|
Home > Events
நேமம் அ/மி ஸ்ரீ வேதநாயகி அம்பாள் உடனுறை அ/மி ஸ்ரீ வேதபுரீஸ்வர சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் - - - - - - - - -
nEmam srI vEdhanAyaki ampAL uDanuRai srI vEdhapurIswarar temple mahA kumbAbishEham * * * * *
அமைவிடம்:
அ/மி. ஸ்ரீ வேதபுரீஸ்வரர் திருக்கோயில், நேமம் (திருச்சிற்றேமம்), திருத்துறைப்பூண்டி வட்டம், திருவாரூர் மாவட்டம்.
சிறப்பு:
எங்கும் நிறைந்த எல்லாம் வல்ல இறைவன் உயிர்கள் உய்யும் வண்ணம் உருவாய், அருவாய், அருஉருவாய் இலிங்க திருஉருவாய் ஆலயங்கள் பலவற்றுள் எழுந்தருளி அருள்பாலிக்கின்ற தலங்கலுள் மூர்த்தி, தலம், தீர்த்தம் எனவும் திருஞானசம்பந்தர் திருப்பதிகம் பாடப்பெற்றதுமான நேமம் கிராமத்தில் எழுந்தருளியிருப்பதாகும்.
கும்பாபிஷேக விழா:
விய வருடம் பங்குனி மாதம் 11ம் நாள், (25 - 03 - 2007) ஞாயிற்றுக்கிழமை, சப்தமி திதி, மிருகசீரிஷம் நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 09.00 மணிக்குமேல் 10.30 மணிக்குள் ரிஷப லக்னத்தில் அ/மி ஸ்ரீ வேதநாயகி அம்பாள் உடனுறை அ/மி ஸ்ரீ வேதபுரீஸ்வர சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெறவிருப்பதால், பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு அ/மி ஸ்ரீ வேதநாயகி அம்பாள் உடனுறை அ/மி ஸ்ரீ வேதபுரீஸ்வர சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற வேண்டுகிறோம்.
Back to Important Events Page
Back to Shaivam Home Page
|