|
Home > Events
பாலையூர் அ/மி ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத அ/மி ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் - - - - - - - - -
pAlaiyUr srI kAmAkshi ambAL samEtha srI kailAsanAthar temple mahA kumbAbishEham * * * * *
அமைவிடம்:
அ/மி. ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில், பாலையூர், மயிலாடுதுறை தாலுக்கா, நாகப்பட்டினம் மாவட்டம்.
சிறப்பு:
திருவைகல், கோனேரிராஜபுரம்,
புதூர், நட்டாறு வடகரையில் அமைந்துள்ள பரமசிவபுரத்தை உள்ளடக்கியதும், நக்கம்பாடி, நாகம்பாடி, ஸ்ரீகண்டபுரம், நல்லாவூர்,
காஞ்சிவாய், கொற்றங்குடி என இறைவன் இருப்பிடங்களாக அமைந்துள்ள ஸ்தலங்கள் சூழ அமைந்துள்ளது பாலையூர் எனப்போற்றப்படும் இத்திருத்தலம்.
கும்பாபிஷேக விழா:
நிகழும் மங்களகரமான சர்வஜித் வருடம் ஆவணித் திங்கள் 13ம் நாள், (30 - 08 - 2007) வியாழக்கிழமை,
உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 08.15 மணிக்குமேல் 09.15 மணிக்குள் கன்னியா லக்னத்தில்
அ/மி ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத அ/மி ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள்
கூட்டியுள்ளது; பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு அ/மி ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத அ/மி ஸ்ரீ கைலாசநாதர் சுவாமியின்
பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.
Back to Important Events Page
Back to Shaivam Home Page
|