|
Home > Events
கீழஓகை அ/மி ஸ்ரீ ஞானாம்பிகை சமேத அ/மி ஸ்ரீ ஆதிகைலாசநாத சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் - - - - - - - - -
kIzhaOkai srI nyAnAmbhikai samEtha srI AdhikailAsanAthar temple mahA kumbAbishEham * * * * *
அமைவிடம்:
அ/மி. ஸ்ரீ ஆதிகைலாசநாதர் திருக்கோயில், குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம்.
சிறப்பு:
குடவாசல் நகர மத்தியில் காவிரி நதியின் உபநதியான சோழ சூடாமணியாறு, நகரை இரு பிரிவுகளாக பிரிக்கிறது. வடகரை குடவாயில் என்றும் தென்கரை அகரஓகை என்றும் கல்வெட்டுக்கள் மூலம் அறியமுடிகிறது. அவ்வாறு வழங்கப்பெறும் அகரஓகையில் நடுநாயகமாக விளங்குவது கீழஓகை, ஸ்ரீகைலாசநாதர் திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது.
கும்பாபிஷேக விழா:
நிகழும் மங்களகரமான சர்வஜித் வருடம் தைத் திங்கள் 06ம் நாள், (20 - 01 - 2008)
ஞாயிற்றுக்கிழமை, திரயோதசி திதி மிருகசீரிஷம் நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 09.30 மணிக்குமேல் 09.45 மணிக்குள் கும்ப லக்னத்தில் அ/மி ஸ்ரீ ஞானாம்பிகை சமேத அ/மி ஸ்ரீ ஆதிகைலாசநாத சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூட்டியுள்ளது; பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு அ/மி ஸ்ரீ ஞானாம்பிகை சமேத அ/மி ஸ்ரீ ஆதிகைலாசநாத சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.
Back to Important Events Page
Back to Shaivam Home Page
|