|
Home > Events
குத்தாலம் அ/மி ஸ்ரீ ஆனந்தவல்லி உடனுறை அ/மி ஸ்ரீ ஓம்காளீஸ்வரர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் - - - - - - - - - kuthAlam srI Anandavalli uDanuRai srI OmkALIswarar temple mahA kumbAbishEham * * * * *
அமைவிடம்:
அ/மி. ஸ்ரீ ஓம்காளீஸ்வரர் திருக்கோயில், குத்தாலம், மயிலாடுதுறை வட்டம், நாகை மாவட்டம்.
சிறப்பு:
சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய திருமுறை அருளாளர்கள் நால்வரால் போற்றப்பட்ட தலம். திருஞானசம்பந்தர் தன், முன் பிறப்பின் உன்னத நிலையை இத்தலத்தில் மட்டுமே சித்தரிக்கிறார் "துருத்தியாய் திருந்தடி மறக்குமாறு இலாத என்னை மையல் செய்து இம்மண்ணின்மேல் பிறக்குமாறு காட்டினாய்" துருத்தி உறையும் இறைவா! உன் திருவடியையே மனம் முழுதும் பற்றி அந்தப் பேரின்பத்திலேயே திளைத்து இருந்த என்னை மையல்செய்து பிறப்பிற்கும், இறப்பிற்கும், பிணிக்கும் உட்பட்ட மனிதப்பிறவியை கொடுத்தனையே! நான் என்ன பிழை செய்தேன் என வினவுகிறார்.
இறைவனார் உமையுடன் பகலில் திருத்துருத்தியாகிஅ இத்தலத்திலும், இரவில் திருவேள்விக்குடியிலும் உறைவதாக திருஞானசம்பந்தரால் "பாங்கினால் உமையொடும் பகலிடம் புகலிடம் பைம் பொழில் சூழ் வீங்குநீர் துருத்தியார் இரவிடத்துறைவர் வேள்விக்குடியே" என குறித்துள்ள பாங்கும்; சுந்தரரும் இருதலங்களையும் இணைத்து "காப்பது வேள்விக்குடி, தண்துருத்தி" என பாடியுள்ளதும் சிந்திக்கத்தக்கது. சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு இத்தலத் திருக்குளத்தில் மூழ்கி உடல் கருமேக நோய் தீர்க்கப்பட்டது. சுந்தரரும் "என் உடம்பு அடும் பிணி இடர் கெத்தானை" எனப் பாடியுள்ளார்.
கும்பாபிஷேக விழா:
நிகழும் மங்களகரமான சர்வஜித் வருடம் ஆனித்திங்கள் 06ம் நாள், (20 - 06 - 2007) புதன்கிழமை, சஷ்டி திதி மகம் நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 10.00 மணிக்குமேல் 11.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் அ/மி ஸ்ரீ ஆனந்தவல்லி உடனுறை அ/மி ஸ்ரீ ஓம்காளீஸ்வரர் சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூட்டியுள்ளது; பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு அ/மி ஸ்ரீ ஆனந்தவல்லி உடனுறை அ/மி ஸ்ரீ ஓம்காளீஸ்வரர் சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.
Back to Important Events Page
Back to Shaivam Home Page
|