கீழவெண்மணி அ/மி ஸ்ரீ மங்களாம்பிகா சமேத அ/மி ஸ்ரீ தர்மபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
- - - - - - - - -

kIzhaveNmaNi srI mangaLAmbikA samEtha srI tharmapurIswarar temple mahA kumbAbishEham
* * * * *

அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ தர்மபுரீஸ்வரர் திருக்கோயில், கீழவெண்மணி, கீழ்வேளூர் தாலுக்கா, நாகை மாவட்டம்.

தலவரலாறு:

எமதர்மன், எமகுண்டாமணி என்கிற தீர்த்தம் அமைத்து வழிபட்டத் தலம் என்றும், இறைவனுக்கான விழாக்கள் எடுக்கப்பட்டபோது, பெருமழை பெய்யத் தொடங்கவே, பெரிய மணிகள் கோர்த்த வெண்கொற்றக் குடையால் இவ்வூர் காக்கப்பட்டதாக வழி வழி செய்தி வழங்கி வருகிறது. தற்காலத்திலும் மழைப்பருவம் தொடங்கியதும், நாற்புறமும் சுற்றியுள்ள ஊர்களில் மழைப் பொழிந்து பின் இவ்வூர் மழைபெறும் வழக்கு உள்ளது.

சிறப்பு:

சம்பந்தர் பாடல் பெற்றத் தலமான தேவூருக்கு தென்கிழக்கிலும், பாண்டவர்களில் பீமன் பூசித்த இருக்கைக்கு மேற்கிலும் அர்ச்சுணன் பூசித்த பெருந்தரக்குடிக்கு மேற்கிலும், நகுலன், சகாதேவன் பூசித்த மேலவெண்மணி தலத்திற்கு கிழக்கிலும் 63 நாயன்மார்களில் சக்தி நாயனார் அவதரித்த வரிஞ்சை எனப்படும் இரிஞ்சியூரின் மேற்கிலும் அமைந்து பாண்டவர்களில் மூத்தவரான தருமரால் பூசிக்கப்பட்டு சிறந்து விளங்குவது இத்திருத்தலமாகும்.

கும்பாபிஷேக விழா:

நிகழும் சர்வஜித் வருடம் ஆவணித் திங்கள் 21ம் நாள், (07 - 09 - 2007) வெள்ளிக்கிழமை, புனர்பூசம் நட்சத்திரம் சித்தயோகம் கூடிய நன்னாளில் காலை 09.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் அ/மி ஸ்ரீ மங்களாம்பிகா சமேத அ/மி ஸ்ரீ தர்மபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூட்டியுள்ளது; பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு அ/மி ஸ்ரீ மங்களாம்பிகா சமேத அ/மி ஸ்ரீ தர்மபுரீஸ்வரர் சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.

Back to Important Events Page
Back to Shaivam Home Page

/TR>