|
Home > Events
தும்பிவாடி அ/மி ஸ்ரீ செளந்தரநாயகி அம்பிகை சமேத அ/மி ஸ்ரீ பசுபதீஸ்வரர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் - - - - - - - - -
thumpivAdi srI soundaranAyaki ambhikai samEtha srI pasupathIswarar temple mahA kumbAbishEham * * * * *
அமைவிடம்:
அ/மி. ஸ்ரீ பசுபதீஸ்வரர் திருக்கோயில், தும்பிவாடி கிராமம், அரவக்குறிச்சி தாலுகா, கரூர் மாவட்டம்.
சிறப்பு:
சேர, சோழ, பாண்டிய வள நாட்டில் வற்றா வளம் கொழிக்கும் அமராவதி நதியாம் புண்ணிய தென்கிழக்கு கரையில் இந்த திருக்கோயில் மும்மூர்த்தி ஸ்தலம் அமைந்துள்ளது. இந்த திருத்தலத்திற்கும், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கும் புராணங்களும், சிற்பங்களும் தொடர்பு உள்ளது. சோழர் கால சிலைகள் சிற்பங்கள் இங்கே காணப்படுகிறது. இத்திருக்கோயில் குபேர புத்திர தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. புத்திர பாக்கியம் இல்லாத தம்பதிகள் அமாவாசை நாளில் இப்புத்திர தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் மகப்பேறு பெறுவர் என்பது இக்கோயில் ஐதீகம்.
கும்பாபிஷேக விழா:
நிகழும் மங்களகரமான சர்வஜித் வருடம் சித்திரை மாதம் 16ம் நாள், (29 - 04 - 2007) ஞாயிற்றுக்கிழமை, உத்திர நட்சத்திரம், துவாதசி திதியும், அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 06.00 மணிக்குமேல் 07.30 மணிக்குள் மேஷ லக்னத்தில் அ/மி ஸ்ரீ செளந்தரநாயகி அம்பிகை சமேத அ/மி ஸ்ரீ பசுபதீஸ்வரர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூட்டியுள்ளது; பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு அ/மி ஸ்ரீ செளந்தரநாயகி அம்பிகை சமேத அ/மி ஸ்ரீ பசுபதீஸ்வரர் சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.
Back to Important Events Page
Back to Shaivam Home Page
|