மஞ்சக்கண்ணி கிராமம் அ/மி ஸ்ரீ அமிர்தவல்லி அம்பிகை உடனுறை அ/மி ஸ்ரீ சோமநாதர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
- - - - - - - - -

manjakkaNNi kirAmam srI amirdhavalli ambhikai uDanuRai srI sOmanAthar temple mahA kumbAbishEham
* * * * *

அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ சோமநாதர் சுவாமி திருக்கோயில், மஞ்சக்கண்ணி கிராமம், மருதூர் வடக்கு, வேதாரண்யம் வட்டம், நாகை மாவட்டம்.

சிறப்பு :

இந்த திருத்தலத்தில் திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் சோமநாத தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட, சந்திரன் மற்றும் சனி தோஷங்கள் நீங்கி எல்லா நலன்களும் கிட்டும் என்பது நிகழ்கால உண்மையாகும்.

கும்பாபிஷேக விழா:

நிகழும் மங்களகரமான சர்வஜித்து வருடம் ஆனி மாதம் 14ம் நாள், (28 - 06 - 2007) வியாழக்கிழமை, திரயோதசி திதியும் அனுஷ நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 09.15 மணிக்குமேல் 10.45 மணிக்குள் சிம்ம லக்னத்தில் அ/மி ஸ்ரீ அமிர்தவல்லி அம்பிகை உடனுறை அ/மி ஸ்ரீ சோமநாதர் சுவாமி ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூட்டியுள்ளது; பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு அ/மி ஸ்ரீ அமிர்தவல்லி அம்பிகை உடனுறை அ/மி ஸ்ரீ சோமநாதர் சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.

Back to Important Events Page
Back to Shaivam Home Page