logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

சிவ கீர்த்தனைகள் - பலர் பாடிய சிவ கீர்த்தனங்கள் தொகுப்பு

(பலர் பாடிய சிவ கீர்த்தனங்கள் தொகுப்பு)

சீர்காழி அருணாசலக்கவிராயர்   கீர்த்தனம்

        இராகம்--சௌராஷ்டிரம் -ஆதிதாளம்

            பல்லவி

    தில்லைத்தலம் போலே சொல்லப் புவிமீதிற்
    றெய்வ ஸ்தலங்களுண்டோ நாளும்

            அநுபல்லவி,

    சொல்லுந் தொளாயிரத் தொண்ணூற்றொன்பது தூயகலை
    நிறைபாத்திரம் எங்கும் போய் வருமோர் கலைமாத்திரம் ஆக
    வாயிரமாஞ் சிவக்ஷேத்திரந்            (தில்லை)

            சரணங்கள்.

1.     பத்திமணிக் கோபுரத்தைக் கண்டாற் சிவபத்தியிலே மனந் தூக்
    கும் அதை, உய்த்து வரவரச் சித்தம் பரிசுத்த முள்ளே சிவஞானந்
    தேக்கும்-  அந்த நெற்றியிற் பூதிப்பொடித் தூள்கள் பட்டாலும்
    நீங்காப்பிணி யெல்லாம் நீங்கும்வந்து சற்றே மிதித்தாலு மெல்ல
    வர்க்குஞ் சிவ தன்ம நினைவை யுண்டாக்கும் பூர்வகன்ம வினைகளை
    ப்போக்கும் மறுஜென்ம மெடாமலே காக்கும்        (தில்லை)

2.     நங்கை சிவகாமி சந்நிதி காணவே நன்மையிலே நிலைகாட்டும் மஹா
    லிங்கத் திருமூலநாதரைச் சேவிக்க நெஞ்சிற் கவலையை யோட்டும்,
    ஆரங்க சபைதனைக் கண்களாற் காணவே அற்புதந்தானே பாரா
    ட்டுஞ் சற்றுஞ் சங்கையில்லாச் சிவகங்கையின் மூழ்கியே ஸ்நா
    னஞ் செய்வார்க்கின்பங் காட்டுஞ் ஞானந் தப்பாமலே கூட்டும்
    முத்தியானந்தத்தின் முழுக்காட்டுந்         (தில்லை)

3.     கோடி மறையாலுஞ் சொல்லி முடியுமோ கோடான கோடியுல்லா
    சம் ஐயன் ஆடிய பாதம் பணியாத பேருக்கதைவிட வேறுண்டோ
    மோசம் நாளுந்தேடிய மூவரும் தேவரும் வந்து தினந்தினஞ்
    செய்குவர் வாசம் -உண்மை நாடிய சாலோகமே முதலாகிய நாலுகதி
    க்கும் விலாசம் ஒருக்காலும் வரா தெமபாசம் இதுவே பூலோக
    கைலாசம்                     (தில்லை)


வைத்தீச்சுரன் கோயில் குமாரசாமிக் கவிராயர்

        சொற்கட்டு அர்த்தமுள்ள கீர்த்தனம்

        இராகம்--சௌராஷ்டிரம்-ஆதிதாளம்

            பல்லவி

    ஆடவெடுத்த பாதம் நம்மை யாள வெடுத்த பாதம்

            அநுபல்லவி

    தோடவிழ் கஞ்ச வாவி         சூழுந் தில்லை நடராஜர்
    சுகமிழைத்துயிரை        வருத்தும் பஞ்சமலத் தொந்தமகல
    தொந்தோந் தொந்தோந்  தொந்தோம் தோமென்     (றாடவெடுத்த)

            சரணங்கள்.

1.     பறவை நுழைந்திடுங் குடம்பை அரவுரிபோற் பவ சாகரத் துழலு
    டம்பை உறுதியெனும் மடமை மாற்றி விடய வழி யுளஞ்செல்
    லாமலே தேற்றி கரையேற்றி மறலியை வென்ற வெற்றிக் கழல்
    கணீர் கணீரென்ன மலர்க்கை யேந்தும் வன்னி ,தக தக தகென சரு
    வ சாட்சியாய் நின்று நடனந்தொழுதவர்க்  கிகபர செல்வந் தகுந்
    தகுந் தகுந் தகுந் தகுந் தகுந் தகுமென்         (றாடவெடுத்த)

2.     பொய்வகை மதங்களைப் போக்கி வேடமும் நீறும் பொருளென்
    னு மெய்மையை யுண்டாக்கித் தெய்வத்தொழிலைந்து மிலங்கத்
    தேவி மேல் வைத்த திருவருட்பார்வை துலங்கக் கலிவிலங்கத் துய்
    ய மலர்ச்சிலம்பு கலின் கலிலென்னச் சுரரும் முனிவரரும் ஜெய
    ஜெய ஜெயவெனச் சைவ வைதிக சிவ சமயம் மெய்கண்டதெய்வந்
    தாந்தாந் தாந்தாந் தாந்தாந் தாந்தாந் தாந்தாந் தாமென் (றாடவெடுத்த)

3.     பரிசதகோடி போற்றோன்றி யொரு பொற்பாத பதுமம் முயல
    கன்மேலூன்றி இருவரின்னிசை யாழ்பாடப் புலியும் பாம்பு
    மேத்தி வணங்கிக் கொண்டாடச் சுருதிகூடத் திருமலைக் கந்தனு
    ந் தந்தனுந் தாதாவெனச் சிந்திக்குமரன் மாலயன் றாதாவென
    வொருதுடி யன்பிலர்க்குந் தெரிசித்தளவில் வீ டுண் டுண் டுண்
    டுண்டுண் டுண்டுண் டுண்டுண் டுண்டுண்டென்     (றாடவெடுத்த)


            நிந்தாஸ்துதி

            கீர்த்தனம்

         இராகம்-பரஸ்-ஏகதாளம்

            பல்லவி,

    திருக்கூத்திற்குத் துணிந் தம்பலத்தில் வந்து மின்னந்
    திரை மறைவே சொல்லும் ஐயரே

            அநுபல்லவி.

    மருக்கூவிளம் புனை சடை மீதி லொருத்தியை
    வைத்துக்கொண்டே செய்தி மறைத்தான் மறைக்கலாமோ     (திரு)

            சரணங்கள்

1.     ஆதிக்க மனையாட்டி பாதியுடம் பானத்தை யரிவார்களுலகுள்
    ளோர்யாரும் வாதுக்காடின காலசைந்து போனத்தை நீர்மறைப்ப
    தெப்படி யெண்ணிப்பாரும் போதாக்குறைக்கு மூத்தமகன் கா
    ற் சப்பாணிக்காற் புதுமையிதின் மேலுண்டோ வயிறும் பெருவ
    யிறு ஏதுக் கென்று சொல்லலாஞ் சமாதானந் தேவரீருக்குமி
    டம் வெளியின் றிருக்குஞ் சொல்லுதே நீர்            (திரு)

2.     இஷ்டமாயன்னம் பாலிருக்கத் தலையோட்டினி லிரந்த பித்தனெ
    ன்ற சொல்லடங்குமோ சட்டஞ் சட்டமொரு கண்ணில்லா தவ
    னென்று தரணியோர் சொல்லும் வார்த்தை மடங்குமோ பிட்டு
    க்கொருத்தி கூலியாளாய்ச் சம்பந்தி கைப் பிரம்பினாலடிபட்ட பே
    ச்சொளிக்குமோ வொருசட்டியிற் கொக்கவித்த வேடனை யீன்
    றும் தலைக்கறி தனையுண்டுஞ் சைவ முதல்வனென்றுந்     (திரு)

3.     ஹ ஹா கோவணமு மோடுந் திருடினீரென்பவர் வாயை நான்
    மூடலாமோ உரை -பெற்ற திருக்கோவை யுரைத்தசெந்தமிழ்க்
    கோவை யுட்கொண்டதும்மை விட்டுப்போமோ ஒருவரறிந்
    தாலல்லோ ரகசியம்  மூவாயிரவ ரறிந்திருந்துமென்றும் ரகசிய
    மோ, தெரிசித்தவர்க்கு முத்தி யளிக்குஞ் சுசீலரே திருமலைக்குக
    தாசன் றமிழ்க்கநுகூலரே                (திரு)


சிதம்பரம் அமிர்தகவி குப்பைய பிள்ளை 

        கீர்த்தனம்-இராகம் -நாதநாமக்கிரியை-ஆதிதாளம்.

            பல்லவி.

    தெரிசிக்கவேண்டும் கனக சபை தெரிசிக்க வேண்டும்

            அநுபல்லவி

    தெரிசித்த பொழுதங்கே வர முத்தி பெறலாகும்
    பரதத்துடனே யனவரதத்  தாண்டவ ரூபந்             ( தெரி)

            சரணங்கள்

1.     சாத்திரம் ஆறு நால்வேதம்  மதிற்றூணாகச்  சமயமிருபத் தெட்டா
    கமமு மன்பெரும்பூதம் போற்றிய பதினெண் புராணஞ்சிறு தூணுத்
    திரம் பொருந்திய கலையறுபத்து நாலும் பக்கத்தில் எற்றுங்கைமரமு
    ம்வினாடியும் ஆற்றதினூரமும்   ஆணிவரிச்சும் பார்த்தவெழுபத் தீரா
    யிரமா மிருநூற்றிருபத்துநாலு புவனஞ் சுற்றி வருங்கமலந் தோற்
    றுந் தத்துவந் தொண்ணூற்றாறும் பலகணிவாசல் தொடரொன்பது
    கும்பம் பரவிருந்தின்பத்  தொடுக்குஞ் சிற்றோடு மாயிரத்தெட்டுவடு
    க்கு மேனாடுஞ் சுவாசமுந் தோயவே விருபத்தோ ராயிரத் தறு நூறும்
    நேயமெனும் நமச்சிவாயப்படி முன்னின்று         (தெரி)

2.     கங்கையும்  மதியமுந் தரித்த சடைமுடியும் கதித்த நெற்றியிற் பி
    றையுதித்த திருவெண்ணீறும், பங்கய வதனமும் புருவச் சிலை முக்க
    ண்ணும் பதித்த காதிற் குண்டல மதித்த விலைமண்டலந்  தங்குமுன் 
    விடமும் மார்பிற் பணியுந் தொங்கு பொன்வடமு மாபரணமுஞ் செ
    ங்கையின் மழுமானு முடுக்கை டமருகமுஞ் சிவந்த பீதாம்பரங் கு
    விந்த விடையழகும் நங்கையுமை பார்வதி யிடத்தினின்  மன மகிழ் நாக
    ரீகமுந் தங்கத் தேகமொருபுறமும்  நாத கிண்கிணியுந் தண்டைச் சில 
    ம்பு பாதமேலணியும்புண்ணியன் மிக  நாடும்  முயலகன் மேலாடும்பொ
    ருளிருவர் தேடுங்கர்த்தனை யன்பு கூடு மனமே கண்டு (தெரி)

3.     இரணியவன்மன் வெண்பிணிதீரவே  மன மிரங்கிக் கருணை பொ
    ழிவரங்கடருபவனை ஒருமுனி மகனுக்கே யுயர் பயோத்தி தன்னை யுரி
    மையுடனழைத்துப் பருகவளித்தவனை யரிமகன் றனையே நெற்றிவிழி
    யாலெரி செய்தவனையே முத்துத்தாண்டவர்  சரசமான கவிக்குத் தரு
    பதங்கொடுத்தோனைச் சந்தத மடியவர் வந்து வணங்கி நின்று பரவுஞ்
    சிவனைச் செஞ்சொலமிர்தக் கவி துதிசெய் பையரவணிந்தோனை வைய
    கம் பணிந்தோனைப் பகரும் மெய்யருளை மூவாயிரவர் மகிழரும் பொரு
    ளைக் காலன் விடு பாசந்தனிற் படாமனேசமாக  ரட்சிக்கும் மாசிலாத
    நடராஜ மூர்த்தியை நித்தந்             (தெரி)


சபாபதி முதலியார்


        கீர்த்தனம்-இராகம்-யமுனா கல்யாணி- ஆதிதாளம்

            பல்லவி

    தாண்டவஞ்செய்யும் வகை கேளும் எங்கள் நடேசர்
    தாண்டவஞ்செய்யும் வகை கேளும்

            அநுபல்லவி.

    வேண்டும் வரம் அடியார்க்    கீண்ட அருளும் எங்கள்
    ஆண்டவன் அரவணி பூண்டவன் சிற்சபையில்         (தாண்)

            சரணங்கள்.

1.     ஓதானந்தத் தாண்டவமொன்றும் நாளும்
        உம்பர்கள் தொழுஞ் சபாதாண்டவமென்றும்
    தீதில் கவுரி தாண்டவமொன் றோடும்
        திரிபுரத்தையெரித்த தாண்டவமென்றும்
    மோதுங் காளிதாண்டவ மென்பதொன்றும் காம
        முனியுமுனிவர், தாண்டவமென்பதொன்றும்
    ஏதமில் சங்கார தாண்டவமொன் றுடனாக 
        ஏழாகமென் றாகமங்கள் தாமமா லுரைக்கும்     (தாண்)

2.     இந்தவுலகமுதல் எல்லாம் படைக்கும்
        எடுத்தவலக் கரத்திற் றமருகமென்றும்
    முந்துசராசரத்தை யெல்லாம்
        முளரிமலரை நிகரபயாஸ் தமென்றும்
    தந்த அயன்முதலோ ரெல்லால் அழியச்
        சங்காரஞ்செய்யும் இடக்கையமா தீயென்றும்
    எந்த உயிர்களையும் மறைக்கு வீசுங்கை
        எடுத்தாள் முத்திதருமென் றும்படிக்கும்         (தாண்)

3.     நகரமத ருமக வடிவாம் மகரம்
        நல்ல அபய கரத்தின் வடிவாம்
    சிகரமதழலின் வடிவாம் வகரம்
        திரோபவஞ் செய்கின்ற வீசுகை வடிவாம்
    யதாமஅனுக்கிரகஞ் செய்யமுனம்
        எடுத்த இடக்கையின் சலிவாகுமென்றும்
    தகரவித்தை தனையறிந்து தொழத்
        தக்கவடி யாருளம்புக் கமரும் நடேசர்        (தாண்)


 

Related Content

அருணாசல அட்சரமாலை (சபாபதி முதலியார்)

அருணாசலீசர்பதிகம் (புரசை சபாபதி முதலியார்)

ஸ்வாதி திருநாள் சிவ கீர்த்தனைகள்