|
Home > Events
வேத, ஆகம & பன்னிரு திருமுறை, இயல், இசை, நாட்டிய, முத்தமிழ் விழா - - - - - - - - - vEdha, Agama, & panniru thirumuRai, iyal (natural), music, dance, muthamizh vizha * * * * *
அமைவிடம்:
கோமல் ஓம் நமச்சிவாய டிரஸ்ட், 103, பெருமாள்கோயில் வீதி, கோமல் - 609805. மயிலாடுதுறை வட்டம்.
விழா நாட்கள் & இடங்கள் :
ஆனி மாதம் 8ம் நாள் (22-06-2007) வெள்ளிக்கிழமை; இடம் : அருள்மிகு மயூரநாதர் ஆலயம், மயிலாடுதுறை. ஆனி மாதம் 9ம் நாள் (23-06-2007) சனிக்கிழமை; இடம் : அம்பாபாய் திருமண மண்டபம், மயிலாடுதுறை. ஆனி மாதம் 10ம் நாள் (24-06-2007) ஞாயிற்றுக்கிழமை; இடம் : அம்பாபாய் திருமண மண்டபம், மயிலாடுதுறை. ஆனி மாதம் 11ம் நாள் (25-06-2007) திங்கட்கிழமை; இடம் : அம்பாபாய் திருமண மண்டபம், மயிலாடுதுறை.
முத்தமிழ் விழா:
ஆனி மாதம் 8ம் நாள் (22-06-2007) வெள்ளிக்கிழமையன்று, ரிஷபக்கொடி ஏற்றி வைத்தல், 108 சிவபூசைச் செல்வர்கள் நிகழ்த்தும் சிவபூசை கூட்டு வழிபாடுகள், ஆனித் திருமஞ்சன விழா, ஸ்ரீ நடராஜப் பெருமான் திருவீதியுலா எழுந்தருளல், ஸ்ரீ ருத்ர வேத கனபாராயணம், நமச்சிவாய மற்றும் திருவைந்தெழுத்துப் பதிகங்கள் பாராயணம், மாகேஸ்வர பூஜை, திருமுறை இன்னிசை, வேதங்கள், உபநிடதங்கள், ஆகமங்கள், செந்தமிழ் திருமுறைகள், சிவகணங்களின் எண்ணில் இசைக்கருவிகள் பேரிசை முழக்க விழா, மாணிக்கவாசக சுவாமிகள் வாழ்வும் வாக்கும் வரலாறும்-இன்னிசைப் பேருரை.
ஆனி மாதம் 9ம் நாள் (23-06-2007) சனிக்கிழமையன்று, சிவபூசை, திருமுறை இன்னிசை, தொடக்கவுரை, ஆசியுரை, வேத உபநிடதங்களில் சைவ சித்தாந்தக் கோட்பாடுகள் மற்றும் ஸ்ரீ ருத்ர அமைவிடமும் மகிமைகளும், ஆகமங்கள் நெறிப்படுத்தும் ஒரு தெய்வக் கோட்பாடுகளும், சைவ மறுமலர்ச்சியில் சிவாச்சாரியர்கள் முன் நின்று ஆற்ற வேண்டிய பணிகளும், ஸ்ரீ திருஞானசம்பந்த சுவாமிகள் நெறிப்படுத்தும் ஒரு தெய்வ வழிபாடு, ஸ்ரீ திருநாவுக்கரசு சுவாமிகள் நெறிப்படுத்தும் ஒரு தெய்வ வழிபாடு, ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் நெறிப்படுத்தும் ஒரு தெய்வ வழிபாடு, ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள் நெறிப்படுத்தும் ஒரு தெய்வ வழிபாடு, ஸ்ரீ திருமூலர் சுவாமிகள் நெறிப்படுத்தும் ஒரு தெய்வ வழிபாடு, திருமுறை மற்றும் தமிழிசை பரத நாடிய நிகழ்ச்சி.
ஆனி மாதம் 10ம் நாள் (24-06-2007) ஞாயிற்றுக்கிழமையன்று, சிவபூசை, திருமுறை இன்னிசை, கீழ்ப்பறவைச் சாதிகளும், வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் கூட ஒரு தெய்வம் வழிபட்டு மெய்ஞ்ஞான நாட்டமுறும் நிலை, ஒன்பதாம் திருமுறை நெறிப்படுத்தும் ஒரு தெய்வ வழிபாடு, திருமால்-பிரம்மா-முதலாக விண்ணோர்கள் வழிபட்ட முழுமுதற் கடவுள், பதினொன்றாம் திருமுறை நெறிப்படுத்தும் ஒரு தெய்வ வழிபாடு, திருவிளையாடல் புராணம் முற்றோதல் நிறைவு விழா.
ஆனி மாதம் 11ம் நாள் (25-06-2007) திங்கட்கிழமையன்று, சிவபூசை, பெரிய புராணம் நெறிப்படுத்தும் ஒரு தெய்வ வழிபாடு, சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம், அருட்பிரகாச வள்ளலார் நெறிப்படுத்தும் ஒரு தெய்வ வழிபாடு, சித்தர்கள் நெறிப்படுத்தும் ஒரு தெய்வ வழிபாடு, சைவ சமய மறுமலர்ச்சியில் இன்றைய நிலையில் அடியார்கள் ஆற்றவேண்டிய பணிகள், தேவார இன்னிசை நிகழ்ச்சியும் பண் அமைவு விளக்கங்களும், நன்றியுரை.
குறிப்பு:
அடியார் பெருமக்களுக்கு நல்லமுது மற்றும் தங்க இடவசதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விபரங்களுக்கு : கோ. முருகானந்தம் - 93451 49412 மற்றும் எஸ். தட்சிணாமூர்த்தி - 94423 92021.
முக்கிய விழா நிகழ்ச்சிகள் முழுவது மயிலாடுதுறை TCU Tv-ல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
Back to Important Events Page
Back to Shaivam Home Page
|