|
Home > Events
குருமணாங்குடி அ/மி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அ/மி ஸ்ரீ பார்த்தீஸ்வரர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் - - - - - - - - -
gurumaNAngudi srI akilANDEswari samEtha srI pArththIswarar temple mahA kumbAbishEham * * * * *
அமைவிடம்:
அ/மி. ஸ்ரீ பார்த்தீஸ்வரர் திருக்கோயில், குருமணாங்குடி கிராமம், கீழ்வேளூர் தாலுக்கா, நாகை மாவட்டம்.
சிறப்பு:
பாண்டவர்களில் ஒருவரான பார்த்தன் (அர்ச்சுனன்) பகைவர்களை வெல்ல வரம் வேண்டி, இப்பகுதியில்
பாரிஜாத புஷ்கரணி என்ற தடாகத்தை உண்டு பண்ணி, பாரிஜாத வனத்தையும் உண்டு பண்ணி, புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, பாரிஜாத மலர்களால்
(பவழமல்லி) பூசை செய்து, யாகங்கள், ஹோமங்கள் செய்வித்து வல்லமை பெற்றது இத்தலத்தின் சிறப்புக்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. மேலும்
இவ்வூர் குருவும் மாணாக்கர்களும் குருகுலமாய் தங்கியிருந்து நான்கு வேதங்களும் ஓதிய இடமாக கூறப்படுகிறது.
கும்பாபிஷேக விழா:
நிகழும் மங்களகரமான சர்வஜித் வருடம் ஆவணித் திங்கள் 09ம் நாள், (26 - 08 - 2007) ஞாயிற்றுக்கிழமை,
சுக்லபட்ச திரயோதசி திதி உத்திராட நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் காலை 08.00 மணிக்குமேல் 09.00 மணிக்குள் கன்யா லக்னத்தில் அ/மி ஸ்ரீ
அகிலாண்டேஸ்வரி சமேத அ/மி ஸ்ரீ பார்த்தீஸவரர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூட்டியுள்ளது;
பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு அ/மி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரை சமேத அ/மி ஸ்ரீ பார்த்தீஸ்வரர் சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற
அன்புடன் வேண்டுகிறோம்.
Back to Important Events Page
Back to Shaivam Home Page
|