சிராங்குடி - புலியூர் அ/மி ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத அ/மி ஸ்ரீ வ்யாக்ரபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
- - - - - - - - -

sirAngudi - puliyUr srI sivakAmasundari samEtha srI vyAgrapurIswarar temple mahA kumbAbishEham
* * * * *

அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ வ்யாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், சிராங்குடி - புலியூர், நாகப்பட்டினம் மாவட்டம்.

சிறப்பு:

நீர்வளமும், நிலவளமும், மக்களுடைய மனவளமும், மதிவளமும், நிரம்பப்பெற்று, வளஞ்சூழ் நன்னாடெனத் திகழும் எந்நாட்டிலும் உயர்தென்னாடாம் சோழ வள நாட்டின்கண் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முப்பெருஞ் சிறப்புடைய நாகூர், நாகப்பட்டினம், சிக்கல், கீழ்வேளூர் ஆகிய சிவஸ்தலங்களின் மத்தியில் திலகம்போல் அமைந்ததும், பெரும்பற்றப்புலியூர், கால்நாட்டான்புலியூர், அத்திப்புலியூர், ஓமாம்புலியூர், தப்பளாம்புலியூர் போன்று சிறந்து விளங்குவதும், சிராங்குடி - புலியூர் என்னும் தக்ஷிண வ்யாக்ரபுரியாகும்.

இத்திருக்கோயிலில், மற்ற திருக்கோயில்களில் நந்தி பகவான் ஒரு பக்கமாக சிரம் சாய்ந்து இருப்பதுபோல் அல்லாமல், நந்தி பகவான் சுவாமியை நேராக பார்ப்பது போல் அமைந்துள்ளது தனிச் சிறப்பு. இத்தலம் இராமாயண காலத்திற்கு முன்பே தோன்றியதாக வரலாறு. ஈஸ்வர சாபத்தினால் வ்யாக்ரமுகம் அடைந்த காமதேனுவினாலும், வ்யாக்ர முனிவராலும் வழிபட்டு வந்ததும், அனேக தேவரிஷி கணங்களினால் பூஜித்து வந்ததுமான சிறப்புக்களைப் பெற்றது இத்திருத்த்லம்.

கும்பாபிஷேக விழா:

நிகழும் மங்களகரமான சர்வஜித் வருடம் ஆவணித் திங்கள் 10ம் நாள், (27 - 08 - 2007) திங்கட்கிழமை, சதுர்தசி, ஸ்ரவண நட்சத்திரம் அமிர்த - சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 06.45 மணிக்குமேல் 07.15 மணிக்குள் சிம்ம லக்னத்தில் அ/மி ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத அ/மி ஸ்ரீ வ்யாக்ரபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூட்டியுள்ளது; பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு அ/மி ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத அ/மி ஸ்ரீ வ்யாக்ரபுரீஸ்வரர் சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.

Back to Important Events Page
Back to Shaivam Home Page