|
Home > Events
ஜெயங்கொண்டசோழபுரம் அ/மி ஸ்ரீ பெரியநாயகியம்மை உடனுறை அ/மி ஸ்ரீ கழுமலைநாதர் பெருமான் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் - - - - - - - - -
jeyangoNDachOzhapuram srI periyanAyakiyammai uDanuRai srI kazhumalainAthar perumAn temple mahA kumbAbishEham * * * * *
அமைவிடம்:
அ/மி. ஸ்ரீ கழுமலைநாதப் பெருமான் திருக்கோயில், ஜெயங்கொண்டசோழபுரம்
சிறப்பு:
ஐம்பெருஞ்சிவாலயங்களத் தன்னகத்தே கொண்ட இத்தலம் பஞ்சலிங்கத்தலம் என்று போற்றப்படுகிறது. நான்கு திசைகளிலும்
நான்கு சிவாலயங்கள் அமந்து நடுநாயகமாக இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தலம் ஆமலகபுரம் என்றும் நெல்லீச்சரம் என்றும் போற்றப்படுகிறது. இராஜ
ராஜசோழனால் இக்கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலுக்குப் பின்புறம் பழமலைநாதர் கோயில் உள்ளது; இது மிகவும் பழமையானதாகும்.
கும்பாபிஷேக விழா:
நிகழும் மங்களகரமான சர்வஜித் வருடம் ஆவணித் திங்கள் 14ம் நாள், (31 - 08 - 2007) வெள்ளிக்கிழமை,
ரேவதி நட்சத்திரம் சித்தயோகம் கூடிய நன்னாளில் காலை 08.30 மணிக்குமேல் 09.10 மணிக்குள் கன்யா லக்னத்தில் அ/மி ஸ்ரீ பெரியநாயகியம்மை உடனுறை அ/மி ஸ்ரீ
கழுமலைநாதப் பெருமான் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூட்டியுள்ளது; பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு அ/மி
ஸ்ரீ பெரியநாயகியம்மை உடனுறை அ/மி ஸ்ரீ கழுமலைநாதப் பெருமானின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.
Back to Important Events Page
Back to Shaivam Home Page
|