|
Home > Events
திருக்களாச்சேரி அ/மி ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பிகா சமேத அ/மி ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் - - - - - - - - -
thirukkaLAchEri srI sivakAmasundari ambikA samEtha srI nAganAthar temple mahA kumbAbishEham * * * * *
அமைவிடம்:
அ/மி. ஸ்ரீ நாகநாதர் திருக்கோயில், திருக்களாச்சேரி, தரங்கை வட்டம், நாகை மாவட்டம்.
தலவரலாறு:
திருக்கயிலையில் சிவபெருமானின் சாபத்தினால் திருக்குரா மர வடிவம் பெற்ற உமையம்மையும், நாகப்பாம்பு வடிவம் பெற்ற திருமாலும் சாபவிமோசனம் பெறுவதற்காக (நாகை மாவட்டம், தரங்கை வட்டம்,) வன்மீக நாதபுரம் என்றும், ஞானபுரம் என்றும் புராண சிறப்புடைய திருக்குராக்காடு எனும் திருக்களாச்சேரி யாகிய இத்தலத்தில் நாகநாதரை வழிட்டுத் தவமிருந்து சாபவிமோசனம் பெற்றதாகத் தலவரலாறு கூறுகிறது. இங்கு உமையம்மை தங்கியிருந்து தவம் செய்யும் காலத்தில் அவ்வூரின் எட்டுத் திசைகளிலும் அஷ்ட பைரவர்கள் காவல் புந்ததற்கான சான்றுகள் உள்ளன. மேலும் இத்தலத்தில் நாகநாதரான சிவ லிங்கத்தைச் சுற்றிலும் பாம்புப் புற்றும் அப்புற்றில் உள்ள பாம்பு நாளும் சிவலிங்கத்தினைத் தரிசிப்பதும் கண்கூடு. உமையம்மையும் திருக்குரா மர வடிவில் நாகநாதர் அருகே நின்று அவரை வழிபட்டு வருகிறாள்.
சிறப்பு:
இத்தலத்தில் திருமால் வழிபட்ட காரணம் பற்றி ஸ்ரீமகா விஷ்ணு சிவ பூஜைச் செய்யும் காட்சி அமைந்துள்ளது. சர்ப்பதோஷம் (நாகதோஷம்). அங்காரதோஷம் (செவ்வாய்தொஷம்), விவாஹ தாமஸ தோஷம் (திருமணத் தடங்கல் தோஷம்), வம்ச விர்த்திதோஷம் (குழந்தைப் பாக்கியம் பெற), ஆகியவற்றிற்கு நிவாரண ஸ்தலமாக விளங்கி வருகிறது.
கும்பாபிஷேக விழா:
நிகழும் மங்களகரமான சர்வஜித் வருடம் சித்திரை மாதம் 10ம் நாள், (23 - 04 - 2007) திங்கட் கிழமை, சப்தமி திதி, புனர்வசு நட்சத்திரம், அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 09.00 மணிக்குமேல் 10.30 மணிக்குள் மிதுன லக்னத்தில் அ/மி ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பிகா சமேத அ/மி ஸ்ரீ நாகநாத சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூட்டியுள்ளது; பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு அ/மி ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பிகா சமேத அ/மி ஸ்ரீ நாகநாத சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.
Back to Important Events Page
Back to Shaivam Home Page
|