கப்பூர் அ/மி ஸ்ரீ அபயாம்பிகை சமேத அ/மி ஸ்ரீ அக்னீஸ்வரர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
- - - - - - - - -

kappUr srI apayAmbikai samEtha srI agnIswarar temple mahA kumbAbishEham
* * * * *

அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ அக்னீஸ்வரர் திருக்கோயில், கப்பூர் கிராமம், மயிலாடுதுறை வட்டம், நாகை மாவட்டம்.


சிறப்பு:

காவிரி நதி பெருகும் சோழவள நாட்டில் அப்பொன்னி நதி தென்பாதியிலுள்ளதும், பனஸவன மென்றும், திருக்காப்பூரென்றும், வழுவூர் க்ஷேத்திரத்தின் பஞ்சக் குரோதத்திற் குட்பட்டதும், அக்னி பகவானால் பிரதிஷ்டை செய்து பூஜிக்கப்பட்டதும், அக்னீஸ்வர பிரசாதத்தினால் பிரதாபம் முதலிய சக்தியையும் பரிசுத்தமான தன்மையையும் அடைவதற்கு கோரமான தாபத்தினால் தாருகாவன ரிஷிகள் கெளதமர், கண்ணுவர், பிரிது, வசிஷ்டர் முதலானவர்கள் ஞானதீஷைக்காக பூஜித்தும் ஈஸ்வர பிரசாதத்தால் ரஷாபந்தனம் செய்துகொண்டதினால் கொளதுகேஸ்ரரென்றும் திருக்காப்பூரென்றும் விளங்கி தற்போது கப்பூர் என்னும் திவ்ய க்ஷேத்திரமாக விளங்குகிறது.


கும்பாபிஷேக விழா:

நிகழும் மங்களகரமான சர்வஜித் வருடம் சித்திரை மாதம் 10ம் நாள், (23 - 04 - 2007) திங்கட் கிழமை, புனர்பூச நட்சத்திரம், கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 09.00 மணிக்குமேல் 09.30 மணிக்குள் ரிஷப லக்னத்தில் அ/மி ஸ்ரீ அபயாம்பிகை சமேத அ/மி ஸ்ரீ அக்னீஸ்வரர் சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூட்டியுள்ளது; பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு அ/மி ஸ்ரீ அபயாம்பிகை சமேத அ/மி ஸ்ரீ அக்னீஸ்வரர் சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.

Back to Important Events Page
Back to Shaivam Home Page