|
Home > Events
கேசிங்கன் கிராமம் அ/மி ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை அ/மி ஸ்ரீ சுந்தரேஸ்வரர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் - - - - - - - - -
kEsingan village srI soundaranAyaki uDanuRai srI sundarEswarar temple mahA kumbAbishEham * * * * *
அமைவிடம்:
அ/மி. ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கோயில், கேசிங்கன் கிராமம், மயிலாடுதுறை தாலுக்கா, நாகை மாவட்டம்.
சிறப்பு:
பந்தணைநல்லூருக்கு கிழக்கேயும், ஓமாம்புலியூருக்கு
தெற்கேயும், அன்னியூர் என்ற பொன்னூருக்கு வடக்கேயும், திருப்புங்கூர்
வாழ்கொளிப்புத்தூர் ஆகிய தலங்களுக்கு மேற்கேயும் இத்தலம் அமையப்பெற்று சிறப்புற்று விளங்குகிறது.
கும்பாபிஷேக விழா:
நிகழும் சர்வஜித் வருடம் ஆவணித் திங்கள் 14ம் நாள், (31 - 08 - 2007) வெள்ளிக்கிழமை,
ரேவதி நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 07.30 மணிக்குமேல் 09.15 மணிக்குள் அ/மி ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை அ/மி ஸ்ரீ
சுந்தரேஸ்வரர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூட்டியுள்ளது; பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு
அ/மி ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை அ/மி ஸ்ரீ சுந்தரேஸ்வரர் சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.
Back to Important Events Page
Back to Shaivam Home Page
|