|
Home > Events
கருப்பம்புலம் வடக்கு அ/மி ஸ்ரீ ஞானாம்பிகா உடனுறை அ/மி ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
karuppampulam north srI gnAnAmbikA udanuRai srI kAlahasthIswarar temple mahA kumbAbishEham
அமைவிடம்:
அ/மி. ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில், கருப்பம்புலம் வடக்கு, வேதாரண்யம் வட்டம், நாகை மாவட்டம். திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் செங்காதலை சாலையில் சாமியார் கடை பேருந்து நிறுத்தத்திலுருந்து தெற்கே 1/2 கி. மீ. தொலைவு.
சிறப்பு:
சோழவள நாட்டின் நான்கு மறைகளாலும் பூஜிக்கப்பட்ட்தும் சமயகுரவர்களால் பாடல் பெற்றதுமான வேதாரண்யேஸ்வரர் ஆலயத்தின் மேற்கு பாகத்தில் வீற்றிருந்து ஆன்மாக்கள் உய்யும் பொருட்டு திருவருளே திருமேனியாகக் கொண்டு அருள்பாளித்து வரும் அ/மி. ஞானாம்பிகை உடனுறை காளஹஸ்தீஸ்வரர் சத்யோஜாத மூர்த்தியாக மேற்கு நோக்கி வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். இவ்வாலயத்தின் தல விருக்ஷமாகிய வில்வமும், தல தீர்த்தமாகிய லக்ஷமி தீர்த்தமும் ஐஸ்வர்ய ப்ராப்தியைக் கொடுக்கக் கூடியவை.
கும்பாபிஷேக விழா:
நிகழும் சுபஸ்ரீ விய வருடம் தை மாதம் 15ம் நாள், 29 - 01 - 2007 திங்கட் கிழமை, ஏகாதசி ம்ருகசீர்ஷ நட்சத்திரம் அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை மணி 9.00 க்கு மேல் 10.30க்குள் மீன லக்கனத்தில் அ/மி. ஞானாம்பிகை உடனுறை காளஹஸ்தீஸ்வரர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறவிருப்பதால், பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ ஞானாம்பிகா உடனுறை ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர சுவாமியின் பேரருளுக்குப் பாத்திராமாகும்படி வேண்டுகிறோம்.
Back to Important Events Page
Back to Shaivam Home Page
|