உடையவன். விடம் தங்கிய கண்டத்தை உடையவன். விரிந்த சடையை உடையவன். விடையைஊர்தியாகக் கொண்டவன். இவனை நாம் போற்றித்துதிப்போமாக.
குறிப்புரை: கடல் என நிறநெடுமுடியவன் - கடலை ஒத்த நிறத்தையுடைய நீண்ட கிரீடத்தைஅணிந்தவனாகிய இராவணன். அடுதிறல்தெற - பிறரை வருத்தும் வலிமை தொலையஎன்றுமாம். அடி சரண் என - திருவடியேஅடைக்கலமாவது என்று கூற,அடல் நிறை படை - கொலை நிறைந்த படையாகியசந்திரகாசம் என்னும் வாள். அரவுஅரையினன் - பாம்பை இடுப்பில் அணிந்தவன். கடல் மறுகு உடை - கடலுங்கலங்குதலை உடைய காலத்து.
The king of Sri Lanka was wearing a sea-hued lofty crown on his head. He once tried to lift mount Kailas, the abode of Lord Civan, and put it aside. He got crushed under the mountain and was stripped of his might and skill. He realised his folly and implored thus "O! Lord Civa! I seek refuge in your holy feet". Lord Civan pardoned and gifted him a divine sword known as 'Chandrakaasam' . This glorious Lord Civan's waist is cinctured with a snake. This Lord wears a lustrous crescent. His neck holds up venom; His matted hair spreads. He rides a Bull. Kazhu-Malam close to the sea, in the lofty and spacious town where He abides with Uma.
கொழுமலருறைபதியுடையவனெடியவனெனவிவர்களுமவன்
விழுமையையளவறிகிலரிறைவிரைபுணர்பொழிலணிவிழவமர்
கழுமலமமர்கனலுருவினனடியிணைதொழுமவரருவினை
எழுமையுமிலநிலவகைதனிலெளிதிமையவர்வியனுலகமே.9
கொழு மலர் உறை பதி உடையவன்,நெடியவன்,என இவர்களும்,அவன்
விழுமையை அளவு அறிகிலர்,இறை;விரை புணர் பொழில் அணி விழவு:அமர்
கழுமலம் அமர் கனல் உருவினன்அடிஇணைதொழுமவர்அருவினை
எழுமையும்இல,நில வகைதனில்;எளிது இமையவர்வியன் உலகமே.
பொருள்: செழுமையான தாமரை மலரைஉறையும்இடமாகக் கொண்ட பிரமன்,திருமால் ஆகிய இருவர்களும்சிவபெருமானதுசிறப்பைச் சிறிதும் அறியார். அப்பெருமான்,மணம் பொருந்திய பொழில்கள்சூழப்பெற்றதும் அழகிய விழாக்கள் பல நிகழ்வதுமாகியகழுமலத்துள்எழுந்தருளிய அழல் உருவினன். அப்பெருமானுடைய திருவடி இணைகளைத்தொழுபவர்களின்நீங்குதற்கரியவினைகள்இப்பூவுலகில் ஏழு பிறப்பின்கண்ணும்இலவாகும். இமையவர்களின் பெரிய உலகத்தை அடைதல் அவர்கட்குஎளிதாகும்.
குறிப்புரை: கொழுமலர்உறைபதி உடையவன் - கொழுவிய தாமரை மலரைஉறையுமிடமாக உடையபிரமன். நெடியவன் - திருமால். அவன் - சிவன். விழுமை - பெருமை. இறையளவுஅறிகிலர் எனவும், நிலவகைதனில் வினை எழுமையும்இல. இமையவர்வியன் உலகம் எளிது எனவும் இயைத்துப் பொருள் காண்க.
The one seated on fresh and bounteous lotus flower, Brahma and also the tall one, Thirumaal - these two know nothing about the magnificence of Lord Civan. He is the flame-hued One, enthroned in ever-festive Kazhu-Malam of fragrant gardens. They who adore His Twin Feet will stand freed of 'aru vinai' whatsoever their embodiments be (i.e., certainly freed in all their successive rebirths rebirths of any).
They will gain with ease, the supernal world.
Note: Ezhumai: It may also mean embodied lives of seven kinds, they being (1) devas, (2) human beings, (3) animals, (4) birds, (5) reptiles, (6) aquatics and (7) Flora.
அமைவனதுவரிழுகியதுகிலணியுடையினரமணுருவர்கள்
சமையமுமொருபொருளெனுமவைசலநெறியனவறவுரைகளும்
இமையவர்தொழுகழுமலமமரிறைவனதடிபரவுவர்தமை
நமையலவினைநலனடைதலிலுயர்நெறிநனிநணுகுவர்களே.10
அமைவனதுவர்இழுகிய துகில் அணி உடையினர்,அமண்உருவர்கள்,
சமையமும்,ஒரு பொருள் எனும் அவை, -சலநெறியன, -அறஉரைகளும்;
இமையவர் தொழு கழுமலம் அமர் இறைவனது அடி பரவுவர்தமை
நமையல வினை;நலன் அடைதலில்உயர்நெறிநனிநணுகுவர்களே!
பொருள்: புத்தர்கள் காவி ஆடையைஅணிபவர்கள். சமணர்கள் ஆடை தரியாதவர்கள். இவர்கள் ஒரு பொருள் எனக் கூறும் சமய நெறிகளும்அறவுரைகளும் வஞ்சனை மார்க்கத்தைவகுப்பன. இதை உணர்ந்ததேவர்கள் இவர்கள் வழியைப்பின்பற்றாமல்சிவபெருமானைத்தொழுகின்றார்கள். அவ்வாறு தொழப்படுகின்ற சிவபெருமான் திருக்கழுமலத்தின்கண்எழுந்தருளிஅருள்புரிந்து வருகின்றான். இவனுடைய திருவடிகளைப்பரவுவார்களைவினைகள்வருத்தா. நலன் அடைதலின் உயர் நெறிகளைஅவர்கள் அடைவார்கள்.
குறிப்புரை: அமைவன - பொருந்துவனவாகிய. துவர்இழுகியதுகிலினர் - மருதந்துவர்ஊட்டினஆடையராகிய புத்தர். அமண்உருவார்கள் - சமணர்கள். ஒருபொருளெனும்சமயமும்,அறவுரைகளும்ஆகிய அவை சலநெறியன - மேற்கூறிய புத்தரும்சாக்கியரும் ஒரு பொருளாகக் கூறும் சமயங்களும், அவற்றில் அவர்கள் கூறும் தர்மோபதேசங்களும் ஆகிய அவைகள் வஞ்சனை மார்க்கத்தைவகுப்பன. நமையல - வருத்தா.'நமைப்புறுபிறவி நோய்'என்னும் சூளாமணிப்பகுதியும்இப்பொருட்டாதல் காண்க. 'நும்மால்நமைப்புண்ணேன்‘என்ற அப்பர் வாக்கும்நினைவுறத்தக்கது. வினை நலன் அடைதலின்நமையலநனிஉயர்நெறிநணுகுவார்கள் என இயைக்க.
The faith, the uniform import and the dharmic precepts of the Buddhists duly robed in Ochre vestments, and also those of the samanars, but constitute deceptive ways. But karma will not assail those that hail our Lord's Feet, who is enthroned in Kazhu-Malam which is adored by the supernals; they are already on the path of virtue that will confer them the lofty beautitude.
பெருகியதமிழ்விரகினன்மலிபெயரவனுறைபிணர்திரையொடு
கருகியநிறவிரிகடலடைகழுமலமுறைவிடமெனநனி
பெருகியசிவனடிபரவியபிணைமொழியனவொருபதுமுடன்
மருவியமனமுடையவர்மதியுடையவர்விதியுடையவர்களே.11
பெருகிய தமிழ்விரகினன்,மலிபெயரவன்; -உறை பிணர்திரையொடு
கருகிய நிற விரிகடல் அடை - கழுமலம்உறைவுஇடம் என நனி
பெருகிய சிவன்அடி பரவிய,பிணை மொழியனஒருபதும் உடன் -
மருவியமனம்உடையவர்மதிஉடையவர்;விதிஉடையவர்களே.
பொருள்: ஞானசம்பந்தன்பரந்துபட்டநூல்களைக்கொண்டுள்ள தமிழ் மொழியை ஆழ உணர்ந்தவன். மிக்க புகழாளன். நீர்த்துளிகளோடுமடங்கும்அலைகளுடன் கருமை நிறம் வாய்ந்த கடலின்கரையில்விளங்குவதுதிருக்கழுமலம். மிகவும் புகழ் பரவிய இவ்வூர்சிவபெருமானின் உறைவிடம் ஆகும். இப்பெருமானின்திருவடிகளைப்போற்றிப்பாடியஅன்பு பிணைந்தஇப்பத்துப்பாடல்களையும் ஓதி மனம் பொருந்த வைக்கும் அன்பர்கள் நிறைந்த ஞானமும்நல்ஊழும் உடையவர் ஆவார்கள்.
குறிப்புரை: தமிழ் விரகனாகியபெயரவன் பரவிய மொழிகள்பத்தும்மருவிய மனம் உடையவர் மதியுடையர்விதியுடையவர்கள்எனக்கூட்டுக. மலிபெயரவன் - நிறைந்த புகழ் உடையவன். உறை பிணர்திரையொடு - நீர்த்துளிகளோடுமடங்குகின்றஅலைகளோடு. பிணைமொழியன - அன்பு பூட்டியமொழிகள்.
குருவருள்: இப்பதிகம்ஒருபதுபாடல்களையும்மருவிய மனம் உடையவர்,நன்மதிஉடையவராவர். அவர் நல்விதி உடையவரும்ஆவர். எனவே,இறைநெறிசேராதார்நல்மதியும்நல்விதியும்உடையவராகமாட்டாராய்இடர்ப்படுவர் என்பது குறிப்பெச்சம்.
Adept at the vastness of Tamil, (Thiru-Gnaana-sambandan), the one of spreading renown - hath sung on the Feet of Civa abiding in Kazhu-Malam close to the sea, dark and immense, the waves of which roll on, and return with all the drops of water, intact. They that treasure in their minds these ten hymns of adoration sung in His sanctifying presence are the ones who have mystical knowledge and are blessed with the gift of liberation.
திருச்சிற்றம்பலம்
19ஆம் பதிகம் முற்றிற்று
உ
சிவமயம்
20.திரு வீழிமிழலை
திருத்தலவரலாறு:
4ஆம் பதிகம் பார்க்க.
திருச்சிற்றம்பலம்
20.திரு வீழிமிழலை
பண் : நட்டபாடை(திருவிராகம்)
ராகம் : கம்பீரநாட்டை
தடநிலவியமலைநிறுவியொர்தழலுமிழ்தருபடவரவுகொ
டடலசுரரொடமரர்களலைகடல்கடைவுழியெழுமிகுசின
விடமடைதருமிடறுடையவன்விடைமிசைவருமவனுறைபதி
திடமலிதருமறைமுறையுணர்மறையவர்நிறைதிருமிழலையே.1
தட நிலவிய மலை நிறுவி,ஓர் தழல் உமிழ்தருபடஅரவு கொடு,
அடல்அசுரரொடுஅமரர்கள்,அலைகடல்கடைவுழி எழும் மிகு சின
விடம்அடைதரும் மிடறு உடையவன்;விடைமிசைவருமவன்;உறை பதி -
திடம்'மலிதரு மறை முறை உணர் மறையவர் நிறை திரு மிழலையே.
பொருள்: தேவர்கள்மரணத்தைவெல்லுவதற்கு அமுதம் உண்ண விரும்பினர். அசுரர்களோடு ஒரு ஒப்பந்தம் பேசி,அதன்படிதிருப்பாற்கடலில் விசாலமான பெரிய மந்தரமலையைமத்தாகநிறுத்தினர். அழல்போலும் கொடிய நஞ்சை உடைய படத்தோடு கூடிய வாசுகி என்னும் பாம்பைக்கயிறாகக் கொண்டு மந்தர மலையில் சுற்றி இரு பக்கங்களிலும்நீளமாக விட்டுக் கொண்டனர். ஒரு பக்கம் தேவர்களும்,மற்றொரு பக்கம் அசுரர்களுமாகநின்று கொண்டு பாம்பாகியகயிற்றை மாறி மாறிஇழுத்துக்கடைந்தனர். வாசுகி என்னும் பாம்பானதுவலிதாங்க முடியாமல் அழல்போலும் தனது கொடிய நஞ்சைஉமிழ்ந்தது. திருப்பாற்கடலில் அமுதம் தோன்றுவதற்குப் பதிலாக,அதனினின்றும் மிகக் கொடிய ஆலகாலம் என்னும் நஞ்சு வெளிப்பட்டது. இரண்டு நஞ்சும் சேர்ந்து மிக உக்கிரமாகத்தேவர்களையும்அசுரர்களையும்,மற்று உலகில் யாவரையும் அழிக்கும் நிலையில் இருந்தது. சிவபெருமான் அந்த ஆலகாலம் என்னும் விஷத்தைவிழுங்கத் தனது கண்டத்தில் நிறுத்தி உலகவர்யாவரையும் அழிந்து போகாமல் காப்பாற்றினார். அவரது கழுத்து கருநீலநிறம்பெற்றது. அவரது வாகனம் விடை (எருது). அவர் அதன்மீது ஏறி வருபவர். இவர் உறையும்தலம் திருவீழிமிழலை. நான்கு வேதங்களையும் முறையாக ஓதி உணர்ந்து உறுதி வாய்ந்த மறையவர்நிறைந்துள்ளபதியும்இந்தத்திருவீழிமிழலையே ஆகும்.
குறிப்புரை: தேவர்கள் பாற்கடல் கடைந்த வரலாறு முதல் மூன்று அடிகளில்குறிக்கப்பெறுகிறது. தடம் நிலவிய மலை - விசாலமாகியமந்தர மலை. அரவுகொடுஅடல்அசுரரொடுஅமரர்கள் அலை கடல் கடை வழி எனப் பிரிக்க. திடம் - மன உறுதி. மறையவர் என்ற பெயர் மறையை முறையே உணர்தலால் வந்தது எனக்காரணக்குறியாதல்விளக்கியவாறு.
An immense mountain was set up and a hooded serpent spitting fury poison, was fastened thereto and the billowy ocean was churned by powerful asuraas and devaas, a soaring and fierce venom arose; It was about to destroy the entire universe. Lo, Lord Civan held it in His throat. He comes riding on the Bull; He abides at the shrine of Thiru-Veezhi-mizhalai where dwell vedic scholars that have imbibed the import of scriptures in the ordained way, with firmness of mind.
Note: An immense mountain: It is called Mantara. A hooded serpent: It is known as Vaasuki.
தரையொடுதிவிதலநலிதருதகுதிறலுறசலதரனது
வரையனதலைவிசையொடுவருதிகிரியையரிபெறவருளினன்
உரைமலிதருசுரநதிமதிபொதிசடையவனுறைபதிமிகு
திரைமலிகடன்மணலணிதருபெறுதிடர்வளர்திருமிழலையே.2
தரையொடுதிவிதலம்நலிதருதகுதிறல் உறு சலதரனது
வரை அன தலை விசையொடுவருதிகிரியை அரி பெற அருளினன்;
உரை மலிதருசுரநதி,மதி,பொதி சடையவன்;உறைபதி - மிகு
திரை மலி கடல் மணல் அணி தரு பெறு திடர் வளர் திரு மிழலையே.
பொருள்: சலந்தரன் என்னும் அசுரன் தனது வலிமையால்மண்ணுலக்தோரையும், விண்ணுலகத்தோரையும்நலிவுறுத்தி வந்தான். அவனது மலை போன்ற தலையை அறுத்து வீழ்த்தியது சிவபெருமான் தோற்றுவித்த சக்கராயுதம். அதனை பெறுவதற்குத் திருமால் வேண்ட,சிவபெருமான் அவருக்கு அதைக்கொடுத்தருளினார். சிவபெருமானதுசடைமுடியில்புகழால் மிக்க கங்கை நதியும்,சந்திரனும்பொதிந்துள்ளன. இவன் விரும்பி உறையும் தலம்,பெரிய அலைகளை உடைய கடற்கரையையும்,மணலால் அழகு பெறும் மணல் மேடுகளையும் நிரம்ப உடைய திருவீழிமிழலை ஆகும்.
குறிப்புரை: முதல் இரண்டடிகள்சலந்தரன்சிரங்கொய்தசக்கரத்தைத்திருமாலுக்குஅருளியதுகுறிக்கப்படுகிறது. திவிதலம் - விண்ணுலகம். சலதரன் - சலந்தராசுரன். வரையன தலை - மலையையொத்த அவனது தலை. திகிரி - சக்கராயுதம்,திருமால் ஆயிரம் தாமரை கொண்டுஅருச்சித்தமைக்காகச்சக்கராயுதம்அருளினார் என்பது இத்தல வரலாறு. உரைமலிதரு - புகழ் மலிந்த. சுரநதி - தேவகங்கை. கடற்கரை மணல் மேடுகள் நிறைந்த திருவீழிமிழலை என்பது சிந்திக்கத்தக்கது. அவர்கள் காலத்துஇத்தலம் நெய்தல் வேலியாகஇருந்திருக்கும் போலும்.
Lord Civan graciously gifted to Thirumaal the divine wheel that severed away swiftly the hill-like head of Jalandra whose might put to misery the earth and the deva- loka. He wears on His matted crest the celebrated celestial Ganga and the moon. He abides at the shrine of Thiru-Veezhi-Mizhalai adorned with huge sand dunes shored up by the billowy seas.
Note: Jalandara - Civa in the hoary past, cast away His 'Wrath' against Indira into the sea. Lord Civan's wrath transformed itself into a baby in the sea and was brought up by Varunan. This baby, grew up, assumed the form of an asura who came to be called Jalandara. The asura became very mighty in strength and ultimately challenged Lord Civa Himself. At this, Civa drew a diagram of a sprocket wheel on the ground and bade the asura to lift it. As he lifted it above his head, it sliced him into two halves. Instantly he perished and the wheel was added to Lord Civa's weaponry. Vishnu desired to possess it. At Thiru-Veezhi-mizhalai, Vishnu hailed Lord Civa daily with thousand lotus flowers. One day Lord Civa caused one flower out of the 1000 brought by him that day to vanish. However, Vishnu completed his worship by plucking out one of his own eyes and offered it at Civa's Holy Feet in lieu of the missing lotus flower. Pleased with his devotion, Lord Civa gifted to Vishnu, the 'wheel like weapon'. This wheel came to be known as Sudarsana, which Thirumaal is keeping in his right hand.
மலைமகடனையிகழ்வதுசெய்தமதியறுசிறுமனவனதுயா்
தலையினொடழலுருவனகரமறமுனிவுசெய்தவனுறைபதி
கலைநிலவியபுலவர்களிடர்களைதருகொடைபயில்பவர்மிகு
சிலைமலிமதிள்புடைதழுவியதிகழ்பொழில்வளர்திருமிழலையே.3
மலைமகள் தனைஇகழ்வுஅது செய்த மதி அறு சிறுமனவனது உயர்
தலையினொடு அழல் உருவன கரம் அற முனிவு செய்தவன் உறைபதி -
கலை நிலவியபுலவர்கள் இடர் களைதரு கொடை பயில்பவர் மிகு,
சிலை மலிமதிள் புடை தழுவிய,திகழ் பொழில் வளர்,திரு மிழலையே.
பொருள்: தக்கன்அறிவற்ற அற்ப புத்தியை உடையவன். அவன் தான் செய்த யாகத்தின்போதுமலைமகளாகிய பார்வதி தேவிக்கு உரிய மரியாதை செய்யத்தவறினான். இதனால் சினங்கொண்ட சிவபெருமான் வீரபத்திரரைக் கொண்டு தக்கனைத்தண்டித்தான். தக்கன்தலை அறுபட்டது. அக்கினி தேவனின் கை அறுபட்டது. இவ்வாறு தனது சினத்தைவெளிப்படுத்திய சிவபெருமான் விரும்பி உறையும் தலம் திருவீழிமிழலை. இந்த ஊரைச்சுற்றிப் பெரிய மதில்கள் உள்ளன. செழிப்பான சோலைகள்வளர்ந்தோங்கிவிளங்கின. கலைஞானம் நிரம்பிய புலவர்களின்வறுமைத் துன்பம் நீங்க நிறைந்த செல்வத்தை வாரி வழங்கும் கொடையாளர்கள் பலர் இங்கு வாழ்ந்து வந்தனர்.
குறிப்புரை: முதல் இரண்டு அடிகளில்தக்கன்சிரங்கொய்தவரலாறும்,அக்கினியைக்கையரிந்தவரலாறும்குறிக்கப்படுகின்றன. மதியறுசிறுமனவன் - புத்தி கெட்ட சிறுமனத்தையுடையதக்கன். உயர்தலை - மனிதத்தலை. அழல் உருவன கரம் - தீவடிவினனாகியஅக்கினியினது கை. சிலை மலிமதிள் - மலையைப் போன்ற மதில்கள். இத்தலத்திலுள்ளகொடையாளிகள்புலவர்களின்துன்பங்களைக்களைகின்றார்கள்.
The addle-brained Dakshan arranged for a very big yaaga. Though he invited all the celestials to attend, he did not invite Lord Civan or His Consort, daughter of Himalayan King as well of himself to grace the function and to share the oblation first. For this kind of attitude of Dakshan, Lord Civan commandeered Veerabadrar to teach him a lesson. Veerabadrar went to the yaga area and severed the head of Dakshan, cut off the hands of god of fire and did havoc which made all the celestials to run away. This Lord Civan abides at the shrine in Thiru-Veezhi-mizhalai. High walls and bright gardens surround the city. Many munificent patrons are living in this town who by their generosity remove the misery of bards who are well-versed in scriptures.
Note: Daksha: Civa married Daksha's daughter called Daakshaayani. Daksha grew extremely haughty. He slighted Lord Civa and to spite Him, he commenced a Yaaga. Neither Lord Civa nor His consort was invited to attend the Yaaga. Yet, His consort insisted on Her attending it, and did attend it. Lord Civa's remonstrances notwithstanding, Daksha ignored and insulted Her, and also Lord Civa. Daakshaayani immolated Herself in the fire of Her chastity. Civa bade Veerabadra to teach him a lesson. This he did. He beheaded Daksha, cut away the hands of Agni and punished all the participants of the Yaaga.
மருவலர்புரமெரியினின்மடிதரவொருகணைசெலநிறுவிய
பெருவலியினனலமலிதருகரனுரமிகுபிணமமார்வன
இருளிடையடையுறவொடுநடவிசையுறுபரனினிதுறைபதி
தெருவினில்வருபெருவிழவொலிமலிதரவளர்திருமிழலையே.4
மருவலர் புரம் எரியினில்மடிதர ஒரு கணை செலநிறுவிய
பெருவலியினன்,நலம் மலிதரு கரன்,உரம் மிகு பிணம் அமர் வன
இருள் இடை அடை உறவொடு நட விசை உறு பரன்,இனிது உறைபதி -
தெருவினில்வருபெருவிழவு ஒலி மலிதர வளர் திரு மிழலையே.
பொருள்: தேவர்களுக்குப்பகைவர்களாகியதிரிபுரத்துஅசுரர்களுடைய மூன்று கோட்டைகளையும் கணை ஒன்றைச் செலுத்தி அழித்தபெருவலி படைத்தவன் சிவபெருமான். அவன் நன்மைகள் நிறைந்த திருக்கரங்களை உடையவன். வலிய பிணங்கள்நிறைந்த சுடுகாட்டில்நள்ளிருட்போதில் சென்று,அங்குத் தன்னை வந்தடைந்தபேய்களோடுநடனமாடி இசை பாடுபவன். இப்பரமன் மகிழ்ந்து உறையும் பதி,தெருக்கள் தோறும் நிகழும் பெருவிழாக்களின் ஆரவாரம் நிறைந்து வளரும் திருவீழிமிழலை ஆகும்.
குறிப்புரை: இது இறைவனதுதிரிபுரமெரித்தவீரத்தையும்,கை வண்மையையும்,சுடுகாட்டில் நடனமாடிய செயலையும்குறிப்பிடுகிறது. மருவலர் - பகைவர்;திரிபுராதிகள். நலம் மலிதரு கரன் - நன்மை மிகுந்த திருக்கரங்களை உடையவன். உரமிகுபிணம் - வலிமைமிக்கபிணங்கள். அமர்வன இருள் இடைஅடைஉறவொடுநடைவிசைஉறுபரன்எனப்பிரிக்க.
Lord Civan, the One of immense power, fixed a dart to His bow and had the three hostile citadels gutted with fire. His hand confers weal; He the supreme One, dances with Vigour at dead of night, in the crematory, where corpses of the mighty burn. He sweetly abides at Thiru-Veezhi-Mizhalai the streets of which resonate with the great and grand festive uproar.
அணிபெறுவடமரநிழலினிலமர்வொடுமடியிணையிருவர்கள்
பணிதரவறநெறிமறையொடுமருளியபரனுறைவிடமொளி
மணிபொருவருமரகதநிலமலிபுனலணைதருவயலணி
திணிபொழிறருமணமதுநுகரறுபதமுரறிருமிழலையே.5
அணி பெறு வடமரநிழலினில்,அமர்வொடும்அடிஇணைஇருவர்கள்
பணிதர,அறநெறி மறையொடும்அருளியபரன்உறைவு இடம் - ஒளி
மணி பொரு வருமரகதநிலம்மலி புனல் அணை தரு வயல் அணி,
திணி பொழில் தரு மணம் மது நுகர் அறுபதம்முரல்,திரு மிழலையே.
பொருள்: சனகாதிமுனிவர்கள் நால்வர். சனகர்,சனந்தனர்,சனாதனர் மற்றும் சனற்குமாரர்ஆகிய இந்நால்வரும்சிவபெருமானை வணங்கி அறத்தைஉபதேசிக்குமாறுவேண்டினர். சிவபெருமான் அழகிய கல்லால மரத்தின் நிழலில்எழுந்தருளியிருந்து அறநெறியை வேதங்களோடு அவர்களுக்கு உபதேசித்து அருளினார். முன்னவர்கள் இருவரும் ஒருபுறம் அமர,பின்னவர்கள் இருவரும் மற்றொருபுறம் அமர்ந்து பணிவோடு கேட்டு மகிழ்ந்தனர். திருவீழிமிழலையில்ஓடுகின்றநதியின் நீர் நிலமெல்லாம்பரவிச்செல்லுகின்றது. அந்த நதி ஒளி பொருந்திய மணிகளையும்,ஒப்பில்லாதமரகதத்தையும்அடித்துக் கொண்டு வந்து இங்குக்கரையில் சேர்க்கின்றது. ஆதலால் அவ்வூரில் எல்லா விதமான வளங்களும்நிறைந்து விளங்குகின்றன. இத்துணை செழிப்பான திருவீழிமிழலையில் சிவபெருமான் விரும்பி உறைந்து அருள்புரிந்து வருகிறார்.
குறிப்புரை: இது ஆலின்கீழ் அறம் நால்வர்க்குஉரைத்த வரலாறு அறிவிக்கிறது. வடமரநிழல் - ஆலநிழல். அமர்வு - விருப்பம். இருவர்கள் - சனகர் முதலிய நால்வரும்,இடப்பக்கத்தும்வலப்பக்கத்தும்இருவர் இருவராகஇருந்தமைகருதற்குரியது. மறை - இருந்ததனைஇருந்தபடி இருந்து காட்டும் அநுபவநிலை. பொழில்தருமணமது நுகர் அறுபதம்முரல்திருமிழலைஎனப்பிரிக்க.
Lord Civan, the Supreme One, who seated in the shade of the ornate Banyan tree , graced the two pairs of rishis that hailed His feet and inculcated them with the aims of mankind and about objects of human pursuit such as 'Virtue', 'Wealth', 'Happiness' & 'Salvation' and also the explicit meanings of Vedas and Aagamas. He abides at the shrine in Thiru-Veezhi-mizhalai enriched by the river that carries with it ruby and sapphire and fertilises the arable lands. In the groves of Mizhalai the six-legged bees, sip the fragrant honey in flowers and hum in delight.
வசையறுவலிவனசரவுருவதுகொடுநினைவருதவமுயல்
விசையனதிறன்மலைமகளறிவுறுதிறலமர்மிடல்கொடுசெய்து
அசைவிலபடையருள்புரிதருமவனுறைபதியதுமிகுதரு
திசையினின்மலர்குலவியசெறிபொழின்மலிதருதிருமிழலையே.6
வசை அறு வலி வனசரஉரு அது கொடு,நினைவு அருதவம்முயல்
விசையனதிறல் மலைமகள் அறிவுஉறுதிறல் அமர் மிடல்கொடு செய்து,
அசைவு இல படை அருள் புரிதருமவன்உறைபதி அது - மிகு தரு
திசையினில் மலர் குலவியசெறிபொழில்மலிதரு திரு மிழலையே.
பொருள்: அருச்சுனன் துரியோதனாதியரைப் போரில் வென்று வெற்றி அடைய சிவபெருமானிடம் இருந்து பாசுபதம் என்னும் அஸ்திரம் பெற விரும்பி,நினைதற்கும் அரிய, கடுந்தவம்புரிந்தான். சிவபெருமான் குற்றமற்ற வலிய வேடர் உருவந்தாங்கிஉமையம்மையோடு அருச்சுனன் முன் தோன்றி,தான் யாரென்று காட்டிக் கொள்ளாமல், அவனுடன் போர் புரிந்து,அவனுடைய வில்,அம்புகளை அழித்து மல்யுத்தம் செய்து அவனைத் தரையில் வீழ்த்தித் தோல்வி அடையச் செய்தான். பின்னர் சிவபெருமான் தன் வேடஉருவத்தைநீக்கத்,தன் சுயரூபத்தைக் காட்டி அவனுக்கு அருள்புரிந்தான். தோல்வி அடையக்கூடாத பாசுபதம் என்ற கணையையும் அவனுக்கு வழங்கினான். இவன் விரும்பி உறையும்ஊர்திருவீழிமிழலை ஆகும். இவ்வூரின்எல்லாத்திசைகளிலும் மரங்கள் செறிந்துவானளாவவளர்ந்துள்ளன. அங்குள்ள சோலைகளில்மணமுன்ள மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன.
குறிப்புரை: இது விசயன் வீரத்தை உமாதேவிக்குக்காட்டிப் பாசுபதம் அருளிய வீரம் குறிப்பிடுகிறது. வசையறு வலி - குற்றமற்ற வலிமை. வனசர உருவு - வேட உருவம். நினைவருதவம் - முனிவர் எவரும் நினைத்தற்கரியகடுந்தவம். மிடல் - வலிமை. அசைவில படை - தோற்காத பாசுபதம் என்ற அஸ்திரம்.
Arjuna performed inconceivably great penance to get the invincible divine weapon (Paasupatha Astram -) from Lord Civan. Lord Civan assumed a flawless guise of a hunter and faced Arjunan; fought against him and defeated. Then Lord Civan showed His real form and blessed him with the divine weapon. This Lord Civan abides in the shrine of Thiru-Veezhi-mizhalai rich in dense gardens the flowers of which burgeon out in bunches in all the expanding directions.
Note: The invincible weapon - Paasupata Astra.
நலமலிதருமறைமொழியொடுநதியுறுபுனல்புகையொளிமுதல்
மலரவைகொடுவழிபடுதிறன்மறையவனுயிரதுகொளவரு
சலமலிதருமறலிதனுயிர்கெடவுதைசெய்தவரனுறைபதி
திலகமிதெனவுலகுகள்புகழ்தருபொழிலணிதிருமிழலையே.7
நலம் மலிதருமறைமொழியொடு,நதிஉறுபுனல்,புகை,ஒளிமுதல்,
மலர் அவைகொடு,வழிபடு திறல் மறையவன் உயிர் அது கொளவரு
சலம் மலிதருமறலிதன்உயிர்கெட,உதைசெய்தஅரன்உறைபதி -
“திலகம் இது!” என உலகுகள்புகழ்தரு,பொழில் அணி,திரு மிழலையே.
பொருள்: மறையவனாகிய மார்க்கண்டேயன் இறைவழிபாடு செய்வதற்கு நன்மைகள்பலவும்நிறைந்த வேத மந்திரங்களை ஓதி,ஆற்றுநீர்,நறுமணப் புகை,தீபம்,மலர்கள் ஆகியவற்றைக்கொண்டு சிவபெருமானை நோக்கி நாடோறும் பூசனை புரிந்து வழிபாடு செய்து வந்தான்.இவன் உயிரைக் கவர வந்த வஞ்சகம் மிக்க காலனின் உயிர் கெடுமாறு சிவபெருமான் தன் காலால் உதைத்தான். இவன் விரும்பி உறையும் பதி உலக மக்கள் திலகம் எனப்புகழ்வதும், சோலைகள்சூழ்ந்ததுமானதிருவீழிமிழலை ஆகும்.
குறிப்புரை: இது மார்க்கண்டேயற்காகக்காலனைஉதைத்தவரலாற்றைக்கூறுகிறது. மறைமொழியொடு - வேதமந்திரங்களோடு. நதியுறு புனல் - தேவகங்கையின்திருமஞ்சனதீர்த்தம். புகை ஒளி முதல் - தூபம்,தீபம் முதலான ஆராதனைப் பொருள்கள். மறையவன் - மார்க்கண்டேயன். சலம் மலிதருமறலி - வஞ்சம் மிகுந்த இயமன். உலகுகள் திலகம் இது எனப் புகழ் தரு பொழில்அணிமிழலைஎன மாறிக்கூட்டுக.’செய்தவன் உறைபதி‘என்றும் பாட பேதம் உண்டு.
The young lad Maarkandeyan was well-versed in the scriptures and was an ardent devotee of Lord Civan. He used to hail and adore Lord Civan with weal conferring Vedic mantras, sacred water, incense and ritualistic lighting and with bright flowers. Yama came to snatch the life of Maarkandeyan. Lord Civan kicked Yama (god of death) who died instantly. This Lord Civan abides in the shrine of Thiru-Veezhi- mizhalai abounding in gardens and hailed by all the worlds thus; "This indeed is our tilaka'!
Note: Tilak(a): "Mark on Hindu's forehead for sectarian distinction or for beauty". (The little Oxford Dictionary) Tilaka is the hall mark of auspiciousness.
அரனுறைதருகயிலையைநிலைகுலைவதுசெய்ததசமுகனது
கரமிருபதுநெரிதரவிரனிறுவியகழலடியுடையவன்
வரன்முறையுலகவைதருமலர்வளர்மறையவன்வழிவழுவிய
சிரமதுகொடுபலிதிரிதருசிவனுறைபதிதிருமிழலையே.8
அரன்உறைதருகயிலையை நிலைகுலைவு அது செய்த தசமுகனது
கரம் இருபதும்நெரிதர விரல் நிறுவிய கழல் அடி உடையவன்;
வரல்முறை உலகு அவை தரு,மலர் வளர்,மறையவன் வழி வழுவிய
சிரம் அது கொடு பலி திரிதரு சிவன்;உறை பதி - திரு மிழலையே.
பொருள்: சிவபெருமான் உமையம்மையோடுவீற்றிருப்பது கயிலைமலை. இலங்கை மன்னனான தசமுகன் விண் வழி தனது புட்ப விமானத்தில் செல்லும் போது,கயிலை மலை நேர் பாதையில் இருந்தது. அதனைப் பெயர்த்து எடுத்து நகர்த்த முயற்சி செய்தான். சிவபெருமான் தன் கால்விரலால் கயிலை மலையின் உச்சியில்அழுத்தினான். தசமுகனதுபத்துத்தலைகளும்,இருபது கரங்களும்நெரிந்தன. இவ்வாறு ஊன்றிய சிவபெருமான் திருவடிகளில்வீரக்கழல்கள்அணிந்துள்ளான். வரன் முறையால்உலகைப் படைக்கும் பூவின் நாயகனான பிரமன் தனது ஆணவத்தால்விளைந்தஅறியாமையினால்சிவபெருமானை இகழ்ந்தான். அவ்வாறு தவறு இழைத்தவனுக்குமறக்கருணையால்உண்மை அறிவைப்புகட்ட விரும்பிய சிவபெருமான்,ஐந்தாயிருந்த அவன் சிரங்களில்ஒன்றைப்பைரவரைஅனுப்பிக்கிள்ளி எடுத்து விட்டான். பிரம்மாவின் அந்த மண்டை ஓட்டினைச் சிவன் தனது பலிப்பாத்திரமாகக் கொண்டு,பலியேற்றுத்திரிகின்றான். அவன் விரும்பி உறையும் பதி திருவீழிமிழலை ஆகும்.
குறிப்புரை: இது வழக்கம்போல இராவணன் வரலாறு கூறுகிறது. தசமுகன் - இராவணன். வரன்முறை உலகவைதரும்மலர்வளர் மறையவன் - அந்தந்த ஆன்மாக்களுக்குவகுக்கப் பெற்ற நியதி தத்துவத்தின்வழிநின்று உலகம் உடல் போகம் இவற்றைப்படைக்கின்ற பிரமன். வழிவழுவிய - சிவபெருமானைவழிபட்டு நில்லாமல்முனைத்து நின்று இகழ்ந்துரைத்தலாகிய தவறு செய்த.
Lord Civan is the ankleted One who pressed with His toe and crushed the twenty hands of the king of Sri Lanka - Dasakreevan who tried to lift Mount Kailas abode of Lord Civan. Lord Civa roams about seeking alms (from people) holding in His hand the skull of Brahma, as a begging bowl. Brahma is seated on the lotus. (The skull plucked out when Brahma deviated from the righteous path). Brahma is the Creator of the world.
அயனொடுமெழிலமர்மலர்மகள்மகிழ்கணனளவிடலொழியவொர்
பயமுறுவகைதழனிகழ்வதொர்படியுருவதுவரவரன்முறை
சயசயவெனமிகுதுதிசெயவெளியுருவியவவனுறைபதி
செயநிலவியமதின்மதியதுதவழ்தரவுயர்திருமிழலையே.9
அயனொடும் எழில் அமர் மலர்மகள் மகிழ் கணன்,அளவிடல் ஒழிய,ஓர்
பயம் உறு வகை தழல் நிகழ்வது ஓர் படி உரு அது வர,வரல்முறை,
“சயசய! என மிகு துதி செய,வெளி உருவிய அவன் உறைபதி -
செயம்நிலவியமதிள் மதி அது தவழ் தர உயர் திரு மிழலையே.
பொருள்: திருமாலும்பிரம்மாவும்சிவபெருமானது அடிமுடி தேடிக் காண முடியாத நிலையில் அவன் ஒரு சோதிப்பிழம்பாய்த்தோன்றியதோற்றத்தைக் கண்டு அஞ்சி, அவ்விருவரும் முறையாக சயசயஎனப்போற்றித் துதி செய்தனர். இவ்வாறு வணங்கப்பட்டஅண்டங் கடந்த அச்சிவபெருமான் விரும்பி உறையும் பதி திருவீழிமிழலை ஆகும். இங்குள்ள வெற்றி விளங்கும் உயர்ந்த மதில்களின் மேல் சந்திரன் தோய்ந்து செல்லுகின்றான்.
குறிப்புரை: இது அயனும்மாலும் அறியாத அழல் உருவாய் நின்ற வரலாற்றை அறிவிக்கிறது. மலர் மகள் மகிழ் கணன் - திருமகள் மகிழும்கண்ணனாகிய திருமால். தழல் நிகழ்வதொர்படிஉருவது வர - தீப்பிழம்பாக ஒளிரும் திருமேனி பொருந்த,வெளி உருவிய அவன் - ஆகாயத்தைக் கடந்த அவன்;செயம்நிலவிய மதில் - வெற்றி விளங்குகின்ற மதில்.
(Once) Brahma, and Vishnu the Consort of the Goddess on the lotus, got scared at the sight of growing pillar of Fire and gave up their quest of the top and the base of the fiery column, the form of which, Lord Civa assumed. Lord Civa penetrated into realms beyond the vault of heaven upon which they both adored Him with the words "His indeed is true victory"! Verily He is enshrined in the sublime Thiru-Veezhi- Mizhalai over whose high and victorious walls, the moon appears and seems to sail.
இகழுருவொடுபறிதலைகொடுமிழிதொழின்மலிசமண்விரகினா
திகழ்துவருடையுடல்பொதிபவர்கெடவடியவர்மிகவருளிய
புகழுடையிறையுறைபதிபுனலணிகடல்புடைதழுவியபுவி
திகழ்சுரர்தருநிகர்கொடையினர்செறிவொடுதிகழ்திருமிழலையே.10
இகழ் உருவொடு பறி தலைகொடும்இழிதொழில்மலிசமண்விரகினர்,
திகழ் துவர்உடை உடல் பொதிபவர்,கெட,அடியவர் மிக அருளிய
புகழ் உடை இறை உறை பதி - புனல் அணி கடல் புடை தழுவிய புவி
திகழ் சுரர்தருநிகர்கொடையினர்செறிவொடு திகழ் திரு மிழலையே.
பொருள்: சமணர்கள் மிகவும் தந்திரசாலிகள். பிறரால் இகழத்தக்க வடிவம் உடையவர்கள். உரோமங்களைத்தலையினின்றும் பறித்து எடுப்பதால்முண்டிதமான (முடி இல்லாத தலைமுண்டமாக) தலையோடுதிரிபவர்கள். சாக்கியர்கள்எனப்படும்புத்தர்கள்,காவி ஆடையைஉடலில் போர்த்திக் கொண்டு திரிபவர்கள். இவ்விருதிறத்தார்களின்அறிவற்ற கொள்கைகள் அழிந்தொழிய சிவபெருமான் தன் அடியவர்களுக்கு மிகவும் அருள்புரிபவனும்,புகழனுமாகவிளங்கினான். இவன் விரும்பி உறையும் பதி திருவீழிமிழலை ஆகும். இப்பதி,நீர் வளம் மிக்கது. கடலாற்சூழப்பட்டது. கற்பகவிருட்சத்தைப் போன்ற கொடையாளர் மிக்கு இங்கு வாழ்கின்றனர்.
குறிப்புரை: இது சமணர் கெட அடியவர்க்கருளியதைஅறிவிப்பது. இகழ் உரு - பிறரால் இகழத்தக்கவடிவம். தவர் உடை உடல் பொதிபவர் - உடல் முழுவதும் போர்த்து மூடும் புத்தர். சுரர்தரு நிகர் கொடையினர் - கற்பகவிருட்சத்தை ஒத்த கொடையினை உடையவர்.
Lord Civa is the celebrated Lord who graces abundantly His servitors while He crushes the base deeds of the deceitful samanars - the men of ignoble form, and also the Buddhists who shroud their bodies with ochre vestments. He abides at the shrine of Thiru-Veezhi-mizhalai in the sea-braced land and which is resplendent with the presence of patrons (Philanthropists) like unto the Karpaka.
Note: Karpaka - The celestial wish yielding tree.
சினமலிகரியுரிசெய்தசிவனுறைதருதிருமிழலையைமிகு
தனமனர்சிரபுரநகரிறைதமிழ்விரகனதுரையொருபதும்
மனமகிழ்வொடுபயில்பவரெழின்மலர்மகள்கலைமகள்சயமகள்
இனமலிபுகழ்மகளிசைதரவிருநிலனிடையினிதமர்வரே.11
சினம் மலி கரி உரி செய்த சிவன் உறைதரு திரு மிழலையை,மிகு
தனமனர்சிரபுரநகர் இறை - தமிழ்விரகனது - உரைஒருபதும்
மன மகிழ்வொடு பயில்பவர்,எழில் மலர்மகள்,கலைமகள்,சயமகள்,
இனம் மலி புகழ்மகள்,இசைதர,இருநிலன் இடை இனிது அமர்வரே.
பொருள்: தாருகாவனத்துரிஷிகள் வேள்வி செய்து அதனின்று ஒரு கொடூரமான யானையை உருவாக்கி சிவபெருமானை அழித்து வர ஏவினார்கள்.சினவேகத்தோடு வந்த யானையை சிவபெருமான் மடக்கிப்பிடித்து அதன் தோலைஉரித்துத் தன் உடலில் போர்த்துக் கொண்டான். இவன் விரும்பி உறையும் ஊர் திருவீழிமிழலையாகும். மிக்க செல்வங்களால் நிறைந்த மனமகிழ்வுடையவர்கள் வாழ்வது சிவபுரம் என்னும் சீகாழிஊராகும். இவ்வூரில்அவதரித்த மன்னன் போன்றவனும்,தமிழ் விரகனுமாகியஞானசம்பந்தன்இத்திருப்பதிகப்பத்துப்பாடல்களையும் பாடி அருளினான். இப்பாடல்களைமனமகழ்வோடுபயில்பவர்கள்,அழகிய திருமகள்,கலைமகள்,சயமகள்அவர்க்குஇனமான புகழ்மகள் ஆகியோர் தம்பால்பொருந்தப்,பெரிய இவ்வுலகின்௧ண் இனிதாகவாழ்வர்.
குறிப்புரை: இது பயன்கூறித்திருக்கடைக்காப்பருளுகிறது. தனம் மிகு மனர் - செல்வம் மிகுந்த மனத்தை உடையவர். சிரபுரம் - சீகாழி. இப்பதிகத்தைப்பரிவொடுபயில்வார் திருமகள் கலைமகள் வெற்றி மகள் புகழ்மகள் பொருந்தப் பூமியில் நீடுவாழ்வார்என்பதாம்.
The adept in Tamil - the Prince of Civapuram where abide spiritual men of opulence - hath sung of the shrine Thiru-Veezhi-Mizhalai of Lord Civa who peeled off the hide of the raging and wrathful elephant. They that cultivate learning these ten verses with joy - pervading minds, will sweetly dwell on this great earth, blessed by the Goddess of the beautiful flower, the Goddess of Arts and Sciences the Goddess of Triumph and the Goddess that confers fame (on men).
Note: This verse lists the triad of Lakshmi, Saraswati and Durga and also the transcendental Goddess renowned as Raja Rajeswari.
திருச்சிற்றம்பலம்
20ஆம் பதிகம் முற்றிற்று
சிவமயம்
21.திருச்சிவபுரம்
திருத்தலவரலாறு:
திருச்சிவபுரம்என்கின்றதிருத்தலமானதுசோழநாட்டுக் காவிரி தென்கரைத் தலம் ஆகும். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து பேருந்துகளில்செல்லலாம். தனபதி அரசன் தன் சாபவிமோசனத்திற்காக ஒரு பிராமணக் குழந்தையை வாங்கித்தந்தையும்தாயும்பிடிக்கச்சோமவாரசிவராத்திரியில் அறுத்து அபிஷேகிக்க,அம்பாள் வெளிப்பட்டு,அந்தக் குழந்தைக்குஅநுக்கிரகித்தார் என்பது செவிவழிச்செய்தியான வரலாறு. வெள்ளைப்பன்றியாகி திருமால் வழிபாடு செய்த தலம். சுவாமி பெயர் சிவபுரநாதர். அம்மை பெயர் சிங்காரவல்லி. தீர்த்தம் சந்திர புஷ்கரணி. கார்த்திகைச்சோமவாரங்களில் தீர்த்த விசேஷம். கடைசிச்சோம வாரத்தில் உற்சவம். அரசியலார்1927இல்படியெடுத்த272 முதல்281 வரை உள்ள10கல்வெட்டுக்கள் உள்ளன.
பதிக வரலாறு:
திருநறையூச்சித்தீச்சரம் முதலிய தலங்களைவணங்கிப்பதிகப்பணி செய்து, திருஅரிசிற்கரைப்புத்தூரில் இருக்கின்ற காலத்து,திருஞானசம்பந்தப் பிள்ளையார் திருச்சிவபுரத்திற்குஎழுந்தருளினார்கள். இத்தலம் திருமால் வெள்ளைப்பன்றியாய்ச்சிவபெருமானைவழிபட்டதலமாதலின் அங்கே எழுந்தருளியிருக்கின்ற இறைவன் திருவடியைவணங்கிப்’புவம்வளி‘என்னும்இப்பதிகத்தைஅருளிச் செய்தார்கள். சிவனேஐந்தொழிலைஆற்றும் முதல்வன். ஐந்தொழில் பதவிகளில் இருப்பார் அனைவரும் சிவன் அருளைத் தாங்கி நின்றேஆற்றுகின்றனா். அந்தச்சிவனை அடையும் நெறிகள் தாசமாரக்கம்,சற்புத்திர மார்க்கம், சகமார்க்கம்,சன்மார்க்கம் என்பன. அந்தந்த நெறிகளில்வழுவாது நின்றார் சாலோகம்,சாமீபம், சாரூபம்,சாயுச்சியம் ஆகிய முத்திகளைஎய்துகின்றனர். அவனைச்சிவபுரத்தில்வழிபடுகின்றவர்கள்நிலமிசை நிலை பெறுவர். கலைமகள்,அலைமகள்,வெற்றிமகள் அருள் பெறுவர். எல்லா நன்மையும் பெறுவர். இதனைச் சேக்கிழார் பெருமான்’வாங்குமிசைத்திருப்பதிகம்‘என்பார்கள்.
THE HISTORY OF THE PLACE
21. THIRU-CH-CHIVA-PURAM
Thiru-ch-chiva-puram is a sacred place in Chola Naadu on the south bank of river Cauvery. It can be reached by bus from Kumbakonam in Thanjai district. According to folklore, a king, Danapathi, with a view to get relief from a curse, bought a Brahmin child and cut it up to anoint the deity as it was held by its father and mother on a certain Sivaraaththiri falling on a Monday and that the Goddess showed her Grace to that child. The Lord's name is Sivapuranaathar and the Goddess's is Singaaravalli. The holy ford is Chandhirapushkarani. Mondays in the month of Kaarthigai are considered special for bathing in this ford. The last Monday of that month is celebrated as a festival. There are 10 inscriptions, from No. 272 to 281, which have been copied by the government epigraphists.
INTRODUCTION TO THE HYMN
Adoring many shrines commencing from Naraiyur Siddheeswaram, the young saint arrived at Chivapuram where he sang the following hymn, which is full of extraordinary significance. This hymn points out that Lord Civan is the Supreme God - Head for the three fold activities, such as creation, sustenance, and dissolution. However Lord Civan, the supreme animates the three gods Brahma, Vishnu and Rudran to carry out the three activities. He is immanent in the three gods. They invoke the grace of Lord Civan always in their mind and carry out their duties (இம்மூவரையும்அதிட்டித்து - நிலைப்படுத்திஅவரவர்தொழிலைச்செய்யஅருள்புரிந்துவருகிறான்). It may be noted that the trinity gods i.e., Brahma, Vishnu and Rudran are entirely three different entities from Lord Civan; but could do their duty only by the grace of Lord Civan. The word 'Rudran' is sometimes wrongly attributed to Lord Civan also. But it must be noted that Civan is 'Gunaa-Theetha-Rudran' while the trinity Rudran is 'Guna-Rudran' . To equate the Supreme God Head Lord Civan along with Brahma and Vishnu is a very wrong conception. Lord Civan is the Supreme God Head for all these three and other gods.
திருச்சிற்றம்பலம்
21.திருச்சிவபுரம்
பண் : நட்டபாடை (திருவிராகம்)
ராகம் : கம்பீரநாட்டை
புவம்வளிகனல்புனல்புவிகலையுரைமறைதிரிகுணமமர்நெறி
திவமலிதருசுரா்முதலியர்திகழ்தருமுயிரவையவைதம
பவமலிதொழிலதுநினைவொடுபதுமநன்மலரதுமருவிய
சிவனதுசிவபுரநினைபவர்செழுநிலனிலனிலைபெறுவரே.1
புவம்,வளி,கனல்,புனல்,புவி,கலை,உரை மறை,திரிகுணம்,அமர் நெறி,
திவம்மலிதருசுரர்முதலியர்திகழ்தரும் உயிர் அவை,அவைதம
பவம்மலி தொழில் அது நினைவொடு,பதுமநல்மலர் அது மருவிய
சிவனதுசிவபுரம்நினைபவர்செழுநிலனினில்நிலைபெறுவரே.
பொருள்: விண்,தீ,காற்று,நீர்,மண் ஆகிய ஐம்பூதங்களைப் பற்றியும்,அறுபத்து நான்கு கலைகளைப் பற்றியும் வேதங்கள்விரித்துக்கூறுகின்றன. சத்துவம்,இராஜசம்,தாமசம் ஆகியவை மூன்று குணங்கள். தாசமார்க்கம்,சற்புத்திரமார்க்கம்,சகமார்க்கம்,சன்மார்க்கம் ஆகியவை விரும்பத்தக்கமார்க்கங்கள் (அல்லது) சரியை,கிரியை,யோகம்,ஞானம் ஆகியவை விரும்பத்தக்கமார்க்கங்கள். தேவர் முதலாகத் தாவரம் ஈறாக உள்ள அனைத்து உயிர்களுக்கும்,அவைகளுடையவினைக்கு ஈடாகப் பிறவிகள்அருளப்படுகின்றன. படைக்கும் தொழிலில் நல்ல தாமரை மலரில் விளங்கும் நான்முகனைஇடமாகக் கொண்டு அதிட்டித்து) நின்று சிவபெருமான் உலகைத் தோற்றுவித்து அருளுகிறான். அந்தச்சிவபெருமானுடையசிவபுரத்தலத்தைநினைப்பவர்கள் வளம் நிறைந்த இந்த உலகில் நிலைபெற்றுவாழ்வார்கள்.
குறிப்புரை: இது இறைவனேசிருட்டித் தொழில் இடையறாதுநிகழ்த்தத்திருவுள்ளங்கொள்கின்றார். அத்தொழிலைச் செய்யும் பிரமன் அந்தப் பாவனையில் இருந்து சிருட்டிக்கின்றான். ஆதலால் பவமலிதொழிலதுநினைவொடு இருக்கும் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும்சிவபுரத்தைநினைப்பவர்நிலைபேறானவாழ்வடைவர்என்கின்றது. புவம்,வளி,கனல்,புனல்,புவி - விண்ணாதிமண்ணந்தமாகியஐம்பெரும்பூதங்கள். புவம் - வான்,கலை - எண்ணெண் கலைகள். உரைமறை - இறைவன் புகழைச்சொல்லும் வேதம். திரி குணம் - சத்துவம் முதலிய மூன்று குணங்கள். அமர்நெறி - விரும்பத்தக்கமார்க்கங்கள். திவம் - தேவலோகம். உயிரவை - தேவர் முதலாகத் தாவரம் ஈறாகச்சொல்லப்பட்டஉயிர்கள். அவைதமபவமலிதொழிலதுநினைவொடு - அவ்வவ்ஆன்மாக்களுடையவினைக்குஈடாகஅருளப்படுகின்றபிறவிக்கேற்றசிருட்டித் தொழிலின் நினைவொடு. எனவே,இறைவன் பிரமனைப் போல விகாரியாய்ப்படைப்பவனல்லன். சங்கற்பத்தால் (நினைவினால்) எல்லாத் தொழிலும் நடைபெறுகின்றன என்பது கருத்து. பதுமநன்மலரதுமருவிய சிவன் - தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் சிவன். சிவபெருமான் பிரமன் உருக்கொண்டு வீற்றிருப்பாரல்லர். இத்தகைய திருவுருவத்தைப் பிரமன் தியானித்தலான்சிருட்டிகைவரப்பெறுவன் என்பது.
Brahma is seated on the grand Lotus flower. He sets his concentrated thinking on creation, imaging Lord Civan in his conscience very seriously, He was thus able to acheive his aim. Lord Civan animates in Brahma (பிரம்மாவைஅதிட்டித்துநின்று - Aш... Amauu) brought forth into being many many things such as earth, heaven, fire, air, water etc., etc. He proclaimed the Vedas which explain the arts and sciences. He created the triad of Gunas (சாத்வீகம், தாமஸம், ராஜஸம் - ஆகமூன்றுகுணங்கள்) ways for salvation and embodiments for Devas and all other entities. Those who can meditate on Lord Civan's Civapuram will flourish well in this rich earth.
Note: The Lord Supreme is Civa. His seat indeed is the Lotus (Heart Lotus - woul 6). St. Maanickavaachakar hails Him as 'Tamaraicchaivan'. Brahma prays to Civa, in single-minded devotion to animate him and his creation.
மலைபலவளர்தருபுவியிடைமறைதருவழிமலிமனிதர்கள்
நிலைமலிசுரர்முதலுலகுகணிலைபெறுவகைநினையொடுமிகும்
அலைகடனடுவறிதுயிலமரரியுருவியல்பரனுறைபதி
சிலைமலிமதிள்சிவபுரநினைபவர்திருமகளொடுதிகழ்வரே.2
மலை பல வளர்தருபுவிஇடைமறைதருவழிமலி மனிதர்கள்,
நிலை மலிசுரர் முதல் உலகுகள் நிலைபெறு வகை நினைவொடுமிகும்
அலைகடல் நடுவு அறிதுயில் அமர் அரி உருவு இயல்பரன்உறைபதி -
சிலை மலி மதில் - சிவபுரம்நினைபவர்திருமகளொடுதிகழ்வரே.
பொருள்: இந்த மண்ணுலகில் மலைகளும்வளங்களும் வளர்ந்து கொண்டு இருக்கின்றன.வேதங்கள் கூறும் விதிகளின்படி நடந்து காட்டும் மிகுதியான மக்கள் வாழ்கிறார்கள். விண்ணுலகத்தில் வாழும் தேவர்களும்மற்றுமுள்ள உலக உயிர்களும்நிலைபெற்றுவாழ்வதற்குரிய காத்தல் தொழில் இன்றியமையாதது. மிகுந்து வரும் அலைகளை உடைய திருப்பாற்கடல் நடுவில் அரிதுயில்கொண்டுள்ளதிருமாலைக் காத்தல் தொழில் செய்வதற்காகச் சிவபெருமான் இடமாகக்கொண்டுள்ளான். அவன் வழியாகக் காத்தல்தொழிலைச் சிவபெருமான் செய்தருளுகிறான். கற்களால் கட்டப்பட்ட மதில்கள்சூழ்ந்ததிருச்சிவபுரம் சிவபெருமான் உறையும்பதியாகும். அதனை நினைப்பவர்திருமகளோடுதிகழ்வர்.
குறிப்புரை: இது எல்லா உலகங்களும் தத்தம் கால எல்லை வரையில் நிலைபெறுக என்னும் திருவுள்ளக்குறிப்போடு பாற்கடல் மேல் பள்ளிகொள்ளும் திருமால் உருவின்இயல்போடுஅரன்உறையும்பதியினைநினைப்பவர்திருமகளோடுதிகழ்வர்என்கின்றது. உலகு நிலைப்பதற்கு மலை இன்றியமையாமையின்மலைபல வளர் தருபுவிஎனப்புவியைவிசேடித்தார். மறைதருவழிமலி மனிதர்கள் - வேத விதியின்படிஅகஒழுக்கத்தையும்,புறவொழுக்கத்தையும்வரையறுத்த மக்கள். நிலைமலிசுரர் - மக்களைக் காட்டிலும்வாழ்வால் நீடித்த தேவர்கள். முதல் உலகுகள் என்றது,விண்ணும்மண்ணும்கூறவேஇடைப்பட்டனவெல்லாம் உணர வைத்தார். அறிதுயில் - யோகநித்திரை.
Thirumaal always sleeps mystically on the Divine Snake, Aathi Seshan amidst the billowing ocean . He sets his concentrated thinking on sustenance, imaging Lord Civan in his conscience very solemnly. Lord Civan abiding in Thirumaal (திருமாலைஅதிட்டித்துநின்று - நிலைப்படுத்தி) sustains the entire universe. Men, poised in the Vedic ways, on earth which has many mountains, the Devas of great durability in the celestial worlds and all other living beings in the Universe - all of them are sustained by Lord Civan - animates in Thirumaal (GLOIMG அதிட்டித்துநின்று - திருமாலைநிலைப்படுத்தி) those who meditate on this Lord Civan, Supreme One of Civapuram, which is girt with rocky walls will have all the blessings of the goddess of wealth.
Note: The Trinity comprises Brahma, Vishnu and Rudra. It is said that Brahma is the creator, Vishnu the sustainer and Rudra the absorber.
பழுதிலகடல்புடைதழுவியபடிமுதலியவுலகுகள்மலி
குழுவியசுரர்பிறர்மனிதர்கள்குலமலிதருமுயிரவையவை
முழுவதுமழிவகைநினைவொடுமுதலுருவியல்பரனுறைபதி
செழுமணியணிசிவபுரநகர்தொழுமவர்புகழ்மிகுமுலகிலே.3
பழுது இல கடல் புடை தழுவிய படி முதலிய உலகுகள்,மலி
குழுவியசுரர்,பிறர்,மனிதர்கள்,குலம் மலிதரும் உயிர் அவை அவை
முழுவதும் அழி வகை நினைவொடு முதல் உருவு இயல் பரன் உறை பதி -
செழு மணி அணி - சிவபுரநகர்தொழுமவர் புகழ் மிகும்உலகிலே.
பொருள்: இந்த நிலவுலகம் பழுதுபடாதகடலால்சூழப்பட்டது. இந்த நிலவுலகம் உட்பட எல்லா உலகங்களிலும்மனநிறைவுடன்தேவர்கள்,நரகர்கள்,மனிதர்கள் சேர்ந்து வாழ்கின்றனர். இவர்கள் அனைவருடையஉயிர்களையும்ஒடுக்கும்நினைவோடு,அதில் உருத்திரனைஇடமாகக் கொண்டு (அதிட்டித்து),அவனுடைய உருவில் தானே செய்தருள்கிறான். செழுமையான மணிகளால் அழகு செய்யப்படும் திருச்சிவபுர நகரில் அவன் உறைகிறான். அந்த நகரைத்தொழுபவர்களுடைய புகழ் உலகில் மிகும்.
குறிப்புரை: இது நிலம் முதலிய உலகுகள்முழுவதுமழியும்படிருத்திராம்சத்தோடுஎழுந்தருளும்இறைவன் பதியைத்தொழுமவர் புகழ் உலகில் மிகும்என்கின்றது. கடல்புடைதழுவியபடி என்றது சங்காரகிருத்தியத்திற்குப் பயன்படும் தண்ணீரைக் கூறி விசேடித்தபடி. படி - பூமி. படி முதலிய உலகுகள் என்றது ஒடுக்க முறைக்கண்பிருத்விமுதலாயின முறையே தத்தம் காரணமாகியமாயையில் ஒடுங்கும் முறை பற்றி. உயிரவை அவை முழுவதும் அழிவகை என்றது உயிர்கள்ஒடுங்குதலை;உயிர்களுக்கு என்றும் அழிவின்மையின். முதல் - இறைவனதுஉருவாகியஉருத்திரவடிவு.
Men live on this earth surrounded by flawless oceans. Devas, Narakas and all such others live in many other worlds. Lord Civan who is Maha Rudran i.e., Gunaa Theetha Rudran thought of dissolving the entire universe. He, therefore, animates in the god of virtue (குணருத்திரனை - அறக்கடவுளைஅதிட்டித்துநின்று) and absorbs everything. This Lord Civan is entempled in Civapuram which is surrounded by gem studded walls on all sides. Those who adore Him will gain more and more renown.
Note: The god of virtue is commonly referred to as Yaman . In Theology He is known as Guna Rudran while Lord Civan is known as ‘Gunaa Theetha Rudran' . Without knowing this differentiation people get confused and equate Lord Civan along with Brahma and Thirumaal which is a wrong conception. Readers may kindly take note of this and explain this to others.
நறைமலிதருமளறொடுமுகைநகுமலர்புகைமிகுவளரொளி
நிறைபுனல்கொடுதனைநினைவொடுநியதமும்வழிபடுமடியவர்
குறைவிலபதமணைதரவருள்குணமுடையிறையுறைவனபதி
சிறைபுனலமர்சிவபுரமதுநினைபவர்செயமகடலைவரே. 4
நறைமலி தரும் அளறொடு,முகை,நகுமலர்,புகை,மிகு வளர் ஒளி,
நிறை புனல்கொடு,தனைநினைவொடுநியதமும்வழிபடும் அடியவர்
குறைவு இல பதம் அணைதர அருள் குணம் உடை இறை உறை வனபதி -
சிறை புனல் அமர் - சிவபுரம் அது நினைபவர்செயமகள்தலைவரே.
பொருள்: சிவபரம்பொருளைவழிபடும் அன்பர்கள் மணம் மிகுந்த சந்தனம்,நிறைந்த நீர் ஆகியவற்றைக் கொண்டு நன்னீராட்டுவார்கள். அரும்புகள்,இதழ் விரிந்த மலர்கள் ஆகியவற்றால் மலர் சூட்டுவார்கள். குங்கிலியம்,சீதாரி முதலியவற்றால் நறும்புகைஅளிப்பர். ஒளிவளர்தீபங்கள் கொண்டு ஒளி காட்டுவர். இவ்வாறு சிவபெருமானைநாள்தோறும் நினைவோடுவழிபடும்அடியவர்களுக்கு அவன் குறைவில்லாததும்,நிறை உடையதுமானசாமீபம் முதலான முத்தகளை அடைய அருள் செய்வான். நீர் நிலைகள்பலவற்றாலும் வளம் நிரம்பி விளங்கும் அழகிய பதி திருச்சிவபுரமாகும். அன்பர்களுக்குஅருள் செய்யும் குணம் உடைய சிவபெருமான் அங்கு உறைகிறான். அந்த ஊரை நினைவில் கொண்டு அங்குள்ள இறைவனை வழிபாடு செய்பவர்கள் வெற்றித்திருமகளின் தலைவர்கள்ஆவார்கள்.
குறிப்புரை: இது அபிஷேகஆராதனைப்பொருள்களோடுநியதியாகவழிபடும் அடியார் களுக்குக்குறைவிலாப்பதத்தைக் கொடுக்கும் மகேச்சுரனதுபதியைவழிபடுமவர்கள்செயமகளுக்குத்தலைவராவர்என்கின்றது. நறைமலிதரும்அளறு - மணம் மிகுந்த சந்தனம். முகை நகுமலர் - முகையும்மலரும்,புகை -தூபம். ஒளி - தீபம். நினைவோடு - ஈசுவர தியானத்தோடு,நியதமும் - ஒழுங்காக. குறைவிலபதம் - சாமீபம்,வனபதி - அழகிய நகரம். சிறைபுனல் - மதகுகளோடு கூடிய புனல். இது கிரியாவான்கள்பெறுபயன் கூறியது.
Lord Civan, abides in Civapuram, the devotees adore Him daily in all propriety with their thought centred on Him. They perform Abishekam with plenty of water; apply fragrant sandal paste; decorate Him with buds, and unfolded flowers. They fumigate the surroundings with sweet smelling incense. They light up bright lamps. Lord Civan graces these people and grants them Saameepam - salvation (- the state of nearness to Lord Civan) - (One of four positions in salvation). Civapuram is a rich and beautiful town because of availability of plenty of water in pools found all around. This is the place where Lord Civan is entempled. Those who meditate on Lord Civan of this place with intense devotion will be above the goddess of victory.
சினமலியறுபகைமிகுபொறிசிதைதருவகைவளிநிறுவிய
மனனுணர்வொடுமலர்மிசையெழுதருபொருணியதமுமுணர்பவர்
தனதெழிலுருவதுகொடுவடைதகுபரனுறைவதுநகர்மதிள்
கனமருவியசிவபுரநினைபவர்கலைமகடரநிகழ்வரே.5
சினம் மலிஅறுபகை மிகு பொறி சிதைதரு வகை வளி நிறுவிய
மனன்உணர்வொடுமலர்மிசைஎழுதரு பொருள் நியதமும்உணர்பவர்
தனது எழில் உருஅதுகொடு அடை தகு பரன்உறைவது நகர் - மதிள்
கனம் மருவிய - சிவபுரம்நினைபவர் கலைமகள் தர நிகழ்வரே.
பொருள்: யோகியர்களுக்குச் சிவபெருமான் அருளும் நிலை கூறப்படுகிறது. காமம், குரோதம்,லோபம்,மோகம்,மதம்,மாற்சரியம்எனப்படும் ஆறு பகைகளையும்வென்றவர்கள்யோகியர். மெய்,வாய்,கண்,மூக்கு,செவி ஆகிய ஐம்பொறிகளையும்அடக்கும் வகையில் நிலை நின்றவர்கள்யோகியர். காற்றை நிறுத்தியும்,விடுத்தும்செய்யப்டும்பிரணாயாமத்தைப்புரிபவர்கள்யோகியர். ஆழ்ந்து தியானம் செய்வதன்காரணமாக அந்த யோகியர்களுடையஉள்ளத்திலே சிவபெருமான் ஓளிப்பிழம்பாகத்தோன்றி அருளுகிறார். நான்தோறும்உணர்பவர்களாகிய அந்த யோகிகளுக்குத் தனது எழில் உருவாகியசாரூபத்தைத்தந்தருளும் சிவபெருமான் உறைந்தருளும் நகர் திருச்சிவபுரமாகும். அங்கு மேகம் தவழும் மதில்கள் சூழ்ந்து உள்ளன. அந்த நகரை நினைப்பவர்களுக்குக் கலைமகள் தன் அருளைத் தர வாழ்வார்கள். குறிப்புரை: இது அகப்பகைஆறும் வென்று ஐம்பொறி அடக்கி,பிராணவாயுவைஒழுங்குபடுத்தியயோகியர்க்குச்சாரூபந் தரும் பரசிவன் பதியாகியசிவபுரத்தைநினைப்பவர்சாரூபர்களாவார்கள்என்கின்றது. சினமலிஅறுபகை - கோபம் முதலிய உட்பகையாறும். இதனை அரிஷட்வர்க்கம்என்பர்வடநூலார். பொறி - ஐம்பொறிகள். பொறிகள்புலன்களைச் சென்று பற்றுவதைத்தடுப்பதுபிராணாயாமம் ஒன்றே என்பதாம். மனன் உணர்வு - தியானம். மலர் மிசைஎழுதரு பொருள் - பிரமரந்தரத்தின்கண்ணதாகியசகஸ்ரதளத்தையுடைய தாமரை மலரின்மேல்எழுந்தருளியிருக்கும்பேரொளிப்பிழம்பாகிய பொருள். நியதமும்உணர்பவர் - அனவரதமும் அறிபவர்கள். தனது எழில் உருவுகொடு - தன்னுடைய அழகிய வடிவத்தைக் கொண்டு. என்றது கண்டக்கறையும்கங்கையும் ஒழிந்த சாரூபத்தை. கனம் - மேகம்.
The devotees of Lord Civan by practising yoga, have nullified the re-actions of the six-fold internal adversaries (passion, wrath, miserliness, delusion, arrogance and envy). They have also subdued the five sensory organs (physical body, mouth, eye, nose and ear) (ஐம்பொருள்கள் - மெய், வாய், கண், மூக்கு, செவி). They daily meditate with pure consciousness on Lord Civan who manifests in the Lotus flower. They practise the breathing exercise known as Prana-Yamam (6) and control the vital forces of the body by regulating the breath of three modes (Inhalation, Retention and Exhalation). With these rituals, they are able to see the brilliance of the supreme in their mind. The clouds sail over the high walls of Civapuram. The yogis who meditate on the shrine of Civapuram stand blessed by the goddess of wisdom. Note: Civa blesses the deserving soul with Saarupyam, i.e., confers on it a form almost similar to His own. Civa-yoga: The yoga of breath-control through which supreme serenity is gained. 'Malar misai ezhutharu porull': Beyond the six aadhaaras (psychic centres) is Brahmarantra where burgeons the thousand-petalled Lotus. Civa is the Yogi par excellence. By His grace, His devotees
pursue yoga with ease.
சுருதிகள்பலநலமுதல்கலைதுகளறுவகைபயில்வொடுமிகு
உருவியலுலகவைபுகழ்தரவழியொழுகுமெயுறுபொறியொழி
அருதவமுயல்பவர்தனதடியடைவகைநினையரனுறைபதி
திருவளர்சிவபுரநினைபவர்திகழ்குலனிலனிடைநிகழுமே.6
சுருதிகள்பலநல முதல் கலை துகள் அறுவகைபயில்வொடு மிகு
உருஇயல்உலகுஅவைபுகழ்தர,வழி ஒழுகும் மெய் உறு பொறி ஒழி
அருதவம்முயல்பவர்,தனது அடி அடை வகை நினை அரன்உறைபதி
திருவளர்சிவபுரம்,நினைபவர்திகழ்குலன்நிலன் இடை நிகழுமே.
பொருள்: அரிய தவத்தை மேற்கொண்ட அடியவர்களின் சிறப்பு இந்தப்பாடலில்சொல்லப்படுகிறது. அரிய தவத்தில் ஒழுகும் அடியவர்கள் வேதங்களையும்,பலவித நன்மைகளைத்தரும் தலைமையானகலைகளையும்குற்றமறப்பயின்றவர்கள். உலகியலில்பழிபாவங்களுக்குஅஞ்சுபவர்கள். தூய ஒழுக்க சிலராய் உலகம் புகழ விளங்குபவர்கள். உடலின்கண் உள்ள பொறிகள்வழிஒழுகாது அரிய தவத்தைமேற்கொள்பவர்கள். அந்த அடியவர்கள் தன் திருவடிகளை அடையும் வகையில்,அவர்களுக்கு வழிகாட்டும் சிவபெருமான் உறையும் பதி திருச்சிவபுரமாகும். அந்த நகரில் திருவருள் தேங்கியுள்ளது. அந்தத் தலத்தைநினைப்பவர்களுடைய குலம் விளக்கம் அடையும். அந்தக் குலம் உலகில் நிலைபெற்றுத் இகழும். சாயுச்சிய நிலை அளிப்பதைஇப்பாட்டு தெரிவிக்கிறது.
குறிப்புரை: வேதம் முதலான கலைகளைக்குற்றமறப் பயின்று உலகம் புகழ,பொறிவாயில் அவித்து, அருந்தவம் முயல்வார்கள் திருவடி ஞானத்தைப் பெறத்திருவுளங்கொண்டருள்கின்ற பரமசிவன் உறை பதியைச்சிந்திப்பவர் குலம் நிலத்திடைநீடுவாழும்என்கின்றது. பலநலமுதல்கலை - பலவாகியநன்மைகளைக்கருதுகின்ற கலை. துகளறுவகை - சந்தேக விபரீதங்கள்ஆனும்படி. உருவு இயல் - தோற்றத்தின் அழகு. தனது அடி அடை வகை. இது சாயுச்சியம் அளிப்பது அறிவித்தது.
The devotees of Lord Civan learn well all the top true aspects of divine knowledge and the Vedas without any omission. They shun the worldly sins and wrong doings. They shine in the world due to their good behaviour in conformity with the canons of right conduct laid down for observance. They are never carried away by the five sensory organs. They undertake severe penance. Lord Civan bestows the doctrines to these devotees to enable them to learn the pathway to reach His holy Feet. This Lord Civan abides in Civapuram where His grace is full. The clan of those who think about and adore the place Civapuram will flourish on the earth forever.
Note: This verse deals with Saayujyam which is the gaining of oneness with Civa.
கதமிகுகருவுருவொடுவுகிரிடைவடவரைகணகணவென
மதமிகுநெடுமுகனமர்வளைமதிதிகழெயிறதனுதிமிசை
இதமமர்புவியதுநிறுவியவெழிலரிவழிபடவருள்செய்த
பதமுடையவனமர்சிவபுரநினைபவர்நிலவுவர்படியிலே. [
கதம் மிகு கரு உருவொடுஉகிர் இடை வடவரைகணகணஎன,
மதம் மிகு நெடுமுகன் அமர் வளை மதிதிகழ் எயிறு அதன் நுதிமிசை,
இதம் அமர் புவிஅதுநிறுவிய எழில் அரி வழிபட,அருள்செய்த
பதம் உடையவன் அமர் சிவபுரம்நினைபவர்நிலவுவர்,படியிலே.
பொருள்: திருமால் வராக அவதாரம் எடுத்தபோதுபணிந்த இடம் என்பதை இப்பாட்டுதெரிவிக்கிறது. திருமால் வராக அவதாரம் எடுத்தபோது சினம் மிக்க கரிய உருவத்தோடுவிளங்க. வராக அவதார உருவம் மிகப் பெரிதாக இருந்தது. அவருடைய நகங்களுக்குஇடையே வடக்கின்கண் உள்ள மேருமலைகணகணவெனஒலி செய்தது. மதம் மிக்க நீண்ட பெரிய உருவமான அந்த வராகத்தின் முகத்தில் பிறைநிலவு போன்ற கோரமான பல் (எயிறு) விளங்கியது. அந்த எயிற்றின் முனையில் பூமி இதமாக அமர்ந்து விளங்கியது. அந்தப் பூமியைஉலகின்கண்அழியாதுநிறுத்திக்காத்தவர் அழகிய திருமால். அவர் வழிபட, அவருக்கு அருள்புரிந்ததிருவடிகளைஉடையவனாகிய சிவபெருமான் எழுந்தருளியுள்ளஇடம் திருச்சிவபுரம். அந்த ஊரைநினைப்பவர் உலகில் புகழோடுவிளங்குவார்.
குறிப்புரை: ஆதிவராகமான அரி வழிபட அருள்செய்தவரதுசிவபுரத்தைநினைபவர் என்றும் விளங்குவர்என்கின்றது. கதம் மிகு - கோபம் மிகுந்த. கருவுருவொடு - கறுத்தமேனியோடு. உகிர்இடை - நகங்களின் இடையே. மதம் மிகு நெடுமுகன் அமர் - மதம் மிக்க நீளமான முகத்திலே இருக்கின்ற. வளைமதி திகழ் எயிறு - பிறை மதியையொத்த கோரப்பல். நுதி - நுனி. இதம் அமர் புவி - இன்பத்தோடு இருக்கின்ற பூமி. ஆதிவராகஉருவெடுத்ததிருமாலின்சத்திபூமியாதலின்,அவள் வராகத்தந்தத்தில் இதமாக இருந்தாள் என்றார். பதம் - திருவடி.
In the days of yore Thirumaal took the Avataar of a huge black (cosmic) boar. It was very dark, energetic and had a wrathful appearance. The northern mountain Mēru perched between its nails and making a heavy roaring noise as KANA KANA, the boar held the earth on its crescent shaped awesome tusk beneath its musty and long snout and saved the earth from destruction. The earth had thus a comfortable seating while being protected by Thirumaal. This handsome Thirumaal worshipped and adored Lord Civan residing in Civapuram and stood blessed by Him. Those who meditate on this shrine at Civapuram will thrive on earth in great excellence.
அசைவுறுதவமுயல்வினிலயனருளினில்வருவலிகொடுசிவன்
இசைகயிலையையெழுதருவகையிருபதுகரமவைநிறுவிய
நிசிசரன்முடியுடைதரவொருவிரல்பணிகொளுமவனுறைபதி
திசைமலிசிவபுரநினைபவர்செழுநிலனிலநிகழ்வுடையரே.8
அசைவுஉறுதவமுயல்வினில்,அயன் அருளினில்,வருவலிகொடு சிவன்
இசை கயிலையைஎழுதரு வகை இருபது கரம் அவை நிறுவிய
நிசிசரன் முடி உடைதர,ஒருவிரல் பணி கொளுமவன்உறைபதி -
திசைமலி - சிவபுரம்நினைபவர்செழுநிலனினில் நிகழ்வு உடையரே.
பொருள்: இராவணன்,உடலை வருத்திக் கொண்டு நான்முகனைநோக்கித் தவம் செய்தான். அவனுடைய தவத்தை மெச்சி,அவன் விரும்பியபடியே மிகப் பெரிய உடல் வலிமையைக்கொடுத்தான். கிடைத்த வலிமையைக் கொண்டு, .சிவபிரான் எழுந்தருளிய கயிலை மலையை,அது பெயரும் வகையில்,தன் இருபது கரங்களை இராவணன் அம்மலையின்கீழ்ச்செலுத்தினான். இராவணனுடையபத்துத் தலைகளில் உள்ள முடிகள்சிதறுமாறு, தனது ஒரு கால்விரலால்அடர்த்துத் தன் வலிமையைச்சிவபிரான் அவனுக்கு உணர்த்தி, அவனைப்பணிகொண்டுஅருளினான். அந்தச் சிவபிரான் உறையும் பதி எட்டுத்இசைகளிலும் புகழ் நிறைந்த திருச்சிவபுரம் ஆகும். அந்தத் தலத்தைநினைப்பவர் வளமான இந்த உலகில் எஞ்ஞான்றும் இன்பமாக வாழ்வர்.
குறிப்புரை: இது பிரமன் அருளால் வந்த தவவலிமையைக் கொண்டு இறைவனதுகயிலையையெடுத்தஇராவணனது முடியை நெரித்தமுதல்வன்நகரத்தைநினைபவர் உலகத்தில் என்றும் வாழ்வார்என்கின்றது. அசைவுஉறுதவம் - வருத்தம் மிக்க தவம்,முயல்வினில் - முயன்றதால். நிசிசரன் - இராவணன்.
The king of Sri Lanka disregarding the torture of his physical frame, performed painstaking and prolonged penance and hailed Brahma. Brahma was pleased and blessed the Dasakreevan with extraordinary physical powers. With this unequalled physical strength, he once tried to lift mount Kailas (abode of Lord Civan) to move it aside. Lord Civa pressed His toe on the top of the mountain. The king's decorated crowned head got crushed under the mount, and then he realised the prowess of Lord Civan, who resides in Civapuram which is famed in all eight directions. Those who meditate on Lord Civan in the shrine at Civapuram will flourish well on this prosperous earth.
அடன்மலிபடையரியயனொடுமறிவரியதொரழன்மலிதரு
சுடருருவொடுநிகழ்தரவவர்வெருவொடுதுதியதுசெயவெதிர்
விடமலிகளநுதலமர்கணதுடையுருவெளிபடுமவனகர்
திடமலிபொழிலெழில்சிவபுரநினைபவர்வழிபுவிதிகழுமே.
அடல்மலி படை அரிஅயனொடும் அறிவு அரியது ஓர் அழல் மலிதரு
சுடர் உருவொடுநிகழ்தர,அவர் வெருவொடுதுதிஅதுசெய,எதிர்
விடம்மலிகளம்நுதல் அமர் கண் அது உடை உரு வெளிபடுமவன் நகர்
திடம் மலிபொழில் எழில் - சிவபுரம்நினைபவர் வழி புவி திகழுமே.
பொருள்: அறிந்து சொல்வதற்கு இயலாத வகையில் அழல் மிக்க பேரொளிப்பிழம்பாய்சிவபிரான் வெளிப்பட்டருளினார். வலிமைமிக்கசக்கராயுதத்தைப்படைக்கலமாகக்கொண்ட திருமாலும்,நான்முகனும் அந்தப் பேரொளிப்பிழம்பைக் கண்டு அச்சம் கொண்டு துதி செய்தனர். துதி செய்த அளவில் அவர்களுக்கு எதிரே விடம் பொருந்திய கண்டமும், நெற்றிக்கண்ணும் உடைய தனது உருவத்தோடு சிவபிரான் காட்சி நல்கினான். அந்தச்சிவபிரான் எழுந்தருளிய தலம் உறுதியான மரங்கள் செறிந்த பொழில்களால்எழில்பெற்றதிருச்சிவபுரம் ஆகும். அதனை நினைபவரும்,அவருடைய மரபினரும் உலகில் புகழோடுவிளங்குவர்.
குறிப்புரை: அயன்,மால் இவர்களுக்கிடையே அழல் வண்ணராய்த் தோன்றி,அவர்கள் துதி செய்யக்கண்ணுதல்கண்டக்கறையோடு கூடிய தனதுருவத்தைக் காட்டிய இறைவன் நகரத்தைநினைப்பவர்வைத்தபடி உலகம் நடக்கும் என்கின்றது. அடல்மலி படை - வலிமை மிக்க சக்கரம். அவர் வெருவொடுதுதி அது செய்ய - அவர்கள் அச்சத்தோடு துதிக்க (அதற்காக இரங்கி) வெளிபடுமவன்எனக்கூட்டுக. விடமலிகளம் - நீலகண்டம். நுதலமலர் - கண் அது உடை உரு - நெற்றிக்கண்ணையுடைய உரு. நினைபவர்வழிபுவிதிகழும்எனப்பிரிக்க. வழி - வமிசம்.
Thirumaal is endowed with a mighty weapon known as Sudarsanam (a sprocket wheel like weapon -. This Thirumaal and Brahma were terrified at sight of the big blazing column of fire, the form taken by Lord Civan, and offered worship in dread. Lord Civan sprang out of the column of fire and revealed to them His natural form, showing the dark blue neck and a third eye on His forehead. This Lord Civan abides in Civapuram which has dense gardens, thick with tall trees. Those who contemplate on and hail the Lord at the shrine in Civapuram will flourish well along with their clans on this earth.
குணமறிவுகணிலையிலபொருளுரைமருவியபொருள்களுமில
திணமெனுமவரொடுசெதுமதிமிகுசமணருமலிதமதுகை
உணலுடையவருணர்வருபரனுறைதருபதியுலகினினல
கணமருவியசிவபுரநினைபவரெழிலுருவுடையவர்களே.10
“குணம் அறிவுகள்நிலைஇல,பொருள் உரை மருவியபொருள்களும்இல,
திணம்” எனுமவரொடு,செதுமதி மிகு சமணரும்,மலி தமது கை
உணல் உடையவர்,உணர்வு அருபரன்உறைதரு பதி - உலகினில்நல
கணம் மருவிய - சிவபுரம்நினைபவர் எழில் உரு உடையவர்களே.
பொருள்: கேட்டிற்குக் காரணமான அறிவினைஉடையவராகியபெளத்தர்களும்,தமது கையில் நிறைந்த உணவினை வாங்கி உண்ணும் சமணர்களும்பின்வருமாறுகூறுகின்றனர்.குணங்களும்அறிவும்நிலையில்லாதன. காணப்படும் உலகப்பொருள்களும்,உரைக்கும் உரையால்உணர்த்தப்படும் ஏனைய பொருள்களும் அவ்வாறே அழிந்து தோன்றும் இயல்பின. இது திண்ணம். இவ்வாறு கணபங்கவாதத்தைப் பேசும் பெளத்தர்களும்,குற்றம் பொருந்திய அறிவுடையசமணர்களும்உணர்தற்கரிய சிவபிரான் உறையும் பதி திருச்சிவபுரம்ஆகும். இவ்வுலகில் நல்லவர்கள் பலர் வாழும் ஊர் அது. அதனை நினைபவர் அழகிய உருவோடுவிளங்குவர்.
குறிப்புரை: குணம் அறிவு முதலாயினநிலையில்லாதன. உலகப்பொருள்களும்அங்ஙனமே என்னும் கணபங்கவாதிகளானபுத்தர்களும் குற்றம் உள்ள அறிவுடையசமணர்களும்அறிவரியஅரன்பதியைநினைப்பவர் அழகான வடிவத்தையடைவர்என்கின்றது. குணம் அறிவுகள்நிலையிலஎனப்பிரிக்க. செதுமதி - குற்றம் பொருந்தியபுத்தி. கை உணல் உடையவர் - கையில் பிச்சையேற்றுண்ணும் சமணர்.
The Buddhists affirm thus: "Neither gunas nor knowledge can last; things phenomenally beheld, and things talked about as real, are ephemeral; this indeed is the truth". The samanars of flawed intellect stand and eat their food from their cupped palms. Lord Civan, unknowable to these people, abides in Civapuram where virtuous and pious people live in large numbers. They who think on and hail Him at this shrine at Civapuram will shine forth in elegance and fame.
திகழ்சிவபுரநகா்மருவியசிவனடியிணைபணிசிரபுர
நகரிறைதமிழ்விரகனதுரைநலமலியொருபதுநவில்பவர்
நிகழ்குலநிலநிறைதிருவுருநிகரிலகொடைமிகுசயமகள்
புகழ்புவிவளரா்வழியடிமையின்மிகைபுணர்தரநலமிகுவரே.11
திகழ் சிவபுர நகர் மருவிய சிவன் அடிஇணை பணி சிரபுர -
நகர் இறை - தமிழ்விரகனது - உரை நலம் மலிஒருபதும்நவில்பவர்,
நிகழ் குலம்,நிலம்,நிறை திரு,உரு,நிகர் இல கொடை மிகு சயமகள்
புகழ்,புவி வளர் வழி அடிமையின் மிகை புணர் தர,நலம் மிகுவரே.
பொருள்: இவ்வுலகில் புகழால் விளங்கும் நகர் திருச்சிவபுரம். அந்த நகரில் எழுந்தருளியுள்ளசிவபிரானடைய திருவடி இணைகளைப்பணிகின்றவர் ஞானசம்பந்தர். அவர் திருச்சிவபுரநகர் எனப்படும்சீகாழித்தலைவனும்,தமிழ் விரகனும் ஆவார். அந்த ஞானசம்பந்தன்பாடியஉரைச் சிறப்பு வாய்ந்த இந்தத்திருப்பதிகப்பாடல்கள்பத்தினையும் ஓதி வழிபட வேண்டும். அவ்வாறு ஓதி வழிபடுபவர்கள் குலம்,நிலம்,நிறைந்த செல்வம்,அழகிய வடிவம்,ஒப்பற்ற கொடை வண்மை,மிக்க வெற்றித்தரு,இந்த உலகிடை தொடர்ந்து வரும் மரபினர்; இறைவனடியார் என்ற பெருமிதம் ஆகியன தம்பால் விளங்க எல்லா நலங்களும் மிகப் பெறுவர்.
குறிப்புரை: இதுவரை பாடல்தோறும்சிவனியல்பும்,அவர் எழுந்தருளியுள்ளநகரழகும்,அவரை அடைவார் அடைந்து வந்த பயன்களும்கூறிவந்த பிள்ளையார் இப்பாட்டில்இப்பதிகத்தைப் படிப்பார் எய்தும் பயனைத்தொகுத்துக்கூறுகின்றார். குலம் (6),நிலம் (8),நிறை திரு (2)உரு (10)சயமகள் (4) கலை மகள் (5)புகழ் (3)புவிவளர்வழி (9)அடிமை (7)இவ்வாறு இப்பதிகப்பயன் ஒவ்வொரு பாடலிலும்இருப்பதை ஓர்ந்துகொள்க.
Civapuram is a well-renowned town where Lord Civan abides. His holy Feet were adored and worshipped by Gnaanasambandan. Gnaanasambandan is an expert in Tamil and the head of Sirapuram i.e., Seekaazhi. Those who recite these ten verses and hail Lord Civan will be blessed with all good things such as family-renown, landed property, abundant wealth, beautiful form, peerless munificence, and divine victory. Their descendants will continue to be traditional devotees.
Note: Sirapuram otherwise commonly known as Seekaazhi is the birthplace of Thiru-Gnaanasambandar. This is different from Sivapuram, which is dealt with in this hymn.
திருச்சிற்றம்பலம்
21ஆம் பதிகம் முற்றிற்று
உ
சிவமயம்
22.திருமறைக்காடு
திருத்தலவரலாறு:
திருமறைக்காடுசோழநாட்டுக்காவிரித்தென்கரைத்திருத்தலம். நாகை மாவட்டம்திருத்துறைப்பூண்டியில் இருந்தும் நாகையில் இருந்தும் பேருந்துகளில்செல்லலாம். திருத்துறைப்பூண்டியில் இருந்து இரயிலிலும்செல்லலாம். இத்தலம் இன்று வேதாரண்யம் என வழங்கப்படுகின்றது. வேதங்கள்வழிபட்டமையால்இப்பெயர் பெற்றது. ஆதி ராமர் இங்கு வந்து அணை கட்டி,இலங்கை சென்று,இராவண வதம் செய்தார். பின்னா்அப்பழிநீங்கப்பூசித்தார். ஆதலால் திருமறைக்காடானதுஆதிசேது எனவும் வழங்கப் பெறும். பிரமதேவர் பூசித்து இறைவன் வாயிலாகவே வேதோபதேசம்பெற்றுச்சிருட்டித் தொழில் கைவரப்பெற்றார். விசுவாமித்திரர் பூசை செய்து பிரமரிஷியானார். பிந்திய இராமர் பூசித்து வீரஹத்தி தோஷம் நீங்கப்பெற்றார். தென்திசையைச்சமப்படுத்த இறைவன் ஆணையால் வந்த அகத்தியமுனிவருக்கு,இறைவன் மணவாளத் திருக்கோலம் காட்டிய திருத்தலம். சுவாமிக்குப் பின்புறம் கருப்பக்கிருகத்துள்ளேயேமணவாளப் பெருமான் திருவுருவம் இருக்கிறது. நெய்யுண்ண வந்த எலி,அபுத்திபூர்வமாகவேதிரியைத் தூண்ட,அதனால் மறுபிறப்பில்அவ்வெலிமாவலிச்சக்கரவர்த்தியாகிப்பேறுபெற்றதிருத்தலம்.இதனைத்திருக்குறுக்கைத்தேவாரத்துள் அப்பர் சுவாமிகள்'நிறைமறைக்காடுதன்னில்" என்னும் திருப்பாடலில் விளக்கி இருக்கிறார்கள்.
மூர்த்திகள்:
இறைவன் பெயர் வேதாரண்யேசுவரர்;தேவாரம் “மறைக்காட்டுறையும் மணாளன்” எனக்குறிக்கின்றது. அம்மை பெயர் யாழைப்பழித்தமொழியம்மை;வீணாகானவிதூஷணி எனவும் வழங்குவர். தலவிருட்சம்வன்னி. சப்தவிடங்கத்தலங்களுள்ஒன்றாதலின்தியாகேச மூர்த்தி எழுந்தருளியிருக்கின்றார். அவர் பெயர் புவனிவிடங்கர். நடனம் ஹம்ச நடனம்.
தீர்த்தம்:
மணிகாணிகை,வேதபூஷண தீர்த்தம்,வேதாமிருதம் (கடல்) முதலியன. திருஞானசம்பந்தரும்,திருநாவுக்கரசரும்இத்தலத்திற்குத்தரிசனத்திற்காகஎழுந்தருளியபோது,வேதங்கள்பூசித்தகாலத்து அவை அடைத்த நேர்க்கதவம்திறக்கப்படாமலேவழக்காறற்றிருக்க, திருநாவுக்கரசர்திறக்கவும்,திருஞானசம்பந்தர்அடைக்கவும்திறக்கவும் பாடி அற்புதம் நிகழ்த்தியதிருத்தலம்: -சுந்தரமூர்த்திகள்சேரமான்பெருமாளோடுஎழுந்தருளிவழிபட்டதிருத்தலம். இங்கு கோடி தீர்த்தம் ஆதிசேது மிக விசேடமானது. உருத்திரகோடி என்னும் இடத்திலும் கடலாடுவதுவழக்கம். அது புதை சேற்றுக்கடலாதலின் மிக எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். அழகான கோடியக்காடு உண்டு. கோடிக்குழகர் கோயில் விசேடம்.இத்தல விநாயகர் சிந்தாமணி விநாயகர். இராவணன் வழிபட்ட விநாயகர் வீரஹத்தி விநாயகர். துர்க்கை சந்நிதி விசேடமானது.வேதாரண்யம்,விளக்கழகு என்று ஒரு பழமொழி இத்தலத்தைப் பற்றி வழங்கி வருகிறது. ..அதனாலேபராந்தகச்சோழர் முதலிய பலர் விளக்குத்தருமமேசெய்திருக்கிறார்கள் போலும்.
கல்வெட்டு:
இத்திருத்தலத்தில் உள்ள கல்வெட்டுக்களைஅரசியலார்கி.பி.1904ஆம் ஆண்டில்படியெடுத்திருக்கிறார்கள். மொத்தம்89கல்வெட்டுக்களும்,ஒரு செப்புப்பட்டயமும் இருக்கின்றன. அவற்றுள்சோழமன்னர்கள்காலத்தனஎண்பத்திரண்டு. ஏனையவற்றுள் ஒன்று தஞ்சைதுளஸாமகாராஜாவின்மகனானபிரதாபசிம்மமகாராஜாவினது. மற்றவை இரண்டும்விஜயநகரஅரசர்கள்பிரபுடதேவமகாராயர்,தேவ மகாராயர்என்பவர்களுடையன. - ஒன்று இன்னாருடையது என்று அறியப்பெறாதசெப்புப் பட்டயம். சோழர்காலத்துக்கல்வெட்டுக்கள் முதல் பராந்தகன் காலம் முதல் மூன்றாம் குலோத்துங்கன் காலம் வரை” உள்ளன. அவற்றுள் முதல் பராந்தகன் செய்த விளக்கீடுகள் பற்றிய தருமம்38கல்வெட்டுக்களால்அறிவிக்கப்பெறுகின்றன.
இத்திருத்தலம்உம்பளநாட்டுக்குன்னூர்நாட்டுத்திருமறைக்காடுஎனக்குறிக்கப்பெறுகின்றது. முதல் பராந்தகச் சோழன் காலத்துக்கல்வெட்டுக்கள் அனைத்தும் அவனுடைய ஆட்சி5ஆம் ஆண்டு முதல்34ஆம் ஆண்டு வரை ஆண்டு தோறும் விளக்கு வைக்க ஆடுகளும், நிலமும்,பொன்னும்அளித்தமையை அறிவிக்கின்றன. இராஜராஜ தேவன்,பரகேசரிஇராஜராஜன், முதலாம் குலோத்துங்கன்,மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோர் விளக்குக்குநிலமும் ஆடுகளும் அளித்திருக்கின்றனர். மூன்றாம் இராஜேந்திரன்ஆட்சிக் காலத்தில்16ஆம் ஆண்டில் நிலம் விட்ட செய்தி அறியப்பெறுகின்றது. மூன்றாம் இராஜராஜன் காலத்தில் சிங்களதண்டநாயகனால்கோடிக்குழகர் கோயில் சீரணோத்தாரணம்செய்விக்கப் பெற்றது. கி.பி.1496ல்அருச்சகருக்குச்சில உரிமைகள் வழங்கப்பெற்றன என்று செப்புப் பட்டயம் கூறுகிறது.
பதிக வரலாறு:
பிள்ளையார் திருநாவுக்கரசு சுவாமிகளோடுதிருவாய்மூரைத்தரிசித்துக் கொண்டு மீண்டும் திருமறைக்காட்டிற்குஎழுந்தருளினார்கள். அங்கே “கண்பயிலும்நெற்றியார்தம்கழலிணை பணிந்து போற்றிச் “சிலைதனைநடுவிடை” என்னும் பண்பயில் பதிகம் பாடிப் பரவி எழுந்தருளியிருந்தார்கள்.
THE HISTORY OF THE PLACE
22. THIRU-MARAI-K-KAADU
The sacred city of Thiru-marai-k-kaadu is on the south bank of Cauvery in Chola Naadu. It is accessible by bus and train from Thiruththuraippoondi of Naagai district, or by bus from Naagai itself. This sacred place is known as Vedhaaranniyam today. Since the Vedhaas offered worship here, it got this name. Lord Raamar came here, built a bridge across the sea to reach Ilangai and killed Raavanan in the Thretha Yuga. Therefore this place is also known as Aadhisethu (the original bridge). Biramadevar worshipped the Lord who taught the Vedhaas and thus he became adept at the work of creation. Visvaamiththirar became a Biramarishi after offering worship here. Latter, Raamar got rid of the sin of killing a hero by worshipping here. This is also the sacred place where the Lord Civa showed Himself in the mode of a marriage attire to sage Agasthyar, who had come to the south to prevent the earth from tilting, after being commanded to do so, by the Lord. The form of the Lord in the guise of a bridegroom is at the back of the sanctum. A rat that got into the sanctum in search of lamp ghee for food, unknowingly pulled the wick and made the lamp burn brighter. As a result of this, the rat was born as Maavali Chakravarthi in its next birth due to the grace of the Lord of this temple. This episode is celebrated in his poem by Saint Appar Svaami in his Thirukkurukkai Thevaaram, 'nirai maraik kaadu thannil'.
The Lord's name is Vedhaaranyesuvarar. Thevaaram refers to Him as 'bridegroom who abides in Maraikkadu'. The Goddess is known as Yaazhaip-pazhiththa Mozhiyammai, also referred to as Veenaagaana Vidhoosini. The sacred tree is Vanni. This is one of the seven 'Vidangka' temples and so Thyaagesa Moorthi is also present here. His name is Bhuvanividangkar and His dance is called the Swan Dance (Hamsa Nadanam).
Sacred Tank
The sacred waters here are the Manikarnikai, Vedhabhooshana Theerththam, Vedhaamritham (the sea) etc. This temple is also known for a miracle. After the Vedhaas offered worship, the doors of the temple closed and remained so. When Thiru-Gnaanasambanda swaami and Appar svaami arrived at this temple for adoring the Lord, the doors opened as the latter sang to open them and again closed after the former sang to close them. It is also here that Sundharamoorthi svaami arrived together with Cheramaan Perumaal and worshipped the Lord. The 'Kodi Theerththam Aadhi Sethu' of this place is very special. It is the tradition to bathe in the sea at a place known as Ruththirakodi. However, since the sea is full of quick sands, one has to be very careful. The beautiful Koḍiyakkadu and the Kodi Kuzhakar temple are situated nearby.
The Vinaayakar of the temple is known as Chinthaamani Vinayaakar. This Vinaayaka was once worshipped by Raavanan and is known as Veerahaththi Vinaayakar. The Durgai shrine here is of importance. A traditional saying about this temple is that the lamps of the Vedhaaranniyam temple are beautiful, and perhaps it is because of the gift of lamps by Paraanthaka Chola to this temple.
Stone Inscriptions
The inscriptions of this temple have been copied by government epigraphists in 1904. A total of 89 inscriptions and one copper plate engraving are extant. Of the inscriptions, 82 belong to the Chola period, one to that of Prathaapasimma Mahaaraaja, son of Thulasaa Mahaaraaja of Thanjai, and two others to two Vijayanagara kings, Pirabudadheva Mahaaraayar and Dheva Mahaaraayar. The copper plate engravings could not be identified with any one. The Chola inscriptions span the period from Paraanthakan I to Kuloththungkan III. Of these, 38 inscriptions pertain to the gift of lamps by Paraanthakan I.
This place is referred to as Thirumaraikkaadu of Kunnoor Naadu in Umbala Naadu. All the inscriptions of Paraanthakan I note the gifts of land, goats and gold by this king annually starting from his 5th through 34th regnal years for lighting lamps. Raajaraaja Dhevan, Parakesari Raajaraajan, Kuloththungkan I and Kuloththungkan III have also gifted lands and goats for lamps. Information on the endowment of lands in the 16th regnal year of Raajendhiran III is given. The Kodik Kuzhagar temple was renovated by one Singala Dhandanaayakan during the reign of Raajaraajan I. The copper plates note that certain privileges were granted to temple priests in the year 1496 CE.
INTRODUCTION TO THE HYMN
St. Appar and St. Sambandhar hailed the Lord-God at Thiruvoimoor and returned to Maraik-kaadu. The following decad was sung by the young-saint in the shrine of Maraik-kaadu which is referred to as Veda-vanam in this hymn.
திருச்சிற்றம்பலம்
22. திருமறைக்காடு
பண் : நட்டபாடை (திருவிராகம்)
ராகம் : கம்பீரநாட்டை
சிலைதனைநடுவிடைநிறுவியொர்சினமலியரவதுகொடுதிவி
தலமலிசுரரசுரர்களொலி சலசல கடல்கடைவுழிமிகு
கொலைமலிவிடமெழவவருடல்குலைதரவதுநுகர்பவனெழில்
மலைமலிமதில்புடைதழுவியமறைவனமமர்தருபரமனே.
சிலைதனைநடுஇடை நிறுவி,ஒர் சினம் மலிஅரவு அது கொடு,திவி-
தலம் மலிசுரர்அசுரர்கள்,ஒலி சலசல கடல் கடைவுழி,மிகு
கொலை மலிவிடம்எழ,அவர் உடல் குலைதர,அது நுகர்பவன் - எழில்
மலை மலி மதில் புடை தழுவியமறைவனம் அமர் தரு பரமனே.
பொருள்: திருப்பாற்கடலைக்கடைந்தபோது நஞ்சு தோன்றியதும்,அந்த நஞ்சினை உண்டு சிவபிரான் அனைவரையும்காத்ததும்இப்பாடலில்கூறப்பட்டுள்ளன. திருப்பாற்கடலைக்கடைவதற்காகமந்தரமலையை நடுவிலே நிறுத்தினார்கள். சினம் மிக்க,ஒப்பற்ற வாசுகி என்னும் பாம்பைக்கயிறாகச்சுற்றினார்கள். விண்ணுலகில் வாழும் தேவர்களும்அசுரர்களும் சலசல என்னும்ஒலிதோன்றுமாறுதிருப்பாற்கடலைக் கடைந்தார்கள். கடைகின்ற காலத்தில் கொல்லும் தன்மை வாய்ந்த. ஆலகாலவிடம்அக்கடலில்தோன்றியது. அதனால்,தேவர்களும்அசுரர்களும் அஞ்சி நடுங்கி சிவபிரானை நோக்கி ஓலமிட்டார்கள். அந்த அளவில்,சிவபிரான் அந்த நஞ்சை உண்டு அவர்களைக்காத்தருளினான். அந்தச் சிவபிரான்,அழகிய மலை போன்ற மதில்களால்சூழப்பெற்றமறைவனத்தில் (திருமறைக்காட்டில்) எழுந்தருளிய பரமன் ஆவான்.
குறிப்புரை: இது விடத்தைக் கண்டு விண்ணவர் எல்லாரும் நடுநடுங்க அதனை நுகர்பவன்மறைக்காட்டுறையும் பரமன் என்கின்றது. சிலை - மந்தரமலை. சினம் மலிஅரவு என்றது வாசுகி என்னும் பாம்பை. திவிதலம் - திவி * தலம் - சுவர்க்கம். துவி என்பதன் மரூஉச் சொல் திவி. துவி - இரண்டு. சுரர்,அசுரர் ஆகிய இருவேறுபட்டவர்களும்இருவேறுநிலங்களில் இருப்பவர்கள். பண்பினால்வேறுபட்டவர்கள். (தேவர்கள்) சுரர்கள் இருப்பது விண்ணுலகம். அசுரர்கள் இருப்பது கீழுலகம் என்பது பொதுக்கருத்து. திவிதலம்மலிசுரர் அசுரர் எனக்குறித்தார் ஞானசம்பந்தர். சலசல என்பது மத்தைக்கொண்டு கடையும்போது உண்டாகும் ஒலிக்குறிப்பு. அவர் உடல் குலைதர - தேவர்களும்அசுரர்களும்உடல் நடுநடுங்க. மலைமலி மதில் - மலையை ஒத்த மதில். எல்லாத் தேவர்கட்கும் நடுக்கம் தந்த கடுவிடம்இவர்க்குஅமுதாயிற்று என்றது சிவனதுஅளவிலாற்றலையும் காக்கும் கருணையையும்விளக்கியது.
Devas and Asuras desired to obtain nectar from the Ocean of Milk, with the belief, that those who consume it will never die. They brought the mountain known as Manthara Malai and fixed it in the center of the ocean to serve as a churning rod. They used the huge wrathful serpent known as Vaasuki as the rope for churning. Heavenly Devas standing on one side and the Asuras on the other side started churning the ocean creating a noise 'Chala Chala' in the turbulence. While churning, exceedingly powerful destructive poison arose from the ocean (unable to bear the bodily pain, the serpent also threw up venom). The combined poisons seemed to destroy everybody all around. Devas and Asuras shivered in terror; ran towards Lord Civan; lamented and entreating succour (in distress) prayed Him to save their life. Lord Civan swallowed the poison and saved everybody. This Lord Civan is entempled in the town called Thiru-Marai-k-kaadu (Marai-vanam). This town is encircled by mountain like imposing walls.
Note: Thirumaraikkaadu is one of the three holy towns, which are hailed by the entire Thevaaram, i.e., by Tirumurais 1 to 7.
கரமுதலியவவயவமவைகடுவிடவரவதுகொடுவரு
வரன்முறை யணிதருமவனடல்வலிமிகுபுலியதளுடையினன்
இரவலர் துயார்கெடுவகைநினையிமையவர்புரமெழில்பெறவளா்
மரநிகர்கொடைமனிதர்கள்பயின்மறைவனமமாதருபரமனே.
கரம் முதலிய அவயவம் அவை கடுவிடஅரவுஅதுகொடுவரு
வரல்முறைஅணிதருமவன்,அடல் வலி மிகு புவி அதள்உடையினன் -
இரவலர் துயர் கெடு வகை நினை இமையவர் புரம் எழில் பெற வளர்
மரம் நிகர் கொடை மனிதர்கள் பயில் மறைவனம் அமர் தரு பரமனே.
பொருள்: சிவபெருமான் பாம்புகளைஅணிகலன்களாகஅணிவதைஇந்தப் : பாடல் தெரிவிக்கிறது. தொன்று தொட்டு வரும் வரைமுறைப்படி வளை,கேயூரம் முதலிய அணிகலன்களைஅணிவதுபோன்று,கைகள் முதலிய உறுப்புக்களில் கொடிய நஞ்சு உள்ள பாம்புகளை அணிந்து கொள்கிறான் சிவபெருமான். பிற உயிர்களைக் கொல்லும் வலிமைமிக்க புலியைக் கொன்று,அதன் தோலைஆடையாக அணிகிறான் பெருமான். தேவர் உலகம் அழகு பெறுவதற்காகஅங்குக்கற்பக மரம் வளருகிறது. அது கேட்டவர்க்குக்கேட்டதை அளிக்கும் கொடைக் குணம் உள்ளது. இரவலர்களின்வறுமைத்துயர்கெடுவதற்குரியவழிவகைகளை எப்போதும் நினைத்துக்கொண்டிருப்பவர்களாகிய,கற்பகமரம் போன்ற கொடையாளர்கள் வாழ்கின்ற நகர் மறைவனம் என்ற திருமறைக்காடு. அங்குச் சிவபெருமான் மனம் உவந்து உறைகின்றான்.
குறிப்புரை: இது கற்பகம் ஒத்த கொடையாளர்கள்பயில்கின்றமறைக்காட்டுறையும்பரமனே எங்கும் அரவத்தை அணிந்து புலித்தோலாடை புனைந்து விளங்குபவன்என்கின்றது. இதனால் இறைவனதுஆடையும்அணியுங்கூறிஅறிவித்தவாறு. கரம் - கை. கடு விட அரவு அது கொடு - கொடிய விடப்பாம்பைக் கொண்டு வரன்முறையணிதரும் அவன் - முறையாக அவயவங்கட்கேற்றவாறுஅணிபவன். அடல் வலி - கொல்லும் வன்மை. துயர் கெடுவகைநினைமனிதர்கள்,இமையவர்புரம் எழில் பெற வளர்மரம்எனக்கூட்டுக. மரம் என்றது கற்பகத்தை.
Lord Civan wears on His hands and on other parts of His body wrathful venomous snakes as traditional ornaments such as Valai and Keyuram. Lord Civan killed an extremely courageous tiger and wore its skin. For the prosperity of Devas the celestial tree - Karpagatharu is grown in heaven. This tree is capable of giving to Devas whatever is needed and asked for, by them. With qualities similar to those of this tree, many philanthropists are living in Marai-vanam nullifying the poverty of people. Our Lord Civan abides in this, the much-celebrated place Marai-vanam.
Note: The celestial tree is Karpaka-tharu.
இழைவளர்தருமுலைமலைமகளினிதுறைதருமெழிலுருவினன்
முழையினின்மிகுதுயிலுறுமரிமுசிவொடுமெழமுளரியொடெழு
கழைநுகர்தருகரியிரிதருகயிலையின்மலிபவனிருளுறும்
மழைதவழ்தருபொழினிலவியமறைவனமமர்தருபரமனே.3
இழை வளர்தரு முலை மலைமகள் இனிது உறை தரும் எழில் உருவினன்
முழையினில் மிகு துயில் உறும்அரிமுசிவொடும்எழ,முளரியொடு எழு
கழைநுகர்தரு கரி இரிதருகயிலையில்மலிபவன் - இருள் உறும்
மழை தவழ்தருபொழில்நிலவியமறைவனம் அமர் தரு பரமனே.
பொருள்: அணிகலன்கள் பொருந்திய மார்பகங்களைஉடையவள் மலைமகள். அவளைத்தன் இடப்பக்கத்தில்இனிதாகக்கொண்டுள்ள அழகிய திருமேனியை உடையவன் சிவபெருமான். கயிலை மலைக்குகைகளில் நன்கு உறங்கும்சிங்கங்கள்,பசி வருகின்றகாரணத்தால் சோம்பல் முறித்து நிமிர்ந்து எழுகின்றன. கயிலை மலையில் தாமரை மலர்களோடு உடன் வளர்ந்து செழித்த கரும்புகளை உண்ணும் யானைக்கூட்டங்கள், விழித்து வெளிவரும்சிங்கங்களைக் கண்டு அஞ்சி ஓடுகின்றன. அவ்வகைப்பட்ட கயிலைமலையில் எழுந்தருளியுள்ளவன் சிவபெருமான். அவன்,கரிய மழை மேகங்கள் தவழும் பொழில்களை உடைய மறைவனமாகியதிருமறைக்காட்டில்அமரும்பரமனாகவிளங்குகிறான்.
குறிப்புரை: இது மறைவனத்துறையும்பரமனே மலைமகள் மணாளன்,கயிலையின்பதிஎன்கின்றது. இழை - ஆபரணம். எழில் - அழகு. முழை - மலைக்குகை. அரி - சிங்கம். முசிவு -.மெலிவு. முளரி - தாமரை. கழை - கரும்பு.
The daughter of the Himalayan mountain Umaa Devi, wearing jewellary on Her breasts happily rests on the beautiful left frame of Lord Civan. Sleeping lions in the caves of Mount Kailas, get up (and) when they feel hungry, shed their slumber and get ready to move about to prey. The elephant herds while eating sumptuous sugarcane that had grown along with lotus flowers, run helter-skelter at the sight of lions coming out of the cave. Lord Civan belonging to Mount Kailas abides in Marai-vanam. Black rain-bearing clouds creep over the rich gardens of Marai-vanam - Thiru-Marai-k-kaadu.
Note: The elephant's dread of the lion is proverbial.
நலமிகுதிருவிதழியின்மலர்நகுதலையொடுகனகியின்முகை
பலசுரநதிபடவரவொடுமதிபொதி சடைமுடி யினன்மிகு
தலநிலவியமனிதர்களொடுதவமுயறருமுனிவர்கடம
மலமறுவகைமனநினைதருமறைவனமமர்தருபரமனே.4
நலம் மிகு திரு இதழிஇன்மலர்,நகுதலையொடு,கனகியின் முகை-
பல சுரநதி,படஅரவொடு,மதி பொதி சடை முடியினன் - மிகு
தலம் நிலவியமனிதர்களொடு தவம் முயல் தரும் முனிவர்கள்தம
மலம் அறு வகை மனம் நினைதருமறைவனம் அமர் தரு பரமனே.
பொருள்: சிவபிரான் தனது சடைமுடியில் அழகிய கொன்றை மலர்,கபாலம்,ஊமத்தை, கங்கை நதி,பட அரவு,பிறை ஆகியவற்றைச்சூடியுள்ளான். பெரிய அளவில் இவ்வுலகில் வாழும் மனிதர்கள்,தவம் முயலும்முனிவர்கள் ஆகியோர் பெருமானை வழிபட,அவர்கள் மலம் அகன்று உய்யும்வகையைப் பிரான் நினைக்கின்றான். அவ்வகைப்பட்ட. பெருமான் மறைவனம் ஆகிய திருமறைக்காட்டில்உறையும்பரமனாகவிளங்குகின்றான்.
குறிப்புரை: நலம் - பாசங்கள் முற்றும் அழிந்த பிறகு உண்டாகும் திருவருள் அனுபவம் (எல்லாம் இழந்த நலம் சொல்லாய்முருகா) கொன்றைமலரைப்பார்ததவுடன்ஓங்காரஉள்ளொளிபெருகும். பலசுரநதி - மண்ணுலகைபலபட விரிந்து அழிக்கும் வகையில் வன்மையுடன்மேலிருந்து கீழ் நோக்கி விரைந்து வந்த நதி - கங்கை. இது மக்கள் முனிவர் இவர்கள் மலம் அகன்று உய்யும் வகை திருவுளம் பற்றிய மறைவனத்திறைவனேகொன்றையும்,கபாலமும்,ஊமத்தமும்,கங்கையும்,அரவும்,பிறையும் பொதிந்த சடைமுடியினன்என்கின்றது. இதழி - கொன்றை,நகுதலை - இறந்த பிரமனது மண்டையோடு. கனகி - ஊமத்தை. முனிவர்கள் தம் மலம் அறுவகைஎனப்பிரிக்க. நகுதலை,மதி,அரவு முதலியவற்றின் தீமைகளை நீக்கி அருள் செய்கின்றான் என்பது.
Lord Civan sports in His matted crest the gracious and weal-conferring kondrai flowers, the skull of the dead Brahma, the blossoms of Datura, the celestial river Ganga, the hooded serpent and the crescent moon. Lord Civan is ever contemplating on ways and means of eliminating the Malas of men living on this great earth and of the sages who perform prayer and penance and adore Him always.
Note: The malas are three in number, they being Aanavam, Kanmam and Maayai.
கதிமலிகளிறதுபிளிறிடவுரிசெய்தவதிகுணனுயர்பசு
பதியதன்மிசைவரு பசுபதி பலகலையவைமுறைமுறையுணர்
விதியறிதருநெறியமாமுனிகணனொடுமிகுதவமுயறரும்
அதிநிபுணா்கள்வழிபடவளர்மறைவனமமர்தருபரமனே.5
கதி மலி களிறு அது பிளிறிடஉரிசெய்தஅதிகுணன்;உயர்பசு -
பதி அதன் மிசைவரு பசுபதி - பலகலை அவை முறைமுறை உணர்
விதி அறிதரும் நெறி அமர் முனிகணனொடு மிகு தவம் முயல் தரும்
அதிநிபுணர்கள் வழிபட வளர் மறைவனம் அமர் தரு பரமனே.
பொருள்: நடை அழகுடன்,சிவனைக் கொல்ல எதிர்த்து வந்த களிறு,பெருமானது உயர்வு கண்டு அஞ்சிப்பிளிறியது. அதன் தோலை உரித்துப் போர்த்தபெருவீரன் சிவபெருமான். அவன் ஆன்மாக்களாகிய உயர்ந்த பசுக்களின் நாயகன்;விடையாகியஇடபத்தின் மேல் ஏறி வருபவன்;ஆருயிர்களின் தலைவன். இவ்வகைப்பட்ட பெருமான் பலவளங்களைக்கொண்ட மறைவனம் ஆகிய திருமறைக்காட்டில் அமர்ந்து அருளும்பரமனாகஇருக்கின்றான். பல கலைகளையும்முறையாகக்கற்றுணர்ந்தவர்களும்,தாம் கற்ற நெறிகளையேவிதிகளாகக் கருதி,அவற்றின் வழி நிற்போரும் ஆகிய முனிவர் குழாங்களும், மிக்க தவத்தை மேற்கொண்டு ஒழுகும் அதி நிபுணர்களும் தன்னை வழிபடுமாறுமறைவனத்தில் அமர்ந்து அருளுகின்றான்.
குறிப்புரை: இது பல கலை ஆகம வேத நூல்களை முறையாகக் கற்று,கற்ற வண்ணம் ஒழுகுகின்றமுனிவர்களும்,மிகத்தவஞ்செய்யும் அதி நிபுணர்களும்வழிபடும்மறைவனநாதனேயானையை உரித்துப் போர்த்தபெருவீரன்,பசுபதி மேல்வரு பசுபதி என்கின்றது. கதி - நடை. அதிகுணன் - குணங்களான்மிகுந்தவன். பசு - இடபம். பசுபதி - ஆன்மாக்கள்அனைவர்க்கும் தலைவன். விதி - செயல்முறை. உயர் பசுபதி என்றும் மிசைவரு பசுபதி என்றும் இருவகையாகக்கொள்க. ஆன்மாக்கள்மேன்மேல்உயர்வதற்காகஆன்மாக்களைத் தாங்கி மேலேற்றுகின்றான். இதனை,தன் கடன் அடியேனையுந்தாங்குதல் என்றார். எந்த ஆன்மாக்களைத் தாங்கி மேலேற்றுகின்றானோ அந்த ஆன்மாக்களிலேயேதங்கி அந்த ஆன்மாக்களுக்குத் தலைவன் ஆகிறான். இதனை, “என் கடன் பணி செய்து கிடப்பதே' என்றார் அப்பர் அடிகள்.
The elephant that came with a majestic gait to attack Lord Civan, became nervous and trumpeted aloud in fear and agony. Lord Civan full of virtues, killed it and peeled off its skin. He is the Supreme Lord of all living beings, riding on the Supreme Mighty Bull, and is Head of all souls. To enable worship by the sages who underwent a regular course of study of scriptures and other arts, adhering to what they have learnt, and worship by those extra-ordinarily disciplined experts who practice boundless penance, Lord Civan is enshrined in the ever glorious Marai-vanam.
Note: The name Pasupati occurs twice in this verse. The first one refers to Rishaba Deva, the mount of Lord Civa. The second refers to Lord Civa who is the Lord of all souls. Tevaaram refers to the soul by the word Pasu.
கறைமலிதிரிசிகைபடையடல்கனன்மழுவெழுதரவெறிமறி
முறைமுறையொலிதமருகமுடைதலைமுகிழ்மலிகணிவடமுகம்
உறைதருகரனுலகினிலுயரொளிபெறுவகைநினைவொடுமலா்
மறையவன் மறைவழி வழிபடு மறைவனமமர்தருபரமனே.
கறை மலிதிரிசிகை படை,அடல்கனல்மழு,எழுதர வெறி மறி,
முறைமுறை ஒலி தமருகம்,முடைதலை,முகிழ்மலி கணி,வடமுகம்,
உறைதரு கரன் - உலகினில் உயர் ஒளி பெறு வகை நினைவொடு மலர்
மறையவன் மறைவழிவழிபடும்மறைவனம் அமர் தரு பரமனே.
பொருள்: சிவபிரான் படைக்கலங்கள் தாங்கி இருப்பதை இந்தப் பாடல் தெரிவிக்கின்றது. குருதிக்கறை படிந்த முத்தலைச்சூலத்தையும்,அழல் வடிவினதாகவும்காண்பாருக்குவருத்தம் தருவதாகவும் இருக்கும் மழுவாயுதம்,கையிலிருந்துதுள்ளிக்குதிப்பது போன்ற வெறித்த கண்களை உடைய மான்,முறையாகஒலி செய்யும் உடுக்கை,முடை நாற்றம் கொண்ட பிரம்ம கபாலம்,முகிழ்போலும் கூரிய குந்தாலிப்படை,வடவைமுகத்த ஆகியன உறையும்திருக்கரங்களை உடையவன். வேதாவாகிய நான்முகன்,இந்த உலகில் தான் உயர்ந்த புகழோடு விளங்க ஆசைப்பட்டு,வேத விதிப்படி,சிவபிரானைவழிபட்ட இடம் மறைவனம் ஆகிய திருமறைக்காடு ஆகும். சிவபிரான் அந்த இடத்தில் உறையும்பரமனாகவிளங்குகிறான்.
குறிப்புரை: இது உலகத்தில் உயர்வதற்காகப் பிரமன் வழிபட்டமறைவனத்துஇருந்தருள் பரமன் திரிசூலம்முதலியவற்றைத்தாங்கியஎட்டுக்கரங்களை உடையவன் என்கின்றது. கறை - இரத்தக்கறை. திரிசிகை - முத்தலைச்சூலம். அடல்கனல்மழு - வருத்தும்தழல்வடிவாகியமழுப்படை. எழுதர வெறி மறி -திருக்கரத்தை விட்டு எழும்புவது போலும் வெறித்த கண்ணை உடைய மான். முடை தலை - முடைநாற்றம் வீசும் பிரம கபாலம். முகிழ்மலி கணி - முகிழ்போலும் கூரிய குந்தாலிப்படை. வடமுகம் - வடவாமுகாக்கினி. வடவாமுகாக்கினியானது குதிரை போன்ற முகம் உடையது.ஒளி - புகழ். 'ஒளிநிறான்” என்பதும் ஓர்க. மறைவழி - வேதவிதிப்படி.
Lord Civan sports various weapons in His hands; the blood-stained trident, the flaming and powerful-battle axe (mazhu), the wild-eyed antelope poised to leap, the damarukam (drum) that resounds with rhythmic gradations, the stinking skull (Brahma Kapaalam), the kani sharp as mukizh and the fire like unto Vatavaagni. Supreme Lord Civan enshrined in Marai-vanam, hailed and adored in the Vedic way, by Brahma seated on the Lotus, with a view to shine by the loftiest light of wisdom in all the worlds.
Note: Mazhu: It refers to the flaming rod, a weapon of Lord Civa. It also means the battle-axe of Civa.
The antelope: Lord Civa holds this in His hand. Iconography depicts it as a fawn, about to leap.
The damarukam: Known as thudi in Tamil. A small drum resembling an hour- glass in shape.
Kani: Also known as Kanicchi. This sharp weapon is commonly known as Kuntaali or Kuntam.
Mukizh: Bud. Its pointed tip looks sharp.
Vatavaagni: The fire abiding in the ocean and maintaining its water-level . During the Great Dissolution, this Agni which has the form of a mare, acts ferociously and ultimately causes the waters to evaporate. This takes place during the cosmic destruction.
இருநிலனதுபுனலிடைமடிதரவெரிபுகவெரியதுமிகு
பெருவளியினிலவிதரவளிகெடவியனிடைமுழுவதுகெட
இருவர்களுடல்பொறையொடுதிரியெழிலுருவுடையவனினமலர்
மருவியவறுபதமிசைமுரன்மறைவனமமர்தருபரமனே.
இரு நிலன்அதுபுனல்இடைமடிதரஎரிபுகஎரிஅது மிகு
பெருவளியினில்அவிதர,வளிகெட,வியன் இடை முழுவது கெட,
இருவர்கள்உடல்பொறையொடு திரி எழில் உரு உடையவன் - இனமலர்
மருவியஅறுபதம் இசை முரல்மறைவனம் அமர் தரு பரமனே.
பொருள்: பெரிய ஊழிக்காலத்தில்,இந்தப் பெரிய நிலமாகிய மண் நீரில் ஒடுங்கும். நீர் நெருப்பில் ஒடுங்கும். நெருப்பு காற்றில்ஒடுங்கும். காற்று ஆகாயத்தில் ஒடுங்கும். பரந்து பட்ட இந்த உலகமும்,உலகப்பொருட்களும் ஆகிய அனைத்தும் அழியும். அப்போது பிரமன்,திருமால் ஆகியோரும் அழிய,அவர்களுடைய முழு எலும்புக்கூட்டை அணிந்து, தான் ஒருவனே தலைவன் எனத்திரியும்அழகுடையவன் சிவபிரான். மறைவனமாகியதிருமறைக்காட்டில் வண்ண மலர்க்கூட்டங்களில் வண்டுகள் இசைமுரலும் செழிப்பு உடையது. சிவபிரான் அங்கு அமரும் பரமன் ஆவான்.
குறிப்புரை: இது ஐம்பெரும்பூதங்களும்ஒன்றினொன்று ஒடுங்க,இறுதியில் மால் அயன் இவர்களுடைய உடற்பொறையோடுதிரிகின்ற இறைவன்,மறைவன நாதன் என்கின்றது. நிலன் நீரில் ஒடுங்க,நீர் எரியில்ஒடுங்க,எரி வளியில் ஒடுங்க வளி ஆகாயத்தில் ஒடுங்க,அப்போது மாலயன் இருவரும் அழிய,அவர்கள் எலும்பை அணிந்து,தான் ஒருவனே தலைவன் என்பதை உணர்த்தித்திரிபவன்என்பதையும்,இத்தகைய சங்காரகாரணனையே உலகு முதலாகவுடையதுஎன்பதையும்உணர்த்திநிற்பன்என்பதாம். இனமலர் - கூட்டமான மலர்,அறுபதம் - வண்டு. இது ஒடுக்க முறை கூறியது.
இதனால் மண் முதலிய பூதங்கள்ஒன்றினொன்று தோன்றும் என்பது பெறப்படுகிறது. இதனையே உட்கொண்டு இப்பாடலும்ஒடுக்கமுறைகூறுகிறது. இது காரியத்தின் குணம் காரணத்தினும்உண்டென்பதுநியமமாகலின்புவிக்குரிய ஐந்து குணங்களும்அதற்குக்காரணமென்றபுனலுக்கும்உளவாதல் வேண்டும். அங்ஙனமே ஏனைய பூதங்கட்கும்அஃதின்மையின் ஒரு பூதம் மற்றொரு பூதத்திற்குக்காரணமாகாது,பஞ்சதன்மாத்திரைகளேகாரணமாகும் என்பது சைவசித்தாந்தத்துணிபு. அதனோடு ஒடுக்கமுறை கூறும் இச்செய்யுள்முரணுமெனின்,முரணாது. மாதவச்சிவஞானயோகிகள்மாபாடியத்துஇச்செய்யுளைஎடுத்துக்காட்டிக் கூறுவது:
'அற்றேல்,வேதத்துள் அங்ஙனம் ஒன்றினொன்று தோன்று" மென்றவாக்கியத்தோடும், 'இருநிலனதுபுனலிடைமடிதரவெளிபுகவெரியதுமிகு - பெருவெளியினிலவிதரவளிகெடவியவிடைமுழுவதுகெட - விருவர்களுடன்பொறையொடுதிரியெழிலுருவுடையவன்” எனச்சங்காரமுறைபற்றிவேதவாக்கியப் பொருளை வலியுறுத்தோதியதிருப்பாட்டோடும்முரணுமாலெனின், -அற்றன்று; வேதஞ்சிவாகமம்இரண்டும் செய்த முதற்கருத்தா பரமசிவன் ஒருவனேயாகலின்,அவைதம்முள்முரணுமாறின்மையின்,ஒரோவழிமுரணுவனபோலத்தோன்றியவழி,முரணாகாதவாறு வன்மை மென்மைபற்றித்தாற்பரியங்கோடல் வேண்டும். அற்றாகலினன்றேதேயுமுதன்முப்பூதங்கட்கேதோற்றங்கூறி, “இம்முப்பூதமயமேபிரபஞ்சமெல்லாம்” என விரித்தோதியசாந்தோக்கியஉபநிடதமும், ஆகாயமுதல்ஐந்திற்குந்தோற்றங்கூறி, “ஐம்பூதமயமேபிரபஞ்சமெல்லாம்”” என்னும் தைத்திரீயஉபநிடதமும்தம்முண்முரணுவனபோலத்தோன்றுதலின்,அங்ஙனம் முரணாமைப் பொருட்டு வன்மை மென்மை நோக்கித்தைத்திரீயத்திற்கூறியதே பிரமாணம் எனவும்,சாந்தோக்கியத்திற் கூறும் வாக்கியங்கட்கும் அதுவே தாற்பரியம் எனவும்,உத்தரமீமாஞ்சையின்வியத்திகரணத்துள்ஓதியதூஉம். மற்றும் ஆண்டாண்டுமுரணாத வண்ணம் ஒன்று முக்கியப் பொருளும்,ஒன்று தாற்பரியப்பொருளுமாகவைத்துப்பொருளொருமையுணர்த்தியதூஉமென்க. ஆதலின்இப்பகுதிக்கு நிலம் இரதத்தோடு கூடி விசிட்டமாய் நின்ற கந்ததன்மாத்திரையில்ஒடுங்கிற்றென்றும்,நீர் உருவத்தோடு கூடி விசிட்டமாய் நின்ற இரததன்மாத்திரையில்ஒடுங்கிற்றென்றும்,தீ பரிசத்தோடு கூடி விசிட்டமாய் நின்ற உருவ தன்மாத்திரையில்ஒடுங்கிற்றென்றும்,காற்று சத்தத்தோடு கூடி விசிட்டமாய் நின்ற பரிசதன்மாத்திரையில்ஒடுங்கிற்றென்றும்,ஆகாயம் பிரமமாகிய சதா சிவத்தால்அதிட்டிக்கப்படும்சத்ததன்மாத்திரையில்ஒடுங்கிற்றென்றும் பொருள் கோடலேமரபாம்.
At the time of great final deluge - Mahaa Sankaraa Kaalam, the five elements i.e., earth, water, fire, air and ether (sky or space) are all absorbed one into another as under:
Earth is dissolved in water;
Water is dissolved in fire;
Fire is dissolved in air;
Air is dissolved in Ether.
The entire world and the contents are all brought to nothing. Thirumaal and Brahmaa also die. Lord Civan wears the skeleton of these two and stands as the only admirable Supreme Lord. This Lord Civan is enshrined in Marai-vanam where the six- legged bees buzz over flowers in bunches and hum in mellifluous melody.
Note : The Two: Vishnu and Brahmaa.
சனம்வெருவுறவருதசமுகனொருபதுமுடியொடுமிருபது
கனமருவியபுயநெரிவகைகழலடியிலொர்விரனிறுவினன்
இனமலிகணநிசிசரன்மகிழ்வுறவருள்செய்தகருணையனென
மனமகிழ்வொடுமறைமுறையுணர்மறைவனமமாதருபரமனே.8
சனம்வெருஉறவரு தசமுகன் ஒருபதுமுடியொடும் இருபது
கனம் மருவிய புயம் நெரி வகை,கழல் அடியில் ஒர் விரல் நிறுவினன் -
“இனம் மலிகணநிசிசரன் மகிழ்வு உற அருள் செய்த கருணையன்''என
மன மகிழ்வொடுமறைமுறை உணர் மறைவனம் அமர் தரு பரமனே.
பொருள்: நிசிசரன் (இராவணன்),மக்கள் அஞ்சுமாறுபத்துத்தலைகளோடு,பெரிதாயஇருபது தோள்களும் தெரியுமாறுவருகின்றவன். அவனுடைய தலைகளும்,தோள்களும் நெரியுமாறு,தனது வீரக்கழல்அணிந்ததிருவடியில்உள்ளதொருவிரலை ஊன்றி,சிவபிரான் அவனை அடர்த்தார். நிசிசரன் (இராவணன்),தன் பிழை உணர்ந்து அடங்கினான். அந்த அளவில் அரக்கர் கூட்டத்தை உடைய அந்த நிசிசரன் (இராவணன்) மனம் மகிழுமாறுவாழ்நாள்,தேர்,வாள்,இராவணன் என்ற பெயர் முதலியன அளித்தருளியகருணையாளன்சிவபெருமான். சிவபிரானுடையஇந்தக்கருணையை,மறைவனமாகியதிருமறைக்காட்டில்வாழும் நான்மறைகளை முறையாக உணர்ந்தவேதியர்கள்மனமகிழ்வோடுபுகழ்கின்றனர். இந்த மறைவனத்தில்அமர்ந்தருளும்பரமனாகச் சிவபிரான் விளங்குகிறான். குறிப்புரை: இது இராவணனுக்கு அருள் செய்த கருணையைஉடையன் என்று அனைவரும் உணர மறைவனம்அமர்தரு பரமன் இருக்கின்றான் என்கின்றது. சனம் - மக்கள்.'கனமருவிய புயம் - பருத்த தோள். இராவணன் - அழுதவன். இனம் மலி - அரக்கர் கூட்டத்தால் நிறைந்த,நிசிசரன் - இராவணன். “அரக்கர் என்ற இன உணர்வு மிகுந்தவர்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்திருக்க,அத்தகைய கூட்டத்தை உடையவனாய்இரவில்சஞ்சரிக்கும்குணமுடைய இராவணன் மகிழுமாறு அருள் செய்த கருணையைஉடையவன்” என்று மனமகிழ்வுடன்மறைவல்லவர்களும்,தோத்திரம் (முறை) வல்லவர்களும்அனுபவத்தால் அறிந்து உணர்வதற்குரியவனாய் நின்று மறைக்காட்டில் விரும்பித் தங்கியிருக்கும் பரமன்.
The king of Sri Lanka Dasamukan, whose very appearance terrified the people, once tried to lift Mount Kailas, abode of Lord Civan. Lord Civan pressed the top of the mountain by the toe of His ankleted feet and crushed the ten heads and twenty mighty muscular shoulders (of Raavanan). The king repented for his folly. Lord Civan forgave him and gifted him with divine sword, chariot, long life and renamed him as 'Raavanan'. Raavanan happily accepted and paid his gratitude to Lord Civan. Vedic scholars who have mastered the holy scriptures adore Lord Civan enshrined in Marai-vanam for His mercy shown to Raavanan.
Note: Nisicharan: The night-rover, a Rakshasa, Raavanan.
அணிமலர்மகடலைமகனயனறிவரியதொர்பரிசினிலெரி
திணிதருதிரளுருவளர்தரவவர்வெருவுறலொடுதுதிசெய்து
பணியுறவெளியுருவியபரனவனுரைமலிகடநிரளெழும்
மணிவளரொளிவெயின்மிகுதருமறைவனமமர்தருபரமனே.9
அணி மலர்மகள் தலைமகன்,அயன்,அறிவு அரியது ஒர்பரிசினில் எரி
திணிதரு திரள் உரு வளர்தர,அவர் வெருஉறலொடுதுதிசெய்து
பணிவுஉற,வெளி உருவியபரன் அவன் - நுரை மலி கடல் திரள் எழும்
மணி வளர் ஒளி வெயில் மிகுதரும்மறைவனம் அமர் தரு பரமனே.
பொருள்: அழகிய மலர் மகள் கேள்வனாகியதிருமாலும்,அயனும்அறிதற்குஅரியதொருகாட்சியைக்கண்டனர். அனல் செறிந்த பிழம்பு உருவத்தோடு பிரான் தோன்றினான். அந்த உருவத்தைக் கண்டு அவ்விருவரும்அஞ்சித் துதி செய்தனர். அவனைப்பணிந்தனர்.வானவெளியைக் கடந்த பேர் உருவத்தோடு காட்டு நல்கியபரமனாகிய சிவபிரான் மறைவனமாகியதிருமறைக்காட்டில்அமரும் பரமன் ஆவான். நுரைமிக்க கடல் திரட்சியில்தோன்றும் மணிகளின்வளர்ஒளியினால்சூரியனதுஒளி மிகுந்து தோன்றும் இடமாக பரமன் உறையும்மறைவனம்விளங்குகிறது.
குறிப்புரை: மறைவனத்துப்பரமனேஅயனும்மாலும்அறியொண்ணாதபடிஅண்ணாமலையாய்,அவர்கள் அச்சத்தோடு துதி செய்ய வெளிப்பட்டுஉருவங்கொண்டபரன்என்கின்றது. மலர் மகள் தலைமகன் - திருமால். பரிசு - தன்மை. எரி திணிதரு திரள் உரு - செறிவானதீப்பிழம்பின் வடிவு. வெளி உருவிய - ஆகாயத்தைக் கடந்த,நுரை மலிகடல் - நுரை மலிந்த கடல். பரமனே வெளி உருவியபரன் அவன் எனக்கொள்க.
Lord Civan, the Supreme God grew into a dense and soaring column of fire, passing beyond the vault of heaven, unknowable to the consort of the bejewelled goddess of the Lotus, namely - Thirumaal and also unknowable to Brahmaa. Utterly scared, when these two bowed and paid obeisance to Him, He manifested Himself before them and graced them. This Supreme Lord is entempled in Marai-vanam where the rays of the sun, mingling with the dazzle of the gems tossed up by the billows of the foamy sea, shine in splendour.
இயல்வழிதரவிதுசெலவுறவினமயிலிறகுறுதழையொடு
செயன்மருவியசிறுகடமுடியடைகையர்தலைபறிசெய்துதவம்
முயல்பவர்துவாபடமுடல்பொதிபவரறிவருபரனவனணி
வயலினிவளைவளமருவியமறைவனமமாதருபரமனே.
இயல்வுஅழிதர,விதுசெலவுஉற,இனமயில் இறகு உறு தழையொடு
செயல் மருவியசிறுகடம் முடி அடை கையர்,தலை பறிசெய்து தவம்
முயல்பவர்,துவர்படம் உடல் பொதிபவர்,அறிவுஅருபரன் அவன் - அணி
வயலினில் வளை வளம் மருவியமறைவனம் அமர் தரு பரமனே.
பொருள்: சமண,பெளத்தர்களுடைய இயல்புகள் இப்பாடலில்கூறப்படுகின்றன. சமணர்கள்,உலக இயல்பு கெடுமாறுநடைஉடைபாவனைகளால்வேறுபடத்தோன்றுகிறார்கள். பல மயில்களின்தோகைகளைக் கொண்டு செல்லும் வழிகளில் உள்ளஉயிரினங்களுக்கு ஊறு வாராதபடி தூய்மை செய்து நடத்தலைச் செய்கிறார்கள். சிறியகுண்டிகைவைக்கப்பட்டஉறியைஏந்தியகையராய் உள்ளனர். தலைமுடியைப் பறித்து முண்டிதமாக்கிக் கொண்டு,தவம் முயல்பவர்களாகக்காணப்படுகிறார்கள். பெளத்தர்கள், துவராடையில் உடலை மூடிக்கொண்டிருக்கிறார்கள். சமணர்களும்,பெளத்தர்களும்அறிதற்கு அரிய பரமனாகச்சிவபிரான் இருக்கிறான். அழகிய வயல்களில்சங்குகள் ஈன்ற முத்துக்கள்நிறைந்துள்ளமறைவனமாகியதிருமறைக்காட்டில்அமர்ந்துறையும்பரமனாகச்சிவபெருமான் விளங்குகின்றான்.
குறிப்புரை: இது புறச்சமயத்தாரால்அறியமுடியாதபரன்மறைவன நாதன் என்கின்றது. இயல்வுஅழிதர-உலகவியற்கை கெட. விதுசெலவுற - காற்று வீச. மயில் இறகு தழையொடு - மயிற்பீலிக்கற்றையொடுசெயல் மருவியசிறுகடம் முடி - வேலைப்பாடமைந்தகுண்டிகைவைக்கப்பட்ட உறி. துவர்படம் - கல்லாடை-காவியாடை. வளை வளம் - சங்கு தந்த முத்தாகியவளப்பங்கள்.
Samanaas who pursue repugnant ways carry in their hands slings containing Kamandalas and go about sweeping their paths with bunches of peacock-feather; they pluck out their hair and attempt to perform penance. Buddhists are heavily robed in ochre vestments. Unto these, the Supreme One is unknowable. This Supreme God is entempled in Marai-vanam, the fields of which teem with pearl-yielding chunks.
Note: The ways of the Samanaas and the Buddhists are advisedly repugnant to the Vedas. Such repugnance forms the basis of their faiths. Again, these are confirmed atheists.
வசையறுமலாமகனிலவியமறைவனமமர்பரமனைநினை
பசையொடுமிகுகலைபலபயில்புலவர்கள்புகழ்வழிவளர்தரு
சையமர்கழுமலநகரிறைதமிழ்விரகனதுரையியல்வல
இசைமலிதமிழொருபதும்வலவவருலகினிலெழில்பெறுவரே.14
வசை அறு மலர்மகள் நிலவியமறைவனம் அமர் பரமனை நினை
பசையொடு,மிகு கலைபல பயில் புலவர்கள் புகழ் வழி வளர்தரு
இசை அமர் கழுமலநகர் இறை,தமிழ்விரகனது உரை இயல் வல
இசை மலி தமிழ் ஒருபதும்வலஅவர்உலகினில் எழில் பெறுவரே.
பொருள்: குற்றமற்ற திருமகள் நிலவும்நகராகமறைவனம் என்ற திருமறைக்காடுவிளங்குகிறது. அங்கு அமர்ந்துள்ளபரமனை அன்போடு நினைபவர்கள் மிகுந்த கலைகளில்வல்ல புலவர்கள் பலர் உளர். அந்தப் புலவர்களின்புகழோடு வளரும் ஞானசம்பந்தர்,அவர் கழுமலநகர்த் தலைவரும்,தமிழ் விரகரும் ஆவார். அந்த ஞானசம்பந்தர் இயற்றியஇந்தத்திருப்பதிகம் மேம்பட்ட இசை மலிந்தபாடல்கள் ஆகும். இந்தப்பாடல்கள்பத்தையும்இசைக்க வல்லவர்கள்உலகினில் மேன்மை எய்துவார்கள்.
குறிப்புரை: இது மறைவனநாதனைமனத்தெண்ணிய அன்போடு,கற்றார்பயிலும்காழிஞானசம்பந்தன்சொன்ன இப்பத்துப்பாடல்களையும் பாட வல்லவர்கள் உலகில் மேன்மை எய்துவர்என்கின்றது. வசையறுமலர்மகள் - குற்றமற்ற திருமகள். திருமகளுக்குக் குற்றம் ஒரிடத்தும்நில்லாமையும்,தக்காரிடத்துச்செல்லாமையும்போல்வன. மறைவனத்து அங்ஙனம் இல்லாமையின்குற்றமற்றவள்ஆயினள்.
Adept in Tamil, - the Prince of Kazhumalam where thrive famous poets well- versed in glorious scriptures, has in abundant love, sung this hymn on the Supreme Lord Civan who is enshrined in Marai-vanam - also the abode of the flawless goddess on the Lotus. They who are well-versed in these melodious ten verses which are of high literary merit will flourish on earth in great splendour.
Note: Virakan: The skilled one, an adept. The saint thus refers to himself, as in many other stanzas.
திருச்சிற்றம்பலம்
22ஆம் பதிகம் முற்றிற்று
சிவமயம்
23. திருக்கோலக்கா
திருத்தலவரலாறு:
திருக்கோலக்கா என்ற திருத்தலமானதுசோழநாட்டுக் காவிரி வடகரைத் தலம் ஆகும்.சீகாழிக்குமேற்கே ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளது. இத்தலம்திருத்தாளமுடையார் கோயில் என வழங்கப்பெறுகிறது. திருஞானசம்பந்தசுவாமிகள்திருமுலைப்பால்உண்டருளிய மறுநாள், இத்தலத்திற்குஎழுந்தருளிக்கையினால் தாளம் இட்டுப் பாடினார். அப்போது இறைவன் திருவருளால்திருவைந்தெழுத்துஎழுதப்பெற்றபொற்றாளம் இவர் கைவந்தருளப் பெற்றது. சுவாமியின் பெயர் சப்தபுரீசுவரர். "அம்மையின் பெயர் ஒசை கொடுத்த நாயகி. கிழக்குப் பார்த்த சந்நிதி. கோயில் வாயிலில் அழகான தீர்த்தம் இருக்கிறது. சீகாழி திருமுலைப்பால் விழா அன்று மாலை ஞானசம்பந்த சுவாமி இங்கு எழுந்தருளுவார்.
பதிக வரலாறு:
ஞானபோனகராகிய பிள்ளையார் தம்முடைய காழித்தந்தையாரையும்ஞானப்பால் தந்த தாயாரையும்வணங்கிப் பக்கத்தில் உள்ள திருக்கோலக்காவிற்குவழிபடச்சென்றார். அங்கே கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் செம்பொருளாகியவேதவிழுப்பொருளை,நீலகண்டப்பெருமானைப்பொருளாகக்கொண்டு’மடையில்வாளைபாய'என்னும் பதிகத்தால் கைத்தாளம்இட்டுப்பாடிஅருளினார். கோலக்கா இறைவன் பிள்ளையார் கைகள் சிவப்பதைக் கண்டு மனம் பொறாதுதிருவைந்தெழுத்துஎழுதப் பெற்ற செம்பொன் தாளத்தைஈந்தருளினார். திருத்தாளம்வையம் எல்லாம் உய்யவரும்மறைச்சிறுவர்கைத்தலத்து வந்தது. அதனைப் பிள்ளையார் கையேற்றுத்திருமுடிமேல் வைத்து ஏழிசையும்தழைத்துஒங்கஇன்னிசைப் பதிகம் பாடி நிறைவு செய்து அருளினார். இப்பதிகத்தின்திருக்கடைக்காப்புச்செய்யுளைச் சேக்கிழார் பெருமான் தக்கதிருக்கடைக்காப்பு’ என்கிறார்கள். இப்பதிகப்பாடலில்,திருத்தாளம்பெற்றமைக்குநேர்ச்சான்று இல்லை. ஆனால்,திருக்கடைக்காப்பினுள்’தக்க திருக்கடைக்காப்பு’ என்றதனால்தாளம் பெற்றமைக்கு ஒரு சான்று உள்ளதாகச் சேக்கிழார் கருதுகின்றார்.’வலங்கொள் பாடல்’ என்றார். வலம் - வெற்றி. ஞானசம்பந்தரின்அருளிய அனுபவம் திருத்தாளத்தினால் வரையறை செய்து கொடுக்கப்பெறுகிறது. பரந்து செல்லும் இசையானது தாள ஒத்தினால்தான் வரையறை செய்யப்பெறும். அதனால் அனுபவ வெற்றி அமையும் என்பது உட்கிடக்கை.
THE HISTORY OF THE PLACE
23. THIRU-K-KOLA-K-KAA
This sacred place, on the north bank of Cauvery in Chola Naadu, is 1 km to the west of Seekaazhi. This temple is also known by the name of Thiruth Thaalamudaiyaar Koyil. The day after he had the grace of drinking the Goddess's breast milk, Saint Thiru-Gnaanasambanda Swaami came to this temple and sang while keeping the rhythm by clapping his hands. By the grace of the Lord, a pair of golden cymbals, with the holy five-lettered mantra inscribed on it, appeared into his hands. The Lord's name is Sabthapureesvarar and that of the Goddess is Osai Koduththa Naayaki. The shrine faces east. A pretty pond in front of the temple entrance is a sacred place. The deity of Thiru-Gnaanasambandar is brought to this temple on the evening of the day of the festival of holy breast milk celebrated in Seekaazhi.
INTRODUCTION TO THE HYMN
Thiru-k-kola-k-kaa is the holy place which the young saint visited the day after he drank the milk given by Umaa Devi, consort of Lord Civan of See-Kaazhi. While he started singing in front of Lord Civan at Thiru-k-kola-k-kaa, the Lord noticed the redness of the tender palm of the child saint due to his clapping of hands (beating time). Lord Supreme was much moved by this sight. He wished to help, and Lo! a pair of golden cymbals inscribed with the Five Letter Holy Mantra reached the flowery hands of the child saint. Astonished by this event, he placed the cymbals on his head and paid obeisance to the Lord. Thereafter using the cymbals, he completed the following hymn. The goddess of this place created sound in the golden cymbals (normally golden cymbals will not produce any sound). This goddess is, therefore, known as 'Oosai Koduththa Naayaki'.
திருச்சிற்றம்பலம்
23.திருக்கோலக்கா
பண் - ததராகம்
ராகம் : காம்போதி
மடையில்வாளைபாயமாதரார்
குடையும்பொய்கைக்கோலக்காவுளான்
சடையும்பிறையுஞ்சாம்பற்பூச்சுங்கீழ்
உடையுங் கொண்ட வுருவமென்கொலோ.1
மடையில்வாளைபாய,மாதரார்
குடையும்பொய்கைக்கோலக்காஉளான்
சடையும்,பிறையும்,சாம்பல்பூச்சும்,கீழ் -
உடையும் கொண்ட உருவம் என்கொலோ?
பொருள்: நீரைத்தேக்கி வெளியிடும் மடையில்வாளைமீன்கள்துள்ளிப்பாயுமாறு, பெண்கள் கையால் குடைந்து நீராடுகின்ற வளமான பொய்கைக்கரையில்அமைந்துள்ளதுதிருக்கோலக்கா. அந்தத் திருக்கோலக்காவில்எழுந்தருளியுள்ள சிவபிரான் சடைமுடியையும்அதன்கண்பிறையையும்கொண்டிருக்கிறான். திருமேனி முழுவதும் திருநீற்றுப்பூச்சையும்,இடையில் ஆடையாகக்கோவண உடையையும் கொண்ட உருவம் உடையவனாக இருப்பது ஏனோ?
குறிப்புரை: இது மாதர் நீராடுவதால்வாளைமீன்கள் துள்ளும் பொய்கைக்கரையில் உள்ள கோலக்காவில் உள்ளவன்,சடையும்பிறையும் தாங்கி,சாம்பலைப் பூசி,கீள் உடுத்து இருக்கின்ற வடிவத்தைக் கொண்டது ஏனோ என்கின்றது. தலமோ மாதர் நீராட,வாளைமடையில் பாயும் வளம் பொருந்திய தலம். அதற்கேற்ப இவர் அணியணிந்து,சாந்தம்பூசி,பட்டுடுத்துவாழாதுஇங்ஙனமாயதிருக்கோலத்தைக்கொண்டதேன்?கீளுடை - கீளோடு கட்டின கோவண ஆடை.
குருவருள்: இப்பாடலில்கீள் உடை என்பதே சரியான பாடம். கீள் என்பது கீளப்பட்டஅஃதாவதுகிழிக்கப்பட்டவாராகும். கீளார்கோவணமும்'என்ற சுந்தரர் தேவாரமும் காண்க. சடை இறைவனதுஎண்குணங்களுள்அளவிலாற்றலுடைமையைக்குறித்தது. “கடுத்து வரும் கங்கைதனைக்கமழ்சடைஒன்று ஆடாமேதடுத்தவர்'என்ற பிள்ளையார் வாக்கும் காண்க. எண்குணங்களுள் பிறை,பெருமான் கருணையாளன் என்பதை நினைவுறுத்துகிறது. தவறு செய்தவன் உணர்ந்தால் மன்னித்து அருள் வழங்கும் கருணை இதில் புலப்படுதல் காணலாம். சாம்பற்பூச்சும்,கீள்உடையும்பரமனின் பற்றற்ற நிலையைக்குறிப்பன. எல்லாம் இருந்தும் தான் ஒன்றும் அநுபவியாமல்யோகியாயிருந்துஉயிர்கட்குயோகநெறி காட்டி விடுதலை செய்பவன் என்பதைக் குறிப்பது.
Lord Civan is enshrined at the temple in the town of Tiru-k-kolak-kaa . There are pools with plenty of water in which young women dive and sport, causing the 'Vaalai' fish leap over the sluice. His crest is matted on which rests the crescent moon. His body is smeared with the holy ash. He is clad in 'Kovanam' in His loins. Why indeed is such a form assumed by Lord Civan?
Note: Vaalai: Scabbard-fish. Keell: Strip of cloth used as waist-band.
பெண்டான்பாகமாகப்பிறைச்சென்னி
கொண்டான் கோலக்காவுகோயிலாக்
கண்டான் பாதங்கையாற்கூப்பவே
உண்டா னஞ்சையுலகமுய்யவே.2
பெண்தான்பாகம்ஆகப்,பிறைச்சென்னி
கொண்டான்,கோலக்காவுகோயிலாக்
கண்டான்,பாதம் கையால் கூப்பவே
உண்டான் நஞ்சை,உலகம் உய்யவே.
பொருள்: சிவபிரான்,உமையன்னையைத் தன்னுடைய திருமேனியில்இடப்பாகமாகக்கொண்டான். கலைகள் ஒவ்வொன்றாகக் குறைந்து வந்த இளம்பிறையைச்சடைமுடிமீதுஏற்றுக் கொண்டான். திருப்பாற்கடலில் நஞ்சு தோன்றியபோது “காவாய்” என அனைவரும் கைகூப்பி வணங்க,உலகம் உய்யுமாறு அந்த நஞ்சினை உண்டு அருள் செய்தான். இவ்வளவு சிறப்புக்களை உடைய சிவபிரான் திருக்கோலக்காவினைத்தன்இருப்பிடமாகக்கொண்டவன்.
குறிப்புரை: இது கோலக்காவிற் கோயில் கொண்ட இறைவன்,எல்லாருந்தொழ,உலகம் உய்ய,கடல் நஞ்சை உண்டான் என்கின்றது. நஞ்சுண்டது தம் வீரத்தை வெளிப்படுத்தற்கன்று;உலகம் உய்ய எழுந்த பெருங்கருணையைத்தெரிவித்தவாறு.
Lord Civan has chosen the temple in Kolak-kaa as His abode. He is having His consort Umaa Devi on the left portion of His body. He wears the crescent moon in His crest. When the venom came out of Thiru-p-paar-kadal, all celestial beings ran to and adored Lord Civan with folded palms, moaned and begged for protection from the wrath of the poison. Lord Civan quaffed the poison and saved the celestials and others.
Note: The Venom: known as Halahalaa in Sanskrit. Its Tamil equivalent is Aala-halam.
பூணற்பொறிகொளரவம்புன்சடை
கோணற்பிறையன்குழகன்கோலக்கா
மாணப் பாடி மறைவல்லானையே
பேணப்பறையும்பிணிகளானவே.4
பூண் நல் பொறி கொள் அரவம்,புன்சடை
கோணல்பிறையன்,குழகன்,கோலக்கா
மாணப் பாடி,மறை வல்லானையே
பேணப்,பறையும்,பிணிகள்ஆனவே.
பொருள்: சிவபிரான் அழகிய புள்ளிகளை உடைய பாம்பைஅணியாகக் கொண்டவன். அவன்,சிவந்த சடையின் மேல் வளைந்த பிறையைச்சூடியவன். என்றும் மாறாத இளமைத்தன்மையை உடைய அந்தச் சிவபிரான் திருக்கோலக்காவில்எழுந்தருளியுள்ளான். வேதங்களைஅருளிய அந்தப் பெருமானைப்பேணியும்,தருக்கோலக்காவின் மாட்சிமை தங்கப் பாடியும் தொழுதால்பிணிகள் யாவும் நீங்கும்.
குறிப்புரை: கோலக்காவில்குழகனைப்பேணப்பிணிகள்நீங்கும்என்கின்றது. பூண் நல்பொறிகொள்அரவம் - நற்பொறிகொள் அரவம் பூண் என மாற்றுக. குழகன் - இளமை உடையவன். மாண - மாட்சிமை மிக. பேண - மனத்துள் இடைவிடாது தியானிக்க. பறையும் - ஒன்றொன்றாகஉருவமின்றிக்கெடும்.
Lord Civan uses the fair speckled snake as His ornament on His body. He wears the curved crescent moon on His red matted hair. Lord Civan the ever-young One, author of Vedas, is enshrined in Kola-k-kaa. Ye folks sing about the celebrated Kola-k- kaa and worship the Lord therein; all your illness will vanish.
Note: Kuzhakan: Lord Siva is Azhakan (the handsome One) as well as Kuzhakan (the ever-young One).
தழுக்கொள்பாவந் தளர வேண்டுவீர்
மழுக்கொள் செல்வன் மறிசேரங்கையான்
குழுக்கொள்பூதப்படையான்கோலக்கா
இழுக்கா வண்ண மேத்திவாழ்மினே.
தழுக் கொள் பாவம் தளர வேண்டுவீர்!
மழுக் கொள் செல்வன்,மறி சேர் அம்கையான்,
குழுக் கொள் பூதப்படையான்,கோலக்கா
இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மினே!
பொருள்: பல்வேறு காலங்களிலும் செய்த பாவங்களை நீக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்களே! மழுஆயுதத்தைப்படைக்கலனாகக் கொண்ட செல்வன் சிவபிரான்.அவன் மானைஏந்திய அழகிய கைகளை உடையவன்;பல்வேறு குழுக்களாக அமைந்துள்ள பூதங்களின்படையை உடையவன். இவ்வளவு சிறப்புக்களைத்தாங்கியசிவபிரானுடையதிருக்கோலக்காவைத் தவறாமல் சென்று தரிசித்துவாருங்கள். உங்களுடைய பாவங்கள்அகலும்.
குறிப்புரை: பாவங்கள் தளர வேண்டுபவர்களே! கோலக்காவில்இறைவனைக் கும்பிட்டு வாழ்த்துங்கள் என்கின்றது. தழுக்கொள் பாவம் - ஆணவமுனைப்போடு கூடிய ஆன்ம போதத்தால்தழுவிக்கொள்ளப்பட்டபாவங்கள். இழுக்கா வண்ணம் - தவறாதபடி.
Ye folks who desire to get rid of your entrenched sins, committed in the past on various occasions, hail the Lord of Kola-k-kaa without fail, the opulent One that wields a mazhu in one of His hands. He is the One whose beauteous hand sports a fawn. He is the Lord of the Bhuta-Hosts (army of servitors), your sins will then vanish.
Note: Thazhu: scar. Tazhukkoll paavam: Sins entrenched in scars.
மயிலார் சாயல் மாதோர்பாகமா
எயிலார் சாய வெரித்தவெந்தைதன்
குயிலார்சோலைக்கோலக்காவையே
பயிலாநிற்கப்பறையும்பாவமே.5
மயில் ஆர் சாயல் மாது ஓர்பாகமா,
எயிலார் சாய எரித்த எந்தைதன்
குயில் ஆர்சோலைக்கோலக்காவையே
பயிலாநிற்கப்,பறையும்,பாவமே.
பொருள்: சிவபிரான்,ஆண் மயில் போலும் ஒளி வீசும் நடையை உடைய உமையம்மையைஒரு பாகமாக உடையவன். அவன்,அரக்கர்களுடைய முப்புரங்கள்கெடுமாறுஎரித்தவன். அவன் எங்கள் தந்தையாவான். குயில்கள் நிறைந்து வாழும் சோலைகளை உடைய திருக்கோலக்காவை விரும்பி உறைகிறான். அந்தத் திருக்கோலக்காவைப்பலகாலும்நினைக்கப்பாவங்கள்நீங்கும்.
குறிப்புரை: திரிபுரம் எரித்த செல்வன் எழுந்தருளியுள்ளகோலக்காவை இடைவிடாது நினைக்கப் பாவம் பறையும்என்கின்றது. மாது - உமாதேவி. நோக்கினார் கண்ணுக்கு இனிமையும்,பிறவியால் வரும். மயக்கம் அறுக்கும் மருந்தும்ஆகலின் இறைவி மயிலார்சாயலள்ஆயினள். எயிலார் - திரிபுராதிகள். பயிலா நிற்க - இடைவிடாது தியானிக்க.
Lord Civan who is concorporate with goddess Umaa Devi of peacock like bearing is enshrined in Kola-k-kaa. The kuyil birds abound in the gardens of Kola-k- kaa. He is our Father who gutted with fire the three hostile citadels of Asuras. If you constantly adore Kola-k-kaa and venerate Lord Civa therein all your sins will vanish. Note: Kuyil: The Indian Cuckoo. It is symbolic of Siva-yogi.
வெடிகொள்வினையைவீட்டவேண்டுவீர்
கடிகொள் கொன்றை கலந்த சென்னியான்
கொடிகொள்விழவார்கோலக்காவுளெம்
அடிகள் பாதமடைந்துவாழ்மினே.6
வெடிகொள்வினையைவீட்டவேண்டுவீர்!
கடி கொள் கொன்றை கலந்த சென்னியான்,
கொடி கொள் விழவுஆர்கோலக்காவுள்எம்
அடிகள் பாதம் அடைந்து வாழ்மினே!
பொருள்: ஒன்றிலிருந்து .பிறிதொன்றாகக்கிளைக்கும்வினைப்பகையைநீக்கிக் கொள்ள விரும்புகின்றவர்கனே! கொடிகள் கட்டப்பட்டு,விழாக்கள்பலவும்நிகழ்த்தப்பெறும் தலம் திருக்கோலக்கா. அங்கு விரும்பித் தங்கும் எம் தலைவன் ஆகிய சிவபிரான்,மணம் பொருந்திய கொன்றை மலர் விரவியசென்னியை உடையவன். அத்தகையபெருமானுடையதிருப்பாதங்களை அடைந்து வாழ்வீர்களாக.
குறிப்புரை: இது வினைகெடவேண்டுவீர்கோலக்காவின்அடிகளை அடைந்து வாழுங்கள்என்கின்றது. வெடிகொள்வினை - வாழை சிங்கம் வெடித்தது என்றாற்போல ஒரு முதலிலிருந்துபலவாகப்
Ye that are desirous of routing your bursting loads of karma! Reach the feet of our Lord-God - the One that wears on His head the fragrant kondrai, the One whose shrine is Kolakkaa marked by festoons, flying flags, feasts and festivities. Hailing His Feet, ye shall flourish well.
Note: Thiru-k-kola-k-kaa is ever pervaded by a festive atmosphere.
நிழலார் சோலை நீல வண்டினங்
குழலார்பண்செய்கோலக்காவுளான்
கழலான்மொய்த்தபாதங் கைகளால்
தொழலார்பக்கற்றுயரமில்லையே.
நிழல் ஆர் சோலை நீலவண்டு இனம்,
குழல் ஆர்பண்செய்கோலக்காஉளான்
கழலால்மொய்த்த பாதம் கைகளால்
தொழலார்பக்கல் துயரம் இல்லையே.
பொருள்: கோலக்காவில் நிழல் செறிந்த சோலைகள் உள்ளன. அங்கு நீலநிறம் பொருந்திய வண்டினங்கள்வேய்ங்குழல் போல இசை வழங்கும். அவ்வகைப்பட்டதிருக்கோலக்காவில்சிவபிரான் விளங்கி உறைகிறான். அவனுடைய வீரக்கழல் செறிந்த திருவடிகளைக்கைகூப்பித்தொழுபவர் பக்கம் துயரம் வாராது.
குறிப்புரை: இது கோலக்காவுளான் பாதம் தொழுவார்க்குத்துயரமில்லைஎன்கின்றது. குழலார்குழல்போல,கழலான்மொய்த்த பாதம் - வீரக்கழலோடு செறிந்த சேவடி.
Lord Civan is entempled in Kola-k-kaa rich in shade-giving gardens where honeybees hum tunes of the flute made of bamboo. Misery comes nowhere near unto them who adore His ankleted feet with folded palms.
எறியார்கடல்சூழிலங்கைக்கோன்றனை
முறியார்தடக்கையடர்த்தமூர்த்திதன்
குறியார்பண்செய்கோலக்காவையே
நெறியாற்றொழுவார்வினைகணிங்குமே.8
எறி ஆர் கடல் சூழ் இலங்கைக்கோன்தனை
முறி ஆர்தடக்கைஅடர்த்தமூர்த்திதன்
குறி ஆர்பண்செய்கோலக்காவையே
நெறியால்தொழுவார்வினைகள்நீங்குமே.
பொருள்: அலைகள் எறியும் கடலால்சூழப்பட்டஇலங்கைக்கு மன்னன் இராவணன். அவன் கயிலை மலையைப் பெயர்க்க முயன்றான். அதனால்,அவனுடைய நீண்ட கைகள் முரிந்துபோகும்படிச் சிவபிரான் அடர்த்தான். அவ்வகைப்பட்டசிவபிரானைச்சுரத்தானங்களைக்குறித்த பண்ணிசையால்தருக்கோலக்காவில்,சிவாகமநெறிகளின்படிவழிபடுவார்களுக்குவினைகள்நீங்கும்.
குறிப்புரை: கோலக்காவைத்தொழுவார் வினை நீங்கும்என்கின்றது. எறியார்கடல் - எறிதலைப்பொருந்துகின்ற கடல். அதாவது கரையொடுமோதுகின்ற கடல். முறியார்தடக்கை - முரிதல் அமைந்த தடக்கை என்றது அவனது இருபது தோள்களையும். குறியார் பண்'குறிகலந்த இன்னிசை” என்பது போலக்கொள்க. நெறியால்தொழுவார் - சிவாகமநெறிப்படியேவணங்குகின்றவர்கள். வினைகள்நீங்கும் என்றது வினைகள்தாமேகழலும் என்பதை விளக்கிற்று.
Lord Civan is the 'Murti' (the glorious One) that broke the mighty arms of the King of Lanka, which is surrounded by a sea of billows. Those who duly adore Lord Civan in Kola-k-kaa by singing those particular songs that relate to Him, in the proper tune (Pann) and according to the prescribed Sivaagama ways, will stand freed of their karma.
நாற்றமலர்மேலயனுநாகத்தில்
ஆற்ற லணைமேலவனுங்காண்கிலாக்
கூற்றமுதைத்தகுழகன்கோலக்கா
ஏற்றான்பாதமேத்திவாழ்மினே.
நாற்றமலர்மேல்அயனும்,நாகத்தில்
ஆற்றல் அணைமேலவனும்,காண்கிலாக்,
கூற்றம்உதைத்த,குழகன் - கோலக்கா
ஏற்றான் பாதம் ஏத்தி வாழ்மினே!
பொருள்: மணம் பொருந்திய தாமரை மலர்மேல் விளங்கும் நான்முகனும்,ஆற்றல் பொருந்திய ஆதிசேடனாகியஅணையில்உறங்கும்திருமாலும் காண்பதற்கு இயலாதவன்சிவபெருமான். அவன் இயமனைஉதைத்தகுழகன். அத்தகைய சிவபெருமான் திருக்கோலக்காவில் விரும்பி உறைகிறான். அந்த இறைவனுடையதிருவடிகளைப் போற்றிவாழ்வீர்களாக.
குறிப்புரை: அயனும்மாலுங்காணாத,கூற்றமுதைத்தகுழகன்பாதத்தை ஏத்தி வாழுங்கள்என்கின்றது. நாற்றம் - மணம். நாகத்தில் - ஆதிசேடனிடத்தில். ஏற்றான் - இடமாக ஏற்றுக் கொண்டவன்.
Lord Civan is the ever-young One, incomprehensible to Brahmaa who is seated on a fragrant Lotus, and to Vishnu reclining on his bed of powerful snake; He kicked to death Yama, the very messenger of Death. Hail His Holy Feet and thrive well! He has the bull as His vehicle and is enshrined in Kola-k-kaa.
Note: The snake: Aadi-seshaa with a thousand hood.
பெற்ற மாசு பிறக்குஞ்சமணரும்
உற்ற துவர்தோயுருவிலாளருங்
குற்ற நெறியார்கொள்ளார்கோலக்காப்
பற்றிப்பரவப்பறையும்பாவமே.
பெற்ற மாசு பிறக்கும் சமணரும்,
உற்ற துவர்தோய்உருவுஇலாளரும்,
குற்றநெறியார்கொள்ளார்கோலக்காப்
பற்றிப்பரவப்,பறையும்பாவமே.
பொருள்: நீராடாமல் தம் உடலில் சேர்ந்த மாசுடன் தோன்றும் சமணரும்,தம் உடலில் பொருந்திய துவராடையால் தம்முடைய உருவத்தைமறைத்துக் கொள்ளும் பெளத்தர்களும்குற்றமுடைய சமய நெறிகளை மேற்கொண்டவர் ஆவர். அவர்கள் தம்முடைய தெய்வம் என்று ஏற்றுக்கொள்ளாததிருக்கோலக்காஇறைவனைப்பற்றுங்கள். போற்றி வழிபடுங்கள். பாவங்கள்தீரும்.
குறிப்புரை: சமணர்களும்,புத்தர்களும்சொல்வனவற்றைக்கொள்ளாதபெரியோர்கள் எனவும் கொள்ளலாம். பெற்றமாசு பிறக்கும் சமணர் - பெற்ற அழுக்குகளைமறையாது (கழுவாது) தாங்களாகவேவெளிப்படுத்திக் கொள்ளும் சமணர்கள். துவர்தோய்உருவிலாளர் - காவியாடையால்உருவந்தோன்றாதேமறைத்தபுத்தர்கள் ஆகிய இருவரும்,குற்ற நெறியார் -. குற்றப்பட்டசமயநெறியைஉடையவர்கள்.
Samanars move about with their unwashed dirt ridden bodies. Buddhists cover their bodies with yellowish brown colour garments. These two adhere to their sinful actions. They do not therefore accept Lord Civan as their Supreme God. But those who adore this Supreme Lord Civan in Kola-k-kaa will get rid of their sins.
நலங்கொள்காழிஞானசம்பந்தன்
குலங்கொள்கோலக்காவுளானையே
வலங்கொள் பாடல் வல்ல வாய்மையார்
உலங்கொள்வினைபோயோங்கிவாழ்வரே.11
நலம் கொள் காழிஞானசம்பந்தன்,
குலம் கொள் கோலக்காஉளானையே
வலம் கொள் பாடல் வல்ல வாய்மையார்,
உலம் கொள் வினை போய் ஓங்கி வாழ்வரே.
பொருள்: திருவருள் நலங்கள் யாவும் நிறைந்த சீகாழிப்பதியில்தோன்றியவர் ஞானசம்பந்தர். பண்பால் உயர்ந்த குலத்தினரைக் கொண்டது திருக்கோலக்கா. அங்கு விளங்கும் இறைவனை ஞானசம்பந்தர் திருவருள் வென்றியைக் கொண்ட இந்தத்திருப்பதிகப்பாடல்களால் பாடினார். இந்தத்திருப்பாடல்களை ஓதி வழிபட வல்ல வாய்மையாளர்கள், அவர்களுடைய மலைபோன்ற திண்ணிய வினைகள்நீங்கப்பெற்றுச் சிறந்து வாழ்வார்கள்.
குறிப்புரை: கோலக்காவைப் பற்றிய இப்பாடல்பத்தையும் வல்லவர் மலைபோன்றதம்வினையும்மாளஓங்கிவாழ்வார்கள்என்கின்றது. வலங்கொள்பாடல் - திருவருள் வன்மையைக் கொண்ட பாடல் அல்லது வலமாகக் கொண்ட பாடல் என்றுமாம்.
குருவருள்: உலம் - மலை. மலையளவு பாவம் செய்திருப்பினும்நெறியாகஇப்பதிகத்தைஒதினால், மலையளவுவினைகளும் பொடியாக,உயர்ந்த வாழ்வு பெறுவர். முடிவான பேரின்ப வாழ்வு பெறுவர்என்பதை உணர்த்துகின்றது. மேலும் ஞானசம்பந்தர்'மந்தரம் மன பாவங்கள்மேவிய,பந்தனையவர்தாமும்பகர்வரேல்,சிந்தும்வல்வினைசெல்வமும்மல்குமால்,நந்திநாமம்நமச்சிவாயவே'என்ற பாடலாலும்இக்கருத்தைவலியுறுத்துவார்.
Gnaanasambandan hails from See-Kaazhi town which is rich in all goodness of nature. Men of lofty ideals belonging to highly reputed families live in Kola-k-kaa. Gnaanasambandan has sung this hymn, extolling the grace of Lord Civan of Kola-k- kaa. Those who sing this hymn with sincere devotion, will get rid of their hill-like karma and will have a dignified life.
Note: The resultant of deeds get piled up day-by-day. Karma is therefore described as hill-like.
திருச்சிற்றம்பலம்
23ஆம் பதிகம் முற்றிற்று
உ
சிவமயம்
2.சீகாழி
திருத்தலவரலாறு:
முதல் பதிகம் பார்க்க.
திருச்சிற்றம்பலம்
24.சீகாழி
பண் : தக்கராகம்
ராகம் : காம்போதி.
பூவார்கொன்றைப்புரிபுன்சடையீசா
காவாயெனநின்றேத்துங்காழியார்
மேவார்புரமூன்றட்டாரவர்போலாம்
பாவாரின்சொற்பயிலும்பரமரே.1
“பூ ஆர்கொன்றைப்புரிபுன்சடைஈசா!
காவாய்” என நின்று ஏத்தும் காழியார்,
மேவார்புரம்மூன்றுஅட்டார் அவர் போல்ஆம் -
பாஆர் இன்சொல் பயிலும்பரமரே.
பொருள்: பாடல்களின் சொல்லும் பொருளுமாகக் கலந்து நிற்கும் பரமன் சிவபிரான். அவரைச்சீகாழிப்பதியினர், “கொன்றைப் பூக்கள் பொருந்திய,முறுக்கேறியசெஞ்சடையினை உடைய ஈசா! எங்களைக்காவாய்'என நின்று துதித்துப்போற்றுகிறார்கள். அந்தச்சிவபிரானே,மனம் ஒன்றாதஅரக்கர்களின் மூன்று புரங்களையும்அழித்தார்.
குறிப்புரை: இது பாக்களின்சொற்பொருளாய்ப்பயிலும்பரமர் திரிபுரம் எரித்த சீகாழியார் போலும் என்கின்றது. புரிபுன் சடை - புரியாகமுறுக்கேறியபுல்லிய சடை. ஏத்தும் - மக்களாலும்தேவர்களாலும்ஏத்தப்படுகின்ற. மேவார் - பகைவர்களாகியதிரிபுராதிகள். பாவார் இன்சொல் - பாக்களில் நிறைந்த இனியசொல்,பயிலுதல் - சொற்கள் தோறும் பொருளாய் அமைதல்.
Lord Civan is verily the import of the holy hymns, compact of sweet words; In the days of yore, He burnt down the triforts of the three recalcitrant Asuras; "O Lord whose strands of ruddy matted hair are decked with bunches of cassia flowers! Save us!" Thus is He, of Kaazhi, hailed and implored.
எந்தை யென்றங்கிமையோர்புகுந்தீண்டிக்
கந்த மாலை கொடுசேர்காழியார்
வெந்த நீற்றர்விமலரவர்போலாம்
அந்தி நட்டமாடும்மடிகளே.
“எந்தை என்று,அங்குஇமையோர் புகுந்து ஈண்டிக்,
கந்தமாலைகொடு சேர் காழியார்,
வெந்தநீற்றர்,விமலர் அவர் போல்ஆம் -
அந்தி நட்டம் ஆடும் அடிகளே.2
பொருள்: சிவபிரான் அந்திக் காலத்தில் நடனம் ஆடும் அடிகள் ஆவார். தேவர்கள், “எந்தையே” என்று அன்போடு அழைப்பர். ஆலயத்துள் புகுந்து குழுமுவர். மணம் மிக்க மாலைகளை அணிவித்தல் பொருட்டுச்சேருவர். அவர்களால் மாலை அணிவிக்கப் பெறும் சிவபிரான்தான்சீகாழிப்பதியார் ஆவார். குற்றமற்றவரான அவரே நன்றாகச் சுட்டு எடுத்த திருநீற்றைஅணிந்தவர் ஆவார்.
குறிப்புரை: அந்திக்காலத்து நடமாடும் அடிகளேமாலையும்சாந்தும் கொண்டு'தேவர்கள்வழிபடும்காழியார்போலாம்என்கின்றது. இமையோர் - தேவர்கள். எந்தை என்று - எம் உயிர்த் தந்தையே என்று, அந்திநட்டம் - சந்தியாதாண்டவம்.
The celestials foregather and hail Lord Civan thus: "O Our Father!" He is of Kaazhi and He indeed is the immaculate holy God. He is decked with fragrant garlands. He smears His body with fully-burnt holy ash. He is the Lord-God who enacts a special dance at the time of the great deluge known as Santyaa Natanam (சந்தியாதாண்டவம்).
Note: Santyaa Natanam: This dance is enacted by Civa during the hour of Pradosham for the upliftment of all. This is witnessed by all the heavenly Gods too.
தேனை வென்ற மொழியாளொருபாகங்
கானமான்கைக் கொண்ட காழியார்
வானமோங்குகோயிலவர்போலாம்
ஆன வின்பமாடும்மடிகளே.3
தேனை வென்ற மொழியாள்ஒருபாகம்
கானமான் கைக் கொண்ட காழியார்
வானம் ஓங்கு கோயிலவர்போல்ஆம்
ஆன இன்பம் ஆடும் அடிகளே.
பொருள்: சிவபிரான் முற்றிய இன்பத்தோடு ஆடுகின்றார். இனிப்பில்தேனை வென்றுவிளங்கும் மொழிகளைப்பேசுகின்றஉமையம்மையைஒருபாகமாகக் கொண்டவர். காட்டில் திரியும்இயல்பினதாகியமானைக் கையில் ஏந்தி அவர் விளங்குகிறார். அவரே சீகாழிப்பதியில்உறையும் இறைவன் ஆவார். அவர் வானளாவிய உயர்ந்த திருக்கோவிலில்விளங்குபவர் ஆவார்.
குறிப்புரை: இது உமையாளைஒருபாகம் வைத்து மானைக்கையேந்தியகாழியார்இன்பத்தோடுநடமாடும் இறைவர்என்கின்றது. தேனை வென்ற மொழியாள் - வாய்வழிபுகுந்து முன் இனிப்பாய்ப் பின் புளிக்கும்தேனை,செவிவழியாகச்சிந்தையுள் புகுந்து பின்னும் இனிக்கும் மொழி வென்றது என்பதுகுறிப்பு கான மான் சாதியடை. இறைவன் கையில் உள்ளது காட்டு மான் அன்று. ஆன இன்பம் ஆடும் - முற்றிய இன்பத்தோடு ஆடுகின்ற ஆனநெய்என்பதுபோல்பசுவினால்வரும்இன்பமாகிய பால் முதலியனவுமாம்.
Lord Civan is concorporate with His consort, Umaa Devi, whose words excel honey in their sweetness; He, the Lord of Kaazhi sports in His hand a sylvan antelope. His abode is the sky-vaulting shrine. He is the Lord-God who enacts the Dance of Bliss. Note: The Aananda Taandavam: The Dance of Bliss. This can be enacted by Lord Civa alone.
மாணாவென்றிக் காலன் மடியவே
காணாமாணிக்களித்தகாழியார்
நாணார் வாளி தொட்டாரவர்போலாம்
பேணார்புரங்களட்டபெருமானே.&
மாணாவென்றிக் காலன் மடியவே
காணாமாணிக்கு அளித்த காழியார்,
நாண் ஆர் வாளி தொட்டார் அவர் போலாம்
பேணார்புரங்கள்அட்டபெருமானே.
பொருள்: சிவபிரான்,தம்மைப் பேணி வழிபடாதஅசுரர்களின்முப்புரங்களைஅழித்தவர். மாட்சிமை இல்லாத வெற்றியை உடைய காலனைமடியுமாறு செய்தவர். தம்மை அன்றி வேறொன்றையும்காணாதமார்க்கண்டேயமுனிவருக்கு என்றும் பதினாறுஆண்டோடுவிளங்கும் வரத்தை அளித்து அருளியவர். அவரே,சீகாழிப்பதியில்உறையும் இறைவன் ஆவார். அந்தச்சிவபிரானே,முப்புரங்களைஅழித்தற்பொருட்டுநாணில்பூட்டியஅம்பைத்தொடுத்தவரும் ஆவார்.
குறிப்புரை: சரந்தொடுத்துப் புரம் அட்ட பெருமான் காலனைஉதைத்தகாழியார்போலாம்என்கின்றது. மாணாவென்றி - மாட்சிமைப்படாத வெற்றி. காணாமாணிக்கு - இறைவனையன்றிவேறொன்றையும்காணாதபிரமசாரியாகியமார்க்கண்டருக்கு. பேணார் - பகைவர்.
The bachelor sage Maarkandeya was a staunch devotee of Lord Civan. He would never think or observe in his mind anything else other than Lord Civan. Yaman the god of death came to take away his life at the appropriate time. At that moment the sage was embracing the Civa Lingam which he was worshipping. Without any respect to Lord Civan or to His devotee, Yama plunged forth to take away the life of the saint. Lord Civan of Seekaazhi kicked Yama to death and gave permanent life to Markandeya with sixteen years of age forever. He indeed is the Lord who unleashed the dart from His bow and smote the three hostile citadels of Asuras.
மாடேயோதமெறியவயற்செந்நெற்
காடேறிச்சங்கீனுங்காழியார்
வாடா மலராள்பங்கரவர்போலாம்
ஏடார்புரமூன்றெரித்தவிறைவரே.5
மாடே ஓதம் எறிய,வயல் செந்நெல்
காடு ஏறிச் சங்கு ஈனும்காழியார்,
வாடா மலராள்பங்கர் அவர் போல்ஆம்
ஏடார்புரம்முன்று எரித்த இறைவரே.
பொருள்: குற்றம் பொருந்திய அசுரர்களின்புரங்கள்மூன்றையும் எரித்து அருளியவர்சிவபிரான். அருகில் உள்ள கடல்நீரின்அலைகளால்எறியப்பட்டசங்குகள்,வயல்களில்விளைந்தசெந்நெற்பயிர்களுடையசெறிவில் ஏறி முத்துக்களைஈனும். அந்த அளவு சீகாழி செழிப்புள்ளது. அங்குச்ஏவபிரான்சீகாழிப்பதியினராக விளங்குகிறார். அவர்வாடாமலர்களைச் சூடி விளங்கும் பார்வதி தேவியைத் தம் திருமேனியின் ஒரு பங்காகஉடையவர் ஆவார்.
குறிப்புரை: புரம் எரித்த இறைவரேகாழியில் உள்ள உமைபாகர் போலும் என்கின்றது. கடல் ஓதத்தால்பக்கங்களில்எறியப்பட்டசங்குகள்வயலில் உள்ள செந்நெற்காட்டில் ஏறி முத்தீனும்காழி என்றது திருவருள் வாய்ப்பிருக்குமானால்மடுவிலிருந்த ஒன்றும் காழிக்கரையேறிக் கடவுள் கருணையெய்திஇன்பமுறும் என்று குறிப்பித்தவாறு. வாடாமலராள் என்றது தெய்வக் கற்புடையாள் என்பதைத் தெரிவிக்க. ஏடு - குற்றம்.
'Chanks' (seashells) thrown up on to the seashore by the waves, crawl into the paddy fields of Kaazhi and deliver their pearls. The Lord of Kaazhi is concorporate with His consort Paarvathi Devi who forms part of His body frame. She wears on Her head flowers which never fade; He is the Lord-God who burnt the three flawed citadels of Asuras.
கொங்கு செருந்தி கொன்றை மலர்கூடக்
கங்கை புனைந்தசடையார்காழியார்
அங்க ணரவ மாட்டு மவர்போலாஞ்
செங்கணரக்கர்புரத்தையெரித்தாரே.6
கொங்கு செருந்தி கொன்றை மலர்கூடக்
கங்கை புனைந்தசடையார்காழியார்
அம் கண் அரவம் ஆட்டுமவர்போல்ஆம்
செங்கண் அரக்கர் புரத்தைஎரித்தாரே.
பொருள்: சிவபிரான்,சிவந்த கண்களை உடைய அரக்கர் மூவருடையதிரிபுரங்களைஎரித்தார். அவர் கோங்கு,செருந்தி கொன்றை மலர் இவற்றுடன் தம்முடைய சடைமுடியில்கங்கையைஅணிந்துள்ளார். சீகாழி நகரில் விரும்பி உறைந்த காரணத்தால் அவரே காழியார்எனப்படுவார். அச்சிவபிரான்சீகாழியில்விருப்பமாகத் தங்க,தாம் அணிந்துள்ளபாம்புகளை உடல் உறுப்புக்களில் வைத்து ஆட்டிவருபவராகவும் உள்ளார்.
குறிப்புரை: புரமெரித்தபெருமானேகாழியாராகிய பாம்பாட்டி போலும் என்கின்றது. அங்கண் அரவம் ஆட்டுமவர் - அவ்விடத்துப்பாம்பைஅவயவங்களிலணிந்துஆட்டுவர். (அம்கண் - அழகிய கண் கொண்ட அரவுஎனலும் கூடும் போலும்).
The Lord of Kaazhi wears on His matted crest Kongku, Serunti and Kondrai flowers, along with the river Ganga. He indeed is the One that causes the snake of bewitching eyes, which dons His body to dance. Lo, He burnt the three citadels of the red-eyed Asuras.
Note: Konku: Hopea parviflora
Serunti: Ochua squarrosa
Kondrai: Indian laburnum
கொல்லை விடைமுன்பூதங்குனித்தாடுங்
கல்லவடத்தையுகப்பார்காழியார்
அல்ல விடத்துநடந்தாரவர்போலாம் ப
பல்லவிடத்தும்பயிலும்பரமரே.
கொல்லை விடைமுன் பூதம் குனித்து ஆடும்
கல்லவடத்தைஉகப்பார்காழியார்
அல்ல இடத்தும் நடந்தார் அவர் போல்ஆம்
பல்லஇடத்தும்பயிலும்பரமரே.
பொருள்: பரமராகிய சிவபிரான் எல்லா இடங்களிலும் நிறைந்து விளங்கும் பெருமானார்ஆவார். முல்லை நிலத்துக்குரியஆன்ஏற்றில் ஊர்ந்து,அதன் முன்னே பூதகணங்கள்வளைந்து நெளிந்து ஆடிச் செல்லக் கல்லவடம்என்றொருவகைப்பறையின்ஒலியைவிரும்புபவர்.€காழியில் விரும்பி உறைகின்ற காரணத்தால் அவர் காழியார் ஆவார். தம்மை அறிந்து போற்றுநர்அல்லாதார் இருக்கும் இடங்களிலும் தோன்றி,உயர்வு தாழ்வு கருதாதுஅருள் வழங்கும் இயல்பினர்.
குறிப்புரை: கொல்லைவிடை - முல்லைக்கடவுளாகியதிருமாலாகிய விடை. கல்லவடம்.ஒருவகைப்பறை. அல்லவிடத்தும் - தம்மையறிந்துபோற்றற்குரியர் அல்லாத இடத்தும். பல்லவிடத்தும் - உயர்வு தாழ்வு கருதாதே பல இடங்களிலும்.
Lord Civan rides the Bull. His Bhutas bend, roll-over and dance before the Bull (Thirumaal) which is characteristic of the Mullai land; He of Kaazhi relishes the resonance of the drum known as Kallavatam. The Supreme One visits all places including the ones where He is not welcome; such indeed is His grace!
Note: Mullai: The pastoral region (Forest and adjoining areas).
Kallavatam: A kind of drum.
Thirumaal is considered as the god of forests and adjoining areas.
எடுத்த வரக்கனெரியவிரலூன்றிக்
கடுத்துமுரியவடர்த்தார்காழியார்
எடுத்த பாடற்கிரங்குமவர்போலாம்
பொடிக்கொணீறுபூசும்புனிதரே.8
எடுத்த அரக்கன் நெரிய,விரல் ஊன்றி,
கடுத்து,முரியஅடர்த்தார்,காழியார்;
எடுத்த பாடற்குஇரங்குமவர்போல்ஆம்
பொடிக் கொள் நீறு பூசும்புனிதரே.
பொருள்: சிவபிரான்,பொடியாக அமைந்த திருநீற்றைப்பூசும்தூயவர். கயிலை மலையைஇராவணன் எடுத்தான். அவனுடைய முடிகள்நெரியுமாறு தம் கால் விரலைஊன்றிச்சினந்தார். அவனுடைய ஆற்றல் அழியுமாறுஅடர்த்தவர்;காழியாராகிய சிவபெருமான். ஆனால்,இராவணன் எடுத்த பாடலாகியசாமகானத்துக்கு இரங்கி அருள்செய்தவர் ஆவார்.
குறிப்புரை: இராவணனைநெரித்தகாழியார்கானத்திற்கிரங்கும்கருணையாளர்போலாம்என்கின்றது. கடுத்து - கோபித்து. பாடல் - சாமகானம்.
The Immaculate Lord Civan smears His body over with the fine powder of holy (white) ash. He resides in Mount Kailas with His consort Paarvathi. The Raakshasaa king of Lankaa once tried to lift Mount Kailas and put it aside. Civan, the Lord of See Kaazhi pressed the top of Mount Kailas by His toe, whereby the king's head and shoulders got crushed. His energy and egoism faded away. He repented and appeased Lord Civan by singing Saama Gaanam (). The Lord of See Kaazhi was pleased, forgave him and graced him with boons.
Note: He did relent: Lord Civa punishes men for their transgression. When sinners rue their conduct, Lord Civan showers His grace on them. Lord Civan is supremely merciful. 'அன்பேசிவமாவதாருமறிகிலர்' - திருமந்திரம்.
ஆற்ற லுடையவரியும்பிரமனுந்
தோற்றங்காணாவென்றிக்காழியார்
ஏற்ற மேறங்கேறுமவர்போலாங்
கூற்றமறுகக்குமைத்தகுழகரே.9
ஆற்றல் உடைய அரியும்பிரமனும்
தோற்றம் காணாவென்றிக்காழியார்,
ஏற்றம் ஏறு அங்கு ஏறுமவர்போல்ஆம்
கூற்றம்மறுகக்குமைத்தகுழகரே.
பொருள்: வாழ்நாளைக்கூறுபடுத்திக்கணக்கிட்டு உயிர் கொள்ளும் இயமன்அஞ்சுமாறுஅவனை உதைத்து மார்க்கண்டேயருக்கு அருள் செய்த குழகர் சிவபிரான் ஆவார். ஆற்றல் உடைய திருமாலும்,பிரமனும் அவருடைய அடிமுடிகள் தோன்றும் இடங்களைக்காணாதவாறுவானுற ஓங்கிய வெற்றியை உடையவர். அவர் விருப்பத்துடன் காழிப்பதியில்எழுந்தருளியுள்ளார். அவர் மிக உயர்ந்த ஆன்ஏற்றில் ஏறி,உலா வந்து அருள் புரிபவர் ஆவார்.
குறிப்புரை: கூற்றங்குமைத்தகுழகராகியகாழியார் இடபம் ஏறும் கருணையாளர்போலாம்என்கின்றது. ஆற்றலுடைய என்றது ஆற்றல் இருந்தும் இறைவனைக்காணப்பயன்பெற்றிலஎன்பதைத் தெரிவிக்க. ஏற்றம் ஏறு - உயர்ந்த இடபம்.
The form of the victorious Lord Civan of Kaazhi is unknowable to the mighty Hari and Brahmaa. He indeed is the Rider of the lofty Bull; He is the ever-young One who (reprimanded and) kicked Yamaa to death (and saved the life of Maarkandeya).
பெருக்கப்பிதற்றுஞ் சமணர் சாக்கியர்
கரக்குமுரையை விட்டார் காழியார்
இருக்கின்மலிந்தவிறைவரவர்போலாம்
அருப்பின்முலையாள்பங்கத்தையரே.10
பெருக்கப்பிதற்றும் சமணர் சாக்கியர்
கரக்கும்உரையை விட்டார் காழியார்
இருக்கின்மலிந்தஇறைவர் அவர் போல்ஆம்
அருப்பின்முலையாள்பங்கத்துஐயரே.
பொருள்: தாமரை மலரின் அரும்பு போன்ற தனபாரங்களை உடைய உமையம்மையை ஒரு பங்காகக்கொண்டுள்ளவர்தலைவராகிய சிவபிரான். காழியில்எழுந்தருளியுள்ள அவர், உண்மையின்றி மிகப் பிதற்றுகின்ற சமணர் சாக்கியர்களின்வஞ்சகஉரைகளைக் . கொள்ளாதவர். அவரே,இருக்கு வேதத்தில்நிறைந்துள்ளஇறைவரும் ஆவார்.
குறிப்புரை: உமையொருபாகனாகியகாழியார்இருக்குவேதத்தில் நிறைந்த இறைவர்போலாம்என்கின்றது. பெருக்கப்பிதற்றும் - உண்மையில்லாமல் மிகப் பிதற்றுகின்ற. கரக்கும் உரை - வஞ்சகஉரை. அருப்பின்முலையாள் - அரும்பு போன்ற முலையை உடைய பார்வதி.
Lord Civan is untouched by the deceitful words of the Samanaas and the Buddhists - who prattle incoherently. This great Civan is concorporate with His consort Umaa of lotus like breasts; He is indeed the sum and substance of the Rig Veda.
காரார்வயல்சூழ்காழிக்கோன்றனைச்
சீரார்ஞானசம்பந்தன்சொன்ன
பாரார்புகழப் பரவ வல்லவர்
ஏரார்வானத்தினிதாவிருப்பரே.11
கார்ஆர்வயல்சூழ்காழிக்கோன்தனைச்
சீர்ஆர்ஞானசம்பந்தன் சொன்ன
பாரார்புகழப் பரவ வல்லவர்
ஏர்ஆர்வானத்துஇனிதாஇருப்பரே.
பொருள்: கோமானாகிய சிவபிரான்,நீர்வளத்தால்கருஞ்சேறு பட்டு விளங்கும் வயல்களால்சூழப்பட்டசீகாழிப்பதியில் விளங்குகிறார். அவர்மீது,சிறப்புப் பொருந்திய ஞானசம்பந்தன்பாடல்களை அருளிச்செய்துள்ளார். அவற்றை ஓதிப்போற்றித் துதிக்க வல்ல உலகோர், அழகிய வானகத்தில்இனிதாகஇருப்பர் (உலகர்போற்றிப்புகழுமாறு பரவ வல்லவர்கள்).
குறிப்புரை: காழிநாதனைப்பற்றிஞானசம்பந்தன்சொன்னவைகளைஉலகோர் புகழ "உரைக்க வல்லவர்கள்வானத்துஇனிதாய்இருப்பர்என்கின்றது. ஏர் - அழகு.
The town of See Kaazhi is prosperous with plenty of water. It is surrounded by black muddy fields. Lord Civan is entempled here on whom the glorious Gnaanasambandan has sung this hymn.
Those who recite this hymn drawing aprobation from everybody in the world, will pleasantly abide in heaven.
திருச்சிற்றம்பலம்
24ஆம் பதிகம் முற்றிற்று
25.திருச் செம்பொன் பள்ளி
திருத்தலவரலாறு:
திருச்செம்பொன்பள்ளி என்ற திருத்தலமானதுசோழநாட்டுக்காவிரித்தென்கரைத் தலம் ஆகும். மயிலாடுதுறையில் இருந்து பேருந்து வசதி உள்ளது. இத்தலம்செம்பொனார் கோயில் என இக்காலத்துவழங்கப்பெறுகின்றது. இந்திரன் விருத்திராசுரனைக்கொல்வதன்பொருட்டுப்பூசித்து வழிபட்டான். அதனால் இந்திரபுரி எனவும் வழங்கப் பெறும். முருகப் பெருமான் தாரகாசுரவதத்தின்பொருட்டுப்பூசித்தமையின்ஸ்கந்தபுரி எனவும் வழங்கும். அகத்தியர் வழிபட்டுப்புருஷார்த்தங்களைப்பெற்றார். பிரமன் பூசித்துப்படைப்புத் தொழில் கைவரப் பெற்றான். இரதிபூசித்துத் தன் பதியாகியகாமனை அடைந்தாள். நாககன்னியர்கள் வழிபட்டு நல்ல கணவரைஅடைந்தனர். இந்திரன்,தக்ஷன் யாகத்தில் கலந்து கொண்ட குற்றத்திற்குப் பரிகாரம் தந்தருளியதலமும் இதுவே. வசிட்டர்,திக்பாலகர்கள்,காவிரி,சமுத்திரம் முதலியவர்களும்பூசித்துப் பேறு பெற்றனர். வீரபத்திரர்தக்ஷயாகத்திற்காகஅவதரித்ததலமும் இதுதான். இத்தலத்திற்கு அருகாமையில் ஓடும் காவிரியில்இட்ட எலும்புகள் பூமரங்களாய்இறைவனுக்குச்சாத்தப்பயன்பெறும். சுவாமி பெயர் சுவர்ணபுரீசுவரர். அம்மை பெயர் சுகந்தவன நாயகி, மருவார்குழலி. தலவிருட்சம்வன்னி. தீர்த்தம் இந்திர தீர்த்தம்,காவிரி முதலியன. கிழக்குப்பார்த்த சந்நிதி. அம்மை தென்பாகத்தில்மேற்குமுகமாகஎழுந்தருளி இருக்கின்றார்.
கல்வெட்டு:
இத்தலத்தைப் பற்றியனவாக6 கல்வெட்டுக்கள் உள்ளன. அவை1925இல் படியெடுக்கப்பெற்றுள்ளன. இராஜாதிராஜன் ஆட்சி ஐந்தாமாண்டில்திருவாலங்காடுஉடையார்க்குவிளநகரானநித்தவிநோத சதுர்வேதி மங்கலத்துவிளநாட்டுச் சபையார் நிலம் விட்ட செய்தியை அறிவிப்பது. அதே ஆண்டில்இராஜாதிராஜவளநாட்டுதிருஇந்தளூர் நாட்டு மணற்குடியானஉத்தமசோழசதுர்வேதி மங்கலத்துச் சபையார்,ஜெயங்கொண்டசோழமண்டலத்துஆக்கூர் நாட்டு ஆக்கூரானஇராஜேந்திரசிம்மசதுர் வேதி மங்கலத்துமேல்பாதிஅபிமானமநல்லூரில்அரசற்கு நன்றாக,வழிபட வருவோர்க்குஉணவிற்காக நிலம் வழங்கப்பெற்றுள்ளது. மூன்றாம் குலோத்துங்கன்காலத்துஇராஜேந்திரசிம்மநாடாகியஆக்கூரில்தூண்டாவிளக்கெரிக்க நாற்பது பொற்காசுக்கு நிலம் வாங்கி உழவரிடம் ஒப்படைக்கப்பட்டது.6ஆம் ஆண்டில் அரசியலில் சிறந்த செய்தி ஒன்று அறிவிக்கப்படுகிறது. சிங்களவர்களைத்துணைக் கொண்டு பாண்டியர்கள்படையெடுத்து வந்த படையேறுகலகத்தில்செம்பொன்னார் கோயிலில் உள்ள தேவரடியாரும் கோயில் நியாயத்தாருமாகச் சேர்ந்து எல்லாத் திருவுருவங்களையும்திருவிடைக்கழி இளைய பிள்ளையார் கோயிலில் கொண்டு போய் வைத்துப்பாதுகாத்தனர். மேலும் அவ்வாண்டில் பெரிய புயற்காற்று அடித்திருக்கின்றது. அதனால் தப்பாதவேதியன் திருவாசல் வடக்குச்சுவரும் தேரடி இரண்டும்வீழ்ந்தன. இன்னார் என்று அறியப்படாதஇராஜகேசரி வர்மன் ஆறாம்ஆண்டில்பூசைக்கும்பணிக்குமாகத் தலைச் செங்காட்டுச் சபையார் ஒருவனிடமிருந்து நிலம் வாங்கி அரசற்கு நன்றாக அளித்தனர். இதில் இராஜ சுந்தரன் வீதி என்ற ஒரு தெருப்பெயர்குறிப்பிடப்படுகின்றது. சரபோஜிராஜா கலி4821-இல் செம்பொன்னாதர்கோயிலுக்குத்தலைச்சங்காடு சபையார் கிராமங்களின்நன்மைக்காகஆண்டுக்கு ஒருமுறை வரியோடுகூடதறிகளின்உற்பத்தியளவையொட்டிஆயம்வசூலித்துக்கொள்ளவும்காவேரிப்பட்டினம்அய்யாவையனும்தாண்டவராயமுதலியாரும்வசூலிப்பாளராயிருக்கவும் ஆணை தரப்பட்டுள்ளது.
பதிக வரலாறு:
ஆளுடைய பிள்ளையார் திருமயிலாடுதுறை என்னும் மாயூரத்தைவணங்கிப்பதிகம்பாடிவழியில் விளநகரைவணங்கித்திருச்செம்பொன்பள்ளியை அடைந்தார். அங்கு அணிகிளர்சூலக்கைத்தலப்படைவீரராகியசெம்பொன்பள்ளியாரை வணங்கி “மருவார்குழலி” என்னும் திருப்பதிகத்தைப் பாடினார். இப்பதிகத்தில்மருவார்குழலி என அம்மையின்திருநாமமும், செம்பொன்பள்ளிமேயான்எனச்சுவாமியின்திருநாமமும்அறிவிக்கப்படுகின்றன. ஏழாம்திருப்பாடலில் வரும் “கையார்சூலமேந்தும் கடவுளை” என்பதைச் “சூலக்கைத்தலப்படைவீரா” எனச் சேக்கிழார் பெருமான் சொல்லிக்காட்டுகிறார்.
THE HISTORY OF THE PLACE
25. THIRU-CH-CHEMPON PALLI
The sacred city of Thiru-ch-chempon-palli is on the south shore of Cauvery in Chola Naadu, accessible by bus from Mayilaaduthurai. This place is called Semponaarkoyil these days. Indhiran offered worship in order to be able to kill the demon Viruththiraasuran. Therefore it is known also as Indhirapuri. Since Lord Murugan worshipped here for successful killing of demon Thaarakaasuran, it is also known as Skandhapuri. Sage Agasthyar offered worship here to obtain the aims of life, i.e., Purushaarththams. Biraman offered worship and obtained the ability for creation. Rathi got back her husband Kaaman as a result of worshipping here. The Naaga maidens got good husbands by offering worship here. This is also the place where Indhiran got expiation from the sin of having participated in the sacrifice of Dhakshan. Vasittar, Dhikpaalakars, River Cauvery and the Sea all offered worship and got what they wanted. This is where Lord Civa created and commanded Veerabadhrar the to destroy the sacrifice of Dhakshan. Human bones, deposited into the Cauvery river that flows next to the temple, turn into flowering trees which are used for decorating the Lord. The God's name is Suvarnapureesvarar and that of the Mother is Suganthavananaayaki, also called Maruvaarkuzhali. The sacred tree is Vanni and the sacred ford is Indhira Theerththam and Cauvery. The Lord's shrine faces east and the Goddess faces west with the shrine to the south of the Lord's.
Stone Inscriptions
There are six inscriptions about this temple and they have been copied in 1925. One of them informs about the grant of land by the assembly of Vilanaadu of Niththavinodha Chathurvedhi Mangalam which was the Vilanagar for the Lord of Thiruvaalangkadu, in the 5th regnal year of Raajaadhiraajan. In the same year, the assembly of Uththama Chola Chathurvedhi Mangalam, Manarkkudi of Thiru Indhaloor Naadu in Raajaadhiraaja Valanaadu, gifted land 'in favour of the king' for feeding the devotees, that land being situated in Abimaananalloor, the upper half of Raajendhirasimma Chathurvedhi Mangalam, Aakkoor of Aakkoor Naadu, in Seyangkonda Chola Mandalam. During the reign of Kuloththungkan III, land in Aakkoor of Raajendhirasimma Naadu was purchased for forty gold pieces and given to farmers for the perpetual lighting of lamps. An interesting piece of political news of the 6th regnal year is revealed. When the Paandiyars made war with Singkalavars for allies, in the ensuing chaos of war, the temple officials and temple dancers (Thevaradiyaar) of Semponnaarkoyil took with them all the icons of deities and deposited them for safekeeping in the Ilaiya Pillaiyaar temple of Thiruvidaikkazhi, and ensured their safety. In that year there was also a great wind storm from which the north wall of the Thappaadha Vedhiyan Thiruvaasal and the temple car stand collapsed. During the 6th regnal year of an unidentifiable king with the title of Raajakesarivarman, the assembly of Thalaichchengkaadu bought land from someone and gifted it 'in favour of the king', for worship and maintenance of the temple. A street named Raajasundharan Veedhi is noted in this inscription. In the Kali year 4821, Sarafoji Raajaa issued an order to collect for the benefit of the Sempon Naathar temple and the assembly of villages of Thalaichchangkaadu, annual taxes and levies proportionate to the product of the looms. The order authorizes Kaaverippattinam Ayyaavaiyan and Thaandavaraaya Mudhaliaar to collect these taxes.
INTRODUCTION TO THE HYMN
The saint chanted Adoration hymns to the Lord in Mayiladuthurai and on the way worshipped the Lord in Vila Nahar , and then proceeded to Thiru-ch- Chempon Palli where he compiled the following songs of glory to Lord Civan who is known here as Swarna Pureeswarar. He is the presiding deity.
திருச்சிற்றம்பலம்
25.திருச் செம்பொன் பள்ளி
பண் : தக்கராகம்
ராகம் : காம்போதி
மருவார்குழலிமாதோர்பாகமாய்த்
திருவார் செம்பொன் பள்ளி மேவிய
கருவார்கண்டத்தீசன்கழல்களை
மருவாதவர்மேன்மன்னும் பாவமே.1
மருஆர்குழலிமாதுஓர்பாகம்ஆய்த்
திரு ஆர்செம்பொன்பள்ளிமேவிய
௧ரு ஆர்கண்டத்து ஈசன் கழல்களை
மருவாதவர்மேல்மன்னும்பாவமே.
பொருள்: சிவபெருமான்,மணம் பொருந்திய கூந்தலை உடையவளாகிய பார்வதி தேவியைஒரு பாகமாய் உடையவர். கருநீலம் பொருந்திய கழுத்தை உடைய சிவபிரான்,திருமகள் வாழும் செம்பொன்பள்ளி என வழங்கும் திருத்தலக் கோயிலில் எழுந்தருளியுள்ளார்.அவருடைய திருவடிகளை வணங்கி,அவற்றைத் தம் மனத்தே பொருந்த வையாதவரைப்பாவங்கள்பற்றும்.
குறிப்புரை: இது செம்பொன்பள்ளி ஈசன் கழல்களைஅடையாதவரைப் பாவம் அடையும் என்கின்றது. மருவார்குழலி,இத்தலத்துஅம்மையின் திருநாமம். வடமொழியில்சுகந்தவனப் பாவை என வழங்குவர்.கருவார்கண்டம் - நீலகண்டம். இறைவன் அடைந்தார் இன்னல் தீர்க்கஅடையாளமாகநீலகண்டத்தைக்காட்டியும் அவன் கழல்களைமருவாதவரைப் பாவம் மருவும் என்ற நயந்தோன்ற நின்றது.
The impact of sin will ever stay on, in those who do not get attached in adoration to the ankleted Feet of the Lord Civan - This Lord is entempled in Thiru-ch-Chempon Palli. The throat of the Lord is dark (with the venom of churned ocean). This Lord is concorporated with His consort Paarvathi Devi; Her locks are always fragrant. This Lord abides in the grace-abounding Chempon-palli where Goddess Lakshmi also resides.
Note: Chempon Palli is currently known as Chemponaar Kovil. The message of this hymn is this.
"Unless one gets freed from the impact of one's karma, one cannot hope for salvation at all. The Lord is infinitely merciful. He shows us the way. It is upto us to travel on it in cheerful godliness". The way is to get attached to the Lord's feet.
Maruvaar Kuzhali: The Goddess of the shrine is so named. It means "She of fragrant locks".
வாரார் கொங்கை மாதோர்பாகமாய்ச்
சீரார் செம்பொன் பள்ளி மேவிய
ஏரார்புரிபுன்சடையெம்மீசனைச்
சேரா தவர்மேற் சேரும் வினைகளே.2
வார்ஆர் கொங்கை மாது ஓர்பாகம்ஆய்ச்
சீர்ஆர்செம்பொன்பள்ளிமேவிய
ஏர் ஆர்புரிபுன்சடைஎம்ஈசனைச்
சேராதவர் மேல் சேரும் வினைகளே.
பொருள்: சிவபெருமான்,கச்சணிந்ததனங்களை உடைய உமையம்மையைஒருபாகமாகஉடையவர். அழகிய முறுக்கேறியசடைமுடியை உடைய எம்ஈசனாகிய சிவபிரான்,சிறப்புப்பொருந்திய செம்பொன்பள்ளியில்எழுந்தருளியுள்ளார். அந்தச்சிவபிரானைச் சென்று வணங்கி இடைவிடாது மனத்தில் நினையாதவர்களிடம்வினைகள் சென்று சேரும்.
குறிப்புரை: இடைவிடாது. சேராதவர் - இடைவிடாது தியானியாதவர். வினைகள்எனப்பன்மையாற்கூறியது வெடிக்கும் வினைகளாய்இருத்தலின்.
Lord Civan has concorporated in His left frame, His consort Umaa Devi. Her breasts are tightened by the corset. His matted hair is twisted, red and good-looking. This Lord resides at the glorious shrine of Chemponpalli. Bad karmic consequences will its prey on those who do not reach this Lord, by having Him in their minds, and do not offer worship without any break.
வரையார்சந்தோடகிலும்வருபொன்னித்
திரையார் செம்பொன் பள்ளி மேவிய
நரையார்விடையொன்நூருநம்பனை
உரையாதவர்மேலொழியா வூனமே.3
வரை ஆர்சந்தோடுஅகிலும்வருபொன்னித்
திரை ஆர்செம்பொன்பள்ளிமேவிய
நரை ஆர் விடை ஒன்று ஊரும்நம்பனை
உரையாதவர் மேல் ஒழியாஊனமே.
பொருள்: சிவபிரான்,செம்பொன்பன்னியில்எழுந்தருளியுள்ளார். செம்பொன்பள்ளிபொன்னிநதிக்கரையில்அமைந்துள்ளது. மலைகளில் செழித்து வளர்ந்த சந்தன மரங்களோடு,அகில் மரங்களையும் பொன்னி நதி அடித்துக் கொண்டு வந்து,கரையில்இருக்கும் செம்பொன்பள்ளியில் சேர்க்கும். அத்தகைய வளம் பொருந்திய அந்த ஊரில்எழுந்தருளியிருக்கும் சிவபிரான் வெண்ணிறம் பொருந்திய விடை ஒன்றில் ஊர்ந்துவருகிறான். அவனுடைய புகழை உரையாதவர்களைப்பற்றியுள்ள குற்றங்கள் ஒழியா.
குறிப்புரை: செம்பொன்பள்ளிநம்பனைப் புகழ்ந்து பாடாதவர்,தோத்திரியாதவர்மேலுள்ள ஊனம் ஒழியாதென்கின்றது. வரை - மலை. நரை - வெள்ளை. உரையாதவர் - புகழாதவர்.
Crimes will never leave those who do not chant on the glories of our Lord Civan, the Lord who rides on the white bull. This Lord abides at Chemponpalli on the banks of the billowy Ponni river that flows rolling down carrying in its current sandalwood trees and eaglewood trees from the hills.
Note: The Ponni: The Cauvery. The Greeks referred to this river as the golden river.
மழுவாளேந்திமாதோர்பாகமாய்ச்
செழுவார் செம்பொன் பள்ளி மேவிய
எழிலார்புரிபுன்சடையெம்மிறைவனைத்
தொழுவார்தம்மேற்றுயரமில்லையே, 4
மழுவாள் ஏந்தி மாது ஓர்பாகம்ஆய்ச்
செழுஆர்செம்பொன்பள்ளிமேவிய
எழில் ஆர்புரிபுன்சடைஎம்இறைவனைத்
தொழுவார் தம்மேல் - துயரம் இல்லையே.
பொருள்: செம்பொன்பன்ளியில்எழுந்தருளியசிவபெருமான்மழுவாள் ஏந்தியும், உமையொருபாகனாகவும்,காட்சி தருகிறான். அந்த ஊர் வளம் பொருந்தியது.மேலும், சிவபிரான் அழகு பொருந்தியதும்,முறுக்கேறியதுமான சிவந்த சடைமுடியைஉடையவனாகவும் இருக்கிறான். அவ்வகைப்பட்டஎம்இறைவனைத்தொழுபவர்களுக்குத்துயரம் இல்லை.
குறிப்புரை: தொழுவார்க்குத்துயரமில்லைஎன்கின்றது. துயரம் இல்லாமைக்கு இரண்டு ஏது. ஒன்று பகையும்பிணியும் தடுத்தல். மற்றொன்று இன்பம் பெருக்கல். இவ்விரண்டையும் பெற இறைவன் மழுவாள்ஏந்திப்பகையும்பிணியும் தடுத்தும்,மாதோர்பாகமாய்த் தான் இருந்து இன்பம் பெருக்கியும்காக்கின்றார்என்று உணர வைத்தவாறு.
Those who adore our Lord Civan will have no worry in their life. This Lord
Civan with beauteous strands of ruddy and twisted matted hair wields a shining 'mazhu' (axe like weapon). He is concorporate with His consort Umaa Devi and abides at Chempon-palli.
மலையான் மகளோ டுடனாய்மதிலெய்த
சிலையார் செம்பொன் பள்ளி யானையே
இலையார்மலர்கொண் டெல்லி நண்பகல்
நிலையா வணங்க நில்லா வினைகளே.5
மலையான்மகளோடுஉடன்ஆய் மதில் எய்த
சிலை ஆர் செம்பொன் பள்ளியானையே
இலை ஆர் மலர் கொண்டு எல்லிநண்பகல்
நிலையா வணங்க நில்லாவினைகளே.
பொருள்: செம்பொன்பள்ளியில் விளங்கும் சிவபிரான் மலையரையன்மகளாகிய பார்வதி தேவி உடனாய்க் காட்சி தருகிறான். அவன் அசுரர்களின்மும்மதில்களை எய்து அழித்தமலை வில்லை உடையவன். அந்தச்சிவபிரானையேஇலைகளையும்மலர்களையும்கொண்டு இரவிலும்,நண்பகலிலும்,வேறொன்றிலும் மனம் சென்று பற்றாது,அவனிடமேசென்று நிலைத்து நிற்குமாறுவணங்குவார்மேல்வினைகள்நில்லா.
குறிப்புரை: இலையும்பூவுங்கொண்டுஇரவும்பகலும்வணங்குவார்க்குவினைகள் இல்லை என்கின்றது. மதில் ௭ய்து மறத்தைக்காட்டினாலும் அதுவும் கருணையாய் முடிந்தது என்பார் மலையான்மகளோடுடனாய் மதில் எய்த என்றார். எல்லி - இரவு. நிலையா வணங்க - வேறொன்றிலும் மனம் சென்று பற்றாது இறைவனிடத்தேயே நிலைத்து வணங்க.
Lord Civan abides in Thiru-ch-Chempon Palli along with His consort Paarvathi Devi, daughter of the King of Himaalayan mountain. He destroyed the three citadels of Asuraas using the Mountain Meru as His bow. The evil effects of bad karma will not be there on those who worship this Lord day and night with fresh leaves and flowers and having oneness in their minds.
அறையார்புனலோடகிலும்வருபொன்னிச்
சிறையார் செம்பொன் பள்ளி மேவிய
கறையார்கண்டத்தீசன்கழல்களை
நிறையால் வணங்க நில்லா வினைகளே6
அறை ஆர்புனலோடுஅகிலும்வருபொன்னிச்
சிறை ஆர் செம்பொன் பள்ளி மேவிய
கறை ஆர்கண்டத்து ஈசன் கழல்களை
நிறையால் வணங்க நில்லாவினைகளே.
பொருள்: பொன்னியாற்றங்கரையில் அமைந்த செம்பொன்பள்ளியில் சிவபெருமான் எழுந்தருளியுள்ளான். அந்த ஆறு,பாறைகளில்பொருந்திவரும் நீரில் அகில் மரங்களை அடித்து வந்து கரைசேர்க்கும். அங்கு எழுந்தருளிய சிவபிரான் விடக்கறை பொருந்திய கழுத்தை உடைய ஈசன்,அவனுடைய திருவடிகளை மன ஒருமைப்பாட்டோடு வணங்க, வினைகள்நில்லா.
குறிப்புரை: மனத்தை ஒரு நெறிக்கண்நிறுத்தும்வன்மையோடு வணங்க வினைநில்லாஎன்கின்றது. அறையார் புனல் - பாறைகளைப் பொருந்தி வருகின்ற புனல். சிறை - கரை. கறை - விடம். நிறை - மகளிர்க்குள்ளநிறையென்னுங்குணம் போல் மக்களுக்கு அமைய வேண்டிய இவன் அல்லாது இறைவன் இல்லை என்ற உறைப்பு.
The evil effects of bad karma will leave those who in deep devotion hail the ankleted Feet of Lord Civan. His throat holds the venom (of the ocean) and the snake. He is enshrined in Chemponpalli on the banks of the Ponni river that rolls down carrying eaglewood and other forest materials.
Note: Rolls uproariously: The Cauvery river bed of the olden times was very vast and its current very forceful.
பையாரரவேரல்குலாளொடும்
செய்யார் செம்பொன் பள்ளி மேவிய
கையார்சூலமேந்து கடவுளை
மெய்யால் வணங்க மேவா வினைகளே.7
பை ஆர்அரவு ஏர் அல்குலாளொடும்
செய் ஆர்செம்பொன்பள்ளிமேவிய
கை ஆர் சூலம் ஏந்து கடவுளை
மெய்யால் வணங்க மேவாவினைகளே.
பொருள்: சிவபிரான்,அரவின்படம் போன்ற அழகிய அல்குலை உடைய உமையம்மையைப்பாகமாக உடையவன். அவன் வயல்கள்சூழ்ந்தசெம்பொன்பள்ளியில்வீற்றிருக்கிறான்.கையில் பொருந்திய சூலத்தை ஏந்தி விளங்கும் சிவபிரானை,உடம்பால் வணங்க வினைகள்மேவா.
குறிப்புரை: மெய்யால்வணங்கினாலும் போதும்;வினை மேவாஎன்கின்றது. பையார்அரவு - படம் பொருந்திய நாகம். செய் - வயல். மெய்யால் வணங்க - உடம்பால் வணங்க. உண்மையோடு வணங்க என்பாரும்உளர். இப்பொருள்நிலையா வணங்க,நிறையால் வணங்க என்றவிடத்தும்போந்தமையின்இறைவனதுஎளிமைக்குணந்தோன்ற உள்ளம் பொருந்தாதுஉடம்பால்வணங்கினாலும் போதும்; வினைகள்மேவா,ஆதலால் பொருந்துமாறு ஓர்க.
Lord Civan abides in Thiru-ch-Chempon Palli, which is surrounded by fertile fields, along with His consort Umaa Devi. Her beautiful waist resembles the hood of a serpent. He wields the trident in one of His hands. Those who prostrate and offer worship to this Lord will not get affected by the bad effects of their evil karma.
வானார் திங்கள் வளர்புன்சடைவைத்துத்
தேனார் செம்பொன் பள்ளி மேவிய
ஊனார்தலையிற்பலிகொண்டுழல்வாழ்க்கை
ஆனான்கழலேயடைந்துவாழ்மினே.
வான் ஆர் திங்கள் வளர்புன்சடைவைத்துத்
தேன் ஆர் செம்பொன் பள்ளி மேவிய
ஊன் ஆர் தலையில் பலி கொண்டு உழல் வாழ்க்கை
ஆனான்கழலே அடைந்து வாழ்மினே.
பொருள்: சிவபிரான்,இனிமை பொருந்திய செம்பொன்பள்ளியில்எழுந்தருளியுள்ளான். அவன் வானத்தில் விளங்கும் பிறைமதியைவளர்ந்துள்ள தன்னுடைய சிவந்த சடைமீதுவைத்துள்ளான். சிவபிரான்,புலால் பொருந்திய பிரமனுடையதலையோட்டில்பலியேற்றுஉழல்வதையே தன் வாழ்வின்தொழிலாகக் கொண்டவன். அந்தச் சிவபிரான் திருவடிகளையே அடைந்து வாழ்வீர்களாக.
குறிப்புரை: பலி ஏற்றுண்ணும்வாழ்க்கையான்தாளை வணங்கி உய்யுங்கள்என்கின்றது. வானார்திங்கள் - ஒருகலைப் பிறை;வானில்பொருந்தாதாயினும்பொதுமையின்கூறப்பட்டது.
Lord Civan abides in luxuriant Thiru-ch-Chempon Palli. He has in His red matted hanging hair crescent moon that moves along in the sky. He roams all around with the aim of collecting alms. He uses the skull of Brahmaa to which is flesh smelling, as His begging bowl. Ye folks! Go and worship at the holy feet of this Lord Civan at Thiru-ch-Chempon Palli and thrive well.
காரார்வண்ணன்கனகமனையானும்
தேரார் செம்பொன் பள்ளி மேவிய
நீரார்நிமிர்புன்சடையெந்நிமலனை
ஓராதவர்மேலொழியா வூனமே.9
கார் ஆர்வண்ணன்,கனகம்அனையானும்,
தேரார் செம்பொன் பள்ளி மேவிய
நீர் ஆர்நிமிர்புன்சடைஎம்நிமலனை
ஓராதவர் மேல் ஒழியாஊனமே.
பொருள்: செம்பொன்பள்ளியில் சிவபிரான் இனிது அமர்ந்துள்ளான். நீலமேகம் போன்ற நிறழமுடையோனாகியதிருமாலும்,பொன்னிற மேனியனாகியபிரமனும் தேடிக் காண முடியாதவனாகிய சிவபிரான் அங்கு உள்ளான். குற்றமற்றஎம் இறைவன் கங்கை அணிந்ததும்,நிமிர்ந்து கட்டியதுமான சிவந்த முடியை உடையவன். அவனை மனம் உருகித்தியானிக்காதவர்கள் மேல் உளதாகும் குற்றங்கள் நீங்கா.
குறிப்புரை: மலர் போன்ற தூய்மையான இறைவனைத்தியானியாதவர்களின் ஊனம் ஒழியாஎன்கின்றது. கனகம்அனையான் - பொன் நிறமான பிரமன்;ஓராதவர் - மனமுருகித்தியானியாதவர்.
Our Lord Civan who is ever free from bondage abides in Thiru-ch-Chempon Palli. He has in His erect strands of red matted hair the river Ganges. He is beyond perception even for the sky-blue coloured Thirumaal and the golden coloured Brahmaa, in spite of their serious efforts to see Him. Those who cannot offer worship with melted hearts (minds) to this Lord Civan in Thiru-ch-Chempon Palli cannot get rid of their infinities.
Note: The strands of the Lord's matted hair are so bound that they constitute his crown.
மாசாருடம்பர்மண்டைத்தேரரும்
-பேசா வண்ணம் பேசித்திரியவே
தேசார் செம்பொன் பள்ளி மேவிய
ஈசாவென்னநில்லா விடர்களே.10
மாசு ஆர்உடம்பர்,மண்டைத்தேரரும்,
பேசா வண்ணம் பேசித்திரியவே,
தேசுஆர்செம்பொன்பள்ளிமேவிய
ஈசா! என்ன,நில்லா,இடர்களே.
பொருள்: அழுக்கேறியஉடலினராகியசமணரும்,மண்டை என்ற உண்கலத்தைஏந்தித்திரிபவர்களாகியபெளத்தர்களும்பேசக்கூடாதவைகளைப்பேசித்திரிகின்றனர். ஆனால், பக்தர்களான அன்பர்கள் ஒளிபொருந்தியசெம்பொன்பன்னியில்மேவியஈசா!” என்று கூற, அவர்களுடைய இடர்கள் பலவும்நில்லா.
குறிப்புரை: ஈசா” என்று வேண்ட,இடர் நில்லாஎன்கின்றது. மாசார்உடம்பர் - அழுக்கேறிய உடம்பை உடையவர்கள். மண்டை - உண்கலம் பேசா வண்ணம் - பேசக்கூடாதபடி,பேசித்திரிய - வாய்க்குவந்தவற்றைப்பேசித்திரிய. தேசு - ஒளி.
The Samanars of dirty bodies and the Buddhaas holding begging bowls keep indulging in unbecoming speech. Ignoring their utterances, chant thee thus: "Thou art the only True One indeed, that abides in Chempon-palli". Then all troubles will cease to those who can chant "O! Lord Civa abiding in luxuriant Thiru-ch-Chempon Palli - You are our Supreme Lord" and offer worship to Him.
நறவார்புகலிஞானசம்பந்தன்
செறுவார் செம்பொன் பள்ளி மேயானைப்
பெறுமாறிசையாற் பாட லிவைபத்தும்
உறுமா சொல்ல வோங்கிவாழ்வரே.
நறவுஆர்புகலிஞானசம்பந்தன்
செறுஆர்செம்பொன்பள்ளிமேயானைப்
பெறும் ஆறு இசையால் பாடல் இவை பத்தும்
உறுமா சொல்ல,ஓங்கி வாழ்வரே.
பொருள்: ஞானசம்பந்தன்தேன்நிறைந்தபொழில்களால்சூழப்பட்டபுகலிப்பதியில்தோன்றியவர். வயல்கள்சூழ்ந்தசெம்பொன்பள்ளி சிவபிரான் அருளைப் பெறுமாறு பதிகப்பாடல்களைப் பாடினார். இப்பதிகப்பாடல்கள்பத்தையும்இசையோடு தமக்கு வந்த அளவில் ஓதவல்லவர்கள் ஓங்கி வாழ்வர்.
குறிப்புரை: செம்பொன்பள்ளியில்மேவியஇறைவனைப்பெறுதற்காகஞானசம்பந்தன் சொன்ன பாடல் பத்தும்சொல்லுவார்ஒங்கிவாழ்வார். நறவு - தேன். செறுஆர் - வயல்கள் பொருந்திய. உறுமா சொல்ல -உள்ளத்துப்பொருந்தும்படி சொல்ல.
The town Puhali is surrounded by fertile gardens with a good supply of honey from flowers that are in plenty there. From this place hails Gnaanasambandan. He sang these divine songs to gain the grace of Lord Civan of Thiru-ch-Chempon Palli which is surrounded by fertile fields. Those who can chant these hymns tunefully according to their abilities will prosper magnificently.
Note: Singing hymns on the Lord is always an elevating exercise.
திருச்சிற்றம்பலம்
25ஆம் பதிகம் முற்றிற்று
உ
சிவமயம்
26.திருப்புத்தூர்
திருத்தலவரலாறு:
திருப்புத்தூர் என்ற திருத்தலம் பாண்டிய நாட்டுத் தலம் ஆகும். தஞ்சை,மதுரை பேருந்து வழித்தடத்தில் உள்ளது. மதுரை,புதுக்கோட்டை,காரைக்குடி,சிவகங்கை ஆகிய ஊர்களில்இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. இத்தலம்திருப்புத்தூர் எனவும்,கோயில் திருத்தளி எனவும் வழங்கும். அப்பர் சுவாமிகள் “திருப்புத்தூரில்திருத்தளியான் காண்” என அறிவிப்பார்கள். உமாதேவியும்,இலக்குமியும்பூசித்துப் பேறு பெற்ற தலம். இறைவன் அம்மை சந்நிதிகளுக்கு இடையில் பைரவர் சந்நிதி இருக்கிறது. பைரவர் சிறப்புடையவர். ஆனந்தக்கூத்தப் பெருமான், சிவகாமியம்மைதிருவுருவங்கள்கற்சிலையாலானகண்கவரும்வனப்பின. விஷ்ணுவுக்கும் சந்நிதி உண்டு. சுவாமி பெயர் புத்தூரீசர்;திருத்தளிநாதர். அம்மை சிவகாமி அம்மையார். தீர்த்தம் திருத்தளித் தீர்த்தம். சிவகங்கை முதலியன. தலவிருட்சம் கொன்றை.
கல்வெட்டு:
அரசியலாரால்1908ஆம் ஆண்டில்படியெடுக்கப் பெற்ற கல்வெட்டுக்கள்51 உள்ளன. இறைவன் திருப்பெயர்திருக்கற்றளிப்பட்டாரர்,ஸ்ரீதளிபரமேஸ்வரர்,திருத்தகளி உடைய பரமேஸ்வரா,திருத்தளிஆண்ட நாயனார் என வழங்கப்பெறுகின்றார். அம்மை திருக்காமக்கோட்டமுடையநாச்சியார். திருப்பள்ளியறைநாச்சியார் எனவும் வழங்கப்படுகின்றார். இவர்களேயன்றிக்கோயிலுக்குள்ளேகைலாசமுடைய நாயனார்,அகஸ்தீஸ்வரம் உடையார் கோயில்களும்இருந்தனவாகஅறியப்படுகின்றன. பைரவர் கோயில் மிகப் பிரசித்தமானது. விஜயநகரத்தைஅரசாண்டவீரப்பிரதாபஅச்சுததேவமகாராயா்நன்மைக்காகப் பெரிய ராமப்பநாயக்கரால்பைரவருக்கு நிலம் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதைப்பற்றியகுறிப்புக்கள்விஜய நகர அரசர்கள்கல்வெட்டுக்களில் இதற்கு முந்தியதில் இல்லை. கைலாசமுடைய நாயனார் கோயில் தேவரடியாளான ஒருத்தி திருநாவுக்கரசு. நாயனார் படிவத்தைப்பிரதிட்டை செய்யவும்,நைவேத்தியத்திற்காகவும் பொன் அளித்த செய்தியைத்திரிபுவன சக்கரவர்த்தி விக்கிரமபாண்டியன்12ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்று காட்டுகின்றது. கோவில் அடியாளுக்கிருந்த அடியார் பக்தி என்னே! திருஞானசம்பந்தர்திருமடமும்திருத்தொண்டத்தொகைத்திருமடமும்சைவ மடம் ஒன்றும் இருந்தன. இவற்றுள்திருஞானசம்பந்தர்திருமடத்தில்ஸ்ரீகண்டசிவாச்சாரியார்இருந்ததாகவும்சோழ தேசத்தில் இருந்த நிலத்தை விற்று அவருக்குக்கொடுக்கப் பெற்றது என்றும் அதே கல்வெட்டுஅறிவிக்கின்றது. இக்கல்வெட்டு முதலாம் மாறவர்மன்சுந்தர பாண்டியன் (கி.பி, 1214-1235) காலத்தது.
இவையன்றிக் கிராம தேவதைகளாகஅங்காளம்மன் கோயில்,நின்ற நாராயணப் பெருமாள் கோயில் இவைகளும்திருப்புத்தூர்கிராமங்களில்இருந்தனவாகக்குறிக்கப்படுகின்றன. பெருமாள் கோயில்,திருத்தளி உடையார் கோயிலிலேயேஇருந்ததாககுறிக்கப்பெறாமை ஊன்றி அறிதற்குரியது. இத்தலத்து நிகழ்ச்சிகள் யாவும் பாண்டியர்காலத்துக்கல்வெட்டுக்களாகவேபெரும்பாலும் அமைந்து இருக்கின்றன. ஸ்ரீவல்லப பாண்டியன் காலத்தில் இராஜேந்திரசோழகேரளனானநிச்சலராஜனால்கேரளசிங்கவளநாட்டில் விளக்கிற்காக50 ஆடு கொடுக்கப்பெற்றிருக்கிறது. “அரசனாலேயே25 பசுக்களும் ஒரு காளையும்விளக்கிற்காகக்கொடுக்கப்பெற்றிருக்கின்றன. சோழ தேசத்தில் கயாமாணிக்கவளநாட்டுமருகல்நாட்டுப்புத்தனூரில்வசித்த ஒருவர்25 பசுக்களையும் ஒரு காளையையும்விளக்கிற்காகக் கொடுத்தார். காளிங்கராயன் வேண்டு கோளுக்காக இரண்டு கிராமங்கள்அளிக்கப்பெற்றன. உலக முழுதுடையாள்என்னும் அரசியால் மடைப்பள்ளித் திருப்பணி செய்யப்பெற்றது.
பராக்கிரம பாண்டியன்: இவன் காலத்திய கல்வெட்டுக்கள்4 உள்ளன. அவற்றால் இவன் ஆட்சி பதினோராம்ஆண்டில்புறமலைநாட்டுப்பொன்னமராவதியானஇராஜேந்திரசோழநிஷதராயன்என்பவனால்திருத்தளி உடையார் கோயில் உற்சவத்திற்காக நெல் அளிக்கப் பெற்றது. திருப்புத்தூர்ச்சபையார்கூடிநரலோக வீரன் சந்தி என்னும் விழாவிற்காக நிலம் விற்றுக் கொடுத்த வரலாறு அறிவிக்கப்பெறுகிறது. ஒர்அந்தணனால்திருப்பள்ளி அறை நாச்சியார்நிவேதனத்திற்காக பொன் அளிக்குப் பெற்றது. உய்ய வந்தான் கண்டி தேவனான காங்கேயன் என்பவனால் கோயிலுக்கு அளிக்கப் பெற்ற சாசனங்கள்பட்டியலாகக்குறிக்கப்பெற்றிருக்கின்றன.
குலசேகர பாண்டியன்: நியமம் என்னும் ஊரான்ஒருவனால்விளக்குத்தண்டுக்காகப்பொன்னும்,தேனாற்றுப்பாசனவசதியும் செய்து கொடுக்கப்பெற்றதாகஅறியப்படுகின்றது. அதிசயப் பாண்டிய நல்லூரானகுட்டக்குடியில்கண்டன்உய்யவந்தானானகாங்கேயனால்திருப்பதியம்விண்ணப்பிப்பார்க்குஇறையிலியாக நிலம் அளிக்கப் பெற்றது. இந்த நிலம்,வீரகுணப் பெருமாள் என்பவரால்திருப்புத்தூர்திருத்தளியில் உள்ள கூத்தாடுதேவரானநடராஜதேவருக்குஅளிக்கப்பெற்றிருந்தது. அதே கோயிலில் உள்ள சைவ மடம் ஒன்றிற்குத்திருவாலந்துறைஉடையானானதிருக்கொடுங்குன்றம் உடையான் நிஷதராஜனால் சில வரிகள்வசூலித்துக் கொள்ள உரிமை அளிக்கப் பெற்றது. திருப்புத்தூர்மூலபரிஷத் என்னும் சபையார் மதுரை சென்று கோயில் நிலங்களுக்குவரிகட்டிவரவேண்டியதற்காகவழிப்பயணச்செலவான ஒரு குறிப்பிட்ட தொகையைத் தள்ளுபடி செய்து கொடுத்திருக்கிறான்.
கைலாச-மலை-- நாதர் கோயில் திருவிழாவிற்காகச்சம்வத்சரவாரியமாக வரி தள்ளுபடி செய்தமைகுறிக்கப்பெற்றுள்ளது. தயாபஞ்சகம் என்று அழைக்கப்படும் மண்டபத்தில் மூலச்சபையார்கூடிச் சில கொடுக்கல்வாங்கல்கள் செய்த செய்தியும்,திருத்தொண்டத்தொகையான்திருமடமும்குறிக்கப்பெறுகின்றன. சோழ பாண்டிய வளநாட்டுகுலசேகர நாட்டு பிராமணிஒருவனால் கோயிலில் நான்கில் மூன்று பங்கு விளக்குகளைஏற்றப் பொன் வழங்கப்பெற்றது. கண்டியத்தேவரால்திருக்காமக் கோட்டம் உடைய நாச்சியாரை மருந்து சாத்திப்பிரதிட்டைசெய்யத் தம்முடைய நிலக்குடி வார உரிமை விற்றுக்கொடுக்கப்பட்ட செய்தி அறியப்பெறுகிறது. கோயில் கணக்கர்களால்தவறிழைக்கப் பெற்ற கோயில் நிலங்களைத் திரும்பவும் அளந்து கட்டி மீண்டும் கோயிலுக்கே உரிமையாக்கியதாக இவனுடைய23ஆம் ஆண்டு கல்வெட்டு அறிவிக்கிறது. தேவரகண்டன்மனைவியானஅவனிமுழுதுடையாளால் திருமஞ்சன தீர்த்தத்திற்காக நான்கு தண்ணீர்ப்பானைகள்அளிக்கப்பெற்றன.
மாறன்சடையான்: இவன் காலத்தில்40 கழஞ்சு பொன் அளிக்கப் பெற்ற செய்தி அறிவிக்கப்பெறுகிறது. முதல் நாகராஜதேவன் (கி.பி.985 - 1013)திருப்புத்தூர் சபையார் உறங்காப்புளி அடியில் கூடி ஏதோ தீர்மானித்ததாகத் தெரிகிறது. சிதிலமாதலின்முழுவரலாற்றுக்குறிப்பும் தெரியவில்லை.
வீரபாண்டியன்: திருத்தொண்டத் தொகை திருமடத்திற்குத்திருப்புத்தூர்ச் சபையார் கூடி இறையிலி செய்ததை அறிவிக்கிறது. தயாபஞ்சகம் என்னும் மண்டபத்தைத் திருப்பணி செய்த வரலாறும்குறிக்கப்பெறுகிறது. தேனாற்றுப்பாசனமானகொறைக்குடியான்அவையன் பெரிய நாயனாரானவிசயாலயதேவனால்,யவனர்கள்ஆக்கிரமித்தகோயிலை வென்று திரும்பவும் பெற்றுப் புனிதப்படுத்தப் பெற்றது. இது நடைபெற்ற நாள்2-8-1939 திங்கட்கிழமை என்று எபிகிராபிகாஇண்டிகா பகுதி -2 பக்.138 கூறுகிறது.2_12-1339இல் அவையன்சொரக்குடிமாளவச்சக்கரவர்த்தியினால்பாடிக்காவல் உரிமைகள் விற்கப்பெற்றன. சில கோயில் நிலங்கள்அருச்சகருக்குமானியமாகஅளிக்கப்பெற்றன.
விஜயநகரஅரசரானகிருஷ்ணப்பதேவமகாராஜன்காலத்து சகம்1432இல் பாண்டி மண்டலத்துகேரளசிங்கவளநாட்டுக்கிராமங்களானநாரணமங்கலம்,காரையூர் என்ற இரண்டையும்நரசிம்மராயசெல்லப்பரதுசந்நிதிக்காகக் கோயிலுக்கு அளித்தான். அவை இரண்டும் இப்பொழுது செல்லப்பாபுரம் என்று வழங்கப்படுகின்றன,.அச்சுததேவமகாராயர்காலத்தில் அருவியூர்நகரமானகுலசேகரப்பட்டினத்தான்ஒருவனால்விளக்கிற்காக நிலம் அளிக்கப்பெற்றிருக்கிறது. பெரிய ராமப்பநாயக்கருக்கு நன்மை உண்டாக வயிரவருக்கு நிலம் அளிக்கப் பெற்றது. கிருஷ்ணராயர்காலத்துவீரநரசிம்மராயநாயக்கரானசெல்லப்பர்நன்மைக்காகத்திருப்புத்தூர் உடையான் சிங்கமநாயக்கனால் நிலம் வழங்கப் பெற்றது. நாகமஈதநாயக்கர்நன்மைக்காக ஒரு கிராமம் (வரகுணபுத்தா) வழங்கப்பட்டது. இவையன்றி நின்ற நாராயணி பெருமாள் கோயிலுக்கும்அங்காளம்மன்கோயிலுக்கும்நிவந்தங்கள்அளிக்கப்பெற்றிருப்பதைஅறிவிப்பன மூன்று கல்வெட்டுக்கள்
இங்ஙனம் திருப்புத்தூர்க் கோயில் பல பாண்டிய மன்னர்களுடைய சமய உணர்ச்சிக்குஅரணாகஇருந்தமை அறிந்து இன்புறுதற்குரியது.
பதிக வரலாறு:
பாண்டி நாட்டுப்பதிகள்பலவற்றையும்வணங்கத்திருவுளங்கொண்ட பிள்ளையார் அணியாப்பனூர் அணைந்து பணிந்து பாடியபின்ஏறணிந்தவெல்கொடியார்வீற்றிருந்தருளும்திருப்புத்தூரை அடைந்து சிலநாள்வீற்றிருந்தார்கள். அப்போது வெங்கள் விம்மு” என்னும் இத்திருப்பதிகத்தைஅருளிச் செய்தார்கள்.
THE HISTORY OF THE PLACE
26. THIRU-P-PUTTOOR
The sacred city of Thiru-p-puttoor is in Paandiya Naadu, situated in the bus route from Thanjai to Madurai. It is well connected by bus to Madurai, Pudhukkottai, Kaaraikkudi, Sivagangai etc. The name of the place is Thiruppuththoor and that of the temple is Thiruththali. Saint Appar Swaami sings of 'Thiruththaliaan of Thiruppuththoor'. Umaa Dhevi and Ilakkumi offered worship here. There is a shrine for Bairavar in between those of the God and the Goddess. This Bairavar is of importance. Stone images of Aanandhak Kooththap Perumaan and Mother Sivakaami are of exquisite beauty. There is also a shrine for Vishnu. The God is known by the names of Puththooreesar and Thiruththalinaathar and the Goddess, Mother Sivakaami. The sacred fords are Thiruththali Theerththam and Sivagangai. The sacred tree is Konrai.
Stone Inscriptions
Fifty-one inscriptions were copied by the government epigraphists in 1908. The Lord's names are given variously as Thirukkarralippattaarar, Sreethali Paramesvarar, Thiruththali Udaiya Paramesvarar and Thiruththali Aanda Naayanaar. The Mother is called Thiruk Kaamakottam Udaiya Naachchiyaar and as Thirup-palliarai- naachchiyaar. Besides these, shrines for Kailaasamudaiya Naayanaar and Agastheesvaram Udaiyaar are known to have been situated inside the temple. The Bairavar shrine is quite famous. One Periya Raamappa Naayakkar donated land to the Bairavar for the benefit of a ruler of Vijayanagaram, Veerap Pirathaapa Achchutha Theva Mahaaraayar. There have been no prior note of this in inscriptions by Vijayanagaram kings.
One of the dancers (Thevaradiyaar) of the Kailaasamudaiya Naayanaar temple, gifted gold for installing the icon of Saint Thirunaavukkarasu Naayanaar and for food offering. This news is revealed by an inscription of the 12th regnal year of Thirubuvana Chakkaravarthi Vikkirama Paandiyan. How profound was her devotion to the saint! There were monasteries (Mutts) for Thiru-Gnaanasambandar, Thiruththondaththogai, and Saivites. Sreekanta Sivaachchaariyaar is reported to have been at the Thiru- Gnaanasambandar Mutt according to an inscription, which also states that this was given to him after land in Chola Naadu was sold. This inscription belongs to the reign of Sundhara Paandiyan I (1214-35 CE).
Apart from these, other temples, one for the guardian deity of the village, Angkaalamman and another for Ninra Naaraayanap Perumall are reported to have been in existence in Thiruppuththoor villages. It may be noted in particular that the Perumaal shrine is not reported to have been inside the Thiruththali Udaiyaar temple. Most episodes pertaining to this temple are reported in the inscriptions of the reign of the Paandiyaars. During the reign of Sree Vallaba Paandiyan, one Raajendhira Chola Keralan Nichchalaraajan, of Kerala Singa Valanaadu gifted 50 sheep for lamps. The king himself made a donation of a bull and 25 cows for lamps.
Inscriptions of Paraakkirama Paandiyan
There are four inscriptions of the period of this king. From these it is known that the following two grants were made: In his 11th regnal year, one Raajendhira Chola Nishaadharaayan of Ponnamaraavathi in Perumalai Naadu gave paddy for celebrating a festival for Thiruththali Udaiyaar temple and the village assembly of Thiruppuththoor raised funds by selling some land to celebrate a festival known as Naralokaveeran Sandhi. An Andhanan gifted gold for food offering to Thiru-p-pallaiarai Naachiyaar. One Uyaavandhaan Kandidhevan Gaangkeyan's grants to the temple are tabulated.
Inscriptions of Kulasekara Paandiyan
A resident of the village called Niyamam gave gold for the lamp-stand and for bringing water from Thennaru river. Uyyavandhaan Gaangkeyan of Adhisayapp Paandiya Nalloor Kuttakkudi made a land tax-free for the hymnists of the temple. This land had been gifted earlier by a Veeragunap Perumaal to the dancing Lord Nataraaja Thevar of the Thiruppuththoor Thiruththali. A saivite monastery of the temple had been given the right to collect taxes by Nishaadharaajan, known as Thiruvaalandhurai Udaiyaan Thirukkodun-kunramudaiyaan. An assembly known as Thiruppuththoor Moolaparishadh had arranged for payment of specified expenses for travel of Madhurai for paying taxes on the temple lands.
Tax remission as 'Samvathsara Vaariyam' for celebrating the festival of Kailaasamalainaathar temple is noted. Information on the meeting at a pavilion known as Dhayaapanjchakam, of the original assembly to transact trading business is given, as also about Thiruththondaththokaiyaan Thirumadam. A certain Piraamani of Kulasekaranaadu in Chola Paandiya Valanaadu gave gold for lighting three-fourths of the lamps in the temple. One Kandiya Thevar sold his tenancy rights to finance the installation ritual of Thirukkaama Kottamudaiya Naachchiyaar. An inscription of the 23rd regnal year of Kulasekaran reveals that temple lands that were lost due to the transgression by temple accountants were re-measured and reclaimed for the temple. Four water pots were gifted by Avanimuzhudhudaiyaal, wife of Thevarakandan, for use at times of ceremonial bathing of the deities.
Inscriptions of Maaran Sadaiyan
During his reign, 40 ‘kazhanju' gold was given to the temple. An inscription of Naagaraajadevan I (985 - 1013 CE) tells of a meeting of the Thiruppuththoor assembly under an 'ever-awake' tamarind tree to settle some matter, but since this inscription is fragmented the full details could not be determined.
Inscriptions of Veerapaandiyan
These give, note of the meeting of the assembly of Thiruppuththoor to remit taxes for the benefit of the monastery of Thiruththondaththokai. The history of renovation of the pavilion known as Dhayaapanjchakam is also recorded. The temple which had been occupied by foreigners (Yavanars) was re-consecrated after it was won from them by Avaiyan Periya Naayanaar Visayaalaya Thevan of Koraikkudiyan. Epigraphica Indica states that this event took place on 2-8-1339 (Page 138 of Section 11). On 2-12-1339, certain village watch rights were sold by Avaiyan Sorakkudi Maalavachchakkaravarthi. Some temple lands were gifted to the priests.
Vijayanagaram king Krishnappa Dheva Mahaaraajan, in Sakam year 1432, gave to the temple two villages, Naaranamangkalam and Kaaraiyoor in the Kerala Singka Valanaadu of Paandimandalam, for Narasimmaraaya Sellappar shrine. These two villages are now called Sellappaapuram. During the reign of Achchutha Dheva Mahaaraayar a resident of Kulasekarap Pattinam of Aruviyoor, gave land for lamps. Vairavar was gifted land for the benefit of one Periya Raamappa Naayakar. One Thiruppuththoor Udaiyaan Singkama Naayakkan gave land for the benefit of Veera Narasimma Raaya Sellappar during the reign of Krishnaraayar. A village, Varaguna Puththoor, was gifted for the benefit of Visuvanaatha Naayakkar, son of Naagama Naayakkar. Besides, three inscriptions speak of grants to Ninra Naaraayanap Perumaal temple and Angkaalamman temple. Thus it is pleasing to know that the Thiruppuththoor temple was like a fortress in enhancing the religious faith of many Paandiyan kings.
INTRODUCTION TO THE HYMN
Adoring the Lord at many shrines in the Pandya realm, the Saint arrived at Aniaappanur and eventually came to Thiru-P-Puttoor where he sang the following hymn.
திருச்சிற்றம்பலம்
26.திருப்புத்தூர்
பண் : தக்கராகம்
ராகம் : காம்போதி
வெங்கள் விம்மு வெறியார்பொழிற்சோலை
திங்களோடுதிளைக்குந்திருப்புத்தூர்க்
கங்கை தங்கு முடியாரவர்போலும்
எங்களுச்சியுறையு மிறையாரே.1
வெங் கள் விம்மு வெறி ஆர்பொழில் சோலை
திங்களோடுதிளைக்கும்திருப்புத்தூர்,
கங்கை தங்கும் முடியார் அவர் போலும்
எங்கள் உச்சி உறையும்இறையாரே.
பொருள்: திருப்புத்தூர் வளம் நிறைந்தது. அங்கு விரும்பத்தக்க தேன் விம்மிச்சுரக்கின்ற, மணம் நிறைந்த சோலைகள் உள்ளன. சோலைகளில் உள்ள மரங்கள் வானளாவஉயர்ந்துள்ளன. உயர்ந்த மரங்கள் அங்குத்தவழும்திங்களோடுபழகித்திளைக்கின்றன. அவ்வளவு வளமுடையதிருப்புத்தூரில்எழுந்தருளியசிவபெருமானார் கங்கை தங்கிய சடைமுடியினராகக் காட்டி தருகிறார். அவர் எங்கள் உச்சியில்உறையும்இறைவர் ஆவார்.
குறிப்புரை: எங்கள் சிரமேல் தங்கிய இறைவன் திருப்புத்தூர்நாதர்என்கின்றது. வெம் கள் - விரும்பத்தக்க தேன். வெறி - மணம். கள்ளுண்டவெறியால் சோலை தனக்குத் தகாத திங்களோடுதிளைக்கின்றதென்றுவேறும் ஒரு பொருள் தோன்ற நின்றது காண்க. உச்சி - தலை.
Lord Civan is entempled in the lush town of Thiru-p-puttoor and abides in our minds. The river Ganges stays on His matted hair. The town Thiru-p-puttoor is surrounded by gardens where trees are sky tall. The flowering trees are many in the garden. The flowers emit plenty of honey spreading a pleasing smell all around, besides their fragrance. The trees are so tall that they appear as comrade-in-arms with the crawling moon in the sky.
வேனல் விம்மு வெறியார்பொழிற்சோலைத்
தேனும்வண்டுந்திளைக்குந்திருப்புத்தூர்
ஊனமின்றியுறைவாரவர்போலும்
ஏனமுள்ளுமெயிறும் புனைவாரே.2
வேனல் விம்மு வெறி ஆர்பொழில்சோலைத்
தேனும்வண்டும்திளைக்கும்திருப்புத்தூர்,
ஊனம் இன்றி உறைவார் அவர் போலும்
ஏனமுள்ளும்எயிறும்புனைவாரே.
பொருள்: பன்றி வடிவம் எடுத்த திருமால் உலகை அழிக்கத்தொடங்கினார். அதனைக்கண்ட தேவர்கள்அஞ்சினார்கள். சிவபெருமானிடம்தங்களையும்உலகையும் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டினார்கள். அவர்களுடைய வேண்டுகோளைப் பெருமான் ஏற்றார்.பன்றியை அடக்கி,அதன் பல்லையும்கொம்பையும் தம் மார்பில் அணிந்து கொண்டார். திருப்புத்தூரில்பொழில்கள் அதிகம் உண்டு. அவைகள்வேனிற்காலத்தில்மணத்தைவெளிப்படுத்தும். சோலைகளும் நிறைய உள்ளன. அவைகளில் வாழும் வண்டுகள் தேனைஉண்டு திளைத்துஒலி செய்யும். அவ்வாறு வளம் நிறைந்த திருப்புத்தூரில் சிவபிரான் குறைவின்றிஉறைந்துள்ளார்.
குறிப்புரை: இது இறைவன் பன்றியின் முள்ளையும் பல்லையும்புனைபவர்என்கின்றது. வேனல் - வேனிற்காலம். வண்டு,தேன் இவை வண்டின் வகைகள். ஊனம் - குறைபாடு. ஏனம் - ஆதிவராகம். ஆதிவராகம்செருக்குற்று உலகத்தை அழிக்கத்தொடங்கியகாலத்துத்தேவர்கள்வேண்டுகோளுக்குஇரங்கி,அதை அடக்கி,அதனுடைய முள்ளையும்,பல்லையும் தம் மார்பில் அணிந்து கொண்டார் என்பது வரலாறு.
Thirumaal took the form of a Hog and started destroying the universe. Devas got frightened and prayed to Lord Civan to protect them from destruction. Lord Civan of Thiru-p-puttoor restrained the action of the Hog, pulled out its teeth and tusks and wore them on His chest. In Thiru-p-puttoor during the summer season, the fragrance of flowers from the fertile gardens and forests spreads alround. The honeybees living in these gardens suck the honey from the flowers to their full satisfaction and joyfully make music. In such a luxuriant Thiru-p-puttoor, our Lord Civan abides without any want.
Note: The Hog: The Cosmic Boar. It was an avataar of Vishnu. However, when the boar grew exceedingly haughty, Civa quelled it. He restrained it and wore on His person its tusks and teeth. This stanza once again affirms the supremacy of Lord Civa.
பாங்கு நல்ல வரிவண்டிசைபாடத்
தேங்கொள் கொன்றை திளைக்குந்திருப்புத்தூர்
ஓங்கு கோயிலுறைவாரவர்போலும்
தாங்கு திங்கடவழ்புன் சடையாரே.3
பாங்கு நல்ல வரிவண்டு இசை பாடத்,
தேம் கொள் கொன்றை திளைக்கும்திருப்புத்தூர்,
ஓங்கு கோயில் உறைவார் அவர் போலும்
தாங்கு திங்கள் தவழ் புன்சடையாரே.
பொருள்: சிவபிரான்,தம்மை அடைக்கலமாக அடைந்த தங்களைத்தவழவிட்டசெந்நிறமுடியினை உடையவர். சிவபிரான்,தம்முடியின்மிசைதேன்நிறைந்த கொன்றை மலர்களைச்சூடியுள்ளார். நல்ல வரிகளை உடைய வண்டுகள் பக்கங்களில் இருந்து இசைபாடிக்கொண்டே,பெருமான் சூட்டியுள்ள கொன்றை மலரில்திளைக்கின்றன. திருப்புத்தூரில்ஓங்கி உயர்ந்துள்ளகோவிலில் சிவபிரான் எழுந்தருளியபெருமானார் ஆவார்.
குறிப்புரை: இது திங்கள் திகழும்சடையார்திருப்புத்தூர்“ நாதர்என்கின்றது. வரிவண்டுஇசைபாட, கொன்றை திளைக்கும்திருப்புத்தூர்எனக்கூட்டுக. பாங்கு - பக்கங்களில். கொன்றை மரம் - திருப்புத்தூர்தலவிருட்சம்.
Lord Civan gave protection to the crescent moon who came as a refugee, on His red matted hair. The striped bees sing near His matted hair where cassia flower full of honey abounds and swings to and fro. This Lord Civan is the One who abides in the tall magnificent temple in Thiru-p-puttoor (The cassia is the temple tree of Thiru-p- puttoor).
நாற விண்டநறுமாமலர்கவ்வித்
தேறல் வண்டு திளைக்குந்திருப்புத்தூர்
ஊறல் வாழ்க்கை யுடையாரவர்போலும்
ஏறு கொண்ட கொடியெம் மிறையாரே.4
நாற விண்டநறுமாமலர்கவ்வித்,
தேறல் வண்டு திளைக்கும்திருப்புத்தூர்,
ஊறல் வாழ்க்கை உடையார் அவர் போலும்
ஏறு கொண்ட கொடி எம்இறையாரே.
பொருள்: சிவபிரான்,ஆன்ஏற்றுக்கொடியைத்தனதாகக்கொண்டவர்.திருப்புத்தூர்வளம்மிக்கது. மணம் வீசுமாறு சிறந்த நறுமலர்கள்மலர்ந்துள்ளன. வண்டுகள் அவைகளைத்தம் வாயால் கவ்வித்தேனைஉண்டுதிளைக்கின்றன. சிவபிரான் அந்தத் திருப்புத்தூரில்பலகாலம் தங்கிய வாழ்க்கையினை உடையவர் ஆவார்.
குறிப்புரை: நாற - மணம்வீச. விண்ட - மலர்ந்த. வண்டு மலர் கவ்வித்தேறல்திளைக்கும்திருப்புத்தூர்என்க. ஊறல் வாழ்க்கை - ஊறிப்போன வாழ்க்கை.
Our Lord Civan whose flag sports the insignia of the Bull resides in Thiru-p- puttoor. Here honeybees seizing by their mouth the large and fragrant flowers, suck the honey and swing to and fro. In this luxuriant Thiru-p-puttoor, our Lord Civan abides in Eternity.
இசைவிளங்குமெழில்சூழ்ந்தியல்பாகத்
திசைவிளங்கும்பொழில்சூழ்திருப்புத்தூர்
பசைவிளங்கப்படித்தாரவர்போலும்
வசைவிளங்கும்வடிசேர் நுதலாரே.5
இசை விளங்கும் எழில் சூழ்ந்து,இயல்புஆகத்
திசை விளங்கும் பொழில் சூழ் திருப்புத்தூர்,
பசை விளங்கப் படித்தார் அவர் போலும் -
வசை விளங்கும் வடி சேர் நுதலாரே.
பொருள்: திருப்புத்தூர் புகழ் வாய்ந்தது. அது புகழால் விளக்கம் பெற்றது. இயல்பாக அழகு சூழ்ந்து விளங்குவது. நான்கு திசைகளிலும்பொழில்கள்சூழ்ந்தது. இவ்வகைப்பட்டதிருப்புத்தூரில் சிவபிரான் எழுந்தருளியுள்ளார். கங்கையாகிய பெண் விளங்கும் அழகிய சென்னியை உடையவர். அவர்,தம்மை வழிபடுவோர்க்கு அன்பு வளருமாறுபழகும்பெருமானார் ஆவார்.
குறிப்புரை: இசை - புகழ். பசை - அன்பு. படித்தார் - பழகுபவர். வசை - பெண்;ஈண்டு கங்கை. வடி -அழகு. நுதல் - சென்னி.'குடுமி களைந்தநுதல்'என்ற புறப்பகுதியும்இப்பொருளாதல்ஓர்க.
Lord Civan holds the river Ganges on His lovely matted head. Thiru-p-puttoor is by itself a glorious and imposing town having lush gardens on all its four sides. Lord Civan of this place lets His devotees, who worship Him, expand their devotion towards Him and to augment the love of others to.
Note: Vasai: Woman. Here the reference is to the Gangaa.
வெண்ணிறத்தவிரையோடலருந்தித்
தெண்ணிறத்தபுனல்பாய்திருப்புத்தூர்
ஒண்ணிறத்தவொளியாரவர்போலும்|
வெண்ணிறத்தவிடைசேர் கொடியாரே.6
வெண்நிறத்தவிரையோடுஅலர்உந்தித்,
தெண்நிறத்த புனல் பாய் திருப்புத்தூர்,
ஒண்நிறத்தஒளியார் அவர் போலும்
வெண்நிறத்த விடை சேர் கொடியாரே.
பொருள்: திருப்புத்தூர் தண்ணீர் வளம் மிக்கது. அங்குள்ள மலர்கள் வெள்ளிய நிறம் உடையனவாய் உள்ளன. அவை மணம் பொருந்தியவை. அங்குத் தெளிந்த தன்மை உடையதாய் உள்ள தண்ணீர்,அந்த மலர்களைஅடித்துக் கொண்டு பாயும் வளம் வாய்ந்தது. அந்தத் திருப்புத்தூரில்எழுந்தருளியுள்ளசிவபெருமான்பேரொளிப்பிழம்பானவர். இவர் வெண்மை நிறமுடைய விடை உருவம் எழுதிய கொடியைஉடையவரும்ஆவர். குறிப்புரை: வெண்ணிறத்தவிரையோடுஅலர் உந்தி - வெண்மையாகியநிறமுடையவையாய் மணம் பொருந்திய மலர்களை அடித்துக்கொண்டு. ஒள்நிறத்தஒளியார் - பேரொளிப்பிழம்பானவர்.
Lord Civan sports the white bull on His flag as His insignia. He is enshrined in Thiru-p-puttoor. Here flows the river with crystal clear water carrying sweet smelling
white flowers. Lord Civan residing here is our Supreme Lord radiating white bright light all around.
Note: Civa is always hailed as the white effulgent light.
நெய்தலாம்பல் கழுநீர் மலர்ந்தெங்கும்
செய்கண் மல்கு சிவனார்திருப்புத்தூர்த்
தையல் பாகமகிழ்ந்தாரவர்போலும்
மையுணஞ்சமருவு மிடற்றாரே.7
நெய்தல்,ஆம்பல்,கழுநீர்,மலர்ந்து எங்கும்
செய்கண் மல்கு சிவனார்திருப்புத்தூர்த்,
தையல் பாகம் மகிழ்ந்தார் அவர் போலும்
மையுண்நஞ்சம்மருவும்மிடற்றாரே.
பொருள்: திருப்புத்தூர்வயல்வளம் நிறைந்தது. அங்கு நெய்தல்,ஆம்பல்,செங்கழுநீர் ஆகிய மலர்கள் வயல்களில் எங்கும் மலர்ந்து,நிறைந்து விளங்கும். சிவபிரான்,கருநீலம்பொருந்திய நஞ்சு மருவும் கழுத்தை உடையவர். இவர்திருப்புத்தூரில்உமையொரு பாகம் மகிழ்ந்த சிவனாய்எழுந்தருளியுள்ளார். குறிப்புரை: நீலகண்டராயும்நேரிழைபாகம்மகிழ்ந்தார்என்கின்றது. மைஉண்நஞ்சம் - கரியவிடம்.
Lord Civan's neck is dark blue in colour due to swallowing the oceanic poison. He is happily enshrined along with His consort Umaa Devi in Thiru-p-puttoor. This town is surrounded by fields where blossomed flowers such as Neithal, Aambal and Chengazhuneer (நெய்தல், ஆம்பல்மற்றும்செங்கழுநீர்) are to be seen everywhere in the field.
Note: Neithal: Water Lilly.
Aambal: Lilly
Kazhuneer: Purple Blue Water Lilly.
கருக்கமெல்லாங்கமழும்பொழிற்சோலைத்
திருக்கொள் செம்மை விழவார்திருப்புத்தூர்
இருக்க வல்ல விறைவரவர்போலும்
அரக்கனொல்கவிரலா லடர்த்தாரே.8
கருக்கம் எல்லாம் கமழும்பொழில்சோலைத்
திருக் கொள் செம்மை விழவுஆர்திருப்புத்தூர்
இருக்க வல்ல இறைவர் அவர் போலும்
அரக்கன் ஒல்க விரலால் அடர்த்தாரே.
பொருள்: திருப்புத்தூர் செல்வம் நிறைந்த செம்மையாளர்கள் வாழும் இடம். திருவிழாக்கள்பல நிகழும் இடம். இங்குள்ள சிவபெருமான்,இராவணனாகியஅரக்கனைக்கால்விரலால்தளர அடர்த்தவர். அவர் திருப்புத்தூரில்எழுந்தருளி இருக்கும் வல்லவரானஇறைவராவார்.
குறிப்புரை: இராவணனின்ஆணவத்தைஅழித்த இறைவன் திருப்புத்தூரில் இருப்பவன் என்கின்றது. கருக்கம் - மேகம். அரக்கன் - இராவணன். ஒல்க - வருந்த.
Lord Civan of Thiru-p-puttoor crushed the head and shoulders of the King of Lanka by pressing His toe at the top of Mount Kailas. Thiru-p-puttoor is surrounded by flower gardens and forests full of various flowering trees. The fragrance of these flowers fills the entire sky of this affluent town. People of high rectitude live here. A good number of festivals take place in this town now and then. In such a place (Thiru- p-puttoor) the able Lord Civan abides and gracing all.
Note: Karukkam: It means (i) cloud and (ii) ilanthai tree. Translation conveys the first meaning. If the second meaning is preferred, the idea conveyed is that Thiru-P- Puttur is rich in jujube trees.
மருவியெங்கும் வளரும் மடமஞ்ஞை
தெருவுதோறுந்திளைக்குந்திருப்புத்தூர்ப்
பெருகி வாழும் பெருமானவன்போலும்
பிரமன் மாலுமறியாப் பெரியோனே.9
மருவி எங்கும் வளரும் மடமஞ்ஞை
தெருவுதோறும்திளைக்கும்திருப்புத்தூர்ப்
பெருகி வாழும் பெருமான் அவன் போலும்
பிரமன் மாலும்அறியாப்பெரியோனே.
பொருள்: திருப்புத்தூரில்,எங்கும் பொருந்தியனவாய் வளரும் இளமயில்கள் தெருக்கள் தோறும் உலவிக்களிக்கின்றன. அங்கு எழுந்தருளியுள்ள இறைவன்,பிரமனும்திருமாலும்அறியமுடியாத பெரியோன் ஆவான். அவன் திருப்புத்தூரில் பெருமை பெருகியவனாய்வாழும் பெருமான் ஆவான்.
குறிப்புரை: பிரமன் மால் அறியாப் பெருமான் திருப்புத்தூரில் பெருகி வாழ்கின்றான்என்கின்றது. மஞ்ஞை - மயில்கள்.
Lord Civan is the Great One unperceivable to Brahmaa and Vishnu. He is Omnipresent. He is the Supreme One abiding in Thiru-p-puttoor where pea fowls move about joyfully in the streets. In such a place Lord Civan abides in ever ascending glory.
கூறைபோர்க்குந்தொழிலாரமண்கூறல்
தேறல்வேண்டாதெளிமின்றிருப்புத்தூர்
ஆறு நான்கு மமர்ந்தாரவர்போலும்
ஏறு கொண்ட கொடியெம் மிறையாரே.10
கூறைபோர்க்கும்தொழிலார்,அமண்,கூறல்
தேறல்வேண்டா;தெளிமின்! திருப்புத்தூர்,
ஆறும்நான்கும் அமர்ந்தார் அவர் போலும்
ஏறு கொண்ட கொடி எம்இறையாரே.
பொருள்: மேல் ஆடையைப்போர்த்துத்திரிதலைத்தொழிலாகக் கொண்ட பெளத்தர், சமணர் ஆகியோருடையஉரைகளைநம்பாதீர்கள். ஆனேறு எழுதிய கொடியினைஉடையவராய்த்திருப்புத்தூரில் நான்கு வேதங்களாகவும்,ஆறு அங்கங்களாகவும் விளங்கும்சிவபெருமானைத்தெளிமின்கள்.
குறிப்புரை: இது இடபக்கொடி கொண்ட இறைவர் நான்கு வேதத்தினும்ஆறங்கத்தினும்அமர்ந்திருக்கின்றார்என்கின்றது. கூறை - ஆடை. தேறல்வேண்டா - தெளியவேண்டா. ஆறும்நான்கும் அமர்ந்தார் - வேத அங்கங்கள்ஆறினையும்வேதங்கள்நான்கினையும்விரும்பியவர். ஆறுநான்கும் என்று ஒரு சொல்லாகக் கொண்டு நிரலே நிறுத்தி,அறுபத்துநான்கு கலை ஞானங்களில்அமர்ந்தார் எனவுங் கொள்ளலாம். அன்றி ஆறாறாகஅடுக்கப்பட்டுவருகின்ற அகம்,அகப்புறம்,புறம், புறப்புறம் ஆகிய சமயங்களின்பொருளாய்அமர்ந்திருப்பவர்என்றுமாம்.
Our Lord Civan's flag sports the insignia of the Bull; The Lord of Thiru-P-Puttoor is indeed the six angaas and the four vedaas; Ye folks! ignore the utterances of the heavily-clad Budhists and the (naked) Samanars and be clear in your minds that Lord Civan is the only one Supreme Lord of ours.
Note: The Six Angas: (1) Mantraa; (2) Vyakaranam (Grammar); (3) Nikandu (Glossary); (4) Chhandopisitam (Metres); (5) Niruktam (Etymology); and (6) Jyotisham (Astronomy).
நல்ல கேள்வி ஞானசம்பந்தன்
செல்வர்சேடருறையுந்திருப்புத்தூர்ச்
சொல்லல் பாடல் வல்லார்தமக்கென்றும்
அலலறீருமவலமடையாவே.
நல்ல கேள்வி ஞானசம்பந்தன்
செல்வர்சேடர்உறையும்திருப்புத்தூர்ச்
சொல்லல் பாடல் வல்லார் தமக்கு என்றும்
அல்லல் தீரும்;அவலம் அடையாவே.
பொருள்: செல்வரும்,உயர்ந்தவருமான சிவபெருமான் உறையும்திருப்புத்தூரை,நன்மை தரும் வேதங்களைஉணர்ந்தஞானசம்பந்தன் அடைந்து,வழிபட்டுச்சொல்லியபத்துப்பாடல்களையும்ஓதவல்லவர்களுக்குத்துன்பங்கள்நீங்கும். எக்காலத்திலும் அவர்களை அவலம் அடையா.
குறிப்புரை: இது இப்பாடல்பத்தும்வல்லார்க்கு அல்லல் தீரும்என்கின்றது. நல்லகேள்வி - நல்ல கேள்வியால்விளைந்த அறிவு. அன்றிக் கேள்வி என்பதனைச் சுருதி என்பதன் மொழி பெயர்ப்பாகக்கொண்டு வேதம் வல்ல ஞானசம்பந்தன்என்றுமாம். சேடர் - எல்லாம் தத்தம் காரணத்துள் ஒடுங்க, அவை தமக்குள்ஒடுங்கத்,தாம் ஒன்றினும்ஒடுங்காது,ஒடுங்கியவைகள் மீண்டும் உதிக்க மிச்சமாய்இருப்பவர்;பெருமையையுடையவா்என்றுமாம். அல்லல் - துன்பம். அவலம் - வறுமை.
Gnaanasambandan is blessed with profound knowledge of the great Vedas. He went to Thiru-p-puttoor, worshipped the Lord Civan therein and sang this hymn. Those who can chant these songs will stand freed from all troubles; grief will not touch them.
26ஆம் பதிகம் முற்றிற்று
உ
சிவமயம்
27.திருப்புன்கூர்
திருத்தலவரலாறு:
திருப்புன்கூர் என்ற திருத்தலம்சோழநாட்டுக் காவிரி வடகரைத் தலம் ஆகும்.வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து3 கி.மீ. தூரத்தில் உள்ளது. பேருந்து வசதி உண்டு. இது புன்கமரத்தைத்தலவிருட்சமாகக்கொண்டதாகலின்திருப்புன்கூர்எனப்படுவதாயிற்று. வடமொழியில்காஞ்சாரண்யம் என வழங்கும். இத்தலத்திற்குப் பக்கத்தில் உள்ள ஆதனூரில்அவதரித்ததிருநாளைப்போவார் என்னும் நந்தனார்பக்திக்காகநந்தியைவிலகும்படிச் செய்த தலம். இவர் வெட்டியதிருக்குளம் ஒன்று இப்பொழுதும் இவ்வூரில் இருக்கின்றது. இதற்கு வடக்கே உள்ள திருப்பெருமங்கலத்தில்வசித்தஏயர்கோன்கலிக்காம நாயனார் திருக்கோயிலைப்புதுக்கிப் பல திருப்பணிகளைச்செய்திருக்கிறார். கலிக்காமர்வேண்டுகோளுக்காக இறைவன்12 வேலி நிலங்களைப் பெற்றுக்கொண்டு மழை பெய்வித்து உலகை உய்வித்தார். இதனைச்சுந்தரமூர்த்திசுவாமிகள் தம் பதிகத்து “வையகம் முற்றும் மாமழை'என்ற பாடலால்குறிப்பிடுகின்றார்கள். இச்செய்தி கோயில் திருப்பண்ணியர்விருத்தத்திலும்கூறப்பெறுகிறது. இறைவன் பெயர் சிவலோக நாதர் இறைவி பெயர் சொக்க நாயகி. தீர்த்தம் கணபதி தீர்த்தம். விருட்சம் புன்க மரம்.
கல்வெட்டு:
411 முதல்415 வரையில் உள்ள ஐந்து கல்வெட்டுக்கள் உள்ளன.1918இல் படியெடுக்கப்பெற்றன. இறைவன் சிவலோகம் உடைய நாதர் என்று வழங்கப்பெறுகின்றார். இராஜராஜன் ஆட்சி 11ஆம் ஆண்டில்சிவலோகமுடையார்கோயிலிலேயே வடக்கு இரண்டாம் பிராகாரத்துவிக்கிரமசோழீச்சுரமுடைய நாயனார் கோயிலைக்கட்டவிக்கிரமசோழனானவயநாட்டரையன்மருதூர்உடையான் நிலமளித்து இருக்கிறான். கோப்பெருஞ்சிங்கன்2ஆம் ஆண்டில்இத்தலம்இராஜாதிராஜவளநாட்டுதிருவாலிநாட்டுத்திருப்புன்கூர்எனக்குறிப்பிடப்பெற்றுள்ளது. பாண்டிய குலாசனிவளநாட்டுக்கீழையூர்நாட்டுக்குறிச்சியான் ஒருவன் சிவலோகமுடையமாதேவர்திருமஞ்சனத்திற்கும்திருமாலைக்குமாகநிலமளித்து இருக்கிறான். ஏனைய கல்வெட்டுக்கள்விளக்கிற்காகநிலமளித்த செய்தியை அறிவிப்பன.
பதிக வரலாறு:
திருநின்றியூர்,திருநீடூர் என்னும் தலங்களைவணங்கிக் கொண்டு திருப்புன்சகூரைஅடைந்த பிள்ளையார் “முந்தி நின்ற* என்னும் பதிகத்தைப்பாடியருளினார். திருப்புன்கூர்ச்சிவலோகநாதர்கூத்தப் பெருமான் கோலத்தில் காட்சி கொடுத்திருக்கலாம். இப்பதிகம் முழுவதும் அடிகள் என்றே குறிப்பிடுகின்றார். மேலும்,மாதொரு பாகன் என்ற வழக்கும்காணப் பெறவில்லை. வாய்மூரில் அவ்வாறு காட்சி கொடுத்துள்ளார். அதனை ஒன்பதாம்திருப்பாட்டில் “ஆடவல்லஅடிகள் அவர்போலும்” என்று குறிப்பிடுகிறார். இதனைச் சேக்கிழார் பெருமான் “திருப்புன்கூர்நண்ணி ஆடிய பாதம் இறைஞ்சி அருந்தமிழ்பாடியமர்ந்தார்” என விளக்கிக் காட்டுகிறார்.
27. THIRU-P-PUN-KOOR
THE HISTORY OF THE PLACE
This sacred place is to the north of river Cauvery in Chola Naadu. It is 3 km away from Viaththeesvaran Koyil. It is accessible by bus. As the sacred tree of this temple is the 'Punka' tree, the place came to be called Thiruppunkoor. In Sanskrit it is known as Kaanchaaranyam. It is in this temple that Nandhanaar, who was born in the nearby village of Aadhanoor and is also known as Thirunaalaippovaar, through his intense devotion made the nandhi (divine bull) move out of the way so that he can have the vision of the Lord. There is a tank here that was caused to be dug by him. Eyarkon Kalikkaama Naayanar, who lived in Thirupperumangkalam to the north of this place, renovated the temple and has performed many services for the temple. God, granting Kalikkaamar's wish, accepted 12 'veli' of lands and caused it to rain and saved the country. Saint Sundharamoorthi Swaami sings of this episode in the verse “vaiyakam murrum maamazhai'. This episode is also mentioned in the Thiruppanniyar Viruththam. The Lord's name is Sivalokanaathar and that of the Goddess is Chokkanaayaki. The sacred ford is Ganapathi Theerththam and the sacred tree is 'Punka'.
Stone Inscriptions
Five inscriptions, numbered from 411 to 415, are extent and they were copied in 1918. The Lord is called Sivalokamudaiyanaathar in the inscriptions. Vikkirama- chozhan Vayanaattaraiyan Marudhoor Udaiyaan gave land to build a shrine for Vikkirama Chozheechchuramudaiya Naayanar in the north second piraakaaram in the Sivalokamudaiyaar temple itself, during the 11th regnal year of Raajaraajan. During the second regnal year of Kopperunjchingan, this temple is referred to as Thiruppunkoor of Thiruvaalinaadu in Raajaadhiraaja Valanaadu. One Kurichchiyaan of Keezhaiyoor of Thiruvaalinaadu in Paandiya Kulaachani Valanaadu gifted land for the ceremonial bathing and flower garlands for Sivalokamudaiya Maadhevar. Other inscriptions give information on the gift of lands for lamps.
INTRODUCTION TO THE HYMN
After hailing the Lord at Thiru-Nindriyoor and Needoor, the Saint arrived at Thiru-P-Pun-koor where he sang the following hymn.
திருச்சிற்றம்பலம்
27.திருப்புன்கூர்
பண் : தக்கராகம்
ராகம் : காம்போதி
முந்தி நின்ற வினைகளவைபோகச்
சிந்தி நெஞ்சேசிவனார்திருப்புன்கூர்
அந்த மில்லாவடிகளவர்போலும் :
கந்த மல்கு கமழ்புன் சடையாரே.1
முந்தி நின்ற வினைகள் அவை போகச்
சிந்தி,நெஞ்சே! சிவனார்திருப்புன்கூர்;
அந்தம் இல்லா அடிகள் அவர் போலும் -
கந்தம் மல்கு கமழ் புன்சடையாரே.
பொருள்: முற்பிறவிகள்பலவற்றில் செய்த ஆகாமியவினைகளும்சஞ்சிதமும்உண்கவர்உழன்று பக்குவப்பட்டு,அதன் பின்னர்,பிராரத்தம்வரும்காலையில்,ஆன்மாக்கள்இப்பிராரத்தவினைகளைப்புசிக்கும் நிலை எய்தும். அந்நிலையில்இப்புசிப்பிற்குமுற்பட்டவை எல்லாம் நீங்குதற்குரியவழியொன்றுண்டு. திருப்புன்கூரில் சிவபிரான் ஆதி அந்தம் இல்லாத தலைவராயும் மணம் நிறைந்து கமழும்செந்நிறச் சடைமுடி “உடையவராகவும்எழுந்தருளியுள்ளார். அவரை,நெஞ்சே நீ சிந்தை செய்வாயாக. இதுவே வழி,என்றவாறு.
குறிப்புரை: இது பழவினையற,நெஞ்சே! திருப்புன்கூர்ச்சிவனாரைச் சிந்தி,என்கின்றது. முந்திநின்றவினைகள் - நுகர்ச்சிக்குரியனவாகப்பரிபக்குவப்பட்டுநிற்கும்ஆகாமியசஞ்சிதவினைகள். அந்தம் - முடிவு. கந்தம்- மணம்.
O! Heart!! To get rid of the evil effects of your past karmaa, which confronts you in this life as Praarartha karmaa culminating from the sum total of Sanchitha karmaa and from Aahaamiya karmaa of all your deeds in the past several births you had been in so far, there is a way. Meditate single minded on Lord Civan who abides in Thiru-P-Pun-koor who has neither a beginning nor an end. He has red matted hair which always emits a very pleasant natural fragrance.
Note: Odoriferous: The fragrance is known as Civa Manam. It is sanctifying and soul uplifting fragrance.
மூவராய முதல்வர் முறையாலே
தேவ ரெல்லாம்வணங்குந்திருப்புன்கூர்
ஆவரென்னுமடிகளவர்போலும்
ஏவி னல்லாரெயின்மூன்றெரித்தாரே.
மூவர்ஆய முதல்வர் முறையாலே
தேவர் எல்லாம் வணங்கும்திருப்புன்கூர்
ஆவர்,என்னும் அடிகள் அவர் போலும் -
ஏவின்அல்லார்எயில் மூன்று எரித்தாரே.
பொருள்: பகைமை பூண்டவராயஅரக்கர்களின் மூன்று அரண்களைக் கணை ஒன்றால்சிவபிரான் எரித்து அழித்தார். அவர்,பிரமன்,திருமால்,உருத்திரன் ஆகிய மூவராயும், அவர்களுக்கு முதல்வராயும் விளங்குகிறார். தேவர்கள் எல்லோரும் முறையாக வந்து வணங்குபவராகவும்,திருப்புன்கூரில்எழுந்தருளியுள்ள அடிகள் ஆவார்.
குறிப்புரை: இது முப்பெருந்தேவராய்,எல்லாத் தேவராலும்வணங்கப்பெறும்தேவதேவராய் நின்ற இறைவன் திருப்புன்கூர்நாதன்என்கின்றது. மூவர்ஆய முதல்வர் - திருச்சிவபுரப்பதிகத்துக்குறித்தவண்ணம் பிரமன் மால் உருத்திரன் என்ற முத்தேவராயும்,அவர்க்குமுதல்வராயும் உள்ளவர்.அடிகள் ஆவர் என்னும் அவர் போலும் எனக்கூட்டுக. ஏ - அம்பு. அல்லார் - பகைவர்.
Lord Civan abiding in Thiru-P-Pun-koor destroyed with fire, the three citadels belonging to the hostile Asuraas. The three minor gods - Brahmaa, Vishnu and Rudran (Trinity) - are all truly but indirectly Lord Civan Himself (These minor gods could do nothing unless Lord Civan delegates power to them). At the same time Lord Civan is the Supreme Chief and stands above these three minor gods. All the Devaas arrive in their respective ranks and adore Lord Civan. This Lord Civan is entempled in Thiru-P- Pun-koor and graces His devotees.
Note: The Three: Brahmaa, Vishnu and Rudraa. Civan acts as these three. Civan animates these and appoints them to perform their ordained tasks. This is called anupaksha.
பங்கயங்கண்மலரும்பழனத்துச்
செங்கயல்கடிளைக்குந்திருப்புன்கூர்க்
கங்கை தங்கு சடையாரவர்போலும்
எங்களுச்சியுறையும் மிறையாரே.3
பங்கயங்கள்மலரும்பழனத்துச்
செங்கயல்கள்திளைக்கும்திருப்புன்கூர்க்,
கங்கை தங்கு சடையார் அவர் போலும் -
எங்கள் உச்சி உறையும்இறையாரே.
பொருள்: எங்கள் உச்சியில்உறையும்இறையவர் யாவர்?திருப்புன்கூரில்,தாமரை மலர்கள் மலரும்வயல்களில் சிவந்த கயல்மீன்கள் திளைத்து மகிழும். அப்படிப்பட்ட திருப்புன்கூரில்கங்கை தங்கிய சடைமுடியராகிய சிவபிரான் எழுந்தருளியுள்ளார். அவரே எம்தலைமேல்உள்ளார்.
குறிப்புரை: திருப்புன்கூர்நாதனே எங்கள் முடிமீதுஉறையும் இறைவன் என்கின்றது. பழனம் - வயல். இவர் கங்கை தங்கும் சடையாராதலின்நீர்வளம் மிகுந்து பழனங்களில்செங்கயல்கள்திளைக்கின்றனஎன்பதாம். தாமரை இறைவியின் கண் போல் மலரும்,அதைப் பார்த்து,வயல்களில் உள்ள மீன்கள் மகிழும்எனவும் கொள்ளலாம்.
Thiru-P-Pun-koor is surrounded by fields where lotus flowers bloom in plenty. The red Kayal fish joyfully leap and swing to and fro, in the water filled fields. In this luxuriant Thiru-P-Pun-koor, Lord Civan, who has the river Ganges on His matted hair, is entempled. This sane Lord Civan resides in our heads also and graces us.
Note: Our Heads: When the heart is upright and pure, the head becomes the shrine.
கரையுலாவுகதிர்மாமணிமமுத்தம்
திரையுலாவுவயல்சூழ்திருப்புன்கூர்
உரையினல்லபெருமானவர்போலும்
விரையினலலமலர்ச்சே வடியாரே.4
கரை உலாவு கதிர் மா மணிமுத்தம்
திரை உலாவு வயல் சூழ் திருப்புன்கூர்
உரையின் நல்ல பெருமான் அவர் போலும் -
விரையின் நல்ல மலர்ச்சேவடியாரே.
பொருள்: திருப்புன்கூர் வளம் மிக்க வயல்கள்சூழ்ந்த ஊர். ஒளி பொருந்திய சிறந்த மாணிக்கங்கள்கரைகளில் அங்கே திகழ்கின்றன. மேலும்,அங்கு முத்துக்கள்நீர்த்திரைகளில் உலாவுகின்றன. அவ்வகைப்பட்டதிருப்புன்கூரில்மணத்தால் மேம்பட்ட தாமரை மலர் போன்றசிறந்ததிருவடிகளை உடைய சிவபிரான் எழுந்தருளியுள்ளார். அவர் புகழ்மிக்க நல்ல பெருமானார் ஆவார்.
குறிப்புரை: இது பெருமான் மணம்நாறும்மலர்ச்சேவடியார்என்கின்றது. கதிர்மாமணிகரையுலாவும், முத்தம் திரை உலாவும் வயல் எனக்கூட்டுக. உரை - புகழ். விரை - மணம்.
Lord Civan's red holy Feet resemble the red Lotus flower with it's pleasing fragrance of the highest degree. Thiru-P-Pun-koor is surrounded by fertile fields. Bright pure ruby abound in the ridges of these fields. Pearls are wafted about here and there in the waves of these fields. In such a luxuriant town Graceful Lord Civan resides gloriously.
பவளவண்ணப்பரிசார் திருமேனி
திகழும் வண்ண முறையுந்திருப்புன்கூர்
அழகரென்னுமடிகளவர்போலும்
புகழ நின்ற புரிபுன்சடையாரே.
பவளவண்ணப் பரிசு ஆர் திருமேனி
திகழும் வண்ணம் உறையும்திருப்புன்கூர்
அழகர் என்னும் அடிகள் அவர் போலும் -
புகழ நின்ற புரி புன்சடையாரே.
பொருள்:திருப்புன்கூரில்உறையும் சிவபிரான் அழகர் என்னும் அடிகள் ஆவார். உலகோர்புகழும்படிநிலைபெற்றதும்,முறுக்கிய சிவந்த முடியையும்உடையவராய்இறைவர்திகழ்கிறார். தமது பவளம் போன்ற மேனியில்செவ்வண்ணம்திகழுமாறுதிருப்புன்கூரில்உறைகிறார்.
குறிப்புரை: இது பவளமேனியழகரேஅனைவராலும்புகழநின்ற பெருமான் என்கின்றது. பரிசு - தன்மை. திகழும் வண்ணம் உறையும் - மிக்கு விளங்கும் வண்ணம் என்றும் உறையும். அழகர் - அழகு பண்பு. அழகர் பண்பி. அம்மையப்பர்ஆதலின்இத்தலத்து அம்மை திருநாமம் சொக்க நாயகி;அழகிய நாயகி. ஆதலால் இவர் அழகர் எனக்குறிப்பிடப்பெற்றார்.
The handsome Lord Civan abides in Thiru-P-Pun-koor in all splendour. His ruby like divine frame blazes like coral. His red matted hair is well twisted. This Lord Civan is hailed by one and all in the world.
Note: Azhakar: The Goddess of Thiru-P-Punkur bears the name Chokkanaayagi (The Lady who is beautiful), Her Consort is Chokkanaathan (The Lord who is handsome). Chokkar and Azhagar are synonymous. The beauty of the Lord knows no fading.
தெரிந்திலங்கு கழுநீர் வயற்செந்நெல்
திருந்த நின்ற வயல்சூழ்திருப்புன்கூர்ப்
பொருந்தி நின்ற வடிகளவர்போலும்
விரிந்திலங்குசடைவெண் பிறையாரே.6
தெரிந்து இலங்கு கழுநீர் வயல்,செந்நெல்
திருந்த நின்ற வயல் சூழ் திருப்புன்கூர்ப்
பொருந்தி நின்ற அடிகள் அவர் போலும் -
விரிந்து இலங்குசடைவெண்பிறையாரே.
பொருள்:திருப்புன்கூர்,கண்களுக்குப்புலனாகும்படிஅழகோடுதிகழும்செங்கழுநீர்மலர்ந்த வயல்களாலும்,செந்நெற்கதிர்கள் அழகோடு நிறைந்து நிற்கும் வயல்களாலும்சூழப்பெற்றது. அந்தத்திருப்புன்கூரில் விரிந்து விளங்கும் சடைமுடியில் வெண்பிறை அணிந்த சிவபிரான் எழுந்தருளியுள்ளஅடிகளாவார்.
குறிப்புரை: அழகர் சடையில்வெண்பிறையுடையார் போலும் என்கின்றது. கழுநீர் வயல்களும்,செந்நெல் வயல்களும்சூழ்ந்தபுன்கூர்என்க. பொருந்தி - தமக்கு இதுவே சிறந்த தலம் என அமைந்து.
Thiru-P-Pun-koor is surrounded on one side by fields full of blossomed attractive Kazhuneer flowers that are pleasing to the eyes. On the other side, fertile paddy fields are there where ears of sound paddy grass stand erect delightfully. In such a luxuriant Thiru-P-Pun-koor, Lord Civan abides. He wears on His wide matted hair a white crescent moon.
பாரும்விண்ணும்பரவித்தொழுதேத்தும்
தேர்கொள் வீதி விழவார்திருப்புன்கூர்
ஆர நின்ற வடிகளவர்போலும்
கூர நின்ற வெயின்மூன்றெரித்தாரே.
பாரும்விண்ணும்பரவித் தொழுது ஏத்தும்
தேர் கொள் வீதி விழவுஆர்திருப்புன்கூர்,
ஆர நின்ற அடிகள் அவர் போலும் -
கூரம் நின்ற எயில் மூன்று எரித்தாரே.
பொருள்:திருப்புன்கூர்,மண்ணகமக்களும்விண்ணகத்தேவரும்பரவித் தொழுது ஏத்துமாறுதேரோடும்வீதிகளை உடையது. அது,எந்நாளும்திருவிழாக்களால் சிறந்து திகழ்வது: கொடியனவாய்த் தோன்றி,இடர் விளைத்து நின்ற முப்புரங்களையும் எரித்து அழித்தஇறைவர்திருப்புன்கூரில் பொருந்தி நின்ற அடிகளாய்எழுந்தருளியுள்ளார்.
குறிப்புரை: தேர் விழாத்திகழும்திருப்புன்கூர் அடிகள் முப்புரம் எரித்த முதல்வன் போலும் என்கின்றதுபார்,விண் - ஆகு பெயராக முறையே மக்களையும்தேவரையும்உணர்த்தின. ஆர - பொருந்த. கூரம் -க்ரூரம்,கொடுமை. மூன்றும்என்பதனுள் நின்ற முற்றும்மைதொக்கது. ஆரநின்ற - ஆர்தல் - அனுபவித்தல். அனைத்து உயிர்களும் கண்டு ஆனந்தித்து அனுபவிக்குமாறு நின்ற. கூர்தல் - மேன்மேற் பெருகுதல்: கேட்டவுடனேயே அல்லது நினைத்தவுடனேயேஅச்சத்தைமிகுவிக்கின்ற
Lord Civan is the great One who beamingly abides at Thiru-P-Pun-koor, where temple festivals can be seen on all days. In the streets of this town, temple chariots keep To enable men and celestials u worship Him, He is plying during festive days. enshrined in this town. Lo, verily He is the Lord who burnt down the three citadels of the recalcitrant Asuras who were inflicting miseries on Devas.
Note: Veedhi: That indeed is the Veedhi where chariots ply. It is different from Theru.
மலையதனாருடையமதின்மூன்றும்
சிலையதனாலெரித்தார்திருப்புன்கூர்த்
தலைவர் வல்ல வரக்கன்றருக்கினை
மலையதனாலடர்த்துமகிழ்ந்தாரே.
மலை அதனார் உடைய மதில் மூன்றும்
சிலை அதனால் எரித்தார் - திருப்புன்கூர்த்
தலைவர்,வல்ல அரக்கன் தருக்கினை
மலை அதனால் அடர்த்துமகிழ்ந்தாரே.
பொருள்: சிவபிரான்,வலிமை பொருந்திய இராவணனுடையசெருக்கைப் போக்க, அவனைக் கயிலை மலையின்கீழ்அடர்த்தார். இராவணன் தன் செயலுக்கு வருந்தி, மன்னிப்புக் கோரி,வணங்கிப்போற்றிப் பாடினான். அவன் பாடலில் மகிழ்ந்த சிவபெருமான் மன்னித்து அவனுக்கு அருள் வழங்கினார். தேவர்களோடு சண்டையிட்டு, அவர்களை அழிக்கும் குணம் உடையவராயஅசுரர்களின்முப்புரங்களைவில்லால் எரித்து அழித்தவராய சிவபிரான் திருப்புன்கூரின் தலைவர் ஆவார்.
குறிப்புரை: புரமெரித்தவீரத்தையும்,இராவணன் வலியடக்கிஆண்டகருணையையும் விளக்குகின்றது. மலையதனார் - மலைதற்குரியராகியமுப்புராதிகள். மலைதல் - சண்டையிடுதல். மலை -கயிலைமலை. அடர்த்து - நெருக்கி. இதனாற் கருணை அறிவிக்கப்பெறுகின்றது.
Lord Civan of Thiru-P-Pun-koor burnt with a bow the three citadels of the Asuras who were bent upon fighting and ruining the Devas. This same Lord suppressed the pride of the valiant king of Sri Lanka (Raavanan) and crushed him by pressing His toe on the mountain under which he was lying. The king repented for his action, and appealed to Lord Civan by singing songs of adoration. Civan was pleased to hear his music and graced him with boons. This Civan is the Supreme Chief of Thiru-P-Pun-koor.
Note: Civan was happy when the sinner showed remorse. Not only that, He even blessed the sinner, with rare gifts.
நாட வல்ல மலரான்மாலுமாய்த்
தேட நின்றாருறையுந்திருப்புன்கூர்
ஆட வல்ல வடிகளவர்போலும்
பாட லாடல்பயிலும்பரமரே.
நாட வல்ல மலரான்,மாலும்ஆய்த்
தேட நின்றார் உறையும்திருப்புன்கூர்
ஆட வல்ல அடிகள் அவர் போலும் -
பாடல் ஆடல் பயிலும்பரமரே.
பொருள்: எதனையும் ஆராய்ந்து அறிதலில்வல்லவர்களானநான்முகனும்திருமாலும் தேடி அறிய இயலாதவராய் ஓங்கி நின்றவர் சிவபிரான். அவ்வகைச்சிவபிரான் பாடல் ஆடல் ஆகிய இரண்டிலும்வல்லவராய்,அவற்றைப்பழகும் மேலான இறைவர் ஆவார். அப்பெருமான்திருப்புன்கூரில்உறையும்ஆடல்வல்ல அடிகள் ஆவார்.
குறிப்புரை: ஆடவல்லஅடிகளேபாடலாடல்பயிலும்பரமர் போலும் என்கின்றது. நாடவல்லமலரான் - பிரமனுக்கு நான்கு முகங்களாதலின் ஏனைய தேவர்களைப்போலத்திரும்பித்திரும்பித் தேட வேண்டிய அவசியம் இல்லை என்று நகைச்சுவை தோன்றக் கூறியது. அதிலும் துணையாகத் தன் தந்தையையுஞ்சேர்த்துக் கொண்டு தேடினான் என அச்சுவையைமிகுத்தவாறு.
Civan is the most efficient Lord who is the author of both music and dance. As the Chief architect of these arts He practises (practices - U.S.A. spelling) it always. Brahmaa is an expert in analysing and knowing about things. This Brahmaa along with Thirumaal could not perceive Lord Civan who stood as a big, tall column of fire. This Lord Civan who is well versed in the art of dance abides in Thiru-P-Pun-koor.
Note: Civa is Nataraaja (Aadal Vallaan in Tamil): It is through His dance he enacts the five fold activities (பஞ்சகிருத்தியம்).
குண்டு முற்றிக்கூறையின்றியே
பிண்டமுண்ணும்பிராந்தர்சொற்கொளேல்
வண்டு பாட மலரார்திருப்புன்கூர்க்
கண்டு தொழுமின் கபாலி வேடமே.10
குண்டு முற்றிக்கூறைஇன்றியே
பிண்டம் உண்ணும் பிராந்தர் சொல் கொளேல்!
வண்டு பாட மலர் ஆர்திருப்புன்கூர்க்
கண்டு தொழுமின்,கபாலி வேடமே!
பொருள்:கீழ்மையான தன்மை மிகுந்து,ஆடையின்றி,வீதிகளில் வந்து பிச்சைக்கேட்டுப்பெற்று,அவ்வுணவைவிழுங்க வாழும் மயக்க அறிவினராகியசமணர்கள் கூறும் சொற்களைக்கேளாதீர். தேன் உண்ண வந்த வண்டுகள் பாடுமாறு மலர்கள் நிறைந்து விளங்கும் திருப்புன்கூர் சென்று,அங்கு விளங்கும் கபாலியாகியசிவபிரானின்வடிவத்தைக்கண்டு தொழுவீர்களாக.
குறிப்புறை: மயக்க அறிவினராகியபுறச்சமயத்தார்புன்சொல்கேளாதே'கபாலியைக்கைதொழுமின்” என்கின்றது. குண்டு - உடற்பொறை. கூறையின்றி என்றது திகம்பரசமணரைபிண்டமுண்ணுதல் - சுவைத்து மென்று தின்னாதுவிழுங்குதல். பிராந்தர் - மயக்க அறிவினர்.
The Samanars low in intellect roam about in the streets without any clothing on their body. They beg for food and eat it. O! Companions! Do not listen to the words of these people. Their minds are confused. They know nothing about real divine knowledge. Come to Lord Civan who has taken the garb of 'Kaabaali' and abides in Thiru-P-Pun-koor and offer worship to Him.
Note: The tenth verse usually debunks both the Samanars and Buddhists to pillory and derision. However, in this decad, the Buddhist is not even mentioned.
மாட மல்கு மதில்சூழ்காழிமன்
சேடர்செல்வருறையுந்திருப்புன்கூர்
நாட வல்ல ஞானசம்பந்தன்
பாடல் பத்தும் பரவி வாழ்மினே.11
மாடம் மல்கு மதில் சூழ் காழி மன்,
சேடர்செல்வர்உறையும்திருப்புன்கூர்
நாட வல்ல ஞானசம்பந்தன்,
பாடல் பத்தும் பரவி வாழ்மினே!
பொருள்: ஞானசம்பந்தப் பெருமான் மாடவீடுகளால்நிறையப்பெற்றதும்,மதில்கள்சூழ்ந்ததுமானசீகாழிப்பதிக்குத் தலைவர். அவர் எதையும் நாடி ஆராய வல்லவர். அவர், பெரியோர்களும்செல்வர்களும் வாழும் திருப்புன்கூரில்எழுந்தருளி இருக்கும் இறைவர்மீதுபாடியபாடல்கள்பத்தையும் பரவி நல்வாழ்வு வாழ்வீர்களாக.
குறிப்புரை: இது இப்பதிகத்தைஓதின்வாழலாம்என்கின்றது. சேடர்க்குமுன்னுரைத்தாங்கு உரைக்க. பத்தும் பரவி - பத்தாலும்தோத்திரித்து.
Gnaanasambandan is a versatile sage who can analyse anything and every thing, and know its real nature. He hails from Sree Kaazhi which is encircled by high walls and abounds in storeyed buildings everywhere. He has sung these hymns on Lord Civan of Thiru-P-Pun-koor where noble and affluent people are living. Ye Companions! Chant these ten verses and lead a happy righteous life.
Note: The decad ends with an exhortation which is a veritable blessing. Every one is born indebted, in more ways that one. One such debt is called Rishi-K-Katan. This debt is discharged when one cultivates the companionship of sages, saints and seers.
திருச்சிற்றம்பலம்
27ஆம் பதிகம் முற்றிற்று
௨
சிவமயம்
28.திருச்சோற்றுத்துறை
-திருத்தலவரலாறு:
திருச்சோற்றுத்துறையானதுசோழநாட்டுக்காவிரித்தென்கரைத்திருத்தலம். தஞ்சாவூர் - கண்டியூரிலிருந்து பேருந்து வசதி உள்ளது. அருளாளர் என்னும் அந்தணஅன்பருக்குஅட்சயபாத்திரம் அளித்துப்பஞ்சகாலத்தில்அடியார்களுக்குஅன்னமிட்டுக்காத்ததிருத்தலம். கெளதம முனிவர் தவம் செய்து முத்தி பெற்றமையால்கெளதமாஸ்ரமம் என்றும் வழங்கப்படும். இந்திரன்,சூரியன் முதலியோர் வழிபட்டு உய்ந்தனர். சூரியன் வழிபட்டசெய்தியைச்“செங்கதிரோன்வணங்கும்திருச்சோற்றுத்துறைநாதன்‘என்னும்நேரிசையால் அறியலாம். திருவையாற்றுசப்தஸ்தானத்திருத்தலங்களில் இதுவும் ஒன்று. இறைவன் பெயர் “தொலையாச்செல்வர்‘. இறைவியின் பெயர் ஒப்பிலாம்பிகை. வடமொழியில் முறையே “ஓதவனேசுவரர்', “அன்னபூரணி‘எனவும்வழங்கப்பெறுவர். தீர்த்தம் காவிரி.
கல்வெட்டு
இத்தலத்தைப்பற்றியதாகஅரசியலார் படி எடுத்த கல்வெட்டுக்கள்12;எம். எஸ். எஸ். எடுத்தன27;வி. ரங்காச்சாரியா அவர்கள் எடுத்தவை25 ஆக64 கல்வெட்டுக்கள் உள்ளன. இவை பராந்தகன்,முதலாம் இராஜராஜன்,இன்னான் என்று கணித்தறிய முடியாத கோராஜகேசரி, பரகேசரி,கோநேரின்மை கொண்டான்.'குலோத்துங்கன்காலத்தன. இவை பெரும்பாலும் சிதைவுற்றிருத்தலின்நிகழ்ச்சிகளை நன்கு அறிந்து கொள்ளக்கூட இல்லை. ஆயினும், விளக்குகளுக்காகவும்,நிவேதனத்துக்காகவும்,விழாவிற்காகவும்நிலமும்பொன்னும் அளித்த செய்திகள் குறிக்கப்பெறுகின்றன. ஒரு கல்வெட்டு நடன மாதிற்குச் சர்வ மான்யம் விட்ட செய்தியைத் தெரிவிக்கிறது. நலமல்லூர் தேவர் என்பவர்தொலையாச்செல்வருக்குவிளக்குத்தண்டு செய்ய நிலமளித்த செய்தி தெரிகிறது. கடவுள்’தொலையாச்செல்வர்'என்றும், “திருச்சோற்றுத்துறைநாயனார்‘என்றுங்குறிப்பிடப்பெறுகிறார்.
பதிக வரலாறு:
திருக்கண்டியாரைவணங்கியதிருஞானசம்பந்தப் பிள்ளையார்,வெண்ணீற்றப்பர்சோற்றுத்துறையைவணங்கத்திருவுளங்கொண்டுஎழுந்தருளுகின்றபோது,வழிநடையில், “செப்பநெஞ்சே” என்னும் திருப்பதிகத்தைஅருளிச் செய்தார்கள். இப்பதிகத்தைச் சேக்கிழார் “ஒப்பில்வண்தமிழ் மாலை'எனச்சிறப்பிக்கின்றார். இப்பதிகத்தில் “ஒளிவெண்ணீற்றப்பர்உறையும் செல்வம் உடையார்” என இறைவன் திருநாமமாகிய “தொலையாச்செல்வர்” என்பது தோற்றுவிக்கப்படுகிறது.
28. THIRU-CH-CHOTTRU-TH-THURAI
THE HISTORY OF THE PLACE
The sacred city of Thiru-ch-chottru-th-thurai is to the south of river Cauvery in Chola dominion and is accessible by bus from Thanjavoor and Kandiyoor. This holy site is where Arulaalar, a Brahmin devotee was given an akshyapaaththiram ( Uru) with which to feed the devotees during a famine. It is also known as Gowthamaasramam since Sage Gowthamar performed 'penance' here. Indhiran and Sooriyan are among those who attained salvation by offering worship here. That seng kathiron Sooriyan worshipped here may be known from the quote vanangkum Thiruchchorruththurai naathan ...". This is one of the seven 'sacred places' of Thiruvaiyaaru. The Lord's name is Tholaiyaachchelvar and that of the Goddess is Oppilaambikai. In Sanskrit they are respectively known as Odhavanesvarar and Annapoorani. The holy ford is river Cauvery.
Stone Inscriptions
Of the 64 inscriptions here, 12 have been copied by the government epigraphists, 27 by M.S.S. and 25 by V. Rangaachaariayar, M.A. These are ruling period of Paraanthakan, Raajaraajan I, and an unidentifiable king Koraajakesari Parakesari Konerinmaikondaan Kuloththungkan. Most of these are so fragmented that the events described could not be clearly known. However, they note the donation of land and One inscription informs about the gold for lamps, food offering and festivals. endowment of land as 'sarvamaanyam' for a noutch woman. A Nalamalloor Thevar gave land in order to make a lamp stand for Tholaiyaachchelvar. The God is referred to as Tholaiyaachchelvar and Thiruchchorruththruai Naayanaar.
INTRODUCTION TO THE HYMN
Having adored the Lord at Kandiyur, the saint proceeded to Thiru-ch-chottru-th- thurai. The following hymn was sung by him on his way to the holy shrine.
திருச்சிற்றம்பலம்
28.திருச்சோற்றுத்துறை
பண் : தக்கராகம்
ராகம் : காம்போதி
செப்பநெஞ்சேநெறிகொள் சிற்றின்பம்
துப்பனென்னாதருளே துணையாக
ஒப்பரொப்பர்பெருமானொளிவெண்ணீற்
றப்பாசோற்றுத்துறைசென் றடைவோமே.1
செப்பம் நெஞ்சே,நெறி கொள் சிற்றின்பம்
துப்பன்என்னாது,அருளே துணை ஆக,
ஒப்பர்ஒப்பர் பெருமான்,ஒளி வெண்நீற்று
அப்பர்,சோற்றுத்துறை சென்று அடைவோமே.
பொருள்: நடுவுநிலையுடையநெஞ்சே! முறையான சிற்றின்பத்தைத்தன்முனைப்போடு, யான் துய்ப்பேன்” என்று நினையாதேஅருளேதுணையாகக் கொண்டு நுகர்வேன்” என்றுகூறினால்,இறைவன் அதனை ஏற்பர். அத்தகையபேரருளாளர்,ஒளி பொருந்திய திருவெண்ணீறுஅணிந்தமேனியராயும்,தலைவராகவும் விளங்கும் திருச்சோற்றுத்துறையைச்சென்றடைவோம்.
குறிப்புரை: நெஞ்சே! நெறிகொள் சிற்றின்பம் துப்பன்என்னாதுஅருளேதுணையாகச்செப்பஒப்பர் என முடிவு செய்க. நெறிகொள் சிற்றின்பம் - இல்லறத்தானுக்குஓதியமுறைப்படிநுகரப்படும் சிற்றின்பம். துப்பன் - நுகர்வோன். பொறிகளான்நுகரப்படும்சிற்றின்பத்தைநுகருங்கால்தன்முனைப்பின்றிஅவனருளே துணையாக நுகர்கின்றேன் என்று புத்தி பண்ணிச் சொல்ல அவர் நம் சிறுமைகண்டுஇகழாதுஒப்புவர்என்றவாறு. ஒளிவெண்ணீற்று அப்பர்'என்பது தொலையாச்செல்வர் என்னும் இறைவன் திருநாமத்தைநினைவூட்டியது. தொலையாச் செல்வம் - விபூதி (திருநீறு. ஒப்பர்ஒப்பர்என்பதற்குத்தமக்குத்தாமே ஒப்பு ஆனவர் என்றும் உரை காண்பர். துய்ப்பன் என்ற சொல்லானதுதுப்பன்என நின்றது. துப்பு என்பது பெயர்ச்சொல்லாயின் உணவு,வலிமை என்ற பொருள் தரும். துப்பு என்பது வினைச்சொல்லாயில் எச்சில் முதலியவைகளைத் துப்புதல் என்ற பொருள் தரும்.
O! Heart! Do not say that I will enjoy the earthly pleasures on my own accord; say that by god's grace, I am able to enjoy it. If you say thus, God will admit it. This Supreme Lord Civan smears on His body the bright holy ashes and abides in Thiru-ch- chottru-th-thurai as its Chief. Let us reach this place and worship Him.
Note: Dharma, wealth, love life and liberation are the four ordained goals of life. Married felicity is not to be condemned. However, they that enjoy this, should remember with gratitude that it is a boon vouched by His Grace.
பாலுநெய்யுந்தயிரும்பயின்றாடித்
தோலுநூலுந்துதைந்தவரைமார்பர்
மாலுஞ் சோலை புடைசூழ்மடமஞ்ஞை
ஆலுஞ்சோற்றுத்துறைசென் றடைவோமே.2
பாலும்நெய்யும்தயிரும் பயின்று ஆடி,
தோலும்நூலும்துதைந்தவரைமார்பர்,
மாலும் சோலை புடை சூழ் மட. மஞ்ஞை
ஆலும்சோற்றுத்துறை சென்று அடைவோமே.
பொருள்: சிவபிரான் பாலையும்நெய்யையும்தயிரையும்விரும்பியாடுபவர். புலித்தோலும்முப்புரிநூலும் பொருந்திய மலைபோன்று விரிந்த மார்பினராய்விளங்குபவர். அத்தகையசிவபிரான் எழுந்தருளியிருக்கும்திருச்சோற்றுத்துறையானதுமயக்கும்சோலைகளால்சூழப்பெற்றதும்,இளமயில்கள்ஆரவாரிக்கும்இடங்களைக்கொண்டதுமாகும். அத்தகையதிருச்சோற்றுத்துறையைச்சென்றடைவோம்.
குறிப்புரை: பாலும்நெய்யும்தயிரும் ஆடி என்றது. பஞ்சகவ்யங்களில் தனித்தனியாக இறைவனுக்கு அபிஷேகிக்கத்தக்கனஇம்மூன்றுமேஎனக்குறித்தபடி. தோல் - புலித்தோல்,மான் தோலுமாம். மாலும் - மயக்கும். ஆலும் - ஒலிக்கும்.
Lord Civan loves to be ablution by milk, ghee and curd (the three products of cow out of five). He wears on His hill like broad chest the sacred thread to which a small piece of deer skin is fastened. Civan is enshrined in Thiru-ch-chottru-th-thurai which is surrounded by enchanting groves, wherein young peacocks stroll majestically growling a peculiar sound called Ahavuthal (). Let us reach this Thiru-ch- chottru-th-thurai and pay obeisance to Lord Civan enshrined therein.
Note: The snippet of deer - skin attached to the sacred thread is an indication of authenticity. When a person is duly invested with the sacred thread, the priest fastens a snippet of deer skin to the sacred thread. If the word “Thol” is taken as referring to the tiger skin, then it conveys the meaning that the waist of Lord Civa is covered with the tiger skin.
செய்யர் செய்ய சடையர்விடையூர்வர்
கொள் வேலர்கழலர்கரிகாடர்
தையலாளொர்பாகமாயவெம்
ஐயர் சோற்றுத்துறைசென்றடைவோமே.
செய்யர்,செய்யசடையர்,விடை ஊர்வர்,
கை கொள் வேலர்,கழலர்,கரிகாடர்,
தையலாள்ஓர்பாகம்ஆயஎம்
ஐயர்,சோற்றுத்துறை சென்று அடைவோமே.
பொருள்: சிவபிரான் சிவந்த மேனியர்;செம்மை நிறம் உடைய சடைமுடியினர்;விடை ஊர்ந்து வருபவர்;கையில் பற்றிய சூலத்தவர்;வீரக்கழல்அணிந்தவர்;இடுகாட்டில்விளங்குபவர்;உமையம்மையைத்தம்மேனியில்ஒருகூறாகக் கொண்டவர். இவ்வளவு சிறப்புக்களைக்கொண்டவராயும்,எம்தலைவராயும் உள்ள சிவபிரான் எழுந்தருளியுள்ளதிருச்சோற்றுத்துறையைச்சென்றடைவோம்.
குறிப்புரை: வேல் - சூலம். கரிகாடர் - சுடுகாட்டில் நடிப்பவர். ஐயர் - தலைவர். கழலர் - வீரக்கழலைஉடையவர்.
The complexion of Lord Civan's body frame is bright red colour. His matted hair is also of the same red colour. He rides the Bull. In one of His hands He holds the war weapon Trisool (f). He wears (in His ankle) the anklet of heroism and dances in the burning ground. He embeds His consort Umaa Devi in the left half of His body. He is our Supreme Chief. Let us reach Thiru-ch-chottru-th-thurai where he is enshrined and offer worship to Him.
பிணிகொளாக்கையொழியப்பிறப்புளீர்
துணிகொள்போரார்துளங்குமழுவாளர்
மணிகொள்கண்டர்மேயவார்பொழில்
அணிகொள்சோற்றுத்துறைசென் றடைவோமே.4
பிணி கொள் ஆக்கை ஒழியப்,பிறப்புஉளீர்!
துணி கொள் போரார்,துளங்கும்மழுவாளர்,
மணி கொள் கண்டர்,மேயவார்பொழில்
அணி கொள் சோற்றுத்துறை சென்று அடைவோமே.
பொருள்: நோய்களுக்குஇடமான இந்த உடலுடன் பிறத்தல் ஒழியுமாறுஇந்தப்பிறப்பையேபயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை உடைய அறிவுடையஞானிகளே! சிவபிரான், துணித்தலைச்செய்வதும்,போர் செய்வதற்கு உரியதாகவிளங்குவதும் ஆகிய மழுஆயுதத்தைக் கையில் ஏந்தியுள்ளார். அவர் நீலமணி போன்ற கழுத்தை உடையவர் அவ்வகைப்பட்ட சிவபெருமான் விருப்பமுடன்எழுந்தருளியுள்ள நீண்ட பொழில்கள்சூழ்ந்தஅழகியதிருச்சோற்றுத்துறையைச்சென்றடைந்து அவரை வழிபடுவோமாக.
குறிப்புரை: பிணிகொள் ஆக்கை - நோயுற்ற உடல். பிறப்புளீர் - நோயுற்றஇவ்வுடல் ஒழிக்க எடுத்த இப்பிறவியையே பயன்படுத்தும் ஞானிகளே!
O! Companions! This human frame is subject to all sorts of diseases. You learned savants! You would therefore wish to get rid of the cycle of birth, and death for which this human birth has been taken. Go and reach Thiru-ch-chottru-th-thurai where Lord Civan is enshrined and offer worship to Him. This is the only way to achieve your object. Lord Civan does daring acts. He holds in one of His hands the war weapon Mazhu (). His neck is of dark blue in colour, resembling a sapphire, I repeat, let us go and reach Thiru-ch-chottru-th-thurai and offer worship to Lord Civan enshrined therein, to get rid of our cycle of births and deaths.
பிறையுமரவும்புனலுஞ்சடைவைத்து
மறையு மோதி மயானமிடமாக
உறையுஞ்செல்வமுடையார் காவிரி
அறையுஞ்சோற்றுத்துறைசென்றடைவோமே.
பிறையும்அரவும்புனலும் சடை வைத்து,
மறையும்ஓதி,மயானம் இடம்ஆக
உறையும் செல்வம் உடையார். காவிரி
அறையும் சோற்றுத்துறை சென்று அடைவோமே.
பொருள்:சிவபிரான்,இளம்பிறையையும்பாம்பையும்கங்கையையும்சடையில்அணிந்துகொண்டுள்ளார். அவர் நான்கு மறைகளைஓதிக்கொண்டுள்ளார். வீடுபேறாகியசெல்வத்தைத் தம்மிடம் கொண்டுள்ளசிவபிரான் விரும்பித் தங்கியுள்ளஇடமாகிய காவிரி நீர் ஒலி செய்யும் திருச்சோற்றுத்துறை சென்று அடைவோம்.அவர்மயானதில்விளங்குபவர். மகாப்பிரளயஊழிக்காலத்தில்அனைத்தும்அவனிடத்தில்ஒடுங்கும். . மீண்டும் பிரபஞ்சம் உற்பத்தி தொடங்கும் காலம்வரைசிவன்ஒருவரேதனித்தன்மையாகவிளங்குவார். இதை உருவகமாக, ’சிவன் மயானத்தில்உறைகிறார்” என்றுசொல்லப்படுகிறது.
குறிப்புரை: அணியல்லாத பாம்பு,மதி இவற்றைப் பூண்டு,கரிகாடுஇடமாகக்கொண்டும்,செல்வம் உடையார் என்றது சுவைபடக் கூறியது. அறையும் - மோதும்.
Lord Civan gave protection to the young crescent moon on His matted hair. Also the snake finds a place on His head. The river Ganges personified as a lady - Ganga Devi - abides on His head. He is chanting the Vedas which He had authored. He will be in sight in the burning ghat. He is the Supreme and sole owner of the priceless wealth of heavenly bliss. He abides in Thiru-ch-chottru-th-thurai where the uproaring Cauvery river flows. Let us go and reach this place and offer worship to Lord Civan enshrined therein!
Note: At the time of final great deluge, the entire universe undergoes Involution. Nothing exists in the universe then, except Lord Civan. He is the sole entity in the universe until the Evolution starts again. This event is metaphorically described as "Lord Civan living in the crematory ground".
துடிகளோடுமுழவம்விம்மவே
பொடிகள்பூசிப்புறங்காடரங்காகப்
படிகொள் பாணி பாடல் பயின்றாடும்
அடிகொள்சோற்றுத்துறைசென் றடைவோமே.6
துடிகளோடுமுழவம்விம்மவே,
பொடிகள் பூசி புறங்காடுஅரங்குஆக,
படி கொள் பாணி பாடல் பயின்று ஆடும்
அடி கொள் சோற்றுத்துறை சென்று அடைவோமே.
பொருள்:சிவபெருமானுடைய நிலை இப்பாடலில் கூறப்படுகிறது. சிவபெருமான் தம் மேனிமீதுதிருநீற்றுப் பொடி பூசிக் காட்டி தருகிறார். அவர்,புறங்காடாகியசுடுகாட்டைஅரங்காகக் கொண்டு) பொருத்தமான தாளச்சதிகளோடுபாடல்கள் பாடி ஆடுறார். அவருடைய ஆடலுக்குப் பொருத்தமாக உடுக்கைகள்பலவற்றோடு,முழவங்கள்ஒலிக்கின்றன. இவ்வாறான சிவபிரான் எழுந்தருளியதிருச்சோற்றுத்துறையைச்சென்றடைவோம்.
குறிப்புரை: துடி - உடுக்கை. புறங்காடு - சுடுகாடு. அரங்கு - கூத்து மேடை. பாணி - தாளம்.
Lord Civan smears His body with holy ashes. To the appropriate rhythmic beat of cymbals He sings and dances in the forum of the burning ghat to the accompaniment of small drum (Tudi ) and Muzhavam . This Lord Civan abides in Thiru- ch-chottru-th-thurai. Let us reach this place and offer worship to Lord Civan enshrined therein.
Note: Muzhavam: A kind of drum (A heroe's shoulders are often likened to the 'Muzhavam' in shape).
சாடிக் காலன் மாளத்தலைமாலை
சூடி மிக்குச்சுவண்டாய்வருவார்தாம்
பாடி யாடிப் பரவு வாருள்ளத் -
தாடி சோற்றுத்துறைசென்றடைவோமே.
சாடிக் காலன் மாளத்,தலைமாலை
சூடி,மிக்குச்சுவண்டுஆய் வருவார்,தாம்
பாடி ஆடிப்பரவுவார்உள்ளத்து
ஆடி,சோற்றுத்துறை சென்று அடைவோமே.
பொருள்: சிவபிரான் காலன் அழியுமாறுஅவனைக் காலால் உதைத்தார். தலை-மாலைகளைஅணிந்துள்ளார். பொருத்தம் உடையவராய் வருகிறார். தம்மீதுபாடல்கள் பாடி ஆடிப்பரவுவார்களுடையஉள்ளங்களில் சிவபிரான் நடனம் புரிகின்றார். அந்தசிவபிரான்எழுந்தருளியுள்ளதிருச்சோற்றுத்துறையைச்சென்றடைவோம்.
Lord Civan kicked the God of death and killed. Wearing garlands on His head He walks majestically. He merrily dances in the souls of those who hail Him by singing and dancing. Let us reach Thiru-ch-chottru-th-thurai where this Lord Civan is enshrined and offer worship to Him.
பெண்ணோர்பாகமுடையார்பிறைச்சென்னிக்
கண்ணோர்பாகங் கலந்த நுதலினார்
எண்ணாதரக்கனெடுக்கவூன்றிய
அண்ணல் சோற்றுத்துறைசென் றடைவோமே.8
பெண் ஓர்பாகம் உடையார்,பிறைச்சென்னிக்
கண் ஓர்பாகம் கலந்த நுதலினார்,
எண்ணாது அரக்கன் எடுக்க ஊன்றிய
அண்ணல்,சோற்றுத்துறை சென்று அடைவோமே.
பொருள்: சிவபிரான் உமையம்மையை ஒரு பாகமாக உடையவர் பிறை அணிந்தசென்னியர்;தமது நெற்றியில் விளங்கும் மூன்றாவது கண்ணை உடையவர். இராவணன்,பின் விளையும்தீமையைஎண்ணாது,கயிலை மலையைப் பெயர்க்க முயன்ற பொழுது, அவனுடைய முனைப்பை அடக்க தன் கால்விரலைஊன்றியதலைமைத் தன்மை உடையவர். அவ்வகைச்சிவபிரானுடையதிருச்சோற்றுத்துறையைச்சென்றடைவோம்.
குறிப்புரை: பிறைச்சென்னி - பிறையைஅணிந்த சிரம். எண்ணாது - பின்வரும் தீமையை ஆராயாமல். அண்ணல் - பெருமையிற் சிறந்தவன்.
Lord Civan has His consort Umaa Devi on the left part of His body frame. He gave protection to the moon on His head. He has a third eye on His forehead, which forms part of His body. Without realising the harmful consequences, the king of Sri Lanka, Dasakreevan (Raavana) tried to lift mount Kailas, Civan's abode. Lord Civan pressed the top of the mountain by His toe crushing the king and suppressed his audacity. This Lord, Chief Civan, abides in Thiru-ch-chottru-th-thurai where we shall go and offer worship.
தொழுவாரிருவர்துயரநீங்கவே
அழலாயோங்கியருள்கள் செய்தவன்
விழவார்மறுகில்விதியான்மிக்கவெம்
எழிலார்சோற்றுத்துறைசென் றடைவோமே.9
தொழுவார் இருவர் துயரநீங்கவே
அழல்ஆய் ஓங்கி அருள்கள் செய்தவன்,
விழவுஆர்மறுகில்விதியால் மிக்க எம்
எழில்ஆர்சோற்றுத்துறை சென்று அடைவோமே.
பொருள்: தம் செருக்கு அடங்கச்சிவபிரானாகியதம்மைத்தொழுத திருமால்,பிரமன் ஆகிய இருவருக்கும்,அழல் உருவாய் ஓங்கி நின்று அருளைச்செய்தார்.சிவபிரான் விரும்பி உறையும்திருச்சோற்றுத்துறையில்திருவிழாக்கள் மிகுதியாக நிகழும். விழாக்கள் நிகழும் வீதிகளில் வேதவிதிகளைஒழுங்காகப் பின்பற்றும் மக்கள் வாழ்கின்றார்கள். அவ்வாறு இறைவன் உறையும்திருச்சோற்றுத்துறையை நாம் சென்றடைவோம்.
குறிப்புரை: தொழுவார் இருவர் - தம் செருக்கு அடங்கித்தொழுதஅயனும்திருமாலும். மறுகு - வீதி, விதி - வேதவிதி,
Shedding their vanity Thirumaal and Brahmaa worshipped Lord Civan who stood as a tall column of fire. Later He graced them and removed their sorrow. This Lord Civan likes to dwell in Thiru-ch-chottru-th-thurai. Here, in this town people who follow the Vedic ways of life, live in streets where temple festivals are many. Let us go and reach this town and offer worship to Lord Civan who is enshrined therein.
கோது சாற்றித்திரிவாரமண்குண்டர்
ஓது மோத்தையுணராதெழுநெஞ்சே
நீதி நின்று நினைவார்வேடமாம்|
ஆதி சோற்றுத்துறைசென் றடைவோமே.10
கோது சாற்றித்திரிவார்,அமண்குண்டர்,
ஓதும்ஓத்தைஉணராது எழு,நெஞ்சே!
நீதி நின்று நினைவார்வேடம்ஆம்
ஆதி சோற்றுத்துறை சென்று அடைவோமே.
பொருள்: மனமே! குற்றங்களையேபலகாலும்சொல்லித்திரிபவராகியசமண்குண்டர்கள்ஓதுகின்ற வேதத்தை அறிய முயல வேண்டாம். சிவாகம நெறி நின்று,நினைப்பவர் கருதும் திருவுருவோடுவெளிப்பட்டருளும்முதல்வனாகியசிவபிரானதுதிருச்சோற்றுத்துறையைநாம் சென்றடைவோம்.
குறிப்புரை: கோது - குற்றம். ஓதும்ஓத்தை - ஓதுகின்றபிடக வேதத்தை. நீதி நின்று - சிவாகமநெறிக்கண் நின்று. நினைவார் வேடம் ஆம் ஆதி - தியானிப்பவர்கள்தியானித்தஉருவிற்சென்றுஅருளும்முதல்வன்.
The Samanars roam about preaching falsehood and chanting their own Vedic Texts (Peedakam ). O! Companions!! do not try to understand their utterances. People who follow the principles of Saiva Aagamaas and pray to Lord Civa will get the very vision they desire. This Lord Civan resides in Thiru-ch-chottru-th- thurai. Let us go and reach this place and offer worship to Lord Civan who is enshrined therein.
அந்தண்சோற்றுத்துறையெம்மாதியைச்
சிந்தை செய்ம்மினடியாராயினீர்
சந்தம் பரவு ஞானசம்பந்தன்
வந்த வாறே புனைதல் வழிபாடே.11
அம்தண்சோற்றுத்துறைஎம்ஆதியைச்
சிந்தை செய்ம்மின்,அடியார் ஆயினீர்!
சந்தம் பரவு ஞானசம்பந்தன்
வந்தஆறே புனைதல் வழிபாடே.
பொருள்: அடியார்களாகஉள்ளவர்களே! அழகு,தண்மை ஆகியவற்றோடு விளங்கும் திருச்சோற்றுத்துறையில்எழுந்தருளியஎம்முதல்வனாகியசிவபிரானைமனத்தால் தியானம் செய்யுங்கள். சந்தஇசையில்ஞானசம்பந்தன்பாடியஇந்தத்திருப்பதிகத்தைப் (அவர்) பிள்ளையார் பாடியவாறுபாடிப்பரவுதலேசிவபிரானுக்கு நாம் செய்யும் வழிபாடு ஆகும்.
குறிப்புரை: அடியாராகவுள்ளீர்! சோற்றுத்துறைஆதியைத்தியானியுங்கள். அதற்குரியவழிபாடாவதுஞானசம்பந்தன்திருவுள்ளத்துவந்தவாறு அமைந்த இப்பதிகத்தைப்பாடிப்புனைதலே என்பது. வந்தவாறே என்றது,இவை இறைவன் திருவுள்ளத்து நின்று உணர்த்த எழுந்த உரைகள் என்பதை விளக்கியவாறு.
O! Ye devotees!! Contemplate on the primal Lord enshrined in the cool and serene Thiru-ch-chottru-th-thurai and sing this hymn, in metrical notes as was done by Gnaanasambandan. This indeed constitutes true adoration to Lord Civan.
Note: Chhandas - Metre.
திருச்சிற்றம்பலம்
28ஆம் பதிகம் முற்றிற்று
சிவமயம்
29.திருநறையூர்ச்சித்தீச்சரம்
திருத்தலவரலாறு:
திருநறையூரச்சித்தீச்சரம் என்ற திருத்தலம்சோழநாட்டுக் காவிரி தென்கரைத் தலம் ஆகும். கும்பகோணம் நாச்சியார் கோவில் பேருந்தின் வழியே நறையூரை அடையலாம். தலத்தின்பெயர் திருநறையூர். ஆலயத்தின் பெயர் சித்தீச்சரம். சித்தர்கள்வழிபட்டுப்பேறுபெற்றஇடமாதலின்இப்பெயர் பெற்றது. இறைவன் சித்தி நாதர். அம்மை அழகம்மை. பிள்ளையார் ஆண்ட பிள்ளையார். இங்கு வழிபட்டுய்ந்தோர் குபேரன்,தேவர்கள்,கந்தருவர்கள் ஆகியோர். தீர்த்தம் பிரம தீர்த்தம். இது கோயிலுக்கு வடபால் உள்ளது. தேன்சித்தி தீர்த்தம் என்ற ஒன்றும் உள்ளது என்பார்.
கல்வெட்டு:
இத்தலத்தில்அரசியலார்படியெடுத்த கல்வெட்டுக்கள்24 உள்ளன. அவற்றுள்,முதல் இராஜராஜன் காலம் முதல் மூன்றாம் குலோத்துங்கன் காலம் வரையில் உள்ள சோழ மன்னர்களின் கல்வெட்டுக்கள்காணப்படுகின்றன. கி.பி.1118 முதல்1135 வரை ஆண்டவிக்கிரமனேஇத்தலத்தில் மிக ஈடுபாடுடையவன் என்பது தெரிகின்றது. இங்குக்குறிக்கப் பெற்ற அரசர்கள்முதலாம் இராஜராஜன்,இரண்டாம் வீரராஜேந்திரன்,முதலாம் குலோத்துங்கன்,இரண்டாம் குலோத்துங்கன்,மூன்றாம் குலோத்துங்கன்,விக்ரம சோழன்,இரண்டாம் இராஜராஜன்,இரண்டாம் இராஜாதிராஜன். இவைகளில்,இவ்வூர்க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டுத்திருநறையூர்நாட்டுத்திருநறையூர் எனவும்,அருண்மொழித்தேவவளநாட்டுத்திருநறையூர் எனவும்,விக்கிரமன், முதலாம் குலோத்துங்கன் இவர்கள் காலத்துக்குலோத்துங்கசோழவளநாட்டுத்திருநறையூர்எனவும் பஞ்சவன்மாதேவியான சதுர்வேதி மங்கலத்துத்திருநறையூர் எனவும் குறிக்கப்பெற்றுள்ளது.
சுவாமி பெயர் சித்தநாதேஸ்வரமுடைய தேவர் எனவும்,சித்தநாதேஸ்வரமுடையார் எனவும்வழங்கும். இங்குள்ள பிக்ஷாடன தேவர் சிறப்புடையார். இவருக்குத்திருநறையூர்ச்சிவப்பிராமணா்ஒருவர்30 காசு பொன்னைநிவேதனத்திற்காக அளித்தார். இங்கு வழிபாட்டிற்காக வரும் சிவயோகிகட்குஉணவுக்காகமண்ணிநாட்டுக்கருப்பூர் உடையான் ஒருவர் நிலம் விட்டார். இத்தலத்துள்ளபிடாரிக் கோயிலுக்கு நிலம் விட்ட செய்தியும்குறிக்கப்பெறுகிறது. ஏனைய கல்வெட்டுக்கள்விளக்குக்காகவும்நிவேதனத்திற்காகவும் பலர் நிலமும்பொன்னும்அளித்ததைஅறிவிக்கின்றன.
பதிக வரலாறு:
குடவாயிலைவணங்கிப் பதிகம் பாடியபிள்ளையார்’ஊருலாவு‘என்னும்நீடுதமிழ்த்தொடை புனைந்துகொண்டேவழிநடந்துதிருநறையூரை அடைந்தார்கள். இதில் நறையூர் என்பது தலத்தின்பெயராகவும்,சித்தீச்சரம் என்பது கோயிலின் பெயராகவும்குறிக்கப்பெறுகிறது.’சித்தன் சித்தீச்சரம்‘என இறைவன் திருநாமம் சித்தன் எனக்குறிக்கப்பெறுகிறது.
29. THIRU-NARAIYOOR CHITH-THEECH-CHARAM
THE HISTORY OF THE PLACE
The sacred place Thiru-naraiyoor - Chith-theech-charam is to the south of river Cauvery in Chola Naadu and can be reached by the Kumbakonam - Naachchiyaarkoyil bus. This place is known as Thirunaraiyoor and the temple is called Siddheechcharam. It got this name since Siddhars attained salvation by worshipping here. The God's name is Siddhinaathar and that of the Goddess is Azhakammai. The Vinaayakar here is known as Aanda Pillaiyaar. Kuberan, Dhevas and Gandharvas are among those who attained salvation by offering worship here. The holy ford is Birama Theerththam, which lies to the north of the temple. A Thensiddhi Theerththam is also said to exist.
Stone Inscriptions
There are 24 inscriptions here, copied by the government epigraphists. These are seen to bring to the period of the reigns of Chola monarchs from Raajaraajan I through Kuloththungkan III. Vikkiraman, who ruled from 1118 to 1135 CE, is seen to be the king with the utmost interest in this temple. The inscriptions refer to the kings, Raajaraajan I, Veera Raajendhiran II. This site is named variously as: Thirunaraiyoor of Thirunaraiyoor Naadu in Kshaththiriya Sikaamani Valanaadu, Thirunaraiyoor of Arunmozhiththeva Valanaadu, Thirunaraiyoor of Kuloththungka Chola Valanaadu during the reign of Vikkiraman and Kuloththungkan I, Thirunaraiyoor of Chathurvedhi Mangkalam in Panchavan Maadhevi.
The Lord's name is given as Siddhanaathesvaramudaiya Thevar and Siddhanaathesvaramudaiyaar. The Bhikshaatana Thevar here is of special importance. A Sivappiraamanar gifted 30 gold 'kaasu' for food offering to this deity. A Udaiyaan of Karuppoor in Manni Naadu gave land for feeding Sivayogis who come to offer worship here. The gift of land to the Pidaari temple here is also noted. Other inscriptions give information on the gift of lands and gold by many for lamps and food offering.
INTRODUCTION TO THE HYMN
The saint hailed the Lord at Kudavaayil. Then, he proceeded to Naraiyoor - Chith-theech-charam.
திருச்சிற்றம்பலம்
29.நறையூர்ச்சித்தீச்சரம்
பண் : தக்கராகம்
ராகம் : காம்போதி
ஊருலாவுபலிகொண்டுலகேத்த
நீருலாவுநிமிர்புன்சடையண்ணல்
சீருலாவுமறையோர்நறையூரில்
சேருஞ்சித்தீச்சரஞ்சென் றடைநெஞ்சே.1
ஊர் உலாவு பலி கொண்டு உலகு ஏத்த
நீர் உலாவு நிமிர் புன்சடை அண்ணல்,
சீர் உலாவு மறையோர்நறையூரில்
சேரும் சித்தீச்சரம் சென்று அடை - நெஞ்சே!
பொருள்: என்னுடைய நெஞ்சே!சிவபிரான்,ஊர்கள்தோறும்உலாவுவதால் கிடைக்கும் உணவைப்பெற்றுக்கொள்கிறார். உலக மக்கள் போற்றி வழிபடக்கங்கைநீரைத் தம்திருமுடியில்ஏற்றுள்ளார். கங்கை நீர் உலாவுகின்றதிருமுடியானதுமேல்நோக்கிய சிவந்த முடியாக உள்ளது. திருநறையூரில் விளங்கும் சித்தீச்சரத்தல்தலைமைத்தன்மையுள்ளசிவபிரான் எழுந்தருளி இருக்கிறார். அந்த நகரில்சீருடையமறையவர்கள்வாழ்கின்றனர். இவற்றை உணர்ந்து நெஞ்சேதிருநறையூர்ச்சித்தீச்சரத்தைச்சென்றடைவாயாக.
குறிப்புரை: இப்பதிகம் நெஞ்சை நோக்கிச்சித்தீச்சரம்சென்றடை;சிந்தி;தெளி என்று அறிவுறுத்தியது. ஊர் உலாவு பலிகொண்டு - ஊரின்கண்உலாவுதலைச் செய்து பிச்சையேற்று. உலாவு என்பது முதனிலைத் தொழிற்பெயர். தலப் பெயர் நறையூர்;கோயிற் பெயர் சித்தீச்சரம்.
Lord Civan who gave protection to the river Ganges on His head is hailed by all the world. His matted hair is upraised and ruddy. He goes about begging for food in all towns. He is our Chief. O! Heart!! Go and reach Naraiyoor where He abides in the Chith-theech-charam temple and offer worship. In this town Vedic scholars abide in good numbers.
Note: Civan in this shrine is known as Siddhan. Vide verse 11, Eecchuram means shrine.
காடு நாடுங்கலக்கப்பலிநண்ணி
ஓடு கங்கை யொளிர்புன்சடைதாழ
வீடு மாகமறையோர்நறையூரில்
நீடுஞ்சித்தீச்சரமேநினைநெஞ்சே.
காடும்நாடும்கலக்கப் பலி நண்ணி,
ஓடு கங்கை ஒளிர்புன்சடை தாழ,
வீடும் ஆக மறையோர்நறையூரில்,
நீடும்சித்தீச்சரமே நினை - நெஞ்சே.
பொருள்: நெஞ்சே! சிவபிரான்,காட்டின்௧ண் முனிவர் குடில்களிலும்,நாட்டின்கண்இல்லறத்தார்வீடுகளிலும்விரும்பிப் பலி ஏற்கிறார். ஓடிவரும் கங்கை தங்கிய ஒளிவீசும்சிவந்த சடைகள்தாழக் காட்டி அருளுகிறார். வினைவயத்தால் வந்த உடலைவிடுத்து, முத்திப்பேற்றை அடைய விரும்பும்அந்தணர்கள்திருநறையூரில்வாழ்கின்றனர்.அவ்வகைப்பட்டதிருநறையூரில்புகழால்நீடியசித்சீச்சரத்தில் விளங்கும் பெருமானைநினைவாயாக.
குறிப்புரை: காடும்நாடும் கலக்க - காட்டிடமும்,நாடும்தம்முட் கலக்க. ஆகம்வீடும்மறையோர்எனக்கூட்டிவினைவயத்தான் வந்த உடலைவிட்டுமுத்தியெய்தும்அந்தணா்எனப் பொருள் கொள்க.
The rushing river Ganges dashes against the ruddy and radiant matted hair of Lord Civan bending it downwards. This Lord Civan goes about begging both in the cottages of sages living in the forests and in the houses of family people living in towns. In the town Naraiyoor - Chith-theech-charam, Vedic scholars who want to shed their worldly attachment and their physical body with an aim to attain heavenly bliss are living in good numbers. O! Heart!! Contemplate on Naraiyoor - Chith-theech-charam where Lord Civan abides.
கல்வி யாளர்கனகம்மழன்மேனி
புல்கு கங்கை புரிபுன்சடையானூர்
மல்கு திங்கட்பொழில்சூழ்நறையூரில்
செல்வர்சித்தீச்சரஞ்சென் றடைநெஞ்சே.3
கல்வியாளர் கனகம் அழல் மேனி
புல்கு கங்கை புரி புன்சடையான் ஊர்,
மல்கு திங்கள் பொழில் சூழ்,நறையூரில்
செல்வர்சித்தீச்சரம் சென்று அடை - நெஞ்சே!
பொருள்: என்னுடைய நெஞ்சமே! திருநறையூர்பொன்னையும்தீயையும் ஒத்த திருமேனியைஉடையசிவபிரானுடைய ஊர். அந்தச் சிவபிரான் கங்கை தங்கும் முறுக்கேறிய சிவந்த சடையினைஉடையவராய் விளங்குகிறார். மேலும்,திருநறையூர்கல்வியாளர் நிறைந்ததாய்விளங்குகிறது.திங்கள் தங்கும் பொழில்கள்சூழ்ந்ததாய்விளங்குகிறது. அவ்வூரில்செல்வர்வணங்கும்சித்தச்சரத்தைச்சென்றடைவாயாக.
குறிப்புரை: கனகம்அழன்மேனி - பொன்னையும்தீயையும் ஒத்த திருமேனி. கல்வியாளர் மல்கும்நறையூர் என இயைக்க.
Lord Civan's bodily frame is bright as Fire and Gold. His matted hair is twisted and ruddy where rests the Ganges river. He belongs to Naraiyoor - Chith-theech- charam. Vedic scholars are living in this town. It is surrounded by groves full of tall trees where the moon crawls through. O! Heart!! Go and reach Chith-theech-charam temple in the town of Naraiyoor where affluent people are worshipping Lord Civan of this temple.
நீட வல்ல நிமிர்புன்சடைதாழ
ஆட வல்ல வடிகளிடமாகும்
பாடல் வண்டு பயிலு நறையூரில்
சேடர்சித்தீச்சரமே தெளிநெஞ்சே.4
நீட வல்ல நிமிர் புன்சடை தாழ
ஆட வல்ல அடிகள் இடம் ஆகும்,
பாடல் வண்டு பயிலும்நறையூரில்
சேடர்சித்தீச்சரமே தெளி - நெஞ்சே!
பொருள்: நெஞ்சே! சிவபிரான் மேல்நோக்கி நீண்டு வளரவல்லசெஞ்சடைகள்தாழுமாறுஆடுதலில் வல்ல அடிகள் ஆவார். திருநறையூரில்பாடுதலில் வல்ல வண்டுகள் நிறைந்து வாழும் வளமான சோலைகள் உள்ளன. அவ்வகைப்பட்டதிருநறையூரில் சிவபிரான் விரும்பி உறைகிறார். அங்கு சித்தீச்சரத்தைத்தெளிவாயாக.
குறிப்புரை: நீடவல்ல - மிகமேலும்வளரவல்ல. சேடர் - பெருமை உடையவர்.
Lord Civan's matted ruddy hair normally grows upwards and will stand erect. But it now hangs downwards even as He dances skillfully. In the lush gardens of Naraiyoor the bees proficient in music are living in good numbers. O! Heart!! Be clear in your mind about Lord Civan enshrined in nobility filled Chith-theech-charam temple.
Note: The Tamil word "Theli" is a verb. The noun form of this word is 'Thelivu'. 'Thelivu' is Nitchaya Buddhi; It is clarified consciousness. Thelivu leads to Civa- Gnaanam (Godly Knowledge).
உம்பராலுமுலகின்னவராலும்
தம்பெருமையளத்தற்கரியானூர்
நண்புலாவுமறையோர்நறையூரில்
செம்பொன் சித்தீச்சரமேதெளிநெஞ்சே. .5
உம்பராலும்உலகின்(ன்) அவராலும்
தம் பெருமை அளத்தற்குஅரியான் ஊர்,
நம்பு உலாவும்மறையோர்நறையூரில்
செம்பொன் சித்தீச்சரமே தெளி - நெஞ்சே!
பொருள்: நெஞ்சே! சிவபிரான் தேவர்களாலும்,உலகிடை வாழும் மக்களாலும் தனது பெருமை அளவிட்டுக்கூறுதற்குஅரியவர். அவருடைய ஊர்திருநறையூர். அங்கு நட்புத்தன்மையில் மேம்பட்ட மறையவர்கள்வாழுகின்றனர். அந்தத் திருநறையூரில்,சிவபிரான் எழுந்தருளிய செம்பொன் மயமானசித்தீச்சரத்தையேதெளிவாயாக.
குறிப்புரை: உம்பர் - தேவர். உலகின்னவர் - மக்கள். உம்பர்கள்மலத்தான்மறைப்புண்டுஇன்பத்துள்மயங்கி இறைவனை மறந்து,தம் பெருமை ஒன்றையே நினைத்திருப்பவராதலின் அவர்களால் இவன் பெருமை அளக்கமுடியாததாயிற்று;மக்கள் மலத்தான்கட்டுண்டு ஆன்ம போதமிக்கிருத்தலின்மக்களால் அளக்கமுடியாததாயிற்று.
Devas as well as people living in this world could not comprehend, elucidate or codify the glory of Lord Civan. Vedic scholars who are having high companionship feelings are living in good number in Naraiyoor. In such a place Lord Civan manifests Himself in the dazzling golden atmosphere of the Chith-theech-charam temple. O! Heart!! Stand clear in your mind about Chith-theech-charam where Lord Civan abides.
Note: The first word of the third line (in Tamil verse) is nambu. According to Panditha Vidwan T.V. Gopala Iyer, the word used by other editors is 'natpu' (friendship, friendliness). Nambu means love/desire.
கூருலாவுபடையான்விடையேறி
போருலாவுமழுவானனலாடி
பேருலாவுபெருமானறையூரில்
சேருஞ்சித்தீச்சரமே யிடமாமே.6
கூர் உலாவு படையான்,விடை ஏறி,
போர் உலாவு மழுவான்,அனல்ஆடி,
பேர் உலாவு பெருமான்,நறையூரில்
சேரும் சித்தீச்சரசமே இடம் ஆமே.
பொருள்: சிவபிரான்,கூர்மைமிக்கசூலப்படையை உடையவன். அவன் விடைமீதுஏறிப்போருக்குப் பயன்படும் மழுவாயுதத்தைஏந்தியுள்ளான். அனல்மீதுநின்றாடுகிறான். ஏழுலகிலும்தன்புகழ் விளங்க நிற்கிறான். பெருமைமிக்கஅந்தச்சிவபிரான்திருநறையூரில்விளங்கும் சித்தீச்சரமே நாம் வழிபடுவதற்குரியஇடமாகும்.
குறிப்புரை: கூர் உலாவு படை - கூர்மை மிக்க சூலப்படை. பேர் - புகழ். நறையூரில் சேரும் இடம் சித்தீச்சரம் ஆம் எனக்கூட்டுக.
Lord Civan rides the Bull. He holds in His hand the sharp trident. He also holds the war weapon Mazhu in another hand. He dances in the fire. He is hailed in all the seven worlds. He abides in Naraiyoor - Chith-theech-charam temple which is verily the right place for worship.
அன்றி நின்ற வவுணா்புரமெய்த
வென்றிவில்லிவிமலன்விரும்புமூர்
மன்றில்வாசமணமார்நறையூரில்
சென்று சித்தீச்சரமேதெளிநெஞ்சே.
அன்றி நின்ற அவுணர் புரம் எய்த
வென்றிவில்லிவிமலன்விரும்பும் ஊர்,
மன்றில்வாச மணம் ஆர்நறையூரில்
சென்று சித்தீச்சரமே தெளி - நெஞ்சே!
பொருள்: நெஞ்சே! சிவபெருமான் தன்னோடு வேறுபட்டு நிற்கும் அவுணர்களின்முப்புரங்களையும்எய்தழித்தவன். அந்த வெற்றியோடு கூடிய வில்லை உடையவன். குற்றமற்றவன். அவன் விரும்பும் ஊர் திருநறையூர். அது மணம் நிலைபெற்று வீசும் பொது மன்றங்களை உடையது. திருநறையூருக்குச் சென்று,அங்குப் பெருமான் எழுந்தருளியசித்தீச்சரத்தைத் தெளிந்து வழிபடுக.
குறிப்புரை: அன்றி - வேறுபட்டு. மன்றில் - பொதுச்சபைகளில்.
Lord Civan is Vimalan (embodiment of purity and blemishless state). He with His victorious bow destroyed the three citadels of the die-hard Asuraas who differ from Civan's concepts. This Lord Civan loves to abide in the temple Chith- theech-charam in the town of Naraiyoor where fragrance pervades permanently in the public forum.
Note: Vimalan - the One who is free for ever from three 'malams'.
அரக்கனாண்மையழியவரைதன்னால்
நெருக்கவூன்றும்விரலான்விரும்புமூர்
பரக்குங் கீர்த்தி யுடையார்நறையூரில்
திருக்கொள்சித்தீச்சரமே தெளிநெஞ்சே.8
அரக்கன் ஆண்மை அழிய வரை தன்னால்
நெருக்கஊன்றும்விரலான்விரும்பும் ஊர்,
பரக்கும் கீர்த்தி உடையார்,நறையூரில்-
திருக் கொள் சித்தீச்சரமே தெளி - நெஞ்சே!
பொருள்: நெஞ்சே! சிவபிரான் இராவணனுடைய வலிமை கெடுமாறுகால்விரலை ஊன்றி கயிலை மலையால்அடர்த்தவன். அவன் விரும்புவதும்,பரவிய புகழார்வாழ்வதும் ஆகியதிருநறையூரில் விளங்கும் சிவபிரானதுசித்தீச்சரத்தைத்தெளிவாயாக.
குறிப்புரை: பரக்குங்கீர்த்தி - மேலும் மேலும் பரவும் புகழ். திரு - சிவஞானம்.
Lord Civan has that strong toe by which He pressed the top of mount Kailas and destroyed the valour of the king of Sri Lanka. This Lord Civan gracefully manifests Himself in the temple Chith-theech-charam situated in Naraiyoor where famed people are living in good numbers. O! Heart!! Go into the details of the glory of Lord Civan enshrined therein.
ஆழி யானுமலரினுறைவானும்
ஊழி நாடி யுணரார்திரிந்துமேல்
சூழுநேடவெரியாமொருவன்சீர்
நீழல்சித்தீச்சரமே நினைநெஞ்சே.9
ஆழியானும்அலரின்உறைவானும்
ஊழி நாடி உணரார் திரிந்து,மேல்
சூழும்நேட,எரி ஆம் ஒருவன் சீர்
நீழல்சித்தீச்சரமே.நினை - நெஞ்சே!
பொருள்: நெஞ்சே! சக்கராயுதத்தை உடைய திருமாலும்,மலரின் மேல் உறையும்நான்முகனும்சிவபிரானைஉணரவில்லை. ஓர் ஊழிக்காலம் அளவும்திரிந்தனர். சுற்றும் முற்றும் மேலும் கீழுமாய்த்தேடினர். சிவபிரான் எரியுருவாய் ஓங்கி நின்றார். அவருடையசிறப்புமிக்க இடமாகியதிருநறையூர்ச்சித்தீச்சசத்தைநினைவாய்.
குறிப்புரை: ஊழி நாடி - ஓரூழிக்காலம் தேடி என்றது நீண்ட காலம் தேடியும் என்று அவர்கள் முயற்சியின் பயனற்ற தன்மையைவிளக்கியவாறு. சூழும் - சுற்றிலும். நேட - தேட.
Both Thirumaal who wields the circular weapon and Brahmaa who is seated on the Lotus flower were unable to contemplate on (make out) Lord Civa, who stood as a big and tall column of fire, in spite of their serious search for aeon over the sky and down the earth. This Lord Civan manifests Himself in the highly glorious temple of Chith-theech-charam in Naraiyoor. O! Heart!! Think of Lord Civan of this hallowed place and meditate on Him.
மெய்யின்மாசர்விரிநுண்டுகிலிலார்
கையிலுண்டுகழறுமுரைகொள்ளேல்
உய்ய வேண்டி லிறைவன்னறையூரில்
செய்யுஞ்சித்தீச்சரமேதவமாமே.
மெய்யின்மாசர் விரி நுண்துகில்இலார்,
கையில் உண்டு கழறும் உரை கொள்ளேல்!
உய்யவேண்டில் இறைவன் நறையூரில்
செய்யும் சித்தீச்சரமே தவம் ஆமே.
பொருள்: சமணர்கள் உடம்பில் அழுக்கு உடையவர்கள். விரித்துக் கட்டும் நுண்ணிய ஆடைகளைஅணியாதவர்கள். கைகளில் பலியேற்று உண்டு திரிபவர்கள். அவர்கள் இடித்துக்கூறும்உரைகளைக்கொள்ளாதீர். நீர் இப்பிறப்பில்உய்திபெற விரும்பினால் சிவபிரான் எழுந்தருளியதிருநறையூரில்செய்தமைத்த€சித்தீச்சரத்தைச் சென்று வழிபடுமின். அதுவே சிறந்த தவமாம்.
குறிப்புரை: மாசர் - அழுக்குடையவர். துகிலிலார் - திகம்பரர். சித்தீச்சரமேதவமாம் செய்யும் எனக்கூட்டுக.
Ye companions! Do not listen to the vigorous preaching of Samanars who roam about with dirt on their body and without any proper dress. They move about begging for alms, receive the food in their hands and eat it. If you aspire to have salvation in this very birth itself, go to Chith-theech-charam in Naraiyoor and worship Lord Civan who manifests Himself there. This indeed is the right penance one can do.
மெய்த்துலாவுமறையோர்நறையூரில்
சித்தன் சித்தீச்சரத்தையுயர்காழி
அத்தன் பாதமணிஞானசம்பந்தன்
பத்தும்பாடப்பறையும் பாவமே.11
மெய்த்துஉலாவும்மறையோர்நறையூரில்
சித்தன் சித்தீச்சரத்தை உயர் காழி
அத்தன் பாதம் அணி ஞானசம்பந்தன்
பத்தும்பாடப்,பறையும்பாவமே.
பொருள்:திருநறையூரில்வாய்மையே பேச வாழும் மறையவர்கள் இருக்கிறார்கள். அங்குச்சித்தன் என்ற திருநாமத்தோடு சிவபிரான் விளங்குகிறார். மேலான காழிமாநகரில் விளங்கும் சிவபபிரானுடையதிருப்பாதங்களைத் தமது திருமுடிக்குஅணியாகக் கொண்ட ஞானசம்பந்தன்மேலானசித்தீச்சரத்தைப்பாடியஇத்திருப்பதிகப்பாடல்கள்பத்தையும்பாடிப்பரவினால்பாவங்கள்நீங்கும்.
குறிப்புரை: மெய்த்து - உண்மையான வாழ்வுடன். உண்மை கூறி என்றுமாம். சித்தன் இத்தலத்துஇறைவன் திருநாமம். காழியத்தன் பாதம் அணி ஞானசம்பந்தன் - சீகாழியில்தோணியப்பரது திருவடி ஞானம் பெற்ற சம்பந்தன்.
Vedic scholars who are morally upright who never cheat, lie or break the law are living in Naraiyoor. The Lord's name in this place is known as Chith-than . Gnaanasambandan bears, as a gem-wear for his head, the Holy Feet of Lord Civan, who manifests Himself in the glorious Seekaazhi temple. Those who can chant these ten verses of Thiru Gnaanasambandan and pay obeisance to Lord Civan can get rid of their sins.
Note: Siddhan (Siddhaa in Sanskrit): Civa is the siddhas par excellence - vide Ellaam Valla Siddharaana Patalam" in his Thiru-Vilaiyaadal-Puraanam by Paranjothi Munivar.
29ஆம் பதிகம் முற்றிற்று
30.திருப்புகலி
திருத்தலவரலாறு:
முதல் பதிகம் பார்க்க.
30. THIRU-P-PUKALI
THE HISTORY OF THE PLACE
See First Hymn.
INTRODUCTION TO THE HYMN
Maark-kandeyar was born of Mrikandu ascetic and his wife Maruthu-vathi . He came to know from his parents that his life period was only sixteen years. As a staunch devotee of Lord Civan, he used to perform severe penance and prayer regularly everyday. On the appointed day of the end of his life, he performed his routine worship of Lord Civan without caring for his fate. Yamaa came to snatch away Maarkandeyar's life (as per his fate) and threw the special rope known as Paasa-k-kayir at him. It fell over the Civa Lingam. The Civa Lingam burstout and Lord Civa came out of it and kicked Yaman to death. Also He graced Maarkandeyar with a boon that he will live forever without ageing beyond the level of 16 years.
திருச்சிற்றம்பலம்
30.திருப்புகலி
பண் : தக்கராகம்
ராகம் : காம்போதி
விதியாய்விளைவாய்விளைவின்பயனாகிக்
கொதியாவருகூற்றையுதைத்தவர்சேரும்
பதியாவதுபங்கயநின்றலரத்தேன்
பொதியார்பொழில்சூழ்புகலிந்நகர்தானே.
விதிஆய்,விளைவுஆய்,விளைவின்பயன்ஆகிக்,
கொதியாவருகூற்றைஉதைத்தவர் சேரும்
பதிஆவது-பங்கயம் நின்று அலரத் தேன்
பொதிஆர்பொழில் சூழ் புகலி(ந்) நகர்தானே.
பொருள்: மார்க்கண்டேயருக்கு வயது பதினாறு என்பது விதித்த விதியாக இருந்தது. அதன் காரணமாக மரணநேரம்நெருங்கியது. அவர் இறைவழிபாடுசெய்ததன் காரணமாக, விதியின் பயனாய்ச்சிவபிரான் தானே வெளிப்பட்டார். வெளிப்பட்டுமார்க்கண்டேயரைஇழுத்துச்செல்லச் சினந்து வந்த கூற்றுவனை உதைத்து அருளினார். அவ்வகைப்பட்டசிவபிரான் எழுந்தருளிய தலம் திருப்புகலி. அந்தத் தலம் தாமரை மலர்கள் மலர்ந்த நீர் நிலைகளும்,தேன் கூடுகள் நிறைந்த பொழில்களும்சூழ்ந்தது ஆகும்.
குறிப்புரை: இது கூற்றுதைத்தார்பதியாவதுபுகலிநகர்என்கின்றது. விதியாய் - மார்க்கண்டற்கு வயது பதினாறு என்ற விதியாய். விளைவாய் - அவ்விதியின்விளைவாகியமரணமாய். விளைவின் பயன் ஆகி -மரணத்தின்பயனாகித் தான் வெளிப்பட்டு. கொதியா - சினந்து. கொதியாவருகூற்றைஉதைத்தவர்என்றது,இங்ஙனம் விதியென்னும்நியதியைத்துணைபற்றி வந்த கூற்றுவன்அந்நியதிக்கும் காரணம் இறைவன் என்பதை உணர்ந்துகொள்ள வைத்த பெருங்கருணை.
The fate for Maarkandeyar was only 16 years of life on this earth. As theoutcome of this fate, Yaman came to snatch away his life. Ultimately Lord Civan appeared and kicked Yaman, who came driven or impelled by soaring wrath, to cause death. This Lord Civan manifests Himself in Thiru-p-pukali. This city is surrounded by pools full of bloomed lotus flowers as well as forests full of blue lilies.
Note: Maarkandeyar was destined to live for only sixteen years. Yaman came to snatch his life at the ordained hour. The boy lived a life of total surrender unto Civan. Yet, Yaman proceeded to act undaunted. This ended in the death of Death.
ஒன்னார்புரமூன்றுமெரித்தவொருவன்
மின்னாரிடையாளொடுங்கூடியவேடந்
தன்னாலுறைவாவதுதண்கடல்சூழ்ந்த
பொன்னார்வயற்பூம்புகலிந் நகர்தானே.2
ஒன்னார் புரம் முன்றும் எரித்த ஒருவன்
மின்ஆர்இடையாளொடும் கூடிய வேடம்-
தன்னால் உறைவுஆவது-தண்கடல்சூழ்ந்த
பொன் ஆர் வயல் பூம்புகலி(ந்) நகர் தானே.
பொருள்: சிவபிரான்,பகைவராய் மாறிய அசுரர்களின்முப்புரங்களையும் எரித்து அழித்தார். மின்னல் போன்ற இடையினை உடைய உமையன்னையோடுகூடியவர். அவர் அன்னை உமையோடு சேர்ந்த திருவுருவாய்எழுந்தருளிய இடம் திருப்புகலியாகும். அந்தத் தலம் குளிர்ந்த கடல் ஒரு புறம் சூழ,பொன் போன்ற நெல்மணிகள் நிறைந்த வயல்களைஉடையது.
குறிப்புரை: இது திரிபுரம் எரித்த பெருமான் தேவியோடுஎழுந்தருளியிருக்கும் இடம் புகலிஎன்கின்றது. ஒன்னார் - பகைவர். வேடந்தன்னால் - வேடத்தோடு. உறைவாவது - உறையும்இடமாவதுபுகலி நகர் என்க.
Lord Civan destroyed by fire the three fortresses built in the sky by Asuraas who turned hostile towards him. He manifests Himself in Thiru-p-pukali along with His consort Umaa Devi whose waist is thin and narrow like a lightning. On one side of the town there exists the sea with its cool waters. There are paddy fields all around the area where plenty of sumptuous paddy glitters like gold.
வலியின்மதிசெஞ்சடைவைத்தமணாளன்
புலியின்னதள்கொண்டரையார்த்தபுனிதன்
மலியும்பதிமாமறையோர்நிறைந்தீண்டிப்
பொலியும்புனற்பூம்புகலிந் நகர்தானே.3
வலிஇல் மதி செஞ்சடை வைத்த மணாளன்,
புலியின்அதள் கொண்டு அரை ஆர்த்தபுனிதன்,
மலியும் பதி - மா மறையோர் நிறைந்து ஈண்டிப்
பொலியும் புனல் பூம்புகலி(ந்) நகர் தானே.
பொருள்: சிவபிரான்,கலைகளாகிய வலிமை குறைந்த பிறைமதியைச்செஞ்சடைமீதுவைத்துள்ள மணாளன் ஆவார். அவர் புலியின்தோலை இடையில் கட்டியபுனிதன் ஆவார். அவ்வகைப்பட்ட சிவபிரான் விரும்பும் பதி அழகிய திருப்புகலிநகராகும். அங்கு மேம்பட்ட வேதியர்கள்நிறைந்துள்ளனர். மேலும்,அது செறிந்துபொலியும்நீர்வளம்சான்றது. குறிப்புரை: இது மதிசூடியமணாளனாகிய,புலித்தோலரையார்த்த பெருமான் பதி புகலிஎன்கின்றது. வலியில் மதி - தேய்ந்து வலி குன்றியபிறைமதி. தளர்ந்தாரைத் தாங்குதல் இறைவனியல்பு என்பது உணர்த்தியவாறு. அதள் - தோல்.
He is the handsome One who had placed on His ruddy, matted crest the weak and weaning moon; He is the holy One whose waist is covered over with a tiger-skin. He abides in the lovely Pukali endowed with plenty of water, where the modest Vedic scholars assemble in strength and perfection.
கயலார்தடங்கண்ணியொடும்மெருதேறி
அயலார் கடையிற்பலிகொண்டவழகன்
இயலாலுறையும்மிடமெண்டிசையோர்க்கும்
புயலார்கடற்பூம்புகலிந்நகர்தானே.
கயல்ஆர்தடங்கண்ணியொடும்(ம்) எருது ஏறி
அயலார் கடையில் பலி கொண்ட அழகன்
இயலால்உறையும்(ம்) இடம் - எண்திசையோர்க்கும்
புயல் ஆர் கடல் பூம்புகலி(ந்) நகர் தானே.
பொருள்: சிவபிரான்,கயல்மீன் போன்ற பெரிய கண்களை உடைய உமையம்மையோடும்விடைமீது ஏறி காட்சி தருவார். அவர் அயலார் இல்லங்களில்பலிகொண்டருளும் அழகன் ஆவார்.சிவபிரான் விரும்பித் தங்கும் இடம் திருப்புகலிநகராகும். அந்த நகர் எட்டுத்திசைகளில்உள்ளோரும் செவி சாய்த்துக்கேட்கும்இடிஓசையைஎழுப்புகின்றகார்மேகங்கள் தங்கும் கடலை அடுத்துள்ளதாகும்.
குறிப்புரை: இடபவாகனத்தில்அம்மையப்பராய்,அயலார் மனை வாயிலில்பலிகொள்ளும் இறைவன் பதி புகலிஎன்கின்றது. கயலார்தடங்கண்ணி - மீனாட்சி. அயலார் - கன்மப்பிரமவாதிகளானதாருகாவனத்துரிஷிகள். கடை - மனைவாயில். இயலால் - அழகோடு.
This charming Lord Civan along with His consort Umaa Devi, whose eyes are big and beautiful like the carp fish (s) rides on the bull and receives alms from strangers' houses. Lord Civan manifests Himself in the well formed Pukali which is adjacent to the sea. Here in the seaside, black clouds gather, causing heavy rain and thunder. People living on all sides of this sea, listen to the noise of thunder with awe.
Note: Civa's consort is Meenaakshi (She whose eyes roll like carp fish).
காதார்கனபொற்குழைதோடதிலங்கத்
தாதார்மலர்தண்சடையேறமுடித்து
நாதானுறையும்மிடமாவதுநாளும்
போதார்பொழிற்பூம்புகலிந் நகர்தானே.5
காதுஆர் கன பொன்குழை தோடு அது இலங்கத்,
தாதுஆர் மலர் தண்சடை ஏற முடித்து,
நாதான்உறையும் இடம் ஆவது - நாளும்
போதுஆர்பொழில்பூம்புகலி(ந்) நகர்தானே.
பொருள்: சிவபிரானுடைய காதுகளில் கனவியபொன்னால் இயன்ற குழை,தோடு ஆகியன இலங்குகின்றன. அவர்,மகரந்தம் மருவியமலர்களைத் தண்ணிய சடையின்கண்பொருந்தச்சூடியுள்ளார். மேலும் அவர்,எல்லா உயிர்கட்கும்நாதனாக விளங்குகிறார். நாள்தோறும் புதிய பூக்கள் நிறைந்து விளங்கும் பொழில்கள்சூழ்ந்தபுகலிநகரே சிவபிரான் உறையும்இடமாகும்.
குறிப்புரை: குழையுந்தோடுங்காதிற்கலந்திலங்கச்சடையைஏறமுடித்தநாதன்உறையும் இடம் புகலிஎன்கின்றது. கன பொன்குழை - பொன்னாலாகியகனவியகுழை. தாதார் மலர் - மகரந்தம் பொருந்திய மலர். ஏறமுடித்து - உயரத் தூக்கிக் கட்டி. நாதன் என்ற சொல் எதுகை நோக்கி நாதான் என நீண்டது. தண்சடைஎன்றமையால்குழையணிந்தபாகத்திற்கேற்பக்கங்கையணிந்து தண்ணிய சடையானசெம்பகுதிச்சடையைஉணர்த்தியது.
Lord Civan wears dazzling earrings made of solid gold in His ears (Kuzhai in His right ear - குழைவலதுகாதிலும்; Thodu in His left ear தோடுஇடதுகாதிலும்). He appropriately decorates His coll matted hair with pollen padded flowers. He manifests Himself in Pukali which is surrounded by lush gardens where daily new flowers blossom.
வலமார்படைமான்மழுவேந்தியமைந்தன்
கலமார்கடனஞ்சமுதுண்டகருத்தன்
குலமார்பதிகொன்றைகள்பொன்சொரியத்தேன்
புலமார்வயற்பூம்புகலிந் நகர்தானே.6
வலம் ஆர் படை மான் மழுஏந்திய மைந்தன்,
கலம் ஆர் கடல் நஞ்சு அமுது உண்டகருத்தன்,
குலம் ஆர் பதி- கொன்றைகள் பொன் சொரியத்,தேன்
புலம் ஆர் வயல் பூம்புகலி(ந்) நகர்தானே.
பொருள்: சிவபிரான் வெற்றி பொருந்திய சூலப்படை,மான்,மழு ஆகியவற்றை ஏந்தியவலிமை உடையவன் ஆவான். அவன் மரக்கலங்கள்உலாவும்கடலிடைத்தோன்றியநஞ்சினைஅமுதாகஉண்டவன். அவ்வகைப்பட்ட சிவபிரான் அடியார் குழாத்தோடுஉறையும் பதி திருப்புகலிநகராகும். அந்நகர் கொன்றை மலர்கள் பொன் போன்ற இதழ்களையும்,மகரந்தங்களையும்சொரியத் தேன் நிலத்தில் பாயும் வயல்கள் உடையது.
குறிப்புரை: இது மான் மழுவேந்திய மைந்தன்,கடல் நஞ்சமுண்ட தலைவன் பதி புகலிஎன்கின்றது. வலம் ஆர்படை - வெற்றி பொருந்திய சூலப்படை. கலம் - மரக்கலம். கருத்தன் - தலைவன். குலமார் பதி -மக்கள் கூட்டம் செறிந்த நகரம். புலம் - அறிவு.
The valorous Lord Civan holds in His hands victorious weapons such as the Trident and Battle axe . He holds a deer in another hand. He swallowed the poison which came out of the sea where ships are moving to and fro. This Lord Civan, along with His devotees, abides in Pukali. This town has lush gardens where Kondrai flowers having petals shining like gold, drop their pollen grains on the ground and their honey on the nearby fields.
கறுத்தான்கனலான்மதின்மூன்றையும்வேவச்
செறுத்தான்றிகழுங்கடனஞ்சமுதாக
அறுத்தானயன்றன்சிரமைந்திலுமொன்றைப்
பொறுத்தானிடம்பூம்புகலிந் நகர்தானே.7
கறுத்தான்,கனலால் மதில் மூன்றையும்வேவச்
செறுத்தான்,திகழும் கடல் நஞ்சு அமுதாக;
அறுத்தான் அயன்தன் சிரம் ஐந்திலும்ஒன்றைப்
பொறுத்தான் இடம் பூம்புகலி(ந்) நகர்தானே.
பொருள்: சிவபிரான் மும்மதில்களும்கனலால்வெந்தழியுமாறுசினந்தான். அவன் கடலிடைவிளங்கத்தோன்றியநஞ்சைஅமுதாக உண்டு,கழுத்தில் தரித்தவன். மேலும் அவன் பிரமனது ஐந்து தலைகளில்ஒன்றை அறுத்து,அதனைக் கையில் தாங்கியவன். அந்தச்சிவபிரான் எழுந்தருளிய இடம் அழகியதிருப்புகலிநகராகும். குறிப்புரை: புரம் எரித்து,நஞ்சுண்டு,பிரமன் சிரங்கொய்து வீரம் விளக்கிய தலைவன் பதி புகலிஎன்கின்றது. இப்பாட்டு அடிதோறும் பொருள் முற்றி வந்துள்ளது. கறுத்தான் - சினந்தவன். செறுத்தான்_கண்டத்தில் அடக்கியவன். வேவச்செறுத்தான்,அமுதாகச்செறுத்தான். ஒன்றையறுத்தான்,அதைப்பொறுத்தான் இடம் புகலி என முடிவு செய்க.
Lord Civan got angry and destroyed the three fortresses of the Asuraas. He swallowed the poison that came out of the sea, as though it was nectar and retained it in His gullet. He cut off one of the five heads of Brahmaa and held it in His hand. This Lord Civan manifests Himself in the magnificent Pukali.
தொழிலான்மிகுதொண்டர்கடோத்திரஞ்சொல்ல
எழிலார்வரையாலன்றரக்கனைச்செற்ற
கழலானுறையும்மிடங்கண்டல்கண்மிண்டிப்
பொழிலான்மலிபூம்புகலிந் நகர்தானே.8
தொழிலால் மிகு தொண்டர்கள் தோத்திரம் சொல்ல,
எழில்ஆர்வரையால் அன்று அரக்கனைச்செற்ற
கழலான்உறையும் இடம் - கண்டல்கள்மிண்டிப்,
பொழிலால்மலிபூம்புகலி(ந்) நகர்தானே.
பொருள்: தாம் செய்யும் பணிகளால் மேம்பட்ட தொண்டர்கள் கயிலை மலையில் சிவபிரானைத் தோத்திரம் சொல்லிப்போற்றுகின்றனர். அந்தக் கயிலை மலையில் முன்னொரு காலத்தில் இராவணனைச்செற்றதிருவடிகளை உடையவன். அந்தச்சிவபிரான்உறையும் இடம் திருப்புகலிநகராகும். அது தாழை மரங்கள் செறிந்து விளங்கும்பொழில்கள்சூழ்ந்தநகராகும்.
குறிப்புரை: தொண்டர் தோத்திரஞ்சொல்லஇராவணனைச்செற்றதிருவடியை உடைய சிவன் பதி புகலிஎன்கின்றது. தொழிலால் மிகு தொண்டர்கள் - சரியை,கிரியை யாதிகளால் மிக்க அடியார்கள். எழில் - எழுச்சி;அழகுமாம். கண்டல் - தாழை.
Lord Civan's servitors (attendants), held in high state, because of their sincere services, hail Him by praying to Him and singing divine songs. Long ago, He crushed the king of Sri Lanka under the mount Kailas by pressing the mountain with the toe of His holy Feet. This Lord Civan manifests Himself in Pukali town surrounded by groves where screw pines have grown densely.
மாண்டார்சுடலைப்பொடிபூசிமயானத்
தீண்டாநடமாடியவேந்தன்றன்மேனி
நீண்டானிருவர்க்கெரியாயரவாரம்
பூண்டானகர்பூம்புகலிந் நகர்தானே.9
மாண்டார்சுடலைப் பொடி பூசி,மயானத்து
ஈண்டா,நடம்ஆடிய ஏந்தல்,தன்மேனி
நீண்டான்இருவர்க்குஎரிஆய்,அரவுஆரம்
பூண்டான் நகர் பூம்புகலி(ந்) நகர்தானே.
பொருள்: சிவபிரான் இறந்தவர்களைஎரிக்கும்சுடலையில் விளையும் சாம்பலை உடலில் பூசிக்கொள்கிறார். அந்த மயானத்தில் ஆடும் தலைவராகவும் இருக்கிறார். அவர் திருமால், பிரமன் பொருட்டுத்தம்மேனியை அழல் உருவாக்கி ஓங்கி நின்றார். பாம்பைமாலையாகத்தரித்துள்ளசிவபிரானுடைய நகர் அழகியதிருப்புகலிப்பதியாகும்.
குறிப்புரை:சுடலைப் பொடி பூசி,மயானத்தாடி,மாலயனுக்காக அக்கினி மலையாய் நீண்டு,அரவையாரமாகப் பூண்டு விளங்கும் இறைவன் பதி புகலிஎன்கின்றது. மாண்டார் - இறந்தவர். பொடிபூசி, மயானத்தாடி என்றது எல்லாரும் அந்தம் எய்த,தாம் அந்தம் இல்லாதிருப்பவன் என்பதை விளக்கியது. ஏந்தல் - தலைவன். தன்மேனிஇருவர்க்குஎரியாநீண்டான்எனக்கூட்டுக. அரவு ஆரம் பூண்டான் - பாம்பை மார்பில் மாலையாகஅணிந்தவன்.
Lord Civan, who is our Chief, smears on His body the ashes of the dead in the cremation ground. He also stays and dances there. He soared up as a tall and big column of fire when Thirumaal and Brahmaa started to reach His Head and Feet. He wears the snake as garland on His body. This Lord Civan manifests Himself in the magnificent town Pukali.
உடையார் துகில்போர்த்துழல்வார்சமண்கையர்
அடையாதனசொல்லுவராதர்களோத்தைக்
கிடையாதவன்றன்னகர்நன்மலிபூகம்
புடையார்தருபூம்புகலிந் நகர்தானே.10
உடையார் துகில் போர்த்து உழல்வார்,சமண் கையர்,
அடையாதனசொல்லுவர் - ஆதர்கள் - ஓத்தைக்
கிடையாதவன் தன் நகர் - நன்மலிபூகம்
புடை ஆர்தருபூம்புகலி(ந்) நகர்தானே.
பொருள்: பெளத்தர்கள் கீழ் உடையோடு மெல்லிய ஆடையைப்போர்த்துத்திரிவார்கள். அவர்களும்,சமணர்களும்கீழ்மக்கள். அவர்கள் பொருந்தாதவற்றைக்கூறுவார்கள். அந்தக் கீழோரின்வேதங்களுக்குஅகப்படாதவன் சிவபிரான். நன்கு செறிந்த பாக்கு மரச்சோலைகள்சூழ்ந்ததிருப்புகலிநகரேஅந்தச்சிவபிரானதுநன்னகர்.
குறிப்புரை: புறச்சமயிகளாகிய சமணர்,புத்தர் இவர்களின் வேதங்கட்குக்கிடையாதசிவனார் பதி புகலிஎன்கின்றது. உடையார் துகில் - உடுக்கத்தக்க துகில். போர்த்து - போர்வையாகப் போர்த்து. கையர் - கீழ்மக்கள். அடையாதனசொல்லுவர் - பொருந்தாதவற்றைச்சொல்லுவார்கள். ஆதர்கள் - கீழ்மக்கள். ஓத்து - வேதத்தை;என்றது பிடகம்முதலியவற்றிற்கு. வேற்றுமை மயக்கம். கிடையாதவன் - அகப்படாதவன். பூகம் - பாக்கு மரம்.
The Buddhists, covering their body with a cloth and roaming about here and there, are of low state. They and the low state Samanars will preach wrong doctrines. Lord Civan is beyond their reach. This Lord Civan manifests Himself in Pukali which is surrounded by dense arecanut groves.
Note: The scriptures of the Buddhists and the Samanars are not scriptures at all. These deny God.
இரைக்கும்புனல்செஞ்சடைவைத்தவெம்மான்றன்
புரைக்கும்பொழிற்பூம்புகலிந்நகர்தன்மேல்
உரைக்குந்தமிழ்ஞானசம்பந்தனொண்மாலை
வரைக்குந்தொழில்வல்லவர்நல் லவர்தாமே.11
இரைக்கும் புனல் செஞ்சடை வைத்த எம்மான்தன்-
புரைக்கும்பொழில்பூம்புகலி(ந்) நகர் தன்மேல்
உரைக்கும் தமிழ் ஞானசம்பந்தன்ஒண்மாலை
வரைக்கும் தொழில் வல்லவர் நல்லவர் தாமே.
பொருள்: சிவபிரான் ஆரவாரிக்கும் கங்கை நீரைத் தமது சிவந்த சடைமீதுவைத்துள்ளார். அவர் எம் தலைவர். உயர்ந்த சோலைகளால்சூழப்பட்டஅழகியதிருப்புகலிப் பதி சிவபிரானுக்குரியது. அந்தப் பதியைக்குறித்துத்தமிழ்ஞானசம்பந்தன்உரைத்த அழிய இப்பதிகமாலையைத்தமதாக்கி ஓதும் தொழில் வல்லவர் நல்லவர் ஆவர்.
குறிப்புரை: இம்மாலைபத்தும்தனக்கே உரியதாக்க வல்லவர் நல்லவராவர்என்கின்றது. புரைக்கும் - உயர்ந்திருக்கும். வரைக்கும் தொழில் - தம்மளவினதாக்கிக்கொள்ளுந் தொழில். எழுதுவிக்கும் தொழில் என்றுமாம். அளவுபடுத்தியுரைக்கும் தொழில் எனவுமாம்.
The roaring Ganges river abides on our Lord Chief, Civan's red matted hair. Tamil Gnaanasambandan has sung this awe-inspiring hymn on Lord Civan of Pukali town. If eminent professional people could make this garland of verses as their own and chant them, they will be righteous in their life.
Note: Gnaanasambandan is the only Naayanaar whose name is prefixed with the word 'Tamizh'. He is known as Tamizh Aakarar. Aakaram is source / seat/ abode / storehouse.
30ஆம் பதிகம் முற்றிற்று
உ
சிவமயம்
31.திருக்குரங்கணில்முட்டம்
திருத்தலவரலாறு:
திருக்குரங்கணில்முட்டம் என்ற திருத்தலம் தொண்டை நாட்டுத்திருத்தலங்களில் ஒன்று. காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி செல்லும் பேருந்துகளில் ஏறி,பாலாற்றைக்கடந்தவுடன் தூசி என்னும் இடத்தில் இறங்கி கிழக்கே2 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். குரங்காகியவாலியும்,அணிலும்,காகமும்வழிபட்டதால்இப்பெயர் பெற்றது. முட்டம் - காகம். இறைவன் திருநாமம் வாலி வழிபட்டதைக் காட்டும் சான்று,காக்கைமேடு,காக்கை வழிபட்டதைக்காட்டுவது.மூன்றின் உருவங்களும்சுதையால்ஆலயவாயிலில்அமைக்கப்பெற்றிருக்கின்றன. இறைவன் திருநாமம் வாலீசுவரர்;இறைவி பெயர் இறையார்வளையம்மை. இதனையே, “இறையார்வளையாளைஓர்பாகத்தடக்கி'எனப் பதிகம் அறிவிக்கிறது. தீர்த்தம் வாலி தீர்த்தம். இத்தலம்காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் இருந்து தெற்கே12 கி.மீ தூரத்தில் பாலாற்றின்தென்கரையில் இருக்கிறது.
கல்வெட்டு:
இத்தலத்தைப் பற்றியனவாக6 கல்வெட்டுக்கள் உள்ளன. அவை கோதநேரின்மைகொண்டான்,குலோத்துங்கன்,இராஷ்டிரகூடகன்னர தேவன்,கிருஷ்ணதேவராயர் இவர்கள் காலத்தன. அவற்றால் இத்தலம்காளியூர்க்கோட்டத்துஇருகழி நாட்டு மாவண்டுர்ப்பற்றத்துப்பல்லவபுரமானதிருக்குரங்கணில்முட்டம் என்று குறிப்பிடப்பெறுகிறது. கடவுள் திருக்குரங்கணில்முட்டமுடைய நாயனார் என்றும்,கொய்யாமலரீசுவர தேவர் என்றும் குறிப்பிடப்பெறுகிறார். பூஜாவிருத்திக்காகச் சகம்1451இல் கிருஷ்ண தேவ மகாராயர்பல்லவபுரம்கிராமத்தை அளித்தார். இராஷ்டிரகூடகன்னர தேவன் ஸ்ரீபலிபூசைக்காக நிலம் அளித்தான். சம்புவராயரால்சத்திமங்கலமாகிறஅம்மநல்லூர்கிராமத்தைநிவந்தமாகவிடநீறணிந்தான்சேதுராயனுக்குஉத்தரவிட்டான்.
பதிக வரலாறு:
பிள்ளையார்,திருவோத்தூரில்ஆண்பனையைப் பெண் பனையாக்கி,சமணர்களைச்சைவர்களாக்கித்திருமாகறல் என்னும் தலத்தைவணங்கியபின்,குரங்கணின்முட்டத்தைச்சேர்ந்தார். அங்கு,ஆதிமுதல்வர்தாளைவணங்கிக் “குரங்கணில்முட்டம்தொழுநீர்மையர்துன்பமிலரே” எனச் சிறப்பித்து “விழுநீர்மழுவாள்" என்னும் இப்பதிகத்தைஅருளிச் செய்தார்கள்.
31. THIRU-K-KURANGU-ANNIL-MUTTAM
THE HISTORY OF THE PLACE
Thiru-k-kurangu-annil-muttam is one of the sacred places of Thondai Naadu. It can be reached by going two km east from Thoosi, which is in the Kaanchipuram to Vandhavaasi bus route, just past the Paalaaru bridge. It lies on the south bank of Paalaaru at 12 km south of Kaanchipuram. The temple got its name because Vaali the monkey (kurangu), a squirrel (anil) and a crow (muttam) offered worship here. The name of the God, Valeesvarar, is indicative of Vaali's worship and the name Kaakkai Madu' comes from the crow's worship. The temple entrance has the plaster images of the three. Valeesvarar is the God's name and Iraiyaar Valaiyammai is that of the Goddess. The verse 'iraiyaar valaiyaalai or paakaththadakki' signifies this. The sacred ford is called Vaali Theerththam.
Stone Inscriptions
There are 6 inscriptions here, from the times of Konerinmaikondaan, Kuloththungkan, Raashtrakoota Kannara Thevan, and Krishnadeva Raayar. In the Thirukkurangkanilmuttam which is Pallavapuram inscriptions, the temple is named as of Maavandoorp Parram in Irukazhi Naadu of Kaaliyoork Kottam and the Lord as Thirukkurangkanil Muttamudaiya Naayanaar and Koyyaamalreesvara Thevar. Krishnadeva Raayar gifted the village of Pallavapuram in the Saka year 1451 for worship services. Raashtrakoota Kannara Thevan gave land for the service known as Sreebali Poojai. Sambuvaraayan issued an order to Neeranindhaan Sethuraayan to gift the village of Saththimangalam Ammanalloor.
INTRODUCTION TO THE HYMN
At Thiru-Votthur, the young-saint hailed Lord Civan, transformed male- palmyrah trees into female trees, converted the Samanars of that town to saivism and reached Thiru-marukal where he hailed Civa. Then he arrived at Kurang-kanil-muttam where the following hymn was sung by him.
திருச்சிற்றம்பலம்
31.திருக்குரங்கணில்முட்டம்
பண் : தக்கராகம்
ராகம் : காம்போதி
விழுநீர்மழுவாட்படையண்ணல்விளங்கும்
கழுநீர் குவளைம்மலரக்கயல்பாயும்
கொழுநீர் வயல்சூழ்ந்தகுரங்கணின்முட்டம்
தொழுநீர்மையர்தீதுறுதுன் பமிலரே.1
விழுநீர்மழுவாள்படை,அண்ணல் விளங்கும் -
கழுநீர் குவளை(ம்) மலரக்கயல் பாயும்
கொழுநீர் வயல் சூழ்ந்த - குரங்கணில்முட்டம்
தொழும்நீர்மையர்தீதுஉறு துன்பம் இலரே,
பொருள்: சிவபிரான்,பெருமைக்குரியகங்கையைமுடிமிசைஅணிந்தவர். மழுவாட்படையைக் கையில் ஏந்தியவர். அவர் உறைவதுதிருக்குரங்கணில்முட்டம் ஆகும். அத்தலம்கழுநீர்,குவளை ஆகியன மலர்ந்தும்,கயல்மீன்கள்துள்ளுமாறும் விளங்கும் நீர் நிலைகளைஉடையது;செழுமையான வயல்களால்சூழப்பட்டது. இத்தனைசிறப்பு வாய்ந்தது திருக்குரங்கணில்முட்டம் ஆகும். இத்தலத்தைத்தொழுபவர்இம்மையால் வரும் துன்பம் இல்லாதவர்கள் ஆவார்கள்.
குறிப்புரை: கங்கையைஅணிந்தவரும்,மழுவேந்தியவருமாகிய இறைவன் விளங்கும் இத்தலத்தைத்தொழுபவர்துன்பமிலர்என்கின்றது. விழுநீர் - பெருமையையுடை நீர்,கங்கை. கொழுநீர் - வளமான நீர்.தீதுறு துன்பம் - தீமையான்வரும் துன்பம்;பாவகன்மத்தான்வரும் துன்பம் என்பதாம். தீதுகழுவிஆட்கொள்ளக்கங்கையையும்,துன்பந்துடைக்கமழுப்படையையும் உடைய பெருமானாதலின் துன்பம் இலர்என்றார்.
The celebrated river Ganges abides in Lord Civan's hair. He holds the battle-axe in one of His hands. Lord Civan manifests Himself in Kurangu-anil-muttam where a good number of pools full of water exist; well-blossomed Kuwalai and other flowers have densely grown in these pools. The carp fishes leap and play in the water. The town is surrounded by fertile fields. All those that adore this shrine are freed from troubles brought about by evil deeds.
Note: Kurangu is monkey. Anil is squirrel. Muttam (Skt. Mushnam) is crow. A triad of these adored the Lord Civan in this town and gained salvation. In memory of this, the town came to be called Kurangu-anil-muttam.
Kuvalai: Water lily.
விடைசேர்கொடியண்ணல்விளங்குயர்மாடக்
கடைசேர்கருமென்குளத்தோங்கியகாட்டில்
குடையார்புனன்மல்குகுரங்கணின்முட்டம்
உடையானெனையாளுடையெந் தைபிரானே.2
விடை சேர் கொடி அண்ணல் - விளங்கு,உயர் மாடக்
கடை சேர்,கரு மென்குளத்து ஓங்கிய காட்டில்
குடை ஆர் புனல் மல்கு குரங்கணில்முட்டம்
உடையான்;எனை ஆள் உடை ௭ந்தை பிரானே.
பொருள்: சிவபிரான்,திருக்குரங்கணில்முட்டத்தை உடையவன். அங்கு உயர்ந்து விளங்கும் மாடங்கள் உள்ளன. அவைகளின் கடைவாயிலைச் சேர்ந்து கரிய குளிர்ந்த (மெல்லிய) காடுகள் உள்ளன. அக்காடுகளின் இடையே குடைந்து ஆடுதற்குரியநீர்நிலைகள் நிறைந்து உள்ளன. இவ்வளவு இறப்புக்கள் நிறைந்த இருக்குரங்கணில்முட்டத்தை உடையவன், விடைக்கொடிஅண்ணலாகிய சிவபிரான். அவன் என்னை ஆளாக உடைய தலைவன் ஆவான்.
குறிப்புரை: இது இத்தலமுடையபெருமானேஎன்னையாளுடைய பிரான் என்கின்றது. மாடக்கடைசேர்கருமென்குளத்து ஓங்கிய காட்டில் - மாடங்களின்கடைவாயிலைச்சேர்ந்துள்ள கரிய மெல்லிய குளத்தால்சிறந்த காட்டிலே. குடையார் புனல் மல்கு - குடைதற்குரியநீர்நிறைந்த;அணில் முட்டம்என்க. ஆளுடைபிரான் என்பதால் எனக்கும் அவனுக்கும் உள்ள தொடர்பு,அநாதியேயான ஆண்டான் அடிமைத்தன்மையென அறிவித்தது. எந்தை என்றது ஆதியாயிருந்து,அடித்தும்அணைத்தும் அருள் வழங்கலின். பிரான் என்றது தன்வழிநின்றுஏவல்கொள்ளுந்தலைவனாகஇருத்தலின்.
Lord Civan is my father as well as my Supreme God. I am His servitor. He is the great Lord. The figure of the Bull in the flag is the insignia (Emblem or symbol) of Lord Civan. He manifests Himself in Kurangu-anil-muttam. In the backyard of the tall and shining mansions of this town, are dense dark forests. In these forests deep and cool pools, full of water exist, with facilities for diving and bathing.
Note: In the olden days, the backyard of any mansion was like a woodland.
சூலப்படையான்விடையான்சுடுநீற்றான்
காலன் றனையாருயிர்வவ்வியகாலன்
கோலப்பொழில்சூழ்ந்தகுரங்கணின்முட்டத்
தேலங்கமழ்புன்சடையெந் தைபிரானே.3
சூலப்படையான்,விடையான்,சுடுநீற்றான்,
காலன்தனைஆர்உயிர்வவ்விய காலன் -
கோலப்பொழில்சூழ்ந்தகுரங்கணில்முட்டத்து
ஏலம் கமழ் புன்சடை எந்தை பிரானே.
பொருள்: திருக்குரங்கணில்முட்டம் அழகிய சோலைகளால்சூழப்பெற்றது. அங்கு எழுந்தருளிய சிவபிரான் மணம் கமழும்சடைமுடியைஉடையோனாகிய எந்தை பிரான். அவன் சூலப்படையையும்,விடை ஊர்தியையும் உடையவன். அவன் திருவெண்ணீறுபூசியவன். காலனின் உயிரை வவ்வியதால்காலகாலன்எனப்படுபவன்.
குறிப்புரை: இது இத்தலத்திறைவன்சூலப்படையான்,விடையான்,நீற்றான்,காலகாலன் என அடையாளமும்,அருளுந்திறமும் அறிவிக்கின்றது. கோலம் - அழகு. ஏலம் - மயிர்ச்சாந்து.
Lord Civan holds a trident in one of His hands. He has the Bull as His Mount. He smears His body with holy ashes. He is called Kaalakaalan because He kicked off Yaman, the god of death. The town Kurangu-anil-muttam is surrounded by enchanting forests where abides my Father Lord Civan whose matted hair emits pleasant fragrance.
Note: Yama is the god of death. Death suffered death even as Lord Civan kicked down Yaman with His Foot. Lord Civan's banner (flag or standard) sports a White Bull. His mount is also a valiant White Bull. Confer Verse 1 ஊர்திவால்வெள்ஏறே, சிறந்தசீர்கெழுகொடியும்அவ்வேறுஎன்ப.
வாடா விரிகொன்றைவலத்தொருகாதில்
தோடார்குழையானலபாலனநோக்கிக்
கூடாதனசெய்தகுரங்கணில்முட்டம்
ஆடாவருவாரவரன் புடையாரே.4
வாடா விரிகொன்றை,வலத்து ஒரு காதில்-
தோடு ஆர்குழையான்,நலபாலனம்நோக்கிக்,
கூடாதன செய்த குரங்கணில்முட்டம்
ஆடா வருவார் அவர் அன்புஉடையாரே.
பொருள்:திருக்குரங்கணில்முட்டத்தில்எழுந்தருளியுள்ள சிவபிரான் வாடாதுவிரிந்துள்ளகொன்றை மாலையைச்சூடியவன் வலது காதில் குழையையும்,இடது காதில் தோட்டையும்அணிந்துள்ளவன்;அனைத்து உயிர்களையும்நன்றாகக்காத்தலைத்திருவுள்ளம் கொண்டவன் தேவர்கள் எவரும் செய்யமுடியாத அரிய செயல்களைச்செய்பவன். இவ்வனைத்துச்செயல்களையும் செய்யும் சிவபிரான் திருக்குரங்கணில்முட்டத்துள்திருநடனம் புரியும் இறைவன் ஆவான். அவன் எல்லோரிடத்திலும் அன்பு உடையவன்.
குறிப்புரை: இத்தலத்துஆடிவரும்பெருமானாகிய அவரே அடியேன் மாட்டு அன்புடையார்என்கின்றது. வாடாவிரி கொன்றை - வாடாத விரிந்த கொன்றை மலர்மாலையையும்தேவர்கட்கேஅணிந்த மாலை வாடாது;அங்ஙனமாகத்தேவதேவனாகிய சிவபெருமான் அணிந்த மாலை வாடாமை இயல்பு ஆதலின்இங்ஙனம் கூறப்பட்டது. வலத்துக்குழையும்,ஒர்காதில்தோடும் உடையான் எனக்கொள்க. நல்ல பாலனம் நோக்கி - நன்றாகக்காத்தலைத்திருவுளங்கொண்டு. கூடாதன செய்த - வேறுதேவர் எவரும் செய்யக்கூடாத அரிய காரியங்களைச் செய்த. ஆடாவருவார் - திருநடனம் செய்து வருவார்.
Lord Civan wears on His head fully blown Kondrai flowers , which never wither. He wears a ring called Kuzhai in His right ear and Thōdu of palm leaf scroll in His left ear. He contemplates ever on methods to sustain all the souls in the universe. For this He enacts such deeds as required which no Devas can do. This Lord Civan who manifests Himself and dances in Kurangu-anil-muttam loves one and all.
Note: Civa performs deeds which are ostensibly impossible for others to perform. During the churning of the ocean when the dreaded venom arose from the churned ocean, it was Civa who quaffed it.
இறையார்வளையாளையொர்பாகத்தடக்கிக்
கறையார்மிடற்றான்கரிகீறியகையான்
குறையார்மதிசூடிகுரங்கணின்முட்டத்
துறைவானெமையாளுடையொண் சுடரானே.5
இறைஆர்வளையாளை ஓர் பாகத்து அடக்கிக்,
கறை ஆர்மிடற்றான்;கரி கீறியகையான்;
குறை ஆர் மதி சூடி குரங்கணில்முட்டத்து
உறைவான்;எமை ஆள் உடை ஒண்சுடரோனே.
பொருள்: திருக்குரங்கணில்முட்டத்தில்உறையும்இறைவனான சிவபிரான், “இறையார்வளையாள்” என்னும்திருப்பெயர் கொண்ட உமையம்மையை ஒரு பாகத்தே கொண்டவன், நீலகண்டன்,யானையின் தோலை உரித்துப் போர்த்தகையினன்,ஆதிப்பிறையைமுடியில்சூடியவன். அந்த இறைவனாகிய சிவபிரான்,எம்மை ஆளாக உடைய ஒண்சுடராவான்.
குறிப்புரை: சிவனேஎம்மையாளுடைய சோதி வடிவன்என்கின்றது. இறையார்வளையாள்இத்தலத்துஅம்மையின் திருநாமம். முன்கையில் வளையல் அணிந்தவள் என்பது பொருள். கரி கீறியகையான் - யானையையுரித்தகையையுடையவன். குறையார் மதி - இனிக்குறையக் கூடாத அளவு குறைந்த பிறைமதி. ஒண்சுடரான் - ஒள்ளியசோதிவடிவன்.
Lord Civan's consort of this place is known at this shrine as 'Iraiyaar Valaiyaal' . She forms the left part of His body and is on His left side. His gullet is dark blue in colour. His hands once peeled off the skin of an elephant. He holds on His matted hair the crescent moon that has waned to the utmost, and cannot therefore wane any more. This radiant Lord Civan manifests Himself in Kurangu-anil- muttam. He owns us as His servitors.
பலவும்பயனுள்ளனபற்றுமொழிந்தோம்
கலவம்மயில்காமுறுபேடையொடாடிக்
குலவும்பொழில்சூழ்ந்தகுரங்கணின்முட்டம்
நிலவும்பெருமானடிநித்தனினைந்தே.
பலவும் பயன் உள்ளன பற்றும்ஒழிந்தோம் -
கலவம்மயில்காமுறுபேடையொடுஆடிக்
குலவும்பொழில்சூழ்ந்தகுரங்கணில்முட்டம்
நிலவும் பெருமான் அடி நித்தல்நினைந்தே.
பொருள்: சிவபிரான் உறையும்திருக்குரங்கணில்முட்டத்தில்,தோகைகளை உடைய ஆண் மயில்கள்,தாம் விரும்பும் பெண் மயில்களோடுகூடிக்களித்தாடும்பொழில்களால்சூழப்பட்டது. அங்கு உறையும் பெருமான் திருவடிகளை நாள்தோறும் நினைந்து,உலகப்பொருள்கள் பலவற்றில் இருந்த பற்றொழித்தோம்.
குறிப்புரை: இது இறைவனடியைநித்தலும்நினைந்ததன் பயன் உள்ளன பலவற்றிலும் இருந்த பற்றும்ஒழிந்தோம்என்கின்றது. பயன் உள்ளன - பொறிகட்கும்பிறவற்றிற்கும்பயன்படுவனவாகியதனுகரணபுவனபோகங்கள். கலவம் - தோகை. பற்றுகபற்றற்றான்பற்றினைஅப்பற்றைப்பற்றுக பற்று விடற்கு' என்ற குறட்கருத்துஅமைந்திருத்தல் காண்க.
The town Kurangu-anil-muttam is surrounded by lush groves where feather- tailed male peacocks dance and dally with their female mates whom they like. By daily meditating on the holy Feet of Lord Civan of this place we are able to abstain from aspirations regarding the many worldly things.
Note: Things of the world are but transient in nature. By attaching ourselves to the Lord, we are free from all attachment to worldly things.
மாடார்மலர்க்கொன்றைவளர்சடைவைத்துத்
தோடார்குழைதானொருகாதிலிலங்கக்
கூடார்மதிலெய்துகுரங்கணின்முட்டத்
தாடாரரவம்மரையார்த்தமர்வானே.| 7
மாடுஆர்மலர்க்கொன்றைவளர்சடை வைத்து,
தோடுஆர்குழைதான் ஒரு காதில் இலங்க,
கூடார் மதில் எய்து குரங்கணில்முட்டத்து
ஆடு ஆர் அரவம் அரை ஆர்த்துஅமர்வானே.
பொருள்: சிவபிரான் பொன்னைஒத்த கொன்றை மலர்மாலையைச்சடைமீதுஅணிந்துள்ளான். காதணியாகிய குழை ஒரு காதில் இலங்கத்திரிபுரத்தை எரித்து அழித்தான். ஆடும் பாம்பைஇடையிலேவரிந்து கட்டின திருக்குரங்கணில்முட்டத்தில்எழுந்தருளியுன்ளான்.
குறிப்புரை: கொன்றையணிந்துகுழையுந்தோடுங் காதில் தாழ,திரிபுரமெரித்த பெருமான் குரங்கணில்முட்டத்துஅமர்வான் என இறைவனுடைய மாலை,அணி,வீரம் இவற்றைக்குறிப்பிக்கின்றது. மாடு ஆர்மலர்க்கொன்றை - பொன்னை ஒத்த நிறமுடையகொன்றைமலர். கூடார் - பகைவர். ஆடுஆர் அரவம் - ஆடுதலைப் பொருந்திய அரவம்.
Lord Civan wears in His matted hair Kondrai flowers glittering like gold. The ear-ring in His right ear and Thōdu in His left ear shine brightly. He destroyed the three fortresses of the recalcitrant Asuraas. He wears tightly a snake moving about in His waist. He abides in Kurangu-anil-muttam.
மையார்நிறமேனியரக்கர்தங்கோனை
உய்யாவகையாலடர்த்தின்னருள்செய்த
கொய்யார்மலாசூடிகுரங்கணின்முட்டம்
கையாற்றொழுவார்வினைகாண் டலரிதே.8
மை ஆர் நிற மேனி அரக்கர்தம்கோனை
உய்யாவகையால்அடர்த்து,இன்அருள் செய்த
கொய் ஆர் மலர் சூடி குரங்கணில்முட்டம்
கையால் தொழுவார் வினை காண்டல்அரிதே.
பொருள்: கரிய மேனியை உடைய அரக்கர் தலைவன் ஆகிய இராவணனைப் பிழைக்க முடியாதபடி அடர்த்துப்பின்அவனுக்குச் சிவபிரான் இனிய அருளைவழங்கினான். மேலும், சிவபிரான்,அடியவர் செய்து அணிவித்தமலர்மாலைகளுடன்திருக்குரங்கணில்முட்டத்தில்எழுந்தருளியுள்ளான். அவனைக் கைகளால் தொழுபவர்வினைப்பயன்களைக் காணுதல் இலராவர்.
குறிப்புரை: இத்தலத்தைத்தொழுவார்வினைகாண்டல் அரிது என்கின்றது. மையார்மேனி - கரியமேனி. அரக்கன் - இராவணன். உய்யாவகையால் - தப்பாதவண்ணம். கொய்ஆர் மலர் - கொய்தலைப்பொருந்திய மலர். வினை - வினைப்பயனாகிய துன்ப இன்பங்களை.
Lord Civan crushed Raavanaa, the king of Sri Lanka of the dark-hued Raakshasaa. The king had no way to escape (from his predicament). Then Lord Civan graced him. They who hail the Lord of Kurangu-anil-muttam with flowers plucked afresh, and adore Him with folded hands can seldom be subject to bad karmaa. Note: Civa is to be adored with fresh flowers. These are known as 'Naall malar' in Tamil.
வெறியார்மலர்த்தாமரையானொடுமாலும்
அறியா தசைந்தேத்தவோராரழலாகும்
குறியானிமிரந்தான்றன்குரங்கணின்முட்டம்
நெறியாற்றொழுவார்வினைநிற்ககிலாவே.
வெறி ஆர்மலர்த்தாமரையானொடுமாலும்
அறியாது அசைந்து ஏத்த,ஒர்ஆர் அழல் ஆகும்
குறியால்நிமிர்ந்தான்தன்குரங்கணில்முட்டம்
நெறியால்தொழுவார் வினை நிற்ககிலாவே.
பொருள்: மணம் கமழும் தாமரை மலரில்உறையும்நான்முகனும்,திருமாலும் அடிமுடி அறிய முடியாது வருந்தி சிவபிரானைவணங்குமாறு அழல் உருவாய் ஓங்கி நின்றருளியவன். அவ்வாறான சிவபெருமான் விளங்கும் திருக்குரங்கணில்முட்டத்தை முறையாக வணங்குவார்வினைகள்இலராவர்.
குறிப்புரை: இது தொழுவார் வினை,நிற்கும் ஆற்றல் இல்லாதனஎன்கின்றது. வெறி - மணம். அறியாது அசைந்து - முதற்கண் இறைவன் பெருமையை அறியாமல் சோம்பி இருந்து. ஏத்த - பின்னர் அறிந்து துதிக்க. ஒர்ஆர்அழலாகும்குறியான் - ஒப்பற்ற நெருங்குதற்கரியஅழலாகியதிருவுருவைஉடையவன். நெறி - ஆகமவிதி.
When Brahmaa whose seat is the fragrant lotus, and Vishnu were unable to perceive Lord Civan's holy Feet and Head, they grieved in distress and hailed Him. Lord Civa soared as a tall column of blazing fire. Karmaa will have no effect on those who are poised in the righteous way and who hail the Lord of Kurangu-anil-muttam.
கழுவார்துவராடைகலந்துமெய்போர்க்கும்
வழுவாச்சமண்சாக்கியாவாக்கவைகொள்ளேல்
குழுமின்சடையண்ணல்குரங்கணில்முட்டத்
தெழில்வெண்பிறையானடிசேர் வதியல்பே.10
கழுவார்துவர்ஆடை கலந்து மெய் போர்க்கும்
வழுவாச்சமண்,சாக்கியர் வாக்கு அவை கொள்ளேல்!
குழு மின்சடை அண்ணல் குரங்கணில்முட்டத்து
எழில் வெண்பிறையான் அடி சேர்வதுஇயல்பே.
பொருள்: தோய்க்கப்பட்டதுவராடையைஉடலிற்போர்த்தித்திரியும்பெளத்தர்கள்,தம் கொள்கையில்வழுவாதசமணர்கள் ஆகியோர் உரைகளைக்கொள்ளாதீர். திருக்குரங்கணில்முட்டத்துஇறைவனாகிய சிவபிரான்,மின்னல்போலத்திரண்டுள்ளசடைமுடியை உடையவன்,அழகிய வெண்பிறையைஅணிந்தவன். அவனுடைய திருவடிகளைவணங்குவதே நம் கடமை ஆகும்.
குறிப்புரை: இத்தலத்துள்ளஇறைவனடிசேர்வதே இயல்பு என்கின்றது. கழுவார் - உடையைத் தோய்த்து அலசாதவராய். வழுவாச்சமண் - தம் கொள்கையில்வழுவாத சமணர். குழுமின்சடை - கூட்டமாகியமின்னலை ஒத்த சடை.
Ye companions! Pay no heed to the preachings of the obstinate Samanars, as well as the Buddhists who cover their body with brown-red cloth. It is our bounden duty to applaud the Holy Feet of Lord Civan abiding in Kurangu-anil-muttam. The strands of His matted hair resemble a cluster of lightning rays.
கல்லார்மதிற்காழியுண்ஞானசம்பந்தன்
கொல்லார்மழுவேந்திகுரங்கணின்முட்டம்
சொல்லார்தமிழ்மாலைசெவிக்கினிதாக
வல்லார்க்கெளிதாம்பிறவா வகைவீடே.11
கல் ஆர் மதில் காழியுள்ஞானசம்பந்தன்
கொல் ஆர்மழுஏந்திகுரங்கணில்முட்டம்
சொல் ஆர்தமிழ்மாலைசெவிக்கு இனிது ஆக
வல்லார்க்குஎளிதுஆம்,பிறவா வகை வீடே.
பொருள்: கல்லால் இயன்ற மதில்களால்சூழப்பட்டதுசீகாழிப்பதி. அங்குத்தோன்றியவர்ஞானசம்பந்தர். சிவபிரான் கொல்லும் தன்மையுடையமழுவாயுதக்தைக் கையில் ஏந்தி, திருக்குரங்கணில்முட்டத்தில்எழுந்தருளியுள்ளான். அந்த இறைவரது ஞானசம்பந்தர் பாடியசொல்மாலையாகியஇத்திருப்பதிகத்தைச்செவிக்குஇனிதாக.ஓதிஏத்தவல்லார்க்குப்பிறவாநெறியாகிய வீடு எளிதாகும்.
குறிப்புரை: இப்பதிகத்தைச்செவிக்கினிதாகச்சொல்லவல்லவர்களுக்கு வீடு எளிது என்கின்றது. கல்ஆர் மதில் - மலையை ஒத்த மதில். பிறவாவகை வீடு எளிதாம்எனக்கூட்டுக. கொல்லார்மழுகொற்றொழில் நிறைந்த மழு (திருக்கோவையார் -231).
Gnaanasambandan hails from Seekaazhi which is fortified with granite stone walls. He has sung this hymn on Lord Civan of Kurangu-anil-muttam, who holds in His hand the battle-axe forged in a smithy. Those who can sing this enchanting garland of words (hymn) in a pleasant voice, adore Him and offer worship, will easily reach heaven and will be relieved from the cycle of birth and death.
திருச்சிற்றம்பலம்
31ஆம் பதிகம் முற்றிற்று
சிவமயம்
31.திருவிடைமருதூர்
திருத்தலவரலாறு:
திருவிடைமருதூர் என்ற திருத்தலம்மத்தியார்ச்சுனம் எனவும் வழங்கப் பெறும். வடக்கேஸ்ரீபர்ப்பதமாகியமல்லிகார்ச்சுனமும்,தெற்கேஅம்பாசமுத்திரத்திற்கு அருகாமையில் உள்ள திருப்புடைமருதூராகியபுடார்ச்சுனமும் விளங்க இவற்றின் இடையில் இது விளங்குதலின்இப்பெயர் பெற்றது. அர்ச்சுனம் - மருது. இம் மூன்று தலங்களுமேமருதைத்தலவிருட்சமாகக்கொண்டு இருப்பது அறியத்தக்கது. இது சோழ நாட்டில் காவிரிக்குத்தென்கரையில் அமைந்துள்ள தலம். மயிலாடுதுறை - கும்பகோணம் இருப்புப் பாதையில் இரயில் நிலையம். மயிலாடுதுறை - கும்பகோணம் பேருந்துச் சாலையில் உள்ளது. வழிபட்டோர்உமாதேவியார்,விநாயகர்,முருகன், விஷ்ணு,காளி,இலக்குமி,சரஸ்வதி,வேதங்கள்,மூன்று கோடி உருத்திரர்,பன்னிருசூரியா, வசிஷ்டர்,அயிராவதம் என்னும் யானை,சிவவாக்கியர்,கபிலர்,அகத்தியர்,வரகுணதேவர், பட்டினத்தடிகள் முதலியோர்.
வரகுணதேவ பாண்டிய மன்னனுக்குப் பிரமகத்தி நீங்கிய தலம். இப்பிரமகத்திஇரண்டாங்
கீழக்கோபுரத்துவாயிலில்வலப்பக்கத்தில் இருக்கின்றது. கிழக்கு வாயிலில்பட்டினத்தடிகளும்மேற்குவாயிலில்பத்திரகிரியாரும்எழுந்தருளி இருந்தனர். அம்மை மெளனமாய் இருந்து தவம் செய்த மூகாம்பிகை சந்நிதி,அம்பாள் கோயில் வாசலில் தனியே இருக்கிறது. பெரிய பிரகாரத்திற்குஅஸ்வமேத பிரகாரம் எனப் பெயர். அதனை வலம் வரின்அஸ்வமேத யாகம் செய்த பலன் சித்திக்கும் என்பது மரபு. பேய் பிடித்தவர்களும் பைத்தியம் பிடித்தவர்களும் வலம் வந்தால் அவை நீங்குகின்றன என்பது இன்றும் கண்கூடு. இத்தலம்மகாலிங்கத்தலமாக, இதனைச் சுற்றி சிதம்பரம் நடராஜர்சந்நிதியாகவும்,ஆலங்குடி தட்சணாமூர்த்தி சந்நிதியாகவும், சூரியனார் கோயில் நவக்கிரகங்களின்சந்நிதியாகவும்,திருவலஞ்சுழி விநாயகர் சந்நிதியாகவும், சுவாமிமலை முருகன் சந்நிதியாகவும்,சீகாழி வயிரவர்சந்நிதியாகவும்,சேய்ஞலூர்சண்டேசுவரா்சந்நிதியாகவும்விளங்குகிறதுஎன்பர். இத்தலத்துத்தைப்பூச விழா மிகச் சிறந்தது. காவிரி அயிராவணத்துறையில் சுவாமி சென்று தீர்த்தம் அருளுவார்.
கல்வெட்டு:
இத்தலத்தைப் பற்றிய கல்வெட்டுக்கள்149.அவை முதலாம் பராந்தகன் (கி.பி.905 - 947), மூன்றாம் குலோத்துங்கன்வரையிலுள்ளசோழபரம்பரையினர் காலத்திலும் வரகுணன்,சுந்தரபாண்டியன் முதலிய பாண்டிய மன்னர்கள் காலத்திலும் வெட்டப்பெற்றகல்வெட்டுக்கள். இவற்றால் அறியப்படும்மிகச்சிறந்த நிகழ்ச்சிகள்: இத்தலம்உய்யக் கொண்ட சோழவள நாட்டு திரைமூர்நாட்டு திருவிடைமருதூர் என வழங்கப்பெறுகிறது. பரகேசரிவர்மனான முதல் இராஜேந்திரன்மூன்றாம் ஆண்டில் ஏகநாயகன் திருவாசலுக்கு விளக்கு ஏற்றி வர ஆடுகள் அளித்தமைஅறியப்படுகிறது. இதனால் மகாலிங்கசுவாமிக்குஏகநாயகர் என்ற பெயருண்மை அறியலாம்.
இத்தலத்துஎழுந்தருளியுள்ளசோமாஸ்கந்தர் ஆடல் விடங்க தேவர் என்று அழைக்கப்பெறுகிறார். இத்தேவர்இங்கநாடுபல்லவராயனால்பிரதிட்டைசெய்விக்கப் பெற்றவர். முதல் பராந்தகன்37ஆம் ஆட்சியாண்டில் திருவாதிரை,சதயம்,அமாவாசை ஆகிய இந்த நாட்களைக்கொண்டாட மான்யம்விட்டிருக்கிறான். திருவிடைமருதூர் மூலஸ்தானம் தெற்குப் பக்கத்தில் உள்ள பூர்ண கணபதி கருப்பக் கிருகத்திற்கு8 இலைக் காசு கொடுத்தான். இதனால் மூலஸ்தானக் கணபதி பூர்ண கணபதி என வழங்கப்பெற்றமை அறியலாம். தைப்பூசவிழாவைப்பற்றிச் சில கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன. மகாலிங்கசுவாமிக்குசெண்பகப்பூ நித்தியம் சாத்தி வருவதற்காகத்திருவெண்காடுபிச்சனால்நிவந்தம்அளிக்கப் பெற்றது. சோழன் இராஜகேசரிவர்மன் காலத்தில் (கி.பி.995 - 1119) 10ஆவது ஆண்டில்278ஆம் நாளில் அரசி பஞ்சவன்மாதேவியாரால்உமாசகிதருடைய தங்க உருவம் அமைக்கப் பெற்றது. திருக்காமக்கோட்டமுடையநாச்சியாருக்குஇராஜகேசரி வர்மன்9ஆம் ஆண்டில் (கி.பி.994)நம்பிராட்டியார்பஞ்சமாதேவியாரால்9 கழஞ்சு பொன் அளிக்கப் பெற்றது. பல கல்வெட்டுக்களால் திருமஞ்சனம் கொண்டுவர மண்குடங்கள்அளிக்கப்பெற்றமைஅறியப்படுகின்றது. இதனால் அபிஷேகத்திற்குமண் குடங்களினாலேயே தீர்த்தம் கொண்டு வந்தமை அறியலாம். விக்கிரம சோழன்5ஆம் ஆண்டில்மாணிக்கக் கூத்தர் கோயில் குறிக்கப்பெறுகிறது. இது நடராஜர்கோயிலோ இல்லையோ என்பது அறியக்கூட வில்லை. சோழர்கள்காலத்துச்சமயாச்சாரியரிடம் உள்ள அன்பை விளக்கும்அறிகுறியாக அமைந்த அடையாளங்கள் பல. அவற்றுள்ஜெயங்கொண்டசோழவளநாட்டில்திருவழுந்தூர் நாட்டின் விக்கிரம சோழன் ஆறலூரில் உள்ள வாணாதிராயன் என்பவன் ஆளுடையபிள்ளையார் படிவத்தைஅமைக்கப் பணம் கொடுத்தான். மேலும் ஆளுடைய பிள்ளையார், ஆளுடைய நம்பி இவர்களுடைய படிவத்திற்காக நிவேதிக்க வரியில்லாத நிலத்தை உய்யக்கொண்டான் வளநாட்டில்இருமரபுந்தூய பெருமான் சதுர்வேதி மங்கலத்தில் அளித்தான். விக்கிரமபாண்டியன் சாந்திவிழா என்ற ஒன்று விக்கிரம பாண்டியன் காலத்தில் கொண்டாடப்பெற்றதாகஅறிவிக்கிறது. சிறப்பில் சிறப்பாக நாலாவதுபிராகாரத்தில் உள்ள மூகாம்பிகை பிடாரி,யோகிருந்தபரமேஸ்வரி என வழங்கப்பெறுகிறார். ஏனைய கல்வெட்டுக்கள்விளக்கீட்டிற்காகஅரசனும்அரசியும்நிலமும்,பொன்னும்,ஆடும் அளித்தமைஅறிவிப்பன.
பதிக வரலாறு:
திருஞானசம்பந்தப் பிள்ளையார்,திருநாகேச்சரத்துஇனிதமரும்செங்கனகத்தனிக்குன்றை வணங்கி,நாகநாதப்பெருமானின்பிணிதீர்க்கும்பெருங்கருணையைப்போற்றித்திருவிடைமருதூருக்குவழிக்கொள்கின்றவர் “ஓடேகலன்” என்னும் இத்திருப்பதிகத்தையருளிச்செய்தார்கள். போகும் போதுஅளவிலாப்பெருமகிழ்ச்சிதிருவுள்ளத்தெழ “என்னையாளுடையபிரான் உறைகின்றஇடைமருதுஈதோ: என்று அமைத்து இன்னிசைப் பதிகம் அருளிக்கொண்டேஇடைமருதிற்குஎழுந்தருளினார்கள்.
THE HISTORY OF THE PLACE
32. THIRU-IDAI-MARU-THOOR
The sacred place Thiru-idai-maru-thoor is also known as Maththiyaarchchunam, as it lies in between Mallikaarchchunam (Sree Parvatham) of the north and Putaarchchunam (Thiruppudaimarudhoor near Ambasamuththiram) of the south. These three temples all have marudhu (archchunam) tree for their sacred tree. This temple is located on the south bank of Cauvery in Chola Naadu. It has a rail route and a bus route connecting Mayiladuthurai and Kumbakonam.
Those who offered worship here includes Uma Dheviyaar, Vinaayakar, Murugan, Vishnu, Kaali, Ilakkumi, Sarasvathi, Vedhaas, three crores of Uruththirars, twelve Sooriyars, Vasishtar, an elephant named Ayiraavatham, Sivavaakkiyar, Kapilar, Agasthiyar, Varaguna Thevar, Saint Pattinaththu Adikal etc.
It is in this temple that the king Varaguna Paandiyan got rid of 'biramahaththi' (the sin of having killed a Brahmin), which is situated on the right of the entrance at the second eastern gopuram. Pattinaththu Adikal and Paththiragiriyaar resided at the east and west entrances, respectively. A separate shrine for Mookambikai, where the Goddess performed thavam, is located at the entrance to the shrine of the Goddess. The large ambulatory (piraakaaram) is known as the Asvamedha Pirakaaram as circumambulating in it is said to give the same benefit as performing an Asvamedha sacrifice. One can see even today that persons who are mentally-ill or possessed by ghosts are rid of such afflictions if they circumambulate the temple. With this temple as the central Mahaalinga shrine, Chidhambaram becomes the shrine of Nataraajar, Aalangkudi of Dhashinaamoorthi, Sooriyanaar Koyil of Navagrahas, Thirvalanjchuzhi of Vinaayaka, Suvaamimalai of Murugan, Seekaazhi of Vayiravar, and Seinjaloor that of Chandesuvarar. The festival of Thaippoosam is of importance here and the Lord visits the river Cauvery at the Ayiraavanaththurai.
Stone Inscriptions
There are 149 inscriptions pertaining to this temple. They belong to the periods of Chola monarchs from Paraanthakan I (905 - 947 CE) to Kuloththungkan III and of Paandiya kings Varagunan and Sundhara Paandiyan. From these we know that this place was known as Thiruvidaimarudhoor of Thiraimoor Naadu in Uyyakkonda Chola Valanaadu. Parakesari Varman Raajendhiran I gifted sheep in his 3rd regnal year for lighting lamps at the Ekanaayakan Thiruvaasal. This indicates that Lord Mahaalingar was known as Ekanaayakar.
The Somaskandhar of this temple is named Aadal Vidangka Thevar. This deity was installed by a Pallavaraayan of Inga Naadu. Paraanthakan I has given grants, in his 37th regnal year, for celebrating the Thiruvaadhirai, Sadhayam and New Moon days. He also gave 8 'ilaikkaasu' for the shrine of Poornaganapathi, located to the south of the sanctum at Thiruvidaimarudhoor. From this we know that the Ganapathi at the sanctum was known as Poornaganapathi. Some of the inscriptions give information about the Thaippoosam festival. One Thiruvenkaadu Pichchan provided a grant for adorning the Lord Mahaalingar with Senbagam flowers everyday. On the 9th regnal year, Chola King Raajakesari Varman's (985 – 1113 CE) queen, Panjchavan Maadhevi, caused to install a golden image of Umaasakithar. In the 9th regnal year of the same king (994 CE), Nampiraattiyaar Panjchamaadheviyaar gave nine ‘kazhanju' of gold to the Goddess, Naachchiyaar of Thirukkamakkottam.
Many inscriptions make note of the fact that earthen pots were donated for bringing water for the holy bathing, from which we know that it was customary to use earthen pots for that purpose. An inscription of the 5th year of Vikkirama Cholan refers to a Maanikkak Kooththar temple. It is not known whether this is a Nataraaja shrine. There are many indications to show the prevalence of love for saints during the Chola times. Among these the following may be noted: One Vaanaadhiraayan of Vikkirama Cholan Aaraloor in the Thiruvazhundhoor Naadu of Jayangkonda Chola Valanaadu gave money to make an image of Aaludaiya Pillaiyaar. Irumarabum Thooya Perumaal gave tax-exempted land in Uyaakkondaan Valanaadu for food offering to icons of Aaludaiya Pillaiyaar and Aaludaiya Nambi. We also know from the inscriptions thatduring the reign of Vikkirama Paandiyan a festival known as Vikkirama Paandiyan Saanthi was celebrated. Also we come to know that the Mookaambikai Pidaari, in the fourth ambulatory was known as Yogirundha Paramesvari. Other inscriptions inform of the gifts by kings and queens, of land, gold and sheep for lamps.
INTRODUCTION TO THE HYMN
Thiru-Gnaanasambandar proceeded from Thiru-Naake-ch-charam to Thiru-idai-maru-thoor . As he came close to this holy town, he saw the temple tower. His joy welled up in him and he sang the following hymn.
திருச்சிற்றம்பலம்
32.திருவிடைமருதூர்
பண் : தக்கராகம்
ராகம் : காம்போதி
ஓடேகலணுண்பதுமூரிடுபிச்சை
காடேயிடமாவதுகல்லானிழற்கீழ்
வாடா முலைமங்கையுந்தானுமகிழ்ந்
தீடாவுறைகின்றவிடை மருதீதோ.1
ஓடேகலன்;உண்பதும் ஊர் இடு பிச்சை;
காடே இடம் ஆவதுகல்லால்நிழல் கீழ்
வாடாமுலைமங்கையும்தானும் மகிழ்ந்து,
ஈடாஉறைகின்றஇடைமருதுஈதோ.
பொருள்: சிவபிரானுக்கு உண்ணும் பாத்திரம் பிரம கபாலம் ஆகும். அவர் உண்ணும் உணவோஊர் மக்கள் இடும் பிச்சையாகும். அவர் வாழும் இடமோஇடுகாடாகும். அத்தகைய சிவபிரான் கல்லாலமரநிழற்கீழ்நன்முலைநாயகியும்தானுமாய் மகிழ்ந்து பெருமையோடு விளங்கும் திருத்தலமாகயஇடைமருதுஇதுதானோ?
குறிப்புரை:ஓடு ௭டுத்து ஊர்ப்பிச்சைஏற்றுக்காடிடங்கொள்ளும் பெருமான் பெருமுலைநாயகியோடுஎழுந்தருளும்இடைமருதீதோ என்று வினாவுகிறதுஇப்பதிகம். ஓடு - பிரமகபாலம். வாடாமுலை மங்கை என்பது பெருமுலைநாயகி என்னும் அம்மையின்திருநாமத்தைக்குறித்தது. ஈடா - பெருமையாக.
Lord Civan utilizes the skull of Brahma as His begging bowl. He consumes the food given by town folks as alms. The crematory is His pastime place. He is happily seated under the shadow of Kallaala tree (a specie of Banyan tree but without stilt roots) along with His consort Nan-mulai Naayaki with self-esteem. Is this the famed Idai-maru-thoor where Lord Civan is entempled?
Note: The goddess of this shrine is called Vaadaa Mulai Mangai. She is also hailed as Nan-mulai Naayaki. Kallaall: The Banyan tree that has no stilt roots.
At the close of an age, all elements merge one in another and finally in Lord Civan. Then Lord Civan alone remains and will be insight in the entire universe. The universe then will appear as cemetery. This event is metaphorically sung as “-” literally meaning as He abides in the burning ghat (Cemetry).
தடங்கொண்டதொர்தாமரைப்பொன்முடிதன்மேல்
குடங்கொண்டடியார்குளிர்நீர்சுமந்தாட்டப்
படங்கொண்டதொர்பாம்பரையார்த்தபரமன்
இடங்கொண்டிருந்தான்றனிடை மருதீதோ.2
தடம் கொண்டது ஒர்தாமரைப்பொன் முடி தன்மேல்
குடம் கொண்டு அடியார் குளிர்நீர் சுமந்து ஆட்டப்,
படம் கொண்டது ஓர் பாம்பு அரை ஆர்த்த பரமன்
இடம் கொண்டு இருந்தான் தன் இடைமருதுஈதோ.
பொருள்: சிவபிரான் பெரிய குளங்களில்பறித்த பெரிய தாமரை மலர்களை தம் அழகியதிருமுடியில் சூடி இருக்கிறார். அடியவர்கள் குடங்களைக் கொண்டு குளிர்ந்த நீரை முகந்துசுமந்து வந்து திருமுடியில் திருமுழுக்கு ஆட்டுகின்றனர். படம் எடுத்தாடும் நல்ல பாம்பைஇடையிலேகட்டிக்கொண்டிருக்கும்பரமனாகிய சிவபிரான் தாம் விரும்பிய இடமாகக்கொண்டுறையும்இடைமருதுஇதுதானோ?
குறிப்புரை: தடம் - குளம். தாமரைப்பொன்முடி. தாமரைசூடிய அழகிய சிரம்.
The devotees of Lord Civan bring cool water in their pots to give Him sacred bath and pour on His beautiful head. He has worn on His head big lotus flowers plucked from pools. He has tied round His waist the hooded snake as His belt. This Lord Civan loves to abide in Idai-maru-thoor. Is Idai-maru-thoor the place where God likes to reside?
வெண்கோவணங்கொண்டொருவெண்டலையேந்தி
அங்கோல்வளையாளையொர்பாகமமர்ந்து
பொங்காவருகாவிரிக்கோலக்கரைமேல்
எங்கோனுறைகின்றவிடை மருதீதோ.3
வெண்கோவணம் கொண்டு ஒரு வெண்தலை ஏந்தி,
அம்கோல்வளையாளை ஓர் பாகம் அமர்ந்து,
பொங்காவருகாவிரிக்கோலக்கரை மேல்,
எம்கோன்உறைகின்றஇடைமருதுஈதோ.
பொருள்: சிவபிரான் வெண்மையானகோவணத்தைஅணிந்துள்ளார். அவர் ஒப்பற்ற வெள்ளியபிரமகபாலத்தைக் கையில் ஏந்தியுள்ளார். அழகியதாய்த் திரண்ட வளையல்களைஅணிந்தஉமாதேவியை ஒரு பாகமாக அவர் விரும்பி ஏற்றுள்ளார். பொங்கி வரும் காவிரியாற்றின் அழகிய கரைமீதுஎம்தலைவராய் உள்ள சிவபிரான் எழுந்தருளியஇடைமருதூர்இதுதானோ?
குறிப்புரை: அம்கோல்வளையாளை - அழகிய திரண்ட வளையல்அணிந்தஉமாதேவியை. அமர்ந்து - விரும்பி ஏற்று.
Lord Civan wears a white loin cloth (Kōvanam ). He holds in His hand the white skull of Brahma. He cherishes in sharing His left portion of His body to His consort Umaa Devi. The river Cauvery gracefully runs and its waters surge on it's banks where Idai-maru-thoor is situated; is this the place where Lord Civan is enshrined?
அந்தம் மறியாதவருங்கலமுந்திக்
கந்தங்கமழ்காவிரிக்கோலக்கரைமேல்
வெந்த பொடிப்பூசியவேதமுதல்வன்
எந்த யுறைகின்றவிடை மருதீதோ.4
அந்தம்(ம்) அறியாத அருங்கலம்உந்திக்
கந்தம் கமழ் காவிரிக்கோலக்கரை மேல்
வெந்தபொடிப்பூசிய வேதமுதல்வன் -
எந்தை-உறைகின்றஇடைமருதுஈதோ.
பொருள்: காவிரியாறு அரிய அணிகலன்களைக்கரையில் வீசி,மணம் கமழ்ந்து வருகிறது. அதன் அழகிய கரைமீதுதிருவெண்ணீறுஅணிந்தவனாய்,முடிவறியாதவேதமுதல்வனாய்விளங்கும் எம்தந்தையாகிய சிவபிரான் உறைகின்றஇடைமருதுஇதுதானோ?
குறிப்புரை: அந்தம் அறியாத வேதமுதல்வன் எனக்கூட்டுக. அருங்கலம் உந்தி - அரிய ஆபரணங்களைக்கரையில் வீசி.
River Cauvery carries rare gems and throws them on its banks. Our father Lord Civan smears holy ashes over His body. He is the Chief of Vedas. He has no end. Is this the place Idai-maru-thoor where Lord Civan is enshrined?
வாசங்கமழ்மாமலர்ச்சோலையில்வண்டே
தேசம் புகுந்தீண்டியொர்செம்மையுடைத்தாய்ப்
பூசம்புகுந்தாடிப்பொலிந்தழகாய
ஈசனுறைகின்றவிடை மருதீதோ.5
வாசம் கமழ் மா மலர்ச்சோலையில்வண்டே
தேசம் புகுந்து ஈண்டிஒர் செம்மை உடைத்து ஆய்ப்,
பூசம் புகுந்து ஆடிப்பொலிந்துஅழகுஆய
ஈசன் உறைகின்றஇடைமருதுஈதோ.
பொருள்: மணம் கமழும் சிறந்த மலர்களை உடைய சோலைகள்வண்டுகளைக்கொண்டன. உலக மக்கள் பலரும் பல இடங்களில் சுற்றிச்செம்மையாளராய்இருப்பர். அவர்கள் தைப்பூசத்இருநாளில்நீராடிவணங்குவர். பொலிவும் அழகும் உடையவனாய்ச் சிவபிரான் எழுந்தருளிவிளங்குவான். இவ்வளவு சிறப்புக்களை உடைய திருவிடைமருதூர் என்னும்தலம் இதுதானோ?
குறிப்புரை: வண்டு புகுந்து ஈண்டிசெம்மையுடைத்தாய் இருக்க. பூசம் புகுந்து ஆடி அழகாய ஈசன் உறைகின்றஇடைமருது என வினைமுடிவு செய்க. தேசம் புகுந்து - பல இடங்களிலும் சுற்றி,செம்மை உடைத்தாய் - குரலின் இனிமை படைத்து. இத்தலத்தில்தைப்பூசத் திருநாள் அன்று இறைவன் காவிரியில்தீர்த்தங்கொள்வர்.
Is this the place Idai-maru-thoor where lovely and handsome Lord Civan manifests and shines. In this town fragrant and attractive flowers thrive in splendour in the flower gardens where the bees are humming. People all over the world gather in this town as devotees, take their bath, and adore Lord Civan of this place on the festive day that falls on the eight star day on the tenth month known as Thai Poosam Day .
Note: The idol of Lord Civa is carried to the Cauvery during the month of Thai (January-February), on the Pusam-day. Pusam is the star called Castor. On this day the Lord has His ablutions in the sacred river. This verse also speaks of the bees that hum in the flowery gardens. These have had their ablutions in the pollen of flowers. They too shine like the Lord after His ablutions.
வன்புற்றிளநாகமசைத்தழகாக
என்பிற்பலமாலையும்பூண்டெருதேறி
அன்பிற்பிரியாதவளோடுமுடனாய்
இன்புற்றிருந்தான்றனிடைமருதீதோ.
வன் புற்று இள நாகம் அசைத்து அழகுஆக
என்பில்பலமாலையும் பூண்டு,எருது ஏறி
அன்பில்பிரியாதவளோடும்உடன்ஆய்
இன்புஉற்று இருந்தான் தன் இடைமருதுஈதோ.
பொருள்: சிவபிரான்,வலிய புற்றுக்களில் வாழும் இள நாகங்களைஇடையிலேஅழகாகக்கட்டிக்கொண்டுள்ளான். அவன்,எலும்பால் இயன்ற மாலைகள்பலவற்றையும்அணிகலன்களாகப்பூண்டுள்ளான். அவ்வகைச்சிறப்புடைய சிவபிரான்,அன்பிற் பிரியாத உமையம்மையோடும்உடனாய்எருதேறிஇன்புற்றுறையும்திருவிடைமருதூர் என்பதும்இதுதானோ?
குறிப்புரை: வல்புற்றுஇளநாகம் - வலிய புற்றில் வாழும் இளநாகம் அவைகளை அவயங்களிலே| அணியாகக் கட்டி. அன்பில்பிரியாதவள் - பிரியாவிடையாகிய பார்வதி.
Is this the place called Idai-maru-thoor where Lord Civan riding on the Bull along with His consort, the ever devoted Paarvathi Devi happily manifests? He dons His waist by young snakes that live in strong ant-hills and binds it nicely. He wears on His body as many as possible garlands made of bones.
Note: Civa never parts from Uma. "Aanaiyin neekam indri nirkum" are the words of St. Meykandaar.
தேக்குந்திமிலும்பலவுஞ்சுமந்துந்திப்
போக்கிப்புறம்பூசலடிப்பவருமால்
ஆர்க்குந்திரைக்காவிரிக்கோலக்கரைமேல்
ஏற்க விருந்தான்றனிடை மருத்தோ.7
தேக்கும்திமிலும்பலவும்சுமந்துஉந்திப்,
போக்கிப் புறம் பூசல் அடிப்பவருமால்
ஆர்க்கும்திரைக்காவிரிக்கோலக்கரைமேல்
ஏற்க இருந்தான்தன்இடைமருதுஈதோ.
பொருள்: தேக்கு,வேங்கை,பலா ஆகிய மரங்களைக்காவிரியாறு சுமந்து வருகிறது. அம்மரங்களை இரு கரைகளிலும் எடுத்து வீசுகிறது. ஆரவாரித்து வரும் அலைகளைஉடையதாய் வரும் காவிரியாற்றின் அழகிய கரைமீது சிவபிரான் பொருந்த உறையும்இருவிடைமருதூர் என்னும் தலம் இதுதானோ?
குறிப்புரை: திமில் - வேங்கைமரம். பல - பலாமரம். புறம் போக்கி - இம்மரங்களைஇருகரைமருங்கும்எடுத்துவீசி. பூசல் அடிப்ப - கரையுடன் மோத. ஆல் - அசை. ஆர்க்கும் திரை - ஆரவாரிக்கின்ற அலை. ஏற்க - பொருந்த.
Is this the place called as Idai-maru-thoor where Lord Civan is enshrined in the temple on the gorgeous banks of river Cauvery. This river carried teak, kino and jack trees and leaves them on both sides of its banks. The waves of the river gush forth- making heavy noise along its course.
Note: Vengkai: Kino tree
Palaa: Jack tree
பூவார்குழலாரகில்கொண்டுபுகைப்ப
ஒவாதடியாரடியுள்குளிர்ந்தேத்த
ஆவாவரக்கன்றனையாற்றலழித்த
ஏவார்சிலையான்றனிடைமருதீதோ.
பூ ஆர்குழலார் அகில் கொண்டு புகைப்ப,
ஓவாது அடியார் அடி உள் குளிர்ந்து ஏத்த,
ஆவா! அரக்கன் தனை ஆற்றல் அழித்த
ஏஆர்சிலையான் தன் இடைமருதுஈதோ.
பொருள்: மலர் சூடிய கூந்தலை உடைய மங்கல மகளிர் அகில் தூபம் இடுகிறார்கள்.அடியவர்கள் இடையீடு இன்றிச்சிவபிரானுடையதிருவடிகளை மனம் குளிர்ந்து ஏத்துகின்றனர்.பரிதாப நிலையை நேரில் கண்டவர் “ஆ ஆ” என்று இரங்குமாறு,இராவணனுடையஆற்றலைஅழித்தவர் சிவபிரான்அவர் அம்பு பொருத்தற்கேற்றமலைவில்லைக் கையில் கொண்டவர். அவ்வகைப் பெருமை கொண்ட சிவபிரான் இருக்கும்திருவிடைமருதூர் என்னும் தலம் இதுதானோ?
குறிப்புரை: இது மகளிரும்அடியாரும்அவரவர்கள்பரிபாகத்திற்கேற்பவழிபடுகின்றார்கள்என்கின்றது. ஓவாது - இடைவிடாமல். ஆவா;இரக்கக்குறிப்பிடைச் சொல். ஏ ஆர் சிலை - பெருக்கத்தோடு கூடிய கயிலை மலை.'ஏபெற்றாகும்'என்பது தொல். சொல். உரி (பெற்று - பெருக்கம்)'ஏகல் அடுக்கம்'என்னும் நற்றிணையும் (116)காண்க.
Is this the place called Idai-maru-thoor where Lord Civan having in His hand the mountain bow to which a dart is fixed, abides. He suppressed the indomitable bravery of the Asura - the king of Sri Lanka, while people witnessed it shouted Ah! Aa!! Young girls dry their flower decked wet hair by the smoke of eaglewood. Devotees adore Holy Feet of Lord Civan of this place uninterruptedly and with all sincerity in their heart. Note: The word 'Silai' means (1) mountain and (2) bow.
முற்றாததொர்பான்மதிசூடுமுதல்வன்
நற்றாமரையானொடுமானயந்தேத்தப்
பொற்றோளியுந்தானும்பொலிந்தழகாக
எற்றேயுறைகின்றவிடை மருதீதோ.9
முற்றாததுஒர்பால்மதிசூடும்முதல்வன்,
நல்-தாமரையானொடு மால் நயந்துஏத்தப்,
பொன்-தோளியும்தானும்பொலிந்துஅழகுஆக
எற்றேஉறைகின்றஇடைமருதுஈதோ.
பொருள்: சிவபிரான்,முற்றாதபால்போன்ற இளம் பிறையைமுடிமிசைச்சூடியமுதல்வனாய்இருக்கிறான். நல்ல தாமரை மலர்மேல்உறையும்நான்முகனும்,திருமாலும் விரும்பித் தொழுகிறார்கள். உமையம்மையும்,தானுமாய்ச்சிவபிரான்பொலிந்துஉறைகின்றதிருவிடைமருதூர் என்னும் தலம் இதுதானோ?
குறிப்புரை: பால்மதி - பால்போல்வெள்ளியபிறை. மால் நயந்துஏத்தஎனப்பிரிக்க. உறைகின்றஇடைமருதுஈதோஎற்றேஎனக்கூட்டுக. எற்று - எத்தன்மைத்து;என வியந்து கூறியவாறு.
Is this the place called Idai-maru-thoor where Lord Civan manifests and shines aesthetically along with His consort Umaa Devi? He has on His head the young milky white moon which is not fully grown. Brahma who is seated on the lotus flowers and Thirumaal obediently worship Lord Civan here.
Note: The word 'etre' occurring in the last line of the Tamil verse, is an interjection indicating a marvel. It literally means: "What may this be!"
சிறுதேரருஞ்சில்சமணும் புறங்கூற
நெறியேபலபத்தர்கள்கைதொழுதேத்த
வெறியாவருகாவிரிக்கோலக்கரைமேல்
எறியார்மழுவாளனிடை மருதீதோ.10
சிறுதேரரும்சில்சமணும்புறம்கூற,
நெறியே பல பத்தர்கள்கைதொழுதுஏத்த,
வெறியாவருகாவிரிக்கோலக்கரைமேல்
எறி ஆர்மழுவாளன்இடைமருதுஈதோ.
பொருள்: சிறுமதியாளராகியபெளத்தர்களும்,சிற்றறிவினராகியசமணர்களும் புறம் கூறித்திரிகிறார்கள். சிவபக்தர்கள் பலர் முறையாலே கைகளால் தொழுது துதிக்கின்றனர்.பகைவரைக்கொன்றொழிக்கும்மழுவைஏந்திய சிவபிரான் எழுந்தருளியுள்ளதும்,மணம் _கமழ்ந்து வரும் காவிரியாற்றின் அழகிய கரைமேல் உள்ளதும் ஆகிய திருவிடைமருதூர்என்னும் தலம் இதுதானோ?
குறிப்புரை: புறச்சமயிகள்புறங்கூறுகிறார்கள்;பக்தர்கள்கைதொழுதுபயன்கொள்ளுகிறார்கள் என்று இறைவனுடைய வேண்டுதல் வேண்டாமையையும்,ஆன்மாக்கள் அவர் அவர்பரிபாகத்திற்கேற்பப் பலன் கொள்ளுகிறார்கள்என்பதையும்அறிவித்தபடி. தேரர் - புத்தர். எறியார்மழுவாளன் - எறியுந்தன்மைவாய்ந்தமழுவைத்தாங்கியவன்.
Is this the place called Idai-maru-thoor where Lord Civan is entempled? This town is situated on the attractive banks of river Cauvery, which spreads fragrant aroma along its course. Lord Civan holds in His hand the battleaxe, which can destroy enemies. The narrow minded Buddhists and the Samanars with the imperfect knowledge are backbiting on others. But all the sincere devotees worship Lord Civa here in this place with folded hands in the proper manner.
கண்ணார் கமழ்காழியுண்ஞானசம்பந்தன்
எண்ணார்புகழெந்தையிடைமருதின்மேல்
பண்ணோடிசைபாடியபத்தும்வல்லார்கள்
விண்ணோருலகத்தினில்வீற் றிருப்பாரே.11
கண் ஆர் கமழ் காழியுள்ஞானசம்பந்தன்
எண் ஆர் புகழ் எந்தை இடைமருதின்மேல்
பண்ணோடு இசை பாடியபத்தும்வல்லார்கள்
விண்ணோர்உலகத்தினில்வீற்றிருப்பாரே.
பொருள்: இடம் அகன்றதும்,மணம் கமழ்வதுமானசீகாழிப்பதியில்தோன்றியவர்ஞானசம்பந்தன். அவருடைய எண்ணத்தில்நிறைந்துள்ளதும் புகழை உடையதும்சிவபிரானுக்குஉரியதுமானதிருவிடைமருதூர்மீதுபண்ணோடியன்றஇசையில்பத்துப்பாடல்களைப்பாடியுள்ளார். இப்பாடல்களைப் பாட வல்லவர்கள்விண்ணோர்உலகில் வீற்றிருக்கும்சிறப்பைப்பெறுவார்கள்.
குறிப்புரை: கண்ணார் இடமகன்ற,எண்ணார்புகழ் - எண்ணத்தைப் பொருந்திய புகழ். வீற்றிருப்பார் - பிறதேவர்க்கில்லாதபெருமையோடு இருப்பார்கள்.
Gnaanasambandan hails from the broad city of Seekazhi where fragrance smell fills the air all around. He has sung in tuneful harmony this ten verses, what all he had in mind about Idai-maru-thoor where Lord Civan gloriously resides. Those who can chant these ten verses with sincere devotion will have the rich benefit of abiding in the world of Devas.
திருச்சிற்றம்பலம்
32ஆம் பதிகம் முற்றிற்று