|
Home > Events
திருநல்லுச்சேரி அ/மி ஸ்ரீ நித்யகல்யாணி உடனுறை அ/மி ஸ்ரீ சுயம்புநாதர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் - - - - - - - - - thirunalluchEri srI nithyakalyANi uDanuRai srI suyampunAthar temple mahA kumbAbishEham * * * * * அமைவிடம்:
அ/மி. ஸ்ரீ சுயம்புநாதர் திருக்கோயில், திருநல்லுச்சேரி, தரங்கம்பாடி வட்டம், நாகை மாவட்டம்.
சிறப்பு:
தமிழ்த்திரு நாட்டிலே சோழமண்டலமாம் நாகை மாவட்டத்தில் காவிரி நதியின் தெற்கேயும், தென்கடல் அழகி நதியின் வடகரையிலும் அமையப்பெற்றது நல்லின்பஞ்சேரி திருப்பதியாகும். இப்பதி பல்லாற்றானும் புகழ்பெற்ற திருத்தலமாகும். தற்போது திருநல்லுச்சேரி என்னுந் திருநாமத்தில் விளங்குகிறது.
கும்பாபிஷேக விழா:
நிகழும் மங்களகரமான சர்வஜித் வருடம் ஆனித்திங்கள் 14ம் நாள், (28 - 06 - 2007) வியாழக்கிழமை, அனுஷ நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 07.30 மணிக்குமேல் 09.00 மணிக்குள் கடக லக்னத்தில் அ/மி ஸ்ரீ நித்யகல்யாணி உடனுறை அ/மி ஸ்ரீ சுயம்புநாதர் சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூட்டியுள்ளது; பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு அ/மி ஸ்ரீ நித்யகல்யாணி உடனுறை அ/மி ஸ்ரீ சுயம்புநாதர் சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.
Back to Important Events Page
Back to Shaivam Home Page
|