எடமணல் அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் சமேத அருள்மிகு ஸ்ரீ காசிவிசுவநாத சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்
- - - - - - - - -

Edamanal Sri Vishalakshi Ambal Samedha Sri Kasivishwanathar temple
Maha Kumbabishekam
* * * * *

அமைவிடம்
- - - - - - - - - - - - -

அருள்மிகு ஸ்ரீ காசிவிஸ்வநாதர் திருக்கோயில், எடமணல், சீர்காழி தாலுக்கா, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

தல சிறப்பு
- - - - - - - - - - - - -

திருக்குருகாவூர் வெள்ளடை ஈசன் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் பசியை போக்க எடமணல் என்னும் இக்கிராமத்தில் கட்டமுதும், நீரும் கொடுத்து அருள்புரிந்ததும், இன்றும் இவ்விடத்தில் கட்டமுது விநாயகர் என்ற திருக்கோயில் பிரசித்தியாக விளங்கி வருகின்றது. இவ்வூரில் வரிசையாக பத்து சிவலிங்கத் திருமேனிகள் உள்ளதால் எடமணல் கிராமம் "வரிசைபத்து" என்றும் வழங்கப்பட்டு வருகின்றது.

கும்பாபிஷேக விழா
- - - - - - - - - - - - - - - - - - - - -

நிகழும் சுபஸ்ரீ நந்தன வருடம் வைகாசி மாதம் 18-ம் நாள், (31 - 05 - 2012) வியாழக்கிழமை, ஏகாதசி, ஹஸ்த நட்சத்திரம் கூடிய நன்னாளில் காலை 07.45 மணிக்குமேல் 08.15 மணிக்குள் மிதுன லக்னத்தில் அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் சமேத அருள்மிகு ஸ்ரீ காசிவிஸ்வநாத சுவாமி திருக்கோவில் நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூட்டியுள்ளதால்; அன்பர் பெருமக்கள், பக்த கோடிகள் அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெற அன்புடன் வேண்டுகிறோம்.

தொடர்பு :

எடமணல் ஸ்ரீ காசிவிசுவநாதசுவாமி ஆலய அறக்கட்டளை
(Edamanal Sri Kasiviswanathaswami Temple Trust)
அறங்காவலர்கள் மற்றும் கிராமவாசிகள்.

Ph : 09341988512, 09980129460, 09483530552, 09840058187.


Back to Important Events Page
Back to Renovation (thiruppaNi) Page
Back to Shaivam Home Page