அருள்மொழித்தேவன் அ/மி ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் உடனுறை அ/மி ஸ்ரீ விஸ்வநாதர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
- - - - - - - - -

aruLmozhithEvan srI visAlAtshi ambAL uDanuRai srI visvanAthar suvAmi temple mahA kumbAbishEham
* * * * *

அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ விஸ்வநாதர் திருக்கோயில், அருள்மொழித்தேவன், மயிலாடுதுறை தாலுக்கா, நாகை மாவட்டம்.

சிறப்பு:

தான்தோன்றி ஈசனாக எழுந்தருளிள்ள நீடூர் திருத்தலத்திற்கு மேற்கிலும், காமனை எரித்து நீறு ஆக்கிய திருக்குறுக்கை திருத்தலத்தின் தென்கிழக்கிலும், தம்மைத் தொழுவாரை தேவராக்கும் திருஅன்னியூர் (பொன்னூர்) திருத்தலத்தின் கிழக்கிலும், வள்ளலாக எழுந்தருள் பாலித்து வரும் திருமயிலாடுதுறை திருத்தலத்தின் வடக்கிலும் இத்திருத்தலம் அமைந்து சிறப்புற்று விளங்குகிறது.

கும்பாபிஷேக விழா:

நிகழும் மங்களகரமான சர்வஜித் வருடம் ஆனித்திங்கள் 14ம் நாள், (28 - 06 - 2007) வியாழக்கிழமை, திரயோதசி திதி, அனுஷ நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 08.30 மணிக்குமேல் 11.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் அ/மி ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் உடனுறை அ/மி ஸ்ரீ விஸ்வநாதர் சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூட்டியுள்ளது; பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு அ/மி ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் உடனுறை அ/மி ஸ்ரீ விஸ்வநாதர் சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.

Back to Important Events Page
Back to Shaivam Home Page