திருநெல்லிக்காவல் அ/மி ஸ்ரீ மங்களாம்பிகை உடனுறை அ/மி ஸ்ரீ நெல்லிவனநாதர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
- - - - - - - - -

thirunellikkAval srI mangaLAmbikai uDanuRai srI nellivananAthar temple mahA kumbAbishEham
* * * * *

அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ நெல்லிவனநாதர் திருக்கோயில், திருநெல்லிக்காவல், நீடாமங்கலம் வட்டம், திருவாரூர் மாவட்டம்.

தலவரலாறு:

இத்தலத்தில் திருமால், பிரமன், சூரியன், சந்திரன், சனி மற்றும் பிற தேவர்கள் இறைவனை வழிபட்டு, சாப விமோசனங்கள் எய்திப் பயனுற்றுள்ளனர். கலிங்கநாட்டு சுசன்மாவிற்கு பிரமஹத்தி தோஷம் நீங்கப்பெற்றதும், திவ்யரூபன் என்ற கந்தர்வன் பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, இறைவனை வணங்கி குஷ்டரோஹம் நீங்கப்பெற்றதும், உத்தமசோழன் பிரதோஷ காலத்தில் வேண்டி அம்பிகையையே குழந்தையாகப் பெற்றதும் ஆகிய பல வழி வழியாக வழங்கிவரும் புராணச் சிறப்புக்களும் உள்ளன.

சிறப்பு:

பிரம்ம தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், சக்கர தீர்த்தம், ரோஹ நிவாரண தீர்த்தம் ஆகிய புனித தீர்த்தங்கள் உள்ளன. இவ்விறைவனார், நெல்லிவனநாதர், ஆமலகேசன், ஆனந்தமோகன், சதுர்வேதபுரீசன், சோமப்பிரகாசி, சம்ஷ்டி லிங்கம் என்று அழைக்கப்படுகிறார். தலவிருட்சம் நெல்லி மரம். ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி முதல் ஏழு நாட்களும், மாசி மாதம் 18உ முதல் 24உ வரை ஏழு நாட்களும் மாலை சூரிய பகவான் இவ்விறைவனை வழிபாடு செய்துவிட்டு அஸ்தமனமாவது பெருஞ் சிறப்பாகும். இத்தலம் பாடல் பெற்றத் தலமாகும். இத்திருக்கோயிலில் எட்டு கல்வெட்டுக்கள் உள்ளன.

கும்பாபிஷேக விழா:

நிகழும் சர்வஜித் வருடம் ஆவணித் திங்கள் 10ம் நாள், (27 - 08 - 2007) திங்கட்கிழமை, காலை 09.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் அ/மி ஸ்ரீ மங்களாம்பிகை உடனுறை அ/மி ஸ்ரீ நெல்லிவனநாதர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூட்டியுள்ளது; பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு அ/மி ஸ்ரீ மங்களாம்பிகை உடனுறை அ/மி ஸ்ரீ நெல்லிவனநாதர் சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.

Back to Important Events Page
Back to Shaivam Home Page