|
Home > Events
வலங்கைமான்நகர் அ/மி ஸ்ரீ விசாலாக்ஷி அம்பாள் உடனுறை அ/மி ஸ்ரீ காசிவிஸ்வநாதர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் - - - - - - - - -
valangaimAn Nagar srI visAlAkshi ambAL uDanuRai srI kAsiviswanAthar temple mahA kumbAbishEham * * * * *
அமைவிடம்:
அ/மி. ஸ்ரீ காசிவிஸ்வநாதர் திருக்கோயில், வலங்கைமான்நகர், வலங்கைமான் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம்.
சிறப்பு:
இத்தலம், கருக்குடிக்கு (மருதாநல்லூர்) வடக்கேயும்,
ஆலங்குடிக்கு (திருஇரும்பூளை) தெற்கிலும், அரித்துவாரமங்கலத்திற்கு
(திருஅரதைப்பெரும்பாழி) கிழக்கேயும், கடுவாய்க்கரைப்புத்தூருக்கு (ஆண்டாங்கோயில்)
மேற்கேயும், பொன்னி நதியின் பிரிவான குடமுருட்டி ஆற்றின் வடகரையில் இறையருள் வெளிப்படுத்தும் இயற்கை எழில் சூழ வலங்கைமான்நகரில்
அமைந்துள்ள ஐந்து சிவாலங்களில் நடுநாயகமாக அமைந்துள்ளது.
கும்பாபிஷேக விழா:
நிகழும் மங்களகரமான சர்வஜித் வருடம் ஆவணித் திங்கள் 21ம் நாள், (07 - 09 - 2007)
வெள்ளிக்கிழமை, புனர்பூசம் நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 07.00 மணிக்குமேல் 08.30 மணிக்குள் கன்யா
லக்னத்தில் அ/மி ஸ்ரீ விசாலாக்ஷி அம்பாள் உடனுறை அ/மி ஸ்ரீ காசிவிஸ்வநாதர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற
திருவருள் கூட்டியுள்ளது; பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு அ/மி ஸ்ரீ விசாலாக்ஷி அம்பாள் உடனுறை அ/மி ஸ்ரீ காசிவிஸ்வநாதர் சுவாமியின்
பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.
Back to Important Events Page
Back to Shaivam Home Page
|