வாராப்பூர் அ/மி ஸ்ரீ சௌந்தர்யநாயகி சமேத அ/மி ஸ்ரீ அகத்தீஸ்வரர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
- - - - - - - - -

vArAppUr srI soundaryanAyaki samEtha srI akathIswarar temple mahA kumbAbishEham
* * * * *

அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில், வாராப்பூர் கிராமம், வாரைவளர் வாரப்பூர்நாடு, புதுக்கோட்டை மாவட்டம்.

சிறப்பு:

இத்திருக்கோயில் கி.பி.1010 லிருந்து கி.பி.1020 வரையிலான காலத்தில் முதலாவது இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது என இவ்வாலயத்தில் உள்ள கல்வெட்டுக்கள் மூலம் அறியப்படுகிறது. இத்திருக்கோயில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என ஒருங்கே அமையப்பெற்றதாகும்.

கும்பாபிஷேக விழா:

நிகழும் மங்களகரமான சர்வஜித் வருடம் ஆவணித் திங்கள் 14ம் நாள், (31 - 08 - 2007) வெள்ளிக்கிழமை, திருதியை திதியும் ரேவதி நட்சத்திரமும் அமிர்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 07.30 மணிக்குமேல் 09.00 மணிக்குள் கன்யா லக்னத்தில் அ/மி ஸ்ரீ சௌந்தர்யநாயகி சமேத அ/மி ஸ்ரீ அக்த்தீஸ்வரர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூட்டியுள்ளது; பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு அ/மி ஸ்ரீ சௌந்தர்யநாயகி சமேத அ/மி ஸ்ரீ அகத்தீஸ்வரர் சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.

Back to Important Events Page
Back to Shaivam Home Page