முள்ளங்குடி மதகுசாலை கிராம அ/மி ஸ்ரீ காமாக்ஷி அம்பிகா சமேத அ/மி ஸ்ரீ கைலாசநாத சுவாமி திருக்கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்
- - - - - - - - - - - -

muLLangkudi madhakusAlai kirAma srI kAmAkshi ambikA samEtha srI kailAsa nAthar temple jIrNOththAraNa ashtapandhana mahA kumbAbishEham
* * * * *

அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில், முள்ளங்குடி மதகுசாலை, திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.


சிறப்பு:

திருநாவுக்கரசு சுவாமிகள், முள்ளங்குடி - மதகுசாலையில் கோயில் கொண்டுள்ள அ/மி. கைலாசநாதர் முன் பாடி பரவசமடைந்தார் என்று மரபு செய்தியாகச் சொல்லப்படுகிறது. மேலும், இக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழம் பெருமை வாய்ந்த திருக்கோயிலாகும்.


கும்பாபிஷேக விழா:

மங்களகரமான விய வருடம் தை மாதம் 26ம் நாள், (09 - 02 - 2007) வெள்ளிக்கிழமை, சப்தமி, சுவாதி நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 09.00 மணிக்குமேல் 10.30 மணிக்குள் மீன லக்னத்தில் குரு வோரையில் அ/மி ஸ்ரீ காமாக்ஷி அம்பிகா சமேத அ/மி ஸ்ரீ கைலாசநாத சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெறவிருப்பதால், பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ காமாக்ஷி அம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாத சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற வேண்டுகிறோம்.

Back to Important Events Page
Back to Shaivam Home Page