செ.கொ. சோழபுரம் (கோக்கனேரி) அ/மி ஸ்ரீ செளந்தரநாயகி உடனுறை அ/மி ஸ்ரீ சோழீச்சுரர் சுவாமி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருஞ்சாந்திப் பெருவிழா (மகா கும்பாபிஷேகம்)
- - - - - - - - -

seyangkonda chOzapuram (kOkkanEri) srI soundaranAyaki uDanuRai srI chOzhIchurar temple mahA kumbAbishEham
* * * * *

அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ சோழீச்சுரர் திருக்கோயில், செயங்கொண்ட சோழபுரம் - கோக்களேரி (கொக்கனேரி) மேல்கரை, உடையார்பாளையம் வட்டம், பெரம்பலூர் மாவட்டம்.


சிறப்பு:

இராசேந்திர சோழனால் கட்டப்பட்ட, காலத்தால் அழியாத கங்கைகொண்ட சோழபுத்திற்கு மேற்கே ஐந்து கல் தொலைவில் சென்னிவனம், நெல்லிவனம் என இருந்த இரு சிற்றூர்களும் செயங்கொண்டாரால் பாடப்பட்ட கலிங்கத்துப்பரணி என்ற நூலின் பாட்டுடைத் தலைவனாகிய முதற் குலோத்துங்கச் சோழன் காலம் முதல் இணைக்கப்பட்டு செயங்கொண்ட சோழபுரம் என இன்று பெரு நகரமாக விளங்குகிறது. இத்தலத்தில் ஐந்து சிவாலங்கள் உள்ளன.


கும்பாபிஷேக விழா:

திருவள்ளுவர் ஆண்டு 2038 பங்குனித்திங்கள் 14ம் நாள், (28 - 03 - 2007) புதன்கிழமை, பூச விண்மீனோடு கூடிய நன்னாளில் காலை 09.00 மணிக்குமேல் 10.30 மணிக்குள் அ/மி ஸ்ரீ செளந்தரநாயகி உடனுறை அ/மி ஸ்ரீ சோழீச்சுரர் சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூட்டியுள்ளது; பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு அ/மி ஸ்ரீ செளந்தரநாயகி உடனுறை அ/மி ஸ்ரீ சோழீச்சுரர் சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.

Back to Important Events Page
Back to Shaivam Home Page