விசலூர் அ/மி ஸ்ரீ அகிலாண்டேசுவரி சமேத அ/மி ஸ்ரீ அகத்தீசுவரர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
- - - - - - - - -

visalUr srI akilANDEswari samEtha srI akathIswarar temple mahA kumbAbishEham
* * * * *

அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ அகத்தீசுவரர் திருக்கோயில், விசலூர், தரங்கம்பாடி தாலுக்கா, நாகை மாவட்டம்.

சிறப்பு:

இத்தலம் வீரசோழன் ஆற்றின் வடகரையில், சங்கரன்பந்தலுக்கு அருகில் தில்லையாடி, திருவிடைக்காழி, அரிகரன்கூடல், சேந்தன்மங்கலம் ஆகிய தலங்கள் சூழ விளங்குகிறது. சேந்தன்மங்கலத்தில் சேந்தனார் வழிபட்ட சிவலிங்கம் இக்கோயிலில் உள்ளது. திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் இவ்வூரில் தோன்றியவராக கருதப்படுகிறது.

கும்பாபிஷேக விழா:

நிகழும் சர்வஜித் வருடம் ஆவணித் திங்கள் 13ம் நாள், (30 - 08 - 2007) வியாழக்கிழமை, உத்திராட்டாதி நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 09.00 மணிக்குமேல் 10.30 மணிக்குள் துலா லக்னத்தில் அ/மி ஸ்ரீ அகிலாண்டேசுவரி சமேத அ/மி ஸ்ரீ அகத்தீசுவரர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூட்டியுள்ளது; பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு அ/மி ஸ்ரீ அகிலாண்டேசுவரி சமேத அ/மி ஸ்ரீ அகத்தீசுவரர் சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.

Back to Important Events Page
Back to Shaivam Home Page