|
Home > Events
திருமாளம் அ/மி ஸ்ரீ அழகாம்பிகை உடனுறை அ/மி ஸ்ரீ மகாகாளநாத சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் - - - - - - - - -
thirumALam srI azhakAmbikai uDanuRai srI mahAkALanAthar temple mahA kumbAbishEham * * * * *
அமைவிடம்:
அ/மி. ஸ்ரீ மகாகாளநாதர் திருக்கோயில், வேதாரண்யம் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம்.
சிறப்பு:
இத்தலம் காவிரியின் கிளை நதியான அரிச்சந்திர நதிக்கு வடகரையில் கற்றளியாக எழுப்பப்பட்டு சிறந்த முறையில் அமைந்துள்ளது. உஞ்ஞை மாகாளம், இரும்பை மாகாளம், அம்பர் மாகாளம் என சிறப்பு பெற்ற தலைஞாயிறு மாகாளம் என சிறப்பு பெற்றதாகும்.
சம்பந்தப் பெருமானுக்கும் அப்பர் பெருமானுக்கும் நடனக் காட்சி அருளப்பெற்றத் திருவாய்மூர் திருத்தலத்திற்கு தென்கிழக்கில் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இத்தல இறைவனார் மாகாளர் என்ற முனிவராலும், அரிச்சந்திரனாலும் வழிபடப்பெற்றவர். இத்தலத்தில் அவருக்கு கலிதோஷம் நீங்கப் பெற்றது. அரிச்சந்திர நதியும், ஏகசத்திரியபுரம் ஊருக்கு அருகிலுள்ள சந்திரமதி ஆறும் வரலாற்றுத் தொடர்புடைய தீர்த்தங்களாகும்.
கும்பாபிஷேக விழா:
நிகழும் மங்களகரமான சர்வஜித் வருடம் ஐப்பசித் திங்கள் 07ம் நாள், (24 - 10 - 2007)
புதன்கிழமை, சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 10.00 மணியளவில் தனுர் லக்னத்தில் அ/மி ஸ்ரீ அழகாம்பிகை உடனுறை அ/மி ஸ்ரீ மகாகாளநாத சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூட்டியுள்ளது; பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு அ/மி ஸ்ரீ அழகாம்பிகை உடனுறை அ/மி ஸ்ரீ மகாகாளநாத சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.
Back to Important Events Page
Back to Shaivam Home Page
|