திருபுவனம் அ/மி ஸ்ரீ அறம்வளர்த்தநாயகி அம்பாள் சமேத அ/மி ஸ்ரீ கம்பகரேஸ்வர சுவாமி
திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
- - - - - - - - -

thirupuvanam srI aRamvaLarththan^Ayanki ambAL samEtha srI kambakarESwarar temple mahA kumbAbishEham
* * * * *

அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ கம்பகரேஸ்வரர் சுவாமி திருக்கோயில், திருபுவனம், திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.

தலவரலாறு:

திருபுவனம் சிவபரத்துவத்தை விளக்கி நிற்கும் உயர்பெருந்தலம். சுவாமி நடுக்கம் தீர்த்த பெருமான் என்ற பொருளில் கம்பகரேஸ்வரர் என்ற திருப்பெயருடனும், அம்பாள் அறம்வளர்த்தநாயகி, தர்மசம்வர்த்தினி என்ற திருப்பெயருடனும் அருள் வழங்கும் சிறப்புடையது. இத்தலத்தின் பழம்பெயர் திருபுவனவீரபுரம் என்பதாகும். அசுவக்கிரீவன், விருஷபக்கிரீவன், வியாளக்கிரீவன், பிரமன், இலக்குமி, வருணன், விஷ்ணு, சித்ரரதன், சுகோஷன், மாந்தாதா, நாரதர், வரகுணர் முதலியோர் வழிபட்ட பெருமை உடையது இத்தலமாகும். இரணியனுடைய குருதியைப் பருகிய நரசிம்மம் அறிவு திரிந்து உலகம் அனைத்தையும் அழிக்கத் தொடங்கியபோது இத்தலப் பெருமான் சரபப் பறவை உருக்கொண்டு அதன் கொடுமையை அடக்கியதால் சரபேஸ்வரர் என்ற பெயருடன் இவ்வாலயத்தில் தனி மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.

சிறப்பு:

மூன்றாங் குலோத்துங்க சோழன் (கி.பி.1178-1218)வடநாடு சென்று பெற்ற வெற்றிப் பொருள்களைக் கொண்டு திருபுவனம் திருக்கோயிலைக் கட்டினான் என்பது இத்திருக்கோயில் கல்வெட்டிலிருந்து அறியப்படும் செய்தியாகும். இப்பேரரசனுடைய ஞானகுருவாகிய சித்தாந்த இரத்தினாகர ஆசிரியர் ஸ்ரீ ஸ்கந்தசம்புவினுடைய மகனார் ஈஸ்வர சிவனால் ஆவாகனம் செய்யப்பட்டது இத்திருக்கோயில் என்பதும் இங்குள்ள கல்வெட்டில் காணப்படுகிறது.

கும்பாபிஷேக விழா:

சர்வஜித் வருடம் தைத் திங்கள் 13ம் நாள், (27 - 01 - 2008) ஞாயிற்றுக்கிழமை, காலை 09.45 மணிக்குமேல் 10.15 மணிக்குள் அ/மி ஸ்ரீ அறம்வளர்த்தநாயகி அம்பாள் சமேத அ/மி ஸ்ரீ கம்பகரேஸ்வர சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூட்டியுள்ளது; பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு அ/மி ஸ்ரீ அறம்வளர்த்தநாயகி அம்பாள் சமேத அ/மி ஸ்ரீ கம்பகரேஸ்வர சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.

Back to Important Events Page
Back to Shaivam Home Page