அசிக்காடு (அஹில்வனம்) அ/மி ஸ்ரீ வாத்சல்யாம்பிகை சமேத அ/மி ஸ்ரீ சுவர்ணகிரீஸ்வரர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
- - - - - - - - -

asikkADu (ahilvanam) srI vAthsalyAmbikai samEtha srI suvarNakirIswarar temple mahA kumbAbishEham
* * * * *

அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ சுவர்ணகிரீஸ்வரர் திருக்கோயில், அசிக்காடு, மயிலாடுதுறை வட்டம், நாகை மாவட்டம்.

சிறப்பு:

மகிமை வாய்ந்த ஷேத்திரங்களில் மிக உயர்ந்ததும், காசிக்கு சமமானதுமான மயிலாடுதுறைக்கு மேற்கிலும், தேரழுந்தூருக்கு கிழக்கிலும், வழுவூருக்கு வடக்கிலும், சித்தர்கள் அருள்புரிகின்ற சித்தர்காடு தலத்திற்கு தெற்கிலும் அமைந்துள்ளது அசிக்காடு (அஹில்வனம்) என்கிற இத்தலம்.

கும்பாபிஷேக விழா:

நிகழும் ஸ்வஸ்திஸ்ரீ சர்வஜித் வருடம் ஆவணித் திங்கள் 21ம் நாள், (07 - 09 - 2007) வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதி புனர்பூசம் நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 07.30 மணிக்குமேல் 08.45 மணிக்குள் கன்யா லக்னத்தில் அ/மி ஸ்ரீ வாத்சல்யாம்பிகை சமேத அ/மி ஸ்ரீ சுவர்ணகிரீஸ்வரர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூட்டியுள்ளது; பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு அ/மி ஸ்ரீ வாத்சல்யாம்பிகை சமேத அ/மி ஸ்ரீ சுவர்ணகிரீஸ்வரர் சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.

Back to Important Events Page
Back to Shaivam Home Page